சமையல் டிப்ஸ்கள்

சின்ன சின்ன 🍜சமையல் டிப்ஸ்கள்.*
🌮🌮🍟🍟🍳?🍟🍟🌮🌮*🌺🌻🌹🌼

 🍒 தயிர் புளிக்காமல் இருக்க...

தயிர் புளித்துவிடும் என்ற நிலை வருகிறபோது அதில் ஒரு துண்டு 🌴தேங்காயைப் போட்டு வையுங்கள். தயிர் 🙅புளிக்காது.

🍒 கீரை பசுமையாக ருசியாக இருக்க...

கீரையை🌿🍃☘ வேகவிடும்போது சிறிது எண்ணெயை🍾 அதனுடன் சேர்த்து வேக வைத்தால் ☘🌿கீரை பசுமையாக ருசியாக இருக்கும்.

🍒 முட்டை கெடாமல் இருக்க...

முட்டைகளை 30-40 நாட்கள் வரை கெடாமல் வைப்பதற்கு, அதன் மேல் ஒரு பிரஷால் சமையல் 🍾எண்ணையை தடவவும்.

🍒 உருளைக்கிழங்கு கெடாமல் இருக்க...

உருளைக்கிழங்குகளை🌰 வெங்காயங்களுடன் வைத்தால் அவை சீக்கிரமாக 😦கெட்டுப்போய்விடும். அவ்வாறு அவை கெடாமல் இருப்பதற்கு, அந்த உருளைக்கிழங்குகள் இருக்கும் பைக்குள் ஒரு 🍎ஆப்பிள் பழத்தை வைக்கவும்.

🍒 ஸ்வீட் செய்த பின்...

🍩🍰ஸ்வீட் செய்து இரும்பு அல்லது அலுமினியத் தட்டில் தான் கொட்ட வேண்டும். எவர்சில்வர் தட்டு சரிப்படாது.🚫

🍒 கைகளில் ஏற்படும் வாடையை போக்க

🌰வெங்காயம் நறுக்கிய🔪 பிறகும், 🌰பூண்டு உரித்த பிறகும் கைகளில் ஏற்படும் 💨வாடையை போக்க கைகளை stainless steel ஸ்பூன்களில் தேயுங்கள்.👍

🍒 பிரியாணி அடிப்பிடித்து விட்டால்...

🍲பிரியாணி போன்ற மசாலா கலந்த 🍚அரிசி உணவுகளை செய்யும்போது, உணவு அடிப்பிடித்து விட்டால் அதன்மீது ஒரு 🍞பிரெட் துண்டினை வையுங்கள், தீய்ந்த வாசனை காணாமல் 💁போய்விடும்.

🍒 பிஸ்கட்டுகள் நீண்ட நாட்களுக்கு ஃபிரஷ்ஷாக இருக்க...

பிஸ்கட்டுகளை டப்பாக்களில் அடைத்து வைக்கும் போது, டப்பாவிற்குள் டிஷ்யூ 🗞பேப்பரை வைத்துவிட்டால், பிஸ்கட்டுகள் நீண்ட நாட்களுக்கு ஃபிரஷ்ஷாக இருக்கும்.

🍒  பாத்திரங்களில் உள்ள எண்ணெய் பசையை நீக்க...

🍽🍴சமைத்த பாத்திரங்களில் இருந்து 🍾எண்ணெய் பசையை எளிதாக சுத்தம் செய்ய அதில் 🍨ஐஸ் க்யூப் ஒன்றை போடுங்கள்.

🍒 சப்பாத்திகள் மென்மையாக இருக்க...

🍪சப்பாத்திகள் மென்மையாக இருக்க அதன் மாவை 💧வெந்நீரில் பிசையவும். சிறிது 🍯பாலும் சேர்த்துக்கொள்ளலாம்.

🍒 பூரி நமத்துப் போகாமல் இருக்க...

🍪பூரிக்கு மாவு பிசையும்போது கொஞ்சம் சர்க்கரை🍶 சேர்த்துப் பிசைந்தால் பொரித்த பூரி அதிக ⏰நேரம் நமத்துப் போகாமல் இருக்கும்.

🍒 ரசம் மற்றும் சாம்பார் வாசனையுடன் இருக்க...

🍵ரசம், சாம்பார், கீரை☘🌿 மசியலை இறக்கிய பின், 🌰பெருங்காயத் தூள் போட்டால் மணம் ஊரைத் தூக்கும்.😎

🍒 கொத்துமல்லி, புதினா துவையல்கள் அரைக்கும் போது,

💧தண்ணீருக்குப் பதில் சிறிது 🍯தயிர் சேர்த்தால் 😋சுவை தரும்.

🍒 கத்தரிக்காய் கூட்டு, பொரியல் செய்யும்போது

 கொஞ்சம் கடலை 🍛மாவைத் தூவிப் பாருங்கள். கூட்டு, பொரியல் 😋சுவையாக இருக்கும்.

🍒 மைக்ரோ வேவ் ஓவனில் உட்புறப் பகுதியைச் சுத்தப்படுத்த

 ஒரு 🖱கண்ணாடிப் பாத்திரத்தில் அரை மூடி 🍋எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து ஓவனில் 🕗இரண்டு நிமிடங்கள் வைத்து எடுத்துத் துடைக்க "பளிச்'சென்று 🔮இருக்கும்.

🍒 பீட்ரூட் நறுக்கும்போது கைகளில் கறை ஒட்டுவதைத் தடுக்க,

 பீட்ரூட்டை முழுதாக குக்கரில் வேக வைத்துக் கொள்ளுங்கள். பின்பு தோலை எடுத்துவிட்டு 🔪துண்டுகளாக்கினால் கறை ஒட்டாமல் இருப்பதோடு, காய் நறுக்குவதற்கும் எளிதாக இருக்கும்.👍

🍒 அடுப்பு, சமையல் மேடை, அடுப்பின் பின்புறம் என எல்லா இடங்களிலும் எண்ணெய் அப்பிக் கொண்டிருக்கிறதா?

கவலை😒 வேண்டாம். டைல்சை சாதாரணத் 👗துணியாலோ அல்லது 🗞டிஷ்யூ பேப்பராலோ துடைத்து எடுங்கள். பின்னர் வெதுவெதுப்பான நீரில் கொஞ்சம் சலவைச் சோடாவைக் கலந்து பிசுக்கு பிடித்த இடங்களில் பூசிவிட்டு, உலர்ந்த துணியால் 👗துடைத்துப் பாருங்களேன். "பளிச்' 🔮சென்று ஆகிவிடும்.

🍒 கண்ணாடி பாட்டில் துர்நாற்றம் வீசுகிறதா?

 கொஞ்சம் 🎋கடுகைப் போட்டு 💧வெந்நீர் ஊற்றி சிறிது நேரம் கழித்துக் கழுவுங்கள். துர்நாற்றம் போய்விடும்.🙂

 🍒 கேரட் அல்வா செய்யும்போது

 கேரட்டைக் கொதிக்கும் 💧தண்ணீரில் போட்டு பின்பு குளிர்ந்த தண்ணீரில் சிறிதுநேரம் வைத்துத் தோலைச் சீவினால் மிகச் சுலபமாகத் தோலை 👍நீக்கிவிடலாம்.

🍒 வடைக்கு அரைக்கும்போது

மாவில் 💧தண்ணீர் அதிகமாகிவிட்டால் ஒரு 🍴தேக்கரண்டி நெய் விட்டால் மாவு இறுகிவிடும்.

🍒 பஞ்சு போன்ற இட்லிக்குக்கு

 கிரைண்டரில் 🍛உளுந்தம் பருப்பு பாதி மசிந்ததும் ஏழெட்டு 🍨ஐஸ் க்யூப்களைப் போட்டு ⚙அரையுங்கள். மாவும் அதிகம் கிடைக்கும். இட்லியும் பூப்போல🌺 மெத்தென்றிருக்கும்.