பெர்ஃப்யூம் பயன்படுத்துவதால் பாதிப்புகள் உண்டாகுமா?.


பெர்ஃப்யூம் பயன்படுத்துவதால் பாதிப்புகள் உண்டாகுமா?....

பெரியவர்களே கூட தொடர்ச்சியாக பெர்ஃப்யூம் பயன்படுத்துவது நல்லதல்ல. அதிலுள்ள ஆல்கஹால் சருமத்தைக் கருப்பாக்கி விடும். குழந்தைகளின் மென்மையான சருமம் அதிக பாதிப்புக்கு உள்ளாகும். 

சூரிய அலர்ஜியை உண்டாக்கும் தன்மை அதில் இருப்பதால், வெயிலில் வியர்வை சிந்த வளைய வரும் பிள்ளைகளுக்கு இன்னும் பல பாதிப்புகளை ஏற்படுத்தும். வியர்வைச் சுரப்பிகளையும் பாதிக்கும். ‘கான்டாக்ட் டெர்மடைட்டிஸ்’ என்ற சரும அலர்ஜியை உருவாக்கும் தன்மை பெர்ஃப்யூமுக்கு இருக்கிறது.

அக்குள் பகுதிகளில் தொடர்ந்து பயன்படுத்தினால், டீன் ஏஜிலேயே அந்தப் பகுதி கறுத்துப் போய் விடும். எப்போதாவது ஒருமுறை எனில் உடையின் மேல் ஸ்பிரே அடித்துப் பயன்படுத்தலாம்.

No comments: