Lord Muruga 108 Potries – திருமுருகன் 108 போற்றி

திருமுருகன் 108 போற்றி
தனலாபம், பூமிலாபம், எதிரிகளிடம் வெற்றி,
ரோஹ நிவாரணம், செவ்வாய் தோஷ நிவர்த்தி
திருமணம் போன்றவைகளுக்கு செவ்வாய்க்கிழமை
தோறும் ஆறுமுகத்துடன் உள்ள முருகனை
வள்ளி தெய்வானையுடன் மனதில் உருவகித்து
இந்த போற்றியை பாராயணம் செய்ய வாழ்வில்
வளம் பெறலாம்.
ஓம் அழகா போற்றி
ஓம் அறிவே போற்றி
ஓம் அரன் மகனே போற்றி
ஓம் அயன்மால் மருகா போற்றி
ஓம் சக்திவேலவா சரவணா போற்றி
ஓம் முக்தி அருளும் முருகா போற்றி
ஓம் பன்னிருகை வேலவா போற்றி
ஓம் பவழ வாய் சிரிப்பு பாலகா போற்றி 8
ஓம் ஆறிரு தடந்தோள் போற்றி
ஓம் ஆறெழுத்து மந்த்ரம் போற்றி
ஓம் இடும்பனை வென்றவனே போற்றி
ஓம் இடர் களைவோனே போற்றி
ஓம் உமையவள் மகனே போற்றி
ஓம் உலக நாயகனே போற்றி
ஓம் ஐயனே போற்றி அருளே போற்றி
ஓம் ஐங்கரன் தம்பியே போற்றி 16
ஓம் ஓம்கார சொருபனே போற்றி
ஓம் மூலப்பொருளே குகனே போற்றி
ஓம் ஓதுவார்க் கினியனே போற்றி
ஓம் ஓங்காரத்துள் வளர் ஒளியே போற்றி
ஓம் திருவடி தொழுதிட அருள்வாய் போற்றி
ஓம் குருவடிவான குருவின் உருவே போற்றி
ஓம் பக்தர்கள் போற்றும் பழம் நீ போற்றி
ஓம் சித்தர்கள் வசமான செவ்வேள் போற்றி 24
ஓம் தேவர்கள் சேனைத் தலைவா போற்றி
ஓம் தேவகுஞ்சரி மணாளா போற்றி
ஓம் வெண்நீறணியும் விசாகா போற்றி
ஓம் கண்ணின் மணியே கனியே போற்றி
ஓம் தண்டபாணி எம் தெய்வமே போற்றி
ஓம் குண்டல மொளிரும் சுந்தரா போற்றி
ஓம் வேதப் பொருளே வேந்தே போற்றி
ஓம் அருந்தமிழ் வளர்த்த ஐயா போற்றி 32
ஓம் செந்தில் உறையும் ஸ்கந்த போற்றி
ஓம் பழனி பதிவாழ் பாலக போற்றி
ஓம் இருளிடர் போக்கும் பகலவா போற்றி
ஓம் இன்பமாம் வீடருள் இறைவா போற்றி
ஓம் அன்பின் உருவமே எம்அரசே போற்றி
ஓம் ஔவைக் கருளியவனே போற்றி
ஓம் சேந்தா குறிஞ்சி வேந்தா போற்றி
ஓம் கந்தா கடம்பா கார்த்திகேயா போற்றி 40
ஓம் கருணாகரனே போற்றி
ஓம் கதிர் வேலவனே போற்றி
ஓம் மூலப்பொருளே முருகா போற்றி
ஓம் சூரனுக் கருளிய சேனாபதியே போற்றி
ஓம் குன்று தோறாடும் குமரா போற்றி
ஓம் அறுபடை வீடுடையவா போற்றி
ஓம் கார்த்திகை மைந்தனே போற்றி
ஓம் கந்தசஷ்டி நாயக போற்றி 48
ஓம் இதயக் கோயிலில் இருப்பாய் போற்றி
ஓம் பக்தர்தம் பகை ஒழிப்பவனே போற்றி
ஓம் மகா சேனனே போற்றி
ஓம் மயில் வாகனனே போற்றி
ஓம் வடிவேலுடனே வருவாய் போற்றி
ஓம் அடியார் துயரம் களைவாய் போற்றி
ஓம் வளமான வாழ்வு தருவாய் போற்றி
ஓம் வள்ளி தெய்வானை மணாளா போற்றி 56
ஓம் செஞ்சுடர் மேனிச் செவ்வேள் போற்றி
ஓம் மலைமகட் கிளைய மகனே போற்றி
ஓம் அமிர்தாம் தமிழின் தலைவா போற்றி
ஓம் தமிழர் தம் கருணை மிகு இறைவா போற்றி
ஓம் ஆடும் அயில்வேல் அரசே போற்றி
ஓம் வந்தருள் செய் வடிவேலவா போற்றி
ஓம் கலியுக வரதா கந்தா போற்றி
ஓம் கவலைக் கடலை களைவோய் போற்றி 64
ஓம் தந்தைக்கு மந்த்ரம் உரைத்தவா போற்றி
ஓம் எந்தனுக்கு இரங்கி அருள்வாய் போற்றி
ஓம் சைவம் வளர்த்த சம்பந்தா போற்றி
ஓம் சரவணபவ சண்முகா போற்றி
ஓம் வேடர் தம் கொடி மணாளா போற்றி
ஓம் வனத்தில் வேடனாய் வந்தாய் போற்றி
ஓம் புனத்தினில் ஆண்டியாய் வந்தவா போற்றி
ஓம் தேன்திணைமா நெய்வேத்யா போற்றி 72
ஓம் தெவிட்டா இன்பமே தென்றலே போற்றி
ஓம் தேவாதி தேவனே தெய்வமே போற்றி
ஓம் போகர் நாதனே பொலிவே போற்றி
ஓம் போற்றப் படுவோனே பொருளே போற்றி
ஓம் புண்ணிய மூர்த்தியே வரதா போற்றி
ஓம் யோக சித்தியே அழகே போற்றி
ஓம் பழனியாண்டவனே பாலகா போற்றி
ஓம் தென்பரங் குன்றோனே தேவா போற்றி 80
ஓம் கருணைபொழி போருர்க் கந்தா போற்றி
ஓம் அருணகிரிக் கன்பு அருளினை போற்றி
ஓம் குறிஞ்சி நிலக் கடவுளே போற்றி
ஓம் குறுமுனி தனக்கருள் குருவே போற்றி
ஓம் தணிகாசலம் வுறை சண்முகா போற்றி
ஓம் சிக்கல் மேவிய சிங்காரா போற்றி
ஓம் நக்கீரர்க் கருள் நாயகா போற்றி
ஓம் விராலி மலையுறு வேலவா போற்றி 88
ஓம் திருக்கழுக் குன்றின் செல்வா போற்றி
ஓம் மணம்கமழ் கடம்ப மலையாய் போற்றி
ஓம் குன்றக்குடி அமர் குகனே போற்றி
ஓம் குமரகுரு புகழ் அழகா போற்றி
ஓம் கதிர் காமத்துறை கடவுளே போற்றி
ஓம் துதிபுரி அன்பென் துணையே போற்றி
ஓம் பழனிப் பதிவாழ் பண்டித போற்றி
ஓம் செந்தூர் பதிவாழ் சுந்தரா போற்றி 96
ஓம் மருதாசல மூர்த்தியே மகிழ்வே போற்றி
ஓம் கந்தாஸ்ரமம் நிறை கந்தா போற்றி
ஓம் பழமுதிர்ச் சோலைப் பதியே போற்றி
ஓம் பத்துமலை முத்துக்குமரா போற்றி
ஓம் ஒளவையின் பைந்தமிழ் கேட்டவா போற்றி
ஓம் அருமையின் எளிய அழகே போற்றி
ஓம் இரு மயில் மணந்த ஏறே போற்றி
ஓம் இருள்சேர் இருவினை நீக்குவாய் போற்றி 104
ஓம் நீங்காப் புகழுடை நிமலா போற்றி
ஓம் திருப் புகழ் விருப்புடைத் தேவா போற்றி
ஓம் அருட்பெரும் ஜோதி ஆண்டவா போற்றி
ஓம் போற்றி …போற்றி … ஜெய ஜெய வேலவா போற்றி 108
முருகா, ஸ்கந்தா, சண்முகா இன்னல்கள் நீக்கி
நின்னைச்சரணடைவோருக்கு எல்லா நலமும்
வளமும் தந்தருள்வாய் ஆறுபடையப்பா….குமரா…உன் திருவடி தொழுதனம் போற்றியே…..

Mandras – மந்திரம்

நம்மில் அனைவருக்கும் ஏதாவது ஒரு வகையில் நம்பிக்கை இருக்கும்.  அப்படி நாம் நம்பும் ஒரு விஷயம் மந்திரம், மாயவித்தை ஆகும்.  அதன் சில அடிப்படைகளை பார்போம் :
அஸ்டகர்மம் 
எட்டு வித கர்மங்ககளை (செயல்களை) குறிக்கும், அதாவது மாந்திரீக சக்தி மூலம் நாம் எட்டு விதமான அஷ்டமசித்துகளை பெறலாம் என்று கூறப்படுகிறது, அவை
  1. வசியம்
  2. மோகனம்
  3. ஆகர்சணம்
  4. தம்பனம்
  5. பேதனம்
  6. வித்வேசணம்
  7. உச்சாடனம்
  8. மாரணம்
என்ற எட்டு வித (அஸ்டகர்மம்.) செயல்களையும் செய்யலாம்.
மந்திரங்கள்
வசியம் – ஓம் யநமசிவ அரிஓம் ஐயும் கிலியும் சுவாகா.
இது மற்றவர்களைத் தன் வசப்படுத்தல்.
மோகனம் – ஓம் மசிவயந கிலியும் சவ்வும் ஸ்ரீயும் சுவாகா.
இது பிறரை தன்மீது மோகம் கொள்ளச் செய்தல்.
தம்பனம் – ஓம் நமசிவய ஐயும் கிலியும் சவ்வும் சுவாகா.
இது எந்தவொரு இயக்கத்தையும் அப்படியே ஸ்தம்பிக்கச் செய்வது.
உச்சாடனம் – ஓம் வயநமசி ஸ்ரீயும் அரிஓம் ஐயும் சுவாகா.
இது தீய சக்திகள் அனைத்தையும் தன் இடம் விட்டு விரட்டுவதாகும்.
ஆக்ருசணம் – ஓம் வசிமநய ஸ்ரீயும் சவ்வும் கிலியும் சுவாகா.
இது துர் தேவதைகளை தன்முன் பணிய வைப்பது.
பேதனம் – ஓம் யவசிமந அரிஓம் ஸ்ரீயும் சவ்வும் சுவாகா.
இது சுயநினைவற்றுப் பேதலித்துப் போகச் செய்வது.
வித்துவேடணம் – ஓம் நமசிவய ஐயும் கிலியும் ஸ்ரீயும் சுவாகா.
இது ஒருவருக்கொருவர் பகையை உண்டாக்கிப் பிரிப்பது.
மாரணம் – ஓம் சிவயநம சவ்வும் ஸ்ரீயும் அரிஓம் சுவாகா.
இது உயிர்கள் அனைத்திற்கும் கேடு விளைவிப்பது.
மாந்திரீகத்தின் அட்டமா சித்திகளை பெற விரும்புபவர்கள், மேற்கூறிய மந்திரங்களை இலட்சம் முறை மனதில் உருஏற்றிக்கொள்ள வேண்டும், இந்த மந்திரத்தை உச்சாடனம் பண்ணும் போது அமரும் ஆசனம் எந்த மரத்தில் செய்த  பலகையில் அமர்ந்தால் சிறப்பானதாக இருக்கும் என்று புலிப்பாணிச்சித்தர் பின் வருமாறு குறிப்பிடுகிறார்.
  • பலா பலகை – தம்பனம்
  • மாம் பலகை – மோகம்
  • வில்வம் – வசியம்
  • பேய்த்தேத்தான் – பேதனம்
  • எட்டிப்பலகை – வித்துவேடணம்
  • அத்திப்பலகை – மாரணம்
  • வெண்நாவல் – ஆக்ருசணம்
  • வெப்பாலை – உச்சாடனம்.
இதே வகையில் மாந்திரீகத்தின் அஸ்டமா சித்திகளையும் பெற விரும்புபவர்கள் அவற்றை செய்யும் போது பூஜைக்கு பயன் படுத்த வேண்டிய மலர்களைப் பற்றி புலிப்பாணிச்சித்தர் பின் வருமாறு வகைப்படுத்துகிறார்.
  • மல்லிகை – வசியம்
  • முல்லை – மோகனம்
  • தும்பை – உச்சாடனம்
  • அரளி – ஆக்ருசணம்
  • காக்கனமலர் – வித்துவேடணம்
  • ஊமத்தம் – பேதனம்
  • கடலைமலர் – மாரணம்
  • தாமரை – தம்பனம்
இறுதியாக மாந்திரீக பயிற்சியின் போது அதனை செய்பவர்கள் மூலங்களை (உடலை) அலங்கரிக்க வேண்டிய ஆடை வகைகளைப் பற்றி இவ்வாறு குறிப்பிடுகிறார் புலிப்பாணிச்சித்தர்.
  • செம்பட்டு – வசியம்
  • மஞ்சள் பட்டு – மோகனம்
  • பச்சைப்பட்டு – தம்பனம்
  • வெள்ளைப் பட்டு – பேதனம்
  • கழுதைவண்ணப்பட்டு – வித்துவேடணம்
  • பஞ்சவர்ணபட்டு – உச்சாடனம்
  • ஆந்தைவண்ணப்பட்டு – ஆக்ருசணம்
  • கருப்பு வண்ணப்பட்டு – மாரணம்.

இந்த பயிற்சிகளை மேற்கொள்ளும் போது அமர வேண்டிய திசை, உடலில் அணிய வேண்டிய மாலைகள், செபிப்பதற்கு பயன்படுத்த வேண்டிய மாலைகள் பற்றியும் காண்போம்.
  • கிழக்கு – இந்திரன் – தம்பனம்
  • தென்கிழக்கு – அக்கினி – மோகனம்
  • தெற்கு – எமன் – மாரணம்
  • தென்மேற்கு – நிருதி – உச்சாடனம்
  • மேற்கு – வருணன் – ஆக்ருசணம்
  • வடமேற்கு – வாயுதேவன் – வித்வேடணம்
  • வடக்கு – குபேரன் – பேதனம்
  • வடகிழக்கு – ஈசன் – வசியம்
இதைப் போலவே மாந்திரீகத்தின் அஸ்டமா சித்திகளையும் பெற விரும்புபவர்கள் அவற்றை செய்யும்போது அணிய வேண்டிய மாலைகளையே ஜெபம் செய்யும் போது பயப்படுத்த வேண்டும்.  மாந்திரிக நிலைகளுக்கு ஏற்ப இவை மாறுபடும் என்றும் அது பற்றிய தகவல்களை புலிபாணி சித்தர் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.
  • உருத்திராட்சம் – வசியமாகும்
  • மிளகுமணி – மோகனந்தான்
  • துளசிமணி – உச்சாடனம்
  • தாமரைமணி – தம்பனம்
  • நாகமணி – மாரணம்
  • சங்குமணி – ஆக்ருசணம்
  • எட்டிமணி – வித்துவேடணம்
  • வெண்முத்து – பேதனம்
இந்த மந்திரங்களை குறிப்பிட்ட நாளில்தான் உச்சாடனம் செய்திட துவங்க வேண்டுமாம். இதைப் பற்றி புலிப்பாணி சித்தர் பின்வருமாறு கூறுகிறார்.
  • ஞாயிறு – வசியம் மற்றும் பேதனம்
  • திங்கள் – தம்பனம்
  • செவ்வாய் – மோகனம்
  • புதன் – மாரணம்
  • வியாழன் – உச்சாடனம்
  • வெள்ளி – ஆக்ருசணம்
  • சனி – வித்துவேடணம்
மந்திர உச்சாடணம் செய்வதற்க முன்னர் வினாயகரை முறைப்படி வழிபாடு செய்து எந்த தடங்களும் இல்லாமல் எடுத்த செயல் வெற்றிகரமாக முடிய அருள் புரிய வேண்டும் என்று வேண்டிக் கொண்டு பின்னர் தான் மந்திர உச்சாடண வழிபாட்டினை ஆரம்பிக்க வேண்டும்.
மேல கூறப்பட்டதில் நல்ல விஷயங்களை மட்டும் பயன்படுத்தும் படி கேட்டுக்கொள்கிறேன். நன்றி
ஓம் நமசிவய 

Mudras – முத்திரைகள்

உடல் நலம் தரும் விரல் முத்திரைகள்
முத்திரைகள் என்றால் கைவிரல்களைப் பயன்படுத்தியே செய்யப்படும் ஒரு பயிற்சி, அதாவது கை விரல்கள் ஒரு குறிப்பிட்ட நிலையில் வைப்பதன் மூலம் உங்களது உடலை ஒழுங்குபடுத்தும் ஒரு நுட்பமான அறிவியல். முத்திரைகள் இந்தியத் துணை கண்டத்தில் தோன்றியது.  பரத நாட்டிய சாஸ்திரத்தில் விரல் முத்திரைகள் மிக முக்கியமானவை. மகான்கள், மற்றும் தெய்வங்களின் சிலைகளையும், திருவுருவப் படங்களையும் கூர்ந்து பார்த்தால் அவர்களுடைய கைவிரல்கள் ஏதாவது ஒரு முத்திரை நிலையில் இருப்பதைக் காணலாம். துவக்கத்தில் இந்து மதத்திலும், புத்த மதத்திலும் அதிகமாகப் பயன்படுத்தப்பட்ட இந்த முத்திரைகள் காலம் செல்லச் செல்ல உலகின் பிற பகுதிகளுக்கும் பரவத் துவங்கின.
முத்திரைகள் உடல் நலத்திற்கும், மன நலத்திற்கும் பெரிதும் பயனளிப்பதாக இருக்கிறது,  யோகா மற்றும் தியானக் கலைகளில் பயன்படுத்தும் போது கிடைக்கும் பலன்கள் பலமடங்கு சக்தியுடன் இருப்பதாக பயன்படுத்தி பலன் கண்டவர்கள் கூறுகிறார்கள்.  சரி,  சில எளிய முத்திரைகளையும், அவற்றைச் செய்வதனால் ஏற்படும் பலன்களையும் சற்று பார்ப்போம்.
ஞான முத்திரை
Ganam
கையின் பெருவிரல் நுனியையும், ஆட்காட்டி விரலின் நுனியையும் இணைக்கையில் இந்த முத்திரை கிடைக்கிறது. மற்ற விரல்கள் நேராக நிறுத்தப்படவேண்டும். பெரும்பாலான தியான நிலைகளில் இந்த முத்திரை பயன்படுத்தப்படுகிறது.
பலன்கள் 
நினைவு சக்தியை அதிகரிக்கவும், கவனக்குறைவைக் குறைக்கவும், மன அமைதியை அதிகரிக்கவும் இந்த முத்திரையைப் பயன்படுத்தலாம்.   ஹிஸ்டீரியா, மன அழுத்தம் போன்றவற்றிலிருந்து பெருமளவு விடுபடலாம்.
வருண முத்திரை
Varun
பெருவிரல் நுனியையும் கடைசி விரல் நுனியையும் இணைக்கையில் வருண முத்திரை ஏற்படுகிறது. மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும்.
பலன்கள் 
உடலின் நீர் சமநிலை மாறுமானால் அதனால் ஏற்படும் தீய விளைவுகளை இந்த முத்திரை தடுக்கிறது என்று சொல்கிறார்கள். இரத்த சம்பந்தமான வியாதிகளைப் போக்கவும், தோல் சுருக்கத்தைப் போக்க உதவும்.
சூன்ய முத்திரை
Soonya
கையின் நடுவிரலை பெருவிரலின் அடியில் உள்ள மேட்டில் வைத்து அந்தவிரலைப் பெருவிரலால் லேசாக அழுத்தியபடி வைத்துக் கொள்ளும் போது சூன்யமுத்திரை ஏற்படுகிறது. மற்ற விரல்கள் நீட்டப்பட்ட நிலையிலேயே இருக்கவேண்டும்.
பலன்கள் 
இந்த முத்திரை முக்கியமாக காது வலியையும், மற்ற காது சம்பந்தமான குறைபாடுகளையும் போக்க உதவுகிறது.
ப்ராண முத்திரை
Prana_mudra
கையின் மோதிர விரலையும், கடைசி விரலையும் மடக்கி அந்த இரண்டுவிரல்களின் நுனியைப் பெரு விரல் நுனியால் தொடும் போது ப்ராண முத்திரை உருவாகிறது. மற்ற விரல்கள் நீட்டப்பட்டபடியே இருத்தல் வேண்டும்.
இந்த முத்திரை கண்பார்வைக் கோளாறையும், மற்ற கண் சம்பந்தமான வியாதிகளையும் குறைக்க உதவுகிறது. உடலில் நோய் எதிர்ப்பு சக்திக்கும், களைப்பை நீக்க பயன்படுகிறது.
அபான முத்திரை
Apana
கையில் நடு விரல் மற்றும் மோதிர விரலை மடக்கி அந்த இரண்டு விரல்களின் நுனியை பெரு விரல் நுனியால் தொடும் போது அபான முத்திரை ஏற்படுகிறது.
பலன்கள் 
இந்த முத்திரை சர்க்கரை வியாதியைக் கட்டுப்படுத்த உதவுகிறது. மூலம் மற்றும் மலச்சிக்கலைப் போக்க இந்த முத்திரை பெருமளவு உதவுகிறது.
அபான வாயு முத்திரை
Apan-vayu-mudra
நடுவிரல், மற்றும் மோதிர விரல் மடிக்கப்பட்டு அந்த விரல்களின் நுனியைப் பெருவிரல்நுனியால் தொட்டு, ஆட்காட்டி விரலை மடித்து பெருவிரலின் அடிப் பாகத்தில் வைக்கும் போது இந்த முத்திரை உருவாகிறது.
பலன்கள் 
இதய சம்பந்தமான குறைபாடுகளை நீக்கவும், இதயத்தை வலுப்படுத்தவும் இந்த அபான வாயு முத்திரை உதவுகிறது. அத்துடன் வாயுத் தொந்தரவுகளையும் இந்த முத்திரை வெகுவாகக் குறைக்கிறது.
லிங்க முத்திரை
Linga
படத்தில் காட்டியபடி விரல்களைப் பின்னி இடது பெருவிரலை நீட்டியநிலையில் விட்டு வலது பெருவிரலால் இடது பெருவிரலை சுற்றிப் பிடித்துக்கொள்ளும் போது லிங்க முத்திரை ஏற்படுகிறது.
பலன்கள் 
சளி, கபம் போன்ற கோளாறுகளை இந்த லிங்க முத்திரை வெகுவாகக் குறைக்கிறது.
முத்திரையை பயிற்சி செய்யும் முறை 
முதலில் நன்றாகக் கை மற்றும் கால்களை கழுவிக் கொள்ளுங்கள். ஒரு பாய் அல்லது விரிப்பு விரித்து அதன் மேல் அமர்ந்து  அல்லது  நின்று அல்லது  படுத்த நிலையில் ஏதாவது ஒரு முறையை உங்கள் வசதிக்கு தகுந்தபடி தேர்வு செய்து முத்திரையை செய்யவும். நம்மை சுற்றி  அமைதியான சுழல் இருப்பது மிக முக்கியம்.  பின் கைகளை நன்றாகத் துடைத்துக் கொண்டு கைகள் சூடாகும் வரை இரு கைகளையும் சேர்த்து தேய்த்துக் கொள்ளுங்கள்.
நடந்து கொண்டு செய்ய வேண்டாம். 
இந்த முத்திரைகளைச் செய்யும் கால அளவு என்று பார்த்தல்  அரை மணி முதல் முக்கால் மணி நேரம் வரை உங்களுக்குத் தேவையான முத்திரைகளைச் செய்யலாம். பத்து அல்லது பதினைந்து நிமிட காலங்களில் சிறிது இடைவெளி விட்டு மூன்று முறை கூடச் செய்யலாம். ஒரேயடியாக நீண்ட நேரத்திற்குச் செய்ய ஆரம்பிக்காமல் சுமார் ஐந்து நிமிட காலம் செய்வதில் இருந்து ஆரம்பிப்பது நல்லது. பின் சிறிது சிறிதாக நேரத்தைக் கூட்டிக் கொண்டு செல்லுங்கள். இந்த முத்திரைகளால் வியக்கத்தக்க பெரும்பலன்கள் கிடைக்கின்றன என்று சொல்லப்படுகிறது.
இந்த முத்திரைகள் பயிற்சி இன்றைய மருத்துவ சிகிச்சைக்கு இணை என்று சொல்லாம்.  நீரழிவு,  இரத்த அழுத்தம், இருதயம் சம்பந்தமான சிக்கிச்சை, காது நோய்கள், கண் குறைபாடு மற்றும் வாயு தொந்தரவு போன்ற நோய்களுக்கு சிக்கிச்சை எடுப்பவர்கள்  இந்த பயிற்சியை முயற்சித்து பாருங்கள் எதிர் விளைவுகள் இல்லை. செலவு மற்றும எந்த கஷ்டமும் இல்லாத இந்த முத்திரைகள் மூலம் சிறிது பலன் கிடைத்தாலும், மருந்துகளை நிறுத்திக் கொள்ளலாம்.
படித்த அனைவரும் நோயின்றி வாழ என் வாழ்த்துக்கள்
வாழ்க வளமுடன்