தெரிந்துக் கொள்ளுங்கள் !!!

ஆப்பிள் கம்ப்யூட்டர்ஸ்

இதன் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் விரும்பி சாப்பிடும் பழம் ஆப்பிள்! நிறுவனம் தொடங்கி மூன்று மாதங்களாகியும் பெயர் வைக்காமல் இருந்தார். தன் சகாக்கள், கடைசிநாள் மாலைக்குள் வேறு பெயர்களை பரிந்துரைக்காவிட்டால் ஆப்பிள் என்று பெயர் சூட்டப்போவதாகச் சொன்னார். ஆப்பிள் கனிந்தது.


யாஹு

ஜொனாதன் ஸ்விஃப்ட் எழுதிய ‘குலிவர்ஸ் டிராவல்ஸ்’ என்ற புத்தகத்தில் வரும் பாத்திரம் இது. துறுதுறுவென்று இயங்கும் ஒரு மனிதனின் பெயரை, தன் இணையதளத்திற்கு சூட்டினார்கள், யாஹுவை நிறுவிய ஜெர்ரியாங் மற்றும் டேவிட் ஃபிலோ.


ஜெராக்ஸ்

‘ஜெர்’ என்பது உலர்தலைக் குறிக்கும் கிரேக்கச் சொல்லை வேராகக் கொண்டது. நகலெடுக்கும்போது மை காய்ந்திருக்கும் என்பதைக் குறிக்க சென்டர் காரிஸன் இப்பெயரை வைத்தார். அதற்குமுன், நகலெடுத்தால், மை காய்வதற்குள் மண்டை காய்ந்துவிடும்.


லோட்டஸ்

இதன் நிறுவனர் மிட்ச் கபூர், மகரிஷி மகேஷ் யோகியின் தியானமுறை பயிற்றுனர். பத்மாசனம் இட்டு அமர்கிற யோகாசனத்தின் அடிப்படையில், லோட்டஸ் என்று தன் நிறுவனத்திற்குப் பெயர் வைத்தார்.


அடோப் (ADOBE)

அடோப் நிறுவனர் ஜான் வார்னாக்-கின் வீட்டுக்குப் பின்புறம் ஓடிக்கொண்டிருக்கும் நதியின் பெயர் அடோப்.


சன் மைக்ரோசிஸ்டம்ஸ்

ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் படித்த நான்கு நண்பர்கள் இணைந்து Stanford University Network என்பதை சுருக்கி
SUN MICRO SYSTEMS என்று பெயர் வைத்தனர்.

தெரிஞ்சுக்குவோம்

  1.உலகிலேயே அதிகம் பேருக்கு இருக்கும் பெயர் "முஹம்மது"

2. ஆங்கில கீபோர்டில் ஒரே வரிசையில் அதிக எழுத்துக்கள் பயன்படுத்தப்படு­ம் ஒரு சொல் "TYPEWRITER"

3. அதே போன்று இடது கையினால் மட்டும் டைப் செய்யப்படும்
நீண்ட வார்த்தை 'Stewardesses"

4. வானத்தை நிமிர்ந்து பார்க்க இயலாத ஒரே விலங்கு "பன்றி"

5. Sixth Sick Sheik's Sixth Sheep's Sick - இதுவே ஆங்கிலத்தில் மிகவும் கடினமான "Tongue Twister"

6. 111,111,111 ஐ திரும்ப 111,111,111 ஆல் (111,111,111 x 111,111,111) பெருக்கினால்
12,345,678,987,654,321 என்ற விந்தையான கூட்டுத்தொகை வரும்.

7. எப்போதும் கெட்டுப்போகாத ஒரே உணவு "தேன்"

8. தீப்பெட்டி கண்டுபிடிப்பதற் ­கு முன்பே சிகரெட் லைட்டர் கண்டுபிடிக்கப்ப ­ட்டது.

9. உலகில் மனிதர்கள் அதிகமாக இறப்பதற்கு காரணமாகும் விலங்கு - கொசு

10. தும்மும் போது 'நன்றாய் இரு" "இறைவனுக்கு நன்றி"என்றுசொல்லக் கேட்டிருப்போம். ­, ஆமாம் உண்மையில் தும்மும் போது இதயம் ஒரு 'மில்லி செகண்ட்' நிற்குதாம்

11. பூமியின் எடை 5,972,000,000,000,000,000,000 டன்கள்.

மின்னஞ்சல்லை கண்டுபிடித்த இந்தியர்

e-mail லை கண்டுபிடித்தவர் ஒரு இந்தியார் என்பது நம்மில் எத்தனைப் பேருக்குத் தெரிந்திருக்கும்?

வி. ஏ. சிவா ஐயாதுரை (V. A. Shiva Ayyadurai)
(பிறப்பு திசம்பர் 2 1963, தமிழ்நாடு, இந்தியா) தமிழ்நாட்டில் பிறந்து அமெரிக்காவின் குடிமகனாகிய ஓர் அறிவியலாளரும் புதியன கண்டுருவாக்குநரும் (புத்தியற்றுநரும்) தொழில் முனைவோரும் ஆவார்.
இன்று அறியப்படும் மின்னஞ்சல் ("EMAIL") என்பதை உருவாக்கியவர் என்னும் பெருமைக்குரியவர்.
இவர் 1978 இல் உயர்நிலைப்பள்ளியில் இருந்தபொழுதே மின்வழி அஞ்சல்களை அனுப்பும் மின்னஞ்சல் முறைமையையும், மின்னஞ்சல் என்பதை "EMAIL" என்னும் பெயரிலும் உருவாக்கி நிறுவியவர். இதற்கான காப்புரிமத்தை (காப்புரிமப் படிவம் "TXu-111-775") ஐக்கிய அமெரிக்காவின் காப்புரிம அலுவலகத்தில் இருந்து 1982 இல் பெற்றுள்ளார். இன்று "email" என்னும் பொதுவழக்குப் பெயரோடு (generic name) இவர் ஆக்கிய மின்னஞ்சல் என்னும் முறைமை ஒத்திருப்பதால், இது பற்றி நிறைய கருத்துவேறுபாடுகளும், கணினி வரலாற்றில் சிவா ஐயாதுரையின் இடம் பற்றியும் மாறுபாடுகள் கொண்ட பிணக்கான கருத்துகள் பலவும் இருந்துவருகின்றன..

குட்டிக்கதை



ஒரு குடிகாரன் ஞானி ஒருவரைத் தேடி அவர் இருக்குமிடத்துக்கு வந்தான்.

""நானொரு குடிகாரன். நான் திருந்துவதற்கு ஒரு வழி கூறுங்கள் ஐயா...'' என்று கேட்டுக் கொண்டான்.

அதற்கு ஞானி, ""நாளை மாலை என்னை வந்து பார் சொல்கிறேன் என்றார் ''. மறுநாள் மாலை குடிகாரன் ஞானியைத் தேடி வந்தான்.

அப்போது ஞானி ஒரு தூணைக் கட்டிப் பிடித்துக் கொண்டு நின்றார். அவன் வருவதையறிந்த ஞானி தூணைப் பார்த்து, ""ஐயோ என்னை விட்டுவிடு... விட்டுவிடு...''
என்று கத்திக் கொண்டிருந்தார். உடனே குடிகாரன்,

""நீங்கள்தானே தூணைப் பிடித்துக் கொண்டிருக்கிறீர்கள்? அதை விட்டுவிடுங்கள் '' என்றான்.

உடனே ஞானி சிரித்துக் கொண்டே, ""நான் தூணைப் பிடித்துக் கொண்டிருப்பது போல, நீ தான் குடியைப் பிடித்துக் கொண்டிருக்கிறாய். நீயே விட்டுவிடு என்றார் ...!

அந்த கனமே உணர்ந்த மனிதன் அக்குடியை தவிர்த்தான்.

நீதி: பல பிரச்சனைகளே நாமே உருவாக்கிப் பெரிதுபடுத்தி அதனிலிருந்து வெளியில் வரமுடியாமல் அல்லற்படுகிறோம். நமது குழப்பங்களுக்கு நாமே காரணமென உணரும்போது நாம் அவற்றிலிருந்து விடுதலை பெறுகிறோம்.

தெரிந்துக் கொள்ளுங்கள் !!!


* கண்டங்களில் பெரியது ஆசியா கண்டம்.

* கடல்களில் பெரியது பசுபிக் பெருங்கடல்.

* தீவுகளில் பெரியது ஆஸ்திரேலியா தீவு.

* சிகரங்களில் பெரியது எவரெஸ்ட் சிகரம்.

* மலைகளில் பெரியது இமயமலை.

* ஆறுகளில் பெரியது அமேசான் ஆறு.

* ஏரிகளில் பெரியது காஸ்பியன் ஏரி.

* பாலைவனங்களில் பெரியது சஹாரா பாலைவனம்.

* பாறைகளைப் பற்றிய படிப்புக்கு பெட்ராலஜி என்று பெயர்.

* வெள்ளை யானைகளின் நிலம் என்றழைக்கப் படுவது தாய்லாந்து.

* மலைகளின் நிலம் என்றழைக்கப்படுவது மியான்மர்.

* மணலின் வேதியியல் பெயர் சிலிகான் - டை - ஆக்ஸைடு.

* மண்புழுவுக்கு ஐந்து இதயங்கள் உள்ளன.

* மிக வெப்பமான கோள் வெள்ளி.

* உலகில் 2000 வகையான பாம்புகள் உள்ளன.

* சூரிய ஒளி பூமியை வந்தடைய 8.3 நிமிடங்கள் ஆகின்றன.

* அரபிக் கடலின் ராணி எனப்படுவது கொச்சின்.

* இந்தியாவின் மிகப் பெரிய நூலகம் உள்ள இடம் கொல்கத்தா.

* ஓர் அணிலின் சராசரி ஆயுட்காலம் ஒன்பது ஆண்டுகள்.

* ஃபிலிப்பைன்ஸ் தீவுகளைக் கண்டுபிடித்தவர் மெகல்லன்.

* இரண்டாம் அசோகர் என்றழைக்கப்பட்டவர் கனிஷ்கர்.

* பாண்டிச்சேரியின் பழைய பெயர் வேதபுரி.

* செப்பு நாணயங்களை வெளியிட்டவர் முகமது பின் துக்ளக்.

* எரிமலை இல்லாத கண்டம் ஆஸ்திரேலியா.