தமிழ்ப்பெண்களே! பாடிக்கிட்டே சமையல் பண்ணுங்க!



நான் நன்றாக சமையல் செய்வேன்.(நெஜமாத்தாங்க).செட்டிநாட்டு சமையல், செட்டிநாட்டு பலகார வகைகள்,சில பல குறிப்புகளைப் படித்துசோதனை முயற்சிகள் செய்வது, சரியாக வந்தால் அந்தப்பெயர்,அல்லாவிடில் நாமே ஒரு நாமகரணம் சூட்டுவது இதில் நான் கை தேர்ந்தவள்.தீபாவளி சமையங்களில் பலகாரம் செய்யத் தெரியாத, செய்ய இயலாத தோழியர்க்கு செய்து கொடுப்பதுண்டு.அந்த நேரங்களில் தொலைபேசி அழைப்பு வந்தாலே பலகாரப் பக்குவம் கேட்பதற்காகத்தான் இருக்கும்.எனக்கு பாட்டு மிகவும் பிடித்தது.நாட்டுப்புறப்பாட்டு,பழைய திரை இசை,புதிய பாடல்களில்,மென்மையான இசையுடன் கூடிய பாடல்கள்,எம்.எஸ்.அம்மா,சுதா ரகுநாதன் அவர்களின் பாடல்கள் இதெல்லாம் எனக்கு மிகவும் பிடித்த பாடல்கள்.(சமையலச்சொல்லிட்டு பாட்டுக்கு வந்துட்டீங்க என்கிறீர்களா? இருங்க வர்றேன்) நான் சமையல் செய்யும் போது பாட்டுப் பாடிக்கொண்டே தான் சமையல் செய்வேன்.இஸ்க் பராரரா என்று ஆரம்பித்தால் என் மகன்,'அம்மா இது என் பாட்டு.உங்களுக்கு வேற பாட்டுக்கெடைக்கலியா.நீங்க இந்தப்பாட்ட கொல பண்றீங்க.அப்றம் எனக்கு புடிக்காம போய்டுது' என்று கூற,' பார்த்த முதல் நாளே!' என்று ஆரம்பித்தால் என் மகள்,'ம்.ம்.. நாந்தான் கிடச்சன் உங்களுக்கு.' என்பாள்.இந்தி மொழிப் பாடல் பாடினால் என் கணவர்,' எப்பவும் நீ ஹிந்திப்பாட்டு பாடுறப்ப கொஞ்சம் அடக்கியே வாசி.தமிழத் தப்புதப்பா பேசுனா நமக்கு எவ்ள கோவம் வருது.அப்டித்தான் அவுங்களுக்கும்' என்பார்.இது எதுக்கு வம்பு.நான் டி.எம்.சௌந்தர்ராஜன்,பி.சுசீலா பாடிய பாடல்கள்,நாட்டுப்புறப்பாடல்களை சுழலவிட்டு நானும் கூடவே பாடியபடி சமையல் செய்வேன்.இது நான் என் அம்மா வீட்டில் வேலை செய்யவென்று ஆரம்பித்த சிறு வயது முதலே உள்ள பழக்கம்.யாராவது நண்பர்கள்,தோழிகள் வீட்டுக்கு வந்தால், 'என்ன பாட்டுச்சத்தம்? அமர்க்களப்படுது' என்பார்கள். என் கணவரும், குழந்தைகளும், ஆமா! அவுங்க சமைக்குறப்ப பாடிக்கிட்டே சமைப்பாங்க.நாங்க(ருசி தெரியாதிருக்க)  சாப்பிடுறப்ப பாடிக்கிட்டே சாப்புடுவோம்' என்பார்கள்.

             இதைவிட என் மகனின் பள்ளித்தோழர்கள் அவனின் மதிய உணவைப்பகிர்ந்து கொண்டுவிட்டு 'நீ குடுத்து வச்சவண்டா. ஆன்டி,இவ்ள அருமையா சமைக்கிறாங்க' என்பார்களாம்.வீட்டுக்கு வரும் அவனின் தோழர்கள்,'ஆன்டி,நீங்க கேட்டரிங் படிச்சீங்களா? நீங்க வைக்கிற இட்லி சாம்பார் சூப்பர்' என்றால் என் மகன் உடனே 'உளறாத.ஒரு நாள்ல இப்டிலாம் முடிவு பண்ணிராத' என்பான்.'ஆமாண்டா! அப்புடி கிடந்துதான் 15 வயசுலய ஆறடி உயரம் இருக்க' என்பேன் நான்.அதற்கு அவன்  'பதினெட்டு வருஷம் ஒரு நாளுல்ல ரெண்டு நாளுல்ல பதினெட்டு வருஷம் அப்பா உங்க சமையல சாப்டுட்டு அப்டியே தான் இருக்காங்க' என்பான்.அவரோட இளமையின் ரகசியமே என்னோட சமையல் தான்டா! என்பேன்.  ஒரு நாள் எதேச்சையாக ஒரு பெண்கள் பத்திரிக்கையில் ஒரு சகோதரி ஒரு கட்டுரை எழுதியிருந்தார்கள்."அடிக்கடி வெளியில் சாப்பிடுவதைத் தவிருங்கள். சுத்தம்,சுகாதாரம் ஒரு காரணம்.அதோடு சமைப்பவர்களின் மனநிலை அந்த உணவில் படிவதால்(கோபம்,அவசரம்,பரபரப்பு) அந்த உணவை உண்பவர்களுக்கு வயிற்றுப்புண்,  அதே கோபம், கடுகடுப்பு,அஜீரணக்கோளாறு இன்னபிற நோய்களுக்கும் வழிவகுக்கிறது. ஒரு அரண்மனையில் விருந்துக்கு வந்த துறவி திருட்டு சமையற்காரன் சமைத்த உணவை உண்டதும் அரசரின் செங்கோலைத் திருடிக்கொண்டு போய்விட்டாராம். பிறகு துறவி விசயத்தை உணர்ந்து அரசரிடம் சொல்லி செங்கோலைத் திருப்பிக்கொடுத்தாராம்.அதனால் நாம் சமைக்கும் போது ஸ்லோகங்கள்,பஜனைப்பாடல்கள்,பிடித்த திரை இசையை பாடிக் கொண்டே சமைத்தால் நம் மனம் இலகுவாகி உணவை உண்பவர்களுக்கு உற்சாகமான மன நிலையும் நோயற்ற வாழ்வும் அமையும்" என்று.

          இந்தக்கட்டுரையின் சாரத்தை நான் வானொலியில் பெண்கள் நிகழ்ச்சியில் கூறுவதுண்டு.ஏனென்றால் இங்கு சிலர் குழாயில் தண்ணீர் வரவில்லையா, சமையல் வாயு தீர்ந்து விட்டதா? உடல் சுகமில்லையா? குழந்தைகளுக்கு உடல் நலமில்லையா? வெளியில் எங்காவது போக வேண்டுமா? எல்லாவற்றிற்கும் உடனடி தீர்வு உணவகங்களில் வாங்கி உண்பது.இதனால் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டு அல்லல் படுவதைப் பார்க்கிறோம்.ருசிக்காக அவர்கள் செய்யும் கலப்படங்கள்,அஜினோ மோட்டோ,சோடா போன்ற பொருட்களும் உடல் நலத்திற்குக் கெடுதல் தான்.என்னம்மா? தோழியரே! இனிமேல் நீங்களும் பாடிக்கொண்டே சமையல் செய்வீர்களா? எங்கள் சகோதரர்கள் உங்கள் சமையலில் ஏதாவது குறை சொன்னால் அவர்களைப் பாடிக் கொண்டே சாப்பிடச்சொல்லுங்கள். நாளைக்கு நன்றாக சமைக்கிறேன் என்று உறுதி கொடுங்கள்.நாளைக்கும் அப்படியே ஆகிவிட்டால் என்கிறீர்களா? நாளை தினமும் தான் வந்து கொண்டே இருக்கிறதே..

படித்ததில் பிடித்தது


1. பேசும்முன் கேளுங்கள், எழுதும்முன் யோசியுங்கள், செலவழிக்கும்முன் சம்பாதியுங்கள்
2. சில சமயங்களில் இழப்புதான் பெரிய ஆதாயமாக இருக்கும்
    3. யாரிடம் கற்கிறோமோ அவரே ஆசிரியர். கற்றுக்கொடுப்பவரெல்லாம் ஆசிரியர் அல்லர்.
    4. நான் மாறும்போது தானும் மாறியும், நான் தலையசைக்கும்போது தானும் தலையசைக்கும் நண்பன் எனக்குத்   தேவையில்லை. அதற்கு என் நிழலே போதும்!
    5. நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
    6. நான் குறித்த நேரத்திற்குக் கால்மணி நேரம் முன்பே சென்று விடுவது வழக்கம். அதுதான் என்னை மனிதனாக்கியது.
    7. நம்மிடம் பெரிய தவறுகள் இல்லை எனக் குறிப்பிடுவதற்கே, சிறிய தவறுகளை ஒப்புக்கொள்கிறோம்!
    8. வாழ்க்கை என்பது குறைவான தகவல்களை வைத்துக்கொண்டு சரியான முடிவுக்கு வரும் ஒரு கலை.
    9. சமையல் சரியாக அமையாவிடில் ஒருநாள் இழப்பு. அறுவடை சிறக்காவிடில் ஒரு ஆண்டு இழப்பு. திருமணம் பொருந்தாவிடில்   வாழ்நாளே இழப்பு.
   10. முழுமையான மனிதர்கள் இருவர். ஒருவர் இன்னும் பிறக்கவில்லை. மற்றவர் இறந்துவிட்டார்.
   11. ஓடுவதில் பயனில்லை. நேரத்தில் புறப்படுங்கள்
  12.  எல்லோரையும் நேசிப்பது சிரமம். ஆனால் பழகிக்கொள்ளுங்கள்
   13. நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
   14. காரணமே இல்லாமல் கோபம் தோன்றுவதில்லை. ஆனால் காரணம் நல்லதாய் இருப்பதில்லை
   15. இவர்கள் ஏன் இப்படி? என்பதை விட, இவர்கள் இப்படித்தான் என எண்ணிக்கொள்
    16.  யார் சொல்வது சரி என்பதல், எது சரி என்பதே முக்கியம்
   17. ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்
   18.   பயம்தான் நம்மைப் பயமுறுத்துகிறது. பயத்தை உதற் எறிவோம்
   19.  நியாயத்தின் பொருட்டு வெளிப்படையாக ஒருவருடன் விவாதிப்பது சிறப்பாகும்
   20.  உண்மை புறப்பட ஆரம்பிக்கும் முன் பொய் பாதி உலகத்தை வலம் வந்துவிடும்
   21. உண்மை தனியாகச் செல்லும். பொய்க்குத்தான் துணை வேண்டும்
   22. வாழ்வதும் வாழ்விடுவதும் நமது வாழ்க்கைத்  தத்துவங்களாக ஆக்கிக்கொள்வோம்.
   23.  தன்னை ஒருவராலும் ஏமாற்ற முடியாது எனச் செருக்கோடு இருப்பவனே கண்டிப்பாக ஏமாந்து போகிறான்
   24. உலகம் ஒரு நாடக மேடை ஒவ்வொருவரும் தம் பங்கை நடிக்கிறார்கள்
   25. செய்வதற்கு எப்போதும் வேலை இருக்கவேண்டும் . அப்போது தான் முன்னேற முடியும்
  26.  அன்பையும் ஆற்றலையும் இடைவிடாது வெளிப்படுத்துகிறவர் ஆர்வத்துடன் பணிபுரிவர்
   27. வெற்றி பெற்றபின் தன்னை அடக்கி வைத்துக்கொள்பவன், இரண்டாம் முறையும் வென்ற மனிதனாவான்
   28.  தோல்வி ஏற்படுவது அடுத்த செயலைக் கவனமாகச் செய் என்பதற்கான எச்சரிக்கை.
   29. பிறர் நம்மைச் சமாதானப்படுத்த வேண்டும் என்று எதிர்பார்க்காமல், நாம் பிறரைச் சமாதானப்படுத்த முயற்சிக்க வேண்டும்.
   30. கடினமான செயலின் சரியான பெயர்தான் சாதனை. சாதனையின் தவறான விளக்கம் தான் கடினம்
   31. ஒன்றைப்பற்றி நிச்சயமாக நம்ப வேண்டுமென்றால் எதையும் சந்தேகத்துடனே துவக்க வேண்டும்
   32. சரியானது எது என்று தெரிந்த பிறகும் அதைச் செய்யாமல் இருப்பதற்குப் பெயர்தான் கோழைத்தனம்.
   33. ஒரு துளி பேனா மை பத்து இலட்சம் பேரைச் சிந்திக்க வைக்கிறது
34.ஒவ்வொரு மனிதனும் இந்த உலகத்தையே மாற்ற வேண்டும் என்று நினைக்கிறார்கள்; ஆனால் ஒருவர் கூட தங்களை மாற்றிக் கொள்ள வேண்டுமென நினைப்பது இல்லை.–லியோ டால்ஸ்டாய்
`
35.மாற்றம் என்பது மானிடத் தத்துவம்,மாறாதிருக்க நான் வனவிலங்கல்லன்.– கண்ணதாசன்
`
36.தேனீக்கள் கொட்டும் என்று அஞ்சி கொண்டேயிருந்தால் என்றைக்கும் உங்கள் நாக்கால் தேனின் சுவையை உணரவே முடியாது.
`
37.எதற்கும் பிறரை சார்ந்திருக்க ஊனமுற்றவர்கள் கூட விரும்புவதில்லை.–சுகி செல்வம்
`
38.நேற்று,இன்று,நாளை ;
இன்றிருக்கும் நான் நேற்றிருந்த நான் – ஐ விட அறிவு,எண்ணம்,படிப்பு,செயல்,திறமை,பழக்கம்…. ஆகிய ஏதோ ஒன்றிலாவது சிறிதளவாவது முன்னேறி இருக்க வேண்டும்.நான் யாரோடும் போட்டியிடத் தேவையில்லை,நேற்றைய நானுடன் இன்றைய நான் போட்டியிட்டு முன்னேற வேண்டும்,நாளைய நான் இன்றைய நான் — ஐ விட ஒரு படியாவது முன்னேற வேண்டும்.
`
39.முயற்சி திருவினையாக்கும், முயன்றால் முடியும்,முயன்றால் மட்டுமே முடியும்.
------------------------------------------------------



உதிரும் மலருக்கு ஒரு நாள்தான் மரணம்.
பேசாத அன்புக்கு தினம் தினம் மரணம்.
உரிமையோடு பேசுங்கள்.
உறவுகளை நேசியுங்கள்.
அன்பை சுவாசியுங்கள்


______________________________________________________________________


உனைத்தான் நினைத்தேன் உயிராய்.
எனைத்தான் கொடுத்தேன் விலையாய்
உன்னை சுற்றும் என் உலகம் இங்கே.
என்னை ஈர்க்கும் விசையாயை நீதான் அங்கே.
காலம் முழுதும் உன் காதல் போதும்.
இந்த பிறவி ஒன்றே போதும்.


___________________________________________________________________


தாயின் பாசம்
  
       காரணம் இல்லாமல்
கலைந்து போக இது கனவும் இல்லை.
காரணம் சொல்லி பிரிந்து போக
இது காதலும் இல்லை.
நம் உயிர் உள்ளவரை தொடரும்
உண்மையான தாயின் பாசம்.....இது


_________________________________________________________________



Sholavandan Map





                          Sholavandan   சோழவந்தான் வரைபடம் Sholavandan MAP

                                    

Sholavandan history

பெயர் வரலாறு:



                                           இந்த ஊர் சனகபுரம் என்று வழங்கப்பட்டுள்ளது. இங்குள்ள     மாரியம்மன் கோயிலும் சனகை மாரியம்மன் கோயில் என்று அழைக்கப்படுகிறது. [[பாண்டியர்|பாண்டிய]] நாட்டில் இருந்த இவ்வூரை சோழமன்னன் ஒருமுறை கண்டதாகவும் தனது ஆளுகைக்குட்பட்ட [[தஞ்சை]] நகர் போன்றே செழிப்பான வயல்வெளிகளுடன் திகழ்கிறது என வியந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் ''சோழன் உவந்தான்'' என்று பெயர் பெற்று அது நாளடைவில் மருவி சோழவந்தான் என்று ஆயிற்று என்பர்.