தைப்பூசம் ஏன் கொண்டாடப்படுகிறது?

நவக்கிரகங்களில், சூரியன் சிவாம்சம் கொண்டவர். இவர் தை மாதத்தில் தன் வடதிசைப்பயணத்தை தொடங்குகிறார். இதனை உத்ராயண புண்ணிய காலம் என்பர். இவர் இந்த மாதத்தில் மகரராசியில் இருக்கிறார்.  சக்தியின் அம்சமாக திகழ்பவர் சந்திரன். தைப்பூச நாளில் சந்திரன் ஆட்சி பலத்தோடு கடகராசியில் சஞ்சரிக்கிறார். அன்று, மகரத்தில் இருக்கும் சூரியனும், கடகத்தில் இருக்கும் சந்திரனும் ஒருவருக்கொருவர் பலத்தோடு பார்த்துக்கொள்வர். இதற்கு என்ன அர்த்தம் தெரியுமா? அம்பிகை சிவகாமி கண்டு களிக்க,பரம்பொருளான சிவன், நடராஜராக ஆனந்த தாண்டவம் ஆடுகிறார். மார்கழி திருவாதிரையில் இறைவன் தனித்து ஆடுகிறார். தைப்பூசநாளில் சிவபார்வதி இணைந்து ஆடுவதாகவும் சொல்வர். நடனமாடினால் மகிழ்ச்சி பிறக்கும். அந்த மகிழ்ச்சியில் திளைக்கும் இறைவனிடம் நாம் வேண்டியதைப் பெறலாம் என்பதால் இந்நாளை வழிபாட்டுக்குரிய நாளாக நிர்ணயித்தனர். இல்லற வாழ்வில் பெறும் இன்பத்தின் அடையாளம் குழந்தை. அம்மையப்பரான சிவபார்வதி, மகிழ்ந்திருந்து ஈன்றெடுத்த ஞானக்குழந்தை முருகன். அவ்வகையில், பெற்றோருக்குரிய தைப்பூசம் பிள்ளைக்கும் சிறப்பான நாளாக அமைந்தது. தைப்பூசநாளில் சிவபார்வதி, முருகப்பெருமானை தரிசித்து வேண்டிய வரம் பெறுவோம்.

பள்ளி கழிப்பறையை சுத்தம் செய்யும் தலைமை ஆசிரியர்

மதுரை,: "எழுத்தறிவித்தவன் இறைவன்' என்பதற்கு, எடுத்துக்காட்டாய் திகழ்கிறார், மதுரை ஞானஒளிவுபுரத்தை சேர்ந்த, தலைமை ஆசிரியர் கில்பர்ட், 47. இவர், அய்யப்பன்நாயக்கன்பட்டி, கள்ளர் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்.

காலை, 9:30 மணிக்கு தான், பள்ளி துவங்கும் என்றாலும், காலை, 8:00 மணிக்கே வந்து விடுகிறார்.வகுப்பறையில் பள்ளிக் குழந்தைகள் விட்டுச் சென்ற, காகிதங்கள் உள்ளிட்ட பொருட்களை அப்புறப்படுத்தி, தூய்மைப்படுத்துவதை வழக்கமாக கொண்டுள்ளார். இப்பணிக்காக, துப்புரவு ஊழியர் வரட்டும் என, காத்திருப்பது கிடையாது.மாலை, 4:00 மணிக்கு, பள்ளி முடிந்ததும், குழந்தைகள் பயன்படுத்தும் கழிப்பறையை, தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்கிறார்.

இது பற்றி அவரிடம், சக ஆசிரியர்கள் வியப்புடன் கேட்கும்போது, "நாம் பெற்றப் பிள்ளைகளுக்கு சுத்தம் செய்கிறோம். இப்பள்ளியில் படிக்கும் குழந்தைகளும், நம் பிள்ளைகள் தான். குழந்தையும், தெய்வமும் ஒன்றல்லவா!' எனக் கூறி ஆசுவாசப்படுத்துவார். எண்ணற்ற ஏழை குழந்தைகளை, சொந்த செலவில் படிக்க வைக்கிறார்.

இதற்காக, மாதம் ஒரு தொகையை, குடும்ப பட்ஜெட்டில் இருந்து ஒதுக்குகிறார். "எழுத்தறிவித்தவன் இறைவன்' என்பதற்கு எடுத்துக்காட்டாய் திகழும், தலைமை, ஆசிரியர் கில்பர்ட்டின் பணி சிறக்க வாழ்த்துவோம்!

Good Morning

Good Morning

குட் நைட்

இதை
ஒரு நிதானமற்ற பொழுதின்
கை நடுக்கங்களுக்கிடையே
இலக்கில்லாமல் கிறுக்க ஆரம்பித்திருக்கிறேன்..

சத்தமில்லாமல்
புகைந்து கொண்டிருக்கிறது
இந்த ஆழ்ந்த பனி இரவின்
தெரு விளக்கு வெளிச்சம்..

இறந்த காலத்தின் வலிகளிலொன்று
மூளையின் எங்கோ ஓர் மூலையில்
உயிர்பெற்று
நெஞ்சத்தினூடே வழிந்து

பின் வார்த்தைகளாய்
உருமாற தெரியாமல் உதிர்கிறது..
இதோடு
இந்த கிறுக்கலும் நின்று போகிறது..

நாளைய இரவிலும்
என் உளறலை தொடர கூடும் என்ற அவசியமற்ற தகவலோடு
இப்போது வலுக்கட்டயாமாய்
தூக்கத்தை போர்த்திகொள்ள போகிறேன்..

குட் நைட்..

108ன் சிறப்பு தெரியுமா?


படைத்த கடவுளுக்கும் அவனது படைப்புக்கும் உள்ள தொடர்பை விளக்கும் எண்ணாக 108 திகழ்கிறது என்கிறார்கள். பிரார்த்தனை, வேண்டுதல் என்று அன்றாடம் நாம் 108 என்று எண்ணைப் பயன்படுத்துகிறோம், அதற்கு இதோ ஒரு சில உதாரணங்கள்.

* வேதத்தில் 108 உபநிடதங்கள்.

* பஞ்சபூதத் தலங்கள், அறுபடை வீடுகள் என்பதுகோல சைவ, வைணவ திவ்ய ÷க்ஷத்திரங்கள் 108.

* பிரபஞ்ச அமைப்பில், பூமிக்கும் சந்திரனுக்கும் இடையே உள்ள தூரம் சந்திரனின் விட்டத்தைப் போல் 108 மடங்கு.

* பூமிக்கும் சூரியனுக்கும் இடையே உள்ள தூரம் சூரியனின் விட்டத்தைப் போல 108 மடங்கு.

* நடராஜரின் கரணங்கள் 108. தாளங்கள் 108

* அர்ச்சனையில் 108 நாமங்கள்

* அரமரத்தையும் பல தெய்வங்களையும் வலம் வருவது 108 முறை.

* சூரியனின் விட்டம் பூமியில் விட்டத்தைப் போல 108 மடங்கு.

ஒர் எண் சிறப்பான இடம் பெறும்போது அதே எண்ணிக்கையில் பல விஷயங்களும் அமைகின்றன.

* தாவோ தத்துவத்தில் 108 தெய்வீக நட்சத்திரங்கள்.

* திபெத்திய புத்த சமயப் பிரிவில் பாவங்களின் எண்ணிக்கை 108

* ஜப்பானிய ஷிண்டோ சமயத்தில் புது வருடம் 108 மணி ஓசைகளால் வரவேற்கப்படும். இந்த ஓசை 108 வகை மனத் தூண்டுதல்களை நாம் வெற்றி கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்துகிறது.

* மகா நிர்வாணத்தை அடைய 108 படிகள் உள்ளதாக புத்தமதம் கூறுகிறது.

* முக்திநாத் ÷க்ஷத்திரத்தில் 108 நீரூற்றுக்கள்.

* உத்தராகண்டில் ஜோகேஸ்வரர் சிவன் கோவிலில் 108 சிவசந்நிதிகள்.

* உடலில் 108 மர்ம ஸ்தானங்கள் என வர்மக்கலை கூறுகிறது.

* குங்ஃபூ கலை உடலில் 108 அழுத்தப் புள்ளிகள் இருப்பதாகக் கூறுகிறது.

* மனித மனதின் ஆசைகளும் 108 விதமாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.

* சீக்கிய குருமார்கள் 108 முடிச்சுகள் உள்ள கம்பளி ஜபமாலையையே பயன்படுத்துவார்கள்.

* 108 சக்தி நாடிகள் உடலின் பல்வேறு பாகங்களிலிருந்து இருதய ஸ்தானத்தில் குவிவதாக தந்திர சாஸ்திரம் கூறுகிறது.

108 என்பது வரையறைக்குட்பட்ட எண்ணாக இருந்து கொண்டு வரம்பற்ற நிலையை உணர்த்துகிறது.

"1 என்பது கடவுளை அல்லது உயர் உண்மையையும் "0 என்பது சூன்யத்தை அல்லது ஆன்மிகச் சாதனையில் முழுமையையும், 8 என்பது எட்டுத் திக்குகளிலும் உள்ள எல்லையற்ற ஆகாயத்தையும் குறிக்கும்.

ஜபமாலையில் 108 மணிகள் ஏன்?

ஜபமாலையில் 108 அல்லது 54 அல்லது 27 மணிகள் கொண்ட மாலைகளும் உண்டு. இந்த எண்ணிக்கைகளைக் கூட்டினால் ஒன்பது வருகிறது. (1+0+8: 5+4 : 2+7).