முக்கியமான ஆன்டிராய்டு டிப்ஸ்....!!!!

ஆன்டிராய்டு ஸ்மார்ட் போன் பயன்படுத்துறீங்களா, நல்லது இன்னைக்கு நம்ம நாட்டுல பெரும்பாலானவங்க பீச்சர் போன்களில் இருந்து ஆன்டிராய்டுக்கு மாறிட்டு வருவது அதிகமாகியிருக்கு என்றே சொல்லலாம். இருந்தாலும் இதில் எத்தனை பேர் ஆன்டிராய்டு வகைகளை முழுமையாக தெரிந்து கொண்டு பயன்படுத்துகிறார்கள் என்றால் இந்த எண்ணிக்கை மிகவும் குறைவாகவே இருக்கும்.


கூகுள் நௌ :

4FK8MHM.jpg


கூகுள் நௌ அப்ளிகேஷனில் உங்களது தகவல்களை பதிவு செய்து கொள்ளுங்கள், இது உங்களுக்கு மிகவும் தேவையானவைகளை மட்டும் தான் உங்களுக்கு பரிந்துரைக்கும்.



லான்ச்சர்ஸ் :


9juFOKy.jpg


உங்க ஆன்டிராய்டு இன்டர்பேஸை மாற்றக்கூடிய ஆப்ஸ்களை கூகுள் ப்ளே மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.


பவர் சேவிங்ஸ் மோட் :

nzzCESU.jpg


ஆன்டிராய்டு போனின் செட்டிங்ஸ் சென்று பவர் சேவிங்ஸ் மோடை ஆன் செய்து கொள்ளுங்கள், இது உங்க போனில் நீண்ட நேர பேட்டரி பேக்கப் கொடுக்கும்.



கூடுதல் பேட்டரி :



MPIam8W.jpg


ஆன்டிராய்டு போன் பயன்படுத்தும் பலரும் சார்ஜரையும் கூடவே வைத்திருப்பார்கள், இதை தவிர்க்க கூடுதல் பேட்டரியை எடுத்து செல்லலாம், தேவையான போது அதை மாற்றி கொள்ளலாம்



கூகுள் க்ரோம் :

VTS6ByK.jpg



போனில் கூகுள் க்ரோம் சைனி இன் செய்தால் புக்மார்க் செய்ய ஏதுவாக இருக்கும்


ஆப்ஸ் போல்டர் :


fSaf8gk.jpg


ஆப்ஸ்களை வகைப்படுத்தி அதை புதிய போல்டரை உருவாக்கி அதிலும் வைத்து கொள்ளலாம்

 
கீ போர்டு :
 
 
YXhH7VZ.jpg
 
 
டைப் செய்ய கடினமாக உள்ளதா, அப்படி என்றால் கூகுள் ப்ளே ஸேடோரில் இருக்கும் கீபோர்டு ஆப்ஸ்களை பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.



டேட்டா பயன்பாடு :



TiakODP.jpg


ஆன்டிராய்டில் ரெடியூஸ் டேட்டா யூஸேஜ் ஆப்ஷனை ஆன் செய்து கொள்ளலாம், இது உங்க இணைய பயன்பாட்டை முடிந்தவரை குறைக்கும்
 

கூகுள் ஆத்தென்டிகேட்டர் :



F4xs4FX.jpg


இது உங்க கூகுல் அக்கவுன்ட்களை பாதுகாப்பாக்கும், நீங்கள் ஒவ்வொரு முறை சைன் இன் செய்யும் போதும் உங்க பாஸ்வேர்டு மற்றும் இந்த ஆப் கொடுக்கும் ரகசிய குறியீட்டையும் என்டர் செய்ய வேண்டும்.

ஆப்ஸ் : 

y6d2lQl.jpg

டீபால்ட் வெப் பிரவுஸரை மாற்ற வேண்டுமா இதற்கு செட்டிங்ஸ் க்ளியர் டீபால்ட் கொடுக்க வேண்டும்

ஆண்ட்ராய்ட் ஒன்' திட்டம் அடுத்த மாதம் இந்தியாவில்

U6XEU7D.jpg


பட்ஜெட்விலையில் வெளியாகும் ஸ்மார்ட் போன்களில், சீரிய வசதிகளைத் தந்து வாடிக்கையாளர்களை மகிழ்விக்க, கூகுள் ”ஆண்ட்ராய்ட் ஒன்” என்ற ஒரு திட்டத்தினை வடிவமைத்துள்ளது. இதனை அடுத்த மாதம் இந்திய மொபைல் தயாரிப்பு நிறுவனங்கள் தயாரிக்கும் ஸ்மார்ட் போன்களில் முதன் முதலாக, கூகுள் அறிமுகப்படுத்த இருக்கிறது. மைக்ரோமேக்ஸ், கார்பன் மற்றும் ஸ்பைஸ் நிறுவனங்கள் இந்த சிஸ்டத்துடன் கூடிய ஸ்மார்ட் போன்களை செப்டம்பரில் அறிமுகப்படுத்த இருக்கின்றன.



இந்த ஸ்மார்ட் போன்களின் விலை ரூ.7,000 முதல் ரூ.10,000 வரையில் இருக்கலாம். (பட்ஜெட் விலை என்பதால் இவை ரூ.6,000க்கும் கீழாக இருக்கும் என முன்பு எதிர்பார்க்கப்பட்டது) இங்கு வாடிக்கையாளர்கள் கொடுக்க இருக்கும் வரவேற்பிற்கு ஏற்றபடி, மற்ற நாடுகளிலும் இந்த திட்டத்தினை கூகுள் விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு வாடிக்கையாளர்கள் கொடுக்கும் வரவேற்பு, தன்னை நிலைப்படுத்திக் கொள்ள உதவும் என கூகுள் எதிர்பார்க்கிறது. 


இந்த திட்டத்தின்படி, கூகுள் தரும் சாப்ட்வேர் புரோகிராம்கள் இயங்க, மிகக் குறைவான அளவிலும், திறனுடனும் ஹார்ட்வேர் இருந்தால் போதும். இதனால், போன்களின் விலை நிர்ணயத்தை, அவற்றைத் தயாரிக்கும் நிறுவனத்திடமே கூகுள் தந்துவிட்டது. எந்த நிலையில் உள்ள வாடிக்கையாளர்கள் இவற்றை விரும்புவார்கள் என்பதனை அறிந்து, விலை நிர்ணயம் செய்யப்படும். இந்த நிறுவனங்கள் இதற்கெனத் தயாரிக்கும் மொபைல் போன்களில், இரண்டு சிம் இயக்கம், 5 மெகா பிக்ஸெல் கேமரா, மைக்ரோ எஸ்.டி. கார்ட் ஸ்லாட், குவாட் கோர் ப்ராசசர், 1 ஜி.பி. ராம், 4.3 அல்லது 4.5 அங்குல திரை ஆகியன குறைந்த பட்சம் இருக்கும். இவற்றில் ஆண்ட்ராய்ட் கிட் கேட் 4.4. சிஸ்டம் இயங்கும்.



Fvm395g.jpg



இது அக்டோபர் மாதத்தில், ஆண்ட்ராய்ட் எல் சிஸ்டத்திற்கு அப்கிரேட் செய்யப்படும். அப்டேட் மூலம் கூகுள் தரும் புதிய வசதிகள், அகலத்திரை, பேட்டரி திறன் ஆகியவை, இந்திய வாடிக்கையாளர்களுக்கு புதிய சீரான அனுபவத்தினையும் வசதிகளையும் தரும் என கூகுள் அறிவித்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம், குறைந்த விலை ஸ்மார்ட் போன்களில், வாடிக்கையாளர்களுக்குக் கூடுதல் வசதிகள் கிடைக்கின்றன. இந்த போன்களைத் தயாரிப்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். ஸ்மார்ட் போன் பிரிவில், ஹார்ட்வேர் மற்றும் சாப்ட்வேர் விஷயங்களைத் தன் கட்டுப்பாட்டில் கூகுள் கொண்டு வர முடியும். இந்த வகையில், மூன்று பிரிவினரும் திருப்தி அடைவதால், ஆண்ட்ராய்ட் ஒன் திட்டம் வெற்றி பெறும் என கூகுள் திட்டமிடுகிறது. 

கூகுள் நிறுவனத்தின் ஆண்ட்ராய்டு டிவி அறிமுகம்

GLMHOoR.jpg



கூகுளின் ஆண்ட்ராய்டு ஆப்ரேட்டிங் சிஸ்டத்தை ஸ்மார்ட்போன், டேப்லட், வீடு மற்றும் ஸ்மார்ட்வாட்ச்களில் பொருத்தி உருவாக்கி கொண்டிருந்திருந்தது. இந்த நிறுவனம் தற்பொழுது ஆண்ட்ராய்டு டிவி வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளது. இணையதள வசதியுடன் இயங்கும் ஸ்மார்ட் டிவிகளில் கூகுளின், ஆண்ட்ராய்டு செட்-ஆப் பாக்ஸ் மற்றும் வீடியோ கேம் கன்சோல்களை பொருத்திக்கொள்ளலாம். 


cgaoK2U.jpg
ஆண்ட்ராய்டு டிவியில் யூசர்கள், படங்களை பார்க்கலாம், கூகுள் ப்ளேவில் இருந்து வீடியோக்கள், யூடூப், நெட்ப்ளிக்ஸ், பன்டோரா, ஹேங்அவுட்ஸ், ஸ்கைப், பேஸ்புக், ட்விட்டர் போன்றவற்றை டவுன்லோடு செய்து தொலைக்காட்சியில் காணலாம். கேம்பேட் உதவியுடன் ஆண்ட்ராய்டு கேம்களை தொலைகாட்சிகளில் விளையாடலாம். சோனி, ஷார்ப், பிலிப்ஸ் உள்ளிட்ட முன்னணி தொலைகாட்சிகளில் இந்த செட் ஆப் பாக்ஸ்கள் செயல்படும். நீங்கள் சுலபமாக உள்ளடக்கத்தை (content) கண்டுபிடிக்க வாய்ஸ் சேர்ச் பயன்படுத்த முடியும். 

cDBTRMg.jpg
மேலும், 2002ம் ஆண்டில் இருந்து ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட படங்கள் என்பன போன்ற மிகவும் சிக்கலான தேடல்களையும் மற்றும் கேள்விகளையும் கேட்கலாம். உங்களுக்கு பிடித்த விளையாட்டுகளை தொலைகாட்சியில் டவுன்சோடு செய்து கொண்டு விளையாடலாம். நீங்கள் என்பிஏ ஜாம் போன்ற மல்டி ப்ளேயர் விளையாட்டுகளையும் விளையாடலாம். ஏற்கனவே ஆப்பிள் டிவி என்ற பெயரில் ஆப்பிள் செல்போன் நிறுவனம் தயாரித்துள்ள செட் ஆப் பாக்ஸ்கள் எப்படி ஆப்பிள் நிறுவன ஐஓஎஸ் பிளாட்பார்மில் இயங்குகிறதோ அதைப்போல, கூகுள் ஆண்ட்ராய்ட் பிளாட்பார்மில் இயங்க உள்ளது.

ஆண்ட்ராய்ட் - ஐபோன் 6: ஓர் ஒப்பீடு


ZHde2Vq.jpg?1


ஐபோன் 6ல் பெரிய திரை தரப்பட்டுள்ளது ஆப்பிள் நிறுவனத்திற்கு வேண்டுமானால், புதிய விஷயமாக இருக்கலாம். ஆனால், பல ஸ்மார்ட் போன்கள் ஏற்கனவே இதனையும் மிஞ்சிய நிலையில் உள்ளன என்பதே உண்மை. ஐபோன் 6 திரை தரும் ரெசல்யூசனும், ஸ்மார்ட் போன்களில் புதிய விஷயமாகக் கருதப்பட வேண்டியதில்லை. அதே போல, ஐபோன் கேமரா 8 எம்.பி. திறன் கொண்டது என்பது ஆண்ட்ராய்ட் போன்களில் முன்பே வந்த முன்னேற்றமாகும்.


வர இருக்கும் ஆப்பிள் வாட்ச் சாதனத்துடன் ஐபோன் 6 இணைக்கப்படும் என்ற அறிவிப்பு, கூகுள் ஏற்கனவே தந்துள்ள Android Wear smartwatch முன்னால் எடுபடுமா என்பதனைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 


ஐ.ஓ.எஸ். 8 சிஸ்டம் மூலம் ஐ க்ளவ்ட் பைல்களைக் கையாள, இதற்கு மட்டுமேயான அப்ளிகேஷன்கள் உண்டு என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கூகுள் இதனை கூகுள் ட்ரைவ் மூலம் ஏற்கனவே தந்து வருகிறது என்பதுவும் குறிப்பிடத்தக்கது.
ஐபோனில் தரப்படும் வை- பி வகை வேகம் (802.11ac), சாம்சங் கேலக்ஸி எஸ்5 போனில் இயங்கி வருகிறது. 


எனவே, புதிய வசதிகள் என ஐபோனில் அறிவிக்கப்பட்டவை, ஆப்பிள் நிறுவனத்திற்கு வேண்டுமானால், புதியவையாக இருக்கலாம். இவற்றில் பெரும்பாலானவை ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தில் இயங்கி வருபவையாகவே உள்ளன. இரண்டிலும், எந்த வகை கூடுதல் சிறப்புடன் இயங்கும் என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும். 


கூகுள் வாலட் என்ற பெயரில், மொபைல் போன் மூலம் பொருள் விற்பனை மையங்களில் பணம் செலுத்தும் முறை மூன்று ஆண்டுகளுக்கு முன், கூகுள் நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது ஆப்பிள் பே (Apple Pay) என்ற பெயரில் ஆப்பிள்
நிறுவனமும் இதே முறையினைக் கொண்டு வந்துள்ளது. 


என்.எப்.சி. தொழில் நுட்பத்தினை இயக்கும் சிப் மூலம் இது மேற்கொள்ளப்படும். கூகுள் இந்த தொழில் நுட்பத்தில் தொடக்கத்தில் செம்மையாகச் செயல்பட முடியவில்லை. ஆப்பிள் இதனைத் திறமையாக இயக்கி பெயர் எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆண்ட்ராய்ட் மற்றும் ஆப்பிள் நிறுவனத்தின் ஐ.ஓ.எஸ். ஆப்பரேட்டிங் சிஸ்டங்களிடையே பெருத்த வேறுபாடு உண்டு. ஆப்பிள் சிஸ்டத்தின் இயக்கத்தினை அதன் நிறுவனம் முழுமையாகத் தன் கட்டுப்பாட்டில், கட்டுக் கோப்பாக வைத்துள்ளது. இதற்கான ஹார்ட்வேர் மற்றும் சாப்ட்வேர் மாற்றங்களை ஆப்பிள் நிறுவனம் மட்டுமே அனுமதிக்க முடியும். ஆனால், ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தில் இயங்கும் அப்ளிகேஷன்களை, தர்ட் பார்ட்டி எனப்படும் நிறுவனங்களால், தொழில் நுட்ப வல்லுநர்களால், வாடிக்கையாளர்களுக்கேற்ப மாற்றி அமைத்துத் தர முடியும். ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தில் பல்வேறு இயக்க வகைகள் ஒரே நேரத்தில் இயங்கி வருகின்றன.


2013ல் வெளியான ஆண்ட்ராய்ட் கிட் கேட் இயக்க முறைமையை 21% போன்களும், ஜெல்லி பீன் வகையினை 54.2% போன்களும், 2010ல் வெளியான ஜிஞ்சர் ப்ரெட் வகையினை 14% போன்களும் பயன்படுத்தி வருகின்றன. இதற்கு மாறாக, ஆப்பிள் நிறுவனத்தின் ஐ.ஓ.எஸ். 7 இயக்க முறைமையில், 92% ஆப்பிள் போன்கள் பயன்படுத்துகின்றன. 


ஆனால், கூகுள் நிறுவனத்தின் திறந்த வெளி தொழில் நுட்பப் போக்கு தான், ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தினைப் பெரிய அளவில் பயன்படுத்த வைத்துள்ளது என்பதனையும், மக்கள் அதில் தான் தங்கள் பெரும்பாலான தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள முடியும் என உறுதியாக நம்புகின்றனர் என்பதையும் மறுக்க முடியாது.


அதே நேரத்தில், டிஜிட்டல் உலகில் வலம் வரும் மால்வேர் புரோகிராம்கள், ஆண்ட்ராய்ட் வழியாகத்தான் அதிகம் வருகின்றன. இந்த வகையில் ஆப்பிள் நிறுவனத்தின் ஐ.ஓ.எஸ். சிஸ்டம் கூடுதல் பாதுகாப்பினைத் தருகிறது. ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தில் இயங்கும் வகையில் வெளியாகும் மற்றவர்களின் புரோகிராம்களே இந்த மால்வேர் பரவலுக்குக் காரணம் என்றாலும், கூகுள் அவற்றை நிறுத்த மேற்கொண்ட முயற்சிகள் முழுமையான பலனைத் தரவில்லை. அதற்கென கூகுள் மேற்கொண்டு வரும் சில தொழில் நுட்ப கூறுகளும் மக்களைச் சென்றடையவில்லை. 

xxUPyQF.png


இருப்பினும் சில தொழில் நுட்பங்கள் மற்றும் தரப்படும் வசதிகளில் ஐபோன் தனிச் சிறப்புடன் விளங்குகிறது. கீழே அவை சுட்டிக் காட்டப்படுகின்றன.


1. தோற்றப் பொலிவு: 

ஐபோனின் வடிவமைப்பு எப்போதும் தனித் தன்மையுடன், மற்ற ஆண்ட்ராய்ட் போன்களுடன் ஒப்பிடுகையில், கூடுதல் சிறப்பு கொண்டதாகவே உள்ளது. ஐபோன் 6ல் தரப்படும் ரெடினா டிஸ்பிளே, சூரிய வெளிச்சத்தில் டெக்ஸ்ட் உட்பட திரைக் காட்சியைத் தெளிவாகக் காட்டும். இது சாம்சங் போன்களில் இல்லை. காலக்ஸி எஸ் 3 போனை, நிழலில் வைத்துத்தான், திரையில் உள்ளதைப் புரிந்து கொள்ள முடியும்.


2. நெட்வொர்க் இணைப்பு: 

முந்தைய மாடல்களைக் காட்டிலும், ஐபோன் 6 மாடல்களில், நெட்வொர்க் இணைப்பு வேகமாகவும், பல்வேறு வகை நெட்வொர்க் நிலைகளைத் தொடர்பு கொள்ள இயன்றதாகவும் உள்ளது.  இதற்கு இதில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய தொழில் நுட்பம் (LTE (long-term evolution, a wireless networking standard)) உதவுகிறது. இதன் மூலம் 150 Mpbs என்ற வேகத்தை எட்ட முடியும். 


3. என்.எப்.சி. வாலட்: 


ஆண்ட்ராய்ட் இயக்கும் கூகுள் வாலட் சிஸ்டத்தில் உள்ள குறைகள் எதுவுமின்றி, ஆப்பிள் வாலட் அமைப்பு இயங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வகையில் ஆப்பிள் தர இருக்கும் வாட்ச் செயல்பாட்டினையும் சேர்த்துக் கொள்ளலாம்.


4. பேட்டரியின் பலமுனை திறன்: 


ஐபோன் 6ல் தரப்படும் பேட்டரியில் தொடர்ந்து 50 மணி நேரம் ஆடியோ இசைக்கலாம்; 11 மணி நேரம் விடியோ பார்க்கலாம்; 11 மணி நேரம் வை பி அல்லது எல்.டி.இ. தொழில் நுட்பத்தில் பயன்படுத்தலாம். 10 மணி நேரம் 3ஜி பிரவுசிங், 14 மணி நேரம் குரல் வழி தொடர்பு மேற்கொள்ளலாம். 16 நாட்கள் இதன் மின் சக்தி தங்கும் சக்தி கொண்டதாக உள்ளது. இதுவே ஐபோன் 6 ப்ளஸ் மாடலில், மேலே தரப்பட்டுள்ள அனைத்து வசதிகளையும் கூடுதலான காலத்திற்கு தருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வகையில் சாம்சங் புதிய பேட்டரிகளைத் தர வேண்டியதிருக்கும்.


5. ஒருங்கிணைப்பு:


 Integration என்று சொல்லப்படும் ஒருங்கிணைப்பு, ஆப்பிள் நிறுவன சாதனங்களில் கிடைக்கும் ஒரு நல்ல வசதியாகும். மேக் ஆப்பரேட்டிங் சிஸ்டம், ஐபோன் மற்றும் ஐபேட் ஆகியவற்றில் இயங்கும் அப்ளிகேஷன்களை தெளிவாக இணைத்துச் செயல்படுத்தலாம். ஆப்பிள் தரும் Handoff போன்ற வசதிகள், இதனை இன்னும் சிறப்பானதாக மாற்றி உள்ளன. மூன்று வகை சாதனங்களிடையே இவற்றில் இயங்கும் அப்ளிகேஷன்களை ஒருங்கிணைத்துச் செயல்படுத்தலாம், செயல்பாடுகளை மாற்றிக் கொள்ளலாம். கூகுள் இதனை கூகுள் ட்ரைவ் மூலம் செயல்படுத்துகிறது . Gmail, Chrome, Google Calendar, and Google+ ஆகிய அனைத்தும் இணைவாகச் செயல்படுகின்றன. ஆனால், இந்த வசதியைத் தருவதை ஆப்பிள் நிறுவனம் மக்களுக்கு நன்றாக எடுத்துச் சொல்லி வருகிறது. கூகுள் இவற்றை மக்களுக்குக் கொண்டு செல்வதில் பின் தங்கியே உள்ளது. 


6. தன் ஆளுமை: 


ஆப்பிள் தான் தரும் வசதிகள் அனைத்தையும் தன் முழுக் கட்டுப்பாட்டில் வைத்துள்ளதால், வாடிக்கையாளர்களுக்கு இணைவான ஒரு நண்பனாகச் செயல்படுகிறது. ஆண்ட்ராய்ட் சாதனங்கள், வாடிக்கையாளர்களின் இசைவான வசதியைத் தர தர்ட் பார்ட்டி அப்ளிகேஷன்களையே நம்பி உள்ளது.


இந்த வகையில், user-friendly மூல நிறுவனமாக ஆப்பிள் பெயர் எடுத்துள்ளது. வரும் நாட்களில், நிச்சயம் ஆண்ட்ராய்ட் சிஸ்டம் இயங்கு முறையில் பல மேம்படுத்தல்களை எதிர்பார்க்கலாம். ஆப்பிள் தந்துள்ள புதிய சவால்களை கூகுள் நிச்சயம் எதிர் கொள்ளும் என எதிர்பார்க்கலாம்.


08hAOQR.png

ஆண்ட்ராய்ட் போனை உங்கள் வசப்படுத்த

Eptzrcc.png?1


இன்றைக்குப் பயன்படுத்தப்படும் பெரும்பாலான மொபைல் போன்களில் ஆண்ட்ராய்ட் ஆப்பரேட்டிங் சிஸ்டமே இயக்கப்படுகிறது. இணைய இணைப்பினை எளிதாக்கும் ஸ்மார்ட் போனை நாடுபவர்கள் தேர்ந்தெடுப்பது, ஆண்ட்ராய்ட் சிஸ்டத்துடன் வரும் மொபைல் போன்களையே என்பது இன்றைய நடைமுறை ஆகிவிட்டது. இதன் வசதிகளை எப்படி முழுமையாகப் பயன்படுத்தலாம் என்பதற்கு இங்கு சில குறிப்புகளைக் காண்போம். அப்படியானால், வசதிகள் இருந்தும் மறைத்து வைக்கப்பட்டுள்ளனவா? என்ற கேள்வி உங்கள் மனதில் எழலாம். அவை மறைத்து வைக்கப்படவில்லை. சில வசதிகள் கிடைக்காது என்ற எண்ணத்திலேயே நாம் ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போன்களைப் பயன்படுத்தி வருகிறோம். சில வசதிகள் அடிக்கடி பயன்படுத்த வேண்டாத நிலையில் இருப்பதால், அவற்றை நாம் பொருட்படுத்துவது இல்லை. ஆனால், தேவைப்படும்போது கொஞ்சம் தடுமாறுகிறோம். இவற்றில் சில முக்கிய வசதிகளை எப்படி செட் செய்வது எனப் பார்க்கலாம்.



போனுடன் வந்த சாப்ட்வேர்

மொபைல் போனைத் தயாரித்து, வடிவமைத்து வழங்கும் நிறுவனங்கள், தங்களுடைய சாப்ட்வேர் தொகுப்புகள் சிலவற்றையும், வர்த்தக ரீதியில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு மற்ற நிறுவனங்களின் சாப்ட்வேர் தொகுப்புகளையும் பதிந்தே தருகின்றன. இவற்றை bloatware packingஅல்லது preinstalled apps என அழைக்கிறார்கள். இவற்றில் பெரும்பாலானவை நம் போன் பயன்பாட்டிற்குத் தேவைப்படாதவையே. கம்ப்யூட்டர்களிலும் இதே போன்ற சூழ்நிலையை நாம் சந்திக்கிறோம். மொபைல் போன் இயக்கம் வேகமாகவும், எளிதாகவும் இருக்க வேண்டும் என்றால், இவற்றை முதலில் போனிலிருந்து நீக்க வேண்டும். இதற்கு முதலில் போனில் settings பிரிவு செல்லவும். இங்கு உள்ள Apps என்ற பிரிவிற்கு அடுத்து செல்லவும். தொடர்ந்து வலது புறமாக ஸ்வைப் செய்து சென்று, அந்த வரிசையில் "All" என்பதனைக் காணவும். இங்கு நமக்குத் தேவையில்லாத அப்ளிகேஷன்களைத் தேர்ந்தெடுக்கவும். தேர்ந்தெடுத்து Uninstall அல்லது Disable என்ற பட்டனை அழுத்த, இவை காணாமல் போகும். 
 


குரோம் பிரவுசரின் திறன் கூட்டுக

மொபைல் போன் பிரவுசர் வழி இணையத்தில் உலா வருகையில், குறைவான அலைக்கற்றையினைப் பயன்படுத்துவது வேகத்தினைத் தரும். மேலும், உங்களுக்கென கொடுக்கப்பட்டுள்ள மாத அளவிலான டேட்டாவினைக் குறைக்கும். இதனை செட் செய்திட, உங்கள் குரோம் அப்ளிகேஷனைத் திறக்கவும். Menu ஐகான் மீது தட்டி, திரையின் வலது மேலாகச் செல்லவும். சற்றுப் பழைய மாடல் போனாக இருந்தால், போனில் இருக்கும் மெனு (Menu) மற்றும் செட்டிங்ஸ் (Settings) பட்டனை அழுத்தி இதனைப் பெறவும். இங்கு "Bandwidth management" என்ற ஆப்ஷன் கிடைக்கும். அதனைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு "Reduce data usage" என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு இந்த செயல்பாட்டினை இயக்கத் தரப்பட்டிருக்கும் ஸ்விட்சை ஓரமாகத் தள்ளி இயக்க நிலையில் அமைக்கவும். இதனைத் தொடர்ந்து குரோம் பிரவுசர், நம் போனுக்கு வரும் டேட்டாவின் அளவைக் கட்டுப்பாடான நிலையிலேயே வைத்திருக்கும். 
 


ஹோம் ஸ்கிரீன் கட்டுப்பாடு

நம் மொபைல் போனின் வாசல் நமக்குத் தரப்படும் ஹோம் ஸ்கிரீன். இங்கிருந்துதான் எதனையும் தொடங்குகிறோம். எனவே, இதனை எப்போதும் நம் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும். இதற்கென சரியான முறையில் ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தை இயக்கும் நிலைக்குக் கொண்டு வரும் Custom Android launcher ஐ இதற்குப் பயன்படுத்தலாம். இதனை இயக்கிப் பயன்படுத்துகையில், முற்றிலும் மாறுபட்டதாகவும், அதே நேரத்தில் நமக்கு எளிதான ஓர் இயக்க சூழ்நிலையைத் தருவதாகவும் இருக்கும். இதற்கென பல ஆண்ட்ராய்ட் லாஞ்சர்கள் இணையத்தில் கிடைக்கின்றன. இவற்றில் நான் விரும்புவது Nova Launcher என்ற ஒன்றாகும். இதற்கு அடுத்தபடியாக, EverythingMe மற்றும் Terrain Home என்ற அப்ளிகேஷன்களும் கிடைக்கின்றன. இவை புதிய ஹோம் ஸ்கிரீனை நமக்குத் தந்தாலும், நாம் எளிதில் அதனை ட்யூன் செய்து அமைத்திடும் வகையில் இவை அமைகின்றன. இதனால், நாம் மொபைல் போன் அப்ளிகேஷன்களைப் பயன்படுத்துவது எளிதாகிறது.
 


டாஸ்க் ஸ்விட்ச் இயக்க மேம்பாடு

ஏகப்பட்ட அப்ளிகேஷன்களை நீங்கள் பயன்படுத்துபவராக இருந்தால், ஒவ்வொரு முறையும், ஹோம் ஸ்கிரீன் பக்கங்களைத் தள்ளி, தேவையானதைக் கண்டறிந்து இயக்குவது சிரம்மான ஒன்றாக இருக்கும். ஆண்ட்ராய்ட் தரும் Recent Apps என்ற வசதி நமக்கு இதில் உதவி செய்வதாக இருந்தாலும், தர்ட் பார்ட்டி டாஸ்க் மானேஜர் அப்ளிகேஷன்கள், இன்னும் கூடுதலான வசதிகளைத் தரும். Switchr என்ற அப்ளிகேஷன் இந்த வகையில் சிறந்ததாகும். இதனைப் பயன்படுத்துகையில், போனின் டிஸ்பிளே திரையின் மூலையில் இருந்து ஸ்வைப் செய்து, அண்மையில் பயன்படுத்தப்பட்ட அல்லது பொதுவாகப் பயன்படுத்தப்பட்ட அப்ளிகேஷன்கள் பட்டியலைப் பெற்றுப் பயன்படுத்தலாம். மேலும், டிஸ்பிளேயின் எந்த மூலையில் இருந்து ஸ்வைப் செய்திட வேண்டும் என்பதைக் கூட நாம் வரையறை செய்து செட் செய்திடலாம். ஒவ்வொரு அப்ளிகேஷனும் எப்படி நமக்குக் காட்சி அளிக்க வேண்டும் என்பதனைக் கூட அமைத்திடலாம். 


காட்சியை அழகுபடுத்த உங்கள் ஆண்ட்ராய்ட் போன் நீங்கள் பயன்படுத்துகையில், டிஸ்பிளேயுடனும், இல்லாதபோது அதனை இருட்டாக்கியும் வைத்திடும். இந்த வசதி அமைக்கப்படாத போனில், இதனை ஒரு சிறிய அப்ளிகேஷன் கொண்டு அமைக்கலாம். இதன் பெயர் Screebl. இந்த அப்ளிகேஷன், உங்கள் போனில் தரப்பட்டுள்ள அக்ஸிலரோமீட்டர் டூலைப் பயன்படுத்தில் நீங்கள் போனை எப்படி பயன்படுத்துகிறீர்கள் என்று உணர்கிறது. போனைப் பிடித்திருக்கும் நிலை, நீங்கள் அதனை இயக்கிக் கொண்டிருப்பதாகத் தெரிவித்தால், டிஸ்பிளேயினை ஒளியுடன் காட்டும். இல்லையேல், இருட்டாக்கும். இது எவ்வளவு எளிதானது என்பதுடன், மின் சக்தியை வீணாக்காமல் காக்கிறது. மேலும், சில வேளைகளில், நாம் ஸ்கிரீனில் உள்ளதைப் படிக்கும் முயற்சியில் இருக்கையில், ஸ்கிரீனை இருட்டாக்காமல் வைக்கிறது.


தானாக ஒளி கட்டுப்படுத்தும் நிலை

ஸ்மார்ட் போனைப் பொறுத்த வரை, பெரும்பாலான மேம்படுத்துதல் அதன் ஸ்கிரீன் ஒளியைக் கட்டுப்படுத்துவதிலேயே உள்ளது. இது சிஸ்டத்திலேயே தரப்பட்டுள்ள வசதி என்றாலும், மேலும் இதில் சில நகாசு வேலைகளை மேற்கொள்ளலாம். Lux என்னும் அப்ளிகேஷன் இதற்கான வழிகளை நன்கு தருகிறது. திரையின் ஒளி விடும் தன்மையைச் சரியான அளவிலும், தேவைப்படும் நிலையிலும் மட்டும் தருகிறது. இதனால், நம் கண்களுக்குச் சிரமம் ஏற்படுவதில்லை. பேட்டரியின் மின் சக்தியும் பாதுகாக்கப்படுகிறது. பொதுவாக திரைக் காட்சியின் ஒளி வெளிப்பாடுதான், பேட்டரியின் அதிக சக்தியினை எடுத்துக் கொள்வதால், இந்த கட்டுப்பாடு நமக்குத் தேவையான ஒன்றாகும். 
 


கீ போர்ட் மேம்படுத்தல்

பெரும்பாலான ஆண்ட்ராய்ட் போன்களில், நல்ல விர்ச்சுவல் கீ போர்ட் தரப்படுகிறது. இருந்தாலும், பல வேளைகளில், இந்த கீ போர்ட் இப்படி இருந்தால் நன்றாக இருக்குமே என்றுதான் நாம் ஆசைப்படுகிறோம். இதற்கெனவே, பல தர்ட் பார்ட்டி அப்ளிகேஷன்கள் இயங்குகின்றன. Google Play Storeல், மாறுபட்ட விர்ச்சுவல் கீ போர்ட் தரும் தர்ட் பார்ட்டி அப்ளிகேஷன்கள் நிறைய கிடைக்கின்றன. இவற்றில் SwiftKey என்பது சிறப்பான, எளிதான, வசதியான இயக்கத்தினைத் தருவதாக அமைந்துள்ளது. இதில் முன் கூட்டியே முழுச் சொற்களைத் தரும் next-word predictionவசதியைக் கூட நாம் விரும்பும் வகையில் அமைத்துக் கொள்ளலாம். இதே போன்ற மற்ற சிறந்த அப்ளிகேஷன்களைக் குறிப்பிட வேண்டும் என்றால், Swype மற்றும் TouchPal ஆகியவற்றைக் குறிப்பிடலாம். 
 


லாக் ஸ்கிரீனில் கூடுதல் பயன்பாடு

ஆண்ட்ராய்ட் சிஸ்டம், விட்ஜெட்டுகளை (widgets) நம்முடைய ஹோம் ஸ்கீரினில் மட்டுமின்றி, லாக் ஸ்கிரீனிலும் வைத்துக் கொள்ள அனுமதிக்கிறது. இந்த லாக் ஸ்கிரீன் என்பது, நாம் போனின் பவர் பட்டனை அழுத்துகையில் முதலில் நமக்குக் காட்டப்படுவதாகும். லாக் ஸ்கிரீனில், சீதோஷ்ண நிலை குறித்த தகவல், அடுத்து நாம் எடுத்துச் செயல்படுத்த வேண்டிய உறுதி செய்த நிகழ்வுகள் (,upcoming appointments),பேட்டரியின் மின் திறன் அளவு, அண்மைக் காலத்திய செய்தி போன்றவை காட்டப்படும். இவற்றுடன் மேலும் சில லாக் ஸ்கிரீன் விட்ஜெட்டுகளை இணைக்கலாம். இதனால், ஒரு ஸ்வைப்பிலேயே கூடுதல் தகவல்களைக் காண இயலும். இந்த வகையில் அதிக கூடுதல் வசதிகளை அமைக்கலாம். போன் செட்டிங்ஸ் அமைப்பில், Security பிரிவில் சென்று, லாக் ஸ்கிரீனில் விட்ஜெட்டுகள் இயக்கப்பட வேண்டும் என்பதனை இயக்கி வைக்கவும். அதன் பின்னர், உங்களுக்குத் தேவையான தகவல்களைத் தரும் அப்ளிகேஷன்களைத் தேடி அமைக்கவும்.



அறிவிப்புகளைக் கட்டுப்படுத்த

ஆண்ட்ராய்ட் சிஸ்டம் இயங்கும் போன்களில், நோட்டிபிகேஷன் எனப்படும் தகவல் அறிவிக்கைகள் நமக்கு சில நன்மை தரும் தகவல்களை அளிப்பவை ஆகும். ஆனால், அவையே எண்ணிக்கை அதிகமாகும்போது, தேவையற்ற குப்பைகள் சேரும் இடமாகத்தான் போன் திரை காட்சி அளிக்கும். இப்படிப்பட்டவற்றைக் கட்டுப்படுத்த ஆண்ட்ராய்ட் சிஸ்டம் சில கட்டுப்பாட்டு வசதிகளையும் அளிக்கிறது. நோட்டிபிகேஷன்களைத் தரும் அப்ளிகேஷனில் இவற்றைக் கட்டுப்படுத்தும் வசதி அளிக்கப்படவில்லை என்றால், சிஸ்டம் செட்டிங்ஸ் ஐகான் அழுத்தி, Apps என்ற பிரிவிற்குச் செல்லவும். குறிப்பிட்ட அப்ளிகேஷன் பெயரைக் கண்டறியவும். அதில் "Show notifications" என்பதன் அருகேயுள்ள செக் பாக்ஸில் டிக் அடையாளத்தை ஏற்படுத்தவும். இனி, அந்த அப்ளிகேஷன் சார்ந்த அறிவிப்புகள் போனுக்கு வராது. 



முக்கிய மின் அஞ்சல் தகவல் கவனத்திற்கு வர

உங்கள் மொபைல் போனில் உள்ள ஜிமெயில் அப்ளிகேஷனில் செட்டிங்ஸ் பிரிவு செல்லவும். அதில் உங்கள் அக்கவுண்ட் தேர்ந்தெடுக்கவும். அங்கு "Manage labels" என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். அதில் நீங்கள் உருவாக்கிய லேபிள் மீது டேப் செய்திடவும். தொடர்ந்து "Sync messages" என்பதனைத் தேர்ந்தெடுத்து, "Sync: Last 30 days" என்பதற்கு மாற்றவும். இறுதியாக, "Label notifications" என்ற பிரிவிற்குச் சென்று, Sound என்னும் ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கவும். முக்கியமான அஞ்சல் கிடைக்கும்போது, எழுப்பப்பட வேண்டிய ஒலியினைத் தேர்ந்தெடுத்து அமைக்கவும். இப்படியே, நீங்கள் அமைக்கும் ஒவ்வொரு லேபிளுக்கும் அமைக்கலாம்.



திரைக் காட்சி ஸூம் செய்திட

பெரும்பாலான இணைய தளங்கள், மொபைல் போனில் சிறப்பாகப் பார்க்கும் வகையிலும் வடிவமைக்கப்படுகின்றன. அதனாலேயே, அனைவரும் அதில் உள்ள வரிகளை எளிதாகப் படிக்க முடியும் என எண்ண வேண்டாம். பல விஷயங்கள், மிகச் சிறிய எழுத்தில் தான் மொபைல் போன் திரையில் காட்டப்படும். எனவே, திரையை ஸூம் செய்தால் தான், டெக்ஸ்ட் பெரிய அளவில் காட்டப்படும். ஆனால், சில இணைய தளங்கள், இந்த ஸூம் செய்திடும் வசதிக்கு உட்படாமல் வடிவமைக்கப் பட்டிருக்கும்.

இது ஆர்வமுடன் டெக்ஸ்ட்டைப் படிக்க நினைப்பவர்களுக்கு எரிச்சலைத் தரும். இதனைத் தாண்டிட எளிய வழி ஒன்று உள்ளது. குரோம் ஆண்ட்ராய்ட் பிரவுசரில், செட்டிங்ஸ் செல்லவும் அதில் Accessibility என்ற பிரிவிற்குச் செல்லவும். அங்கு "Force enable zoom" என்பதில் உள்ள செக் பாக்ஸில் டிக் அடையாளம் ஒன்றை அமைக்கவும். அவ்வளவு தான். உங்கள் போனின் திரை அமைப்பைப் பொறுத்து, அதனைச் செல்லமாக இரண்டு விரல்களால் கிள்ளினால் திரை சற்று விரிந்து, டெக்ஸ்ட் பெரிதாகக் காட்சி அளிக்கும். கண்களை இடுக்கிக் கொண்டு உற்றுப் பார்க்கும் வேலை எல்லாம் இனி தேவை இருக்காது.

மேலே தரப்பட்டுள்ள குறிப்புகள் அனைத்தையும் நீங்கள் பயன்படுத்த வேண்டும் என்பது அவசியமில்லை. ஆனால், இவை அனைத்துமே, உங்களுக்கு எப்போதாவது தேவையாக இருக்கும் என்பது மட்டும் உண்மை.

கால்சியம் இருக்கும் உணவுகள் - High Calcium Foods

கால்சியம் அதிகம் இருக்கும் 19 உணவுகள்

உடலுக்கு வேண்டிய சத்துக்களில் கால்சியம் மிகவும் இன்றியமையாதது. கால்சியம் சத்து உடலில் குறைவாக இருந்தால், எலும்புகள் ஆரோக்கியமின்றி இருப்பதோடு, இரத்த செல்கள் உருவாவதிலும் பிரச்சனைகள் ஏற்படும். தற்போது நிறைய மக்கள் மூட்டு வலியால் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பதை பார்த்திருப்பீர்கள். இவற்றிற்கு காரணம் உடலில் கால்சியம் சத்தானது மிகவும் குறைவாக இருப்பதால் தான். மேலும் கால்சியம் அதிகம் உள்ள உணவுகளை சரியாக உட்கொள்ளததும் ஒரு வகையில் காரணம். அதுமட்டுமின்றி கால்சியம் உள்ள உணவுகளை மட்டும் சாப்பிட்டால், அனைத்தும் சரியாகிவிடாது. ஏனெனில் கால்சியம் உள்ள உணவுகளை சாப்பிட்டால், கால்சியத்தை உடலில் உறிஞ்சுவதற்கு வைட்டமின் டி சத்தும் மிகவும் அவசியமாகிறது. எனவே கால்சியத்துடன், வைட்டமின் டி உள்ள உணவுகளை சாப்பிட வேண்டும். பொதுவாக கால்சியம் குறைபாடானது ஆண்களை விட பெண்களுக்கு தான் அதிகம் ஏற்படும். ஏனெனில் மாதம் மாதம் பெண்களுக்கு மாதவிடாய் ஏற்படுவதால், அதிலேயே பெரும்பாலான கால்சியம் உடலில் இருந்து வெளியேறிவிடும். மேலும் பிரசவத்தின் போதும் நிறைய் கால்சியமானது போய்விடும். எனவே ஆண்களை விட பெண்கள் கால்சியம் உணவுகளை சாப்பிடுவதில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டியுள்ளது. இப்போது எந்த உணவுகளிலெல்லாம் கால்சியம் சத்து அதிகம் உள்ளது என்பதைப் பார்ப்போமா!!!

பால் 
பாலில் கால்சியம் அதிகம் நிறைந்திருப்பது அனைவருக்குமே தெரியும். அதிலும் பெண்கள் தினமும் ஒரு டம்ளர் பாலில் புரோட்டீன் பொடியை சேர்த்து குடித்தால், ஒரு நாளுக்கு தேவையான கால்சியம் சத்தை பெறலாம்.

தயிர் 
பால் பிடிக்காதவர்கள், தயிரை சாப்பிடலாம். தயிரிலும் பாலில் உள்ள கால்சியத்தின் அளவு உள்ளது.



மத்தி மீன் 
மீன்களில் மத்தி மீன் மிகவும் பிரபலமானது, அத்தகைய மீனில் 33 சதவீதம் கால்சியம் சத்தை தருகிறது. எனவே இதனை வாரத்திற்கு ஒரு முறை சாப்பிட்டு வந்தால், நல்லது.

சீஸ் 
பால் பொருட்களில் ஒன்றான சீஸ் பெண்களுக்கு மிகவும் சிறந்தது. ஏனெனில் சீஸிலும் கால்சியம் அளவுக்கு அதிகமாக நிறைந்துள்ளது.


உலர் அத்திப்பழம் 
அத்திப்பத்தில் இரண்டு வகையான முக்கியமான சத்துக்கள் நிறைந்துள்ளன. அதிலும் பெண்களுக்கு தேவையான முக்கியமான சத்துக்கள் உள்ளது. அது கால்சியம் மற்றும் இரும்புச்சத்து. எனவே இதனை தினமும் 2-3 துண்டுகள் சாப்பிட்டு வருவது நல்லது.


பச்சை இலைக்காய்கறிகள் 
பால் பொருட்களைத் தவிர, கால்சியம் சத்தானது பச்சை இலைக் காய்கறிகளில் நிறைந்துள்ளது. அதிலும் பசலைக் கீரை, ப்ராக்கோலி போன்றவற்றை அளவுக்கு அதிமான அளவில் கால்சியம் சத்து நிறைந்துள்ளது.


கடல் சிப்பி 
பொதுவாக அனைத்து கடல் உணவுகளிலும் கால்சியம் ஆக்சலேட் என்னும் பொருள் உள்ளது. ஆனால் இதனை ஆண்கள் அதிக அளவில் சாப்பிட்டால், அவர்களுக்கு சிறுநீரகக் கற்கள் வந்துவிடும். பெண்கள் இதை சாப்பிட்டால், அதிகப்படியான கால்சியத்தை பெறலாம்.


பாதாம் 
பாதாமில் வைட்டமின் ஈ சத்து மட்டுமின்றி, 70-80 சதவீத கால்சியம் நிறைந்துள்ளது. எனவே தினமும் ஒரு கையளவு பாதாமை சாப்பிட்டு, உடலில் கால்சியத்தை அதிகரியுங்கள்.

இறால் 
இறாலில் கால்சியம் அதிகம் உள்ளது. ஆனால் அதை அளவுக்கு அதிகமாக வேக வைத்தால், அதில் உள்ள கால்சியம் போய்விடும். எனவே தீயை குறைவில் வைத்து, அளவுக்கு அதிகமாக வேக வைத்துவிடாமல் சாப்பிட வேண்டும்.


எள் 
பொதுவாக எள்ளை அதிகமாக சாப்பிட மாட்டோம். ஆனால் ஒரு டீஸ்பூன் எள்ளில், ஒரு டம்ளர் பாலில் இருக்கும் கால்சியம் சத்தானது நிறைந்துள்ளது.


பிரேசில் நட்ஸ் 
6 பிரேசில் நட்ஸில் 45 மில்லி கிராம் கால்சியம் சத்து நிறைந்துள்ளது. இந்த நட்ஸிலும் அதிகமான புரோட்டீன் உள்ளது.


உலர்த்திய மூலிகைகள் 
நிறைய உலர்த்திய மூலிகைகளிலும் கால்சியம் சத்துக்கள் அதிகமாக உள்ளன. எப்படியிருப்பினும் இத்தகைய மூலிகைகளை அப்படியே சாப்பிட முடியாது. ஆனால் அவற்றை சூப், குழம்பு போன்றவற்றில் தினமும் சிறிது சேர்த்து சாப்பிட்டால் நல்லது.


டோஃபு 
டோஃபு என்பது சோயா பாலினால் உருவான ஒரு வகையாக சீஸ். பொதுவாக சோயா பாலிலும் கால்சியம் அதிகம் இருக்கும். எனவே இந்த டோஃபுவிலும் நிச்சயம் கால்சியம் அதிகம் இருக்கும்.


ஆரஞ்சு 
சிட்ரஸ் பழங்களில் ஒன்றான ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி மட்டுமின்றி, கால்சியம் சத்தும் அடங்கியுள்ளது.



சாலமன் 
சாலமன் மீனில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் இருப்பதோடு, இந்த மீன் கடல் நீரில் உள்ள கனிமச்சத்துக்களை உறிஞ்சிக் கொள்வதால், இதனை முள்ளோடு சாப்பிட வேண்டும். இதில் கால்சியம் குறைவாக இருப்பினும், உடலுக்கு வேண்டிய மற்ற அனைத்து சத்துக்களையும் பெறலாம்.


சோயா பால் 
சோயா பாலில் சாதாண பாலை விட அதிக அளவில் கால்சியம் இல்லாவிட்டாலும், ஒரு அவுண்ஸ் பாலில் 300 மில்லி கிராம் கால்சியம் சத்தை பெறலாம்.

ஓட்ஸ் 
ஓட்ஸை அதிகம் சாப்பிடுவதால், இதயம் ஆரோக்கியமாக இருப்பதோடு, நார்ச்சத்தும் அதிகம் உள்ளது. அதேசமயம் இதில் சில கால்சியம் சத்தும் உள்ளடங்கியுள்ளது. எனவே பெண்களுக்கு, இது ஒரு சிறந்த காலை உணவாக இருக்கும்.


அறுகீரை (Arugula) 
இது ஒருவகையான கீரை வகைகளுள் ஒன்று. இதனை பொதுவாக சாலட்டில் தான் பயன்படுத்துவார்கள். இந்த கீரையில் கால்சியம் அதிகம் நிறைந்துள்ளதால்,. இதனை அடிக்கடி சாப்பிடுவது நல்லது.


வெள்ளை காராமணி 
பொதுவாக பீன்ஸில் கால்சியம் அதிகம் இருக்கும் என்று கேள்விபட்டிருக்கமாட்டோம். ஆனால் இதிலும் ஓரளவு கால்சியம் நிறைந்துள்ளது. அதிலும் 1/2 கப் வெள்ளைக் காராமணியில் 100 மில்லி கிராம் கால்சியம் சத்து நிறைந்துள்ளது.

உடல் எடையை குறைக்க உதவும் உணவுகள் - Secret weight loss foods



உடல் எடையை குறைக்க உதவும் சூப்பர் உணவுகள்


தற்போது அனைவருக்குமே உடல் பருமன் பிரச்சனை உள்ளது. இத்தகைய உடல் எடையை குறைப்பதற்கு பலர் கடுமையான உடற்பயிற்சிகள் மற்றும் டயட் என்று சில சமயங்களில் சாப்பிடாமல் இருப்பார்கள். இப்படியெல்லாம் நடந்தால், எந்த ஒரு பலனும் கிடைக்காது. எனவே எப்போதும் மிகவும் ஸ்மார்ட்டாக செயல்பட வேண்டும்.

ஆம், எப்போதும் கடுமையான உடற்பயிற்சி மற்றும் டயட்டை மேற்கொண்டால், உடலுக்கு வேண்டிய சத்துக்களானது கிடைக்காமல், உடல் மிகவும் சோர்வடைவிடும். இதனால் உடல் எடை குறைகிறதோ இல்லையோ, பல உடல்நலப் பிரச்சனைகளை நிச்சயம் சந்திக்க நேரிடும். எனவே அளவான உடற்பயிற்சியுடன், ஆரோக்கியமாக சாப்பிட்டால், உடல் எடையை நிச்சயம் குறைக்கலாம். அதிலும் இதுவரை எத்தனையோ உடல் எடையை குறைக்கும் உணவுப் பொருட்களைப் பார்த்திருப்போம்.

ஆனால், இப்போது பார்க்கப்போவது பலரும் நினைத்துப் பார்க்காத உடல் எடையைக் குறைக்கும் சில உணவுப் பொருட்களைத் தான். இத்தகைய உணவுப் பொருட்களை சாப்பிடுவதோடு, அத்துடன் தினமும் சரியான அளவில் உடற்பயிற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும். ஏனெனில் உடல் எடையைக் குறைப்பதற்கு உணவுகள் மட்டும் உதவாது. ஆகவே உடற்பயிற்சியையும் பின்பற்றுங்கள். சரி, அந்த உணவுப் பொருட்கள் என்னவென்று தெரிந்து கொள்ள ஆவலாக இருந்தால், கீழே படித்துப் பாருங்கள்...


1 காளான் 
உடல் எடையை வேகமாக குறைக்க உதவும் உணவுப் பொருட்களில் ஒன்று காளான். இந்த காளானை உணவில் அதிகம் சேர்ந்து வந்தால், இதில் உள்ள குறைவான கலோரி மற்றும் கொழுப்புக்களால், உடல் எடை அதிகரிக்காமல் இருக்கும்.



2 முட்டையின் வெள்ளைக்கரு 
முட்டையின் வெள்ளைக்கருவில் கார்போஹைட்ரேட் குறைவாகவும், வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள் மற்றம் இதர ஊட்டச்சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது. எனவே தினமும் உடற்பயிற்சி செய்து முடித்தப் பின்னர், முட்டையின் வெள்ளைக்கருவை சாப்பிட்டால், உடலின் சக்தி அதிகரிப்பதோடு, நீண்ட நேரம் பசிக்காமலும் தடுத்து, உடல் எடையை கட்டுப்பாட்டுடன் வைக்க உதவும்.



3 ஆப்பிள் 
தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால், மருத்துவரை பார்க்க வேண்டிய அவசியமே இருக்காது. அதே ஆப்பிளை தினமும் சாப்பிட்டு வந்தால், உடல் எடையையும் கட்டுப்பாட்டுடன் வைக்கலாம். ஏனெனில் இதில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், அது உடலில் தங்கும் தேவையில்லாத கொழுப்புக்களை கரைத்து, உடல் பருமன் அதிகரிப்பதை தடுக்கும்.



4 பாகற்காய் 
பாகற்காய் நீரிழிவு நோயாளிகளுக்கு மட்டுமின்றி, உடல் பருமனால் அவஸ்தைப்படுவோருக்கும் மிகவும் நல்லது. எப்படியெனில், பாகற்காயை சாப்பிட்டால், அதில் உள்ள சத்துக்களானது, உடலில் தங்கும் தேவையற்ற கொழுப்புக்கள் தங்குவதை கரைப்பதோடு, கலோரிகளையும் எரித்துவிடும்.



5 காலிஃப்ளவர் 
உடல் எடையை குறைக்கப் பயன்படும் உணவுகளில் காலிஃப்ளவரும் ஒன்று. அதிலும் அந்த காலிஃப்ளவரை வேக வைத்து சாப்பிட்டால் மிகவும் நல்லது. ஏனெனில் அதில் குறைவான கலோரியும், அதிகமான வைட்டமின்களும் நிறைந்துள்ளன. மேலும் இதனை சாப்பிட்டால், அடிக்கடி பசி ஏற்படாமலும் இருக்கும்.



6 பட்டை 
பட்டையை உணவில் சேர்த்தால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டுடன் இருப்பதோடு, உடல் எடையை குறைக்கவும் உதவும். எனவே இநத் மசாலாப் பொருளை உணவில் அதிகம் சேர்த்துக் கொண்டால், நல்ல பலன் கிடைக்கும்.



7 மிளகாய் 
அனைவருக்குமே காரம் என்றால் மிகவும் பிடிக்கும். கார உணவுகள் கூட ஒரு வகையில் உடல் எடையைக் குறைக்க உதவியாக இருக்கும். அதிலும் குறிப்பாக சிவப்பு மிளகாயை உணவில் சேர்த்து சமைத்து சாப்பிட்டால், அந்த மிளகாயில் உள்ள பொருளானது, உடலில் தங்கியிருக்கும் கொழுப்புக்களை கரைத்து, டாக்ஸின்களை வெளியேற்றி, உடல் எடை குறைய உதவியாக இருக்கும்.



8 முள்ளங்கி 
முள்ளங்கியை வேக வைத்து சாப்பிட்டால், அதிலுள்ள நார்ச்சத்துக்களானது அப்படியே கிடைத்து, உடலில் உள்ள கெட்ட கொழுப்புக்களானது கரைக்கப்படுவதோடு, நீண்ட நேரம் பசியெடுக்காமலும் இருக்கும்.



9 டார்க் சாக்லெட் 
அனைவரும் சாக்லெட்டில் கலோரிகள் அதிகம் உள்ளது என்று சாப்பிடுவதில்லை. ஆனால் உண்மையில் டார்க் சாக்லெட்டை அளவாக சாப்பிட்டால், உடல் எடை குறைவதோடு, இதயத்தையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முடியும்.



10. பச்சை பயறு 
அனைத்து சமையலறைகளிலும் கிடைக்கக்கூடிய ஒரு வைட்டமின் நிறைந்த உணவுப் பொருள் தான் பச்சை பயறு. உடல் எடையை குறைக்க நினைப்போர், உடற்பயிற்சியை மேற்கொள்வதோடு, பச்சை பயறு அதிகம் சாப்பிட்டு வந்தால், நல்ல பலன் கிடைக்கும். மேலும் இது செரிமானத்திற்கும் மிகவும் நல்லது.

சிக்ஸ் பேக் வைக்க உதவும் உடற்பயிற்சிகள் - best exercises to get six pack abs

இன்றைய காலகட்டத்தில், அழகான பெண்களை கவருவதற்கு சிக்ஸ் பேக்கை விட சிறந்த வழி இல்லை. இது பெண்களைக் கவருவதற்கு மட்டுமல்லாமல், ஒருவனுக்கு வாழ்வில் நம்பிக்கையையும், உறுதியையும் வழங்குகிறது. ஆனால் சிக்ஸ் பேக், எளிதான விஷயம் அல்ல. இது பெரும்பாலும் சினிமா நட்சத்திரங்களால் மட்டுமே செய்ய முடிகிறது. ஒரு குளத்தைச் சுற்றி சிக்ஸ் பேக்குடன் நடந்து வந்தால் விரும்பிய பெண்ணை எளிதில் கவர்ந்து விட முடியும்.

சிக்ஸ் பேக்கை அடைவதற்கு உடல் அளவிலும், மனதளவிலும் பல முயற்சிகளை செய்ய வேண்டும். அதற்கு முதலில் வாழ்க்கையில் முக்கிய அம்சங்களான உணவு முறை மற்றும் பழக்கவழக்கங்களை மாற்றி அமைக்க வேண்டும். துரித உணவுகளை தவிர்க்க வேண்டும். கார்போஹைட்ரெட் உணவுகளுக்கு பதிலாக, நிறைந்த புரதம், குறைந்த கொழுப்பு மற்றும் நார்ச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். சுவை மிகுந்த ஆலு பரோட்டா மற்றும் பர்கர் போன்றவற்றை தவிர்ப்பது எளிதான விஷயம் அல்ல.

ஆரோக்கியமான வாழ்க்கைமுறை மற்றும் உணவு முறையை பின்பற்றி தான், சிக்ஸ் பேக் பெறுவது நல்லது. சரியான வாழ்க்கை முறை மற்றும் உணவு முறையை பின்பற்றினால் சிக்ஸ் பேக் ஒரு ஆரோக்கியமான உடற்பயிற்சியாக அமையும். ஜிம்முக்கு சென்றோ அல்லது வீட்டிலேயே உடற்பயிற்சிகளை செய்வதன் மூலமோ, உங்கள் அடிவயிற்றை கடினமாகவும், திண்மையாகவும், கட்டுடனும் வைத்திருக்க முடியும்.

சிக்ஸ் பேக் வைப்பதற்கு உதவியாக இருக்கும் உடற்பயிற்சிகள்!!!

வயிற்றிற்கு செய்யப்படும் உடற்பயிற்சிகளை தொடர்ந்து, தினசரி சரிவர செய்வதன் மூலம், அபூர்வமான மற்றும் அருமையான சிக்ஸ் பேக்கை பெறலாம்.
1. காலை மடக்கி கையை தூக்கும் பயிற்சி
காலை மடக்கி கையை தூக்கும் பயிற்சி நேராக படுத்து முழங்காலை மடித்து, கைகளை உங்களுக்கு பின்னால் நேராக நீட்டவேண்டும். பிறகு நீட்டிய கைகளை தலைக்கு மேல் தூக்க வேண்டும். இது பாரம்பரியமான உடற்பயிற்சி. அசைவு கொடுக்கும் போது, மெதுவாகவும், கட்டுப்பாட்டோடும் செய்ய வேண்டும்.

2. தலைகீழான உடற்பயிற்சி 
உங்கள் பின்னால் சாய்ந்து கையை உங்கள் தலைக்கு பின்னால் வையுங்கள். பிறகு முழங்காலை உங்கள் மார்பை நோக்கி, 90 டிகிரி வளைந்து வரும் வரை கொண்டு வாருங்கள். பாதம் நேராக இருந்தாலும், சாய்வாக இருந்தாலும் பரவாயில்லை. உங்கள் வயிற்று சுருக்கத்தின் மூலம் இடையை தரையில் வலுபடுத்தி, உங்கள் காலை மேல் நோக்கி நேராக தூக்கவும். பிறகு காலை இறக்கி அதன் பழைய இடத்தில் வைக்க வேண்டும், ஆனால் உங்களுடைய பாதம் தரையில் படாமல் இருக்க வேண்டும். இது உங்கள் வயிற்றை தொடர்ந்து நன்றாக செயல்பட உதவுகிறது.

3. ஜேக்நைஃப் நிலை 
தரையில் பாயை விரித்து, பின்னால் சாய்ந்து உங்கள் கைகளை தலைக்கு மேல் நீட்டவும். பிறகு ஒரே நேரத்தில் உங்கள் கையையும், காலயும் உயரே தூக்க வேண்டும். உங்கள் கை விரல் நுனி, கால் விரல்களை தொடும் வரை செய்ய வேண்டும். பிறகு பழைய நிலைக்கு கொண்டுவந்து விடவும்.

4. தண்டால் 
உங்கள் கைகளை உங்கள் தோள்பட்டையை சுற்றி 10 இன்ச் தூரத்தில் வைக்கவும். ஷூவில் உள்ள பாத நுனி, தரையில் இருக்க வேண்டும். அப்போது உங்கள் பின்பகுதியை நேராக வைத்துக் கொண்டு,இயல்பாக மூச்சு விட முயல வேண்டும்.

5. சைக்கிள் ஆசனம் 
இந்த ஆசனம் உங்கள் உடலின் பின்புறம் மற்றும் பக்கவாட்டினை கருத்தில் கொள்கிறது. மேலும் மேல் மற்றும் அடி வயிற்று பகுதியையும் இலக்காக கொண்டுள்ளது. மிருதுவான பரப்பளவில் படுத்து (யோகா விரிப்பு) சைக்கிளில் செய்வதை போல பெடலிங்கை காற்றில் செய்ய வேண்டும். மாறுதலுக்கு உங்கள் கணுக்காலை நோக்கி உங்கள் தோள் பட்டையை உயர்த்தவும். இரண்டு பக்கமும் சரிசமமாக இதை செய்ய வேண்டும். இரண்டையும் 12 முறை செய்வது நல்லது.

6. தலை அல்லாமல் உடம்பை மட்டும் சுழற்றும் பயிற்சி 
உட்காரும் நிலையில் வைத்து டம்பெல்ஸ் அல்லது மருத்துவ பந்தை வைத்துக் கொண்டு உடற்பயிற்சி செய்ய வேண்டும். அப்போது முழங்காலை மடக்கி, பாதங்களை தரையில் வைக்க வேண்டும். அடிவயிற்றை இறுக்கிக் கொண்டு, சிறிது பின்னால் சாய வேண்டும். முழங்கையை மடக்கி, எடையை உங்களுக்கு உட்புறமாக வைத்துக் கொள்ள வேண்டும். பின், பக்கத்திற்கு பக்கம் மாற்ற வேண்டும். ஒவ்வொரு சுழற்சியின் போதும், அந்தந்த நிலையில் சிறிது நேரம் நிலைத்து இருக்க வேண்டும்.


=================================