Showing posts with label Computer கணினி. Show all posts
Showing posts with label Computer கணினி. Show all posts

Google தேடலை விரைவாக மேற்கொள்ள சில குறுக்கு வழிகள்

கம்ப்யூட்டரைப் பயன்படுத்தும் ஒவ்வொரு முறையும், நாம் கூகுள் தேடல் சாதனத்தைப் பயன்படுத்தாமல் இருப்பதில்லை. இணையத்தில் நமக்கு வேண்டிய தகவல்களைத் தேடிப் பெறுவதில், கூகுள் நமக்கு பெரும் உதவி செய்கிறது. இந்தத் தேடலை இன்னும் விரைவாக மேற்கொள்ள கூகுள் சில குறுக்கு வழிகளை நமக்குத் தந்துள்ளது. அவற்றில் சிலவற்றை இங்கு பார்க்கலாம்.
 

இணைய தளம் கட்டளை (The site: command): 


இந்த ஆப்பரேட்டர் மூலம், நாம் நமக்குத் தேவையான தகவல்களை, ஒரே ஒரு தளத்தில் மட்டும் தேடும்படி செய்திடலாம். எடுத்துக் காட்டாக, sholavandansethu இணைய தளத்தில் மட்டும் sholavandan  என்ற சொல்லைத் தேடுவதாக இருந்தால், sholavandan site www.sholavandansethu.blogspot.in/ எனக் கொடுக்க வேண்டும். இந்த கட்டளையானது, sholavandansethu இணைய தளத்தில் மட்டும், sholavandan என்ற சொல் உள்ள பக்கங்களைத் தேடித்தருமாறு கேட்கிறோம். இதனால், மற்ற இணையதளங்களில் இந்த சொல் பயன்பாடு உள்ளதா என்ற தேடல் மேற்கொள்ளப்பட மாட்டாது.


குறிப்பிட்ட வகை தளங்களில் மட்டும் தேடல் (inurl:command):


 இந்த ஆப்பரேட்டர் கட்டளை மூலம், நாம் தேடிப் பெற விரும்பும் தேடலை, குறிப்பிட்ட வகை தளங்களில் மட்டும் தேடும்படி அமைக்கிறோம். எடுத்துக் காட்டாக computer resources என்ற சொற்கள் சார்ந்த தகவல்களை, கல்விக்கென உள்ள தளங்களில் மட்டும் தேடிப் பெற வேண்டும் என விரும்பினால், computer resources inurl:edu என்று கொடுக்க வேண்டும்.
 

விளக்கம் வேண்டும் தேடல் (define: “word”):


 தேடல் கட்டத்திலேயே நாம் சிலவற்றிற்கான விளக்கம் மற்றும் விரிவான குறிப்புகளைத் தேடிப் பெறலாம். ஒரு சொல் துல்லியமாக என்ன பொருளைக் கொண்டுள்ளது என்று நீங்கள் தெரிந்து கொள்ள இந்தக் கட்டளையைப் பயன்படுத்தலாம். எடுத்துக் காட்டாக, super computer என்பதற்கான விளக்கம் தேவை எனில், define: super computer என்ற கட்டளையைக் கொடுக்கலாம்.
 

குறிப்பிட்ட சொல் உள்ள டெக்ஸ்ட் பக்கம் மட்டும் தேடிப் பெற (intext command):


 இந்த ஆப்பரேட்டர் கட்டளை மூலம், ஒரு குறிப்பிட்ட பொருள் குறித்துத் தேடுகையில், குறிப்பிட்ட சொல் பயன்படுத்தப் பட்டுள்ள இணையப் பக்கங்களை மட்டும் தேடிக் காட்டச் செய்கிறது. எடுத்துக் காட்டாக, soup recipes என்பது குறித்த தகவல்களைத் தேடிப் பெறுகையில், நமக்கு 'chicken' என்ற சொல் பயன்படுத்தப்படும் தளங்கள் மட்டும் தேடிப் பெற, soup recipes intext:chicken என்று கட்டளை கொடுக்க வேண்டும். கூகுள், chicken என்ற சொல் உள்ள, soup recipes குறித்த இணையப் பக்கங்களை மட்டும் காட்டும்.
 

'convert' கட்டளை: 


இது ஒரு ஆப்பரேட்டர் இல்லை; டூல் என்று சொல்லலாம். இது பன்னாட்டு பண மதிப்பைக் கையாள்கிறது. இந்திய ரூபாய் மதிப்பிற்கு அமெரிக்க டாலர் எவ்வளவு? என்ற வினாவிற்கு, அன்றைய பன்னாட்டளவிலான மதிப்பில் டாலர் மதிப்பைக் காட்டும். இதே போல எந்த நாட்டு கரன்சிக்கும் பெறலாம். எடுத்துக் காட்டாக, convert 100 INR to usd என்ற கட்டளைக்கு ரூ.100க்கு இணையான அமெரிக்க டாலர் எவ்வளவு என்று காட்டப்படும். 


மேலே காட்டப்பட்டுள்ள குறுக்கு வழிகள், நம் தேடலை விரைவாகவும் எளிதாகவும் மேற்கொள்ள வழி தருகின்றன. இதே போல பல குறுக்கு வழிகள் உள்ளன. இவற்றை அறிந்து நாம் தேவைப்படும்போது பயன்படுத்தலாம்.

கணினி / லேப்டாப்பில் எளிதாக வாட்ஸ் ஆப்-பை உபயோகிப்பது எப்படி...?

ஆண்ட்ராயிட் மொபைல், ஐபோன் மற்றும் டேப்லட்டுகளில் மட்டுமென பிரத்யேகமாக இருந்து வந்த வாட்ஸ் ஆப்-பை இனி நமது PC, லேப்டாப்பிலும் பயன்படுத்த முடியும்.

மொபைல், PC, லேப்டாப், டேப்லட் போன்ற அனைத்து டிவைசிலும் ஒரே நேரத்தில் வாட்ஸ் ஆப்-பை பயன்படுத்தலாம். ஒரு டிவைசிலிருந்து அனுப்பப்படும் மெசேஜ் அனைத்து டிவைசிலும் sync ஆகி விடும். மொபைலில் சிரமப்பட்டு  டைப் அடிப்பதை விட கணினியில் எளிதாக வேகமாக வாட்ச் அப் அனுப்புவது  இலகுதானே?

எப்படி PC / லேப்டாப்பில் வாட்ஸ் ஆப் பயன்படுத்துவது ?

முக்கியமாக இதனை பயன்படுத்த மொபைல் மற்றும் உங்கள் கணினி ஒரே நேரத்தில் இணையத்துடன் இணைக்கப்பட்டு இருக்க வேண்டும்.

Step 1

மொபைலில் உள்ள வாட்ஸ் ஆப்-பை ஓபன் செய்து, மேல் வலது புறத்திலுள்ள மூன்று புள்ளிகள் போன்ற அமைப்பை க்ளிக் செய்து அல்லது ஆண்டிராயிட் மொபைலில் ஆப்சன் பட்டனை அழுத்தி ... ,  'வாட்ஸ்ஆப் வெப்' என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுத்து கொள்ளவும்.


Step 2

இப்பொழுது மொபைலில் QR ரீடர் ஓபன் ஆகி இருக்கும். PC / லேப்டாப்பில், கூகிள் க்ரோம் பிரவுசரில் "web.whatsapp.com" என்ற லிங்கை டைப் செய்து, திரையில் தோன்றும் code -ஐ மொபைல் மூலம் ஸ்கேன் செய்ய வேண்டும்.


Step 3

ஸ்கேன் செய்த அடுத்த நிமிடம் PC / லேப்டாப்பில் கான்டாக்ட்ஸ் மற்றும் கான்வர்சேஷன் திரையில் தோன்றி வாட்ஸ் ஆப் பயன்படுத்த தயாராகி விடும்.

புதிய மெசேஜ் வந்தால் notify செய்யும் ஆப்ஷன்-ஐ PC / லேப்டாப்பில் on செய்து கொள்ளலாம். இதன் மூலம் புதிதாக வரும் மெசேஜ் திரையில் பாப் அப் ஆகும்.

Step 4

இனி  புதிதாக ஒரு சாட்-ஐ தொடங்கலாம். நமது ப்ரொபைல் படம் மற்றும் ஸ்டேடஸ்-ஐ PC / லேப்டாப்பிலிருந்து அப்டேட் செய்து கொள்ளலாம்.
மொபைலுக்கு வரும் மெசேஜ்கள் PC / லேப்டாப்பிலும் இருக்கும். இதில் அழிக்கப்படும் மெசேஜ்கள் மொபைலிலிருந்தும் அழிந்து விடுமாறு இது sync செய்யப்பட்டுள்ளது.


Step 5

மொபைலிலிருந்து 'வாட்ஸ் ஆப் வெப்' என்ற ஆப்ஷனை தற்போது க்ளிக் செய்தால், லாஸ்ட் ஸீன் மற்றும் PC / லேப்டாப்பிலிருந்து லாக் அவுட் செய்து கொள்ளும் ஆப்ஷன்கள் இருக்கும்.

கணினி / லேப்டாப்பில்  வாட்ஸ் ஆப்  பயன்படுத்துவது  குறித்து வாட்ஸ் ஆப்-பின் உதவி பக்கம் : http://www.whatsapp.com/faq/en/web/28080003

எளிமையாக விளக்கும் வீடியோ



 'வாட்ஸ் ஆப் வெப்' - குறிப்பிடும்படியான அம்சங்கள்

  • PC / லேப்டாப்பில் பெரிய திரை என்பதால்,மொபைலில் இருந்து சாட் செய்யும் போது தோன்றும் மெசேஜ்களை விட இதில் இன்னும் கூடுதல் மெசேஜ்கள் தோன்றும்.
  • வாட்ஸ் ஆப் வெப்பிலிருந்து லாக் அவுட் செய்த பிறகு, மறுமுறை PC / லேப்டாப்பில் வாட்ஸ் ஆப் பயன்படுத்த மீண்டும் QR code ஸ்கேன் செய்ய வேண்டும்.
  • ஏற்கனவே இருக்கும் கான்டாக்ட்ஸ் மற்றும் குரூப்பிற்கு மெசேஜ் செய்ய முடியுமே தவிர, புதிதாக ஒரு குரூப் உருவாக்க முடியாது.
  • புது மெசேஜ் வந்தால் PC / லேப்டாப்பிலும் நோட்டிபிக்கேசன் வரும்.
  • வாட்ஸ் ஆப் வெப்-ஐ PC / லேப்டாப்பிலிருந்து பயன்படுத்த வேண்டுமென்றால், மொபைலிலும்   இணைய இணைப்பு இருக்க வேண்டும்.
  • டைப் செய்ய ஏதுவாக, பெரிய திரையில் மெசேஜ்களை விசாலமாக பார்க்கும் வசதி தவிர வேறு வாட்ஸ் ஆப் வெப் கென பிரத்தியேகமாக எந்த வசதியும் சொல்லிக்கொள்ளும்படி இல்லை.

ஷிப்ட், ஆல்ட், கண்ட்ரோல் கீகளை கேப்ஸ் லாக் கீ போல அமைக்க

விண்டோஸ் சிஸ்டத்தில் டாகிள் கீ (Toggle Key) என ஒரு பயன்பாடு உள்ளது. கீ ஒன்றை அழுத்திவிட்டால், தொடர்ந்து ஒரு பயன்பாடும், மீண்டும் அதனை அழுத்தினால், முன்பிருந்த பயன்பாடும் கிடைக்கும். எடுத்துக் காட்டாக, கேப்ஸ் லாக் கீயினைச் சொல்லலாம். இதனை ஒருமுறை அழுத்திவிட்டால், தொடர்ந்து ஆங்கிலத்தில் பெரிய எழுத்துகளாகவே கிடைக்கும். மீண்டும் அழுத்தி விட்டால், வழக்கம் போல சிறிய எழுத்துகள் கிடைக்கும். குறிப்பிட்டபடி செட் செய்தால், இதனை அழுத்தும் போதும், நீக்கும் போதும், வேறுபாடான ஒலி எழுப்பி, சிஸ்டம் நம்மை எச்சரிக்கும்.

ஒரு சிலர், ஏன் இதனை மற்ற கீகளிலும் செயல்படும்படி செய்யக் கூடாது. குறிப்பாக, ஷிப்ட், ஆல்ட் மற்றும் கண்ட்ரோல் கீகளை அமைக்க முடியுமா? என்று கேட்கின்றனர். இந்த கீகளை இவ்வாறு அமைப்பது, சீரான பயன்பாட்டினைத் தரும் செயலாக இருக்க முடியாது. இருப்பினும், எப்படி இவற்றை டாகிள் கீகளாக அமைக்க முடியும் எனப் பார்க்கலாம்.

விண்டோஸ் அமைப்பில் ஸ்டிக்கி கீ (Sticky Keys) என்று ஒரு அமைப்பு உண்டு. இதனை இயக்கித்தான் கீ பயன்பாட்டினை டாகிள் கீயாக அமைக்கலாம்.  ஸ்டிக்கி கீ பயன்பாட்டினை எப்படி செயல்பாட்டிற்குக் கொண்டு வருவது எனப் பார்க்கலாம். முதலில் கண்ட்ரோல் பேனலைத் திறக்கவும். இது Classic Viewவில் இருப்பதை உறுதி செய்து கொண்டு, அனைத்து கண்ட்ரோல் பேனல் ஐகான்களும் காட்டப்படுகின்றனவா என்று பார்க்கவும். இந்த வியூவில் இல்லை என்றால், கண்ட்ரோல் பேனலின் இடது பக்கப் பிரிவில் சென்று, Switch to Classic View என்ற டேப்பினை அழுத்தி, இந்த வியூவிற்குக் கொண்டு வரவும்.






அடுத்து Accessibility என்பதனைத் திறக்கவும். இப்போது Accessibility ஆப்ஷன்ஸ் என்ற டயலாக் பாக்ஸ் திறக்கப்படும். இனி கீ போர்ட் டேப்பில் அழுத்தி, Use Sticky Keyss என்ற செக் பாக்ஸினைத் தேர்ந்தெடுக்கவும்.  அடுத்து Settings. என்ற இடம் பெற S என்பதனை அழுத்தவும். ஸ்டிக்கி கீ டயலாக் பாக்ஸ் திறக்கப்படும். அந்த டயலாக் பாக்ஸில் கீழ்க்கண்ட வசதிகள் தரப்பட்டிருக்கும். Use shortcut செக் பாக்ஸ் கிடைக்க U அழுத்தவும். இதனை அழுத்திவிட்டால், ஷிப்ட் கீயை ஐந்து முறை அழுத்தி, ஸ்டிக்கி கீஸ் இயக்கத்தினைத் தொடங்கவும் நிறுத்தவும் இயலும்.

P அழுத்தினால், Press modifier key யை இருமுறை அழுத்த செக் பாக்ஸ் லாக் செய்யப்படும். இதன் மூலம், செயல்பாட்டினை மாற்றும் கீயை (Shift, Ctrl, Alt, orWin) நாம் லாக் செய்திட முடியும். இந்த கீகளை இருமுறை தொடர்ந்து அழுத்துவதன் மூலம் இந்த செயல்பாடு நடைமுறைக்கு வரும். T கீ அழுத்தினால், Turn Sticky Keys off if two keys are pressed at once செக் பாக்ஸ் தேர்ந்தெடுக்கப்படும். இதன் மூலம், ஸ்டிக்கி கீகளின் இயக்கத்தினை நிறுத்த முடியும். மாற்று பயன்பாடு தரும் கீகளான Shift, Ctrl, Alt, அல்லது Win key கீகளில் ஒன்றுடன், இன்னொரு கீயுடன் சேர்த்து அழுத்துகையில், ஸ்டிக்கி கீ இயக்கம் நிறுத்தப்படும்.


M கீ அழுத்த, Make sounds when modifier key is pressed என்ற செக் பாக்ஸ் தேர்ந்தெடுக்கப்படும். மாற்று செயல்பாட்டினைத் தரும் மாடிபையர் கீ, (Shift, Ctrl, Alt, அல்லது Win key கீ) இயக்கத்தைத் தொடங்கவோ, அல்லது நிறுத்தவோ அழுத்தப்படுகையில், ஒலி ஒன்று எழுப்பப்படும். தொடங்கும்போது ஒரு வகை ஒலியும், செயல்பாடு நீக்கப்படும்போது இன்னொரு வகை ஒலியும் எழுப்பப்படும்.  S என்ற கீ அழுத்த, Show Sticky Keys status on screen என்ற செக் பாக்ஸ் தேர்ந்தெடுக்கப்படும். ஸ்டிக்கி கீ செயல்பாடு இயக்கத்தில் இருக்கையில், ஸ்டிக்கி கீஸ் ஐகான் டாஸ்க் பாரில் காட்டப்படும்.

இண்டர்நெட் வேகத்தை அதிக படுத்த சில வழிகள் !!!

எந்த விதமான வேகத்தடையும் இல்லாமல் அதிவேக இண்டர்நெட் பயன்படுத்த புதிய வழிமுறை.
இண்டர்நெட் இணைப்பு கிடைக்கும் முன் வரை நமக்கு இணைப்பு வேகம் என்றால் பெரிதாக ஏதுவும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை ஆனால் பயன்படுத்திய சில நாட்களில் அல்லது சில மாதங்களில் நமக்கே தெரியும் இணைப்பு வேகம் இன்னும் வேகமாக இருந்தால் நன்றாக இருக்கும் என்று ஆனால் நாம் தேர்ந்தெடுத்து இருக்கும் இண்டர்நெட் பிளான் அன்லிமிடட் என்பதால் அதற்கு தகுந்தாற் போல் தான் குறைவாக வேகம் இருக்கும் இந்தப்பிரச்சினையை நீக்கி முழு இண்டர்நெட் வேகத்தையும் பெற செய்யும் வழி முறையை இன்று பார்க்கலாம்.internet1-150x150.jpg
இண்டர்நெட் இணைப்பின் வேகம் நாடுகளுக்கு நாடு வேறுபட்டாலும் ஒரு சில நாடுகளில்இணையத்தின் வேகம் எல்லோருக்கும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை, இதற்காக நாம் பெரிதாக எதுவும் செய்ய வேண்டும் நம் கணினியில் ஒரு சிறிய மாற்றம் செய்து இணையத்தின் முழு வேகத்தையும் எந்தத்தடையும் இல்லாமல் பயன்படுத்தலாம்.
சாதாரணமாக அன்லிமிடட் இண்டர்நெட் ( Unlimited Internet) இணைப்பு தான் எல்லோருக்கும் கொடுக்கப்பட்டிருக்கும் இதில் இணைப்பு வேகம் குறைந்தபட்சமாக ( Limited Speed) இருக்கும் பல மணி நேரம் செலவு செய்துதான் பெரிய அளவிளான கோப்புகளை தறவிரக்க முடியும். இதைத்தவிர்த்து நம் கணினியில் ஒரு சில மாற்றம் செய்வதன் மூலம் முழு இண்டர்நெட் வேகத்தையும் பெறுவது எப்படி என்பதைப்பற்றி பார்க்கலாம்.
விண்டோஸ் எக்ஸ்பி ( Windows Xp ) கணினி வைத்திருப்பர்களுக்கு மட்டுமே இந்த முறை வேலை செய்யும், முதலில் Start Button -ஐ சொடுக்கி Run என்பதை தேர்ந்தெடுத்து சொடுக்க வேண்டும், Run விண்டோவில் gpedit.msc என்று தட்டச்சு செய்த்து Ok பொத்தானை சொடுக்க வேண்டும் அடுத்து வரும் திரையில் இணையத்தின் அபார வளர்ச்சி Computer Configuration என்ற மெனுவிற்கு அடியில் இருக்கும் Administrative Templates என்பதை தேர்ந்தெடுத்து அதில் வரும் sub menu -வில் Network என்பதை தேர்ந்தெடுத்து அதில் வரும் Sub menu வில் QoS Packet Scheduler என்பதை சொடுக்க வேண்டும். இதில் Limit Reservable Bandwidth என்பதை சொடுக்கி Enabled என்பதை தேர்ந்தெடுத்து அதற்கு அடியில் இருக்க்கும் Band width Limit என்பதில் 4% கொடுத்து Ok பொத்தானை சொடுக்கி சேமித்து வெளியே வரவேண்டியது தான் அடுத்து கணினியை ஒரு முறை restart செய்து பார்த்தால் இணைப்பின் வேகம் முழுமையாக தெரியும்.

கூகுள் நிறுவனத்தின் ஆண்ட்ராய்டு டிவி அறிமுகம்

GLMHOoR.jpg



கூகுளின் ஆண்ட்ராய்டு ஆப்ரேட்டிங் சிஸ்டத்தை ஸ்மார்ட்போன், டேப்லட், வீடு மற்றும் ஸ்மார்ட்வாட்ச்களில் பொருத்தி உருவாக்கி கொண்டிருந்திருந்தது. இந்த நிறுவனம் தற்பொழுது ஆண்ட்ராய்டு டிவி வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளது. இணையதள வசதியுடன் இயங்கும் ஸ்மார்ட் டிவிகளில் கூகுளின், ஆண்ட்ராய்டு செட்-ஆப் பாக்ஸ் மற்றும் வீடியோ கேம் கன்சோல்களை பொருத்திக்கொள்ளலாம். 


cgaoK2U.jpg
ஆண்ட்ராய்டு டிவியில் யூசர்கள், படங்களை பார்க்கலாம், கூகுள் ப்ளேவில் இருந்து வீடியோக்கள், யூடூப், நெட்ப்ளிக்ஸ், பன்டோரா, ஹேங்அவுட்ஸ், ஸ்கைப், பேஸ்புக், ட்விட்டர் போன்றவற்றை டவுன்லோடு செய்து தொலைக்காட்சியில் காணலாம். கேம்பேட் உதவியுடன் ஆண்ட்ராய்டு கேம்களை தொலைகாட்சிகளில் விளையாடலாம். சோனி, ஷார்ப், பிலிப்ஸ் உள்ளிட்ட முன்னணி தொலைகாட்சிகளில் இந்த செட் ஆப் பாக்ஸ்கள் செயல்படும். நீங்கள் சுலபமாக உள்ளடக்கத்தை (content) கண்டுபிடிக்க வாய்ஸ் சேர்ச் பயன்படுத்த முடியும். 

cDBTRMg.jpg
மேலும், 2002ம் ஆண்டில் இருந்து ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட படங்கள் என்பன போன்ற மிகவும் சிக்கலான தேடல்களையும் மற்றும் கேள்விகளையும் கேட்கலாம். உங்களுக்கு பிடித்த விளையாட்டுகளை தொலைகாட்சியில் டவுன்சோடு செய்து கொண்டு விளையாடலாம். நீங்கள் என்பிஏ ஜாம் போன்ற மல்டி ப்ளேயர் விளையாட்டுகளையும் விளையாடலாம். ஏற்கனவே ஆப்பிள் டிவி என்ற பெயரில் ஆப்பிள் செல்போன் நிறுவனம் தயாரித்துள்ள செட் ஆப் பாக்ஸ்கள் எப்படி ஆப்பிள் நிறுவன ஐஓஎஸ் பிளாட்பார்மில் இயங்குகிறதோ அதைப்போல, கூகுள் ஆண்ட்ராய்ட் பிளாட்பார்மில் இயங்க உள்ளது.

COMPUTER TIPS - கேள்வி - பதில்

1


கேள்வி: சி.டி. மற்றும் டி.வி.டிக்களில், பதியப்படும் பளபளப்பான பக்கத்தில் ஸ்கிராட்ச் எதுவும் ஏற்படக் கூடாது என்றும், மற்ற பக்கத்தில் அந்த அளவிற்கு பாதுகாப்பு தேவை இல்லை என்றும் சொல்கின்றனர். இதில் எதில் ஆபத்து மிக அதிகம்? அதாவது எந்தப் பக்கம் ஸ்கிராட்ச் ஏற்பட்டால், பதியப்பட்ட டேட்டா கெட்டுவிட வாய்ப்புண்டு.?

பதில்:
 பலருக்கு, இப்போது தரப்படும் பதில் நல்ல படிப்பினையைத் தரும். பளபளப்பான பக்கத்தைக் காட்டிலும், தலைப்பு அல்லது படம் அச்சிடப்பட்ட வேறு பக்கத்தில் ஸ்கிராட்ச் ஏற்படுவதுதான் அதிக பாதிப்பை உண்டு பண்ணும். லேபிள் ஒட்டப்படும் பக்கத்தின் கீழாக, மிக மெல்லிய அலுமினிய பூச்சினை அடுத்தே டேட்டா பதியப்படுகிறது. எனவே இதில் ஸ்கிராட்ச் ஏற்பட்டால், சரி செய்திட முடியாது. பளபளக்கும் பக்கத்தில் ஏற்படும் கோடுகளைக் கூட சரி செய்திடலாம். இதில் முடியாது. எனவே மேற்புறம், கீழ்புறம் என இரு பக்கத்திலும் கீறல்கள் இல்லாமல் பார்த்துக் கொள்வதே நல்லது.

 
2


கேள்வி:  நான் விண்டோஸ் 8.1 சிஸ்டம் வைத்துள்ளேன். விண்டோஸ் 8.1.1. வந்துள்ளதாகப் படித்தேன். ஆனால், அப்டேட் சென்றால், செய்திட முடியவில்லை. ஏன்? அதற்கான வழி என்ன?
 

பதில்: கம்ப்யூட்டரை இயக்கி, அதன் மெட்ரோ ஸ்கிரீன் திரையில் “check updates” என்று டைப் செய்திடவும். அல்லது, டெஸ்க்டாப் நிலையில், Search Charm என்பதனைத் திறக்கவும். “check updates” என்று டைப் செய்திடவும். ஐகான் மீது தட்டவும். Update மற்றும் recovery திறக்கப்படும். check now என்பதில் தட்டவும். இப்போது விண்டோஸ் ஏதேனும் அப்டேட் செய்திட வேண்டுமா என்று உங்கள் கம்ப்யூட்டரை சோதனை செய்திடும். நீங்கள் உங்கள் சிஸ்டத்தில் Automatic Update இயங்கிய நிலையில் அமைத்திருந்தால், அனைத்து அப்டேட் பைல்களும் இயக்கப்பட்டு, அனைத்தும் அப்டேட் ஆகி இருக்கும். Update history என்பதில் கிளிக் செய்தால், எந்த அப்டேட் பைல்கள் ஏற்கனவே இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ளன என்ற பட்டியல் கிடைக்கும். இதில் உங்கள் சந்தேகம் தீர்ந்துவிடும்.

3



கேள்வி: புதியதாக வாங்கிய லேப் டாப் கம்ப்யூட்டரில் விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டம் உள்ளது. தொடுதிரை இல்லாமல், மவுஸ் மற்றும் கீ போர்ட் கொண்டு பயன்படுத்தி வருகிறேன். இதில் கம்ப்யூட்டரை ஷட் டவுண் செய்திட எளிதான வழி என்ன? ஏற்கனவே நான் விண்டோஸ் 7 பயன்படுத்தி வந்தேன். அதில் உள்ளது போல ஸ்டார்ட் மெனு இதில் மறைத்து வைத்து தரப்பட்டுள்ளதா? ஸ்டார்ட் மெனு பெற வழி என்ன?

பதில்:
 புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டம் என்பதால் மட்டுமல்ல; விண்டோஸ் 8 சிஸ்டம் பல புதிய வழிகளில் சில சாதாரணமான செயல்பாடுகளைக் கூட மாற்றி உள்ளது. எனவே தான் இந்தத் தடுமாற்றம். ஆனால், பழகிவிட்டால் எல்லாம் சரியாகிவிடும். விண்டோஸ் 8 சிஸ்டத்தில் Power options பட்டன் சார்ம்ஸ் பாரில் (Charms Bar) உள்ள செட்டிங்ஸ் (Settings) உள்ளாக அமைந்துள்ளது. இதனை உங்கள் மவுஸினை, திரையின் மேல் அல்லது கீழ் வலது மூலையில் கொண்டு சென்று பெறலாம். செட்டிங்ஸ் பிரிவினைத் திறக்க, விண்டோஸ் லோகோ “டி” கீயினை கீயுடன் இணைத்து இயக்கலாம். இங்கு உங்களுக்கு சிஸ்டம் முடித்து வைக்க ஆப்ஷன்கள் தரப்படும்.

அடுத்து, உங்கள் விண்டோஸ் 7 விருப்பத்திற்கு வருவோம். நீங்கள் குறிப்பிடுவது போல ஸ்டார்ட் மெனு மறைத்து வைக்கப்படவில்லை. எனவே தர்ட் பார்ட்டி மூலம் அதனை அமைத்துக் கொள்ளலாம். அதில் கிடைத்தது போல, ஸ்டார்ட் மெனு வேண்டும் எனில், இலவசமாகக் கிடைக்கும் புரோகிராம்களில் ஒன்றைப் பயன்படுத்தலாம். www.classicshell.net என்ற முகவரியில் உள்ள தளத்தில் கிடைக்கும் Classic Shell என்ற புரோகிராம் அல்லது www.areaguard.com என்ற முகவரியில் உள்ள StartW8 என்ற புரோகிராம் ஸ்டார்ட் மெனுவினைத் தரும். 

இன்னொரு வழியும் உள்ளது. கம்ப்யூட்டரில் உள்ள பவர் பட்டனைச் சிறிது நேரம், ஐந்து விநாடிகள், அழுத்தியவாறு இருந்தால், கம்ப்யூட்டர் சிஸ்டம் ஆப் ஆகும். ஆனால், அதற்கு முன்னால், விண்டோஸ் எக்ஸ்புளோரர் உட்பட, அனைத்து புரோகிராம்களையும் சேவ் செய்து மூடி முடித்து வைத்திருக்க வேண்டும்
 
4

கேள்வி: என்னிடம் உள்ள கம்ப்யூட்டரில் விண்டோஸ் 7 இயங்குகிறது. இதன் டாஸ்க் பாரில் இருக்கும் கடிகாரம் அருகே, அன்றைய நாளின் பெயர் வரவேண்டும் என்றால் என்ன செய்திட வேண்டும்? எடுத்துக் காட்டாக, Wednesday, July 9 என வேண்டும் என்றால், எப்படி செட் செய்திட வேண்டும்?

பதில்: 
ஏற்கனவே மாறா நிலையில் அவ்வாறு தானே இருந்திருக்க வேண்டும். பரவாயில்லை அமைத்துவிடலாம். முதலில் Control Panel செல்லவும். அடுத்து, Region and Language பிரிவில் “Additional Settings என்பதில் கிளிக் செய்தால், Customize Format என்று ஒரு விண்டோ கிடைக்கும். இதில் Date என்ற டேப்பில் கிளிக் செய்திடவும். இங்கு நீங்கள் எந்த மாதிரி பார்மட்டில் தேதி, கிழமை இருக்க வேண்டும் என விரும்புகிறீர்களோ, அதே போல அமைத்திட அனைத்து ஆப்ஷன்களும் தரப்பட்டிருக்கும். தேவையானதைத் தேர்ந்தெடுத்து அமைக்கலாம். உங்கள் விருப்பத்திற்காக, நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய ஆப்ஷன் “dddd, MMMM, dd” ஆகும்

 
5


கேள்வி: என்னிடம் வேர்ட் 2007 உள்ளது. இதில் ஹெல்ப் பட்டன் எப்1 அழுத்தினால், இணைய இணைப்பில் ஆன்லைன் உதவிக் குறிப்புகள் மட்டுமே கிடைக்கும் என்பது போன்ற செய்தி கிடைக்கிறது. அப்படியானால், ஆப் லைன் உதவிக் குறிப்புகள் இனி கிடைக்காதா? கிடைக்க வேண்டும் என்றால், என்ன மாற்றங்கள் செய்திட வேண்டும்?
 


பதில்வேர்ட் புரோகிராம் தரும் உதவிக் குறிப்புகளைப் பொறுத்தவரை, இணையத்திலிருந்தும், இல்லாமல் ஆப் லைனிலும், குறிப்புகளைத் தரும். உங்கள் கம்ப்யூட்டரில் இது சரியாக செட் செய்யப்படவில்லை என்று நினைக்கிறேன். சரி செய்திட கீழ்க்கண்ட செயல்பாடுகளை மேற்கொள்ளவும். 

1. முதலில் எப்1 கீயை அழுத்தவும். வேர்ட் இப்போது வேர்ட் ஹெல்ப் (Word Help) டயலாக் பாக்ஸைக் காட்டும். 
2. அடுத்து கீழாக உள்ள Connected to Office Online என்பதில் கிளிக் செய்திடவும். 
3. தொடர்ந்து Show Content Only From this Computer என்பதில் கிளிக் செய்திடவும். இப்போது அதில் காட்டப்படும் ஸ்டேட்டஸ் பார் Offline எனக் காட்டும். 

இந்த மாற்றங்களை ஏற்படுத்தி ஹெல்ப் சிஸ்ட்த்தினை நீங்கள் விரும்பும் வகையில் பயன்படுத்தலாம்.
 

6

கேள்வி: சீனாவில் க்யூ க்யூ சர்ச் தளம் ஒன்று மிகவும் பிரபலமானதாகவும், தேடல் வழிகளுக்குத் தீர்வு தருவதாகவும் படித்தேன். இதனை இணையத்தில் அணுக இயலவில்லை. அதன் இணைய முகவரி தரவும். அது பற்றிய சிறிய குறிப்பும் தரவும். நாம் பயன்படுத்த முடியுமா?
 

பதில்: நீங்கள் குறிப்பிடும் தளம் சீனாவில் பிரபலமானது. இது ஒரு தகவல் களஞ்சிய தளம் மற்றும் தேடல் தளமாகும். இதன் முகவரி http://www.qq.com/(இணைத்துள்ள படத்தினைப் பார்க்கவும்.) இதனை Tancent என்ற சீன நிறுவனம் உருவாக்கி தந்துள்ளது. இன்ஸ்டண்ட் மெசேஜ் தருவதில், இது முதல் நிலையில் உள்ளது. 70 கோடிக்கும் மேற்பட்டவர்கள் இதனைத் தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றனர். இதனை நீங்களும் பயன்படுத்தலாம். ஆனால், அனைத்தும் சீன மொழியில் இருக்கும். அதனை கூகுள் மூலம் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தும் பார்க்கலாம். நான் தமிழிலும் மொழி பெயர்த்துப் பார்த்தேன். இணைத்துள்ள படங்களைப் பார்க்கவும்.
 

7

கேள்வி: வேர்ட் 2007 -ல் அமைக்கப்படும் டாகுமெண்ட்களில்,  நிறுவனத்தின் பெயரை வாட்டர்மார்க் ஆக இணைக்க இதற்கான செட்டிங்ஸ் அமைப்பு வழி?


பதில்: வேர்ட் டாகுமெண்ட்டில் வாட்டர்மார்க் அமைப்பதற்கான வழிமுறைகள் எளிது என்றாலும், பலர் இந்த நல்ல வசதியைப் பயன்படுத்துவதில்லை. 

வாட்டர்மார்க் அமைக்க மாறா நிலையில், சில வழிகளைக் கொண்டிருந்தாலும், நம் விருப்பப்படியும் இதனை அமைக்கலாம். நாம் விரும்பும் டெக்ஸ்ட், எழுத்துரு, வண்ணம் என எதனை வேண்டுமானாலும் மாற்றி அமைக்கலாம். 

1. ரிப்பனில், “Page Layout” என்ற டேப்பில் கிளிக் செய்திடவும்.

2. “Page Background” குரூப்பில் “Watermark” என்ற கட்டளையில் கிளிக் செய்திடவும். இங்கு மாறா நிலையில் “CONFIDENTIAL 1”, “DO NOT COPY”, or “URGENT 1” ஆகிய வாட்டர்மார்க் அடையாளங்கள் கிடைக்கும். இதில் ஒன்றை நீங்கள் விரும்பினால் தேர்ந்தெடுக்கலாம். அல்லது, “Custom Watermark” என்ற பட்டனில் கிளிக் செய்திடவும். இப்போது “Printed Watermark” என்ற டயலாக் பாக்ஸ் கிடைக்கும். 

இங்கு பலவித ஆப்ஷன்கள் கிடைக்கும். இவற்றில் நீங்கள் விரும்பும் வகையில் உள்ளதைத் தேர்ந்தெடுக்கலாம்.
“No watermark” தேர்ந்தெடுத்தால், அப்போதைய வாட்டர்மார்க் நீக்கப்படும். இதே செயல்பாட்டினை, ரிப்பனில் உள்ள “Remove Watermark” என்ற ஆப்ஷனைத் தேர்ந்தெடுப்பதன் மூலமும் மேற்கொள்ளலாம். 

உங்கள் நிறுவனப் படம் ஒன்றை வாட்டர்மார்க்காக அமைக்க விரும்பினால், “Select Picture” என்ற பட்டனைத் தேர்ந்தெடுக்கவும். படத்தின் அளவை, விருப்பப்படி மாற்றி அமைக்க, “Scale” என்பதில் கிளிக் செய்திடவும். தேர்ந்தெடுத்தால், டெக்ஸ்ட்டை வாட்டர்மார்க்காக அமைக்கலாம். “Text” என்பதை அடுத்து நீங்கள் விரும்பும் டெக்ஸ்ட்டை அமைக்க வேண்டும். இதன் பின், டெக்ஸ்ட் வண்ணம் மற்றும் அது எப்படி அமைய வேண்டும் என்பதனை அமைக்க ஆப்ஷன்கள் கிடைக்கும். இவற்றை அமைத்த பின்னர், ஓகே அழுத்தி டயலாக் பாக்ஸை மூடவும். இனி டாகுமெண்ட்டில் நீங்கள் அமைத்த டெக்ஸ்ட் நீங்கள் அமைத்த விருப்பப்படி வாட்டர்மார்க்காக அமைக்கப்படும்.
 


மொபைல் போன் பேட்டரி பாதுகாப்பு


KgPp0M2.jpg


மொபைல் போன் பயன்பாடு அத்தியாவசிய ஒன்றாக இன்று வளர்ந்துள்ளது. மொபைல் போன் ஒன்றில், மிக முக்கிய உறுப்பாக அதன் பேட்டரி உள்ளது. சரியாக நாம் இதனைக் கவனிக்கவில்லை என்றால், நமக்குத் தேவையான முக்கிய வேளைகளில், இதன் மின் சக்தி காலியாகி, மொபைல் போனைப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்படும். எனவே பேட்டரிகளை அவ்வப்போது சார்ஜ் செய்திட வேண்டியதுள்ளது. சார்ஜ் செய்தாலும், அதனைத் தேவைப்படும் போது மட்டும் பயன்படுத்தும் வகையில் சில முக்கிய செயல்பாடுகளை நாம் மேற்கொள்ள வேண்டும். அப்படி மேற்கொண்டால் தான், பேட்டரி நம் எதிர்பார்ப்புக்கு ஏற்ற வகையில் நமக்கு கை கொடுக்கும். அவை என்ன என்று இங்கு பார்க்கலாம்.


நீங்கள் செல்லும் இடம், உங்களுடைய மொபைல் போனுக்கான சிக்னல் கிடைக்காத அல்லது தொடர்ந்த சிக்னல் கிடைப்பதில் சிரமமான சூழ்நிலை உள்ள இடமாக இருப்பதாக உணர்ந்தால், மொபைல் போன் செயல்பாட்டினை நிறுத்த வேண்டும். ஏனென்றால், இது போன்ற சூழ்நிலைகளில், உங்கள் மொபைல் போன் வழக்கத்திற்கு அதிகமான மின் சக்தியைப் பயன்படுத்தி, சிக்னல்களை எப்படியாவது பெற்றுவிட முயற்சிக்கும். அது பெரும்பாலும் தோல்வியையே தழுவும். எனவே, மொபைல் போனை இது போன்ற இடங்களில் ஸ்விட்ச் ஆப் செய்வது, பேட்டரியின் மின்சக்தி வீணாகச் செலவிடப்படுவது தடுக்கப்படும்

.
அதே போல, மொபைல் போனில், காலண்டர், நோட்ஸ் போன்ற அப்ளிகேஷன்களைப் பயன்படுத்தினாலும், அல்லது ஆங்கிரி பேர்ட்ஸ் போன்ற விளையாட்டுகளில் ஈடுபடுவதாக இருந்தாலும், மொபைல் போனை ஏர்பிளேன் மோட் ("airplane mode")எனப்படும் நிலையில் அமைத்து இவற்றை செயல்படுத்தலாம். இதனால், சிக்னல் தொடர்புகள் நிறுத்தப்பட்டு, மொபைல் போனில் உள்ள அப்ளிகேஷன்கள் மட்டும் இயங்கும் நிலை ஏற்படும்.


z2G5wKw.jpg

தேவைப்பட்டால் ஒழிய, மொபைல் போனில் இயங்கக் கூடிய புளுடூத், வை பி, ஜி.பி.எஸ். மொபைல் டேட்டா போன்ற அப்ளிகேஷன்களை நிறுத்தலாம். இவை தேவைப்படாமலேயே, தொடர்ந்து இயக்கநிலையில் இருந்தால், பேட்டரியின் திறன் வீணாகும்

.
மொபைல் போன் திரையின் ஒளிநிலையை (brightness) குறைத்து அமைக்கவும். பெரும்பாலான போன்களில், இதற்கென "auto" எனப்படும் தானியங்கி நிலை ஒன்று தரப்பட்டிருக்கும். பலர், இதனைச் செயல்படாத தன்மையில் வைத்து, ஒளிநிலையை அதிகமாக்கி வைப்பார்கள். இது தேவையற்றது. இதற்குப் பதிலாக, மிகவும் குறைத்து செட் செய்திடலாம். அதனை செட் செய்திடும் இட த்தில், ஒரு ஸ்லைடிங் பார் ஒன்று தரப்பட்டிருக்கும். இந்த கோட்டினை இழுத்து அமைக்கும்போதே, தோன்றும் ஒளி நிலை நமக்கு எவ்வளவு தேவைப்படும் என்பதனைக் கண்டறிந்து செட் செய்திடலாம்.


cvPLy74.jpg


மொபைல் போன் ஒன்றின், பின்னணியில் பல அப்ளிகேஷன்கள் தானாகவே இயங்கிக் கொண்டிருக்கும். இதனால் தான், பேஸ்புக் போன்ற சமூக இணைய தளத்தில் நமக்கான தகவல் தரப்படும் நிலையில், மொபைல் போனுக்கு அறிவிப்பு கிடைக்கும். இது கூகுள் போன்ற அப்ளிகேஷன்களுக்கும் பொருந்தும். ஆனால், எப்போதோ வரப்போகிற தகவலுக்காக, எப்போதும் தயார் நிலையில், இது போன்ற அப்ளிகேஷன்களைப் பின்னணியில் இயக்கத்தில் வைத்திருப்பது, நம் மொபைல் போன் பேட்டரியின் திறனை வீணடிக்கும். எனவே, தேவைப்படும்போது மட்டும், இந்த அப்ளிகேஷன்களை இயக்குவது நல்லது. 

பேச்சு இல்லாமல், வேறு சில இயக்கங்களை நாம் மொபைல் போனில் அவ்வப்போது மேற்கொள்கிறோம். சிலர் மிக அதிகமாகவே மேற்கொள்வார்கள். இணையத்தில் உலா வருதல், கேம்ஸ் விளையாடுவது, கேமரா பயன்படுத்தி போட்டோ எடுப்பது போன்றவை இதில் அடங்கும். குறிப்பாக போட்டோ எடுப்பது, அதிகமான மின் சக்தியை எடுத்துக் கொள்ளும். ப்ளாஷ் பயன்படுத்துவது இதில் மிக அதிக மின்சக்தியை எடுக்கும் ஒரு செயல்பாடாகும். இவற்றைக் கூடுமானவரை தேவைப்பட்டால் மட்டுமே பயன்படுத்த வேண்டும். பயன்படுத்திய பின்னர், இவற்றை செயல்படா நிலையில் ஆப் செய்து வைக்க வேண்டும். கேமரா சாதனம் போன்றவற்றின் இயக்கத்தை ஆப் செய்த சில விநாடிகளிலேயே மீண்டும் ஆன் செய்வது, அதிகப்படியான மின் சக்தியைப் பயன்படுத்தும். எனவே, ஒருமுறை ஆப் செய்த இந்த அப்ளிகேஷன்களை, சிறிது கால இடைவெளி விட்டுத்தான், மீண்டும் ஆன் செய்திட வேண்டும்.

k1nbvna.jpg

ஆண்ட்ராய்ட் சிஸ்டம் இயங்கும் மொபைல் போன்களில், இந்த ஒவ்வொரு அப்ளிகேஷனும் எவ்வளவு மின் சக்தியைப் பயன்படுத்துகிறது என்பதனைக் காணலாம். அதை அடிக்கடி பார்த்து, பின்னணியில் வீணே இயங்கும் அப்ளிகேஷன்களை நிறுத்தலாம். 

பேட்டரியின் பவர் மிகவும் குறைவாக இருக்கும்போது, அதனை ரீ சார்ஜ் செய்திடும் நேரம் வரை, பேச்சுக்களை அளவோடு வைத்துக் கொள்ளவும். இல்லை எனில், முக்கியமானவர்கள் அழைக்கும்போது, நம் மொபைல் போன் பேட்டரியில், பவர் இல்லாமல் போய்விடும்.

கம்ப்யூட்டருக்குப் புதியவரா? தெரிந்தே செய்திடும் தவறுகள்

CW2RQyB.jpg


தகவல் தொழில் நுட்ப சாதனங்கள் இன்று நம் வாழ்வின் ஓர் முக்கிய அங்கமாக, அடிப்படை சாதனங்களாக மாறிவிட்ட பின்னரும், பல மோசமான பழக்க வழக்கங்களை, அவை மோசம் என்று தெரிந்த பின்னரும், மாற்றிக் கொள்ளாமல் தொடர்ந்து பின்பற்றி வருகிறோம். அவை என்னவென்று இங்கு பார்க்கலாம்.



1. மோசமான சூழ்நிலையில் கம்ப்யூட்டரை இயக்குதல்: 


கம்ப்யூட்டர் முன்னால், பல மணி நேரங்கள் தொடர்ந்து அமர்ந்து அதனை இயக்குவது பலருக்கு வாடிக்கையாகிவிட்டது. நம்முடைய முதுகைத் தாங்கிப் பிடிக்காத நாற்காலி, உயரத்தை அட்ஜஸ்ட் செய்ய முடியாத மேஜை மற்றும் நாற்காலிகள், உடல் வலி வந்த பின்னரும் உட்கார்ந்து பணியாற்றும் நிலையை மாற்றிக் கொள்ளாமல் தொடருதல் ஆகியவை நமக்குப் பெரிய அளவில் துன்பத்தை வரவழைக்கும் விஷயங்களாகும்.


2. ஒரே அழுக்கு: 


கம்ப்யூட்டர், கீ போர்ட், மவுஸ், சிபியு உள்ள கேபின் - இவை யாவும் மோசமான தூசு மற்றும் அழுக்கு படிந்த நிலையிலேயே இயக்கப்படுகின்றன. வெளிர் நிறங்களில் வடிவமைக்கப்பட்ட பல கீ போர்டுகள், அழுக்குப் படிந்ததனால், முற்றிலும் நிறம் மாறி, தங்கிவிட்ட அழுக்கு கறைகளுடனேயே காணப்படுகின்றன. அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வில், பொதுக் கழிப்பறைகளில் அமரும் இடத்தில் காணப்படும் கிருமிகளைக் காட்டிலும் 60 மடங்கு மேலாகக் கிருமிகள், கீ போர்டில் உள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது. நாளொன்றுக்கு ஒருமுறை என இல்லாவிட்டாலும், வாரம் ஒருமுறையாவது, இவற்றைச் சுத்தப்படுத்தும் திரவம் கொண்டு சுத்தப்படுத்தினால், இயக்குபவரின் உடல் நலம் பாதுகாக்கப்படும் அல்லவா?


3. தொல்லை தரும் வகையில் போன் பேசுதல்:


 நம்மில் பலர், பெரும்பாலானவர்களின் வெறுப்புக்கு ஆளாவது, நாம் மொபைல் பயன்படுத்தும் முறைகளினால்தான். சாப்பிடும் மேஜைகளிலிருந்து போன்களைத் தள்ளியே வைக்கவும்; கடைகள், ஜிம், பொது அலுவலகங்கள், லிப்ட்கள், மருத்துவமனை, பஸ், ஆட்டோ, ட்ரெயின் போன்ற இடங்களில், மொபைல் போனில் உரக்கப் பேசுவதை எப்போது நிறுத்தப் போகிறோம்?


4. பேக் அப்பா? அப்படின்னா?


நம்மில் பெரும்பாலோர், கம்ப்யூட்டரில் அமைக்கப்படும் பைல்களுக்கான பேக் அப் காப்பி எடுப்பதே இல்லை. சரியான கால இடைவெளியில், கம்ப்யூட்டரில் உள்ள அனைத்து பைல்களையும், இன்னொரு எக்ஸ்டெர்னல் ஹார்ட் ட்ரைவிற்கு மாற்றி வைப்பது, நல்லதொரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகும். இதனால், நாம் அரும்பாடு பட்டு பாதுகாத்து வைத்த அந்நாள் படங்கள், போட்டோக்கள், டேட்டாக்கள், பைல்கள், கடிதங்கள், நிதி நிர்வாகத் தகவல்கள் என அனைத்துமே சில வேளைகளில் நமக்குக் கிடைக்காமல் போய்விடும். தெரிந்தும் ஏன் பேக் அப் எடுப்பதில்லை? (பல தன்னாட்சி கல்லூரிகள் கூட தங்கள் மாணவர்களின் மதிப்பெண்கள் மற்றும் முக்கிய தகவல்களுக்கு பேக் அப் எடுப்பதில்லை என்ற குற்றச் சாட்டு எழுந்து வருகிறது.)



5. விட்டேனா பார் வீடியோ: 


அடுத்த அடுத்த லெவலை முடித்துத் தான் வருவேன் எனப் பலர், பல கம்ப்யூட்டர் கேம்ஸ்களை வெறியோடு தொடர்ந்து நான்கு மணி நேரத்திற்குப் பின்னர் கூட விளையாடுகிறார்கள். இடையே ஓய்வு எடுக்காமல், தண்ணீர் அருந்தாமல், கால்கள் மற்றும் உடம்பை அசைக்காமல் நாற்காலியில் அமர்ந்தே இருப்பது, உடலுக்குத் தீங்கினை விளைவிக்கும் என்பது தெரிந்தும் ஏன் பலர் இந்த பழக்கத்தினை மாற்றுவதில்லை?



6.ஷட் டவுண்: 


லேப்டாப் கம்ப்யூட்டர்களை, அதில் வேலை முடிந்த பின்னர், ஜஸ்ட் அப்படியே திரை உள்ள மேல் மூடியை மூடி எடுத்துச் செல்லலாம். ஆனால், இது நல்லதல்ல; லேப்டாப் வெகுநாட்கள் உழைக்க வேண்டும் என எண்ணினால், அதனை குறிப்பிட்ட கால இடைவெளியில் ஷட் டவுண் செய்திடும் பழக்கத்தினை மேற்கொள்ள வேண்டும். 



7. படுக்கையே தொழில் கூடமாக:


லேப்டாப், ஸ்மார்ட் போன், ஐபேட் என அனைத்தையும் படுக்கைக்கு உறங்கச் செல்லும் போது கொண்டு செல்வது, வெகு நேரம் விழித்திருந்து பயன்படுத்துவது, சரியான நேரத்தில் தூங்க மறுப்பது, பின்னர் தூக்கம் சரியாக வருவதே இல்லை என்று குற்றம் சாட்டுவது போன்ற செயல்கள் தவறு என்று தெரிந்த பின்னரும், தொடர்ந்து இந்தப் பழக்கத்தைப் பலரும் கடைப்பிடிப்பது ஏன்? (குறிப்பாக சில மருத்துவர்கள், இரவு நேரங்களில் கண் விழித்து லேப்டாப் கம்ப்யூட்டரில் பணியாற்றி, அதனுடனேயே உறங்குகின்றனர். மறு நாளில், நோயாளிகளைப் பார்க்கையில் எரிச்சல், கண்களிலும் மனதிலும் தோன்றாதா?)



8. சிஸ்டம் அப்டேட் கேன்சல்:


பல வேளைகளில், நமக்கு நாம் பயன்படுத்தும் சிஸ்டம், அப்ளிகேஷன் சாப்ட்வேர் புரோகிராம்கள் மற்றும் ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்கள் ஆகியவற்றிற்கு அப்டேட் பைல்கள் உள்ளன. அப்டேட் செய்திடலாமா? என்று கேள்வி வரும். அந்த வேலையை மேற்கொண்டு, பின்னர், கம்ப்யூட்டரை மறுபடியும் ரீஸ்டார்ட் செய்திட சோம்பேறித்தனப்பட்டு, பலர் அப்டேட் செய்வதைக் கேன்சல் செய்துவிடுகின்றனர். இது தவறு மட்டுமின்றி, தேவையற்ற அபாயத்தினையும் வரவழைக்கும். நிறுவனங்கள் அப்டேட் பைல்களை அளிக்கையில், தாங்கள் தயாரித்து வழங்கிய புரோகிராம்களில் கூடுதல் வசதிகளை மட்டும் அளிப்பதில்லை. தங்கள் புரோகிராம்களில் உள்ள எந்த பலவீனமான இடத்தைப் பயன்படுத்தி, வைரஸ்கள் நுழைகின்றனவோ, அவற்றையும் சரி செய்து அப்டேட் பைல்களை அளிக்கின்றனர். இவற்றை அப்டேட் செய்திடும் பணியை கேன்சல் செய்வதன் மூலம், நாம் வசதிகளை மட்டும் இழப்பதில்லை; வைரஸ் எதிரான பாதுகாப்பினையும் இழக்கிறோம்.



9. உங்கள் பாஸ்வேர்ட்: 


ஏறத்தாழ ஐந்துக்கும் மேற்பட்ட பாஸ்வேர்ட்களை ஒருவர் ஒரு நாளில் குறைந்தது பயன்படுத்த வேண்டியதுள்ளது. உங்கள் பாஸ்வேர்ட் 1234 என உள்ளதா? உங்கள் பெயர், பிறந்த நாள், தொலைபேசி எண் என உள்ளதா? நிச்சயம் அவை பாதுகாப்பானவை இல்லை. பல ஆண்டுகளாக ஒரே பாஸ்வேர்டையே பயன்படுத்தி வருகிறேன் என்று பெருமை அடித்துக் கொள்கிறீர்களா? இதனை எச்சரிக்கும் செய்திகளை உதாசீனம் செய்கிறீர்களா? இது தவறில்லையா?



10. பேட்டரி ட்யூனிங்:


 லேப்டாப் கம்ப்யூட்டரின் பவர் ப்ளக்கைச் செருகி, அதனைப் பயன்படுத்துவது மிக எளிதுதான். ஆனால் அதோடு நின்றுவிடக் கூடாது. பேட்டரிகளை அதன் திறன் முழுமையாகக் கிடைக்கும் வகையில், அதனை சார்ஜ் செய்வதுடன் ட்யூனிங் செய்திடவும் வேண்டும். சில மாத இடைவெளியில், பேட்டரிகளை முழுமையாகச் சோதனை செய்து, அவற்றின் திறனை முழுமையாகப் பயன்படுத்தும் வகையில் தயார் செய்திட வேண்டும். ஆனால், இது தெரிந்திருந்தும் ஏன் பலர் இந்த செயல்பாட்டினை மேற்கொள்வதில்லை?

ஆண்ட்ராய்ட்போனில் தவறுகள் தவிர்க்க டிப்ஸ்...

VQat6s0.jpg?1


மொபைல் போன் பயன்பாட்டினைப் பொறுத்த வரை, பன்னாடெங்கும் மிக அதிகமாகப் பயன்படுத்தப்படுவது ஆண்ட்ராய்ட் சிஸ்டமே. அதாவது, போன் பயன்படுத்துதலில் பல்வேறு நிலைகளில் திறமை உள்ளவர்கள் இதனைக் கையாள்கின்றனர். இந்தியாவில், ஸ்மார்ட் போன் பயன்பாடு பெருகி வருவதால், ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தினைத் தொடக்க நிலையில் பயன்படுத்துபவர்கள் பெரும்பான்மையாக இருக்கின்றனர். இவர்களிடம் இந்த சிஸ்டம் பயன்பாட்டில் சில பொதுவான தவறுகள் காணப்படுகின்றன. சில தவறுகள் பொதுவானவை; இழப்பு எதனையும் ஏற்படுத்தாதவை. ஆனால், சில தவறுகளினால், போனில் உள்ள டேட்டாவினை இழக்க நேர்கிறது. இந்த தவறுகள் ஏற்படாமல் எப்படி செயல்பட வேண்டும் என்பதை இங்கு பார்க்கலாம்.


1. பாதுகாப்பினை உருவாக்குக: 


ஸ்மார்ட்போனில் நாம் அதிக அளவில் டேட்டாவினைச் சேர்த்து வைக்கிறோம். இந்த தகவல்கள் பெரும்பாலும் மற்றவர்களுக்குத் தெரியக் கூடாதவையே. எனவே, இவற்றை மற்றவர்கள் எளிதில் அணுகும் சூழ்நிலையில் அமைக்கக் கூடாது. மற்றவர்கள் போனைக் கையாள்வதைத் தடுக்க, பாஸ்வேர்ட், பேட்டர் அமைப்பின் வழி பாதுகாப்பு, விரல் ரேகை பாதுகாப்பு அல்லது உங்கள் ஸ்மார்ட் போன் தரக்கூடிய எந்த வகையிலாவது, பாதுகாப்பினை ஏற்படுத்த வேண்டும். கூகுள் அக்கவுண்ட்டினை இதில் பயன்படுத்தினால், இரண்டு அடுக்கு நிலை பாதுகாப்பினை உருவாக்கி வைக்கவும்.


2. பி.ஓ.பி. (POP) அஞ்சல் முறையைத் தவிர்க்கவும்: 

பொதுவாக ஆண்ட்ராய்ட் வாடிக்கையாளர்களிடமிருந்து ஒரு கேள்வியை எதிர்பார்க்கலாம். ”ஏன் என் மெயில்கள் போனிலிருந்து அல்லது டெஸ்க்டாப்பிலிருந்து மறைந்து விடுகின்றன?” இதற்கான அடிப்படை காரணம், நீங்கள் உங்கள் அஞ்சல் கணக்கினை பி.ஓ.பி. வகையில் அமைப்பதுதான். இந்த வகையில், அஞ்சல்கள் எப்போதும் அதற்கான சர்வரில் தங்கி இருக்கும்படி அமைக்க வேண்டும். அஞ்சல்களைப் படிக்க தரவிறக்கம் செய்திடுகையில், சர்வரில் இருந்து மறையும்படி அமைக்கக் கூடாது. பலவகையான வழிகளில் அஞ்சல் அக்கவுண்ட்களை அமைக்கலாம். ஆனால், கூடுமானவரை பி.ஓ.பி. வகை செட் அப்பினைத் தவிர்க்கவும். 



8HojqHi.jpg


3. விட்ஜெட்டுகள் அதிகம் தேவையா? 


சில ஆண்ட்ராய்ட் ஹோம் ஸ்கிரீன் திரைகளில் எக்கச்சக்கமான விட்ஜெட்டுகள் எனப்படும் அப்ளிகேஷன்களைப் பார்க்கிறோம். விட்ஜெட்டுகள் என்பவை எப்போதும் தாமாகவே இயங்கி, தகவல்களைத் தந்து கொண்டிருப்பவை. எந்த அளவிலான எண்ணிக்கையில் இவை அதிகமாக இருக்கின்றனவோ, அந்த அளவிற்கு உங்கள் போனின் பேட்டரி மின் சக்தி வேகமாகத் தீர்ந்துவிடும். எனவே, உங்களுக்குத் தேவையான, அவசியம் தேவையான விட்ஜெட்டுகளை மட்டும் தேர்ந்தெடுத்து அமைக்கவும். அதிகமாக வேண்டாம். 



4. ஜிமெயில் தவிர்க்க வேண்டாம்: 


ஆண்ட்ராய்ட் மற்றும் ஜிமெயில் பிரித்து வைத்துப் பார்க்க இயலாதவை. இவை இரண்டும் இணைந்த செயல்பாடு மிகவும் நேர்த்தியாக இருக்கும். எனவே, நீங்கள் ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்போன் ஒன்று வாங்கிப் பயன்படுத்துவதாக இருந்தால், கட்டாயம் ஜிமெயில் அக்கவுண்ட் ஒன்றை உருவாக்கிப் பயன்படுத்தவும். ஜிமெயில் அக்கவுண்ட் இல்லை என்றால், பல முக்கிய பயனுள்ள விஷயங்களை இழக்க நேரிடும். கூகுள் பிளே ஸ்டோர், பேக் அப் எடுப்பது எனப் பல முக்கிய செயல்பாடுகளை, ஜிமெயில் அக்கவுண்ட் வழியாகத்தான் மேற்கொள்ள முடியும். ஆண்ட்ராய்ட் போனை செட் அப் செய்வதற்கு முன்னரே, ஜிமெயில் அக்கவுண்ட் ஒன்றை உருவாக்கி, போன் செட் அப் செயல்பாட்டின் போது பயன்படுத்தவும். காலப் போக்கில் போன் பயன்பாட்டில், இதன் வசதிகளை நீங்கள் உணர்ந்து ரசிப்பீர்கள்.



5. அனுமதிகளை அளந்து தரவும்: 


அப்ளிகேஷன் ஒன்றை இன்ஸ்டால் செய்கையில், அந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தும்போது, சிஸ்டத்திற்கு எந்த வகை அனுமதியைத் தர இருக்கிறீர்கள் என்ற எச்சரிக்கை உங்களுக்குக் கிடைக்கும். சிஸ்டத்திற்கான அனுமதியைக் குறிப்பிட்ட அளவிலேயே இருக்க வேண்டும். சில அப்ளிகேஷன்கள் உங்களுடைய இடம் குறித்த தகவல்கள், மின் அஞ்சல் ஆகியவற்றைப் பயன்படுத்த அனுமதி கேட்கும். இவற்றைத் தர வேண்டாம். இவை இல்லாமல், இன்ஸ்டால் ஆகாது என்றால், அந்த அப்ளிகேஷனையே புறக்கணித்துவிட வேண்டும். எந்த வகை அனுமதி கொடுத்தால், நம் டேட்டா எந்த அளவில் அப்ளிகேஷன் வசப்படும் என்பதனை நன்கு அறிந்து, அதற்கேற்ப அனுமதி தரவும். 



6. தேவை இல்லாமல் புளுடூத் ஏன்?


 நீங்கள் புளுடூத் பயன்படுத்தாதவராக இருந்தால், அல்லது எப்போதாவது மட்டுமே பயன்படுத்துபவராக இருந்தால், ஏன் அதன் இயக்கத்தைத் தொடர்ந்து செயல் நிலையிலேயே வைத்திருக்க வேண்டும்? இது உங்கள் பேட்டரியின் மின் சக்தியை வேகமாக இழக்கச் செய்திடும். எனவே, போன் செட் அப் செய்திடுகையில், புளுடூத் வசதியை இயங்கா நிலையில் அமைக்கவும். தேவைப்படும்போது மட்டும் பயன்படுத்தவும். இதே போல வை பி வசதியையும் பயன்படுத்தவும். 


7. அப்ளிகேஷன் தணிக்கை: 

உங்கள் போனில் எத்தனை அப்ளிகேஷன்களை அமைத்து இருக்கிறீர்கள் என மாதம் ஒருமுறையாவது தணிக்கை செய்திடவும். பயன்படுத்தாதவற்றை அன் இன்ஸ்டால் செய்திடவும். கேம்ஸ் விளையாடுவது மனதிற்கு புத்துணர்ச்சி அளிக்கும். ஆனால், அவற்றில் நாளடைவில் ஆர்வம் குறைந்துவிட்டால், அன் இன்ஸ்டால் செய்து விடலாம். பயன்படுத்தாத அப்ளிகேஷன்களும், கேம்ஸ்களும், பயன்படுத்தாத நிலையிலும் பேட்டரியின் சக்தியை இழக்க வைத்திடும்.


8. ஆண்ட்ராய்ட் மற்றும் ஆப்பிள் நிறுவனத்தின் ஐ.ஓ.எஸ். சிஸ்டத்திற்கும் இடையே உள்ள ஒரு முக்கிய வேறுபாடு,

ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தின் வளைந்து கொடுக்கும் தன்மை தான். இதனாலேயே, புதிதாய் ஆண்ட்ராய்ட் பயன்படுத்துபவர்கள், அனைத்தையும் பயன்படுத்த முயற்சிக்கிறார்கள். அனைத்தையும் பயன்படுத்த எண்ணினால், சில முக்கிய பயன்பாடுகளை இழக்க நேரிடும்.



9. அப்டேட் குறித்து அலட்சியம் வேண்டாம்: 


பல வேளைகளில் நமக்கு சில அப்ளிகேஷன்களுக்கான அப்டேட் தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளது. அல்லது, புதிய அப்டேட் உள்ளது. தரவிறக்கம் செய்திடவா? என்ற அறிவிப்புகள் வந்து கொண்டே இருக்கும். ஒரு சிலர் இதனால் தொல்லை ஏற்படுமோ என்று எண்ணி அனுமதி மறுப்பார்கள். சிலர், அலட்சியமாக இருந்துவிடுவார்கள். அப்டேட் குறித்து அறிவிப்புகள் வருவதற்கு காரணம், பெரும்பாலும் அவை போனின் பாதுகாப்பு குறித்த பைல் அப்டேட் ஆகவே இருக்கும். பொதுவாக, ஆப்பிள் நிறுவனம், தான் பெரிய அளவில் மாற்றங்களைத் தருவதாக இருந்தால் மட்டுமே, இது போன்ற எச்சரிக்கைகளை வழங்கும்.

சில வேளைகளில், முன்பாகவே அறிவித்துவிட்டு, தானாகவே ஒரே நேரத்தில், தன் அனைத்து ஐபோன்களிலும் சிஸ்டம் அல்லது அப்ளிகேஷன்களை அப்டேட் செய்திடும். ஆண்ட்ராய்ட் அப்படி அல்ல. சின்ன விஷயங்களுக்குமான அப்டேட் குறித்தும் 
அறிவிக்கும். சில அப்டேட் பைல்களை நம் உதவியின்றி போனில் அப்டேட் செய்திட முடியாது. பொதுவாக, நாம் குறிப்பிட்ட 
கால இடைவெளியில் அப்டேட் செய்து கொண்டே இருக்க வேண்டும். அப்ளிகேஷன் மேனேஜர் பிரிவிற்குச் சென்று, அங்கு அப்டேட் செய்ய வேண்டிய பைல்கள் உள்ளனவா என்று சோதனை செய்து, பின்னர் அப்டேட் செய்திடலாம். அல்லது பிளே ஸ்டோர் சென்றும் இதனை அறியலாம். 

ஆண்ட்ராய்ட் இயங்குதளம் என்பது இப்போது உலகெங்கும் அதிக எண்ணிக்கையில் பயனாளர்களைப் பெற்றுள்ள ஒரு தளமாகும். எனவே, அதற்கு மாறிக் கொள்கையில், சிறிய அளவிலான தவறுகளை நாம் தவிர்க்க வேண்டும். அந்த வகையில் மேலே தரப்பட்டுள்ள குறிப்புகள் நிச்சயம் உங்களுக்குப் பயன்படும்.