வைரமுத்து





காதலித்துப் பார்!
உன்னைச் சுற்றி
ஒளிவட்டம் தோன்றும்...
உலகம் அர்த்தப்படும்...
ராத்திரியின் நீளம்
விளங்கும்....
உனக்கும்
கவிதை வரும்...
கையெழுத்து
அழகாகும்.....
தபால்காரன்
தெய்வமாவான்...
உன் பிம்பம் விழுந்தே
கண்ணாடி உடையும்...
கண்ணிரண்டும்
ஒளிகொள்ளும்...
காதலித்துப்பார் !
தலையணை நனைப்பாய்
மூன்று முறை
பல்துலக்குவாய்...
காத்திருந்தால்
நிமிஷங்கள் வருஷமென்பாய்...
வந்துவிட்டால்
வருஷங்கள் நிமிஷமென்பாய்...
காக்கைகூட உன்னை
கவனிக்காது
ஆனால்...
இந்த உலகமே
உன்னை கவனிப்பதாய்
உணர்வாய்...
வயிற்றுக்கும்
தொண்டைக்கமாய்
உருவமில்லா
உருண்டையொன்று
உருளக் காண்பாய்...
இந்த வானம்
இந்த அந்தி
இந்த பூமி
இந்த பூக்கள்
எல்லாம்
காதலை கவுரவிக்கும்
ஏற்பாடுகள்
என்பாய்
காதலித்துப் பார்!
இருதயம் அடிக்கடி
இடம் மாறித் துடிக்கும்...
நிசப்த அலைவரிசைகளில்
உனது குரல் மட்டும்
ஒலிபரப்பாகும்...
உன் நரம்பே நாணேற்றி
உனக்குள்ளே
அம்புவிடும்...
காதலின்
திரைச்சீலையைக்
காமம் கிழிக்கும்...
ஹார்மோன்கள்
நைல் நதியாய்ப்
பெருக்கெடுக்கும்
உதடுகள் மட்டும்
சகாராவாகும்...
தாகங்கள் சமுத்திரமாகும்...
பிறகு
கண்ணீர்த் துளிக்குள்
சமுத்திரம் அடங்கும்...
காதலித்துப் பார்!
சின்ன சின்ன பரிசுகளில்
சிலிர்க்க முடியுமே...
அதற்காகவேனும்
புலன்களை வருத்திப்
புதுப்பிக்க முடியுமே...
அதற்காகவேனும்...
ஆண் என்ற சொல்லுக்கும்
பெண் என்ற சொல்லுக்கும்
அகராதியில் ஏறாத
அர்த்தம் விளங்குமே..
அதற்காகவேனும்...
வாழ்ந்துகொண்டே
சாகவும் முடியுமே
செத்துக் கொண்டே
வாழவும் முடியுமே...
அதற்காக வேணும்...
காதலித்துப் பார்!
----------------------------------------------------------------------------------------------------------------------

தமிழர்களின் தொன்மை





காங்கேயம் காளைகளை பற்றி நம்மில் சிலருக்கு தெரியும் , சிலருக்கு தெரியாது . தமிழ் நாட்டின் அடையாளமாக திகழ்கிறது காங்கேயம் காளைகள். உலகில் வேறெங்கும் இது போன்ற திமில் உள்ள காளைகளை பார்க்க முடியாது. உலகின் தொன்மை விளையாட்டான ஏறு தழுவதல் என்று சொல்லக் கூடிய ஜல்லிக் கட்டு போட்டியில் இந்த அரிய வகையான காளைகளை இன்றும் தமிழ்நாட்டில் நாம் பார்க்கலாம். அண்மையில் சங்கம் நான்கு நிகழ்ச்சியில் காங்கேயம் காளைகள் பற்றி கார்த்திகேயா சிவசேனாதிபதி கூறுகையில் , இந்த அரிய வகை காளைகள் தற்போது அழிந்து வரும் உயிரினமாக கருதப்படுகிறது. இங்கிருக்கும் பண்ணையார்கள் அதை பராமரிக்க விரும்பாமல் கேரளாவிற்கு ஏற்றுமதி செய்து விடுகின்றனர் . அதனால் இக்காளைகளின் எண்ணிக்கை பெருமளவில் குறைந்து வருகிறது என்று சுட்டிக் காட்டினார். கார்த்திகேயன் ஈரோட்டில் காங்கேயம் காளைகள் வளர்க்கும் பண்ணையை பராமரித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத் தக்கது

மேலும் வரலாற்று ரீதியான தகவல் அவர் நமக்கு தருகையில்..
இதே வகையான காளைகள் தான் சிந்து சமவெளியில் 5000 ஆண்டுகளுக்கு முன்பு வளர்க்கப் பட்டது . சிந்துவெளியில் நமக்கு கிடைத்த காளை முத்திரையில் இப்போது தமிழகத்தில் இருக்கும் காளையை போன்றே திமில் மற்றும் உருவ அமைப்பை ஒத்த காளையை பார்க்க முடிகிறது . இத்தகைய திமில் அமைப்பு வேறு எந்த காளைக்கும் உலகில் கிடையாது . தமிழர்கள் சிந்து வெளியில் வாழ்ந்ததற்கு இதை விட பெரிய சான்று வேறு கிடையாது . ஆனால் இந்தக் காளை எப்படி தமிழக நிலப்பரப்பிற்கு வந்தது? ஒரு வேளை அங்கிருந்து தமிழர்கள் கால் நடையாகவே காளைகளை ஓட்டி வந்திருக்கலாம். அல்லது தமிழர்கள் சிந்து வெளி வரை இப்படியான காளைகளை கொண்டு சென்று வளர்த்து இருக்கலாம் . இது இன்னும் புரியாத புதிராகவே இருக்கிறது.

எப்படியோ தமிழர்களின் தொன்மையை இன்றளவும் இந்த அரிய வகை காங்கேயம் காளைகள் பறை சாற்றுகின்றன . இக்காளைகளை அழிய விடாமல் பராமரிப்பது தமிழர்களின் கடமையும் ஆகும் .

சொர்கமே என்றாலும் அது சோழவந்தான் போல வருமா?
















வாடிப்பட்டி

Vadipatti


                     இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ளமதுரை மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.


வாடிப்பட்டி வட்டம் , தமிழ்நாட்டின் மதுரை மாவட்டத்தில் உள்ள ஏழு வட்டங்களில் ஒன்றாகும். இந்த வட்டத்தின் தலைமையகமாக வாடிப்பட்டி நகரம் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் 77 வருவாய் கிராமங்கள் உள்ளன



அணு உலை - ஏன் எதற்கு எப்படி?

அணு உலையில் இந்த அணு உலை எதிர்ப்பாளர்கள் கேட்காத கேள்வி ஒன்னு இருக்கு. அது  அணு உலை எல்லாம் சரியாத்தான் கட்டியிருக்கு என சொல்றீங்க. பூகம்பம் போன்ற இயற்கை பேரிடர் வராத இடத்தில் கட்டியிருக்கு என சொல்றீங்க.  ஆனா யாராச்சும் அந்த இடத்துல குண்டு வச்சுட்டா? அணு உலைக்கு வைக்கலீன்னாலும் அதோட கண்ட்ரோல் ரூம்முக்கு வச்சுட்டா என்ன செய்ய? குண்டு கூட வேணாம் போர் வந்து மேலேருந்து குண்டு வீசினா என்ன செய்ய? இல்லாட்டி 9/11 தாக்குதல் மாதிரி விமானத்தோடு மோதினா?  ஆபத்து தானே? (எப்படி எல்லாம் எதிர் தரப்புக்கு எடுத்து சொல்லிக்கொடுக்கவேண்டியிருக்குது  :-))))) )  சரியான கேள்வியே. இதுக்கும் ஏற்பாடு பண்ணியிருக்காங்க.  மிக எளிமையான தீர்வே. மொத்த அணு உலையும் ஒரு பெரிய காங்கிரீட் கட்டிடத்திற்குள் இருக்கும். வெளியில் இருந்து எதுவும் உள்ளே போகாது, உள்ளே இருந்தும் எதுவும் வெளியே வராது. என்ன குண்டு போட்டாலும் எதுவும் ஆகாது.  இதை செர்னோபில் போன்ற விபத்துக்களுக்கு அப்புறம் கத்துக்கிட்டாங்க. இப்பவும் புகுஷிமாவில் அணு உலை பார்க்கமுடியும். ஆனால் கூடங்குளத்திலோ மற்ற இந்திய அணு உலைகளிலோ பார்க்கமுடியாது. நமக்கு தெரிவது இந்த காங்கரீட் கட்டிடமே. இதனுள் இருக்கும்போது வெடித்தாலும் பாதிப்பு வெளியே வராது.   அடுத்து கழிவு நீர்  அணு உலையில் இருந்து வெளியேறும் நீரால் கடல்வாழ் உயிரினங்களுக்கு பாதிப்பு என இங்கு பலர் சொல்லக்கேட்டிருப்பீர்கள்  ஆனால் அணு உலையின் வடிவமைப்பை பார்த்தாலே இது நடக்க முடியாத ஒன்று என புரியும். அணு உலையின் குளிர்விக்கும் நீர் பாய்லர்களில் எப்படி பயன்படுகிறதோ, நிலக்கரி கொண்டு செயல்படும் அனல் மின்நிலையத்தில் எப்படி பயன்படுகிறதோ அப்படி மட்டுமே பயன்படும். ஆனால் இது ஏன் திரும்ப திரும்ப சொல்லப்படுகிறது.  இது புரிதலில் இருக்கும் பிரச்சினை.  அணு உலையை அனல் மின்சாரம் போல் நினைத்து  நிலக்கரி = யுரேனியம் ஆக்சிஜன் = யுரேனியம்  என்று நினைத்துக்கொள்வதால் வரும் பிரச்சினை. ஆனால் அணு உலையில் மின்சாரம் எடுக்க ஆக்சிஜன்/காற்று தேவையில்லை என தெரிந்தால் இது புரியும். ஆனால் இதிலே இன்னோன்றும் இருக்கிறது.  சென்னையின் கூவத்தை கடலில் விட்டுவிட்டு அதனால் குறையும் மீன் வளத்திற்கு கல்பாக்கத்தை காரணமாக சொல்வது. நாம் பயன்படுத்தும் சோப்பு, கிருமிநாசினிகள் என பலவும் கூவம் வழியாக கடலுக்கே செல்கினறன. அதனால் விளையும் அபாயங்கள் பல. ஆனால் இதை வசதியாக மறைந்துவிட்டு அணு உலையின் மீது பழிபோடுவது எளிதான செயல் என்பதால் இது நடக்கிறது.   இதிலே இன்னோன்றும் உண்டு. வெப்பம் அதிகமாக இருந்தால் குறைத்துக்கொள்ளலாம். அது எவ்வளவு என்பதை ஆய்வாளர்கள் தான் முடிவு செய்யவேண்டும்.