வெயிலால் சருமத்தில் அரிப்புக்கள் அதிகமா இருக்கா?
குளிர்காலத்தில் மட்டும் தான் சருமத்தில் பிரச்சனைகள் ஏற்படும் என்று நினைக்க வேண்டாம். குளிர்காலத்தை விட, கோடைக்காலத்தில் தான் அதிகப்படியான சருமப் பிரச்சனைகள் ஏற்படும். அதிலும் இன்றைய காலத்தில் யாரும் வீட்டிலேயே உட்கார்ந்து வேலை செய்வதில்லை. பலருக்கு வீட்டை விட, வெளியே தான் அதிக வேலை இருக்கும். கோடைக்காலம் ஆரம்பிக்க போகிறது. இதுவரை வேலையில் ஏற்படும் பிரச்சனையையே சரிசெய்ய முடியவில்லை என்று நினைத்துக் கொண்டிருக்கும் சமயத்தில், சருமத்தில் வேறு பிரச்சனைகள் ஏற்படப் போகின்றன. அதில் ஒன்று தான் சருமத்தில் அதிகப்படியான வெப்பம் படுவதால் ஏற்படும் அரிப்புக்கள். பொதுவாக இத்தகைய அரிப்புக்கள் ஏற்படுவதற்கு முக்கிய காரணம், அதிகப்படியான வியர்வை வெளிப்படுவது மற்றும் உடல் வெப்பம் தான். இதனால் சருமத்தில் சிவப்பு நிறத்தில் புள்ளிகளாக ஆங்காங்கு காணப்பட்டு, அதன் மேல் அரிப்புக்கள் உண்டாகி, எரிச்சல் உண்டாவது என்றெல்லாம் ஏற்படுகிறது. இந்த பிரச்சனை உடலின் கழுத்து, முகம், கைகள், முதுகு, மடிப்புக்கள் உள்ள இடங்கள் போன்றவற்றில் ஏற்படும். குறிப்பாக இதனால் குழந்தைகள் தான் அதிகம் பாதிக்கப்படுவார்கள். எனவே இத்தகைய பிரச்சனையை தவிர்க்க ஒருசில இயற்கை முறைகள் மற்றும் செயல்கள் இருக்கின்றன, அத்தகையவற்றை சரியாக பின்பற்றி வந்தால், நிச்சயம் இந்த பிரச்சனையிலிருந்து விடுபடலாம். சரி, அது என்னவென்று பார்ப்போமா!!!கற்றாழை ஜெல் கற்றாழையின் ஜெல்லை தினமும் மூன்று முறை அரிப்பு ஏற்படும் இடத்தில் தடவி வந்தால், அரிப்புக்கள் ஏற்பட்ட இடத்தில் உண்டான காயமானது குளிர்ந்து, விரைவில் குணமாகிவிடும்.கடலை மாவு கடலை மாவை நீரில் கலந்து, அரிப்புக்கள் உள்ள இடத்தில் தடவி, 5 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதனால் கோடைக்காலத்தில் ஏற்படும் அரிப்புகளானது போய்விடும்.ஐஸ் கட்டிகள் சூரியக் கதிர்களின் தாக்கத்தினால் ஏற்படும் அரிப்புகளை நீக்க, அந்த இடங்களில் ஐஸ் கட்டிகளை மூன்று மணிநேரத்திற்கு ஒரு முறை வைத்து மசாஜ் செய்ய வேண்டும். இதனால் அரிப்புக்களானது பரவாமல் இருப்பதோடு, எளிதில் நீங்கும்.வெள்ளரிக்காய் வெள்ளரிக்காய் சருமத்தை குளிர்ச்சி அடையச் செய்வதில் மிகவும் சிறந்தது. எனவே சருமத்தில் எரிச்சலையூட்டும் அரிப்புக்களை நீக்க, வெள்ளரிக்காயின் துண்டுகளை தேய்த்து வர குணமாகும்.ஃபேஸ் க்ரீம் சருமத்தில் அரிப்புக்கள் ஏற்பட்டால், அப்போது நிச்சயம் ஃபேஸ் க்ரீம்கள் மற்றும் இதர மருந்துகளைப் பயன்படுத்துவதை அறவே தவிர்க்க வேண்டும்.சீமைச்சாமந்தி டீ சீமைச்சாமந்தி டீயை அரிப்புகள் உள்ள இடத்தில் தடவினால், சருமத்தில் அரிப்புக்களை உண்டாக்கும் கிருமிகள் அழிந்து, அரிப்புக்கள் நீங்கிவிடும்.பேக்கிங் சோடா சருமத்தில் ஏற்படும் அரிப்புக்களை நீக்குவதற்கு, குளிக்கும் போது வெதுவெதுப்பான நீரில் சிறிது பேக்கிங் சோடா சேர்த்து கலந்து, குளித்தால், சருமம் மென்மையடைந்து, அரிப்புக்களும் நீங்கும்.பாடி லோசன்கள் குளித்தப் பின்பு, சருமத்தில் உள்ள ஈரம் காயும் வரை காத்திருக்காமல், உடனே சருமத்தில் பாடி லோசன்களை தடவுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். இல்லையெனில் அதுவே சருமத்தில் அரிப்புக்களை உண்டாக்கும்.ஆடைகள் உடுத்தும் ஆடைகள் எப்போதும் லூசாக இருக்க வேண்டும். இல்லையெனில் சருமத்துளைகளால் சரியாக சுவாசிக்க முடியாமல், பின் அதிகப்படியான வியர்வை ஏற்பட்டு, அரிப்புகள் உண்டாகும்.சோளமாவு சோளமாவை நீரில் கலந்து பேஸ்ட் போல் செய்து, பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி, காய வைத்து, பின் ஈரமான துணியால் துடைத்து வர, அரிப்புகள் நீங்கும்.எலுமிச்சை ஜூஸ் தினமும் நான்கு முறை எலுமிச்சை ஜூஸ் குடித்து வந்தால், வெப்பத்தினால் ஏற்படும் அரிப்புக்களில் இருந்து விடுபடலாம்.தர்பூசணி தர்பூசணியை அரைத்து, அதனை உடலில் அரிப்புக்கள் ஏற்படும் இடங்களில் தடவி ஊற வைத்து, கழுவி வந்தால், சருமம் குளிர்ச்சி அடைந்து, அரிப்புக்கள் நீங்கும்.டால்கம் பவுடர் தினமும் குளித்த பின்பு, உடலுக்கு டால்கம் பவுடரை போட வேண்டும். அதிலும் 3-4 முறை தினமும் போட்டால், சருமத்தில் எந்த பிரச்சனையும் வராமல் தடுக்கும். குறிப்பாக கோடைக்காலத்தில் ஏற்படும் அதிகப்படியான வியர்வையினால், சருமமானது அதிக எண்ணெய் பசையுடன் இருக்கும். எனவே டால்கம் பவுடரைப் போட்டால், இத்தகைய பிரச்சனையையும் தடுக்கலாம்.வைட்டமின் சி உணவுகள் வைட்டமின் சி அதிகம் நிறைந்த உணவுகளை சாப்பிடுவதன் மூலம், உடலில் வெப்பத்தினால் ஏற்படும் அரிப்புக்களை தவிர்க்கலாம்.தேன் சருமத்தை குளிர்ச்சியடையச் செய்வதில் தேன் சிறந்த பொருள். எனவே சருமத்தில் வெப்பத்தினால் ஏற்படும் எரிச்சல் மற்றும் அரிப்புக்களை நீக்குவதற்கு தேனை தடவி, ஊற வைத்து கழுவினால், சிறந்த பலனைப் பெறலாம்.புதினா டீ புதினாவால் செய்யப்படும் டீ உடல் வெப்பத்தை குறைத்து, சருமத்தில் ஏற்படும் பிரச்சனைகளை நீக்குவதில் சிறந்தது. எனவே இந்த டீயை சருமத்தில் தடவி ஊற வைத்து கழுவினால், அரிப்புக்களை நீக்க முடியும்.தக்காளி தக்காளியிலும் சருமத்தை குளிர்ச்சியுடனும், மென்மையாகவும் வைத்துக் கொள்ளும் பொருள் அதிகம் உள்ளது. எனவே சருமத்தில் வெப்பத்தினால் ஏற்படும் அரிப்புக்களை நீக்குவதற்கு, தக்காளியை அரைத்து, சருமத்தில் தடவி, ஊற வைத்து கழுவினால், சருமத்தில் ஏற்படும் அரிப்புக்களை நீக்கலாம்.
எடையைக் குறைக்க....
"என்ன ஒரு ஆனந்தம் என் இளம்பிஞ்சைக் கையில் தூக்கையிலே!", "நான் பாலூட்டி, சீராட்டி வளர்க்க ஒரு உயிர்!", இப்படி மகிழ்ந்த கனங்கள் கண்ணாடியைப் பார்த்ததுடன் உடைந்து வலிக்கிறதா? ஒரு பெண்ணின் வாழ்கையில் தான் எத்தனை மாற்றங்கள்? இதில் உடல் எடையைக் காக்க, குறைக்க ஒரு பெரிய போராட்டம் நடத்த வேண்டியுள்ளது. அதிலும் பிரசவ காலத்தில் அதிகரித்த எடையைக் குறைப்பது மிகவும் கடினமான ஒன்று என்பது தெரிந்ததே! அப்படி இருக்க இந்த காலகட்டத்திலும் நம்பிக்கையோடு இருப்பது எப்படி? நம்மை நாம்மே ஊக்கப்படுத்துவது எப்படி? இதோ 13 மாத குழந்தையின் தாய் கூறும் வழிகளைப் பார்ப்போம்! கவனத்தில் வைக்க வேண்டியவை: * முதலில், வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டும். குண்டாக இருப்பவர்கள் வெளியே போகக்கூடாது என்ற சட்டம் எங்கும் இல்லை. பெரிய மால், பூங்கா, கோவில், ஷாப்பிங், ஹோட்டல் என எங்கு வேண்டுமானாலும் போகலாம். அங்கு பலரை சந்தித்து, அவர்களிடம் இந்த எடையைக் குறைப்பதற்கான டிப்ஸ்களைக் கேட்டு நடந்து கொள்ளலாம்.* எடைக்கு ஏற்ப புதிய ஆடைகள் வாங்கிக் கொள்ள வேண்டும். பழைய ஆடைக்குள் கஷ்டப்பட்டு நுழைந்து கண்ணாடியைப் பார்த்து அழுவதை விட, புதிய ஆடையில் அழகாய் தெரிவது நல்லதுதானே! அதுமட்டுமா, புது உடை வாங்க நமக்கு கசக்குமா என்ன? * உறவுகளையும், சொந்த பந்தங்களையும் அணுக வேண்டும். அவர்களிடம் மனம்விட்டு பேசுவதால், மனதில தைரியம் எழும். மேலும் தனியாக இருப்பதைவிட அவர்களுடன் பேசுகையில், மனதிற்கு ஆறுதல் கிடைப்பதோடு, நன்றாகவும் இருக்கும்.* பிடித்த ஹோட்டல், பிடித்த உணவு, பிடித்த திரைப்படம், பிடித்த பாடல் என பிடித்த விஷயங்களை எப்போது கடைசியாகச் செய்தீர்கள் என்று ஞாபகம் இருக்கிறதா? இல்லையா? அதை இப்போது செய்யுங்கள். அது பெரியதாக இருக்க வேண்டியது இல்லை. அருகில் உள்ள கடைக்குச் சென்று, பிடித்த சாக்லேட் வாங்கி சாப்பிடுவது, பிடித்தப் பாடலைக் கேட்பது, பிடித்ததைச் செய்வது என்று இருப்பது மிகவும் சிறந்தது. * கடைசி வரை பார்த்துக் கொள்கிறேன் என்று வாக்கு கொடுத்தாரே, கணவர், அவரை முதலில் பிடித்து இஷ்டப் பட்டதைப் பேசித் தீர்க்க வேண்டும். இதனால் அவருடைய வார்த்தைகள் கண்டிப்பாக மனதை ஊக்குவிக்கும். அதுமட்டுமல்லாமல், இது இருவருக்கிடையே உள்ள காதலைப் பலப்படுத்தும். * அனைத்தையும் விட முக்கியமானது உடற்பயிற்சி. ஜிம் போகாவிட்டாலும், சிறியதாய் ஒரு டான்ஸ் அல்லது ஒரு நடை, ஒரு வேலை என ஏதாவது செய்து, உடலைச் சுறுசுறுப்பாக வைத்தால், எடை சீக்கிரமாகக் குறையும். குழந்தைப் பிறந்து ஆறு வாரம் அமைதியாக இருக்கவும். அதன் பின்னர் மெதுவாக வீட்டிலேயே சின்னச் சின்னப் பயிற்சி செய்யவும். இந்தப் பயிற்சிகள் சுறுசுறுப்பாக வைப்பதோடு, மனதையும் சாந்தப்படுத்தும். * கணிப்பொறி காலத்தில் கணினியில் கிடைக்காத தகவல் ஒன்று உண்டா? கணினியில் பிற தாய்மார்களின் நல்ல கதைகளைப் படிக்கவும். டிப்ஸ் எடுத்துக் கொள்ளவும். வீட்டிலேயே இருந்து உடல் எடையைப் பற்றி வருந்தி, மனதை வருத்தி, சோகமாக காலத்தை வீண் அடிப்பதைவிட, வெளியே சென்று பிடித்ததைச் செய்து கொஞ்சம் பயிற்சியும் செய்து சந்தோஷமாக வாழுங்களேன்!
கண்களை ஆரோக்யமாக பாதுகாக்க..
மனிதர்களின் சோகம், துக்கம், சந்தோஷம் போன்ற பல உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் கண்ணாடி கண்கள்தான்.கண்ணில் நீர் வடிதல், சிவந்துபோதல், கோடுகள், கண் இமை உதிர்தல், சுருக்கங்கள் என்று பலருக்கும் கண்களே வயோதிகத்தின் வாசலாய் அமைந்துவிடுகின்றன.திடீரென உடல் எடை குறைதல், தூக்கமின்மை, வேளாவேளைக்குச் சரியாகச் சாப்பிடாமல் இருப்பது, சத்துக் குறைபாடு, தரமில்லாத மேக்கப், வெயிலில் அதிகம் அலைவது போன்ற காரணங்களால் கண்கள் பாதிக்கப்படுகிறன.கருவளையம் / சுருக்கம்கண்களைச் சுற்றி இருக்கும் தோல் மிகவும் மென்மையானது. நீர் வடிதல், சிவந்து போதல், வீக்கம், தூக்கமின்மை இவைதான் கண்ணில் வரும் கருவளையத்திற்கு மிக முக்கியக் காரணங்கள்.பகல் தூக்கத்தைக் காட்டிலும் இரவு 8 மணி நேரத் தூக்கம் அவசியம் தேவை. பச்சை உருளைக்கிழங்கின் சாற்றை எடுத்துக் கண்களுக்குக் கீழே தடவலாம். வெள்ளரிக்காயை நறுக்கி, மூடிய கண்களின் மேல் வைத்து சிறிது நேரம் ஓய்வு எடுப்பதன் மூலம் கண்களின் சோர்வு நீங்கி, குளிர்ச்சி அடைந்து கருவளையங்கள் மறையும்.பன்னீரைப் பஞ்சில் தோய்த்து இரவு தூங்கும்போது கண் இமை மீது வைத்துக்கொள்வதால் கருமை நீங்கி, கண்கள் பளிச்சென்று இருக்கும். கண்ணின் கீழே அதிகச் சுருக்கம் இருப்பதாக நினைப்பவர்கள் ஐலைனரோடு கீழ் இமையில் பென்சிலும் உபயோகித்தால் சுருக்கங்கள் தெரியாமல் இருக்கும்.இமைவிளக்கெண்ணெய் மற்றும் நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும் அகில் எண்ணெய் ஆகிய இரண்டையும் சம அளவு கலந்து கண்களின் மேல் போட்டு வர, வறட்சி நீங்கி, இமை மற்றும் புருவத்திலும் முடி நன்றாக வளரும்.புருவம்கண்களின் அழகை அம்சமாகக் காட்டுவது புருவங்கள்தான். சிலருக்குப் புருவத்தில் முடியே இருக்காது. நிறமும் குறைவாக இருக்கும். தினமும் கரிசலாங்கண்ணி, விளக்கெண்ணெயைத் தலா ஐந்து சொட்டுகள் எடுத்து, சூடு செய்து, நெல் உமித் தூளை ஒரு சிட்டிகை கலந்து, புருவத்தில் மசாஜ் செய்யலாம்.அரை மணி நேரத்திற்குப் பின்பு வெதுவெதுப்பான நீரில் துடைத்துவிட வேண்டும். வாரம் மூன்று முறை இப்படிச் செய்வதன் மூலம் புருவத்தில் முடி கருகருவென வளரும்.மசாஜ்கண்களுக்குக் கீழும் புருவங்களுக்கு மேலும் வட்ட வடிவில் மசாஜ் செய்தால், அந்த இடங்களில் ரத்த ஓட்டம் அதிகரித்து, கண்களின் கீழ் உள்ள கோடுகள் மற்றும் சுருக்கங்கள் மறைவதுடன், சோர்வு, நீங்கிப் புத்துணர்வு கிடைக்கும்.கண்களுக்கு முன் கட்டை விரலை வைத்து அருகிலும், தொலைவிலும் விரலை நகர்த்தி மாற்றி மாற்றிப் பார்க்க வேண்டும். இதுபோல் தினமும் 15 முறை செய்ய வேண்டும்.முகத்திற்கு முன்பு இரண்டு கைகளில் ஒன்றை மேல் நோக்கியும் மற்றொன்றைக் கீழ் நோக்கியும் வைத்து, இரண்டு கைகளையும் திரும்பத் திரும்பப் பார்க்க வேண்டும்.தொடர்ந்து இந்தப் பயிற்சியில் ஈடுபடும்போது, கண்களில் புத்துணர்வு கிடைப்பதை உணரலாம். 20 முறை கண்களை மூடி இருட்டை உணர்வதன் மூலம் கண்களுக்கு நல்ல பயிற்சி அளிக்க முடியும்.உணவுகண்ணில் உள்ள விழி வெண் படலம் (கார்னியா), விழித்திரை நன்றாகச் செயல்படுவதற்கு வைட்டமின் 'ஏ' அவசியம். வைட்டமின் 'ஏ' நிறைந்த கேரட், முருங்கைக் கீரை போன்ற கீரை வகைகள், மீன், மீன் எண்ணெய், ஈரல், முட்டை, பால் ஆகியன கண்ணுக்கு மிகவும் நல்லது
சர்க்கரை நோயை தடுக்கும் அத்திபழம்
அனைவரும் விரும்பும் அத்திப்பழத்தில் ஏராளமான நன்மைகள் உள்ளன. வைட்டமின் ஏ, இ சத்துக்கள் நிறைந்துள்ள அத்திப்பழத்தில் அதிகளவு நார்ச்சத்து உள்ளது. சர்க்கரை நோயை தடுக்கும் சக்தி அத்தி இலைகளுக்கு உண்டு. சர்க்கரை நோய் வராமல் தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் இந்த பழத்தில் பொட்டாசியம், கால்சியம், மினரல் மற்றும் இரும்பு சத்துக்கள் உள்ளன.அத்திபழத்தில் இரும்புச்சத்து ஒரு கிராம் அளவு உள்ளது. கால்சியம், மற்றும் பாஸ்பரஸ் தாதுக்களும் நிறைந்து உள்ளதால், எலும்பு வளர்ச்சிக்கும், பலத்திற்கும் உதவுகிறது. இளம் பெண்கள் முதற்கொண்டு மாதவிடாய் காலம் முடிவுறும் நிலையில் உள்ள பெண்கள் வரை தினம் அத்திப்பழத்தை இரவு நீரில் ஊற வைத்து காலை எழுந்தவுடன் நீரை குடித்து பழத்தை மென்று சாப்பிட மாதவிடாய் சம்பந்தப்பட்ட கோளாறுகள் நீங்கும்.கருத்தரிப்பில் உண்டாகும் பிரச்சினைகள் அகலும். கர்ப்ப காலங்களில் பல பெண்களுக்கு மலச்சிக்கல் ஏற்படும். அவர்கள் தினம் ஊற வைத்த அத்திபழம் சாப்பிடுவதால் மலச்சிக்கல் நீங்குவதுடன் உடலுக்கு வேண்டிய தாதுவையும் எளிதாக பெறமுடியும். சரிவர பசி எடுக்காத குழந்தைகளுக்கு இதை கொடுக்க அவர்கள் பசி எடுத்து உண்பார்கள்.சுறுசுறுப்பாக இயங்குவார்கள். நாட்பட்ட வறட்டு இருமல் உள்ள குழந்தைகளுக்கும் கொடுக்கலாம்.ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்கும் தன்மை கொண்டது. உயரழுத்தத்தை கட்டுப்படுத்த உதவுகிறது. அத்திப்பழம் இதய நோய்கள் வராமல் தடுக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது
ஞாபக சக்தி குறைவா? என்ன தீர்வு!!
சில பேருக்கு நம்ம மூளையில் மெமரி கார்டு பொருத்தினால் கூட நல்லா இருக்கும் என்று நினைக்கும் அளவிற்கு ஞாபக சக்தி குறைவாக இருக்கிறது .தேவையான சத்துக்கள் நாம் சாப்பிடும் உணவிலிருந்து கிடைக்காததே இதற்கு காரணம்.காரட்,தக்காளி,திராட்சை.ஆரஞ்சு,செர்ரி போன்ற பள பளப்பான வண்ண உணவுகளில் மூளைக்கு மிகத் தேவையான வைட்டமின்கள்,மினரல்கள், பைட்டோ கெமிக்கல்கள் நிறைந்துள்ளன.ஒரு வாரம் காரட் சாப்பிட்டவர்களையும், காரட் சாப்பிடாதவர்களையும் பரிசோதித்த போது, காரட் சாப்பிட்டவர்களின் மூளைத் திறன் மிகச்சிறப்பாக இருந்தது என்கிறது மனோதத்துவ பேராசிரியர் பால்கோல்ட் என்பவரின் ஆய்வு முடிவுகள். இந்த உணவுகள் மூலம் மூளையில் செரோட்டனின், அசிட்டின் கோலைன் என்ற இரசாயனப் பொருட்கள் உற்பத்தியாகி உடல் இயக்கத்தில் கலப்பது தான் இதற்குக் காரணம் மூளையின் ஞாபக சக்தியை சிறப்பாக தக்க வைத்துக்கொள்வதற்கு கொழுப்பு சத்து தேவை. இதற்கு மீனிலிருந்தும், மீன் எண்ணெயிலிருந்து கிடைக்கும் என்-3 என்ற கொழுப்பு அமிலமே தினமும் தேவை. நல்ல முடிவை திடீரென்று எடுக்க மீனும் ஏதேனும் ஓர் இனிப்புமே போதுமாம்.சைவ உணவுக்கரர்கள் சோயா எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் ஆகியவற்றை உபயோகிக்கலாம்.மனித உடலிலே மூளை தான் அதிக ஆக்ஸிஜனை உபயோகிப்பது . எனவே, மூளையின் செல்கள் அழியாதிருக்க பைட்டோ கெமிக்கல் உள்ள உணவுகள் தேவை. இத்துடன் மூளை பலவீனம், குழப்பம், நோய்த்தாக்குதல், அல்சீமெர்ஸ் என்ற ஞாபக மறதிநோய் முதலியன ஏற்படாமல் இருக்க பி, ஏ, ஈ ஆகிய வைட்டமின் உள்ள உணவுகளும் தேவை.மிகவும் கூர்மையாகச் சிந்தித்து முடிவு எடுக்கச் சர்க்கரை உதவும். இதற்கு பழம் அல்லது இனிப்பு வகைகள் சாப்பிடவும்.அரிசி, ரொட்டி, கோதுமை, உருளைக்கிழங்கு முதலியன கோபம் மற்றும் பதற்றம் போன்ற உணர்ச்சிகளை மெல்ல மெல்லக் கட்டுபடுத்திவிடும்.மூளையைச் சரியாக, பாதுகாப்பாக பராமரிப்பதுடன் நல்ல மனப்பாங்கையும், காரியத்தைச் செய்து முடிக்கும் விடாமுயற்சியையும், பெர்சி மற்றும் செர்ரி பழங்கள், அப்ரிகாட், பீச், அவரைக்காய் முதலியன தந்துவிடுகின்றன.மனதை அமைதிப்படுத்தி, தன்னம்பிக்கையை உணர்த்துவது வெள்ளைப்பூண்டு. மூளையின் செல்கள் வேகமாக அழிந்து போய்விடாமல் பாதுகாப்பதில் வெள்ளைப் பூண்டுக்கு நிகர் வேறு இல்லை.ஞாபக சக்தி உள்ள உயிரினங்கள் எல்லாம் நீண்ட நாள் வாழ்கின்றன.எனவே, ஞாபக சக்தி அழியாமல் இருக்க வெள்ளைப் பூண்டைத் தவறாமல் சாப்பிடவும்.பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் 54 முதல் 84 வயது வரை உள்ள ஆண்களை ஆராய்ந்து வந்தார்கள். இவர்கள் உடலில் பி வைட்டமின்கள் போதுமான அளவு இருந்தவர்கள் நல்ல ஞாபக சக்தியுடனும் சிறப்பான மூளைச் செய்ல் பாடும் உடையவர்களாக இருந்தனர்.ஆனால் அவர்களில்பி6 பி12 ஃபோலேட் ஆகிய வைட்டமின்கள் குறைவாக இருந்தவர்கள் மிகவும் மறதியும் மனக்குழப்பமும் உடையவர்களாக இருந்தனர்.‘பி’ வைட்டமினைச் சேர்ந்த இநத மூன்று வைட்டமின்களும் நரம்புகளின் மூலம் மூளைக்கு தெளிவாகச் செய்திகளை அனுப்பி மூளை அமைதியுடன் குழப்பமில்லாமல் வேலை செய்ய உதவுகிறது என்பதை மட்டும் உறுதியாகக் கண்டுபிடித்துள்ளனர். இந்த வைட்டமின்கள் குறையும் போது தீய அமிலங்கள் மூளைக்கு மிகமெதுவாக எடுத்துச் செல்லப்படுகின்றன. இதனால் மூளையின் செயல்பாடுகளின் குழப்பம் ஏற்படுகிறது.மதிய உணவில் தயிர் மற்றும் கீரை இருந்தால் இந்த வைட்டமின்கள் நன்கு நம் உடலில் சேர்ந்துவிடும். மூளையும் அற்புதமாக இயங்கும்.