Vishwaroopam-2013 -விஸ்வரூபம் திரைவிமர்சனம்.

முதலில் இந்த திரைப்படம் பற்றிய வந்த தகவல்....
படம் 5 மணிநேரம் எடுத்து இருக்கார்... அதை எப்படி இரண்டரை மணி நேரத்தில்  கட் செய்து கொடுப்பது என்று  கமல் யோசித்துக்கொண்டு இருப்பதாக இந்த படத்தை பற்றிய முதல் தகவல் மீடியாக்களில் நுழைந்தது...

அனுராக்கஷ்யாப்பின் கேங்ஸ் ஆப் வாசீப்பூர் திரைப்படம் சமீபத்தில் இரண்டு பாகமாக வந்தது... அது  போல இந்த திரைப்படமும் இரண்டு பாகமாக வரும் என்று நினைத்தேன்.....  படத்தை பார்த்தேன்... என் கனிப்பு பொய்க்கவில்லை. சரி உண்மையிலேயே திரைப்படங்கள் மூலம் இந்து முஸ்லீம் துவேஷம் வளருகின்றதா? 100 பர்சென்ட்டில் 5  பர்சென்ட்  வரலாம் அதுவும்  படம் பார்த்து வெளியே வந்த உடன் மறந்து விடுகின்றார்கள் எனபதும் மறுக்க முடியாத உண்மை...ஆனால்  இந்து முஸ்லீம் துவேஷம் ஏப்போது ஆரம்பித்தது தெரியுமா?



1992 பாபர் மசூதி இடிக்கப்பட்ட போது நாடு கொந்தளிப்பில்  ஆழ்ந்தது... அது பெரிய கொடுமை...ஆனாலும் தமிழகம் அமைதி காத்தது...பெருமபாண்மையான இந்துக்கள் இந்த செயலை வண்மையாக கண்டித்தார்கள்... அதிகம் இந்து  மக்கள் வாழும் இந்தியாவில் பிஜேபி  ஒரு முறைதான் ஆட்சியை பிடித்தது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்...அந்த செயலை யாரும் நியாயப்படுத்தவில்லை....ஆனால் குஜராத்தில் நேரடியாகவே குற்றம் சாட்டப்பட்ட மோடி இன்னும் முதல்வராகத்தான் வீற்று இருக்கின்றார்... இது நகைமுரண்தான் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.


புற்றிசல் போல இப்போது போல  சேட்டிலைட் சேனல்களின் ஆதிக்கம் அப்போது இல்லை. ஆனால் மேல்ல சேட்டிலைட் சேனல்கள் கால் ஊன்றும் போது...1998 ஆம் ஆண்டு தமிழகத்தில் கோவை குண்டுவெடிப்பு நிழ்ந்தது... அத்வானியை கொல்ல நடந்த சதி... அதில் ஒரு பாவமும் அறியாத அப்பாவிகள் இருந்து போனார்கள்... ஆனாலும்  மக்கள் அமைதிகாத்தார்கள்... முஸ்லிம்கள் மீதான முதல் வெறுப்பு அப்போதுதான் உருவானது. வெளிப்படையாக டீக்கடைக்களில் விவாதிக்கப்பட்டார்கள்...  கோவை குண்டு வெடிப்பு  சம்பவத்துக்கு சற்றும் சம்பந்தமில்லாத அப்பாவி முஸ்லிம்களை பலரை வெறுப்பாக பார்க்க ஆரம்பித்தார்கள்.... ஏதோ  ஒரு இயக்கம் செய்த செயலுக்கு அத்தனை பேரையும் சந்தேகத்தோடு பார்க்க ஆரம்பித்தார்கள்... மார்க்கெட் போக பயந்தார்கள்.. காரணம் ஒரு இடத்தில் மட்டும் குண்டு வெடிக்கவில்லை... அதனால் இன்செக்யூரிட்டி காரணமாக முஸ்லிம் சகோதரர்மார்களுக்கு வீடு கொடுக்க, கடை வாடகை விட  யோசித்தார்கள்...  அதான் நிதர்சன உண்மை...



சரியாக மூன்று நாட்கள் பாம்பாயில் தொடர்ந்து குண்டு வெடிப்பை  தீபாவளி போல மும்பை தாஜ் ஓட்டல்  குண்டு வெடிப்பை  நிகழ்த்தினார்கள்.. அப்பாவிகள் 200 பேருக்கு மேல் கொல்லப்பட்டார்கள்...  அந்த தாக்குதலை தொடர்ந்து நேரலையில்  பார்க்கும் பொதுஜனத்தின் மனதில்  கோபம் வரவே வராதா?


ஒரு  இந்து கேரக்டர், ஒரு கிருஸ்த்துவ  கேரக்டர்,ஒருமுஸ்லீம் கேரக்டர் கொலை செய்வது போல சினிமாவில் காட்டப்படுவதற்கும் நேரில் துப்பாக்கியால் சுட்டு கொல்வதை பார்ப்பதற்க்கும் வித்யாசம் தெரியாமல் இங்கு யாரும் இல்லை...


நுறாவது நாள் படம் பார்த்து விட்டு ஒரே ஒரு ஜெயபிரகாஷ்தான் கொலை செய்தான் என்று ஒரு வார்த்தை சொன்னான்... ஒட்டு மொத்தமாக தமிழ்நாட்டில் படம் பார்த்த அத்தனை பேரும் கொலை செய்யப்புறப்படவில்லை... அதுவும் படம்  பார்த்து விட்டுதான் கொலை  செய்தான் என்பதையும் என்னால்  ஏற்றுக் கொள்ள முடியாது...ஏற்க்கனவே ஒளிந்த வன்மம் அவனை கொடுரனாமாற்றி இருக்கின்றது....


1998 ஆம் ஆண்டு கோவை குண்டு  வெடிப்பு வெடித்தது....பாபர் மசூதிக்கு அந்த குண்டு வெடிப்பு எதிர்வினை  என்று ஒரு சில முஸ்லிம் இயக்கங்கள் வக்காலத்து வாங்கின... இதற்கு முக்கிய வரலாற்று நிகழ்விளை எடுத்துக்காட்டாக  கொடுக்கின்றேன்..

தமிழகத்தில் ஒரு காலத்தில் ஓடி ஓடி விடுதலைபுலிகளுக்கு  உண்டி குலுக்கி இருக்கின்றோம்..  எம்ஜிஆர் ஆட்சிகாலத்தில் தமிகத்தில் தமிழர்களோடு விடுதலைபுலிகள் இரண்டற  கலந்து இருந்தார்கள்..  அவர்களுக்கு உறைவிடம்,உடை, பணம் என்று கொடுத்து உதவினார்கள்... நிறைய போராட்டங்களை நடத்தினார்கள்..  ஈழத்தமிழர்களுக்கு உயிர் கொடுக்கவும் பொது ஜனம் தயாராக இருந்தது....


அமைதி பூங்காவாக  திகழ்ந்த  தமிழ்நாட்டில் ராஜிவ்காந்தி உடல் சிதறி இறந்து போனார்...ஈழத்தில் ராஜிவ் நடத்திய  செயலுக்கு  எதிர்வினை என்று விடுதலைபுலிகள் சொன்னாலும் தமிழக பொதுமக்கள் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை....விடுதலைபுலிகளை வெறுக்க ஆரம்பித்தார்கள்...  அதனால்தான் மத்திய அரசு புல் சப்போர்ட்  இலங்கைக்கு செய்த போதும், முள்ளிவாய்காலில் இரண்டு லட்ச தமிழர்கள் இறக்க போகின்றார்கள் என்று தெரிந்தும், எதை பற்றியும் அலட்டிக்கொள்ளாமல் தமிழக மக்கள் டிவி சீரியல் பார்த்துக்கொண்டு இருந்தார்கள் என்பது வரலாற்று உண்மை...

தமிழர்கள் அமைதியான வாழ்க்கையை கடந்த 500 வருடங்களாக வாழ்ந்து வருகின்றார்கள்... அவர்களுக்கு குண்டு வெடிப்பு எல்லாம் புதிய விஷயம்... அதை  நேரில், ஊடகத்தில் தொடர்ந்து அந்த செய்திகளை படிக்கும் போது  அவர்கள் மனதில் குண்டு வைத்த விடுதலைபுலியாக இருந்தாலும், காவிபயங்கரமாக இருந்தாலும் ,முஸ்லிமாக இருந்தாலும்,   தமிழர்களால் வெறுக்கப்படுகின்றார்கள் என்பதுதான் நிதர்சன உண்மை.
சினிமாவில் காட்டப்படுவதால்  பொதுமக்கள் மத எதிர்ப்பு என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.. ஆனால் ஊடகங்களில் தினம் வரும் செய்தியால் மக்கள் அதிருப்திக்கு ஆளாகின்றார்கள் என்பது மறுக்கமுடியா உண்மை.
நியாயப்படி பார்த்தால், பிராமணர்கள்தான்... காலம் காலமாக திரைப்படங்களில் தங்களை இழிவுபடுத்துகின்றார்கள் என்று போராட வேண்டும்.... :-)
சினிமாவுக்கு  நிதர்சனத்துக்கும் அவர்களுக்கு வித்யாசம் தெரிகின்றது.... போராட வில்லை என்ற காரணத்தால் அவர்கள் கோழைகளும்  அல்ல.... போரின்  உச்சகட்டம்  அகிம்சை என்பது போல அவர்கள் அகிம்சை வழியை நாடுகின்றார்கள்..... அல்லது புறக்கணிக்கின்றார்கள் அல்லது கடந்து போகின்றார்கள்... என் அனுமதி இல்லாமல் என்னையாராலும் காயப்படுத்த முடியாது  என்று மகாத்மா சொல்லி இருக்கின்றார்,..
சரி இந்த படத்துக்கு  எதிராக எழுந்த சர்ச்சைக்கு ஒரு காமன் மேனாக பதில்  சொல்லவேண்டும் என்று  நினைத்தேன்.... அவ்வளவுதான்...

===================
விஸ்வரூபம்  படத்தின் ஒன்லைன்..

இந்திய உளவாளியின் கதை....
======================
விஸ்வரூபம் படத்தின் கதை என்ன?

இந்திய உளவாளியான முஸ்லீம் கமல் தாலிபான்கள் படையில் சேர்ந்து எப்படி அமெரிக்கா  மீதான தாக்குதலை தடுத்து நிறுத்துகின்றார் என்பது கதை.
==================
படத்தின் சுவாரஸ்யங்கள்....

நடன கலைஞனாக  கமல் முதல் காட்சியில் தோன்றும் போது அந்த நளினத்தில் எல்லோருமே மூக்கில் விரல் வைக்கின்றார்கள் .. அப்படி ஒரு நடிப்பு.. சான்சே இல்லை..

ஆன்ட்டிரியா கூட ஆடுற அத்தனை பிகரும் அற்புதமா  இருக்கே..? கமல்ஜி நீ பிறவி ரசனைக்காரண்டா...

குறட்டை விட்டுகிட்டு கொட்ட  கொட்ட முழுச்சிக்கிட்டு மனைவியை கமல் வேவு  பார்க்கும் காட்சி அருமை.

நிறைய ஆங்கில படங்கள் பார்க்கும் நபர்களுக்கு இந்த படத்தின்  காட்சிகள் பெரிதாய் ஈர்க்காது என்றாலும், தமிழ் படத்தி கமலை தவிர இது போன்ற  களத்தையும் தளத்தையும்  தொடுவது குறைவு....

கேமரா ஒர்க் பின்னி இருக்கின்றார்கள்... ஆப்கான்  காட்சிகள் அசத்தல்... நான் லீனியரில் கதை சொல்வதால் இந்த பக்கம் அமெரிக்காவில்  கதை நடக்க பிளாஷ் பேக் காட்சிகளில் ஆப்கான்  காட்சிகள் வருகின்றன....

இன்னும் பலர் படம் பார்க்காத காரணத்தால் காட்சிகளை சொல்லி சஸ்பென்ஸ் கெடுக்கவில்லை..ஒரு வரியில் செல்வதென்றால் தமிழ்சினிமாவுக்கு இந்த உழைப்பும் காட்சிகளும் தளமும் புதுசு... தொய்வும் பரபரப்புமாய் இருவேறு உணர்வுகளை இந்த திரைப்படம் தருகின்றது.. அடுத்த பாகம் எப்படி இருக்கும் என்பதை பார்க்கலாம்..
சத்யவேடு திரை அரங்கில் ரசிகர்கள் கூச்சலுடன் பார்த்த காரணத்தால் பல வசனங்கள் புரியவில்லை... ஆரோ திரிடியில்  சத்தியத்தில் பார்க்கவேண்டும்..


=======================
படக்குழுவினர் விபரம்.

Directed by Kamal Haasan
Produced by
Chandra Haasan
Kamal Haasan
Written by Kamal Haasan
Atul Tiwari
Starring Kamal Haasan
Pooja Kumar
Andrea Jeremiah
Rahul Bose
Jaideep Ahlawat
Music by Shankar-Ehsaan-Loy
Cinematography Sanu Varghese
Editing by Mahesh Narayanan
Studio Raaj Kamal Films International
Distributed by PVP Films
Balaji Motion Pictures
Release date(s)
25 January 2013 (Worldwide except Tamil Nadu[1])
1 February 2013 (Hindi version)
7 February 2013 (Tamil Nadu[2])
Running time 147 minutes [3]
Country India
Language Tamil
Hindi
Budget 95 crore (US$17.29 million)

No comments: