தமிழர்களின் தொன்மை
காங்கேயம் காளைகளை பற்றி நம்மில் சிலருக்கு தெரியும் , சிலருக்கு தெரியாது . தமிழ் நாட்டின் அடையாளமாக திகழ்கிறது காங்கேயம் காளைகள். உலகில் வேறெங்கும் இது போன்ற திமில் உள்ள காளைகளை பார்க்க முடியாது. உலகின் தொன்மை விளையாட்டான ஏறு தழுவதல் என்று சொல்லக் கூடிய ஜல்லிக் கட்டு போட்டியில் இந்த அரிய வகையான காளைகளை இன்றும் தமிழ்நாட்டில் நாம் பார்க்கலாம். அண்மையில் சங்கம் நான்கு நிகழ்ச்சியில் காங்கேயம் காளைகள் பற்றி கார்த்திகேயா சிவசேனாதிபதி கூறுகையில் , இந்த அரிய வகை காளைகள் தற்போது அழிந்து வரும் உயிரினமாக கருதப்படுகிறது. இங்கிருக்கும் பண்ணையார்கள் அதை பராமரிக்க விரும்பாமல் கேரளாவிற்கு ஏற்றுமதி செய்து விடுகின்றனர் . அதனால் இக்காளைகளின் எண்ணிக்கை பெருமளவில் குறைந்து வருகிறது என்று சுட்டிக் காட்டினார். கார்த்திகேயன் ஈரோட்டில் காங்கேயம் காளைகள் வளர்க்கும் பண்ணையை பராமரித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத் தக்கது
மேலும் வரலாற்று ரீதியான தகவல் அவர் நமக்கு தருகையில்..
இதே வகையான காளைகள் தான் சிந்து சமவெளியில் 5000 ஆண்டுகளுக்கு முன்பு வளர்க்கப் பட்டது . சிந்துவெளியில் நமக்கு கிடைத்த காளை முத்திரையில் இப்போது தமிழகத்தில் இருக்கும் காளையை போன்றே திமில் மற்றும் உருவ அமைப்பை ஒத்த காளையை பார்க்க முடிகிறது . இத்தகைய திமில் அமைப்பு வேறு எந்த காளைக்கும் உலகில் கிடையாது . தமிழர்கள் சிந்து வெளியில் வாழ்ந்ததற்கு இதை விட பெரிய சான்று வேறு கிடையாது . ஆனால் இந்தக் காளை எப்படி தமிழக நிலப்பரப்பிற்கு வந்தது? ஒரு வேளை அங்கிருந்து தமிழர்கள் கால் நடையாகவே காளைகளை ஓட்டி வந்திருக்கலாம். அல்லது தமிழர்கள் சிந்து வெளி வரை இப்படியான காளைகளை கொண்டு சென்று வளர்த்து இருக்கலாம் . இது இன்னும் புரியாத புதிராகவே இருக்கிறது.
எப்படியோ தமிழர்களின் தொன்மையை இன்றளவும் இந்த அரிய வகை காங்கேயம் காளைகள் பறை சாற்றுகின்றன . இக்காளைகளை அழிய விடாமல் பராமரிப்பது தமிழர்களின் கடமையும் ஆகும் .
வாடிப்பட்டி
Vadipatti
இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ளமதுரை மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.
வாடிப்பட்டி வட்டம் , தமிழ்நாட்டின் மதுரை மாவட்டத்தில் உள்ள ஏழு வட்டங்களில் ஒன்றாகும். இந்த வட்டத்தின் தலைமையகமாக வாடிப்பட்டி நகரம் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் 77 வருவாய் கிராமங்கள் உள்ளன
இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ளமதுரை மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.
வாடிப்பட்டி வட்டம் , தமிழ்நாட்டின் மதுரை மாவட்டத்தில் உள்ள ஏழு வட்டங்களில் ஒன்றாகும். இந்த வட்டத்தின் தலைமையகமாக வாடிப்பட்டி நகரம் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் 77 வருவாய் கிராமங்கள் உள்ளன
அணு உலை - ஏன் எதற்கு எப்படி?
அணு உலையில் இந்த அணு உலை எதிர்ப்பாளர்கள் கேட்காத கேள்வி ஒன்னு இருக்கு. அது அணு உலை எல்லாம் சரியாத்தான் கட்டியிருக்கு என சொல்றீங்க. பூகம்பம் போன்ற இயற்கை பேரிடர் வராத இடத்தில் கட்டியிருக்கு என சொல்றீங்க. ஆனா யாராச்சும் அந்த இடத்துல குண்டு வச்சுட்டா? அணு உலைக்கு வைக்கலீன்னாலும் அதோட கண்ட்ரோல் ரூம்முக்கு வச்சுட்டா என்ன செய்ய? குண்டு கூட வேணாம் போர் வந்து மேலேருந்து குண்டு வீசினா என்ன செய்ய? இல்லாட்டி 9/11 தாக்குதல் மாதிரி விமானத்தோடு மோதினா? ஆபத்து தானே? (எப்படி எல்லாம் எதிர் தரப்புக்கு எடுத்து சொல்லிக்கொடுக்கவேண்டியிருக்குது :-))))) ) சரியான கேள்வியே. இதுக்கும் ஏற்பாடு பண்ணியிருக்காங்க. மிக எளிமையான தீர்வே. மொத்த அணு உலையும் ஒரு பெரிய காங்கிரீட் கட்டிடத்திற்குள் இருக்கும். வெளியில் இருந்து எதுவும் உள்ளே போகாது, உள்ளே இருந்தும் எதுவும் வெளியே வராது. என்ன குண்டு போட்டாலும் எதுவும் ஆகாது. இதை செர்னோபில் போன்ற விபத்துக்களுக்கு அப்புறம் கத்துக்கிட்டாங்க. இப்பவும் புகுஷிமாவில் அணு உலை பார்க்கமுடியும். ஆனால் கூடங்குளத்திலோ மற்ற இந்திய அணு உலைகளிலோ பார்க்கமுடியாது. நமக்கு தெரிவது இந்த காங்கரீட் கட்டிடமே. இதனுள் இருக்கும்போது வெடித்தாலும் பாதிப்பு வெளியே வராது. அடுத்து கழிவு நீர் அணு உலையில் இருந்து வெளியேறும் நீரால் கடல்வாழ் உயிரினங்களுக்கு பாதிப்பு என இங்கு பலர் சொல்லக்கேட்டிருப்பீர்கள் ஆனால் அணு உலையின் வடிவமைப்பை பார்த்தாலே இது நடக்க முடியாத ஒன்று என புரியும். அணு உலையின் குளிர்விக்கும் நீர் பாய்லர்களில் எப்படி பயன்படுகிறதோ, நிலக்கரி கொண்டு செயல்படும் அனல் மின்நிலையத்தில் எப்படி பயன்படுகிறதோ அப்படி மட்டுமே பயன்படும். ஆனால் இது ஏன் திரும்ப திரும்ப சொல்லப்படுகிறது. இது புரிதலில் இருக்கும் பிரச்சினை. அணு உலையை அனல் மின்சாரம் போல் நினைத்து நிலக்கரி = யுரேனியம் ஆக்சிஜன் = யுரேனியம் என்று நினைத்துக்கொள்வதால் வரும் பிரச்சினை. ஆனால் அணு உலையில் மின்சாரம் எடுக்க ஆக்சிஜன்/காற்று தேவையில்லை என தெரிந்தால் இது புரியும். ஆனால் இதிலே இன்னோன்றும் இருக்கிறது. சென்னையின் கூவத்தை கடலில் விட்டுவிட்டு அதனால் குறையும் மீன் வளத்திற்கு கல்பாக்கத்தை காரணமாக சொல்வது. நாம் பயன்படுத்தும் சோப்பு, கிருமிநாசினிகள் என பலவும் கூவம் வழியாக கடலுக்கே செல்கினறன. அதனால் விளையும் அபாயங்கள் பல. ஆனால் இதை வசதியாக மறைந்துவிட்டு அணு உலையின் மீது பழிபோடுவது எளிதான செயல் என்பதால் இது நடக்கிறது. இதிலே இன்னோன்றும் உண்டு. வெப்பம் அதிகமாக இருந்தால் குறைத்துக்கொள்ளலாம். அது எவ்வளவு என்பதை ஆய்வாளர்கள் தான் முடிவு செய்யவேண்டும்.
தமிழ்ப்பெண்களே! பாடிக்கிட்டே சமையல் பண்ணுங்க!
நான் நன்றாக சமையல் செய்வேன்.(நெஜமாத்தாங்க).செட்டிநாட்டு சமையல், செட்டிநாட்டு பலகார வகைகள்,சில பல குறிப்புகளைப் படித்துசோதனை முயற்சிகள் செய்வது, சரியாக வந்தால் அந்தப்பெயர்,அல்லாவிடில் நாமே ஒரு நாமகரணம் சூட்டுவது இதில் நான் கை தேர்ந்தவள்.தீபாவளி சமையங்களில் பலகாரம் செய்யத் தெரியாத, செய்ய இயலாத தோழியர்க்கு செய்து கொடுப்பதுண்டு.அந்த நேரங்களில் தொலைபேசி அழைப்பு வந்தாலே பலகாரப் பக்குவம் கேட்பதற்காகத்தான் இருக்கும்.எனக்கு பாட்டு மிகவும் பிடித்தது.நாட்டுப்புறப்பாட்டு,பழைய திரை இசை,புதிய பாடல்களில்,மென்மையான இசையுடன் கூடிய பாடல்கள்,எம்.எஸ்.அம்மா,சுதா ரகுநாதன் அவர்களின் பாடல்கள் இதெல்லாம் எனக்கு மிகவும் பிடித்த பாடல்கள்.(சமையலச்சொல்லிட்டு பாட்டுக்கு வந்துட்டீங்க என்கிறீர்களா? இருங்க வர்றேன்) நான் சமையல் செய்யும் போது பாட்டுப் பாடிக்கொண்டே தான் சமையல் செய்வேன்.இஸ்க் பராரரா என்று ஆரம்பித்தால் என் மகன்,'அம்மா இது என் பாட்டு.உங்களுக்கு வேற பாட்டுக்கெடைக்கலியா.நீங்க இந்தப்பாட்ட கொல பண்றீங்க.அப்றம் எனக்கு புடிக்காம போய்டுது' என்று கூற,' பார்த்த முதல் நாளே!' என்று ஆரம்பித்தால் என் மகள்,'ம்.ம்.. நாந்தான் கிடச்சன் உங்களுக்கு.' என்பாள்.இந்தி மொழிப் பாடல் பாடினால் என் கணவர்,' எப்பவும் நீ ஹிந்திப்பாட்டு பாடுறப்ப கொஞ்சம் அடக்கியே வாசி.தமிழத் தப்புதப்பா பேசுனா நமக்கு எவ்ள கோவம் வருது.அப்டித்தான் அவுங்களுக்கும்' என்பார்.இது எதுக்கு வம்பு.நான் டி.எம்.சௌந்தர்ராஜன்,பி.சுசீலா பாடிய பாடல்கள்,நாட்டுப்புறப்பாடல்களை சுழலவிட்டு நானும் கூடவே பாடியபடி சமையல் செய்வேன்.இது நான் என் அம்மா வீட்டில் வேலை செய்யவென்று ஆரம்பித்த சிறு வயது முதலே உள்ள பழக்கம்.யாராவது நண்பர்கள்,தோழிகள் வீட்டுக்கு வந்தால், 'என்ன பாட்டுச்சத்தம்? அமர்க்களப்படுது' என்பார்கள். என் கணவரும், குழந்தைகளும், ஆமா! அவுங்க சமைக்குறப்ப பாடிக்கிட்டே சமைப்பாங்க.நாங்க(ருசி தெரியாதிருக்க) சாப்பிடுறப்ப பாடிக்கிட்டே சாப்புடுவோம்' என்பார்கள்.
இதைவிட என் மகனின் பள்ளித்தோழர்கள் அவனின் மதிய உணவைப்பகிர்ந்து கொண்டுவிட்டு 'நீ குடுத்து வச்சவண்டா. ஆன்டி,இவ்ள அருமையா சமைக்கிறாங்க' என்பார்களாம்.வீட்டுக்கு வரும் அவனின் தோழர்கள்,'ஆன்டி,நீங்க கேட்டரிங் படிச்சீங்களா? நீங்க வைக்கிற இட்லி சாம்பார் சூப்பர்' என்றால் என் மகன் உடனே 'உளறாத.ஒரு நாள்ல இப்டிலாம் முடிவு பண்ணிராத' என்பான்.'ஆமாண்டா! அப்புடி கிடந்துதான் 15 வயசுலய ஆறடி உயரம் இருக்க' என்பேன் நான்.அதற்கு அவன் 'பதினெட்டு வருஷம் ஒரு நாளுல்ல ரெண்டு நாளுல்ல பதினெட்டு வருஷம் அப்பா உங்க சமையல சாப்டுட்டு அப்டியே தான் இருக்காங்க' என்பான்.அவரோட இளமையின் ரகசியமே என்னோட சமையல் தான்டா! என்பேன். ஒரு நாள் எதேச்சையாக ஒரு பெண்கள் பத்திரிக்கையில் ஒரு சகோதரி ஒரு கட்டுரை எழுதியிருந்தார்கள்."அடிக்கடி வெளியில் சாப்பிடுவதைத் தவிருங்கள். சுத்தம்,சுகாதாரம் ஒரு காரணம்.அதோடு சமைப்பவர்களின் மனநிலை அந்த உணவில் படிவதால்(கோபம்,அவசரம்,பரபரப்பு) அந்த உணவை உண்பவர்களுக்கு வயிற்றுப்புண், அதே கோபம், கடுகடுப்பு,அஜீரணக்கோளாறு இன்னபிற நோய்களுக்கும் வழிவகுக்கிறது. ஒரு அரண்மனையில் விருந்துக்கு வந்த துறவி திருட்டு சமையற்காரன் சமைத்த உணவை உண்டதும் அரசரின் செங்கோலைத் திருடிக்கொண்டு போய்விட்டாராம். பிறகு துறவி விசயத்தை உணர்ந்து அரசரிடம் சொல்லி செங்கோலைத் திருப்பிக்கொடுத்தாராம்.அதனால் நாம் சமைக்கும் போது ஸ்லோகங்கள்,பஜனைப்பாடல்கள்,பிடித்த திரை இசையை பாடிக் கொண்டே சமைத்தால் நம் மனம் இலகுவாகி உணவை உண்பவர்களுக்கு உற்சாகமான மன நிலையும் நோயற்ற வாழ்வும் அமையும்" என்று.
இந்தக்கட்டுரையின் சாரத்தை நான் வானொலியில் பெண்கள் நிகழ்ச்சியில் கூறுவதுண்டு.ஏனென்றால் இங்கு சிலர் குழாயில் தண்ணீர் வரவில்லையா, சமையல் வாயு தீர்ந்து விட்டதா? உடல் சுகமில்லையா? குழந்தைகளுக்கு உடல் நலமில்லையா? வெளியில் எங்காவது போக வேண்டுமா? எல்லாவற்றிற்கும் உடனடி தீர்வு உணவகங்களில் வாங்கி உண்பது.இதனால் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டு அல்லல் படுவதைப் பார்க்கிறோம்.ருசிக்காக அவர்கள் செய்யும் கலப்படங்கள்,அஜினோ மோட்டோ,சோடா போன்ற பொருட்களும் உடல் நலத்திற்குக் கெடுதல் தான்.என்னம்மா? தோழியரே! இனிமேல் நீங்களும் பாடிக்கொண்டே சமையல் செய்வீர்களா? எங்கள் சகோதரர்கள் உங்கள் சமையலில் ஏதாவது குறை சொன்னால் அவர்களைப் பாடிக் கொண்டே சாப்பிடச்சொல்லுங்கள். நாளைக்கு நன்றாக சமைக்கிறேன் என்று உறுதி கொடுங்கள்.நாளைக்கும் அப்படியே ஆகிவிட்டால் என்கிறீர்களா? நாளை தினமும் தான் வந்து கொண்டே இருக்கிறதே..
Subscribe to:
Posts (Atom)