அறியாமை நீங்க இறைவனிடம் வேண்டுவோம்

🍃🍃🍃🍃🍃🍃🍃🍃
படித்ததில் பிடித்தது
🍃🍃🍃🍃🍃🍃🍃🍃



ஒரு மாதத்திற்கு அமாவாசை, ஒரு பவுர்ணமி வரும். அந்த இரு நிகழ்ச்சிகளும் பூமி மற்றும் சந்திரனின் சுழற்சியால் ஏற்படுவதை நீங்கள் அறிவீர்கள்.

நாட்களைச் சுட்டிக்காட்ட அமாவாசையிலிருந்து அல்லது பவுர்ணமியிலிருந்து எத்தனையாவது நாள் என்று குறிப்பிட்டுக் காட்டவே பிரதமை முதல் சதுர்த்தசி வரை 14 நாட்களுக்கும் பெயரிட்டிருக்கிறார்கள்.

பெயர் தமிழில் வைத்திருந்தால் விளங்கும். சமஸ்கிருதம் ஆதிக்கத்தில் இருந்தபோது தமிழ் வருடங்களின் பெயரை கூட பொருள் தெரியாத வடமொழியில் அல்லவா வைத்து விட்டார்கள்? நாமும் அதை மாற்ற மனமின்றி வைத்துக் கொண்டு திண்டாடுகிறோம்.

அதே போல் தான் நாட்களின் பெயர்களும்
பின்வருமாறு வடமொழியில் உள்ளன என்று விளக்கினேன்.

1. பவுர்ணமி, அமாவசைக்கு அடுத்த நாள் பிரதமை பிரதமை என்றால் முதல்வர் என்று பொருள். அதுபோல் பிரதமை என்றால் முதல் நாள்.

2. துவிதை என்றால் இரண்டாம் நாள் தோ என்றால் இரண்டு. துவிச் சக்ர வண்டி என்று சைக்கிளைக் கூறுவது தங்களுக்கு தெரியும்.

3. திரிதியை என்றால் மூன்றாம் நாள் திரி என்றால் மூன்று அல்லவா?

4. சதுர்த்தி என்றால் நான்காம் நாள் சதுரம் நான்கு பக்கங்கள் கொண் டது.

5. பஞ்சமி என்றால் அய்ந்தாம் நாள் பாஞ்ச் என்றால் அய்ந்து எனப் பொருள்.

6. சஷ்டி என்றால் ஆறாம் நாள்.

7. சப்தமி என்றால் ஏழாம் நாள். சப்த ஸ்வரங்கள் என ஏழு ஸ்வரங்களைக் கூறுவதில்லையா?

8. அஷ்டமி என்றால் எட்டாம் நாள். அஷ்டவக்கிரம் என்று எட்டு கோணல்களைக் கூறுவதையும் அஷ்ட லட்சுமி என்றெல்லாம் கூறக் கேட்டிருக்கிறோம்.

9. நவமி என்றால் ஒன்பதாம் நாள் நவ என்றால் ஒன்பது என்றும் நவ கிரகங்கள் என்பதும் தங்களுக்குத் தெரியும்.

10. தசமி என்றால் பத்தாம் நாள் தஸ் என்றால் பத்து அல்லவா? தாரம் என்ற கடவுளின் அவதாரங்களைக் கூறக் கேட்டிருக்கிறோம்.

11. ஏகாதசி என்றால் பதினொன் றாம் நாள் ஏக் என்றால் ஒன்று தஸ் என்றால் பத்து இரண்டின் கூட்டுத் தொகை பதினொன்று.

12. துவாதசி என்றால் பன்னிரண் டாம் நாள் தோ/துவி என்றால் இரண்டு தஸ் என்றால் பத்து எனவே இதன் கூட்டுத்தொகை பன்னிரண்டு ஆகும்.

13. திரியோதசி என்றால் பதிமூன் றாம் நாள் திரி என்றால் மூன்று + தஸ் என்றால் பத்து ஆகப் பதிமூன்று.

14. சதுர்த்தசி என்றால் பதினான்காம் நாள் சதுர் (சதுரம்) என்றால் நான்கு அத்தோடு தஸ் என்ற பத்து சேர்த்தால் பதினான்கு என ஆகும்.

சதுர்த்தசிக்கும் அடுத்தது பவுர்ணமி அல்லது அமாவாசை ஆகி விடும். இப்படி நாட்களைக் சுட்டிக் காட்ட வைத்த பெயர்களில் என்ன வேறுபாடு இருக்கிறது?

அமாவாசை அல்லது பவுர்ணமிக்குப் பிறகு வரும் எட்டாம் நாளும் ஒன்பதாம் நாளும் கெட்டவை என்பதற்கு ஏதேனும் அறிவியல் பூர்வமான விளக்கம் இருந்தால் கூறுங்கள்.

என்றேன் சகோதரியும் மைத்துனரும் வாயடைத்துப் போயினர்.

இந்த விளக்கம் கண்டு அவர்கள் மிகத் தெளிவு பெற்றனர்.

நான் மேலும் கூறினேன். அட்சய திரிதியையில் தங்கம் வாங்க அறியாத மக்கள் தங்கக் கடைக்கு ஓடுவதும் அறியாமையே என்றேன். என் சகோதரி மிகவும் ஆர்வமாக இதற்கும் விளக்கம் கூறுங்கள் அண்ணா என்று கேட்டுக் கொண்டாள்.
க்ஷயம் என்றால் தேய்வு (-க்ஷயரோகம் = எலும்புருக்கு நோய் அக்ஷயம் என்றால் வளர்ச்சி அதாவது வளர்பிறையில் அமாவாசையிலிருந்து மூன்
றாம் நாள் திரிதியை என்று ஏற்கெனவே விளக்கிக் கொண்டோம். அதாவது வளர்பிறையில் மூன்றாம் நாள் இதில் என்ன சிறப்பு இருக்க முடியும்?

இது தங்க வியாபாரிகள் சேர்ந்து செய்த விற்பனை உத்தியே ஆகும் என்று விளக்கம் கூறினேன்.

மக்கள் எப்படி அறியாமையில் மூழ்கிப் போயிருக்கிறார்கள் என்று அனைவரும் பரிதாபப்பட்டோம்.

பிறகு அன்றே மூவரும் சென்று வீட்டு மனையைப் பார்வையிட்டு இடம் பிடித்திருந்ததால் முன் பணம் செலுத்தி பத்திர நகல்களை வாங்கி வந்தோம். அஷ்டமி, நவமி பார்த்துத் தாமதம் செய்திருந்தால் இந்த வாய்ப்பு கிட்டுமா என்று மகிழ்ந்தோம்.

“செய்யும் வேலைகளின் வெற்றி தன்னை நம்பி இல்லை, கடவுளை நம்பித்தான் இருக்கிறது“ என்று நினைத்து உருவாக்கப்பட்ட “நல்ல நேரம்,கெட்ட நேரம்“ என்ற பயங்கள் உலகெங்கும் மனிதனை ஆட்டிப்படைக்கின்றன.(நம் நாட்டில் கொஞ்சம் அதிகம்)

இந்திய அளவில் உள்ள பஞ்சாங்கங்களின்படி ஒரு மாதத்திற்கு எவ்வளவு கெட்ட நேரம் வருகிறது என்று கணக்கிட்டுப்பார்ப்போம்.

வாரத்தில் செவ்வாய்,சனி நல்ல காரியம் துவங்கக்கூடாது
(10 நாட்கள்).

மாதத்தின் அஷ்டமி,நவமி நன்மைக்கு உகந்தது
அல்ல(4நாட்கள்).

பாட்டிமுகம் நாளில் நல்லது செய்வது நல்லதில்லை

(2 நாட்கள்).

ஒரு மாதத்தில் வரும் ராகு காலம், எமகண்டம்,குளிகை இவற்றின் கூட்டுத்தொகை
(3 முக்கால்)

தவிர கௌரி பஞ்சாங்கத்தின் படி நன்மை செய்ய தகாத நாட்கள் 2 நாட்கள்.

ஆக மொத்தத்தில் ஒரு மாதத்தில் 21 முக்கால் நாட்கள் நாம் நல்லது செய்ய பயந்தால் எப்படி உருப்பட...எப்படி முன்னேற...?


என்று தணியும் நம் மக்களிடம் நிரம்பியுள்ள அறியாமை


அறியாமை நீங்க இறைவனிடம் வேண்டுவோம்.
முயல், ஆமை கதையின் "லேட்டஸ்ட் வெர்ஷன்" :-

முயலும் ஆமையும் ஓட்டப் பந்தயம் வைக்கின்றன. முயல் வேகமாக ஓடினாலும், வழியில் தூங்கிவிட, ஆமை மெதுவாகச் சென்றாலும் தூங்கும் முயலைத் தாண்டிச் சென்று பந்தயத்தில் ஜெயித்துவிடுகிறது.

#நீதி : தலைக்கனம் கூடாது. வேகத்தைவிட, நிதானம் முக்கியம் ஜெயிக்க!

வெயிட்... இனிதான் கதையே ஆரம்பம்!

தோல்வியை நினைத்து மனவேதனை அடைந்த முயல், ‘நாம ஓவர் கான்ஃபிடென்ட்டா இருந்ததாலதான் தோத்துட்டோம்!' என்பதைப் புரிந்துகொண்டு, மீண்டும் ஆமையைப் பந்தயத்திற்கு அழைக்கிறது. ஆமையும் ஒப்புக்கொள்ள, பந்தயம் ஆரம்பிக்கிறது. முயல், இடையில் எங்கேயும் தூங்காமல் ஓடிச் சென்று, ஜெயிக்கிறது.

#நீதி2 : நிதானம் முக்கியம் தான், ஆனால் வேகம் அதை விட சிறப்பானது!

கதை முடிந்துவிட்டது என்று நினைத்தால்... அதுதான் இல்லை!

காலங்காலமாக ஜெயித்து வந்த ஆமையால் இந்தத் தோல்வியை தாங்கிக் கொள்ள முடியவில்லை. இம்முறை அது முயலை பந்தயத்துக்கு அழைக்கிறது. இங்குதான் ஒரு டிவிஸ்ட்! பந்தயம் வழக்கமான பாதையில் இல்லை என்று ஆமை சொல்ல, முயலும் அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகிறது (!).

ஒன்... டூ... த்ரீ...

முயல் இடையில் எங்கேயும் இளைப்பாறாமல் ஓட, ஆமை மெதுவாகச் சென்றது. முயல் ஒரு இடத்தில் சடன் பிரேக் போட்டாற்போல நிற்கிறது. பார்த்தால் அங்கே ஒரு ஆறு!

அதைக் கடந்தால் தான் பந்தய இலக்கை அடைய முடியும். ஆற அமர வந்து சேர்ந்த ஆமை அசால்ட்டாக ஆற்றை நீந்தி கோட்டைத் தொட்டு பந்தயத்தில் ஜெயிக்கிறது!

#நீதி3 : நாம் போட்டியிடும் போது எதிரியின் பலம் அறிந்து, ஆடுகளத்தை நம் பலத்துக்கு சாதகமாக மாற்றிக் கொள்ள வேண்டும்.

இன்னும் கதை முடியவில்லை நண்பர்களே!

ஒரு வழியாக ஆமையும் முயலும் நண்பர்கள் ஆகி, இருவரும் சேர்ந்து பேசி, ஒரு பந்தயம் வைக்க முடிவு செய்கிறார்கள். ஆமை டிவிஸ்ட் வைத்த அதே பாதையில்தான் இம்முறையும் பந்தயம். முயல் வேகமாக ஓட, ஆமை மெதுவாக நகர்கிறது... ஆற்றின் கரை வரை. அதற்குப் பின்..?

ஆமை ஆற்றில் நீந்துகிறது. அப்படியென்றால் முயல்? ஆமையின் முதுகில். கரை சேர்ந்ததும், மீதம் உள்ள தூரத்தை, ஆமையை தன் முதுகில் வைத்தவாறு முயல் ஓடிக் கடக்கிறது. இருவரும் ஒரே நேரத்தில் பந்தயக் கோட்டை அடைகிறார்கள்; இருவரும் வெல்கிறார்கள்!

#நீதி4 : "டீம்-வொர்க்" வின்ஸ்!

டீம்-வொர்க்:-

‘‘கணிதத்தில் 1+1 = 2. ஆனால், வாழ்வில் 1+1 = 3. அதாவது, இருவரின் பலம் சேரும்போது, அது ஒரு புது பலத்தை உருவாக்கும். அதனால்தான் நிறுவனங்களில் பணியாட்களைத் தேர்வு செய்யும்போது, அவர்களின் டீம் வொர்க் திறனை முக்கியமாகச் சோதிக்கிறார்கள்.

அலுவலக வேலைகளுக்கு மட்டும் இல்லை, வீடுகளிலும் டீம் லிவ்ங் இருந்தால்தான், ஒரு குடும்பம் சிறப்பாகச் செயல்படும். எல்லோரின் பங்களிப்பும் தேவை குடும்பத்தில். எனவே, டீம் வொர்க் வளர்ச்சிக்கு மட்டும் இல்ல, வாழ்வதற்கும் மிக முக்கியம்.

இந்த லேட்டஸ்ட் முயல், ஆமை கதையில் வரும் எல்லா கருத்துக்களுமே ஜெயிக்க முக்கியமானவை.

நிதானம் முக்கியம், வேகம் முக்கியம், புதுப்புது வழிகளைத் தேர்ந்தெடுக்க வேண்டியது முக்கியம், இந்த கதை இறுதியாக உணர்த்தும் ‘யூ வின், ஐ வின்!’ அப்ரோச் முக்கியம். மொத்தத்தில், இதுபோல மல்டி ஸ்கில் முக்கியம். அதை கற்றுக் கொடுப்பதும் டீம் வொர்க்கே!

வாழ்க்கையில்
முயலும் ஜெயிக்கும்,
ஆமையும் ஜெயிக்கும்.
#முயலாமை மட்டுமே ஜெயிக்காது.

முயன்று தோற்றால் #அனுபவம்.

முயலாமல் தோற்றால் #அவமானம்.

வெற்றி நிலையல்ல,

தோல்வி முடிவல்ல..

முயற்சியை பொறுத்து தான்,
வெற்றியும் தோல்வியும்!!!

நம் வாழ்கையும், நம் நாடும் இப்படிதான் இருக்கிறது

🚋🚃இரண்டு ரயில் தண்டவாளம் அருகருகே இருக்கு..

ஒன்றில் எப்பவுமே ரயில் வராது....மற்றொன்றில் ரயில் அடிக்கடி வரும்...

ரயில் வராத தண்டவாளத்தில் ஒரு குழந்தை விளையாடிக் கொண்டிருக்கிறது.👶👧

ரயில் வரும் தண்டவாளத்தில் பத்து குழந்தைகள் விளையாடிக் கொண்டிருக்கிறது.

அத்தருணத்தில் ரயில் வருகிறது....தூரத்தில் இதனை நீங்கள் பார்க்கிறீர்கள்..உங்களுக்கு அருகே ட்ராக் மாற்றும் கருவி இருக்கிறது....நீங்கள் யாரை காப்பாற்றுவீர்கள்....??

இப்படி ஒரு கேள்வியை நேற்று ஒரு விழாவில் ஒருவர் கேட்டார்...ப்ரக்டிகலாக பதில் சொல்லனும் நாம் யாரும் சூப்பர் மேன் இல்லையென்றும் சொன்னார்.....

உண்மையாக நாம் என்ன செய்வோம்...?? ஒரு குழந்தை விளையாடு்ம் இடத்திற்கு தானே ட்ராக்கை மாற்றிவிடுவோம்..

ஏனெனில் 10 குழந்தைகள் காப்பாற்றப் படுமே என்றார்....

.உண்மை தான் என்றோம்

இன்றைய சமூகமும் இப்படித்தான் உள்ளது.
ரயில் வரும் என்று தெரிந்து தப்பு செய்யும் குழந்தைகள் காப்பற்றபடுகிறது...

ரயில் வராத இடத்தில் யாருக்கும் தொந்தரவு தராமல் தப்பே செய்யாத குழந்தை தண்டனை பெறுகிறது....

இன்றைய சூழலில் நம் வாழ்கையும், நம் நாடும் இப்படிதான் இருக்கிறது என்று அழகாக சொல்லி முடித்தார்...
Fault makers are majority, even they protected in most situations.

எலி தப்பித்து விட்டது.

ஒரு வீட்டில் டீட்டீ என்ற எலி தனது இரவு நேர இரைதேடப் புறப்பட்டுக்கொண்டிருந்தது. வளையை விட்டு  தலையை உயர்த்திப்பார்த்தது.
 வீட்டின் எஜமானனும் எஜமானியும் ஒரு பார்சலைப் பிரித்துக்கொண்டிருந்தார்கள்.


ஏதோ நாம் சாப்பிடக்கூடிய பொருள்தான் உள்ளே இருக்கும் என்று ஆவலோடு பார்த்தது டீட்டீ.அவர்கள் வெளியே எடுத்தது ஒரு எலிப்பொறி.

 அதைப்பார்த்ததும் டீட்டீக்கு மூச்சே நின்று விடும் போல இருந்தது.
 உடனே ஒரே ஓட்டமாக வீட்டில் இருந்த கோழியிடம் போய் சொன்னது "பண்ணையார் ஒரு எலிப்பொறி வாங்கி வந்துள்ளார். எனக்கு பயமாக இருக்கிறது."
கோழி விட்டேற்றியாகச் சொன்னது" உன்னைப் பொறுத்தவரை கவலைப்பட வேண்டிய விஷயம்தான்.நல்ல வேளையாய் இந்த எலிப்பொறியால் எனக்கு ஒரு பிரச்சினையும் இல்லை."


உடனே அது பக்கத்தில் இருந்த வான்கோழியிடம் அதே விஷயத்தைப் போய்ச் சொல்லியது. வான்கோழியும் அதேபதிலைச் சொல்லியதோடு "நான் எலிப்பொறியயெல்லாம் பார்த்து பயப்பட மாட்டேன்." என்றது.


மனம் நொந்த டீட்டீ அடுத்து பக்கத்தில் இருந்த ஆட்டிடம் போய் அதே விஷயத்தைச் சொல்லியது. ஆடும் அதேபதிலைச் சொல்லியது. அத்தோடு நின்றிருந்தாலும் பரவாயில்லை "எலிப்பொறியை பார்த்து என்னையும் பயப்படச் சொல்கிறாயா?" என்று நக்கலும் அடித்தது.


அன்று இரவு எலிப்பொறியில் ஒரு பொரித்த மீன் துண்டை வைத்து விட்டு பண்ணையாரும் அவர் மனைவியும் தூங்கப் போயினர்.

ஒரு அரை மணி நேரத்தில் டமால் என்றொரு சத்தம்.எலி மாட்டிக்கொண்டுவிட்ட். து என்று பண்ணையார் மனைவி ஓடிவந்து எலிப்பொறியைத் கையில் தூக்கினாள். எலிக்கு பதிலாக பாதி மாட்டியிருந்த பாம்புஒன்று எஜமானியம்மாளைக் கடித்து விட்டது.


எஜமானியம்மாளை உடனே ஆஸ்பத்திரிக்கு எடுத்துக்கொண்டு ஓடினார்கள். விஷத்தை முறிக்க இன்ஜெக்சன் போட்டபின்னும் பண்ணையார் மனைவிக்கு ஜுரம் இறங்கவேயில்லை.

 அருகில் இருந்த ஒரு மூதாட்டி " பாம்புக் கடிக்குப் பின்னால் வரும் காய்ச்சலுக்கு "சிக்கன் சூப் வைத்துக்கொடுத்தால் நல்லது" என்று யோசனை சொன்னாள்.
கோழிக்கு வந்தது வினை. கோழி அடித்து சூப் வைக்கப்பட்டது. கோழி உயிரை விட்டது.


அப்போதும் பண்ணையார் மனைவியின் ஜுரம் தணியவில்லை. உறவினர்கள் சிலர் வந்தார்கள்.அவர்களுக்குச் சமைத்துப்போட வான்கோழியை அடித்தார்கள். வான்கோழியும் உயிரை விட்டது.

சில நாட்களில் பான்னையாரம்மாவின் உடல் நலம் தேறியது.
பண்ணையார் மனைவி பிழைத்ததைக் கொண்டாட ஊருக்கே விருந்து வைத்தார்.

 இந்த முறை ஆட்டின் முறை. விருந்தாக ஆடும் உயிரை விட்டது.

நடந்த அத்தனை நிகழ்வுகளையும் டீட்டீ வருத்ததோடு கவனித்துக் கொண்டிருந்தது.


பண்ணையார் மனைவியின் பாம்புக்கடிக்குக் காரணமான எலிப் பொறியைத் தூக்கிப் பரணில் போட்டு விட்டார்.

எலி தப்பித்து விட்டது.
______________________________
நீதி ::-- அருகில் இருப்பவர்கள் தனக்கொரு பிரச்சினை என்று வந்தால் "என்ன" என்றாவது கேளுங்கள் ஏனென்றால் யாருக்கு என்ன பிரச்சினை எப்போது வரும் என்று யாருக்கும் தெரியாது.

 அடுத்தது அந்தப் பிரச்சினை நமக்கும் வரலாம். அடுத்த முறை நம்முடையதாகவும் இருக்கலாம்.

நேர்மறையாக சிந்திக்க கற்றுக் கொள்ள வேண்டும்.

ஒரு இளம் தம்பதி...
மலைப் பிரதேசம் ஒன்றிற்கு பேருந்தில் போய்க் கொண்டிருந்தார்கள்.
வளைந்து நெளிந்த பாதைகளில் சென்று கொண்டிருந்தது பேருந்து.
ஏனோ
வழியில் அவர்கள் இருவரும் இறங்கிக் கொள்ள
முடிவு செய்து, பேருந்தை நிறுத்தி இறங்கிக் கொண்டனர்.
ஆளில்லாத வனாந்திரம், மான்களும்
மயில்களும் குயில்களின் இசையோடு
விளையாடிக் கொண்டிருந்தன.
ஆனால் அவர்கள் மனம் அதில்
லயிக்கவில்லை...
இறங்கிய இடத்திலிருந்து சற்று தள்ளி
இருந்த பாறையில் ஏறினர்.

உச்சியில் இருந்து பாதாளத்தைப் பார்த்த போது, கால்கள் கூசின. உடல் நடுங்கியது. இருவரும் கண்களை மூடி
கரங்களைப் பற்றிக் கொண்டனர்.
வனக்குரங்குகள் மரங்களிலிருந்து
இவர்களை நோக்கி க்ரீ....ச்சிட்டன...

அப்போது,
மிகப் பெரிய சப்தம்...
திரும்பிப் பார்த்தார்கள்.
இவர்கள் இறங்கிய பேருந்தின் மீது
மலையிலிருந்து மிகப் பெரிய பாறை
விழுந்து பேருந்தை நசுக்கி இருந்தது.

ஒருவரும் தப்பவில்லை!
இவர்கள் இருவரைத் தவிர...
பாறைக்கடியில் சமாதி ஆகி இருந்தனர்.
குயிலோசை இல்லை!
மான்களும் மயில்களும் ஒடுங்கி
நின்றிருந்தன.
வனக்குரங்குகள் மலை உச்சிக்கு தாவி
ஓடின.

இளம் தம்பதி,
ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
இருவரும் சொல்லிக் கொண்டார்கள்.


"நாம் பேருந்தில் இருந்து இறங்கி
இருக்கக் கூடாது...!"

ஏன் அப்படிச் சொன்னார்கள் ?
ஊகிக்க முடிகிறதா...?
சவாலான கேள்வி...!
100% உங்கள் யூகம் தவறாக இருக்க வாய்ப்பு இருக்கிறது.

அவர்கள் அந்த பேருந்தில் இருந்து
இறங்கி இருக்காமல்
பயணித்திருந்தால்...
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
சில நிமிடங்களுக்கு முன்னரே
பேருந்து
அந்த இடத்தைக் கடந்திருக்கும்.
பாறை விழும் பேராபத்தில் இருந்து
அனைவரும் தப்பி இருப்பார்கள்.
.
.
.
.
.
.
.
எதிர்மறையான சிந்தனை
உங்களுக்குத் தோன்றி இருந்தால்...
நீங்கள்
நேர்மறையாக
சிந்திக்க கற்றுக் கொள்ள வேண்டும்.

"நான் திராட்சை சாப்பிடலாமா?''

ஒரு குறும்புக்கார ஆசாமி ஒரு
மகானிடம் சென்று கேட்டான்:

"நான் திராட்சை சாப்பிடலாமா?''

மகான் சொன்னார்: "ஓ... தாராளமா''

"அதில் கொஞ்சம் தண்ணீர் சேர்த்துப் பயன்படுத்தலாமா?''

"ஓ.. பயன்படுத்தலாமே?''

"புளிப்புச் சுவைக்காக கொஞ்சம்
வினிகர் சேர்த்துக் கொள்ளலாமா?''

"அதிலென்ன சந்தேகம்?''

"அப்படீன்னா இதுவெல்லாம்
சேர்ந்ததுதான் மது. அதைக் குடிப்பது
மட்டும் தப்பு என்று
சொல்கிறார்களே?''

மகான் யோசித்தார். குறும்புக்கார
ஆசாமியிடம் கேட்டார்:

"இங்க பாருப்பா... உன் தலை மேலே
கொஞ்சம் மண் அள்ளிப் போட்டா
உனக்குக் காயம் ஏற்படுமா?''

"அதெப்படி ஏற்படும்?''

"தண்ணீர் ஊற்றினால்?''

"தண்ணீர் ஊற்றினால் எப்படி காயம்
ஏற்படும்?''

"மண்ணையும் தண்ணீரையும் கலந்து
சுட்டு செங்கல்லாக்கி உன் தலையில்
போட்டால்?''

"காயம் ஏற்படும்''

"நீ கேட்ட கேள்விக்கு இதுதான் பதில்''
என்றார் மகான்..