குழந்தை மலச்சிக்கல் பிரச்சனையால் அவஸ்தைப்படுதா

குழந்தை மலச்சிக்கல் பிரச்சனையால் அவஸ்தைப்படுதா? இதோ சில டிப்ஸ்

மலச்சிக்கல் பிரச்சனையால் நிறைய பேர் அவஸ்தைப்படுகின்றனர். இந்த பிரச்சனை அனைத்து வயதுள்ளவர்களுக்கு ஏற்படும் ஒன்று தான். இத்தகைய பிரச்சனை சிலருக்கு அவ்வப்போது ஏற்படலாம், பலருக்கு நீண்ட நாட்களாக இருக்கும். அதிலும் இந்த பிரச்சனை குழந்தைகளுக்கு ஏற்பட்டால், அதனால் அவர்கள் படும் அவஸ்தையை பார்க்க முடியாது. ஏனெனில் அந்த அளவில் அவர்களது கஷ்டமானது இருக்கும். குழந்தைகளுக்கு ஏற்படும் மலச்சிக்கலும், பெரியவர்களுக்கு ஏற்படும் மலச்சிக்கலை விட வித்தியாசமானது. பெரியவர்களுக்கு மேற்கொள்ளும் சிகிச்சையை குழந்தைகளுக்கு செய்ய முடியாது. மேலும் இந்த பிரச்சனை குழந்தைகளுக்கு ஏற்படுவதற்கு சரியான குடலியக்கம் இல்லாதது அல்லது கழிவுகள் இறுக்கத்துடன் இருந்து, அவற்றை குழந்தைகளால் வெளியேற்ற முடியாமல் இருப்பது காரணமாக இருக்கும். அதுமட்டுமின்றி அவர்களுக்கு கண்ட கண்ட உணவுகளை கொடுப்பதும், தாய்ப்பாலில் இருந்து உணவிற்கு மாறுவதும், நீர்வறட்சியும் ஒருவகையான காரணம் ஆகும். எனவே குழந்தைகளுக்கு மலச்சிக்கல் பிரச்சனையை போக்க மருத்துவரிடம் செல்வதை விட, இயற்கை வைத்தியத்தை மேற்கொள்வது மிகவும் சிறந்தது. சரி, இப்போது எந்த மாதிரியான இயற்கை வைத்தியங்கள் குழந்தைகளது மலச்சிக்கலைப் போக்க உதவுகின்றன என்று பார்ப்போமா!!!

ஆரஞ்சு ஜூஸ் 
குழந்தைகளுக்கு ஏற்படும் மலச்சிக்கலை சரிசெய்ய ஆரஞ்சு ஜூஸ் சிறந்ததாக இருக்கும்.

வாஸ்லின் 
சில குழந்தைகளுக்கு மலம் இறுக்கத்துடன் இருந்து, அவற்றை வெளியேற்ற தெரியாமல் திணருவார்கள். எனவே அவ்வாறு திணரும் குழந்தைகளுக்கு, மலம் வெளியேறும் இடத்ததில் சிறிது வாஸ்லினை தடவி, சிறிது நேரம் மசாஜ் செய்தால், மலச்சிக்கலானது எளிதில் நீங்கும்.

பேரிக்காய் ஜூஸ் 
20 மில்லி லிட்டர் பேரிக்காய் ஜூஸை, 130 மில்லி லிட்டர் தண்ணீருடன் சேர்த்து கலந்து, குழந்தைகளுக்கு கொடுத்தால், மலச்சிக்கல் உடனே விலகும்.

பேக்கிங் சோடா 
மற்றும் வெதுவெதுப்பான நீர் ஒரு அகன்ற டப்பில் வெதுவெதுப்பான நீரை ஊற்றி, அதில் சிறிது பேக்கிங் சோடா சேர்த்து கலந்து, அந்த நீரில் குழந்தையை 10 நிமிடம் உட்கார வைக்க வேண்டும். இவ்வாறு ஒரு நாளைக்கு இரண்டு முறை செய்து வந்தால், குழந்தையை மலச்சிக்கல் பிரச்சனையிலிருந்து விடுவிக்கலாம்.

கரோ சிரப் 
மற்றும் நீர் மலச்சிக்கல் பிரச்சனைக்கு உடனடி நிவாரணம் கிடைக்க வேண்டுமெனில், கரோ சிரப்பை நீரில் கலந்து, குழந்தைக்கு கொடுத்தால், விரைவில் மலச்சிக்கலானது நீங்கும்.

தோலுடன் பழங்கள் 
குழந்தைகளுக்கு பழங்கள் கொடுக்கும் போது, அவற்றை தோலுடனேயே கொடுக்க வேண்டும். இதனால் தோலில் இருக்கும் நார்ச்சத்தானது, மலச்சிக்கல் பிரச்சனையை போக்கும்.

உலர்ந்த கொடிமுந்திரி ஜூஸ் 
பால் பாட்டிலில் நான்கு பங்கில் மூன்று பங்கு தண்ணீர் ஊற்றி, அதில் ஒரு பங்கு உலர்ந்த கொடிமுந்திரி ஜூஸ் சேர்த்து கலந்து, குழந்தைகளுக்கு கொடுத்தால், மலச்சிக்கல் பிரச்சனையானது நீங்கிவிடும்.

ஆப்பிள் ஜூஸ் 
குழந்தைகளுக்கு மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படும் போது, சிறிது ஆப்பிள் ஜூஸை கொடுத்தால், சில குழந்தைகளுக்கு மலச்சிக்கல் பிரச்சனை நீங்கும்.

தண்ணீர் 
குழந்தைகளுக்கு அதிகமாக தண்ணீர் கொடுத்தாலும், மலச்சிக்கல் பிரச்சனை சரியாகும்.

பப்பாளி 
பப்பாளியில் இயற்கையாகவே மலமிளக்கிகள் இருப்பதால், அதனை குழந்தைகளுக்கு கொடுக்க, மலச்சிக்கல் நீங்கும்.

பெல்லி மசாஜ் 
குழந்தைகளது குடலியக்கத்தை சரிசெய்து, மலச்சிக்கல் பிரச்சனையை குணப்படுத்த, குழந்தையின் வயிற்றில் சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும். மேலும் குழந்தைகளின் கால்களை பிடித்துக் கொண்டு, அவர்களது கால்களை சைக்கிள் ஓட்டுவது போன்று சிறிது நேரம் செய்ய, மலச்சிக்கலானது இயற்கையாகவே போய்விடும்.

பாகற்காய் இலை 
பாகற்காயின் இலையை சாறு எடுத்து குழந்தைகளுக்கு கொடுத்தால், மலச்சிக்கல் விரைவில் நீங்கும்.

பிளம்ஸ் 
அழகான சிவப்பு நிறப் பழத்திலும் மலத்தை இளகச் செய்யும் பொருள் உள்ளது, எனவே இதனை குழந்தைகளுக்கு கொடுக்க, மலச்சிக்கல் பிரச்சனை சரியாகிவிடும்.

பெருங்காயத் தூள் 
குழந்தைகளுக்கு குடிக்கும் நீரில், ஒரு சிட்டிகை பெருங்காயத் தூளை சேர்த்து கொடுத்தாலும், மலச்சிக்கலை தடுக்கலாம்.

கோடைகாலத்தில் தவறாமல் சாப்பிட வேண்டிய காய்கறிகள்

கோடைகாலத்தில் தவறாமல் சாப்பிட வேண்டிய காய்கறிகள்!!!

 
கோடைகாலத்தின் போது வீசும் வெயிலின் தாக்கத்தை தாங்கவே முடியாது. அதிலும் அக்னி வெயில் வந்தால்உடலில் இருக்கும் நீர்ச்சத்துக்கள் எல்லாம் வெயிலால் உறிஞ்சப்பட்டுபின் அடிக்கடி மயக்கம் ஏற்படும். ஏன் அக்னி வெயில் வரை காத்திருக்க வேண்டும்கோடைகாலத்தின் ஆரம்பக்கட்டத்திலேயே பயங்கரமான வெயில் அடிக்க ஆரம்பித்துவிட்டது. இந்த காலத்தில் தண்ணீர்ச்சத்து மட்டுமின்றிஉப்புச் சத்து குறைபாடும் ஏற்படும் . எனவே இத்தகைய உடல் வறட்சியைப் போக்குவதற்கு ஒரே வழிநீர்ச்சத்து அதிகம் நிறைந்துள்ள பழங்கள்காய்கறிகள்,தண்ணீர் மற்றும் ஜூஸ்கள் போன்றவற்றை அதிகம் உட்கொள்ள வேண்டும். பெரும்பாலானோர் தண்ணீர் அதிகம் பருகினாலே உடல் வறட்சியை தவிர்க்கலாம் என்று நினைக்கின்றனர். ஆனால் தண்ணீர் மட்டும் உடலை வறட்சியின்றி வைத்துக் கொள்ளாது. அவை உடலை ஆரோக்கியமாக தான் வைத்துக் கொள்ளும். இருப்பினும்உடலில் நீர்ச்சத்துக்களை அதிகரிக்க பழங்களோடு,காய்கறிகளையும் சேர்க்க வேண்டும். ஆம்காய்கறிகளிலும் நீர்ச்சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது. அத்தகைய காய்கறிகள் என்னவென்று தெரிந்து கொண்டுஅவற்றை கோடைகாலத்தில் சமைத்து சாப்பிட்டால்உடல் வறட்சியோடுஅத்தியாவசிய சத்துக்களையும் பெற முடியும். சரிஇப்போது அந்த காய்கறிகள் என்னவென்று பார்ப்போமா!!!
குடைமிளகாய் 
குடைமிளகாயில் 90 சதவீதம் தண்ணீர் நிறைந்துள்ளதால்அதனை கோடைகாலத்தில் அதிக அளவில் உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. மேலு இதில் வைட்டமின் சிகே மற்றும் இதர சத்துக்களான லூடின்பொட்டாசியம் போன்றவையும் அதிகம் உள்ளது.
வெள்ளரிக்காய் 
வெள்ளரிக்காய் பற்றி சொன்னால் தான் தெரியும் என்பதில்லை. மேலும் கோடைகாலத்தில் வெள்ளரிக்காய் அதிகம் விற்பதால்இதனை அவ்வப்போது அதிகம் சாப்பிடுவதுஉடலை வறட்சியின்றி வைத்துக் கொள்ளும்.
ப்ராக்கோலி 
இந்த பச்சை இலைக் காய்கறிகளில் நிறைய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. அதுமட்டுமின்றி,நீர்ச்சத்தும் அதிக அளவில் நிறைந்துள்ளதால்இதனை டயட்டில் சேர்த்துக் கொள்வது நல்லது.
கேரட் 
கேரட் உடல் முழுவதற்கும் நன்மை தருகிறது. அத்தகைய நன்மைகளில் உடல் வறட்சிளை நீக்கிஉடலில் உள்ள டாக்ஸின்களை வெளியேற்றிசருமத்தை பொலிவோடு அழகாக வைத்துக் கொள்ள உதவுகிறது. எனவே வெயில் காலம் ஆரம்பிக்கப் போவதால்உடல் வறட்சியைப் போக்குவதற்கு அவ்வப்போது கேரட் ஜூஸ் குடிக்க வேண்டும்.
சீமை 
சுரைக்காய் இது மற்றொரு நீச்சத்து அதிகம் நிறைந்துள்ள காய்கறியாகும். இந்த காய்கறி உடல் வறட்சியை நீக்குவது மட்டுமின்றிகண் பார்வையையும் கூர்மையாக்கும்.
முட்டைகோஸ் 
முட்டைகோஸில் கலோரிகள் குறைவாகவும்நீர்ச்சத்து அதிகமாகவும் இருப்பதால்உடல் எடையை குறைக்க விரும்புவோர்அதனை சாப்பிடுவது நல்ல பலனைத் தரும்.
செலரிக்கீரை (Celery) 
இந்த கீரையை சாப்பிட்டால்இரத்த அழுத்தம் குறைவதோடுநீர்ச்சத்து இதில் அதிகம் உள்ளதால்கோடைக்காலத்தில் அதிகம் சாப்பிட்டால்உடலை வறட்சியின்றி வைப்பதோடு,குளிர்ச்சியாகவும் வைத்துக் கொள்ளும்.
தக்காளி 
தக்காளியில் 93% தண்ணீர் மற்றும் லைகோபைன் என்னும் உடலை சுத்தம் செய்யும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் இருப்பதால்இதனை வெயில் காலத்தில் அதிகம் சாப்பிடமுகம் பொலிவோடு இருப்பதோடுவறட்சியின்றியும் இருக்கும். குறிப்பாக இதனை பச்சையாக சாப்பிட்டால்அடிக்கடி பசி ஏற்படாமலும் இருக்கும்.
முள்ளங்கி 
முள்ளங்கியும் உடல் வறட்சியை நீக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும் இதனை சாப்பிட்டால்செரிமானப் பிரச்சனையையும் சரிசெய்யலாம்.
லெட்யூஸ் 
வெயில் காலத்தில் சாலட் அதிகம் சாப்பிடுவது மிகவும் சிறந்தது. அதிலும் சாலட்களில் லெட்யூஸ் சேர்த்து சாப்பிட்டால் உடல் எடை குறைவதோடுஉடலும் வறட்சியின்றி இருக்கும். ஏனெனில் இந்த கீரையில் வைட்டமின் ஏகே மற்றும் பீட்டா கரோட்டின் அதிகம் உள்ளது.
பூசணிக்காய் 
பூசணி வகைகளில் வெள்ளைப் பூசணியில் அதிக அளவில் நீர்ச்சத்து நிறைந்துள்ளது. எனவே கோடைகாலத்தில் அதிக அளவில்இந்த காய்கறியை சேர்த்து வந்தால்உடலை வறட்சியின்றி வைத்துக் கொள்ளலாம்.

நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டும் கம்பு

நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டும் கம்பு!

 
இந்தியாவில் விளையும் தானிய வகைகளில் கம்பும் ஒன்று. வறட்சி தாண்டவம் ஆடும் காலங்களில் மக்களின் பசியைப் போக்கும் பொருளாக கம்பு இருந்து வந்துள்ளது. இது இந்தியா முழுவதும் பயிராகும் செடிவகையாகும். வறட்சியான பகுதிகளிலும் விளையக்கூடிய கம்பு பற்றியும் அதன் மருத்துவக் குணத்தையும் காண்போம்.

நம் முன்னோர்கள் தங்களுடைய உணவில் அதிகளவு தானிய வகைகளை சேர்த்து வந்தனர். காலையில் கம்பை கஞ்சியாக்கி அருந்தினர். சிலர் அரிசி உபயோகப்படுத்துவது போல் வேகவைத்து வடித்து சாப்பிட்டனர். ஆனால் இடைப்பட்ட காலத்தில் இந்த தானிய வகைகளை மறந்து சத்தற்ற உணவுகளை சாப்பிட்டு வந்தனர். நாவின் சுவையை அதிகம் விரும்பியதால் நோய்களின் வாழ்விடமாக நம் உடல் மாறிவிட்டது.

இரவு நேரங்களில் துங்காமல் கண் விழிப்பவர்கள், அதிக நேரம் ஒரே இடத்திலிருந்து வேலை செய்பவர்கள், அதிக சூடுடைய பகுதிகளில் வேலை செய்பவர்கள், அதிக மன அழுத்தம் கொண்டவர்களின் உடலானது அதிக உஷ்ணமடையும். இவர்கள் கம்பை கஞ்சியாகக் காய்ச்சி காலை வேளையில் அருந்தி வந்தால் உடல் சூடு குறையும்.

சோர்வு நீங்க... 

மனச் சோர்வு இருந்தால் உடல் சோர்வு உன்டாகும். அதுபோல் வெயிலில் அதிகம் அலைகிறவர்கள், கடின வேலை செய்பவர்கள் அதிகம் சோர்வடைகின்றனர். இவர்கள் புத்துணர்வு பெற கம்பை கூழாக்கி, அதனுடன் மோர் கலந்து மதிய வேளையில் அருந்தி வந்தால் உடல் சோர்வு நீங்கி புத்துணர்வு அடைவர். இன்றும் சில இடங்களில் இதுபோல் கூழ் செய்து விற்பனை செய்து வருகிறார்கள்.

அஜீரணக் கோளாறு நீங்க...

அஜீரணக் கோளாறு கொண்டவர்கள் கம்பங் கஞ்சியை அருந்தி வந்தால் அஜீரணக் கோளாறுகள் நீங்கி நன்கு பசியெடுக்கும்.

வயிற்றில் புண்கள் உண்டானால் வாயிலும் புண்கள் ஏற்படும். மேலும் வயிற்று புண்களை குணப்படுத்தும் குணம் கம்புக்கு உண்டு. கம்புடன் அரிசி சேர்த்து நன்கு குழையும்படி சோறாக்கி மதிய உணவில் சேர்த்துக் கொண்டால் குடல்புண், வயிற்றுப்புண், வாய்ப்புண் குணமாகும்.

உடல் வலுவடைய....

உடல் வலுவடைய கம்பு மிகச் சிறந்த உணவாகும். அடிக்கடி கம்பங்கஞ்சி சாப்பிட்டு வந்தால் உடல் வலுவடையும்.

* கண் நரம்புகளுக்கு புத்துணர்வு கொடுத்து பார்வையை தெளிவாக்கும்.

* இதயத்தை வலுவாக்கும்.

* சிறுநீரைப் பெருக்கும்.

* நரம்புகளுக்கு புத்துணர்வைக் கொடுக்கும்.

* இரத்தத்தை சுத்தமாக்கும்.

* உடலில் தேவையற்ற நீரை வெளியேற்றும்.

* நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டும்.

* தாதுவை விருத்தி செய்யும்.

* இளநரையைப் போக்கும்.

அதிகமாக கம்பங்கஞ்சி அருந்தினால் சில சமயங்களில் இருமல், இரைப்பு போன்றவற்றை உண்டாக்கும். அதானால் அளவோடு சாப்பிட்டு ஆரோக்கியமாக வாழலாம்

நீர்

தண்ணீரைக் கொண்டு பல வியாதிகளைக் குணப்படுத்த முடியும்!

தினமும் அதிகாலையில் தூக்கத்தில் இருந்து எழுந்ததும் வெறும் வயிற்றில் தண்ணீர் அருந்துவது ஜப்பானில் இப்போது பிரபலமாகி வருகிறது. இங்கு தரப்பட்டிருக்கும் கீழ்வரும் விபரங்கள் ஜப்பானிய மருத்துவர்களால் தண்ணீரைக் கொண்டு பல வியாதிகளைக் குணப்படுத்த முடியும் என்ற விஞ்ஞான முறைப்படி நிரூபிக்கப்பட்ட தகவல்கள் ஆகும்.
கீழே கொடுக்கப்பட்டிருக்கும் மிகப் பழைய கடுமையான வியாதிகளை மட்டுமல்ல நவீன கால நோய்களைக் கூட இந்த நீர் மருத்துவம் மூலம் 100% வெற்றிகாரமாக குணப்படுத்த முடியுமென ஜப்பானிய மருத்துவ சம்மேளனம் நிரூபித்துக் காட்டியிருக்கிறது.

தலை வலி , உடல் வலி, இதய நோய்கள், ஆத்திரட்டிஸ் எனப்படும் எலும்பு சம்பந்தப்பட்ட நோய் , வேகமான இதயத்துடிப்பு, எபிலெப்ஸி எனப்படும் வலிப்பு நோய், அளவுக்கதிகமான உடல் பருமன், ஆஸ்துமா, காச நோய், மூளைக்காய்ச்சல், சிறு நீரகம் மற்றும் சிறு நீர் வியாதிகள் , வாந்தி, பேதி, வாய்வுக் கோளாறுகள்,

மூல வியாதி, சலரோகம் அல்லது சர்க்கரை வியாதி, சகலவிதமான கண் நோய்கள், கர்ப்பப்பை புற்று நோய், ஒழுங்கீனமான மாதவிடாய் கோளாறுகள், காது, மூக்குத், தொண்டை கோளாறுகள் போன்றவற்றுக்கு இந்த நீர் மருத்துவம் 100% பயனளிக்கின்றது என இம் மருத்துவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

மருத்துவ முறை

1. காலையில் துயில் நீவி நீங்கள் எழுந்ததும் , பல் துலக்கும் முன்பே 4 x 160ml டம்ளர் (கிளாஸ் ) தண்ணீர் அருந்துங்கள்.

2. பல் துலக்கி வாய் அலம்பிய பின் 45 நிமிஷங்களுக்கு உணவோ, நீராகாரம் எதுவாயினும் உட்கொள்ளக் கூடாது.

3. 45 நிமிடங்களுக்குப் பின் வழமையான உங்கள் உணவை உட்கொள்ளலாம்.

4. காலை உணவின் பின் 15 நிமிஷங்களுக்கும், l மதிய போசனம் இராப் போசனத்தின் போதும் 2 மணி நேரங்களுக்கு எதுவும் உட்கொள்ள வேண்டாம். (After 15 minutes of breakfast, lunch and dinner do not eat or drink anything for 2 hours)

5. முதியோர் அல்லது நோயாளிகள் அல்லது 4 டம்ளர் நீரை எடுத்த எடுப்பிலேயே அருந்த முடியாதவர்கள் ஆரம்பத்தில் கொஞ்சம் கொஞ்சமாக நீர் உட்கொண்டு நாளடைவில் 4 டம்ளர் அளவு நீர் அருந்த பழகலாம்.

மேற்குறிப்பிட்ட முறையை பின்பற்றும் நோயாளிகள் தமது பிணி நீங்கி சுகமடையலாம். மற்றவர்கள் ஆரோக்கியமான வாழ்கையை சந்தோஷிக்கலாம். எந்த நோய்க்கு எத்தனை நாட்கள் இந்த முறையை பின்பற்ற வேண்டும் என்ற விபரங்களை கீழே காணலாம்.

இந்த வழியில் பின்பற்றினால் இந்நோய்கள் முற்றிலும் குணமாகும் வாய்ப்பு அல்லது கடுமை மட்டுப்படுத்தும் வலு உண்டாகும் என்று ஜப்பானிய மருத்துவர்கள் கூறுகின்றனர்.

உயர் இரத்த அழுத்தம் - 30 நாட்கள்

வாய்வுக் கோளாறுகள் - 10 நாட்கள்

சலரோகம் அல்லது சர்க்கரை வியாதி - 30 நாட்கள்

மலச்சிக்கல் (கான்ஸிடிபேஷண்ட்) - 10 நாட்கள்

புற்றுநோய் - 180 நாட்கள்

காச நோய் - 90 நாட்கள்.

ஆத்திரட்டிஸ் நோயாளிகள் முதல் வாரம் 3 நாட்களும், இரண்டாவது வாரத்திலிருந்து தினமும் இம் முறையினைப் பின்பற்ற வேண்டும்.

பக்க விளைவுகள் எதுவுமில்லாத மருத்துவமுறை இது, எனினும் நீர் அதிகமாக உட்கொள்வதால் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டி வரும். ஆனாலும் இந்த முறையை நமது அன்றாட கடமைகளில் ஒன்றாகப் பின்பற்றுவது மிகவும் நன்மை தரும் என்றே சொல்ல வேண்டும்.

நீர் அருந்தி ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் இருங்கள். "நீரின்றி அமையாது உலகு" என வள்ளுவப்பெருந்தகை சொன்னதுக்கு இதுவும் ஒரு காரணமாக இருக்குமோ?

மனித உடலில் நரம்பு மண்டல அமைப்பு

மனித உடலில் நரம்பு மண்டல அமைப்பு:-

மனித உடம்பில் நரம்பு மண்டலம் ஓர் அதிசயம். மூளையும், தண்டுவடமும், அவற்றில் இருந்து புறப்படும் பல நரம்புகளும் இதில் அடக்கம்.
மூளையில் இருந்து 12 ஜோடி நரம்புகள் புறப்படுகின்றன. சுண்டுவிரல் அளவுக்குத் தடிமன் உள்ள தண்டுவடம் மூளையின் அடிப்பாகத்தில் இருந்து தலையின் துவாரம் வழியாகச் செல்லும் வடமாகும். முதுகு எலும்புகள் நடுவில் துவாரம் உள்ளவை, ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கப்பட்டவை. அவற்றின் வழியாக சுமார் 18 அங்குல நீளமுள்ள தண்டுவடம், முதுகின் அடிப்பாகம் வரை நீண்டிருக்கிறது. இதில் இருநëது 31 ஜோடி நரம்புகள் கிளம்புகின்றன.

காட்சி, கேள்வி, சுவை, மணம் ஆகியவற்றுடன் மூளை நரம்புகள் பிரதானமாகச் சம்பந்தப்பட்டிருக்கின்றன. தண்டுவடம், மூளை, அவற்றின் நரம்புகள் ஆகியவை உணர்ச்சிகளையும், அசைவுகளையும் தீர்மானிக்கின்றன என்று சுருக்கமாகச் சொல்லி விடலாம். மூளையும், தண்டுவடமும் மைய நரம்பு மண்டலமாக (Central nervous system) அமைகின்றன. மூளையில் இருந்து வரும் 12 ஜோடி நரம்புகளும், தண்டுவடத்தில் இருந்து புறப்படும் 31 ஜோடி நரம்புகளும் மேற்பரப்பு (Peripheral nervous system) நரம்பு மண்டலம் ஆகும்.

மூன்றாவதாகக் குறிப்பிட வேண்டியது, தன்னியக்க நரம்பு மண்டலம் (Autonomic nervous system). இதை மேற்பரப்பு மண்டலத்தின் சிறப்புப் பகுதி எனலாம். மூளையின் கட்டுப்பாடு இன்றித் தாமே நிகழும் சுவாசம், செரிமானம் முதலியவற்றை முறைப்படுத்துவது தன்னியக்க மண்டலம்.

அதன்மூலம் நிலையான உட்புறச் சூழல், உடலைக் காப்பதற்கு வசதி ஏற்படுகிறது. தன்னியக்க மண்டலம் என்று கூறினாலும் இது மைய நரம்பு மண்டலத்துடன் உறவில்லாமல் தனியாட்சி நடத்தவில்லை. தன்னியக்க மண்டலச் செயல்களைக் கட்டுப்படுத்தும் நரம்பு மையங்கள் மைய நரம்பு மண்டலத்திலேயே உள்ளன.

தன்னியக்க நரம்பு மண்டலம் இரு பிரிவுகளை உடையது. 1.பிரிவு அமைப்பு 2. துணைப் பிரிவு அமைப்பு. உடலின் செயல் அதிகரிக்கும்போதும், வேகம் கூடும்போதும், நெருக்கடி நிலைகளிலும், உடலின் தேவைகளுக்கு உகந்தவாறும் செயல்படுவது பிரிவு நரம்பு. தசைகளுக்குக் கூடுதலாக ரத்தத்தை அனுப்புவது, குறைவான ஒளி உள்ளபோது கண்களின் பாவைகளை விரிவாக்குவது போன்றவை பிரிவு நரம்பு அமைப்பின் செயல் களில் அடங்கும்.
பொதுவாக, பிரிவு நரம்புச் செயல்பாடுகளுக்கு எதிராக வினைபுரிவது துணைப் பிரிவு நரம்பு மண்டலம்.

இதயத் துடிப்பை மெதுவாக்குவதும், ரத்தத்தைத் தசைகளில் இருந்து இரைப்பைக்கும், குடல்களுக்கும் திருப்பி விடுவதும், கண்களின் பாவைகளைச் சுருங்கச் செய்வதும் துணைப் பிரிவு நரம்பு மண்டலச் செயல்களில் அடங்கும். உறங்கும்போது துணைப் பிரிவு மண்டலம் உடலின் செயல் வேகத்தைத் தணிக்கிறது. இரண்டு மண்டலங்களின் செயல்களைச் செம்மையாக ஒத்திசைவு காணச் செய்வது மைய நரம்பு மண்டலம்.

நரம்பு மண்டலம் இடைவிடாமல் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. உடலின் சகல பாகங்களில் இருந்தும், தண்டுவடத்துக்கும், மூளைக்கும் செய்தி சென்று கொண்டிருக்கிறது. அதைப் போலவே மூளையில் இருந்தும், தண்டுவடத்தில் இருந்தும் செய்திகள் உடலின் பல பாகங்களுக்குப் போய்க் கொண்டே இருக்கின்றன.

நரம்பு மண்டலம் இருவகை நரம்புகளால் அமைந்தது. ஒருவகையான உணர்வு (sensory) நரம்புகள், செய்தியை மூளைக்கோ, தண்டுவடத்துக்கோ கொண்டு செல்வதால் உட்செல் (afferent) நரம்புகள் எனப்படும். இன்னொரு வகை நரம்புகள் மூளை அல்லது தண்டுவடத்தில் இருந்து உடல் உறுப்புகளுக்கு செய்திகளைக் கொண்டு செல்வதால் அவை வெளிச்செல் நரம்புகள் எனப்படும். அவற்றை செயல் (motor) நரம்புகள் என்றும் கூறுவர்.

இந்த இருவகை நரம்புகளும் சேர்ந்தாற்போல் அமைந்துள்ளன. இவற்றின் போக்குப் பாதையும், வரத்துப் பாதையும் இரண்டு இருப்புப் பாதைகள் அடுத்தடுத்து இருப்பதைப் போல உள்ளன. இந்த நரம்பு மண்டலங்கள் எல்லாம் இணைந்துதான் நம் உடம்பை இயக்குகின்றன.