பனை :-
புல்லினத்தைச் சேர்ந்த ஒரு தாவரப் பேரினம். அறிவியல் வகைப்பாட்டில் இதை போரசசு (Borassus) என்னும் பேரினத்தில் அடக்குவர். இப் பேரினத்தில் பல சிற்றினங்கள் அடங்குகின்றன.நெடிய மரமாக 30 மீட்டர் உயரம் வரை பனைமரம் வளரும். இலைகள் நீட்டமாக விசிறி போல் இருக்கும். இலைகள் 2-3 மீட்டர் நீளம் இருக்கும். பூக்கள் சிறியவை. பழங்கள் (நுங்கு) பெரியதாக, வட்டமாக, பழுப்பு நிறத்துடன் இருக்கும்.பொது வழக்கில் மரம் என்று தமிழில் வழங்கப்படினும், இது மர வகையைச் சார்ந்தது அல்ல. தற்காலத் தாவரவியல் அடிப்படையில் மட்டுமன்றித் தமிழ் இலக்கண மரபுகளின்படியும் பனையை மரம் என்பது தவறு.நெடிய மரமாக 30 மீட்டர் உயரம் வரை பனைமரம் வளரும். இலைகள் நீட்டமாக விசிறி போல் இருக்கும். இலைகள் 2-3 மீட்டர் நீளம் இருக்கும். பூக்கள் சிறியவை. பழங்கள் (நுங்கு) பெரியதாக, வட்டமாக, பழுப்பு நிறத்துடன் இருக்கும்.பனையை, கேட்டதைக் கொடுக்கும் தேவலோகத்து மரம் எனத் தொன்மங்கள் கூறும் கற்பகதருவுக்கு ஒப்பிடுவர்.பனை மரத்தில் இருந்து கிடைக்கும் நுங்கு நீரை தொடர்ந்து சாப்பிட்டு வர கோடை காலத்தில் ஏற்படும் வேர்குரு நீங்கும்.தோலுடன் நுங்கை சாப்பிட்டு வர சீதக்கழிச்சல் நீங்கும்.பணங்கற்கன்டை ஏதாவது ஒரு வகையில் அடிக்கடி பயன் படுத்தி வர அம்மை நோயால் ஏற்பட்ட உடல் வெப்பம் தாகம் போன்றவை நீங்கும்.பனங்கிழங்கிற்கு ஊடல் குளிர்ச்சியை தரும் தன்மை உண்டு.இந்த கிழங்கை சாப்பிட்டு வந்தாலுடல் அழகு பெறும்.உடல் பலமும் அதிகரிக்கும்.பதநீர் மகிமை..பனை மரத்துல நுங்கு பிஞ்சு உருவானதும், அதை நாறைக் கட்டி, வளர்ச்சியை கட்டுப்படுத்துவாகபிஞ்சு ஓரத்தில் லேசாக கீறிவிட்டு, தினமும் மூன்று முறை மரம் ஏறி, அந்த பிஞ்சை அழுத்த, சொட்டுச் சொட்டாக மண்பானையில் பால்(கள்) இறங்கும். இப்படி ஒரு மரத்துல மூன்று மாதம் வரை பால் எடுக்கலாம். அந்த பாலில் சுண்ணாம்பு சேர்த்தால் பதநீர் ரெடி. சில இடங்களில் மண்பானை அடியில் சுண்ணாம்பை தடவி கட்டிவிட்டுடுவாங்க. இதனால மரத்திலிருந்து பானையை இருக்கும்போதே பதநீர் தயார். இந்த பனைமர பதநீரைவிட, தென்னைமர பதநீர் போதை அதிகம் தரும். ஆனால் சுவையில் பனைமர பதநீரை மிஞ்சமுடியாது.இந்த பதநீரில் சோறு சமைக்கலாம்; பொங்கல் வைக்கலாம்; கொழுக்கட்டை தயாரிக்கலாம்; அவியல் அரிசி படைக்கலாம். யானை இறந்தால் ஆயிரம் பொன்னுனு சொல்லுவாங்க. பனை இருந்தாலும் ஆயிரம் பொன்தான். பிஞ்சிலிருந்து மரமாகி, கீழே விழும் வரை எல்லா வகையிலும் பயன்தரும் என்பது நிதர்சனம்'',சுண்ணாம்பு சேர்த்து எடுக்கப்படும் பனஞ்சறுக்கு பதர்நீர் என்று பெயர்.மேக நோய் இருப்பவர்கள் இதை 40 நாட்களிடைவிடாஅது அருந்தி வர அந்த நோய் பாதிப்பில் இருந்து விடுபடலாம்.பதநீரில் இருந்து எடுக்கப்படும் கருப்பட்டி, பனங்கற்கண்டு, ஆகியவற்றுக்கும் நோய் தீர்கும் குணங்கள் உண்டு.பனை நுங்கு கோடை கலத்தில் ஏற்படும் தாகத்திற்கு மிகவும் ஏற்றது.பனங்கிழங்கை உலர்த்தி இடித்து மாவாக்கி, அதனுடன் தேங்காய் உப்பு போட்டு சாப்பிட்டு வர உடலுக்கு பலம் உண்டாகும். மேலும் உடல் பருமன் ஆகும்.பனம் பூவை சுட்டு சாம்பலாக்கி அதில் சிறிது தேங்காய் எண்ணெய் கலந்து புண்களின் மீது பூச ஆரும்.பயன் தரும் பாகங்கள் . . .நொங்கு, பனம்பழம், பனங்கிழங்கு, பனை ஓலை, குருத்து, பனை கருக்கு, பனைப்பால், முற்றிய மரம் முதலியன.வளரியல்பு. . . பனை கற்பக மரமாகும். கூந்தல் பனை, கரும்பனையில் கரும்பனையே மருத்துவ குணமுடையதாகும். பனை இந்தியாவில் அதிகமாகக் காணப்படும். இது எல்லா மண்வளத்திலும் வளர்க்கூடியது. வரட்சியைத் தாங்கி வளரக்கூடியது. பனை வைத்தவனுகுப் பயன் தராது என்பர். இதன் வளர்ச்சி ஆரம்பத்தில் மெதுவாக வளரும். நூறு ஆண்டுகள் உயிருடன் இருக்கும். இது தொண்ணூறு அடிக்கு மேல் வளரும். பனங்கை ஓலை 9 -10 அடி நீளம் வரை நீண்டிருக்கும். பக்கவாட்டில் அடுக்கடுக்காக பனங்கை வளர்ந்திருக்கும். இது விதை மூலம் உற்பத்தி செய்யப்படுகிறது.மருத்துவப் பயன்கள். . .பனை உடலுக்கு ஊட்டத்தை அளிப்பது. குளிர்ச்சி தருவது. வெப்பத்தைத் தணிப்பது, துவர்ப்பும் இனிப்பும் கலந்த சுவை உடையது.பனை மரத்தின் பால் தெளுவு-தெளிவு எனப்படும். சுண்ணாம்பு கலவாதது கள் எனப்படும். வைகறை விடியல் இந்தப் பாலை 100 -200 மி.லி. அருந்தி வந்தால் போதும். உடல்குளிர்ச்சி பெறும். ஊட்டம் பெறும். வயிற்றுப் புண் நிச்சையம் ஆறிவிடும். புளிப்பேறிய கள் மயக்கம் தரும், அறிவை மயக்கும் ஆனல் உடல் நலத்தைக் கொடுக்கும். சுண்ணாம்பு சேர்த்த தெளிவு எல்லோருக்கும் சிறந்த சுவையான சத்தான குடிநீராகும். அதைக் காய்ச்சினல் இனிப்பான கருப்பட்டி கிடைக்கும்.நுங்கு வெயிலின் கொடுமையைக் குறைக்க மனிதனுக்குக் கிடைத்த அரு மருந்தாகும். எல்லா வயதினருக்கும் ஏற்ற சிறந்த சத்துணவாகும். நுங்கின் நீர் வேர்க்கருவிற்குத் தடவ குணமாகும்.பனம்பழம் சிறந்த சத்துணவாகும். உயிர் சத்து நிறைந்தது. பித்தம் தருவது. சுட்டு சாப்பிடலாம்.பனங்கொட்டையை மிருதுவான மண் அல்லது ஈர மணலில் புதைத்து வைத்து இரண்டு மூன்று இலை விட்ட பின் தோண்டி கொட்டைக்குக் கீழ் உள்ள நீண்ட கிழங்கை எடுத்து வேக வைத்துச் சாப்பிட்டால் மிகச் சிறந்த ஊட்ட உணவாகும். சிறு குழந்தைகளுக்கு உடலைத் தேற்றும்.பனை மரத்தின் அடி பாகத்தில் கொட்டினால் நீர் வரும் அதை கருப்படை, தடிப்பு, ஊரல், சொறி உள்ளவர்களுக்கு அதன் மீது தடவினால் குணமடையும். ஐந்தாறு முறை தடவ வேண்டும்.பனையோலை வேய்த இருப்பிடம்ஆரோக்கிய வாழ்வைத் தரும். வெப்பம் அண்டாது. இதில் விசிறி, தொப்பி, குடை, ஓலைச்சுவடி தயார் செய்யப் பயன் படும். கைவினைப் பொருள்கள் செய்யலாம். இந்தோனேசியாவில் ஓலையை எழுதும் பேப்பராகப் பயன் படுத்தினார்கள். அதைப்பக்குவப்படுத்த கொதிநீரில் வேக வைத்து மஞ்சள் பொடி இட்டு ஓரத்தில் ஓட்டைகள் போட்டு ஏட்டுப் புத்தகம் உண்டாக்கினார்கள்.கண்ணில் புண் ஆனால் பனை குருத்து மட்டையைத் தட்டிப் பிழிந்த சாறு மூன்று நாள் விட குணமடையும் எரிச்சில் தீரும்.அடிப்பனை வெட்டிசோறு செய்தார்கள். பனங்கையில் பிரஸ் செய்தனர். கயிறுகள் தயார் செய்தனர். வேலிக்கும் பயன் படுத்தினர். பனையின் எல்லாபாகமும் உபயோகப் படுத்தினார்கள்.பனை வெல்லம், பனங்கற்கண்டு வாத பித்தம் நீங்கும். பசியை தூண்டும். புஷ்டி தரும். முன்பு சொன்னபடி, நுரையீரல் மற்றும் தொண்டை பாதிப்புகளுக்கு கொடுக்கப்படும் ஆயுர்வேத மருந்துகளில் பனைவெல்லம் சேர்க்கப்படுகிறது.எலிகளை வைத்து நடத்திய பரிசோதனையில் பனைவெல்லம், நிலக்கரி மற்றும் ஸிலிகா தூசிகளால் ஏற்படும் நுரையீரல் பாதிப்பை குறைக்கும் என்பது தெரிய வந்துள்ளது.வெல்லம் அயச்சத்து மிகுந்தது. சோகை நோய்களுக்கு மருந்து. தமிழகத்தில் பனை மரத்தின் வெல்லத்தை இரண்டு வகையாக சொல்வார்கள். முற்றிலும் சுத்தப்படுத்தாத, கெட்டியான கரு நிற வெல்லத்தை “கருப்பட்டி” என்பார்கள். இதை சுத்தப்படுத்தப்பட்ட படிகங்களாக உருவாகும் சர்க்கரை ‘பனங்கற்கண்டு’ எனப்படும் இதற்கு மருத்துவ குணங்கள் உள்ளன. பாலில் பனங்கற்கண்டை சேர்த்து காய்ச்சி குடித்தால் மார்புச்சளி இளகும். முக்கியமாக தொண்டைப்புண், வலி இவை அகலும். சங்கீத வித்வான்கள் எப்போதும் பனங்கற்கண்டு கலந்து காய்ச்சிய பாலையே அருந்துவது வழக்கம். அதனால் அவர்களின் குரல் வளம் குறையாமல், பாதுகாக்கப்படுகிறது. கூடவே சில மூலிகைகளும் சேர்க்கப்படுவது உண்டு.தவிர பனங்கற்கண்டு, உடல் உஷ்ணம், காங்கை, நீர் சுருக்கு, ஜுர வெப்பங்கள் இவற்றுக்கு நல்லது.பனை மரத்தில் இருந்து கிடைக்கும் பதநீர் பலவிதமான நோய்களை தீர்க்கும் மருந்தாக உள்ளது. பனை நீரிலுள்ள சீனி சத்து உடலுக்கு தேவையான வெப்பத்தை தருகிறது. இதிலிருக்கும் குளுக்கோஸ் மெலிந்து தேய்ந்து வாடிய உடலுடைய குழந்தைகளின் உடலை சீராக்கி நல்ல புஷ்டியை தருகிறது.கருவுற்ற பெண்களுக்கும் மகப்பேறு பெண்களுக்கும் ஏற்படுகின்ற மலச்சிக்கல், வயிற்றுப் புண் முதலியவைகளை குணப்படுத்துகிறது. இரத்த அழுத்தத்தை சீராக்குகிறது. டைபாய்டு, சுரம், நீர்க்கட்டு முதலிய வியாதிகளை போக்குகின்ற நல்ல மருந்தாகவும் இது செயல்படுகிறது.இதை அருந்துவதால் இருதய நோய் குணமாகும். இருதயம் வலுவடையும். இதிலிருக்கும் கால்சியம் பற்களை உறுதிப்படுத்தி, ஈறுகளில் ரத்தக்கசிவு ஏற்படுவதை தடுப்பதோடு பற்களின் பழுப்பு நிறத்தையும் மாற்றுகிறது.இதிலிருக்கும் இரும்புச்சத்து பித்தத்தை நீக்கி சொறி, சிரங்கு உள்பட சகல தோல் வியாதிகளையும் நீக்குவதுடன் கண் நோய், ஜலதோசம், காசநோய் இவைகளையும் நீக்குகிறது.மேலும் பதநீரானது சயரோகம், இரத்தக்கடுப்பு, அதிக உஷ்ணம், பசியின்மை, வயிற்றுப்புண், வாய்வு சம்பந்தமான நோய்களையும் குணப்படுத்துகிறது.
நம் உடலில் உள்ள பல புழுக்களினால் தான் நமக்கு நோய் ஏற்படுகிறது. சரியான உணவு உண்ணும் பட்சத்தில் புழுக்கள் அழிந்து நோய் எதிர்ப்பு சக்தி உடலில் அதிகரிக்கும்.உடலில் உள்ள புழுக்கள் அழிந்து நோய் எதிர்ப்பு சக்தி உடலுக்கு அதிகரிக்க இயற்கை அளித்த அருமையான காய் தான் பாகற்காய்.
பாகல் இலையின் சாறு ஓர் அவுன்சில் சிறிது வறுத்துப் பொடித்த சீரகத் தூளைக் கலந்து காலை,மாலை இரண்டு வேளையும் உட்கொண்டால் விஷ சுரம் நின்று விடும்.
பாகல் இலையை அரைத்து உடம்பெல்லாம் தடவி ஒரு மணி நேரம் ஊறிய பின் குளிக்க வேண்டும். இவ்வண்ணம் மூன்று நாட்கள் செய்து வந்தால் போதும் நாய்க்கடியின் விஷம் உடம்பில் ஏறாது.
பாகல் இலைச் சாற்றில் காசிக் கட்டியை உரைத்து சிரங்கின் மேல் தடிப்பாகத் தடவி வந்தால் ரத்தம் சுத்தம் செய்யப் பெற்றுச் சிரங்கு உதிர்ந்து விடும்.
பாகல்வேரை சந்தனம் போல் அரைத்து நல்லெண்ணெயில் குழைத்து ஜனனேந்திரியத்தின் உள்ளும், புறமும் தடவி வந்தால் பெண்களுக்குக் கருப்பை நோய் தீரும். பிரசவத்துக்கு பின் வரும் மண்குத்தி நோய்க்கு இது கைகண்ட மருந்தாகும்.
ஒரு பிடி கொடுப்பாகல் இலையுடன் ஐந்தாறு மிளகைச் சேர்த்து காரமற்ற அம்மியில் அரைத்து கண்களைச் சுற்றிப் பற்றுப் போட்டு வர மாலைக்கண் நோய் குணமாகும்.
பாகல் இலைச் சாற்றை நிறையக் குடித்து வாந்தி எடுத்தால் அத்துடன் பாம்பு(கண்ணாடி விரியன்) கடித்த விஷம் நீங்கும்.
உடலில் கட்டி, புண்கள் இருந்தால் ஒரு கப் பாகற்காய் சூப் எடுத்து அதில் ஒரு டீஸ்பூன் எலுமிச்சைச் சாறு கலந்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட மூன்று மாதங்களுக்குள் ரத்தம் சுத்தமாகி தோல் பளபளப்பாகி விடுமாம்.
பாகல் இலைச் சாற்றை ஓர் அவுன்ஸ் எடுத்து அதில் அரை அவுன்ஸ் நல்லெண்ணெயைக் கலந்து உட்கொண்டால் உடனே காலரா நீங்கும்.
நீரழிவுக்குக் குணம் தெரியும் வரை ஓர் அவுன்ஸ் பாகல் இலைச் சாற்றில் உளுந்தளவு பெருங்காயப் பொடியைக் கலந்து சாப்பிட்டு வர வேண்டும்.
ஓர் அவுன்ஸ் பாகல் இலைச் சாற்றுடன் சமபாகம் ஆட்டுப்பால் அல்லது பசுவின் மோர் கலந்து மூன்று நாட்கள் காலையில் சாப்பிட்டு வந்தால் காசநோயை மட்டுப்படுத்தும்.
மேற்கிந்திய தீவுகளில் சிறுநீரகக் கற்களுக்கும், ஜுரத்துக்கும், குடல் புண், வாயுத் தொல்லைகளுக்கும் இது மருந்தாகிறது. இலையைக் கொதிக்க வைத்து, சாறு எடுத்து கல்லீரல் உபாதைக்கு பயன்படுத்துகிறார்கள்.
பழம் டானிக்காகவும், மாதவிடாய் ஒழுங்கின்மையை சரிப்படுத்தவும் உதவுகிறது. சர்க்கரை வியாதிக்கு மருந்தாக முற்றிய பாகற்காய் பயன்படுகிறது.
மேக்-கப் போட்டாலும், எண்ணெய் பசை அதிகமா இருக்கா?
நிறைய பேர் முகத்தில் எண்ணெய் பசை தெரியக்கூடாது என்று தான் மேக்-கப் அதிகம் போடுவார்கள். ஆனால் சிலருக்கு மேக்-கப் போட்ட பின்னரும், முகத்தில் அதிகப்படியான எண்ணெய் இருப்பது போல் இருக்கும். வேண்டுமெனில் நடிகைகள் பலரை பல விழாக்களின் போது பார்த்திருப்பீர்கள். அவர்கள் ஆயில் மேக்-கப் தான் அதிகம் போடுவார்கள். ஆம், மேக்-கப்பில் ஆயில் மேக்-கப் என்று ஒன்று உள்ளது. அதிலும் நயன்தாரா, பிரியாமணி போன்ற நடிகைகள், இத்தகைய மேக்-கப்பை அதிகம் போடுவார்கள். ஆனால் சிலருக்கு ஆயில் மேக்-கப் போடாமல், சாதாரண மேக்-கப் போட்டாலே எண்ணெய் வழியும். இவ்வாறு அதிக எண்ணெய் பசையுடன் தெரிவதற்கு நிறைய காரணங்கள் இருக்கின்றன. அதில் மேக்-கப் போடும் முன் செய்ய வேண்டிய அடிப்படை செயல்களை செய்யாமல் போடுவது மற்றும் அதிக எண்ணெய் பசை சருமம் இருப்பதும் சில காரணங்கள். மேலும் இவ்வாறு மேக்-கப்பிற்கு பின் முகத்தில் எண்ணெய் அதிகம் வழிவது போன்ற தெரிந்தால், அது முதுமைத் தோற்றத்தை தரும். எனவே இத்தகைய தோற்றத்தை தவிர்க்க, என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்று ஒருசிலவற்றை பட்டியலிட்டுள்ளோம்.முகத்தை கழுவுவது மேக்-கப் போடும் முன் முகத்தை கழுவ வேண்டும். இவ்வாறு கழுவினால், முகத்தில் உள்ள அழுக்குகள் மற்றும் அதிகப்படியான எண்ணெயானது நீங்கிவிடும். பின் மேக்-கப் போட்டால், எண்ணெய் வழியாமல் இருக்கும்.ஸ்கரப் எண்ணெய் பசை சருமம் உள்ளவர்கள், மேக்-கப் போடும் முன், முகத்திற்கு உப்பு அல்லது சர்க்கரையை வைத்து ஒரு சிறு ஸ்கரப் செய்து, பின் மேக்-கப் போட்டால், சருமத் துளைகளில் உள்ள எண்ணெயானது வெளியேறிவிடும்.ஐஸ் கட்டி மேக்-கப் செய்த பின் எண்ணெய் வழியாமல் இருப்பதற்கு, ஐஸ் கட்டிகளை வைத்து சிறிது நேரம் மசாஜ் செய்து, பின் மேக்-கப் போட்டால், முகம் நன்கு பிரகாசமாக இருக்கும்.நீர்ம ஃபௌண்டேஷன் மேக்-கப்பிற்கு பின் முகத்தில் எண்ணெய் வழிவது போல் இருந்தால், மேக்-கப்பின் போது நீர்ம ஃபௌண்டேஷன் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். வேண்டுமெனில் அதற்கு பதிலாக ஃபௌண்டேஷன் பவுடரைப் பயன்படுத்தலாம்.கன்சீலர் ஒருவேளை ஃபௌண்டேஷன் பவுடராக இருந்தால், கன்சீலரை குறைவாக பயன்படுத்த வேண்டும். ஏனெனில் பொதுவாக கன்சீலர்கள் ஆயில் மாதிரி இருக்கும். எனவே அளவாக பயன்படுத்தினால், முகம் நன்கு பிரகாசமாக இருக்கும்.பவுடர் மேக்-கப் முடியும் போது, ஃபௌண்டேஷன் பவுடரையோ அல்லது கோல்டன் டஸ்ட்டையோ பயன்படுத்தினால், அந்த பவுடரானது முகத்தில் இருக்கும் எண்ணெயை உறிஞ்சிவிடும்.டிஸ்யூ பேப்பர் எப்போதும் டிஸ்யூ பேப்பரை கையில் வைத்துக் கொள்ள வேண்டும். மேலும் அதனை வைத்து அவ்வப்போது முகத்தை துடைத்தால், முகத்திலிருந்து வெளிவரும் எண்ணெய் மேக்-கப்பை கலைக்காமல் பார்த்துக் கொள்ள முடியும்.
நெல்லிக்காய்.....
ஆஸ்துமா, நீரிழிவு, மலச்சிக்கலை குணப்படுத்தும் நெல்லிக்காய்
நமக்கு எளிதாக கிடைக்கும் விலை மலிவான நெல்லிக்காயில் வைட்டமின் சி அளவுக்கதிகமாக நிறைந்துள்ளது.
நெல்லிக்காயில் மலை நெல்லிக்காய் என்ற ஒன்றும் உள்ளது. இது தான் உடலுக்கு மிகவும் சிறந்தது. நெல்லிக்காயால் செய்யப்படும் சாறானாது சற்று துவர்ப்புடன் இருக்கும். துவர்ப்புடன் உள்ளது என்பதற்காக அதனை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டாம்.
ஏனெனில் அதனை தினமும் உடலில் சேர்த்து வந்தால், அந்த நெல்லிக்காயின் உண்மையான பலனை நிச்சயம் உணர முடியும்.
* நீரிழிவு நோயாளிகள், நெல்லிக்காய் சாற்றில் சிறிது மஞ்சள் தூள் மற்றும் தேன் சேர்த்து கலந்து தினமும் குடித்து வந்தால் மிகவும் நல்லது.
* நெல்லிக்காய் சாற்றினை தினமும் காலையில் எழுந்து வெறும் வயிற்றில் குடித்தால், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புக்கள் கரைந்து உடல் எடையானது படிப்படியாக குறையும்.
* நெல்லிக்காய் சாறில் சிறிது தேன் கலந்து தினமும் இரண்டு முறை குடித்து வந்தால் ஆஸ்துமா குணமாகிவிடும்.
* நெல்லிக்காய் குடலியக்கத்தை சீராக வைக்கும். எனவே இதனை தினமும் குடித்து வந்தால் மலச்சிக்கல் பிரச்சனையை சரிசெய்துவிடலாம்.
* நல்ல புதிய நெல்லிக்காய் சாற்றில் தேன் சேர்த்து குடிக்கும் போது, இரத்தமானது சுத்தமாகும். இதனால் நன்கு சுறுசுறுப்போடு உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
* சிலருக்கு சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் ஏற்படும். அத்தகைய எரிச்சலைப் போக்குவதற்கு தினமும் இரண்டு முறை நெல்லிக்காய் சாறு குடிக்க வேண்டும்.
* கோடை காலத்தில் உடலானது அதிக வெப்பமாக இருக்கும். எனவே அத்தகைய உடல் வெப்பத்தை தணிப்பதற்கு நெல்லிக்காய் சாறு மிகவும் சிறந்ததாக இருக்கும்.
* முகம் நன்கு அழகாக பொலிவோடு இருப்பதற்கு தினமும் காலையில் நெல்லிக்காய் சாற்றுடன் சிறிது தேன் சேர்த்து குடிக்க வேண்டும்.
முதுமையிலும் இளமையா தெரியணுமா...
முதுமையிலும் இளமையா தெரியணுமா? அப்ப இத படிங்க:- அனைவருக்குமே நன்கு அழகாகவும், இளமையுடனும் நீண்ட நாட்கள் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவோம். இளமை என்ற ஒன்று இருந்தால், நிச்சயம் முதுமையும் வரும். ஆனால் அத்தகைய முதுமை, இளமை காலத்திலேயே வந்தால் தான் மிகவும் கஷ்டம். நிறைய பேர் இத்தகைய பிரச்சனையால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்காக நிறைய ஆன்டி-ஏஜிங் க்ரீம்களை பயன்படுத்துகின்றனர். இருப்பினும் அதற்கான பலன் சிறிது நாட்கள் மட்டும் தானே தவிர, முதுமை வயது எட்டும் வரை நீடிப்பதில்லை. ஆனால் இந்த பிரச்சனைக்கு உணவுகளால் தீர்வு காண முடியும். சாதாரணமாகவே உண்ணும் உணவைப் பொறுத்து தான் உடல் நிலை இருக்கும் என்று சொல்வார்கள். எனவே நல்ல ஆரோக்கியமான, இளமைத் தோற்றத்தை நீட்டிக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகம் நிறைய உணவுகளை சேர்த்து வந்தால், உடலில் உள்ள டாக்ஸின்கள் வெளியேறி, உடலே நன்கு பொலிவோடு அழகாக மின்னும். அதிலும் குறிப்பாக ஆன்டி-ஆக்ஸிடன்ட்களில் வைட்டமின் சி, ஏ, ஈ, லைகோபைன் மற்றும் லூடின் போன்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்த பழங்கள் மற்றும் காய்கறிகளை உணவில் அதிகம் சேர்த்து வந்தால், முதுமை வயதிலும், சற்று இளமையுடனேயே இருக்கலாம். அந்த உணவுகள் என்னவென்று பட்டியலிட்டுள்ளோம். அதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.மாம்பழம் கோடைகாலத்தில் மாம்பழம் மிகவும் விலைமலிவாக கிடைக்கும். இந்த பழத்தில் கரோட்டினாய்டு பீட்டா-கரோட்டீன் என்னும் ஆன்டி.ஆக்ஸிடன்ட் அதிகம் உள்ளது. இவை சருமத்தை பொலிவோடு வைத்துக் கொள்ள உதவும். எனவே முடிந்த அளவில் இதனை வாங்கி சாப்பிடுவது, இளமை தோற்றத்தை அதிகரிக்கும்.கேல் கேல் (Kale) கீரையில் லூடின் மற்றும் ஸீக்ஸாக்தைன் என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளன. எனவே இந்த கீரையை அதிகம் சாப்பிட்டால், இளமையுடன் காணப்படலாம்.பசலைக் கீரை ஒரு கப் பசலைக் கீரையில், சருமத்திற்கும், உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்களான 20, 350 mcg லைகோபைன் மற்றும் இதர வைட்டமின்களும் நிறைந்துள்ளன.ப்ராக்கோலி பச்சை இலைக் காய்கறிகளில் ப்ராக்கோலியில் அதிக அளவில் லைகோபைன் உள்ளது. எனவே சருமத்தில் உள்ள சுருக்கங்களை போக்கி, நன்கு இளமையாகக் காணப்பட, இந்த காய்கறியை உணவில் சேர்ப்பது நல்லது.முட்டை முட்டையிலும், லூடின் மற்றும் ஸீக்ஸாக்தைன் என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் சருமத்திற்கு மட்டுமின்றி, கண்களுக்கும் சிறந்தது.குடைமிளகாய் குடைமிளகாயில் சருமத்தையும், உடலையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும், வைட்டமின் ஏ அதிகம் உள்ளது. அதிலும் இந்த காய்கறியில் நிறைய வண்ணங்கள் உள்ளன. இவை அனைத்திலுமே கரோட்டினாய்டுகள் மற்றும் பீட்டா-கரோட்டீன் அதிகம் உள்ளன.பால் பாலில் கால்சியம், புரோட்டீன் மட்டுமின்றி, வைட்டமின் ஏ மற்றும் கரோட்டீனாய்டுகள் அதிகம் நிறைந்துள்ளது. இந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் நிறைந்த பாலை, அதிகம் குடித்தால், நிச்சயம் உடல் ஆரோக்கியத்துடன், இளமையோடும் இருக்கும்.தக்காளி தக்காளியில் சருமத்தில் உள்ள சுருக்கங்கள் மற்றும முதுமைக் கோடுகள் போன்றவற்றை தடுக்கும் லைகோபைன் என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகமாக இருக்கிறது. எனவே இதனை அப்படியே சாப்பிடலாம் அல்லது சருமத்திற்கும் மாஸ்க் போன்றும் பயன்படுத்தலாம்.சிட்ரஸ் பழங்கள் சிட்ரஸ் பழங்களில் ஆரஞ்சு மற்றும் எலுமிச்சையில் வைட்டமின் சி என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் நிறைந்திருப்பது தெரியும். ஆகவே இவற்றை சாப்பிட்டால், இதில் உள்ள வைட்டமின் சி, உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி, சருமத்தை புத்துணர்ச்சியுடனும், அழகாகவும் வைத்துக் கொள்ள உதவும்.தர்பூசணி நீர்ச்சத்து அதிகம் நிறைந்துள்ள இந்த பழத்தில் லைகோபைன் என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டும் அதிகம் உள்ளது. எனவே இவற்றை அதிகம் சாப்பிட, வெயிலினால் பாதிப்படைந்த சரும செல்கள் அனைத்தும் குளிர்ச்சியடைந்து, சருமம் அழகாக காணப்படும்.