THOTTUKKA ENNA VEANUM







தக்காளி சட்னி

தேவையான பொருட்கள்

    தக்காளி - 2
    வெங்காயம் - 10
    பூண்டு - 4 பல்
    காய்ந்த மிளகாய் - 6
    புளி - ஒரு கோது
    எண்ணெய், கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயம் - தாளிக்க
    உப்பு

செய்முறை

    தக்காளி வெங்காயத்தை இரண்டாக நறுக்கிக் கொள்ளவும்.
    வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு, நறுக்கிய வெங்காயம், தக்காளி, மிளகாய், பூண்டு, புளி சேர்த்து நன்கு வதக்கவும்.
    சூடுபோக ஆற விட்டு, உப்பு சேர்த்து நன்கு விழுதாக அரைக்கவும்.
    வாணலியில் எண்ணெய் விட்டு, கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயம் தாளித்து சட்னியில் சேர்த்து பரிமாறவும்.
_______________________________________________________________________________________

தேங்காய் சட்னி

தேவையான பொருட்கள்

    அரைக்க
    தேங்காய்.............3துண்டு
    பொரிகடலை..........5&6 தேக்கரண்டி
    பூண்டு.........3பல்
    புளி.........சிறிது
    உப்பு........தேவைக்கு
    பச்சைமிளகாய்.........6
    தாளிக்க
    கடுகு,உளுந்து தலா.........1தேக்கரண்டி
    சின்ன வெங்காயம் .....சிறிது
    கறிவேப்பிலை...........சிறிது
    பட்டை வத்தல்...........2


செய்முறை

    மிளகாயை சிறிது எண்ணெய் விட்டு லேசாக வதக்கி அரைக்க கொடுத்தவைகளுடன் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும்
    தாளிக்க கொடுத்தவைகளை தாளித்து அரைத்த சட்னியில் கொட்டவும்
_______________________________________________________________________________________

மாங்காய் சட்னி

தேவையான பொருட்கள்

    புளிப்பான சிறிய மாங்காய் ஒன்று
    துருவிய தேங்காப்பூ ஒரு மூடி
    பச்சை மிளகாய் 3
    கடுகு ஒரு டீஸ்பூன்
    உளுந்து ஒரு டீஸ்பூன்
    மிளகா வத்தல் 2
    பெருங்காயப்பொடி ஒரு டீஸ்பூன்
    உப்பு தேவையான அளவு
    எண்ணை 2ஸ்பூன்


செய்முறை

    மாங்காயை நன்கு கழுவி, தோல் சீவி மிருதுவாகத் துருவிக்கொள்ளவும்.
    கடாயில் எண்ணை ஊற்றி,கடுகு, பருப்பு, மிளகாவத்தல் சிவக்க வறுக்கவும்.
    இத்துடன் தேங்கா பூ,மிளகாய் மாங்கா துருவல் பெருங்காயம் சேர்க்கவும்.
    உப்பு சேர்த்து மிக்சியில் கரகரப்பாக அரைக்கவும்.


____________________________________________________________________________________________

மிளகாய் சட்னி

தேவையான பொருட்கள்

    மிளகாய் தூள் - 2 டீஸ்ப்பூன்
    பெரிய வெங்காயம் - 1
    பூண்டு - 5 பல்






செய்முறை

    கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை உப்பு சேர்த்து மிக்சியில் அரைக்கவும்
    தேவைப்பட்டால் கடுகு உளுத்தம்பருப்பு கறிவேப்பிலை தாளித்து கொட்டவும்
    மிளகாய் சட்னி ரெடி
_________________________________________________________________________________________

கொத்தமல்லி சட்னி

தேவையான பொருட்கள்

    கொத்தமல்லிகீரை -1கட்டு
    சின்னவெங்காயம் -10
    தனியா -1ஸ்பூன்
    சீரகம் -1/4ஸ்பூன்
    காய்ந்தமிளகாய் -1
    பூண்டு -2பல்
    இஞ்சி -1சிறுதுண்டு
    தேங்காய் துறுவல் -1/4கப்
    பொட்டுகடலை -1ஸ்பூன்
    புளி -சிறிது
    உப்பு -தேவையான அளவு
    எண்ணை -1ஸ்பூன்

செய்முறை

    கொத்தமல்லிகீரையை சுத்தம்செய்து அலசி வைக்கவும்.
    வெங்காயம்,பூண்டு தோல் உரித்துவைக்கவும்.
    இஞ்சியை சுத்தம் செய்து வைக்கவும்.
    வாணலியில் எண்ணை ஊற்றி வெங்காயம் போட்டு வதக்கி தனியா,சீரகம்,பூண்டு,இஞ்சி,காய்ந்தமிளகாய் போட்டு நன்குவதக்கவும்.
    கொத்தமல்லி கீரை போட்டு நன்கு சுருள வதக்கவும்.தேங்காய் துறுவல்,பொட்டுகடலை,புளி,உப்பு போட்டு வதக்கி ஆறவைக்கவும்.
    ஆறியவுடன் மிக்ஸியில் போட்டு சிறிது தண்ணீர் சேர்த்து அரைக்கவும்.
    சுவையான கொத்தமல்லி சட்னி ரெடி.
__________________________________________________________________________________________

கார சட்னி


தேவையான பொருட்கள்

    1. வெங்காயம் - 1
    2. தக்காளி - 1
    3. கொத்தமல்லி இலை - 1/4 கப்
    4. உப்பு - தேவைக்கு
    5. மிளகாய் வற்றல் - 2
    6. தேங்காய் துருவல் - 1 மேஜைக்கரண்டி



செய்முறை

    வெங்காயம், தக்காளி சிறிதாக நறுக்கவும்.
    கடாயில் எண்ணெய் 2 தேக்கரண்டி விட்டு காய்ந்ததும் மிளகாய் வற்றல், வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
    வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.
    தக்காளி வதங்கியதும் தேங்காய் துருவல் சேர்த்து எடுக்கவும்.
    இத்துடன் கொத்தமல்லி, உப்பு, தேவைக்கு தண்ணீர் விட்டு நன்றாக அரைக்கவும்.

புள்ளி ராஜா M.B.B.S


    நோயாளி: வயிறு எரியுது  டாக்டர்..

         டாக்டர்: நான் இன்னும் பீஸ் எவ்வளவுன்னு சொல்லவே                                       இல்லியே?...

    பல் டாக்டர்: "வரவர இந்த பேஷண்ட் தொல்லை தாங்க முடியல."

          மற்றவன்: "ஏன் என்னாச்சு."
          பல் டாக்டர்: "பல்வலின்னு வந்த ஒருவர் பல்செட்டைக் கழட்டிக்                                       கொடுக்கிறாரு..."

    நர்ஸ் :- டாக்டர் உங்க கிளீனிக் பக்கத்துல வந்து இருக்கிற டாக்டர் எட்டாவது படிச்சி இருக்காராம்!

          டாக்டர் :- அடப்பாவி! என்னை விட 3 வருஷம் அதிகம் படிச்சு இருக்கானே!                   போட்டி கடுமையாகத்தான் இருக்கும்.

    நோயாளி : டாக்டர், நீங்க எழுதிக் குடுத்த TONIC'la காலைல ஒரு மூடி , ராத்திரிக்கு ஒரு மூடி சாப்பிட சொன்னீங்க ??

          டாக்டர் : ஆமாம் ,
          நோயாளி : ஆனா , அந்த Tonic பாடிட்லெ ' ஒரெ ஒரு மூடி தானெ இருக்குது ?
          டாக்டர் : ?????

    நோயாளி : டாக்டர் ..! எனக்கு தினமும் 16 மனி நேரம் தூக்கம் வருது..! அதுக்கு அலுப்பு தானே காரணம் ..?

          டாக்டர் : அதுக்கு காரணம் அலுப்பு இல்ல..! " கொழுப்பு"..

    அர்த்த ராத்திரியில் அந்த டாக்டர் கத்தியோட எங்க போறாரு ?

          "அவருக்கு தூக்கத்துல ஆபரேஷன் பண்ற வியாதியாம் ".

    நோயாளி : வயிறு எரியுது டாக்டர்

          டாக்டர் :எப்போதிலிருந்து?
          நோயாளி : என் மனைவி பக்கத்து வீட்டு காரனோட சிரிச்சுச் சிரிச்சுப்                               பேசினதை  பார்த்ததிலிருந்து டாக்டர்.

    என்னங்க! அவர் வாசல்ல ரோமியோபதி டாக்டர்னு போர்டு போட்டிருக்கார்!ஆமாங்க. அந்த டாக்டர் பயங்கர ஜொள்ளுப் பார்ட்டி!


    ஆஸ்பத்திரிக்கு என் மனைவியை கூட்டிட்டு போகும் போது வாசல்படியிலேயே பிரசவம் ஆயிடுச்சு

          அப்ப டோர் டெலிவரின்னு சொல்லு...!

    பேஷண்டுக்குத்தான் தூக்கத்துல நடக்கிற வியாதி. . . சரி நர்ஸ் ஏன்

          பின்னாலேயே நடக்கிறாங்க..?
         அவங்களுக்கு தூக்கத்துலேயே கண்காணிக்கற வியாதியாம் ..!

    நோயாளி: டாக்டர்... டாக்டர்.. எனக்கு வயித்துல ரயில் ஓடற மாதிரி அடிக்கடி சத்தம் கேட்குது டாக்டர்.

           டாக்டர்: (வயிற்றைப் பரிசோதித்துப் பார்த்துவிட்டு) அப்படியா... எனக்கு                            ஒண்ணும் கேட்கலியே...
           நோயாளி: ஒருவேளை சிக்னல்ல நிக்குதோ!


    அவர் போலி டாக்டர்னு எப்படிச் சொல்றே?

          ஒரு பேஷண்டுக்கு சிறுநீரகத்தில் கல் அடைப்புன்னதும்  உடைக்க கடப்பாரை               தேடுறாரு!

    நர்ஸ் : ஐந்து நிமிஷம் கழிச்சு வந்திருந்தா இவரைக் காப்பாத்தியிருக்கலாம் !

          நபர் : ஏன்?
          நர்ஸ் : டாக்டர் ஊருக்குக் கிளம்பிப் போயிருப்பார் !

    டாக்டர் மு.முத்தண்ணா : "சோமு...... நீ....ஒரு மணி நேரத்துக்கு முன்னாடி

          கொண்டு வந்திருந்தா, பிழைக்கவெச்சிருக்கலாமே!"
          சோமு : "என்ன டாக்டர் ஸார் நீங்க.....என் மாமா விஷம் குடிச்சே பத்து
          நிமிஷம் தான் ஆகுது...."

    நோயாளி கண் டாக்டரிடம்: டாக்டர், எனக்கு எதைப் பார்த்தாலும் ரெண்டு ரெண்டா தெரியுது.

          கண் டாக்டர்: அது சரி. அதுக்கு ஏன் நீங்க நாலுபேரா வந்திருக்கீங்க?

புது குறள்

 பணமிலார்எல்லாம் தமக்குரியர் பணம்உடையார்
என்பு(று)ம் உரியர் பிறர்க்கு...

அம்மா சுட்ட தோசை ருசித்திடும்-
ருசிக்காதேமனைவி சுட்ட தோசை...

முதுகில் குத்துவோரை ஒறுத்தல் அவர் மூக்குவீங்க
மூஞ்சியில் குத்தி விடல்...

கள்ளஓட்டு லஞ்சம் வெட்டுக்குத்து இந்நான்கும்
செய்வது அரசியல்வாதிக்கியல்பு...

யாகாவாராயினும் Password காக்க காவாக்கால்
சோகாப்பர் hack செய்யப்பட்டு.

விரும்பிய மனம் விரும்பா விடின்
துரும்பா இளைப்பார் தூய காதலர்..

ரன் எடுத்து ஆடுவாரே ஆடுவார்...
மற்றெல்லாம் டக்கெடுத்து பின் செல்பவர்

CHAT எனில் YAHOO-CHATசெய்க இல்லையேல்
CHATடலின் CHATடாமை நன்று

மாவினால் சுட்ட வடை உள்ளாறும் ஆறாதே
வாயினால் சுட்ட வடை

மொக்கை போடுதல் எல்லார்க்கும் எளிது
அரியவாம் கடலைபோ டுதல்

பீடியால் சுட்ட புண் உள்ளாறும்
ஆறாதே லேடியால் கெட்ட மனம்

கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை தன் திருமணத்தன்று
தாகசாந்தி செய்ய மறுக்கும் நண்பனுக்கு

கடி ஜோக்ஸ்

ஒரு பையன் தெருவுல போகும்போது தும்மிக்கிட்டே போனான் ஏன்னு கேட்டா

           அவன் `பொடி`ப்பையனாம்

    ஒரு ஆளு ஒரு காக்கா வளர்த்தானாம்

          அந்த காக்காவ தொட்டா ரொம்ப ஸாப்ட்டா இருக்குமாம்
          அவன் அதுக்கு என்ன பேர் வைப்பான்?
           ?
           ?
            MI CROW SOFT


    படம் போட்டதும் எல்லாரும் தும்முறாங்களே ஏன்?

         அதுதான் `மசாலா` படமாச்சே...

    அந்த பாம்புக்கு என்ன நோயாம்?

           வேறென்ன புற்று நோயாம்

    மீன் புடிக்கரவனை மீனவன்னு சொல்ல முடியும், ஆனா மான் பிடிக்கரவனை மாணவன்னு சொல்ல முடியாது


    பாம்பு எத்தனை தடவை படம் எடுத்தாலும் அதால ஒரு தடவை கூட Theatre-ல ரிலீஸ் பண்ண முடியாது …


    ““மொய் எழுதறவருக்குப் பக்கத்துலேயே ஒருத்தர் நின்னுக்கிட்டிருக்காரே யார் அவரு?” “”அவர்தான் “மொய்க்’ காப்பாளர்!”


    "காதலர்கள் ஏன் எப்பவும் பொய்யே பேசுறாங்க?"

          "அவங்க "மெய்" மறந்து காதலிக்கிறவங்களாச்சே!"

    கோபம் வந்தால் அழுது தீர்த்துடறா என் மனைவி நீ பரவாயில்லே... என் மனைவி அடிச்சுத் தீர்த்துடறா...!


    "அவர் கொஞ்சம் உடம்பு நல்லா இல்லைன்னாகூட "செக்கப்" பண்ணக் கிளம்பிடுவாரு..." "உடம்பு நல்லா இருந்தா...?"

          "பிக்கப் பண்ணக் கிளம்பிடுவாரு...!"

    "உன் மாமியார் அடிக்கடி ஆஸ்பத்திரிக்குப் போய் எதுக்கு வாயில் தையல் போட்டுக்கறாங்க...?"

          "அவங்கதான் வாய் கிழியப் பேசுவாங்களே!"


    கணவர்: காஃபி ரொம்ப ஸ்ட்ராங்கா இருக்கே..என்ன போட்ட?

          மனைவி: ஓரு ஸ்பூன் சிமெண்ட் போட்டேன்.......

    தண்ணீரை "தண்ணீ"ன்னு சொல்லலாம் ஆனா பன்னீரை "பன்னி"ன்னு சொல்லமுடியாது


    நாய்க்கு என்னதான் நாலு கால் இருந்தாலும்,

          அதால ஒரு மிஸ்டுகால கூட குடுக்க முடியாது?


    பழம் நழுவி பாலில் விழுந்து டம்பளர் உடைந்து போச்சு. ஏன்?விழுந்தது பலாப்பழம் ஆச்சே


    ஆபிசுக்கு குடிச்சிட்டு போதையில போனது தப்பாப் போச்சுதண்ணியில்லாக் காட்டுக்கு மாத்திட்டாங்களே!


    வயசுக்கு வந்த தமிழ் நடிகர் யார்?   மேஜர் சுந்தர்ராஜன்


    நெப்போலியன் :- என்னுடைய அகராதியில் முடியாது என்கின்ற வார்த்தையே கிடையாது

          சர்தார்ஜி :- இப்போ சொல்லி என்ன பிரயோசனம், வாங்கும்போதே பார்த்து                   வாங்கியிருக்கணும்



    லவ் incoming call மாதிரி உடனே அட்டன்ட் பண்ணலேனா misscall ஆகிடும்

          ஆனா friendship என்பது sms மாதிரி உடனே அட்டென்ட் பண்ணலனாலும்
          இன்பாக்ஸ் இல் நமக்காக wait பண்ணும்.....


    ஒரு யானை வேகமா ஓடிச்சாம் அங்க போய்

          என்ன வாங்கும் ? மூச்சு வாங்கும் .

மொக்கை தத்துவங்கள் ...

   வாழ்க்கை என்பது பனமரம் போல ஏறினா நுங்கு! விழுந்தா சங்கு!

    பயம் தான் தோல்விக்கு முக்கிய காரணம்…அதனால் இனிமேல் கண்ணாடிய பாக்காதீங்க!

    ஆண்கள் பொய் சொல்ல மாட்டார்கள்!  பெண்கள் நிறைய கேள்வி கேட்காமல் இருந்தால்…

    வெற்றியை தேடி அலைந்த போது “வீண் முயற்சி” என்றவர்கள். வெற்றி கிடைத்ததும் “விடா முயற்சி” என்றார்கள்.இதுதான் உலகம்.

    நீ செய்யும் தவறு கூட புனிதம் ஆகும்.அதை நீ ஒப்பு கொள்ளும் போது…

    ஆசை படுவதை மறந்து விடு!ஆனால் ஆசை பட்டதை மறந்து விடாதே!

    தூசி பட்ட கண்களும், காதல் பட்ட இதயமும், எப்போதும் கலங்கி கொண்டே இருக்கும்…

    ஒருவரை கூட காதலிக்காத பெண் இருக்கலாம் ,ஒருவரை மட்டும் காதலித்த பெண் இருக்கமுடியாது ......

    சாலைய பார்த்தா சமத்து சேலைய பார்த்தா விபத்து.

    குவார்ட்டர் அடிச்சுட்டு குப்புற படுக்கலாம் குப்புற படுத்துட்டு குவார்ட்டர் அடிக்க முடியாது.

    ஒரு பெண்ணுக்கு புகுந்தவீடு பிறந்த வீடு என இரண்டு இருக்கும்போது ஏன் ஆணுக்கு சின்ன வீடு பெரிய வீடு இருக்க கூடாது.

    தண்ணீர் மேல கப்பல் போனா உல்லாசம்.கப்பல் மேல தண்ணீர் போனா கைலாசம்

    ஆயிரம் தான் இருந்தாலும் ஆயிரத்து ஒண்ணுதான் பெருசு
    காசு இருந்தா கால் டாக்சி!! காசு இல்லைன்னா கால் தான் டாக்சி!!!

    டிக்கெட் வாங்கிட்டு உள்ள போனா அது சினிமாத் தியேட்டர்.உள்ளே போயிட்டு டிக்கெட் வாங்கினாஅது ஆபரேஷன் தியேட்டர்.
    தினமும் காலண்டரைக் கிழிக்கிறதுபெரிய விஷயமில்லை;
    ஒவ்வொரு நாளும் நாம் என்னத்தைக் கிழிச்சோம்கிறது தான் பெரிய விஷயம்....
    குக்கர் விசிலடிச்சு  பஸ்சு போகாது.கண்டக்டர் விசிலடிச்சு சோறு வேகாது?

    என்ன தான் வாழை தார் போட்டாலும் அதை வைத்துக்கொண்டு ரோடு போட முடியுமா?

    காக்கா என்னதான் கருப்பா இருந்தாலும் அது போடுற முட்டை வெள்ளைமுட்டை என்னதான் வெள்ளையா இருந்தாலும் அதுக்குள்ள இருந்து வர்ற காக்கா கருப்புதான்..

    Files-ன்னா உக்காந்து பாக்கணும்.. Piles-ன்னா பாத்து உக்காரணும்..

    பாம்பு எத்தனை தடவை படம் எடுத்தாலும் அதால ஒரு தடவை கூட Theatre-ல ரிலீஸ் பண்ண முடியாது …

    பணம் இல்லாவிட்டால் உன்னை யாருக்கும் தெரியாது. பணம் இருந்தால் உன்னையே உனக்கு தெரியாது.