ஆண்ட்ராயிட் மொபைல், ஐபோன் மற்றும் டேப்லட்டுகளில் மட்டுமென பிரத்யேகமாக இருந்து வந்த வாட்ஸ் ஆப்-பை இனி நமது PC, லேப்டாப்பிலும் பயன்படுத்த முடியும்.
மொபைல், PC, லேப்டாப், டேப்லட் போன்ற அனைத்து டிவைசிலும் ஒரே நேரத்தில் வாட்ஸ் ஆப்-பை பயன்படுத்தலாம். ஒரு டிவைசிலிருந்து அனுப்பப்படும் மெசேஜ் அனைத்து டிவைசிலும் sync ஆகி விடும். மொபைலில் சிரமப்பட்டு டைப் அடிப்பதை விட கணினியில் எளிதாக வேகமாக வாட்ச் அப் அனுப்புவது இலகுதானே?
எப்படி PC / லேப்டாப்பில் வாட்ஸ் ஆப் பயன்படுத்துவது ?
முக்கியமாக இதனை பயன்படுத்த மொபைல் மற்றும் உங்கள் கணினி ஒரே நேரத்தில் இணையத்துடன் இணைக்கப்பட்டு இருக்க வேண்டும்.
Step 1
மொபைலில் உள்ள வாட்ஸ் ஆப்-பை ஓபன் செய்து, மேல் வலது புறத்திலுள்ள மூன்று புள்ளிகள் போன்ற அமைப்பை க்ளிக் செய்து அல்லது ஆண்டிராயிட் மொபைலில் ஆப்சன் பட்டனை அழுத்தி ... , 'வாட்ஸ்ஆப் வெப்' என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுத்து கொள்ளவும்.
Step 2
இப்பொழுது மொபைலில் QR ரீடர் ஓபன் ஆகி இருக்கும். PC / லேப்டாப்பில், கூகிள் க்ரோம் பிரவுசரில் "web.whatsapp.com" என்ற லிங்கை டைப் செய்து, திரையில் தோன்றும் code -ஐ மொபைல் மூலம் ஸ்கேன் செய்ய வேண்டும்.
Step 3
ஸ்கேன் செய்த அடுத்த நிமிடம் PC / லேப்டாப்பில் கான்டாக்ட்ஸ் மற்றும் கான்வர்சேஷன் திரையில் தோன்றி வாட்ஸ் ஆப் பயன்படுத்த தயாராகி விடும்.
புதிய மெசேஜ் வந்தால் notify செய்யும் ஆப்ஷன்-ஐ PC / லேப்டாப்பில் on செய்து கொள்ளலாம். இதன் மூலம் புதிதாக வரும் மெசேஜ் திரையில் பாப் அப் ஆகும்.
Step 4
இனி புதிதாக ஒரு சாட்-ஐ தொடங்கலாம். நமது ப்ரொபைல் படம் மற்றும் ஸ்டேடஸ்-ஐ PC / லேப்டாப்பிலிருந்து அப்டேட் செய்து கொள்ளலாம்.
மொபைலுக்கு வரும் மெசேஜ்கள் PC / லேப்டாப்பிலும் இருக்கும். இதில் அழிக்கப்படும் மெசேஜ்கள் மொபைலிலிருந்தும் அழிந்து விடுமாறு இது sync செய்யப்பட்டுள்ளது.
Step 5
மொபைலிலிருந்து 'வாட்ஸ் ஆப் வெப்' என்ற ஆப்ஷனை தற்போது க்ளிக் செய்தால், லாஸ்ட் ஸீன் மற்றும் PC / லேப்டாப்பிலிருந்து லாக் அவுட் செய்து கொள்ளும் ஆப்ஷன்கள் இருக்கும்.
கணினி / லேப்டாப்பில் வாட்ஸ் ஆப் பயன்படுத்துவது குறித்து வாட்ஸ் ஆப்-பின் உதவி பக்கம் : http://www.whatsapp.com/faq/en/web/28080003
எளிமையாக விளக்கும் வீடியோ
'வாட்ஸ் ஆப் வெப்' - குறிப்பிடும்படியான அம்சங்கள்
- PC / லேப்டாப்பில் பெரிய திரை என்பதால்,மொபைலில் இருந்து சாட் செய்யும் போது தோன்றும் மெசேஜ்களை விட இதில் இன்னும் கூடுதல் மெசேஜ்கள் தோன்றும்.
- வாட்ஸ் ஆப் வெப்பிலிருந்து லாக் அவுட் செய்த பிறகு, மறுமுறை PC / லேப்டாப்பில் வாட்ஸ் ஆப் பயன்படுத்த மீண்டும் QR code ஸ்கேன் செய்ய வேண்டும்.
- ஏற்கனவே இருக்கும் கான்டாக்ட்ஸ் மற்றும் குரூப்பிற்கு மெசேஜ் செய்ய முடியுமே தவிர, புதிதாக ஒரு குரூப் உருவாக்க முடியாது.
- புது மெசேஜ் வந்தால் PC / லேப்டாப்பிலும் நோட்டிபிக்கேசன் வரும்.
- வாட்ஸ் ஆப் வெப்-ஐ PC / லேப்டாப்பிலிருந்து பயன்படுத்த வேண்டுமென்றால், மொபைலிலும் இணைய இணைப்பு இருக்க வேண்டும்.
- டைப் செய்ய ஏதுவாக, பெரிய திரையில் மெசேஜ்களை விசாலமாக பார்க்கும் வசதி தவிர வேறு வாட்ஸ் ஆப் வெப் கென பிரத்தியேகமாக எந்த வசதியும் சொல்லிக்கொள்ளும்படி இல்லை.