நோன்பின் சட்டங்கள்!
==========================
பசியை அடக்கிக் கொண்டு தொழுதல்!...
தமிழக முஸ்லிம்களிடம் உள்ள மற்றொரு
அறியாமையையும் சுட்டிக்
காட்டுவது அவசியமாகும்.
நோன்பு துறப்பதற்காகத் தண்ணீர்
குடித்தவுடன் மஃக்ரிப்
தொழுகைக்கு இகாமத்
சொல்லப்பட்டு விடுவதுண்டு.
இதனால் தண்ணீரைக் குடித்தவுடன் மஃக்ரிப்
தொழுகைக்குச் சென்று விடுவார்கள்.
ஆனால் உடலும், மனமும் உணவில் பால்
நாட்டம்
கொண்டிருக்கும்.
இவ்வாறு செய்வது பேணுதல் என்ற எண்ணம்
பலரிடம் உள்ளது. உண்மையில் இது பேணுதல்
அல்ல!
மாறாக மார்க்கத்தில் கண்டிக்கப்பட்ட
ஒரு செயலாகும்.
மல ஜலத்தை அடக்கிய நிலையிலும்,
உணவு முன்னே
இருக்கும் போதும் எந்தத் தொழுகையும்
இல்லை
என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்
கூறியுள்ளார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்: முஸ்லிம் 869
உங்களில் ஒருவர் உணவில் இருக்கும் போது
தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டால்
உணவுத்
தேவையை முடிக்கும் வரை தொழுகைக்குச்
செல்ல
வேண்டாம் என்று நபிகள் நாயகம் (ஸல்)
அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்:
இப்னு உமர்
(ரலி) நூல்: புகாரி 5465, 671
இந்த நபிமொழிகளிலிருந்து ஜமாஅத்
தொழுகையை
விட, பசியைப்
போக்குவது முதன்மையானது என்பதை
அறிந்து கொள்ளலாம். சாதாரண
நாட்களிலேயே இந்த
நிலை என்றால் நோன்பின் போது மஃக்ரிப்
நேரத்தில்
அதிகமான பசியும், உணவின் பால் அதிக
நாட்டமும்
இருக்கும்.
இந்த நேரத்தில் மனதை உணவில்
வைத்து விட்டு,
உடலை மட்டும் தொழுகையில் நிறுத்துவது
அல்லாஹ்வுக்கு விருப்பமானது அல்ல
என்பதால்
தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வாறு
நமக்கு வழி காட்டியுள்ளார்கள்.
இன்னொன்றையும் நாம் மறந்து விடக் கூடாது.
ஒவ்வொரு தொழுகைக்கும் ஒரு ஆரம்ப
நேரமும், ஒரு
முடிவு நேரமும் உள்ளது.
முடிவு நேரத்துக்குள்
தொழுகையை நிறைவேற்றி விட வேண்டும்.
பசியின் காரணமாக ஜமாஅத்தைத் தான்
விடலாமே
தவிர தொழுகையை விட்டு விடக் கூடாது.
மஃக்ரிப்
தொழுகையைப் பொறுத்த வரை சூரியன்
மறைந்தது
முதல் சுமார் 60 நிமிடம் வரை தொழுகை நேரம்
நீடிக்கும். அதற்குள் தொழுகையை நிறைவேற்றி
விட வேண்டும்.
ஏனெனில் தொழுகை முஃமின்கள் மீது நேரம்
குறிக்கப்பட்ட
கடமையாகவுள்ளது என்று (4:103
வசனத்தில்) அல்லாஹ் கூறுகிறான்.
நோன்பு துறக்க ஏற்ற உணவு நம்மிடம் எந்த
உணவு
உள்ளதோ அதன் மூலம் நோன்பு துறக்கலாம்
என்றாலும்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்
நோன்பு துறக்கும்
போது முதலில் பேரீச்சம்
பழங்களை உட்கொள்ளுமாறு
ஆர்வமூட்டி உள்ளார்கள். யாருக்கு பேரீச்சம்
பழம்
கிடைக்கிறதோ அவர் அதன் மூலம்
நோன்பு துறக்கட்டும்! கிடைக்காதவர்கள்
தண்ணீர் மூலம் நோன்பு துறக்கட்டும்;
ஏனெனில் அது தூய்மையானதாகும்
என்று நபிகள்
நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்:
அனஸ் பின் மாலிக் (ரலி) நூல்: திர்மிதீ 594.
பேரீச்சம் பழத்தையோ, தண்ணீரையோ முதலில்
உட்கொண்டு விட்டு அதன் பிறகு மற்ற
உணவுகளை
உட்கொள்வதால் நபிகள் நாயகத்தின்
சுன்னத்தைப்
பேணிய நன்மையை அடைந்து கொள்ளலாம்...