வாக்காளர் பட்டியல்



வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா என இந்த இணையளம் மூலமாகவும் சரிபார்த்து கொள்ளலாம்



தமிழ்நாடு அரசு
தேர்தல் துறை
1. உங்கள் மாவட்டத்தை தேர்வு செய்க
2. உங்கள் சட்டமன்றத் தொகுதியினை தேர்வு செய்க  
 வாக்காளர் அடையாள அட்டை எண் மூலமாக தேடவும்
 வாக்காளர் பெயர் மூலமாக தேடவும்
 வாக்குச்சாவடி , தெரு பெயர் மூலமாக தேடவும்
 தெரு பெயர் மூலமாக தேடவும்
                                Click here

       தமிழ்நாடு அரசு தேர்தல் துறை

யானை (Elephants)




யானைகள் பற்றிய தகவல்

1. உயிரினங்களில் யானையால் மட்டுமே துள்ளி குதிக்க முடியாது.

2.தண்ணீர் இருப்பதை சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்தில் வரும்போதே வாசனை மூலம் தெரிந்துகொள்ளும்.

3. யானையின் பற்கள் சுமார் 5 கிலோ எடை வரை இருக்கும்.

4. ஆப்ரிக்கன் யானைக்கு நான்கு பற்கள்தான். ஆறு முறை பற்கள் விழுந்து முளைக்கும். கடைசி நேரம் பல் விழும்போது சரியாக சாப்பிடாது.

5. நன்கு வளர்ந்த ஆப்ரிக்கன் யானையின் தந்தத்தின் நீளம் சுமார் ஏழு அடிகள் வரை இருக்கும்.

6. யானை துதிக்கையின் மூலம் 7.5 லிட்டர் தண்ணீரை எடுத்து குடிக்கும் திறனுடையது.

7. ஒரு நாளைக்கு சுமார் 350 லிட்டர் தண்ணீரை குடிக்கும்.

8. ஆப்ரிக்கன் யானைகள் சூரிய வெப்பத்தில் இருந்து காத்து கொள்வதற்கு முதலில் தண்ணீரை எடுத்து தனது உடலில் தெளிக்கும் பின் புழுதியை எடுத்து உடம்பில் தூற்றி கொள்ளும். அந்த சகதி லேயர் மூலம் வெப்பத்தில் இருந்து காத்துக்கொள்ளும். பூச்சிகடியில் இருந்தும் இப்படித்தான் காத்துக்கொள்ளும்.

9. யானையின் துதிக்கையின் நுனியில் உள்ள இரண்டு விரல்கள் மூலம் சின்ன குண்டுஊசியை கூட எடுத்துவிடும்.

10. யானைகளால் அறுபது கட்டளை வார்த்தைகளை புரிந்து கொள்ளும்.






11. சராசரியாக சுமார் எழுபது வருடம் வரை உயிர்வாழும்

12. யானையின் தகவல் தொடர்பு பூனையை போன்றே இருக்கும்.

13. பொதுவாக ஒரு யானை கூட்டத்தில் ஓன்று முதல் ஆயிரம் யானைகள் வரை இருக்கும், கூட்டத்தை வழிநடத்தி செல்வது வயதான பெண் யானைதான்.

14. பொதுவாக யானை கூட்டத்தில் பெண் யானைகளும் குட்டிகளும் தான் இருக்கும். வயது வந்த ஆண் யானைகள் கூட்டத்தை விட்டு பிரிந்து விடும்.

15. நான்கு வருடத்திற்கு ஒரு முறைதான் குட்டி போடும், அதிசயமாக சிலநேரங்களில் இரண்டு குட்டிகள் கூட போடும்.

16. 24 மணிநேரம் தண்ணீர் அருந்தவில்லை எனில் உயிரை விட்டுவிடும்.

17. யானை துதிக்கை சுமார் 1,50,000 தசைகளால் ஆனது. மனிதன் உடம்பில் மெத்த தசைகளே 640 தான்.

18. தாய்லாந்து நாட்டின் தேசிய விலங்கு யானைதான்

பார்த்ததில் பிடித்தவை













தெரிந்து கொள்வோம்


வைரமுத்து





காதலித்துப் பார்!
உன்னைச் சுற்றி
ஒளிவட்டம் தோன்றும்...
உலகம் அர்த்தப்படும்...
ராத்திரியின் நீளம்
விளங்கும்....
உனக்கும்
கவிதை வரும்...
கையெழுத்து
அழகாகும்.....
தபால்காரன்
தெய்வமாவான்...
உன் பிம்பம் விழுந்தே
கண்ணாடி உடையும்...
கண்ணிரண்டும்
ஒளிகொள்ளும்...
காதலித்துப்பார் !
தலையணை நனைப்பாய்
மூன்று முறை
பல்துலக்குவாய்...
காத்திருந்தால்
நிமிஷங்கள் வருஷமென்பாய்...
வந்துவிட்டால்
வருஷங்கள் நிமிஷமென்பாய்...
காக்கைகூட உன்னை
கவனிக்காது
ஆனால்...
இந்த உலகமே
உன்னை கவனிப்பதாய்
உணர்வாய்...
வயிற்றுக்கும்
தொண்டைக்கமாய்
உருவமில்லா
உருண்டையொன்று
உருளக் காண்பாய்...
இந்த வானம்
இந்த அந்தி
இந்த பூமி
இந்த பூக்கள்
எல்லாம்
காதலை கவுரவிக்கும்
ஏற்பாடுகள்
என்பாய்
காதலித்துப் பார்!
இருதயம் அடிக்கடி
இடம் மாறித் துடிக்கும்...
நிசப்த அலைவரிசைகளில்
உனது குரல் மட்டும்
ஒலிபரப்பாகும்...
உன் நரம்பே நாணேற்றி
உனக்குள்ளே
அம்புவிடும்...
காதலின்
திரைச்சீலையைக்
காமம் கிழிக்கும்...
ஹார்மோன்கள்
நைல் நதியாய்ப்
பெருக்கெடுக்கும்
உதடுகள் மட்டும்
சகாராவாகும்...
தாகங்கள் சமுத்திரமாகும்...
பிறகு
கண்ணீர்த் துளிக்குள்
சமுத்திரம் அடங்கும்...
காதலித்துப் பார்!
சின்ன சின்ன பரிசுகளில்
சிலிர்க்க முடியுமே...
அதற்காகவேனும்
புலன்களை வருத்திப்
புதுப்பிக்க முடியுமே...
அதற்காகவேனும்...
ஆண் என்ற சொல்லுக்கும்
பெண் என்ற சொல்லுக்கும்
அகராதியில் ஏறாத
அர்த்தம் விளங்குமே..
அதற்காகவேனும்...
வாழ்ந்துகொண்டே
சாகவும் முடியுமே
செத்துக் கொண்டே
வாழவும் முடியுமே...
அதற்காக வேணும்...
காதலித்துப் பார்!
----------------------------------------------------------------------------------------------------------------------