1966, டிச.21ல் சுதேசமித்திரனில் வெளியான செய்தி பரபரப்பை
ஏற்படுத்தியது. இந்த இதழில், குளோதி என்ற அமெரிக்க இளைஞர் முருகனைப் பற்றிய
ஆய்வில் ஈடுபட்டதாக குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த செய்தியின் சாராம்சம்
இது தான். ""அமெரிக்க பாதிரியாரின் மகனாக இந்தியாவில் 1936ல் பிறந்தவர்
குளோதி. கொடைக்கானலில் படித்தவர். முருகன் வழிபாடு பற்றி ஆராய்ச்சி
செய்வதற்காக தமிழகத்தில் ஒரு ஆண்டு தங்கியிருப்பார். அமெரிக்காவில் உள்ள
இந்திய ஆராய்ச்சிக்கூட்டத்தைச் சேர்ந்த அறிஞர் குளோதி. இவர் தென்னிந்திய
சமயவரலாறு பற்றிய ஆராய்ச்சிகளை முடித்த பிறகு சிகாகோ பல்கலைக்கழகத்தின்
டாக்டர் பட்டத்திற்குரிய தேர்வு எழுத இருக்கிறார். இவருக்கு தமிழ்
இலக்கியம் மீது ஆர்வம் ஏற்படக் காரணம் உண்டு. சிகாகோ பல்கலைக்கழக
திராவிடவியல் வல்லுநர் டாக்டர் சுமில்சுவலபில், சமய ஆராய்ச்சி வல்லுநர்
டாக்டர் எலியாடி, தமிழ்த்துறைத்தலைவர் டாக்டர் ஏ.கே.ராமானுஜம் ஆகியோர்
குளோதியிடம் தமிழ் பாரம்பரியத்தை ஆய்வு செய்ய ஊக்கப்படுத்தினர். குளோதி இது
பற்றிக் கூறும்போது,"" வரலாற்றின் உண்மைச் செய்திகளை எழுதி வைக்க வேண்டும்
என்று நான் முருகவழிபாடு பற்றிய மரபுகளை ஆராயவில்லை. மனிதனுடைய சமயங்களில்
காணப்படும் பல்வேறு கோட்பாடுகளில் சின்னங்களுக்குப் புதுவிளக்கம்
கொடுப்பதில் மனித குலத்திற்கு துணையாக இருப்பதே எனது நோக்கமாகும். இந்து,
கிறிஸ்தவ மதங்கள் இரண்டிலுமே மறைபொருளான சின்னங்கள் உள்ளன. உதாரணமாக
கிறிஸ்தவர்களுக்கு ஆட்டுக்குட்டி, சிலுவை, புல்லுருவிச் செடி ஆகியவை
குறிப்பிடத்தக்கவை. அதுபோல, முருகனின் வாகனங்களாக ஆடு, மயில், யானை ஆகியவை
கூறப்பட்டுள்ளன, என்று குறிப்பிடுகிறார்.
வேலவனின் வெற்றிநகர்: தேவர்களைக் கொடுமைப்படுத்திய
சூரபத்மனை முருகப்பெருமான் சம்ஹாரம் செய்த தலம் திருச்செந்தூர். முருகன்
தன் படையுடன் வந்து தங்கியதால் ஏற்பட்ட பெயரே படைவீடு. மற்ற முருகன்
தலங்களை படைவீடு என்று குறிப்பிட்டாலும் திருச்செந்தூருக்கே அது
பொருந்தும். தேவதச்சனான விஸ்வகர்மா மூலம் படைவீடு அமைத்து தங்கிய முருகன்,
தேவகுருவாகிய வியாழபகவான் மூலம் அசுரர்களின் வரலாற்றை அறிந்து கொண்டதாக
தலவரலாறு கூறுகிறது. திருச்செந்தூர் என்பதற்கு "புனிதமும் வளமும் பொருந்திய
வெற்றிநகரம் என பொருள்.
செந்தூரில் தீர்த்தமாடும்முறை: திருச்செந்தூர் என்ற
சொல்லை காதால் கேட்டாலே முக்தி தரும். தலம், தீர்த்தம், மூர்த்தி மூன்றும்
அமையப்பெற்றது. எந்தச் செயலையும் முறையாகச் செய்தால் தான் அதன் பலனை அடைய
முடியும். திருச்செந்தூரைப் பொறுத்த வரை தீர்த்தமாடும் முறையில் மிக
கண்டிப்பான முறையை பின்பற்ற வேண்டும். பொதுவாக பக்தர்கள் கடலில் நீராடிய
பிறகு நாழிக்கிணற்றில் நீராடுகிறார்கள். கடலில் தங்கள் மீது படிந்த
உப்புநீரைக் கழுவ வேண்டும் என்பதற்காக இவ்வாறு செய்கிறார்கள். இது சரியான
முறையல்ல. ஸ்கந்த புஷ்கரணி எனப்படும் நாழிக்கிணற்றில் கிணற்றில் நீராடிய
பிறகே கடலில் நீராட வேண்டும். நாழிக்கிணறு சூரபத்மனின் உடலைக் கூறாக்கிய
வேலுக்கு தோஷம் நீங்கும் பொருட்டு அதனை பூமியில் ஊன்றி வரவழைக்கப்பட்டது.
முருகப்பெருமான் வேலை எய்து பாதாள கங்கையை வரவழைத்தார். அதுவே நாழிக்கிணறாக
மாறியது. வேறு எந்த முருகன் தலத்திலும் இது போன்ற தீர்த்தம் கிடையாது.
கடலில் நீராடிய பின் நாழிக்கிணற்றில் குளித்தால், செந்தூர் வந்த
புண்ணியபலனை அடைய முடியாது.
அருள்புரிவாய் கருணைக்கடலே: கந்தசஷ்டி நன்னாளில் முருகனருளால் எல்லா நலமும் வளமும் பெருக இந்த அருளுரையை வாசியுங்கள்.
* ஆனைமுகக் கணபதியின் அன்புத் தம்பியே! ஞானபண்டிதனே! ஆறுமுகப்பெருமானே!
மயில்வாகனனே! சிக்கல் சிங்கார வேலவனே! திருப்பரங்குன்றத்தில் உறையும்
பரம்பொருளே! வள்ளிக்கு வாய்த்தவனே! தஞ்சம் என வந்தவரைத் தாங்கும் தயாபரனே!
செந்தூரில் வீற்றிருக்கும் வெற்றி வேலனே! எப்போதும் என் உள்ளத்தாமரையில்
வீற்றிருந்து அருள்புரிய வேண்டும்.
* ஆறுபடை வீடுகளில் ஆட்சி
நடத்துபவனே! ஆதிசிவனின் அருமைப்பிள்ளையே! சரவணப்பொய்கையில் அவதரித்தவனே!
காங்கேயனே! திருமாலின் மருமகனே! வேதமந்திரங்களின் உட்பொருளாகத் திகழ்பவனே!
தெய்வானை மணவாளனே! தண்டாயுதபாணியே! சோலைமலை சுந்தரனே! குழந்தைக் கடவுளே!
குன்றுதோறும் குடிகொண்டிருக்கும் குமரப்பெருமானே! உனது அருளால் எங்கள்
மனதில் எப்போதும் மகிழ்ச்சி நிலைத்திருக்கட்டும்.
* பிறவிக்கடலைக் கடக்க
வைக்கும் தோணியே! மலையேறி வருபவர்களை அவர்களது வாழ்விலும் உயரச் செய்பவனே!
அசுரனுக்கும் பெருவாழ்வு தந்த இரக்க குணமுள்ள ஈசனே! தவஞானியர் உள்ளத்தில்
குடிகொண்டிருக்கும் உத்தமனே! வேடராஜன் நம்பியின் மகளான வள்ளியின் அன்பனே!
பன்னிருகரங்களால் வாரிவழங்கும் வள்ளலே! திருத்தணி வாழ் பெருமானே! உன்னை
எப்போதும் சிந்திக்கும் பாக்கியத்தைத் தந்தருள்வாயாக.
* தந்தைக்கு பாடம்
சொன்ன சுப்பையனே! சந்திரனைப் போல குளிர்ச்சி மிக்க ஆறுமுகங்களைக்
கொண்டவனே! சரவணனே! சண்முகனே! வெற்றிவேலாயுதனே! சிவகுமாரனே! தேவசேனாபதியே!
பக்தர்களின் துயர் தீர்ப்பவனே! தாரகாசுரனை வதம் செய்தவனே! பிள்ளைக்
கனியமுதே! அருள்புரியும் கருணைக்கடலே! பழநிமலை பாலகனே! உன் திருவடிகளைச்
சரணடைந்து விட்டேன். நீயே என்னை பிறவிக்கடலில் இருந்து மீட்டு உன்
திருவடியில் சேர்க்க வேண்டும்.
* வீரம், அன்பு, அருள், ஞானம், இன்பம்,
கருணை ஆகிய ஆறுகுணங்களின் இருப்பிடமே! வைதாரையும் வாழவைக்கும் தெய்வமே!
கேட்டதை அருளும் கற்பகத் தருவே! கற்றவர் போற்றும் கனியே! அன்பர் வேண்டும்
வரம் தருபவனே! முத்தமிழ் நாயகனே! திருப்புகழ் போற்றும் திருமுருகனே! வலிமை
மிக்க பன்னிருதோள்களைக் கொண்டவனே! சுவாமிமலை குருநாதனே! குடும்பத்தில்
அனைவரும் நல்வாழ்வு பெறச் செய்வாயாக.
* சிவபார்வதி மைந்தனே!
பரங்குன்றத்து பவித்ரமே ! சங்கரன் புதல்வா! கதிர்காமம் வாழும் கதிர்வேல்
முருகா! கந்தா! கடம்பா! சூரபத்மனுக்கு வாழ்வளித்த வள்ளலே! வள்ளிமணாளனே!
வெற்றிவேல் தாங்கி வருபவனே! வாழ்வில் குறுக்கிடும் தடைகளைப் போக்கி
வெற்றியைத் தந்தருள்வாயாக.
*பார்போற்றும் தெய்வமே! நவவீரர்கள் போற்றும்
நாயகனே! புண்ணிய மூர்த்தியே! குருவாய் வந்தருளும் குகப்பெருமானே!
எட்டுக்குடி வேலவனே! விராலிமலைவாழ் விமலனே! குமரகுருபரர் பாடிய
திருச்செந்தூர் கந்தா! உன் திருவடியில் அடைக்கலம் கொடு.
* பிரம்மனுக்கு
பாடம் புகட்டியவனே! முத்தமிழ் வித்தகனே! தும்பிக்கையான் தம்பியே!
அருணகிரியை ஆட்கொண்டவனே! குமரகுருவே! வயலூரில் வாழ்பவனே! கந்தகோட்டத்தில்
உறைந்திருக்கும் கந்தசுவாமியே! குமரகோட்டத்து குருபரனே! உன்னருளால்
மனநிம்மதியும், உடல் ஆரோக்கியமும் உண்டாகட்டும்.
* தாமரை மலர் போன்ற
திருவடிகளைக் கொண்டவனே! வேதம் போற்றும் சிவசண்முகனே! குறிஞ்சிக்கடவுளே! ஆறு
தலை அமலனே! செங்கல்வராயனே! அவ்வைக்கு நாவற்கனி கொடுத்தவனே! கலியுகவரதனே!
முத்துக்குமார சுவாமியே! கண்கண்ட தெய்வமே! அலைகடல் ஓரத்தில் அருளாட்சி
செய்யும் செந்திலாண்டவனே! எல்லோரும் இன்புற்றிருக்க உன் அருள்மழையை
எப்போதும் பொழிவாயாக.
பசுவின் பால் சைவமா அசைவமா?
மாமிசம் சாப்பிடுபவர்கள் சைவர்களைப் பார்த்து, நீங்கள் குடிக்கும் பால்,
பசுவின் உடலிலிருந்து தானே வருகிறது. அதன் ரத்தம் தானே பாலாக மாறுகிறது,
அதைக் குடிக்கும் நீங்களும் அசைவர்கள் தான், என்று கேலி பேசுவார்கள். ஒரு
மிருகக்தைக் கொன்று அதன் இறைச்சியைச் சாப்பிட்டால் தான் அது அசைவம். பால்
அப்படியல்ல. பாலைக் கறக்காமல் விட்டால் தான் பசுவுக்கு துன்பம் ஏற்படும்.
ஆனால், பால் கறக்கும் விஷயத்தில் கவனம் வேண்டும். பசுவுக்கு நான்கு மடு
இருக்கும். இதில் இரண்டில் இருந்து மட்டுமே பால் கறக்க வேண்டும். மற்ற
இரண்டு மடுக்களை கன்றுக்காக விட்டுவிட வேண்டும். பசும்பால் மனிதனுக்கு
சாந்த குணத்தை தரும் வல்லமையுள்ளது. அது புனிதமானதும் கூட. பசுவின்
கோமியமும் மருந்தாகவும், கிருமிநாசினியாகவும் பயன்படுகிறது. அது புனிதமானது
என்பதால் தான், பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை நாலும் கலந்துனக்கு
நான் தருவேன், என்று விநாயகருக்கு வாக்களிக்கிறாள் அவ்வைப்பாட்டி.
ஆலமரத்தின் மருத்துவ குணங்கள்
ஆலமரத்தின் இலை முதல் வேர் வரை மருத்துவ குணங்கள் கொண்டுள்ளன. சின்னஞ்சிறிய ஆலம்பழத்தில் மனிதர்களின்மலட்டுத்தன்மையை
ஆலமரத்தின் விழுதுகளுக்கென்று ஒரு தனி சக்தி உண்டு. அந்த விழுதுகள் படர்ந்திருப்பதைப் பார்த்தாலே ஒரு சாத்வீகத் தன்மை உண்டாகும். அதனால், ஆலமரம் என்பது ஒரு சக்தி வாய்ந்த மரம். அதனை வைத்து பராமரித்தால் ஆக்சிஜன், ஓசோன் அனைத்துமே முழுமையாகக் கிடைக்கும்.
ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி என்று சொல்வார்கள். கருவேல மரத்தின் குச்சி, ஆலமரத்தின் குச்சி ஆகிய இரண்டாலும் பல் துலக்கும் போது பல்லினுடைய ஈறுகள் வலுவடைகிறது. குறிப்பாக ஆலங்குச்சியில் ஒருவிதமான துவர்ப்புத் தன்மையைக் கொடுக்கும். மேலும், அதில் கொஞ்சம் பாலும் இருக்கும். இந்தப் பால் தேய்க்கத் தேய்க்க பல்லுக்கு இயற்கையான உரத்தைக் கொடுத்து சக்தியைக் கொடுக்கிறது. அதனால்தான் அதுபோன்ற பழமொழி சொன்னது
மேலும், அதன் இலைகள், பட்டைகள் இதற்கெல்லாம் நிறைய மருத்துவ குணம் உண்டு. இலைக் கசாயம் சளித் தொந்தரவை நீக்கவல்லது. பட்டைகள் உள்ளுக்குள் இருக்கும் இரணத்தை ஆற்றக்கூடியது. வாய்ப்புண் போன்றவற்றை ஆலமரத்தில் இருந்து வடியும் பால் குணமாக்கும். ஆலம் பட்டைகள் ஆணின் உயிரணுக்கள், விந்தணுக்களை வலுப்படுத்தக்கூடிய சக்தி உண்டு. ஆலம் பழத்தை பதப்படுத்தி உண்பவர்களும் உண்டு.
மூலநோய் குணமாகும்
ஆலம்பழத்தை பொடி செய்து சர்க்கரை கலந்து சாப்பிட்டு வர மூலநோய் குணமாகும். சரும பளபளப்பிற்கு ஆலம்பழம் ஏற்றது. குளியல் சோப்பு தயாரிப்பதில் பயன்படுத்தப்படுகிறது.
மலடு நீங்கும்
ஆண்கள், பெண்களின் மலட்டுத்தன்மையை நீங்க ஆலம்பழம் பயன்படுகிறது. மரத்தில் கனிந்துள்ள பழங்களை பறித்து அதில் பூச்சிகளை நீக்கிவிட்டு நிழலில் உலரவைக்கவேண்டும். பின்னர் அவற்றை நன்றாக இடித்து பொடி செய்து காற்றுப்புகாத பாத்திரத்தில் அந்த பொடியை போட்டுவைத்துக்கொள்ளவேண்டும
தசை வலி நீங்கும்
ஆலம் பழம் தசைவலிகளை நீக்கும். இது பெண்களின் மாதவிலக்குப் பிரச்சினைகளை நீக்கவல்லது
பல்வலி போக்கும்
பல் வலிக்கும் நேரத்தில் ஆலம் மொட்டினை வாயில் அடக்கிக் கொண்டிருந்தால் பல்வலி போகும்.
பனை நுங்கு
புல்லினத்தைச் சேர்ந்த ஒரு தாவரப் பேரினம். அறிவியல் வகைப்பாட்டில் இதை போரசசு (Borassus) என்னும் பேரினத்தில் அடக்குவர். இப் பேரினத்தில் பல சிற்றினங்கள் அடங்குகின்றன.நெடிய மரமாக 30 மீட்டர் உயரம் வரை பனைமரம் வளரும். இலைகள் நீட்டமாக விசிறி போல் இருக்கும். இலைகள் 2-3 மீட்டர் நீளம் இருக்கும். பூக்கள் சிறியவை. பழங்கள் (நுங்கு) பெரியதாக, வட்டமாக, பழுப்பு நிறத்துடன் இருக்கும்.
பொது வழக்கில் மரம் என்று தமிழில் வழங்கப்படினும், இது மர வகையைச் சார்ந்தது அல்ல. தற்காலத் தாவரவியல் அடிப்படையில் மட்டுமன்றித் தமிழ் இலக்கண மரபுகளின்படியும் பனையை மரம் என்பது தவறு.
நெடிய மரமாக 30 மீட்டர் உயரம் வரை பனைமரம் வளரும். இலைகள் நீட்டமாக விசிறி போல் இருக்கும். இலைகள் 2-3 மீட்டர் நீளம் இருக்கும். பூக்கள் சிறியவை. பழங்கள் (நுங்கு) பெரியதாக, வட்டமாக, பழுப்பு நிறத்துடன் இருக்கும்.
பனையை, கேட்டதைக் கொடுக்கும் தேவலோகத்து மரம் எனத் தொன்மங்கள் கூறும் கற்பகதருவுக்கு ஒப்பிடுவர்.
பனை மரத்தில் இருந்து கிடைக்கும் நுங்கு நீரை தொடர்ந்து சாப்பிட்டு வர கோடை காலத்தில் ஏற்படும் வேர்குரு நீங்கும்.
தோலுடன் நுங்கை சாப்பிட்டு வர சீதக்கழிச்சல் நீங்கும்.
பணங்கற்கன்டை ஏதாவது ஒரு வகையில் அடிக்கடி பயன் படுத்தி வர அம்மை நோயால் ஏற்பட்ட உடல் வெப்பம் தாகம் போன்றவை நீங்கும்.
பனங்கிழங்கிற்கு ஊடல் குளிர்ச்சியை தரும் தன்மை உண்டு.இந்த கிழங்கை சாப்பிட்டு வந்தாலுடல் அழகு பெறும்.உடல் பலமும் அதிகரிக்கும்.
பதநீர் மகிமை..
பனை மரத்துல நுங்கு பிஞ்சு உருவானதும், அதை நாறைக் கட்டி, வளர்ச்சியை கட்டுப்படுத்துவாக
பிஞ்சு ஓரத்தில் லேசாக கீறிவிட்டு, தினமும் மூன்று முறை மரம் ஏறி, அந்த பிஞ்சை அழுத்த, சொட்டுச் சொட்டாக மண்பானையில் பால்(கள்) இறங்கும். இப்படி ஒரு மரத்துல மூன்று மாதம் வரை பால் எடுக்கலாம். அந்த பாலில் சுண்ணாம்பு சேர்த்தால் பதநீர் ரெடி.
சில இடங்களில் மண்பானை அடியில் சுண்ணாம்பை தடவி கட்டிவிட்டுடுவாங்க. இதனால மரத்திலிருந்து பானையை இருக்கும்போதே பதநீர் தயார். இந்த பனைமர பதநீரைவிட, தென்னைமர பதநீர் போதை அதிகம் தரும். ஆனால் சுவையில் பனைமர பதநீரை மிஞ்சமுடியாது.இந்த பதநீரில் சோறு சமைக்கலாம்; பொங்கல் வைக்கலாம்; கொழுக்கட்டை தயாரிக்கலாம்; அவியல் அரிசி படைக்கலாம். யானை இறந்தால் ஆயிரம் பொன்னுனு சொல்லுவாங்க. பனை இருந்தாலும் ஆயிரம் பொன்தான். பிஞ்சிலிருந்து மரமாகி, கீழே விழும் வரை எல்லா வகையிலும் பயன்தரும் என்பது நிதர்சனம்'',
சுண்ணாம்பு சேர்த்து எடுக்கப்படும் பனஞ்சறுக்கு பதர்நீர் என்று பெயர்.மேக நோய் இருப்பவர்கள் இதை 40 நாட்களிடைவிடாஅது அருந்தி வர அந்த நோய் பாதிப்பில் இருந்து விடுபடலாம்.
பதநீரில் இருந்து எடுக்கப்படும் கருப்பட்டி, பனங்கற்கண்டு, ஆகியவற்றுக்கும் நோய் தீர்கும் குணங்கள் உண்டு.
பனை நுங்கு கோடை கலத்தில் ஏற்படும் தாகத்திற்கு மிகவும் ஏற்றது.
பனங்கிழங்கை உலர்த்தி இடித்து மாவாக்கி, அதனுடன் தேங்காய் உப்பு போட்டு சாப்பிட்டு வர உடலுக்கு பலம் உண்டாகும். மேலும் உடல் பருமன் ஆகும்.
பனம் பூவை சுட்டு சாம்பலாக்கி அதில் சிறிது தேங்காய் எண்ணெய் கலந்து புண்களின் மீது பூச ஆரும்.
பயன் தரும் பாகங்கள் . . .
நொங்கு, பனம்பழம், பனங்கிழங்கு, பனை ஓலை, குருத்து, பனை கருக்கு, பனைப்பால், முற்றிய மரம் முதலியன.
வளரியல்பு. . . பனை கற்பக மரமாகும். கூந்தல் பனை, கரும்பனையில் கரும்பனையே மருத்துவ குணமுடையதாகும். பனை இந்தியாவில் அதிகமாகக் காணப்படும். இது எல்லா மண்வளத்திலும் வளர்க்கூடியது. வரட்சியைத் தாங்கி வளரக்கூடியது. பனை வைத்தவனுகுப் பயன் தராது என்பர். இதன் வளர்ச்சி ஆரம்பத்தில் மெதுவாக வளரும். நூறு ஆண்டுகள் உயிருடன் இருக்கும். இது தொண்ணூறு அடிக்கு மேல் வளரும். பனங்கை ஓலை 9 -10 அடி நீளம் வரை நீண்டிருக்கும். பக்கவாட்டில் அடுக்கடுக்காக பனங்கை வளர்ந்திருக்கும். இது விதை மூலம் உற்பத்தி செய்யப்படுகிறது.
மருத்துவப் பயன்கள். . .
பனை உடலுக்கு ஊட்டத்தை அளிப்பது. குளிர்ச்சி தருவது. வெப்பத்தைத் தணிப்பது, துவர்ப்பும் இனிப்பும் கலந்த சுவை உடையது.
பனை மரத்தின் பால் தெளுவு-தெளிவு எனப்படும். சுண்ணாம்பு கலவாதது கள் எனப்படும்.
வைகறை விடியல் இந்தப் பாலை 100 -200 மி.லி. அருந்தி வந்தால் போதும். உடல்குளிர்ச்சி பெறும். ஊட்டம் பெறும். வயிற்றுப் புண் நிச்சையம் ஆறிவிடும்.
புளிப்பேறிய கள் மயக்கம் தரும், அறிவை மயக்கும் ஆனல் உடல் நலத்தைக் கொடுக்கும். சுண்ணாம்பு சேர்த்த தெளிவு எல்லோருக்கும் சிறந்த சுவையான சத்தான குடிநீராகும். அதைக் காய்ச்சினல் இனிப்பான கருப்பட்டி கிடைக்கும்.
நுங்கு வெயிலின் கொடுமையைக் குறைக்க மனிதனுக்குக் கிடைத்த அரு மருந்தாகும். எல்லா வயதினருக்கும் ஏற்ற சிறந்த சத்துணவாகும். நுங்கின் நீர் வேர்க்கருவிற்குத் தடவ குணமாகும்.
பனம்பழம் சிறந்த சத்துணவாகும். உயிர் சத்து நிறைந்தது. பித்தம் தருவது. சுட்டு சாப்பிடலாம்.
பனங்கொட்டையை மிருதுவான மண் அல்லது ஈர மணலில் புதைத்து வைத்து இரண்டு மூன்று இலை விட்ட பின் தோண்டி கொட்டைக்குக் கீழ் உள்ள நீண்ட கிழங்கை எடுத்து வேக வைத்துச் சாப்பிட்டால் மிகச் சிறந்த ஊட்ட உணவாகும். சிறு குழந்தைகளுக்கு உடலைத் தேற்றும்.
பனை மரத்தின் அடி பாகத்தில் கொட்டினால் நீர் வரும் அதை கருப்படை, தடிப்பு, ஊரல், சொறி உள்ளவர்களுக்கு அதன் மீது தடவினால் குணமடையும். ஐந்தாறு முறை தடவ வேண்டும்.
பனையோலை வேய்த இருப்பிடம்ஆரோக்கிய வாழ்வைத் தரும். வெப்பம் அண்டாது. இதில் விசிறி, தொப்பி, குடை, ஓலைச்சுவடி தயார் செய்யப் பயன் படும். கைவினைப் பொருள்கள் செய்யலாம். இந்தோனேசியாவில் ஓலையை எழுதும் பேப்பராகப் பயன் படுத்தினார்கள். அதைப்பக்குவப்படுத்த கொதிநீரில் வேக வைத்து மஞ்சள் பொடி இட்டு ஓரத்தில் ஓட்டைகள் போட்டு ஏட்டுப் புத்தகம் உண்டாக்கினார்கள்.
கண்ணில் புண் ஆனால் பனை குருத்து மட்டையைத் தட்டிப் பிழிந்த சாறு மூன்று நாள் விட குணமடையும் எரிச்சில் தீரும்.
அடிப்பனை வெட்டிசோறு செய்தார்கள். பனங்கையில் பிரஸ் செய்தனர். கயிறுகள் தயார் செய்தனர். வேலிக்கும் பயன் படுத்தினர். பனையின் எல்லாபாகமும் உபயோகப் படுத்தினார்கள்.
பனை வெல்லம், பனங்கற்கண்டு வாத பித்தம் நீங்கும். பசியை தூண்டும். புஷ்டி தரும். முன்பு சொன்னபடி, நுரையீரல் மற்றும் தொண்டை பாதிப்புகளுக்கு கொடுக்கப்படும் ஆயுர்வேத மருந்துகளில் பனைவெல்லம் சேர்க்கப்படுகிறது.
எலிகளை வைத்து நடத்திய பரிசோதனையில் பனைவெல்லம், நிலக்கரி மற்றும் ஸிலிகா தூசிகளால் ஏற்படும் நுரையீரல் பாதிப்பை குறைக்கும் என்பது தெரிய வந்துள்ளது.
வெல்லம் அயச்சத்து மிகுந்தது. சோகை நோய்களுக்கு மருந்து. தமிழகத்தில் பனை மரத்தின் வெல்லத்தை இரண்டு வகையாக சொல்வார்கள். முற்றிலும் சுத்தப்படுத்தாத, கெட்டியான கரு நிற வெல்லத்தை “கருப்பட்டி” என்பார்கள். இதை சுத்தப்படுத்தப்பட்ட படிகங்களாக உருவாகும் சர்க்கரை ‘பனங்கற்கண்டு’ எனப்படும் இதற்கு மருத்துவ குணங்கள் உள்ளன.
பாலில் பனங்கற்கண்டை சேர்த்து காய்ச்சி குடித்தால் மார்புச்சளி இளகும். முக்கியமாக தொண்டைப்புண், வலி இவை அகலும். சங்கீத வித்வான்கள் எப்போதும் பனங்கற்கண்டு கலந்து காய்ச்சிய பாலையே அருந்துவது வழக்கம். அதனால் அவர்களின் குரல் வளம் குறையாமல், பாதுகாக்கப்படுகிறது. கூடவே சில மூலிகைகளும் சேர்க்கப்படுவது உண்டு.
தவிர பனங்கற்கண்டு, உடல் உஷ்ணம், காங்கை, நீர் சுருக்கு, ஜுர வெப்பங்கள் இவற்றுக்கு நல்லது.
பனை மரத்தில் இருந்து கிடைக்கும் பதநீர் பலவிதமான நோய்களை தீர்க்கும் மருந்தாக உள்ளது. பனை நீரிலுள்ள சீனி சத்து உடலுக்கு தேவையான வெப்பத்தை தருகிறது. இதிலிருக்கும் குளுக்கோஸ் மெலிந்து தேய்ந்து வாடிய உடலுடைய குழந்தைகளின் உடலை சீராக்கி நல்ல புஷ்டியை தருகிறது.
கருவுற்ற பெண்களுக்கும் மகப்பேறு பெண்களுக்கும் ஏற்படுகின்ற மலச்சிக்கல், வயிற்றுப் புண் முதலியவைகளை குணப்படுத்துகிறது. இரத்த அழுத்தத்தை சீராக்குகிறது. டைபாய்டு, சுரம், நீர்க்கட்டு முதலிய வியாதிகளை போக்குகின்ற நல்ல மருந்தாகவும் இது செயல்படுகிறது.
இதை அருந்துவதால் இருதய நோய் குணமாகும். இருதயம் வலுவடையும். இதிலிருக்கும் கால்சியம் பற்களை உறுதிப்படுத்தி, ஈறுகளில் ரத்தக்கசிவு ஏற்படுவதை தடுப்பதோடு பற்களின் பழுப்பு நிறத்தையும் மாற்றுகிறது.
இதிலிருக்கும் இரும்புச்சத்து பித்தத்தை நீக்கி சொறி, சிரங்கு உள்பட சகல தோல் வியாதிகளையும் நீக்குவதுடன் கண் நோய், ஜலதோசம், காசநோய் இவைகளையும் நீக்குகிறது.
மேலும் பதநீரானது சயரோகம், இரத்தக்கடுப்பு, அதிக உஷ்ணம், பசியின்மை, வயிற்றுப்புண், வாய்வு சம்பந்தமான நோய்களையும் குணப்படுத்துகிறது.
சென்னை ஐ.ஐ.டி. மாணவர்கள் சாதனை
செயற்கை இரத்தம் - சென்னை ஐ.ஐ.டி. மாணவர்கள் சாதனை............!!
உலக நாடுகளை விட இன்று அதிக அளவில் சாலை விபத்துக்களை சந்திக்கும் நாடு இந்தியா,
இந்தியாவில் உள்ள மொத்த மக்கள் தொகைக்கு ஏற்ப ஆண்டு தோறும் 12 மில்லியன் யூனிட் ரத்தம் தேவை உள்ளது, ஆனால் ஒன்பது மில்லியன் அளவிற்கு மட்டுமே ரத்தம் கிடைத்து வருகிறது. இந்த நிலையை போக்க சென்னை ஐ.ஐ.டி ஆய்வு வழி கண்டு பிடித்து, சென்னை ஐ.ஐ.டி, விஞ்ஞானிகள் ஈடுபட்டனர்.
மூன்றாண்டுகளாக இந்த ஆய்வில் ஈடுபட்டு வந்தனர், இந்த முயற்சிக்கு மத்திய அமைச்சகத்தின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை தேவையான நிதியை வழங்கியது. டாக்டர் சோமா குகதகுர்தா தலைமையிலான குழுவினர் ஆராய்ச்சியில் ஈடுபட்டு தற்போது வெற்றியடைந்துள்ளனர்,
வெற்றியான ஆய்வை குறித்து டாக்டர் சோமா கூறும் போது: அடுத்த ஐந்தாண்டுகளில் அனைத்து ரத்த வங்கிகளிலும் செயற்கை ரத்தம் எளிமையாக கிடைக்கும் . ரத்தம் தேவைப்படுபவரின் ஸ்டெம் செல்களில் இருந்து பாதிக்கப்பட்டவருக்கு தேவையான ரத்த செல்கள் தயாரிக்கப்படும்,
இந்த செயற்கை ரத்தம், ரத்த வங்கிகளில் இருந்து வாங்கும் ரத்தத்திற்கு ஆகும் செலவில் பாதி மட்டுமே ஆகும். தற்போது தயாரிக்கப்பட்டுள்ள செயற்கை ரத்தம் விலங்குகளில் பரிசோதனை செய்யப்பட்ட பிறகு மனிதர்களில் சோதனைக்கு உட்படுத்தப்படும். இதன் மூலம் விபத்துக்களின் போது போதிய ரத்தம் இல்லாததால் ஏற்படும் உயிரிழப்புக்கள் பெருமளவில் குறைய வாய்ப்பு உள்ளது.
இறுதி கட்ட சோதனைகள் வெற்றி பெற்ற பிறகு செயற்கை ரத்தத்தை பெருமளவில் தயாரிக்க ஐஐடியின் பயோ டெக்னாலஜி துறை முடிவு செய்துள்ளது. இதுவரை ரத்த வெள்ளை அணுக்களை 40 சதவீதம் உற்பத்தி செய்யும் சோதனைகளே நடைமுறையில் இருந்து வந்தது. ஆனால் இந்த செயற்கை ரத்தம் நோய் எதிர்ப்பு சக்தி கொண்டதாகவும், பாதுகாப்பான அதே சமயம் எய்ட்ஸ் போன்ற நோய் கிருமிகள் தொற்று இல்லாததாகவும் இருக்கும்.
அறுவை சிகிச்சைகளின் போதும் இவற்றை பயன்படுத்த முடியும். இப்போது டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மிகவும் உதவியாக உயிர் காக்கும் விதமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.
Subscribe to:
Posts (Atom)