Katalar tinam sariya / Thavara ?

    காதல் என்ற ஒரு உணர்வு வரவில்லை என்றால் அந்த இளமைக்கு என்ன பயன் ? ஆனாலும் காதல்  என்று வந்துவிட்டாலே எதிர்ப்பும் கூடவே சேர்ந்து வந்துக்கொண்டே தான் இருக்கிறது . சாதி , மதம் போன்ற முட்டாள்தனமான எதிர்ப்புகளை நிராகரித்துவிடலாம் . ஆனால் காதலிப்பது அழிவின் ஆரம்பம் என்று அறிவுரை கூறும் பெருசுகளை ?
அந்த பெருசுகள் அனைவரும் காதலிக்காமலா இருந்திருப்பார்கள் ? இவர்கள் கூற்றிலும்  நியாயம் உண்டு .



மீபத்தில் திருவண்ணாமலையில் உள்ள பொறியியல் கல்லூரி ஒன்றில் தன்  காதலியிடம்  வெளிப்படுத்திய அன்பை (!) ஒரு மாணவன் செல் போனில் படம் எடுத்து வெளியிட்டுள்ளான் . இந்த சம்பவத்தை ஆராய்ந்தால் பெருசுகளின் கோவத்தில் உள்ள  நியாயம் புரியும் . கல்லூரியிலேயே அழகான மாணவி . மாணவர்கள் அனைவரும் பேசவே ஏங்கும் அவளிடம் பாச வார்த்தைகளை காட்டி ஏமாற்றி உள்ளான் அவன் . அவன் வெளியிட்டுள்ள அந்த காட்சிகளை பார்க்கும் பொழுது அந்த பெண் வெறும் காமத்திற்காக மட்டும் அவனிடம் பழகவில்லை என்பது புரிகிறது . அந்த பெண்ணிடம் இருந்தது உண்மையான , தெய்வீகமான , கவித்துவமான காதல் தான் , ஆனால் அந்த பையனிடம் >? இப்பொழுது பாதிக்கப்பட்டிருப்பது  பெண்ணும் தானே ?

  இதுப்போன்று ஆங்காங்கே நடக்கும் சம்பவங்களை வைத்து காதல் ஆபத்தானது என்று தீர்மானித்துவிட முடியாது . இரு இதயங்களுக்குள்ளும் வரும் உன்னதமான ஒரு உணர்வே காதல் . இதற்க்கு அன்பை தவிர வேறெந்த எதிர்பார்ப்பும் இருக்காது. அப்படி இருந்தால் தான் அது "காதல்". அனைவரும் கண்டிப்பாக காதலிக்க வேண்டும் . ஆனால் காதல் என்றால் என்ன ?  என்பதை புரிந்து வைத்துக்கொண்டு காதலிக்க வேண்டும்

  "காமம்" என்பது உங்கள் துணை மீது நீங்கள் வைத்திருக்கும் அன்பின் வெளிப்பாடாக மட்டுமே இருக்க வேண்டும் . ஆனால் இன்று பலர் காதல் என்ற பெயரில் தங்கள் காம பசிக்கு தீனி போட்டுக்கொண்டிருக்கின்றனர் . பூங்காக்கள் ,கடற்கரைகள், போன்ற இடங்களில் இவர்கள் செய்யும் சேட்டைகளுக்கு அளவே இல்லை . உண்மையாக தன் காதலியை நேசிக்கும் எந்த ஒரு ஆணும் தன் காதலியின் இடுப்பை மற்றவர்கள் பார்க்க வேண்டும் என்று நினைக்க மாட்டான் ... ஆனால் இன்று .... தன் காதலியின் இடுப்பு அழகை பெருமைபடுத்தி மற்றவர்களிடம் பீத்திக்கொள்ளும் ஆண்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது . இவர்கள் செய்யும் விபசாரத்துக்கு "காதல்" என்ற புனிதமான வார்த்தையை பயன் படுத்திக்கொண்டிருக்கின்றனர் .

 கண்டவுடனே காதல் ...".i love you" என்றவுடன்  "me too" என்று சொன்னால் அது எப்படி காதல் ஆகிவிட முடியும் . வாழ்கையை பகிர்ந்துக்கொள்ள போகும் ஒரு நபரை பற்றி எவ்வளவு  ஆராய வேண்டும்? இன்றைய மாடர்ன் உலகில் காதல் என்ற வார்த்தையை வைத்துக்கொண்டு சிலர் விபச்சாரம் செய்துக்கொண்டிருக்கின்றனர் .
இவர்களை சிலர் உசுப்பேற்றி விட்டு காசு பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் . உண்மையான அன்பை வெளிப்படுத்தும் காமம் நான்கு சுவற்றிற்குள் தனிமையில் மட்டுமே தலை தூக்கும் .
   இப்பொழுதும் உண்மையான காதலர்கள் இருக்கிறார்கள் . அவர்களுக்கு காதலை வெளிப்படுத்த தனி நாள் எதுவும் தேவை  இல்லை. அவர்களுக்குள் இருக்கும் வெள்ளந்தியான உறவுக்கு யாரோ எழுதி வைத்த வாழ்த்து அட்டைகள் தேவை  இல்லை ..

ஹோட்டல்களிலும் கடற்கரைகளிலும்  காம வெறியாட்டம் ஆடுவது உண்மையான காதல் கிடையாது .

முடிவாக ஒன்று ..........................................

                                                          சில காம கொடூரர்களை மட்டும் வைத்துக்கொண்டு காதலை குற்றம் சொல்லுவது சரியல்ல ,அவள் என் வாழ்க்கையில் வந்த உடனே அணைத்து கெட்டப்பழக்கங்களையும் விட்டு விட்டேன் என்று கூறும் ஆண்களும் இருக்கிறார்கள் . காதலர்கள் நினைத்தால் தவறான வழியில் செல்லும் தன் துணையை நிச்சயம் திருத்த முடியும் . காதல் யாரையும் கெடுக்கவில்லை நம்மில் சிலர் தான் காதலை கெடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.                                                                            


இவன் ........

காதலை காதலிக்கும் உண்மையான காதலன்

காதலர்தினம்

உன்னை
பார்க்கும் எல்லா
தினமும் எனக்கு
காதலர்தினம் தான்......



திருமலை நாயக்கர்


திருமலை நாயக்கர்





திருமலை நாயக்கர்
 

மதுரை நாயக்க மன்னர்கள்
ஆட்சி மொழி தெலுங்கு, தமிழ்
தலைநகரம் மதுரை 1529 – 1616, திருச்சிராப்பள்ளி1616–1634, மதுரை 1634 – 1695,
திருச்சி 1695-1716,
மதுரை 1716–1736.
முன்ஆட்சி பாண்டியர், தில்லி சுல்தான்கள், விஜயநகரப் பேரரசு
பின்ஆட்சி இசுலாமியர், ஆங்கிலேயர் ஆட்சி, ( மைசூர் அரசு திண்டுக்கல்,கோவை,சேலம்)
பிரிவு ராமநாதபுரம்
புதுக்கோட்டை சிவகங்கை

திருமலை நாயக்கர் மாளிகை, மதுரை
திருமலை நாயக்கர், மதுரையை ஆண்ட நாயக்க மன்னர்களுள் மிகவும் புகழ் பெற்றவராவார். இவர் கி.பி 1623 தொடக்கம் 1659 வரையான காலப்பகுதியில் ஆட்சிப்பொறுப்பில் இருந்தார். இவர் காலத்தில் டெல்லி சுல்தானின் படைகளாலும், மற்றும் அயலிலிருந்த முஸ்லிம் அரசுகளாலும் தொடர்ந்து பயமுறுத்தல்கள் இருந்து வந்தன. எனினும் அவற்றை முறியடித்துத் தனது நாட்டை இவர் சிதையாமல் காப்பாற்றினார். இவரது ஆட்சிப்பகுதிக்குள் பண்டைய பாண்டிநாட்டின் பெரும் பகுதி அடங்கியிருந்தது.
 (குறிப்பு: படங்கள், செய்திகள் விக்கிமீடியா தளங்களில் இருந்து சேகரித்து பகிரப்பட்டுள்ளது)

பொருளடக்கம்

ஆரம்பகாலம்

திருமலை நாயக்கர் மதுரையில் பெம்மசானி கோத்திரத்தில், கம்ம நாயக்கர் குலத்தில், தைப்பூசத்திருநாளன்று பிறந்தார். இவர் முத்துக் கிருஷ்ணப்ப நாயக்கர் மகனாக கி.பி 1584 ஆம் ஆண்டில் பிறந்தார். இவரது இயற்பெயர் திருமலை சவுரி நாயுனு அய்யலுகாரு என்பதாகும். முதலாம் முத்துவீரப்பர் சந்ததியின்றி இறந்தமையால் இவரது தம்பி திருமலை நாயக்கர் மதுரை நாட்டின் ஆட்சி பொருப்பை ஏற்றார்.

ஆட்சிப் பகுதிகள்

திருமலை நாயக்கர் திருச்சிராப்பள்ளியிலிருந்து தலைநகரை மீண்டும் மதுரைக்கு மாற்றினார்.

[தொகு] ஆட்சியின் கீழ் இருந்த பகுதிகள்.

  1. திருநெல்வேலி நாடு, திருவிதாங்கூர் ஆட்சிபகுதியின் ஒரு பகுதி இத்துடன் தமிழ்நாட்டில் உள்ள
  2. மதுரை,
  3. திண்டுக்கல்,
  4. ராமநாதபுரம்,
  5. சிவகங்கை,
  6. புதுக்கோட்டை,
  7. மணப்பாறை,
  8. கோயம்புத்தூர்,
  9. சேலம் மற்றும்
  10. திருச்சிராப்பள்ளி போன்ற பகுதிகள் நாயக்க மன்னரால் ஆளப்பட்டன.
    இங்கு குறிக்கப்பட்டுள்ள ஊர்கள், அந்த ஊர்களுடன் சேர்த்து அந்தந்த ஊர்களை தலைநகராக கொண்ட பகுதிகளையும் குறிக்கின்றன. இருப்பினும் இந்த பகுதிகள் திருமலை நாயக்கரின் ஆளுகையில் இருந்தாலும் இவற்றை நேரடியாக ஆட்சி செய்தவர்கள் அந்த பகுதிகளில் நியமிக்கப்பட்ட பாளிகார் என்றழைக்கப்படும் பாளையக்காரர்கள்தான்.

கட்டிடக்கலை

தமிழக மக்கள் மறவாது நினைக்குமாறு மதுரையை விழாநகரமாகவும்,கலைநகரமாகவும் மாற்றியமைத்தார். திருமலை நாயக்கர், கட்டிடக்கலை உள்ளிட்ட கலைகள் மீது ஆர்வம் கொண்டு அவற்றின் வளர்ச்சிக்குப் பெரும் பங்களித்தார். பழைய கோயில்களைத் திருத்தி அமைத்தார். திருமலை நாயக்கர் மகால் என அழைக்கப்படும் அரண்மனை திருமலை நாயக்கரால் கி.பி. 1636 ஆம் ஆண்டில் கட்டுவிக்கப்பட்டது.

[தொகு] மணிமண்டபம்

திருமலை நாயக்கர் திருவில்லிபுத்தூர் ஆண்டாள் தீவிரமான பக்தன். தினந்தோரும் ஆண்டாள் கோவில் உச்சிகால பூசை முடித்த பின் மதிய உணவு உட்கொள்வது வழக்கம். மன்னர் மதுரையில் இருக்கும்போது ஆண்டாள் கோவில் பூசை மணிஓசையை அறிந்துகொள்ள வழிநெடுக பல மணிமண்டபங்களை அமைத்தார்.[1]

[தொகு] காட்சி கோப்பகம்

குமரிக்கண்டம்



Fire Service Sholavandan