விண்டோஸ் சிஸ்டத்தில் டாகிள் கீ (Toggle Key) என ஒரு பயன்பாடு உள்ளது. கீ ஒன்றை அழுத்திவிட்டால், தொடர்ந்து ஒரு பயன்பாடும், மீண்டும் அதனை அழுத்தினால், முன்பிருந்த பயன்பாடும் கிடைக்கும். எடுத்துக் காட்டாக, கேப்ஸ் லாக் கீயினைச் சொல்லலாம். இதனை ஒருமுறை அழுத்திவிட்டால், தொடர்ந்து ஆங்கிலத்தில் பெரிய எழுத்துகளாகவே கிடைக்கும். மீண்டும் அழுத்தி விட்டால், வழக்கம் போல சிறிய எழுத்துகள் கிடைக்கும். குறிப்பிட்டபடி செட் செய்தால், இதனை அழுத்தும் போதும், நீக்கும் போதும், வேறுபாடான ஒலி எழுப்பி, சிஸ்டம் நம்மை எச்சரிக்கும்.
ஒரு சிலர், ஏன் இதனை மற்ற கீகளிலும் செயல்படும்படி செய்யக் கூடாது. குறிப்பாக, ஷிப்ட், ஆல்ட் மற்றும் கண்ட்ரோல் கீகளை அமைக்க முடியுமா? என்று கேட்கின்றனர். இந்த கீகளை இவ்வாறு அமைப்பது, சீரான பயன்பாட்டினைத் தரும் செயலாக இருக்க முடியாது. இருப்பினும், எப்படி இவற்றை டாகிள் கீகளாக அமைக்க முடியும் எனப் பார்க்கலாம்.
விண்டோஸ் அமைப்பில் ஸ்டிக்கி கீ (Sticky Keys) என்று ஒரு அமைப்பு உண்டு. இதனை இயக்கித்தான் கீ பயன்பாட்டினை டாகிள் கீயாக அமைக்கலாம். ஸ்டிக்கி கீ பயன்பாட்டினை எப்படி செயல்பாட்டிற்குக் கொண்டு வருவது எனப் பார்க்கலாம். முதலில் கண்ட்ரோல் பேனலைத் திறக்கவும். இது Classic Viewவில் இருப்பதை உறுதி செய்து கொண்டு, அனைத்து கண்ட்ரோல் பேனல் ஐகான்களும் காட்டப்படுகின்றனவா என்று பார்க்கவும். இந்த வியூவில் இல்லை என்றால், கண்ட்ரோல் பேனலின் இடது பக்கப் பிரிவில் சென்று, Switch to Classic View என்ற டேப்பினை அழுத்தி, இந்த வியூவிற்குக் கொண்டு வரவும்.
அடுத்து Accessibility என்பதனைத் திறக்கவும். இப்போது Accessibility ஆப்ஷன்ஸ் என்ற டயலாக் பாக்ஸ் திறக்கப்படும். இனி கீ போர்ட் டேப்பில் அழுத்தி, Use Sticky Keyss என்ற செக் பாக்ஸினைத் தேர்ந்தெடுக்கவும். அடுத்து Settings. என்ற இடம் பெற S என்பதனை அழுத்தவும். ஸ்டிக்கி கீ டயலாக் பாக்ஸ் திறக்கப்படும். அந்த டயலாக் பாக்ஸில் கீழ்க்கண்ட வசதிகள் தரப்பட்டிருக்கும். Use shortcut செக் பாக்ஸ் கிடைக்க U அழுத்தவும். இதனை அழுத்திவிட்டால், ஷிப்ட் கீயை ஐந்து முறை அழுத்தி, ஸ்டிக்கி கீஸ் இயக்கத்தினைத் தொடங்கவும் நிறுத்தவும் இயலும்.
P அழுத்தினால், Press modifier key யை இருமுறை அழுத்த செக் பாக்ஸ் லாக் செய்யப்படும். இதன் மூலம், செயல்பாட்டினை மாற்றும் கீயை (Shift, Ctrl, Alt, orWin) நாம் லாக் செய்திட முடியும். இந்த கீகளை இருமுறை தொடர்ந்து அழுத்துவதன் மூலம் இந்த செயல்பாடு நடைமுறைக்கு வரும். T கீ அழுத்தினால், Turn Sticky Keys off if two keys are pressed at once செக் பாக்ஸ் தேர்ந்தெடுக்கப்படும். இதன் மூலம், ஸ்டிக்கி கீகளின் இயக்கத்தினை நிறுத்த முடியும். மாற்று பயன்பாடு தரும் கீகளான Shift, Ctrl, Alt, அல்லது Win key கீகளில் ஒன்றுடன், இன்னொரு கீயுடன் சேர்த்து அழுத்துகையில், ஸ்டிக்கி கீ இயக்கம் நிறுத்தப்படும்.
M கீ அழுத்த, Make sounds when modifier key is pressed என்ற செக் பாக்ஸ் தேர்ந்தெடுக்கப்படும். மாற்று செயல்பாட்டினைத் தரும் மாடிபையர் கீ, (Shift, Ctrl, Alt, அல்லது Win key கீ) இயக்கத்தைத் தொடங்கவோ, அல்லது நிறுத்தவோ அழுத்தப்படுகையில், ஒலி ஒன்று எழுப்பப்படும். தொடங்கும்போது ஒரு வகை ஒலியும், செயல்பாடு நீக்கப்படும்போது இன்னொரு வகை ஒலியும் எழுப்பப்படும். S என்ற கீ அழுத்த, Show Sticky Keys status on screen என்ற செக் பாக்ஸ் தேர்ந்தெடுக்கப்படும். ஸ்டிக்கி கீ செயல்பாடு இயக்கத்தில் இருக்கையில், ஸ்டிக்கி கீஸ் ஐகான் டாஸ்க் பாரில் காட்டப்படும்.