கண் பார்வை வலுப் பெற..!

கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் எனும் மூன்று மூலிகைப் பொருட்களை நன்றாகப் பொடித்து, திரிபலா சூரணம் என்ற பெயரில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த சூரணத்தை இரவில் படுக்கும் முன் நக்கிச் சாப்பிட்டு அதற்குப் பிறகு பசும்பால் சாப்பிடுவது கண்பார்வைக்கு மிகவும் நல்லது. சுமார் 1/2 ஸ்பூன் (2.5 கிராம்) சூரணம் 1 1/2 ஸ்பூன் (7.5 கிராம்) த்ரைபல க்ருதம் எனும் உருக்கிய நெய் மருந்து, அரை ஸ்பூன் சுத்தமான தேன் என்ற விகிதத்தில் சதும்ப குழைத்து இரவில் படுக்கும் முன் சாப்பிட்டு வந்தால், கண் கோளாறுகள் நீங்குவதோடு பார்வையும் நன்றாகத் தெரியும்.
அதிக நேரம் தரையில் குனிந்து அமர்ந்து ஹோம் ஒர்க் செய்வது, படுத்துக் கொண்டு பாடப் புத்தகங்ளைப் படிப்பது, அதிக வெளிச்சமில்லாத அறையில், தனக்குப் பின்புறம் தலைக்கு மேல் விளக்கு எரியாமல், முன்புறம் எரியும் விளக்கில் படிப்பது, பிள்ளைகளுக்குச் சளி பிடித்துவிடக் கூடாதே என்ற பயத்தில் தலைக்குச் சுடு தண்ணீர் விட்டுக் குளிப்பாட்டுவது, நூடூல்ஸ், பாஸ்தா, பர்க்கர், பேல்பூரி, பானிப்பூரி, மசாலா சுண்டல், சிப்ஸ் போன்றவற்றைப் பிள்ளைகள் ஆசைப்படும்போதெல்லாம் வாங்கித் தருவது ஆகியவை தவிர்க்கப்பட வேண்டியவை.
உணவாக முருங்கைக்கீரை, பொன்னாங்கண்ணி, வல்லாரை, மிதிபாகல் பிஞ்சு, வெண்டை, மணத்தக்காளி, வற்றல், கேரட், முட்டை, பசும்பால் அதிகம் சேர்ப்பது நலம். மேலும் பயறு, கடலை, துவரை, உளுந்து, காராமணி, எள்ளு, மொச்சை முதலிய பருப்பு வகையும் மிளகு, சுக்கு, பெருங்காயம் (சிட்டிகை) முதலிய ஜீரண உதவிகளையும் காலை உணவாக ஏற்பது பிள்ளைகளுக்கு மிகவும் நல்லது. தாமதித்துச் செரிக்கும் உணவுப் பொருட்களாகிய கிழங்குகள், பழ வகைகள், எருமைத் தயிர், கீரை போன்றவை மதிய உணவிலும், பகல் பொழுதிலும் சேர்த்தால் ஏற்படும் வயிற்று மந்தம் வெயிலின் சூட்டாலும், விளையாட்டாலும் பாதிக்காது. அவரைப் பிஞ்சு, அத்திக்காய், பசுவின் பால், கடைந்த மோர், முருங்கைப் பிஞ்சு, துவரம் பருப்பு, மணத்தக்காளி வற்றல் போன்றவை இரவில் சாப்பிட உகந்தவை.
"ஆலோசகம்’ என்றொரு பித்தம் கண்ணிலிருந்து செயல்படுகிறது. பார்வை தெளிவாக இருப்பதற்கு இந்த பித்தம் உதவுகிறது. காரம், புளி, உப்பு ஆகியவற்றை உணவில் அதிகம் சேர்த்தால் இந்தப் பித்தம் கெட்டுவிடும். கண்பார்வை மங்கும். அதனால் இந்தச் சுவைகளை உணவில் குறைத்து வாழைப்பூ, வாழைத்தண்டு போன்ற துவர்ப்புச் சுவையும், கசப்பான பாகற்காய், அகத்திக் கீரையும், இனிப்பான பொருட்களையும் பிள்ளைகளுக்குச் சாப்பிடும்படி பழக்கினால் இந்த ஆலோசக பித்தம் நன்றாகச் செயலாற்றும்.
கண்களில் வெளிப்புறம் உளுந்து மாவை வரம்பு கட்டி, கண்களில் உள்ளே மூலிகை நெய் மருந்தை ஊற்றி நிரப்பி, கண்களைத் திறந்து மூடச் செய்யும் நேத்ர தர்ப்பணம் எனும் சிகிச்சை முறை, புடபாகம், பிடாலகம், ஆஸ்சோதனம், அஞ்சனம் போன்ற கண் சிகிச்சை முறைகளால் கண்பார்வைக் கோளாறுகளைத் தவிர்க்க முடியும் என்று ஆயுர்வேதம் வலியுறுத்துகிறது. ஆயுர்வேத மருத்துவமனைகளில் இந்த சிகிச்சைமுறைகள் சிறப்பாகச் செய்யப்படுகின்றன.
உள்ளங்கால் நடுப்பகுதியில் "தலஹ்ருதயம்’ என்று ஒரு மர்ம ஸ்தானமிருக்கிறது. அந்த இடத்தில் பசு நெய்யை உருக்கித் தொடர்ந்து பூசி வந்தால், கண்பார்வை நன்றாக இருக்கும் என்று கூறப்படுகிறது. நயனாமிருதம் என்ற கண்சொட்டு மருந்தும் உபயோகிப்பது கண்களுக்கு வலுவைக் கூட்டும். முதலில் விட்டவுடன் எரிச்சலைத் தரும். ஆனால் அதன் பிறகு குளிர்ச்சியைத் தரும். வீட்டில் சாதா உப்புக்குப் பதிலாக இந்துப்பு சமையலுக்கு உபயோகித்து வந்தால் கண்களுக்கு நல்லது. பொதுவாகவே உப்பு கண்களுக்குக் கெடுதல். ஆனால் இந்துப்பு இதற்கு விதிவிலக்காகும்

தண்ணீரில் நடக்கும் பல்லி

       பல்லிகள் நம் வீட்டுச்சுவர்களில் தலைகீழாக நடக்கும். தரையிலும் தனது பூச்சி உள்ளிட்ட இரைகளை துரத்திப் போய் பிடிக்கும். ஆனால் இதே பல்லிகள் தண்ணீரைக் கண்டால் மட்டும் கப்சிப்பாகி விடும்.

water ஆனால் ஒருவகைப் பல்லிகள் தண்ணிரிலும் சர்வ சாதாரணமாக நடந்து பயணிக்கின்றன.
இந்த பல்லியின் நீளம் ரெயில் பெட்டி மாதிரி கொஞ்சம் நீளம். (சுமார் 2 அடி) ஒல்லியான இதன் உடல் வாகும் இது தண்ணீரில் பாய்ந்து செல்ல உதவுகிறது.
எதிரிகளிடம் இருந்து தப்பிக்க வேண்டிய சூழ்நிலை வரும்போது இந்த பல்லிகள் தண்ணிரில் வேகவேகமாக நடப்பதை வழக்கத்தில் வைத்திருக்கின்றன.
இந்தப் பல்லி தண்ணிரில் நடக்கும் ரகசியம், இதன் அகன்ற பின்புற கால்கள். ஒவ்வொரு விரலுக்கும் இடையில் உள்ள ஜவ்வு தண்ணீரில் நேராக நடக்க உதவுகிறது. அப்படி தண்ணீரில் இவ்வகைப் பல்லிகள் நடக்கும்போது தன் பின்னங்கால்களையே பயன் படுத்துகிறது.
மத்திய அமெரிக்காவில் தண்ணீர் கரையோரங்களில், ஏரிகளில், கால்வாய்களில் இந்த பல்லிகள் தண்ணீரில் நடப்பதை முதன்முதலாக பார்ப்பவர்கள் பிரமித்துப் போவார்கள்.
பூச்சிகள், பழங்கள், சிலவகை இலை தழைகள் இந்த பல்லிகளின் விருப்ப உணவு

வாழை இலையின் பயன்கள்:

1. வாழை இலையில் சாப்பிடுவதால் இளநரை வராமல், நீண்ட நாட்களுக்கு முடி கருப்பாக இருக்கும்.


2. தீக்காயம் ஏற்பட்டவர்கள் வாழை இலை மீது தான் படுக்க வைக்க வேண்டும் அப்பொழுதுதான் சூட்டின் தாக்கம் குறையும்.

3. சாப்பாடு வாழை இலையில் பேக்கிங் செய்தால் சாப்பாடு கெடாமலும், மனமாகவும் இருக்கும்.

4. பச்சிளம் குழந்தைகளை உடலுக்கு நல்லெண்ணெய் பூசி வாழை இலையில் கிடத்தி காலை சூரிய ஒளியில் படுக்க வைத்தால் சூரிய ஒளியில் இருந்து பெறப்படும் விட்டமின் டி யையும் இலையில் இருந்து பெறப்படும் குளுமையும் குழந்தைகளை சரும நோயில் இருந்து பாதுகாக்கும்.

5. காயம், தோல் புண்களுக்கு தேங்காய் எண்ணெய்யை துணியில் நனைத்து புண்மேல் தடவு வாழை இலையை மேலே கட்டு மாதிரி கட்டி வந்தால் புண் குணமாகும்.

6. சின்ன அம்மை, படுக்கைப் புண்ணுக்கு வாழை இலையில் தேன் தடவி தினமும் சில மணி நேரம் படுக்க வைத்தால் விரைவில் குணமாகும்.

7. சோரியாசிஸ், தோல் அழற்சி, கொப்பளங்கள் பாதிக்கப்பட்ட இடத்தில் வாழை இலையை கட்டி வைக்க வேண்டும்.

தலை வாழை இலை என்றதும் அனைவருக்கும் ஞாபகம் வருவது விருந்து தான் அதுவும் எங்க கொங்கு மண்ணில் தலை வாழை இலையுடன் தான் விருந்தே நடக்கும். அது சைவ உணவாக இருந்தாலும் அசைவ உணவாக இருந்தாலும் இலையில் தான் நிச்சயம் இருக்கும். நான் வார இறுதிநாட்களில் எங்க ஊரில் தான் இருப்பேன். ஊரில் இருக்கும் நாட்களில் மதிய உணவு நிச்சயம் தலை வாழை இலையில் தான் இருக்கும். இன்றைய வேகமான முன்னேற்றத்தில் வாழை இலை மறைந்து கொண்டு இருக்கின்றது அதுவும் நகர் புறங்களில் தட்டு அல்லது பாலீதின் பேப்பரில் தான் இங்கு இருக்கும் ஓட்டல்களில் உணவு கிடைக்கிறது. இது காலமாற்றத்தினால் ஏற்பட்ட மாற்றம் நகர்புறத்தில் இருப்பவர்கள் சாப்பிட்டுத்தான் ஆகவேண்டும். ஆனால் நம்மில் பலர் தனது சொந்த கிராமத்திற்கு விடுமுறை நாட்களில் செல்லும் போது தட்டிலேயே வாடிக்கையாக உணவு அருந்துகின்றனர், அதை மாற்ற முயற்ச்சிக்கலாம். இலையில் சாப்பிடும்போது ஏற்படும் நன்மைகளை அறியும் போது ஏன் நம் முன்னோர்கள் இலையில் சாப்பிட்டார்கள் என நமக்கு தெரியவரும்.

நம் முன்னோர்களின் வாழ்க்கை முறையில் எத்தனை சிறப்பு அம்சங்கள் அவர்கள் வகுத்துள்ள முறைப்படி நாம் உணவு உண்டு வேலை செய்தாலே நிச்சயம் நோயின்றி வாழலாம் அதற்கு வாழை இலையில் சாப்பிடுவதும் ஓர் உதாரணமே.

வாழைமரத்தில் குருத்தை கொஞ்சம் கிளரி விட்டு (வாழை நீர் தேங்குமளவுக்கு) சீரகம் கொஞ்சம் போட்டு சின்ன வாழை இலையால் கிளறிய பகுதியை மூடி வைத்து அதில் ஊறும் நீரை பருகினால் பேதி, வயிற்று வலி போன்றவை நீங்கும்

முருகன் பற்றி அமெரிக்கர் செய்த ஆராய்ச்சி!

1966, டிச.21ல் சுதேசமித்திரனில் வெளியான செய்தி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த இதழில், குளோதி என்ற அமெரிக்க இளைஞர் முருகனைப் பற்றிய ஆய்வில் ஈடுபட்டதாக குறிப்பிடப்பட்டிருந்தது.  அந்த செய்தியின் சாராம்சம் இது தான். ""அமெரிக்க பாதிரியாரின் மகனாக இந்தியாவில் 1936ல் பிறந்தவர் குளோதி. கொடைக்கானலில் படித்தவர். முருகன் வழிபாடு பற்றி ஆராய்ச்சி செய்வதற்காக தமிழகத்தில் ஒரு ஆண்டு தங்கியிருப்பார். அமெரிக்காவில் உள்ள இந்திய ஆராய்ச்சிக்கூட்டத்தைச் சேர்ந்த அறிஞர் குளோதி. இவர் தென்னிந்திய சமயவரலாறு பற்றிய ஆராய்ச்சிகளை முடித்த பிறகு சிகாகோ பல்கலைக்கழகத்தின் டாக்டர் பட்டத்திற்குரிய தேர்வு எழுத இருக்கிறார். இவருக்கு தமிழ் இலக்கியம் மீது ஆர்வம் ஏற்படக் காரணம் உண்டு. சிகாகோ பல்கலைக்கழக திராவிடவியல் வல்லுநர் டாக்டர் சுமில்சுவலபில், சமய ஆராய்ச்சி வல்லுநர் டாக்டர் எலியாடி, தமிழ்த்துறைத்தலைவர் டாக்டர் ஏ.கே.ராமானுஜம் ஆகியோர் குளோதியிடம் தமிழ் பாரம்பரியத்தை ஆய்வு செய்ய ஊக்கப்படுத்தினர். குளோதி இது பற்றிக் கூறும்போது,"" வரலாற்றின் உண்மைச் செய்திகளை எழுதி வைக்க வேண்டும் என்று நான் முருகவழிபாடு பற்றிய மரபுகளை ஆராயவில்லை. மனிதனுடைய சமயங்களில் காணப்படும் பல்வேறு கோட்பாடுகளில் சின்னங்களுக்குப் புதுவிளக்கம் கொடுப்பதில் மனித குலத்திற்கு துணையாக இருப்பதே எனது நோக்கமாகும். இந்து, கிறிஸ்தவ மதங்கள் இரண்டிலுமே மறைபொருளான சின்னங்கள் உள்ளன. உதாரணமாக கிறிஸ்தவர்களுக்கு ஆட்டுக்குட்டி, சிலுவை, புல்லுருவிச் செடி ஆகியவை குறிப்பிடத்தக்கவை. அதுபோல, முருகனின் வாகனங்களாக ஆடு, மயில், யானை ஆகியவை கூறப்பட்டுள்ளன, என்று குறிப்பிடுகிறார்.

வேலவனின் வெற்றிநகர்: தேவர்களைக் கொடுமைப்படுத்திய சூரபத்மனை முருகப்பெருமான் சம்ஹாரம் செய்த தலம் திருச்செந்தூர். முருகன் தன் படையுடன் வந்து தங்கியதால் ஏற்பட்ட பெயரே படைவீடு. மற்ற முருகன் தலங்களை படைவீடு என்று குறிப்பிட்டாலும் திருச்செந்தூருக்கே அது பொருந்தும். தேவதச்சனான விஸ்வகர்மா மூலம் படைவீடு அமைத்து தங்கிய முருகன், தேவகுருவாகிய வியாழபகவான் மூலம் அசுரர்களின் வரலாற்றை அறிந்து கொண்டதாக தலவரலாறு கூறுகிறது. திருச்செந்தூர் என்பதற்கு "புனிதமும் வளமும் பொருந்திய வெற்றிநகரம் என பொருள்.
செந்தூரில் தீர்த்தமாடும்முறை: திருச்செந்தூர் என்ற சொல்லை காதால் கேட்டாலே முக்தி தரும். தலம், தீர்த்தம், மூர்த்தி மூன்றும் அமையப்பெற்றது. எந்தச் செயலையும் முறையாகச் செய்தால் தான் அதன் பலனை அடைய முடியும். திருச்செந்தூரைப் பொறுத்த வரை தீர்த்தமாடும் முறையில் மிக கண்டிப்பான முறையை பின்பற்ற வேண்டும். பொதுவாக பக்தர்கள் கடலில் நீராடிய பிறகு நாழிக்கிணற்றில் நீராடுகிறார்கள். கடலில் தங்கள் மீது படிந்த உப்புநீரைக் கழுவ வேண்டும் என்பதற்காக இவ்வாறு செய்கிறார்கள். இது சரியான முறையல்ல. ஸ்கந்த புஷ்கரணி எனப்படும் நாழிக்கிணற்றில் கிணற்றில் நீராடிய பிறகே கடலில் நீராட வேண்டும். நாழிக்கிணறு சூரபத்மனின் உடலைக் கூறாக்கிய வேலுக்கு தோஷம் நீங்கும் பொருட்டு அதனை பூமியில் ஊன்றி வரவழைக்கப்பட்டது. முருகப்பெருமான் வேலை எய்து பாதாள கங்கையை வரவழைத்தார். அதுவே நாழிக்கிணறாக மாறியது. வேறு எந்த முருகன் தலத்திலும் இது போன்ற தீர்த்தம் கிடையாது. கடலில் நீராடிய பின் நாழிக்கிணற்றில் குளித்தால், செந்தூர் வந்த புண்ணியபலனை அடைய முடியாது.

அருள்புரிவாய் கருணைக்கடலே: கந்தசஷ்டி நன்னாளில் முருகனருளால் எல்லா நலமும் வளமும் பெருக இந்த அருளுரையை வாசியுங்கள்.
* ஆனைமுகக் கணபதியின் அன்புத் தம்பியே! ஞானபண்டிதனே! ஆறுமுகப்பெருமானே! மயில்வாகனனே! சிக்கல் சிங்கார வேலவனே! திருப்பரங்குன்றத்தில் உறையும் பரம்பொருளே! வள்ளிக்கு வாய்த்தவனே! தஞ்சம் என வந்தவரைத் தாங்கும் தயாபரனே! செந்தூரில் வீற்றிருக்கும் வெற்றி வேலனே! எப்போதும் என் உள்ளத்தாமரையில் வீற்றிருந்து அருள்புரிய வேண்டும்.
* ஆறுபடை வீடுகளில் ஆட்சி நடத்துபவனே! ஆதிசிவனின் அருமைப்பிள்ளையே! சரவணப்பொய்கையில் அவதரித்தவனே! காங்கேயனே! திருமாலின் மருமகனே! வேதமந்திரங்களின் உட்பொருளாகத் திகழ்பவனே! தெய்வானை மணவாளனே! தண்டாயுதபாணியே! சோலைமலை சுந்தரனே! குழந்தைக் கடவுளே! குன்றுதோறும் குடிகொண்டிருக்கும் குமரப்பெருமானே! உனது அருளால் எங்கள் மனதில் எப்போதும் மகிழ்ச்சி நிலைத்திருக்கட்டும்.

* பிறவிக்கடலைக் கடக்க வைக்கும் தோணியே! மலையேறி வருபவர்களை அவர்களது வாழ்விலும் உயரச் செய்பவனே! அசுரனுக்கும் பெருவாழ்வு தந்த இரக்க குணமுள்ள ஈசனே! தவஞானியர் உள்ளத்தில் குடிகொண்டிருக்கும் உத்தமனே! வேடராஜன் நம்பியின் மகளான வள்ளியின் அன்பனே! பன்னிருகரங்களால் வாரிவழங்கும் வள்ளலே! திருத்தணி வாழ் பெருமானே! உன்னை எப்போதும் சிந்திக்கும் பாக்கியத்தைத் தந்தருள்வாயாக.
* தந்தைக்கு பாடம் சொன்ன சுப்பையனே! சந்திரனைப் போல குளிர்ச்சி மிக்க ஆறுமுகங்களைக் கொண்டவனே! சரவணனே! சண்முகனே! வெற்றிவேலாயுதனே! சிவகுமாரனே! தேவசேனாபதியே! பக்தர்களின் துயர் தீர்ப்பவனே! தாரகாசுரனை வதம் செய்தவனே! பிள்ளைக் கனியமுதே! அருள்புரியும் கருணைக்கடலே! பழநிமலை பாலகனே! உன் திருவடிகளைச் சரணடைந்து விட்டேன். நீயே என்னை பிறவிக்கடலில் இருந்து மீட்டு உன் திருவடியில் சேர்க்க வேண்டும்.

* வீரம், அன்பு, அருள், ஞானம், இன்பம், கருணை ஆகிய ஆறுகுணங்களின் இருப்பிடமே! வைதாரையும் வாழவைக்கும் தெய்வமே! கேட்டதை அருளும் கற்பகத் தருவே! கற்றவர் போற்றும் கனியே! அன்பர் வேண்டும் வரம் தருபவனே! முத்தமிழ் நாயகனே! திருப்புகழ் போற்றும் திருமுருகனே! வலிமை மிக்க பன்னிருதோள்களைக் கொண்டவனே! சுவாமிமலை குருநாதனே! குடும்பத்தில் அனைவரும் நல்வாழ்வு பெறச் செய்வாயாக.
* சிவபார்வதி மைந்தனே! பரங்குன்றத்து பவித்ரமே ! சங்கரன் புதல்வா! கதிர்காமம் வாழும் கதிர்வேல் முருகா! கந்தா! கடம்பா! சூரபத்மனுக்கு வாழ்வளித்த வள்ளலே! வள்ளிமணாளனே! வெற்றிவேல் தாங்கி வருபவனே! வாழ்வில் குறுக்கிடும் தடைகளைப் போக்கி வெற்றியைத் தந்தருள்வாயாக.
*பார்போற்றும் தெய்வமே! நவவீரர்கள் போற்றும் நாயகனே! புண்ணிய மூர்த்தியே! குருவாய் வந்தருளும் குகப்பெருமானே! எட்டுக்குடி வேலவனே! விராலிமலைவாழ் விமலனே! குமரகுருபரர் பாடிய திருச்செந்தூர் கந்தா! உன் திருவடியில் அடைக்கலம் கொடு.

* பிரம்மனுக்கு பாடம் புகட்டியவனே! முத்தமிழ் வித்தகனே! தும்பிக்கையான் தம்பியே! அருணகிரியை ஆட்கொண்டவனே! குமரகுருவே! வயலூரில் வாழ்பவனே! கந்தகோட்டத்தில் உறைந்திருக்கும் கந்தசுவாமியே! குமரகோட்டத்து குருபரனே! உன்னருளால் மனநிம்மதியும், உடல் ஆரோக்கியமும் உண்டாகட்டும்.

* தாமரை மலர் போன்ற திருவடிகளைக் கொண்டவனே! வேதம் போற்றும் சிவசண்முகனே! குறிஞ்சிக்கடவுளே! ஆறு தலை அமலனே! செங்கல்வராயனே! அவ்வைக்கு நாவற்கனி கொடுத்தவனே! கலியுகவரதனே! முத்துக்குமார சுவாமியே! கண்கண்ட தெய்வமே! அலைகடல் ஓரத்தில் அருளாட்சி செய்யும் செந்திலாண்டவனே! எல்லோரும் இன்புற்றிருக்க உன் அருள்மழையை எப்போதும் பொழிவாயாக.

பசுவின் பால் சைவமா அசைவமா?

மாமிசம் சாப்பிடுபவர்கள் சைவர்களைப் பார்த்து, நீங்கள் குடிக்கும் பால், பசுவின் உடலிலிருந்து தானே வருகிறது. அதன் ரத்தம் தானே பாலாக மாறுகிறது, அதைக் குடிக்கும் நீங்களும் அசைவர்கள் தான், என்று கேலி பேசுவார்கள். ஒரு மிருகக்தைக் கொன்று அதன் இறைச்சியைச் சாப்பிட்டால் தான் அது அசைவம். பால் அப்படியல்ல. பாலைக் கறக்காமல் விட்டால் தான் பசுவுக்கு துன்பம் ஏற்படும். ஆனால், பால் கறக்கும் விஷயத்தில் கவனம் வேண்டும். பசுவுக்கு நான்கு மடு இருக்கும். இதில் இரண்டில் இருந்து மட்டுமே பால் கறக்க வேண்டும். மற்ற இரண்டு மடுக்களை கன்றுக்காக விட்டுவிட வேண்டும். பசும்பால் மனிதனுக்கு சாந்த குணத்தை தரும் வல்லமையுள்ளது. அது புனிதமானதும் கூட. பசுவின் கோமியமும் மருந்தாகவும், கிருமிநாசினியாகவும் பயன்படுகிறது. அது புனிதமானது என்பதால் தான், பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை நாலும் கலந்துனக்கு நான் தருவேன், என்று விநாயகருக்கு வாக்களிக்கிறாள் அவ்வைப்பாட்டி.