நீங்க என்ன நட்சத்திரம்? எந்த ருத்திராட்சம் போடலாம்?

ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் உகந்த ருத்ராக்ஷங்கள்
நமது அற நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.

ஆனால் ருத்ராக்ஷத்தைப் பொறுத்தவரை எதை அணிந்தாலும் நிச்சயம் தீங்கு பயக்காது. மிக்க நலத்தையே நல்கும்.ருத்ராக்ஷத்தை ஒவ்வொருவருடைய நட்சத்திரத்திற்கும் ஏற்ற ருத்ராக்ஷங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
இவற்றை நல்ல நாள் பார்த்து பாலில் நனைத்து தெய்வ சந்நிதியில் அணிவது மரபு.

ருத்ராக்ஷம் அணிய மிக உத்தமமான நட்சத்திரமாக பூசம் என்று நம் அற நூல்களில் குறிப்பிடப்படுகிறது. இதனுடைய அதிபதி சனி. இந்த நட்சத்திரத்தில் பிருஹஸ்பதி உச்சத்தில் இருக்கிறார். ஆகவே வியாழக்கிழமையும் பூச நட்சத்திரமும் கூடிய அதி உன்னதமான நாளில் ருத்ராக்ஷம் அணிந்தால் மிக சிறப்பாகும்.

வாரம் ஒரு முறை வியாழக்கிழமையும் மாதம் ஒரு முறை பூச நட்சத்திரமும் வந்தாலும் கூட இவை இரண்டும் இணைவது வருடத்திற்கு ஒரு முறையோ அல்லது இரு முறையோ தான்! ஆகவே அந்த நாளைக் குறித்து வைத்துக் கொண்டு ருத்ராக்ஷம் அணிதல் வேண்டும்.

நட்சத்திரம் - கிரகம் - அணிய வேண்டிய ருத்ராக்ஷம்

1) அஸ்வினி - கேது - நவமுகம்

2)பரணி - சுக்ரன் - ஷண்முகம்

3)கார்த்திகை - சூர்யன் - ஏகமுகம் அல்லது த்வாதசமுகம்

4)ரோஹிணி - சந்திரன் - த்விமுகம்

5)மிருகசீரிஷம் - செவ்வாய் - த்ரிமுகம்

6)திருவாதிரை - ராகு - அஷ்டமுகம்

7)புனர்பூசம் - ப்ருஹஸ்பதி - பஞ்சமுகம்

8)பூசம் - சனி - சப்தமுகம்

9) ஆயில்யம் - புதன் - சதுர்முகம்

10) மகம் - கேது - நவமுகம்

11)பூரம் - சுக்ரன் - ஷண்முகம்

12)உத்தரம் - சூர்யன் - ஏகமுகம் அல்லது த்வாதசமுகம்

13)ஹஸ்தம் - சந்திரன் - த்விமுகம்

14)சித்திரை - செவ்வாய் - த்ரிமுகம்

15)ஸ்வாதி - ராகு - அஷ்டமுகம்

16)விசாகம் - ப்ருஹஸ்பதி - பஞ்சமுகம்

17)அனுஷம் - சனி - சப்தமுகம்

18)கேட்டை - புதன் - சதுர்முகம்

19)மூலம் - கேது - நவமுகம்

20)பூராடம் - சுக்ரன் - ஷண்முகம்

21)உத்திராடம் - சூர்யன் - ஏகமுகம் அல்லது த்வாதசமுகம்

22)திருவோணம் - சந்திரன் - த்விமுகம்

23)அவிட்டம் - செவ்வாய் - த்ரிமுகம்

24) சதயம் - ராகு - அஷ்டமுகம்

25)பூரட்டாதி - சனி - பஞ்சமுகம்

26)உத்திரட்டாதி - சனி - சப்தமுகம்

27)ரேவதி - புதன் - சதுர்முகம்

Measurements for Memory & Storage




1024 bytes

 = 

1 KB

1024 KB

 = 

1 MB

1024 MB

 = 

1 GB

1024 GB

 = 

1 TB

1024 TB

 = 

1 PB

KB

 = 

Kilobyte

MB

 = 

Megabyte

GB

 = 

Gigabyte

TB

 = 

Terabyte

PB

 = 

Petabyte