108ன் சிறப்பு தெரியுமா?
படைத்த கடவுளுக்கும் அவனது படைப்புக்கும் உள்ள தொடர்பை விளக்கும் எண்ணாக 108 திகழ்கிறது என்கிறார்கள். பிரார்த்தனை, வேண்டுதல் என்று அன்றாடம் நாம் 108 என்று எண்ணைப் பயன்படுத்துகிறோம், அதற்கு இதோ ஒரு சில உதாரணங்கள்.
* வேதத்தில் 108 உபநிடதங்கள்.
* பஞ்சபூதத் தலங்கள், அறுபடை வீடுகள் என்பதுகோல சைவ, வைணவ திவ்ய ÷க்ஷத்திரங்கள் 108.
* பிரபஞ்ச அமைப்பில், பூமிக்கும் சந்திரனுக்கும் இடையே உள்ள தூரம் சந்திரனின் விட்டத்தைப் போல் 108 மடங்கு.
* பூமிக்கும் சூரியனுக்கும் இடையே உள்ள தூரம் சூரியனின் விட்டத்தைப் போல 108 மடங்கு.
* நடராஜரின் கரணங்கள் 108. தாளங்கள் 108
* அர்ச்சனையில் 108 நாமங்கள்
* அரமரத்தையும் பல தெய்வங்களையும் வலம் வருவது 108 முறை.
* சூரியனின் விட்டம் பூமியில் விட்டத்தைப் போல 108 மடங்கு.
ஒர் எண் சிறப்பான இடம் பெறும்போது அதே எண்ணிக்கையில் பல விஷயங்களும் அமைகின்றன.
* தாவோ தத்துவத்தில் 108 தெய்வீக நட்சத்திரங்கள்.
* திபெத்திய புத்த சமயப் பிரிவில் பாவங்களின் எண்ணிக்கை 108
* ஜப்பானிய ஷிண்டோ சமயத்தில் புது வருடம் 108 மணி ஓசைகளால் வரவேற்கப்படும். இந்த ஓசை 108 வகை மனத் தூண்டுதல்களை நாம் வெற்றி கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்துகிறது.
* மகா நிர்வாணத்தை அடைய 108 படிகள் உள்ளதாக புத்தமதம் கூறுகிறது.
* முக்திநாத் ÷க்ஷத்திரத்தில் 108 நீரூற்றுக்கள்.
* உத்தராகண்டில் ஜோகேஸ்வரர் சிவன் கோவிலில் 108 சிவசந்நிதிகள்.
* உடலில் 108 மர்ம ஸ்தானங்கள் என வர்மக்கலை கூறுகிறது.
* குங்ஃபூ கலை உடலில் 108 அழுத்தப் புள்ளிகள் இருப்பதாகக் கூறுகிறது.
* மனித மனதின் ஆசைகளும் 108 விதமாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.
* சீக்கிய குருமார்கள் 108 முடிச்சுகள் உள்ள கம்பளி ஜபமாலையையே பயன்படுத்துவார்கள்.
* 108 சக்தி நாடிகள் உடலின் பல்வேறு பாகங்களிலிருந்து இருதய ஸ்தானத்தில் குவிவதாக தந்திர சாஸ்திரம் கூறுகிறது.
108 என்பது வரையறைக்குட்பட்ட எண்ணாக இருந்து கொண்டு வரம்பற்ற நிலையை உணர்த்துகிறது.
"1 என்பது கடவுளை அல்லது உயர் உண்மையையும் "0 என்பது சூன்யத்தை அல்லது ஆன்மிகச் சாதனையில் முழுமையையும், 8 என்பது எட்டுத் திக்குகளிலும் உள்ள எல்லையற்ற ஆகாயத்தையும் குறிக்கும்.
ஜபமாலையில் 108 மணிகள் ஏன்?
ஜபமாலையில் 108 அல்லது 54 அல்லது 27 மணிகள் கொண்ட மாலைகளும் உண்டு. இந்த எண்ணிக்கைகளைக் கூட்டினால் ஒன்பது வருகிறது. (1+0+8: 5+4 : 2+7).
சூரியன்
பெரிதாக அலட்டிக்கொள்ளாமலே செல்வம் குவிகிறது.. அவர்
தொட்டதெல்லாம் பொன்னாகிறது.. இவருக்கு ராஜயோகம் அடிக்கிறது.. என்று பலரும்
சொல்லக் கேட்கிறோம். அதிர்ஷ்டம், ராஜயோகம், பட்டம், பதவி, பணம், பங்களா,
நிலபுலன்கள் போன்ற அமைப்புகளை ஒருவருக்கு வழங்குவதில் நவக்கிரகங்களுக்கு
பெரும் பங்கு உண்டு. ஒரு இடத்தில் நின்றும் இடம் பெயர்ந்தும் கிரகங்கள்
தரும் பலன்களே ஒருவருக்கு நன்மை, தீமைகளை ஏற்படுத்துகிறது. ஜோதிட
சாஸ்திரத்தின்படி சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், வியாழன் (குரு),
வெள்ளி (சுக்கிரன்), சனி மற்றும் சாயா கிரகங்களான ராகு, கேது ஆகிய ஒன்பதுமே
நவக்கிரகங்கள் ஆகும். இவை ஒவ்வொன்றுக்கும் ஒரு வலிமை உண்டு. இந்த
கிரகங்கள் தரும் பொதுவான பலன்கள் என்ன, அவரவர் ஜாதகப்படி தரும் பலன்கள்
என்ன, ஒவ்வொரு கிரகத்துக்கும் என்ன கிழமை, தேதிகள், எண், நிறம் ஏற்றது
என்பதை இனி பார்க்கலாம்.
சூரியன்
நவக்கிரகங்களின் நாயகன் என்றழைக்கப்படுபவர் சூரியன். தினமும் நமக்கு தரிசனம் கொடுக்கும் கிரகம். ஒளியை தந்து உயிர்களை வாழவைத்து இந்த உலகையே வாழவைத்துக் கொண்டிருக்கும் முதன்மை கிரகம். அதிகாரம், ஆட்சி, ஆளுமை போன்றவற்றுக்கு அதிகாரம் உள்ளவர் இவர். சூரியன் தயவு இல்லாமல் தலைமைப் பொறுப்புக்கு யாரும் வரமுடியாது. ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ், ஐ.எஃப்.எஸ் அதிகாரிகள், தலைமை செயலாளர்கள், மிகப்பெரிய அதிகார பதவிகள் ஆகியவற்றில் ஒருவர் அமர்வதற்கு சூரியனின் அனுக்கிரகம் அவசியம். இவை மட்டுமல்லாமல், ஒரு நிகழ்ச்சிக்கோ, 10 பேர் கொண்ட குழுவுக்கோ தலைமை வகிக்க வேண்டும் என்றாலும் சூரியனின் அருள் தேவை. தலைமை பீடம் என்பது சூரிய பலத்தினால்தான் கிடைக்கும்.
சூரியனின் அம்சங்கள் (ஆதிக்கம்)
கிழமை: ஞாயிறு
தேதிகள்: 1, 10, 19, 28
நட்சத்திரம்: கிருத்திகை, உத்திரம், உத்திராடம்.
தமிழ் மாதம்: சித்திரை, ஆவணி
ராசி: மேஷத்தில் உச்சம், சிம்மத்தில் ஆட்சி
நிறம்: சிவப்பு
ரத்தினம்: மாணிக்கம் (சிவப்பு)
தானியம்: கோதுமை
ஆடை (வஸ்திரம்): சிவப்பு.
ஒருவர் ஏதாவதொரு வகையில் நம்பர் ஒன்னாக தலைமை பொறுப்பில், கையெழுத்திடும் இடத்தில் இருக்க வேண்டும் என்றால் சூரியனின் ஆதிக்கத்தில் பிறந்து இருந்தால்தான் அவரவர் ஜாதக பலத்துக்கு ஏற்ப பதவி கிடைக்கும். நல்ல யோகமான சூரிய திசை நடக்கும்போது பட்டம், பதவி தேடி வரும்.
1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறப்பது யோகம். சிம்ம லக்னம், சிம்மராசியில் பிறந்தால் கூடுதல் யோகம். லக்னத்தில் சூரியன் இருக்க பிறந்தவர்கள் நல்ல யோகம் உடையவர்கள். சூரியன் உச்சத்தில் இருக்கும் சித்திரை மாதம், ஆட்சியில் இருக்கும் ஆவணி மாதம் பிறந்தவர்கள் யோகம் உடையவர்கள். கிருத்திகை, உத்திரம், உத்திராடம் ஆகிய சூரியனின் நட்சத்திரத்தில் பிறப்பது சிறப்பானது.
பிறந்த லக்னமும் சூரியனால் கிடைக்கும் யோகமும்
எந்த லக்னத்தில் பிறந்தவர்களுக்கு சூரியன் எந்த வகையான யோகங்களை கொடுப்பார்?
மேஷ லக்னம்/ராசி & பெரிய பதவி
ரிஷப லக்னம்/ராசி & மாபெரும் யோகம்
கடக லக்னம்/ராசி & பேச்சாற்றலால் யோகம்
சிம்ம லக்னம்/ராசி & அதிகார ஆளுமை
விருச்சிக லக்னம்/ராசி & தலைமைப் பதவி
தனுசு லக்னம்/ராசி & நல் பாக்ய யோகம்
மற்ற லக்னம்/ராசிகள் & சூரியன் இருக்கும் பலத்தின் மூலம் பட்டம், பதவி, அதிகாரம்.
வழிபாடு, பரிகாரம்
சிவாலய வழிபாடும், சூரிய நமஸ்காரமும் நல்ல பலன் தரும். தினசரி ஆதித்ய ஹ்ருதய ஸ்தோத்திரம் படிக்கலாம். கோதுமையில் செய்த சப்பாத்தி, ரொட்டி, சாதம் போன்ற பண்டங்களை பசுமாட்டுக்கு கொடுக்கலாம்.
‘ஓம் அஸ்வ த்வஜாய வித்மஹே பாஸ ஹஸ்தாய தீமஹி தந்நோ சூர்ய பிரசோதயாத்’ அல்லது ‘ஓம் பாஸ்கராய வித்மஹே மஹாத்யுதிகராய தீமஹி தந்நோ ஆதித்ய பிரசோதயாத்’ என்ற சூரிய காயத்ரி மந்திரத்தை தினமும் 108 முறை சொல்லலாம்.
‘ஓம்அம் நமசிவாய சூரிய தேவாய நம’ என்ற மந்திரத்தை 108 முறை சொல்லலாம்.
வளர்பிறை சப்தமி திதியில் விரதம் இருந்து (ஏழு சப்தமி) கோதுமை தானம் செய்யலாம். கும்பகோணம் அருகே உள்ள ஆடுதுறை சூரியனார் கோயிலுக்கு சென்று வரலாம். சென்னை அருகே கொளப்பாக்கம் அகஸ்தீஸ்வரர் ஆனந்தவள்ளி ஆலயம் சூரியனுக்குரிய ஸ்தலமாகும். நவதிருப்பதிகளில் திருநெல்வேலி அருகே உள்ள ஸ்ரீவைகுண்டம் சூரிய ஸ்தலமாகும்.

உலகப் பழமொழிகள்.
- நண்பனைக் கஷ்டகாலத்தில் தெரிந்து கொள்ளலாம்; வீரனைப் போர்க்காலத்தில் தெரிந்து கொள்ளலாம்; நேர்மையானவனைக் கடன் கொடுத்துத் தெரிந்து கொள்ளலாம்; துணைவியைச் செல்வம் போனபின்பு தெரிந்து கொள்ளலாம்; உறவினரைத் துன்ப காலத்தில் தெரிந்து கொள்ளலாம்.
-இந்தியா.
- உன்னைப் புண்படுத்துவது எது என்று உனக்குத் தெரிந்தால், மற்றவர்களைப் புண்படுத்துவது எது என்பது உனக்குத் தெரியும்.
-ஆப்பிரிக்கா.
- மணவாழ்க்கை என்பது முற்றுகையிடப்பட்ட ஒரு கோட்டை மாதிரி. வெளியே இருப்பவர்கள் உள்ளே செல்ல விரும்புகிறார்கள். உள்ளே இருப்பவர்கள் வெளியே செல்ல விரும்புகிறார்கள்.
-அரேபியா.
- பயத்தைக் குறை-நம்பிக்கையைப் பெருக்கு! உணவைக்குறை-உழைப்பைப் பெருக்கு! குடியைக் குறை-மூச்சைப் பெருக்கு! பேச்சைக் குறை-செயலைப் பெருக்கு! வெறுப்பைக் குறை-அன்பைப் பெருக்கு! அனைத்து நன்மைகளும் உனக்கே.
-ஸ்வீடன்.
- துறவிகள் மெலிந்தால் அழகு. நான்கு கால் விலங்கினங்கள் கொழுத்தால் அழகு. மனிதர்கள் படித்தால் அழகு. பெண்கள் மணந்தால் அழகு.
-மியான்மர்.
- தெரிந்தவையெல்லாம் சொல்ல வெண்டுமென்பதில்லை! கேட்டதையெல்லாம் நம்ப வேண்டுமென்பதில்லை! முடிந்ததையெல்லாம் செய்ய வேண்டுமென்பதில்லை.
-போர்ச்சுக்கல்.
- பூமியில் பயனற்ற காரியங்கள் நான்கு: பலனற்ற மண்ணில் பெய்த மழை; சூரிய வெளிச்சத்தில் வைத்த விளக்கு; குருடனை மணந்த அழகி; நன்றி கெட்டவனுக்குச் செய்த நற்காரியம்.
-அரேபியா.
- மூன்று உயிரினங்கள் தங்களை அலங்கரித்துக் கொள்வதில் காலத்தைக் கழிப்பவை. அவை; பூனைகள், ஈக்கள்; காதலிகள்.
- பிரான்ஸ்.
- தூக்கம் வந்துவிட்டால் தலையணை தேவையில்லை, காதல் வந்துவிட்டால் அழகே தேவையில்லை.
- ஆப்கானிஸ்தான்.
வாழ்க்கை என்பது வாழும் கலையில் ஒரு தேர்வு. ஆனால், அதன் முடிவுகளை அறிவதற்குள் நம் வாழ்க்கை முடிந்து விடுகிறது.ஓரெழுத்து ஒரு சொல்..!
நம் தமிழ் மொழியின் சிறப்புக்களில் ஒன்று...
ஆ - பசு
ஈ - பறக்கும் பூச்சி
ஊ - இறைச்சி
ஏ - அம்பு
ஐ - அழகு, தலைவன்
ஓ - வினா, மதகு(நீர் தங்கும் பலகை)
மா - பெரிய
மீ - மேலே
மு - மூப்பு
மே - அன்பு, மேன்மை
மை - கண்மை(அஞ்ஞனம்)
மோ - முகர்தல், மோத்தல்
தா - கொடு
தீ - நெருப்பு
தூ - வெண்மை
தே - தெய்வம்
தை - தைத்திங்கள்
சா - மரணம், பேய்
சீ - இகழ்ச்சி, சீத்தல்
சே - எருது
சோ - மதில்
பா - பாட்டு,நிழல், அழகு
பூ - மலர்
பே - நுரை, அழகு
பை - பசுமை, கைப்பை
போ - செல்,போதல்
நா - நாக்கு
நீ - நீ
நே - அன்பு, நேயம்
நை - வருந்து, நைதல்
நோ - நோய், வருத்தம்
கா - சோலை
கூ - பூமி
கை - கரம்
கோ - அரசன், இறைவன்
வா - வருக
வீ - பூ
வை - கூர்மை, வைத்தல்
வௌ - வவ்வுதல் (அ) கௌவுதல்
யா - ஒரு மரம்
நொ - துன்பம்
து - கொடு, உண், பிரிவு
ஈ - பறக்கும் பூச்சி
ஊ - இறைச்சி
ஏ - அம்பு
ஐ - அழகு, தலைவன்
ஓ - வினா, மதகு(நீர் தங்கும் பலகை)
மா - பெரிய
மீ - மேலே
மு - மூப்பு
மே - அன்பு, மேன்மை
மை - கண்மை(அஞ்ஞனம்)
மோ - முகர்தல், மோத்தல்
தா - கொடு
தீ - நெருப்பு
தூ - வெண்மை
தே - தெய்வம்
தை - தைத்திங்கள்
சா - மரணம், பேய்
சீ - இகழ்ச்சி, சீத்தல்
சே - எருது
சோ - மதில்
பா - பாட்டு,நிழல், அழகு
பூ - மலர்
பே - நுரை, அழகு
பை - பசுமை, கைப்பை
போ - செல்,போதல்
நா - நாக்கு
நீ - நீ
நே - அன்பு, நேயம்
நை - வருந்து, நைதல்
நோ - நோய், வருத்தம்
கா - சோலை
கூ - பூமி
கை - கரம்
கோ - அரசன், இறைவன்
வா - வருக
வீ - பூ
வை - கூர்மை, வைத்தல்
வௌ - வவ்வுதல் (அ) கௌவுதல்
யா - ஒரு மரம்
நொ - துன்பம்
து - கொடு, உண், பிரிவு
இளநீர்
காலையில்
இளநீர் சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு மிக மிக நல்லது .இது உடலுக்கு
ஊக்கமும் சத்தும் தரும் ஆரோக்கியமான மருந்து.தோல் பளபளப்பாக சிவப்பாக மாற
தினமும் இளநீரில் குடிக்க வேண்டும் .
இது இரத்தம் சுத்தம் அடையவும் கல்லீரல் நன்றாக இயங்கவும் உதவுகிறது. இத்துடன் தோல்,முடி,நகங்கள் ஆரோக்கியமாக வளரவும் உதவுகின்றன. இளநீர் இளமையைக் காக்கும் அரிய பானமாகும்.
உடல் நலம் ஆரோக்கியமாக இருந்தால் தான் இளமையும் பொலிவும் உடலிலும் உள்ளத்திலும் பிறக்கும். குழந்தைகள் இதை அருந்தினால் ஓரளவு சதைப்பற்றுடன் ஆரோக்கியமாக வளருவார்கள். இளநீரில் அதிக அளவில் சத்துகள் உள்ளன.
இளநீரை வெறும் வயிற்றில் சாப்பிடக் கூடாது. ஏனெனில் அதில் உள்ள அமிலத் தன்மை வயிற்றில் புண்ணை உருவாக்கும். ஏதாவது உணவு எடுத்த பின்னரே சாப்பிடவேண்டும். சர்க்கரைச் சத்துடன் தாதுப் பொருள்களும் நிறைந்துள்ளன.
பொட்டாஷியம், சோடியம், கால்சியம், பாஸ்பரஸ், கந்தகம் போன்ற தாதுக்கள் இளநீரில் உள்ளன. இளநீரில் உள்ள புரதச்சத்து, தாய்ப்பாலில் உள்ள புரதச்சத்துக்கு இணையானது. மந்தம், உணவு செரியாமை போன்றவற்றிக்கு இது மருந்து மற்றும் சிறந்த உணவும் ஆகும்.
காலரா நோயாளிகள் 1 ஸ்பூன் எலுமிச்சை சாறை இளநீரில் விட்டு அருந்தி வரவேண்டும். பித்தக் கோளாறு உள்ளவர்களுக்கும் இளநீர் இயற்கையான சத்து நிறைந்த மருந்து ஆகும்.
இளநீரில், செவ்விளநீர், பச்சை இளநீர், ரத்த சிவப்பில் உள்ள இளநீர் என பல்வேறு வகைகள் உள்ளன. இளநீரில் எல்லா வகையிலும் மருத்துவக் குணங்கள் நிறைந்துள்ளன. சிறுநீரில் கற்கள் உருவாகாமல் தடுக்க இளநீர் மிகவும் உதவுகிறது. .
மஞ்சள் நிற சிறுநீரை மாற்ற இளநீரை தவறாமல் குடிக்க வேண்டும் அளவுக்கு அதிகமாக உள்ள வாதம், பித்தம், கபத்தைத் தீர்க்கும் மருந்து இளநீர். வெப்பத்தைத் தணிக்கும். உடலில் நீர்ச் சத்து குறையும் நிலையில் அதைச் சரி செய்யவும் இது உதவுகிறது .
இது சிறுநீரகத்தை சுத்திகரிக்கும். மற்றும் குணப்படுத்தும். ஜீரணக் கோளாறால் அவதிப்படும் குழந்தைகளுக்கு இளநீர் நல்ல மருந்து. இளநீர் குடல் புழுக்களை அழிக்கிறது. இளநீரின் உப்புத் தன்மை வழுவழுப்புத்தன்மை காலரா நோயாளிகளுக்கு நல்ல மருந்தாக உதவுகிறது.
காலையில் உடல் நலத்துக்கு ஊக்கம் தரும் மருந்தாக இளநீர் குடிக்கலாம். தாகத்தைத் தீர்க்க உடலில் சக்தியைப் புதுப்பிக்க தினமும் ஓர் இளநீர் குடிக்கலாம் உங்கள் வாழ்நாள் முழுக்க அழகான தோற்றத்துடன், நலனை நீடிக்கும் சக்தியாக இளநீர் உள்ளது

Subscribe to:
Posts (Atom)