வைரஸ் தாக்கிய ‘பென்ட்ரைவ்’ இலிருந்து பைல்களை மீட்க சிம்பிள் வழி!

வைரஸ் தாக்கிய ‘பென்ட்ரைவ்’ இலிருந்து பைல்களை மீட்க சிம்பிள் வழி!

தற்பொழுது தகவல்களை சேமிக்க பெரும்பாலானவர்கள் பயன்படுத்தப்படுவது USB பென்டிரைவ்கள். இதில் முக்கியமான பிரச்சினை வைரஸ் பிரச்சினை. வெவ்வேறான கணனிகளில் உபயோகிப்பதால் வைரஸ்கள் சுலபமாக பென்டிரைவில் புகுந்து உள்ளே இருக்கும்பைல்களை பாதிக்கிறது.
இப்படி பாதிக்கும் பொழுதுஉங்கள் பென்ட்ரைவில் உள்ளபைல்கள் மறைக்கப்பட்டுவிடடும் 

கணனியில் பென்டிரைவை ஓப்பன் செய்தால் எந்த பைல்களும் இருக்காது. வெற்றிடமாக இருக்கும். ஆனால் properties சென்று பார்த்தால் பைல்கள் இருப்பது போன்றே அளவு காட்டும். காரணம் நம் தகவல்களை வைரஸ்கள் மறைத்து வைத்துவிட்டது. பென்டிரைவில் முக்கியமான தவல்கள் ஏதும் இல்லை எனில் Format செய்து பென்டிரைவை திரும்ப பெறலாம். ஆனால் ஏதேனும் முக்கிய மான தகவல்கள் இருந்தால் எப்படி அந்த பைல்களை பத்திரமாக மீண்டும் கொண்டு வருவது என பார்ப்போம்.

 



இதற்க்கு நீங்கள் எந்த மென்பொருளையும் உங்கள் கணினியில் Install செய்து உபயோகிக்க வேண்டியதில்லை.உங்ள் கணனியிலேயே சுலபமாக செய்து விடலாம். கீழே உள்ள வழிமுறையின் படி கவனமாக செய்து அந்த பைல்களை மீட்டு எடுங்கள்.

1) முதலில் பென்டிரைவை உங்கள் கணினியில் சொருகி கொள்ளுங்கள்.

2) Start ==> Run ==> CMD==> Enter கொடுக்கவும்.

3)இப்பொழுது பென்ட்ரைவ் எந்த ட்ரைவில் உள்ளது என பாருங்கள். My Computer செல்வதன் மூலம் கண்டறியலாம்.

4) உதாரணமாக E: டிரைவில் பென்ட்ரைவ் இருக்கிறது எனவைத்து கொள்வோம் அதற்கு நீங்கள் E: என கொடுத்து Enter அழுத்தவும்.

5) attrib -h -s -r /s /d *.*என டைப் செய்யுங்கள் ஒவ்வொருபகுதிக்கும் Space சரியாககொடுக்கவும. 

 


◦நீங்கள் சரியாக கொடுத்துஉள்ளீர்கள். என உறுதி செய்து கொண்டு Enter அழுத்துங்கள்.

◦சில வினாடிகள் பொறுத்திருங்கள். இப்பொழுது உங்கள் பென்ட்ரைவ் சோதித்து பாருங்கள் உங்களுடைய பைல்கள் அனைத்தும் திரும்பவும் வந்திருக்கும் — 


உபயோகமான தகவல் என்று நினைத்தால், நண்பர்களுடன் பகிருங்கள்...

கள்ள நோட்டுகளை அடையாளம் காண


பொதுவாக நம் அன்றாட வாழ்வில் பல ரூபாய்களை உபயோகப்படுத்துகின்றோம் ஆனால் அவற்றின் சிறபம்சங்கள் பற்றி தெறிந்து கொள்வதே இல்லை இதனால்தான் பல கள்ள நோட்டுகளை நாம் எளிதில் அடையாளம் காண இயலமுடியவில்லை,ஆனால் 1990 பிறகு நமது இந்திய ரூபாய் நோட்டுகளில் பல மாற்றங்கள் கொண்டுவரப்பட்டது இது அடிக்கடி மாற்றப்படும்


பண்புகளை கொண்டது இதனை வரயறை மற்றும் வடிவமைப்பது ரிசர்பேன் ஆஃப் இந்தியா. இப்படி வந்த ரூபாய் நோட்டுகளின் சிறப்பம்சங்களை பற்றி தெறிந்து கொண்டால் ,எளிதாக கள்ள நோட்டுகளை அடையாளம் காணலாம். (பின்வரும் படத்தில் உள்ள எண்ணைக்குறிக்கும்)




ஒவ்வொரு ரூபாயிலும் உள்ள "ரைஸெட் இமேஜ்" எனப்படும் குறிப்பாக 1000 ரூபாயில்
"டயமன்ட்" இமேஜ் 500 ரூபாயில் "வட்டவடிவிலும்" 100 ரூபாயில் "முக்கோண வடிவிலும்" 50 ரூபாயில்சதுர வடிவிலும்" இருக்கும் இதனை தொட்டுபார்த்தால்
அதன் வடிவத்தை நாம் உண்ரமுடியும்.
 
 
 
 





ரூபாயின் கம்பி இலைகள் 1990 பிறகு வந்த நோட்டுகளில் இந்த கம்பி இலைகள் விட்டுவிட்டு இருக்கும் ஆனால் அதனை தூக்கிபார்த்தால் ஒரு நேர்கோடாக இருக்கும், அதன் மீது "ஆர்பிஐ""500" என்ற வார்த்தைகள் இருக்கும்.

ரூபாயை 45டிகிரி சாய்த்து பார்த்தால் கம்பிஇழை மற்றும் ரூபாயின் மதிப்பு நீல
நிறமாகவும் நேராக பார்த்தால் பச்சை நிறமாகவும் இருக்கும்.

வாட்டர்மார்க்கிங் இதானது நவீன தொழில்ஙுட்ப்பமாகும் இதன்படி ரூபாயின் இடது ஓரத்தில் உள்ள பகுதியில் காந்தி அடிகளின் படமும் ரூபாயின் மதிப்பும் வெளிச்சத்தில்
தூக்கி பார்த்தால் தெறியும்.

காந்தி அடிகளின் வலது ஓரத்தில் மிக ஙுண்ணிய அளவில் "ஆர்பிஐ""500" போன்ற பல எழுத்துக்கள் இருக்கும்.

6)ரூபாயின் பின்புறத்தில் அடிவாட்டில் அந்த ரூபாய் அச்சிடப்பட்ட வருடம் இருக்கும்.
இப்படி பல சிறப்புகளை நாம் சொல்லி கொண்டே போகலாம் இந்த ரூபாய்களின் பண்புகள்
அடிகடி மாற்றப்படலாம்,








மேலும் இப்போது பிளாஸ்டிக்கில் ரூபாயை வெளிவிடவும்
ஆர்பிஐ பரிசீலித்து வருகின்றது



.