இருதய நோய் பற்றிய தகவல்கள் :-
இன்று உலகளாவிய ரீதியில் மரணங்களை ஏற்படுத்தும் முதன்மைக் காரணியாக இருதய நோய் திகழ்கிறது. ஆண்டுதோறும் இந்நோயால் 17.2 மில்லியன் மக்கள் மரணமடைகின்றனர்.ஒரு காலத்தில் பணக்காரர்களின் நோய் எனக் கருதப்பட்ட இந்நோய் இன்று வறியவர்களையும் பாதித்துள்ளது. முன்பு முதியோரையே தாக்கிய இந்நோய் இன்று சிறுவர்களையும், இளம் வயதினரையும் பாதித்துள்ளது.
உலகளாவிய ரீதியில் ஏற்படும் மர ணங்கள் 75 சதவீதம் இருதய நோயால் ஏற்படுகிறது. ஒவ்வொரு வினாடியும் ஒன்றுக்கு மேற்பட்டோர் இந்நோயால் மரணமடைகின்றனர்.
2020 ஆம் ஆண்டளவில் இந்நோய் ஒரு கொள்ளை நோயாகப் பரிமாணமடையும் அபாயம் உள்ளதென மருத்துவ ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளது. நவீனகால வாழ்க்கை முறை, உணவுமுறை, சூழல் மாசு அடைந்தமை, நீண்ட நேரம் கணினி மற்றும் தொலைக்காட்சிப் பெட்டியின் முன் இருத்தல், கையடக்கத் தொலைபேசி பாவனை, போதிய உடற்பயிற்சியின்மை ஓய்வின்மை, மன உளைச்சல் போன்றவையே இதற்குக் காரணமாகும்.
இருதயம் சீராகச் செயலாற்ற பிராண வாயு இரத்தம் மூலம் எடுத்துச் செல்லப்படுகிறது. இருதயத்திற்கு இரத்தத்தை எடுத்துச் செல்லும் முடிவுறு நாடிகளில் (Coronary Arteries) அடைப்பு ஏற்பட்டு இரத்தோட்டம் தடைப்படும்போது போதிய பிராணவாயு இருதயத்தின் தசைகளுக்குக் கிடைக்காதபோது தான் மார்பு வலி (Angina) ஏற்படுகிறது.
இது இருதய இரத்த குழாய்களில் அடைப்பு ஏற்பட்டுள்ளது என்ற எச்சரிக்கையாகும். இக்குழாய்கள் அடைபட்டு இருதயத்திற்கான இரத்தோட்டம் முழுமையாகத் தடைப்படும் போதுதான் மாரடைப்பு (Heart Attack) ஏற்படுகிறது.
பல்வேறு காரணிகளால் மேற்படி முடிவுறுநாடிகளில் கொழுப்பு படிந்து தடித்து விடுவதால் அவற்றின் விட்டம் குறைந்து விடுகிறது. இதனால் அதனூடாகச் செல்லும் இரத்தோட்டம் பாதிக்கப்படுகிறது. போதிய பிராணவாயு கிடைக்காததால் மார்புவலி ஏற்படுகிறது.
சிலவேலைகளில் இக்கொழுப்புப் படிவம் இரத்தக் குழாயிலிருந்து விடுபட்டு இரத்தத்துடன் கலந்து மிக மெல்லிய முடிவுறு நாடிகளுக்குள் புகுந்து அடைப்பை ஏற்படுத்திவிடுகிறது. இதனால் இருதயத்திற்குச் செல்லும் இரத்தோட்டம் பூரணமாகத் தடைப்படுவதால் மாரடைப்பு ஏற்படுகிறது.
மேற்படி இரத்தக் குழாய்களில் கொழுப்பு படிந்து தடிப்பு ஏற்படுதல் தடுக்க முடியாத மற்றும் தடுக்கக் கூடிய இருவகைக் காரணிகளால் நடைபெறுகிறது. முதுமை, ஆண்பால், பரம்பரை, கறுப்பு இனம் போன்றவை தடுக்க முடியாத காரணிகளாகும்.
சீரற்ற வாழ்க்கை முறை, தவறான உணவுப் பழக்க வழக்கம், போதிய ஒட்சிசனெதிரி கள்(Antioxidants) அடங்கிய உணவை உட்கொள்ளாமை, மன உளைச்சல், உடற் பயிற்சியின்மை, உயர் இரத்த அழுத்தம், இரத்தத்தில் உயர்ந்த அளவு கொழுப்பு (Cholesterol) மற்றும் ரைகிளிசெனரட் (Triclycexide)என்ற கொழுப்பு, குறைந்த அளவு நல்ல கொழுப்பு (HDL) , கூடிய அளவு கெட்ட கொழுப்பு (LDL) நீரிழிவு நோய், உடல் பருமன் எரிந்து விழுதல், தனிமை, பகமை, பேராசை, புகைத் தல், அதிக அளவு மதுப்பாவனை, நீண்டகால மருந்து பாவனை போன்றவை தடுக்கக்கூடிய காரணிகளாகும்.
இவற்றில் மிக முக்கியமானது உயர் இரத்த அழுத்தமாகும். தற்போது உலகளாவிய ரீதியில் ஒரு பில்லியனுக்கு மேற்பட்டோரை இந்த உயர் இரத்த அழுத்தம் நோய், பாதித்து ள்ளது. இந்நோய் தங்களிடம் இருப்பது பற்றி தெரியாமல் பெரும்பாலானோர் வாழ்கின்றனர். இதனால்தான் திடீரென எவ்வித அறிகுறிகளுமின்றி மாரடைப்பு ஏற்பட்டுப் பலர் மரண மடையும் பரிதாபகரமான நிலை ஏற்படுகிறது.
மேலும், சிலர் மேற்படி தடுக்கக்கூடிய காரணிகளைக் கிரமமான பரிசோதனைகளை மேற்கொண்டு கட்டுப்பாட்டில் வைத்து தங்களுக்கு இரு தய நோய் ஏற்பட வாய்ப்பு இல்லை என இருக்கும்போது அவர்களுக்கு எவ்வித அறிகுறிகளுமின்றி மாரடைப்பு ஏற்பட்டு மரணமடையும் சந்தர்ப்பம் உண்டு.
மருத்துவர்களால் மேற் கொள்ளப்படும் பிரேதப் பரிசோதனையில் தான் அவர்களின் இருதயத்தில் ஏற்பட்ட ஒருவகை தொற்று நோயால்தான் மரணமடைந்தனர் என்பது தெரியவரும். இதுபோன்று இரத்தத்தில் கோமிசைடின் (Homoecystine) என்ற பொருள் அதிகரிக்கும் போதும் மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பு உண்டு. தினமும் விட்டமின் சி அடங்கிய தோடம்பழச்சாறு அல்லது தேசிக்காய் சாறு பருகி விட்டமின் ஈ 200 iu எடுப்ப தன் மூலம் இது ஏற்படாது தடுக்க முடியும்.
இருதயத்திற்கு இரத்தத்தை விநியோகிக்கும் முடிவுறு நாடிகளில் (Coronary Arteries) ஏற்படும் அடைப்பு காரணமாகவே மாரடைப்பு ஏற்படுகிறது. இந்நாடிகளில் கல்சியம் உப்பு மற்றும் இரத்தக் கொழுப்பு படிப்படியாகப் படிந்து அதன் விட்ட த்தைக் குறைக்கும்.
சிறு நீரகத்தின் (Kidney) மேல் இருக்கும் அட்ரீனல் சுரப்பி (Adrenal Gland) சுரக்கும் அட்ரீனாலின் (Adrenaline) என்ற சுரப்பு இரத்தக் குழாய்களில் படிந்துள்ள படிவத்தை உடைத்து எடுத்து இரத்தத்துடன் கலக்கச் செய்யும். இவ்வாறு இடம்பெயர்ந்த படிவம், இருதயத்திலுள்ள மிகக் குறுகிய முடிவுறு நாடிக்குள் புகும்போது அதை அடைத்து இரத்தோட்டத்தைத் தடுத்து மாரடைப்பு ஏற்பட வழி வகுக்கும்.
மேற்படி சுரப்பு அதிகாலை மூன்று மணியளவில்தான் அதிகமாகக் சுரக்கப்படும். இதனால்தான் அதிகமான மாரடைப்பு அதிகாலையில் ஏற்படுகிறது.
இரத்தோட்டத்தில் இரத்த உறைகட்டிகள் (Blood Clots) தோன்றுவதற்கு உயர் கொலொஸ்ரோல் (Cholesterol) அளவு வழி வகுக்கிறது. இரத்தோட்டத்தில் கலந்து செல்லும் இவ் இரத்த உறை கட்டிகளும் மேல் கூறியவாறு முடிவுறு நாடிகளில் அடைப்பை ஏற்படுத்தி மாரடைப்பை ஏற்படுத்தும்.
மேற்படி முடிவுறு நாடிகளில் ஏற்படும் கொழுப்புக்கட்டி படிமானம் திடீரென ஏற்படுவதில்லை. இது ஒன்பது வயதிலிருந்தே படிப்படியாக ஏற்படுகிறது எனச் சமீபத்திய ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது. எனவே, இளம் வயதிலிருந்தே பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டால் இது ஏற்படாது தடுக்க முடியும்.
அன்ஜைனா எனப்படும் மார்பு வலி ஒரு கிரேக்க மொழிச் சொல்லா கும். ‘உதவி கேட்டு இருதயம் அழுகிறது’ என்பது இதன் பொருளாகும். ஒரு மெல்லிய வலி நெஞ்சின் மத்தி யில் ஏதாவது கடினமான வேலைகள் செய்யும்போது ஏற்படும்.
அளவிற்கு மீறி உணவு உண்டபோதும், இவ்வலி ஏற்படும் உணர்ச்சிவசப்படும்போதும் மன உளைச்சல் அதிகரிக்கும்போதும் பயம், கோபம், ஏமாற்றம் ஏற்படும் போதும் இவ்வலி ஏற்படும். மேற் படி உணர்ச்சி வசப்பட்ட நிலையில் முன் குறிப்பிட்ட அட்ரீனல் சுரப்பி Catecholamine என்ற சுரப்பை அதிகமாக சுரப்பதால் இருதயம் விரை வாகத் துடிப்பதால் மார்பு வலி ஏற்படும். இவ்வாறாக ஏற்படும் மார்பு வலியை அலட்சியம் செய்யாது தகுந்த சிகிச்சை மேற்கொண்டால் மாரடைப்பு ஏற்படாது தடுக்கலாம்.
ஆரோக்கியமான உணவுடன் உடற் பயிற்சி, மற்றும் யோகா போன்றவற்றை இளம் வயதிலிருந்தே மேற் கொண்டால் இருதய நோய் ஏற்படாது தடுக்க முடியும் என மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன.
இதனால் இளம் வயதில் மாரடைப்பு ஏற்படுவது தடுக்கப்படும். கடந்த நான்கு வருடங்களில் இளம் வயதினருக்கு ஏற்படும் இருதய நோய் 25 சதவீதம் அதிகரித்துள்ளது என அறியக்கிடக்கிறது.
மார்பின் மத்தியில் ஏற்பட்ட மெல்லிய வலி தீவிரமடைந்து இடது கைக்கு சில வேலைகளில் வலது கைக்கும், கீழத் தாடைக்கும் பரவுதல், குமட்டல் அல்லது வாந்தி, நெஞ்சில் முட்டு, மூச்சு நின்று விடுதல் அல்லது மெல்லிய மூச்சு, அதிக வியர்வை, பலவீனம், மயக்கம், தலைச்சுற்று, தொண்டைக்குள் அடைப்பு போன்றவை அன்ஜைனாவின் அறிகுறிகளாகும்.
சிலவேளைகளில் வாய்வுக் கோளாறுகளினாலும் மேற்படி அறிகுறிகள் தென்படும். வாய்வுக் கோளாறு என கை மருத்துவம் பார்க்காது உடனடியாக மருத்துவமனைக்குப் போய் பரிசோதனைகளை மேற்கொண்டு அன்ஜைனா ஏற்பட்டுள்ளதா என உறுதி செய்துகொள்ள வேண்டும்.
மேற்படி அறிகுறிகள் தென்பட்டதும் முதல் உதவியாக GTN என்ற நாக்குக் கீழ் வைக்கும் மாத்திரை, ஆஸ்பிரின் எடுத்தால் இரத்தக் குழாயில் ஏற்பட்ட அடைப்பு அகலும். இவை கிடைக்காதபோது கடும் சாயத்துடன் சுடச் சுடப் பாலில்லாத தேனீர் பருக அடைப்பு ஓரளவு அகலும் என சமீபத்தில் ஆய்வில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
மாரடைப்பு ஏற்பட்டதும் பதற்றமடையாது நோயாளியை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்ல வேண்டும். மாரடைப்பு ஏற்பட்ட அடுத்த ஒரு மணித்தியாலத்தை மருத்துவர்கள் தங்கமான நேரம் (Golden Hour) என்பர். இந்த ஒரு மணித்தியாலத்திற்குள் நோயாளிக்கு சிகிச்சை அளித்தால் உயிராபத்து ஏற்படுவதைத் தடுக்க முடியும்.
சில சமயம் தனிமையில் ஒருவர் வெளியூருக்குக் காரோட்டிக்கொண்டிருக்கும் போது திடீரென நெஞ்சுவலி ஏற்படலாம். பக்கத்து மருத்துவமனைக்குப் போக ஒரு மணித்தியாலத்திற்கு மேல் பிடிக்கலாம் என்ற நிலையில் அவர் சில முதலுதவிகளைத் தானே செய்யமுடியும்.
நன்கு உட்கார்ந்துகொண்டு நெற்றியைக் கையால் தாங்கிக்கொண்டு வாந்தி எடுப்பது போல் ஆழமாக சிறிது நேரம் ஒலி எழுப்பிவிட்டு நிற்பாட்டி விட்டுச் சிறிது நேரம் ஆழமாகச் சுவாசம் எடுக்கவேண்டும். இதனால் இருதயம் பிடித்துவிடப்படுவதால் (Massagin) அது மீண்டும் துடிக்கும் சாத்தியம் ஏற்படும்.
மேலும், ஆழ்ந்த சுவாசத்தின்போது அதிகபட்ச பிராணவாயு உட்செல்வதால் இருதயத்திற்கு போதிய பிராணவாயு கிடைத்து மீண்டும் இயங்கும் வாய்ப்பு உண்டு. இதனால் காலம் பிந்தி மருத்துவமனைக்கு அவரை எடுத்துச் சென்றாலும் அவர் உயிர்பிழைக்க முடியும்.
பண்டிகைக் காலங்களில் தான் அதிகமான மாரடைப்பு ஏற்படுவது அவதானிக்கப்பட்டுள்ளது. அக்காலங்களில் அளவுக்கு மீறிய மதுபாவனை, புகைத்தல், கொழுப்பு, உப்பு அதிக மடங்கிய உணவுகளை அளவிற்கு மீறி உட்கொள்ளல், போதிய ஓய்வின்றி இரவு முழுவம் நடனமாடுதல் போன்றவை மாரடைப்பை வரவழைக்கும் எனவே, இருதய நோயாளர்கள் இரவு விருந்துகளுக்குப் போகும்போது மறக்காது GNT மாத்திரையை எடுத்துச் செல்ல வேண்டும்.
உணவுக் கட்டுப்பாடு, கிரமமான உடற் பயிற்சி மற்றும் யோகா, மன உளைச்சலைத் தவிர்த்தல், புகைத்தலை விட்டுவிடல், மிதமான மதுப்பாவனை, அடிக்கடி மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளல் போன்றவை மூலம் அன்ஜைனா ஏற்படாது தடுக்கலாம்.
பாலூட்டும் பெண்களுக்கு இவ் ஆபத்து 19 சதவீதம் குறைவு என்றும், அடிக்கடி உடலுறவில் ஈடுபடும் தம்பதிகளுக்கு, மாரடைப்பு ஏற்படும் அபாயம் குறைவு எனவும் சமீபத்திய மருத்துவ ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளது.
முட்டை மஞ்சள் கரு, ஆட்டிறைச்சி, கொழுப்பு நிறைந்த பெரிய மீன்கள், நெய், பட்டர், கொழுப்பு அடங்கிய பால், வித்துகள், உலர் பழங்கள் போன்றவை இரத்தத்தில் கொலொஸ்ரோலின் அளவை அதிகரிக்கும். எனவே இவற்றைத் தவிர்க்கவேண்டும்.
தானிய உணவு வகைகள் இருதய நோய் மருந்து போல் செயல்பட்டு மாரடைப்பு ஏற்படாது தடுக்கும் வல்லமை கொண்டவை என ஒரு ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தினமும் நார்ச்சத்து (Fibres) அடங்கிய உணவு வகைகளை உண்ண மாரடைப்பு 29 சதவீதம் குறையும் எனக் கூறப்படுகிறது.
தானிய உணவுகளுடன் கிரமமான யோகாவில் ஈடுபட்டால் இருதய ஆரோக்கியம் மேம்படும். இவற்றிலுள்ள நார்ப் பொருட்களும், விட்டமின்களும் ஆரோக்கியத்தைப் பேணும்.
மத்தியத்தரை நாடுகளில் (Mediterranean) உள்ள மக்களுக்கு இருதய நோய் ஏற்படுதல் மிகக் குறைவு. அவர்களின் உணவில் மீன், ஒலிவ் எண்ணெய், வைன் அடங்கியிருப்பதே இதற்குக் காரணமாகும். இருதய நோய் ஏற்படாது தடுக்கும் பல்வேறு ஒட்சிடனெதிரிகள் (antioxidants) இவற்றில் அபரிமிதமாக அடங்கியுள்ளன.
புகைத்தலைத் தவிர்த்து அதிக அளவு மரக்கறிவகைகள், பழங்கள் ஒட்ஸ் பயறு வகைகள், முழுத் தானிய வகைகள், மீன் போன்ற உணவுகளை உட்கொண்டு நடத்தல், துவிச்சக்கர வண்டி பதிதல், யோகா போன்றவற்றில் ஈடுபட்டால் இருதய நோய் ஏற்படாது தடுக்கமுடியும்.
மேல் குறிப்பிட்டவாறு 2020 ஆம் ஆண்டு ஒரு கொள்ளை நோயாக இருதய நோய் பரிமாணமடைவதைத் தடுக்க இப்போதே வாழ்க்கை முறை, உணவு, உடற்பயிற்சியில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
இருதய நோயின் தாற்பரியத்தைக் கவனத்தில் கொண்டு இந்நோய் பற்றிய அறிவையும், விழிப்புணர்வையும் மக்களிடையே ஏற்படுத்தும் பொருட்டு உலக இருதய நோய் தினம் ஆண்டு தோறும் செப்டம்பர் மாதம் கடைசி ஞாயிறு தினத்தில் அனுஷ்டிக்கப்படுகிறது.
விடுதலை நாளான இத்தினத்தில் பெரும்பாலான மக்கள் இத்தின நிகழ்வுகளில் கலந்துகொண்டு பயனடைய முடியும். இவ்வருடம் இத்தினம் செப்டெம்பர் 27ஆம் திகதி அனுஷ்டிக்கப்பட்டது. ‘இதயத்திற்கு இணக்கமான வேலைத்தளம்’ என்பதே இவ்வருட தொனிப்பொருளாகும்.
தொழில் புரிவோர் தங்களின் நேரத்தின் அதிக அளவை வேலைத்தளத்தில் செலவிடுகின்றனர். குடும்பத்தோடு செலவிடும் நேரம் மிகக் குறைவு. வேலைத்தளத்திற்குப் பயணிக்கும்போது ஏற்படும் சனநெரிசல், காலதாமதம், மன உளைச்சலை அதிகரிக்கின்றன.
வேலை செய்யும் இடமும் ஆரோக்கியத்தைப் பாதிக்கும். சிகரட் புகை அடங்கிய சூழல், காற்றோட்டமில்லாத குளிரூட்டியின் (Air Conditioner) கீழ் வேலை செய்தல், காலக்கெடுவுக்குள் வேலையை முடிக்க வேண்டும் என்ற கடினமான உத்தரவு, கொழுப்பு, உப்பு அதிகம் அடங்கிய சிற்றுண்டிகளைக் கொண்ட சிற்றுண்டிச்சாலை போன்றவை மன உளைச்சலை ஏற்படுத்துவதால் இருதய நோய் ஏற்படுகிறது. இவற்றைக் கட்டுப்படுத்தவே தான் இத்தொனிப் பொருள் இந்த வருடம் கொடுக்கப்பட்டது.
நவீன மருத்துவமுறையில் இருதய நோயாளர்கள் பல்வேறு தேவையற்ற பரிசோதனைகளுக்கும், செய்த பரிசோதனைகளைத் திரும்பவும் செய்தல் போன்றவற்றிற்க்கும் உட்படுத்தப்படுவதால் பெரும் பணம் செலவழிக்க நேரிடுகிறது. இதனால் தனியார் மருத்துவமனைகள் பெரும்பணம் சம்பாதிக்கின்றன. இருதய வைத்திய நிபுணர்களும் இலட்சக் கணக்கில் சம்பாதிக்கின்றனர்.
ஆரோக்கியமான உணவை உட்கொண்டு கிரமமான யோகா பயிற்சியில் ஈடுபட்டால் பரம்பரை காரணிகள் உட்பட இருதய நோயை ஏற்படுத்தும் காரணிகள் அகன்று இருதயநோய் ஏற்படாது தடுக்க முடியும்
இரும்புச்சத்து அதிகம் நிறைந்துள்ள சைவ உணவுகள்!!!
உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமெனில் ஊட்டச்சத்துள்ள உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியம். அதிலும் வைட்டமின்கள், புரோட்டீன்கள், கனிமச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை அன்றாடம் சேர்க்க வேண்டும். பொதுவாக இத்தகைய சத்துக்கள் அசைவ உணவுகளில் அதிகம் கிடைக்கும். ஆனால் இந்த உலகில் சைவ உணவை மட்டும் சாப்பிடுவர்கள் இருக்கின்றனர். அத்தகையவர்களுக்கு அசைவ உணவிற்கு சரிசமமான இரும்புச்சத்து அதிகம் நிறைந்த உணவுகள் பல இருக்கின்றன. பொதுவாக இரும்புச்சத்து உடலுக்கு மிகவும் இன்றியமையாத சத்துக்களில் ஒன்றாகும். இந்த சத்து இருந்தால் தான், உடலில் இரத்த ஓட்டமானது சீராக இருக்கும். இல்லையெனில் உடலில் இரத்தத்தின் அளவானது குறைந்து, இரத்த சோகை, ஞாபக மறதி போன்றவை ஏற்படும். அதிலும் இரும்புச்சத்துள்ள உணவுகளை சாப்பிடும் போது, அத்துடன் வைட்டமின் சி நிறைந்த உணவுகளையும் சாப்பிட்டால், உடலில் இரும்புச்சத்தானது எளிதில் உறிஞ்சப்படும். சரி, இப்போது அத்தகைய இரும்புச்சத்து அதிகம் நிறைந்திருக்கும் உணவுகள் என்னவென்று பட்டியலிட்டுள்ளோம். அதைப் படித்து தெரிந்து கொண்டு, உணவில் சேர்த்து கொள்ளுங்கள்.பசலைக் கீரை பொதுவாகவே கீரைகளில் இரும்புச்சத்தானது அதிகம் இருக்கும். அதிலும் பசலைக் கீரையில் உடலுக்கு தேவையான இரும்புச்சத்து மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகம் நிறைந்துள்ளன.உருளைக்கிழங்கு அனைவருக்கும் பிடித்த உருளைக்கிழங்கு சுவையில் மட்டும் சிறந்ததல்ல. உடலுக்கு இரும்புச்சத்தை கொடுப்பதிலும் சிறந்ததாக உள்ளது.உலர் தக்காளி சாலட், பாஸ்தா மற்றும் ஆம்லெட்டில் பயன்படும் உலர் தக்காளியிலும் இரும்புச்சத்தானது அதிகம் இருக்கிறது. அதிலும் ஒரு கப் உலர் தக்காளியில் 20% இரும்புச்சத்து நிறைந்துள்ளது.கேல் மாட்டிறைச்சியில் எப்படி அதிக அளவில் இரும்புச்சத்து உள்ளதோ, அதேப் போல் கேல் (Kale) காய்கறியிலும், அதற்கு சமமான அளவில் இரும்புச்சத்து உள்ளது.பருப்பு வகைகள் சைவ உணவாளிகளுக்கு ஒரு வரப்பிரசாதம் என்றால் அது பருப்பு வகைகள் தான். எனவே பருப்பு வகைகளை தவறாமல் சாப்பிடும் பழக்கத்தைக் கொள்ள வேண்டும். இதனால் உடலில் இரும்புச்சத்தானது அதிகம் கிடைக்கும்.உலர் ஆப்ரிக்காட் உலர் ஆப்ரிக்காட்டில், உடலுக்கு ஆரோக்கியத்தைத் தரும் இரும்புச்சத்து அதிகம் நிறைந்துள்ளது.சுண்டல் அனைவருக்குமே சுண்டலை தாளித்து சாப்பிடுவது என்றால் மிகவும் பிடிக்கும். பருப்பு வகைகளிலேயே சுண்டலில் தான் அதிக அளவில் இரும்புச்சத்தானது அடங்கியுள்ளது.டோஃபு டயட்டில் இருப்பவர்களானால், கால்சியம், இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் அதிகம் இருக்கும் டோஃபுவை சேர்த்துக் கொள்வது சிறந்ததாக இருக்கும்.பூசணிக்காய் விதை இரத்த சோகையை தவிர்க்கவும், உடலில் இரும்புச்சத்தை சீராக வைக்கவும், பூசணிக்காய் விதைகளை ரோஸ்ட் செய்து சாப்பிட வேண்டும்.பேரிச்சம் பழம் தினசரி மூன்று பேரிச்சம் பழம் சாப்பிட்டு வந்தால், உடலில் இரத்த ஓட்டத்தை சீராக வைத்துக் கொள்ளலாம்.
இயற்கை பானம் அருந்துங்க, எடை குறையும்!!!
எடை குறைய உடலை வருத்தி நிறைய உடற்பயிற்சி செய்வோம். ஆனா அப்படி கஷ்டபடாம ஈஸியா குறைந்த கலோரி மற்றும் நிறைய புரதச்சத்து இருக்கிற காய்கறி மற்றும் பழங்களை சாப்பிட்டு வந்தாலே எடை குறைவதோடு உடல் ஆரோக்கியமா கவும் இருக்கும். ஏனென்றால் டயட்-ல இருக்கும் போது நிறைய காய்கறி மற்றும் பழங்களை சாப்பிட்டால் எடை குறைவதோடு, புற்றுநோய், சிறுநீரகக்கல், இதய நோய், நீரிழிவு போன்ற நோய்கள் வராமல் உடல் ஆரோக்கியமாகவும் இருக்கும். சரி என்னென்ன காய்கறி, பழங்கள் சாப்பிட்டா எடை குறையும்-னு பார்க்கலாமா!!!சுரைக்காய் ஜூஸ் : இதில் இரும்பு மற்றம் நீர்ச்சத்து அதிகம் உள்ளது. இதை தினமும் காலையில் ஒரு டம்ளர் குடித்தால் எடை குறைவதோடு, உடலுக்கு பளபளப்பைத் தரும்.தர்பூசணி ஜூஸ் : இதில் அதிக வைட்டமின்கள் உள்ளன. இது குடிப்பதால் உடல் எடை குறைவது மட்டுமல்லாமல், இதய நோய்க்கும் மிகச் சிறந்தது.ஆரஞ்சு ஜூஸ் : இதில் அதிக புரதச்சத்தும், குறைந்த கலோரியும் இருப்பதால் உடல் எடை குறைவதற்கு மிகச் சிறந்த பானம். இதிலுள்ள வைட்டமின் சி உடலுக்கு நிறமும் தருகிறது. மேலும் இதைக் குடிப்பதால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புக்கள் கரைந்து உடல் பிட் ஆகும்.கேரட் ஜூஸ் : இந்த ஜூஸ் குடிப்பதால் கண்களுக்கு நல்லது. மேலும் இதை தினமும் குடித்தால் உடலுக்கு நிறத்தை தருவதோடு, உடல் எடையும் குறையும்.திராட்சை : இது ஒரு சுவையான பழச்சாறு. இதில் ஆன்டிஆக்ஸிடன்ட் இருப்பதால் உடலில் உள்ள கொழுப்புக்கள் எளிதாக குறைந்து உடல் எடை குறைந்துவிடும். மேலும் இது சிறுநீரகக் கோளாறு, இதய நோய், ஆஸ்துமா, செரிமானக் கோளாறு போன்ற பிரச்சனைகளை போக்குகிறது.ஆகவே கஷ்டப்பட்டு எடை குறைக்காமல், ஈஸியாக இந்த இயற்கை பானங்களை அருந்தி எடையை குறையுங்கள்!!!
வாய் துர் நாற்றம்....
வாய் துர் நாற்றம், வாயில் குடியிருக்கும் (Anaerobic gram negative bacteria) நுண் கிருமிகள் பிராணவாயு இல்லாத சூழ் நிலையிலும் பெருகும். நுண்கிருமிகள் வெளியேற்றும் கழிவுகளால் துர் நாற்றம் உண்டாகிறது.சாதாரணமாக வாயிலுள்ள நுண்கிருமிகளால் வெளியேறும் கழிவுகளில் ஆவியாகக் கூடிய கந்தக (Sulfur) கூட்டுப் பொருட்கள் உள்ளன. அழுகிய முட்டையிலிருந்து வெளியேறும் Hydrogen sulfide, குப்பைக் கிடன்கிலிருந்து வரும் Methyl mercaptan, கடல் புறங்களிலிருந்து வெளியாகும் Dimethyl sulfide ஆகிய கழிவுகள் வாயிலுள்ள நுண் கிருமிகளிலிருந்து வெளியேறுகின்றன வாய் துர் நாற்றம். இவைகள் Volatile Sulfur Compound (VSC) என்றழைக்கபடுகின்றன.வாயிலிருக்கும் நுண்கிருமிகளால் வெளியேறும் இன்னும் வேறு பல கழிவுகளும் துர் நாற்றத்தை ஏற்படுத்துகின்றன.Cadaverine – இறந்த உடலிலிருந்து வெளியேறும் நாற்றம்,Putrescine – அழுகும் இறைச்சியிலிருந்து ஏற்படும் நாற்றம்.Skatole – மனிதக் கழிவிலிருந்து ஏற்படும் நாற்றம்.Isovaleric acid – வியர்க்கும் பாதத்திலிருந்து ஏற்படும்நாற்றம்.கிருமிகள் பெருகுவதற்கு தேவையான உணவு நாம் உண்ணும் மீன், இறைச்சி, முட்டை, பால் போன்ற புரத உணவிலிருந்தும், உமிழ் நீர், வாயின் உட்புறத்தில் கழியும் திசுக்களிலிருந்தும் கிடைக்கிறது. வாயை, சாப்பிட்ட ஒவ்வொரு முறையும் நன்றாக கொப்பளிக்காததால் உணவுப் பொருட்கள் வெண்மையான காரையாக பற்களின் இடுக்குகளில், பற்களின் மேல், ஈறுகளுக்கு உட்புறம் மற்றும் நாக்கின் பிற்பகுதியில் மாவு போன்ற வெண் படலமாக படிந்து விடுகிறது. வெண்படிமம் 0.1 – 0.2 மி.மீ அளவில் இருந்தாலும் கிருமிகளுக்கு ஆக்ஸிஜன் கிடைக்காமல் பெருகி கழிவுகளை வெளியேற்றுகின்றன.பற்கள் கட்டியிருந்தால், அதற்கும், வாய்க்கு இடையிலும் உணவுப் பொருட்கள் தங்கி கிருமிகள் வளர ஏதுவாகிறது. வாயிலும், நாக்கிலும், பற்களின் இடுக்குகளிலும் உள்ள இடத்தில் குடியேறி கழிவுகளை வெளியேற்றும் கிருமிகளுக்கும், பிற கிருமிகளுக்கும் நிரந்தர போட்டி நடந்து கொண்டேயிருக்கிறது. இக்கிருமிகளும், அதன் கழிவுகளும் எல்லோரின் வாயிலும் இருக்கின்றன. வாயையும், பற்களையும் சுத்தமாக வைத்திருப்பவர்கள் பலருக்கு நாற்றம் இல்லாமல் இருக்கிறது. வாயையும், பற்களையும் சரியாக பராமரிக்காதவர்களுக்கு நாற்றம் மிகுந்து இருக்கிறது.அடுத்து, வாயின் உட்பகுதியில் ஈறு நோய் (Gum disease – Chronic Periodontitis) பாதிப்புள்ளவர்களுக்கும் வாயில் துர் நாற்றம் ஏற்படலாம். குறிப்பாக நாக்கின் பின் புறத்திற்கு அருகிலுள்ள பற்கள் மற்றும் ஈற்றின் இடைவெளிகளில் உணவுப் பொருட்களின் படிமம் தேங்குகிறது. இந்த இடங்களிலும் நுண் கிருமிகள் தங்கி பற்களைச் சுற்றியுள்ள எலும்புப் பகுதியை அரித்து, பற்களில் குழியை (Periodontal pockets) ஏற்படுத்துகிறது. இந்த குழிகளிலும் மேலும் உணவுப் பொருட்களும், கிருமிகளும் தங்கி, கழிவுப் பொருட்களை உற்பத்தி செய்து வாய் துர் நாற்றத்தை அதிகரிக்கிறது.வாய் துர் நாற்றத்திற்கு எவ்வாறு சிகிச்சை அளிப்பது?1. நாக்கை சுத்தம் செய்வது மிகவும் முதன்மையானதும் அவசியமானதுமாகும். நாக்கின் முன் பாதி சாப்பிடும் போதும், பேசும் போதும் அடிக்கடி வாயின் மேல்புறத்தில் (Hard palate) உராய்வதால் இயற்கையாகவே சுத்தமாகிறது. ஆனால் நாக்கின் பின் பகுதி மிருதுவான Soft palate ல் உராய்வதால் போதுமான அளவில் சுத்தமாவதில்லை. வாயில் உற்பத்தியாகும் கிருமிகளையும், கந்தக காம்பௌன்ட் கழிவுகளையும் நீக்கக் கூடிய குளோரின் டை ஆக்ஸைடு அல்லது Cetylpyridinium குளோரைடு கலந்த பற்பசையைப் பயன்படுத்த வேண்டும். Tooth brush மற்றும் பிளாஸ்டிக் ஸ்பூன் அல்லது Tooth scaraper உபயோகித்து நாக்கின் பின்பகுதியையும், பற்களையும் சுத்தம் செய்ய வேண்டும்.2. முறையான இடைவெளியில் பல் மருத்துவரிடம் ஈறு பரிசோதனையும், பற்களை சுத்தம் செய்வதும் மிக அவசியம். பற்களின் நிலைமையும், ஈறு நன்றாக வீக்கமின்றி இருக்கிறதா என்பதையும் பல் மருத்துவரிடம் முறையாக பரிசோதித்துக் கொள்ள வேண்டும். பற்களில் காரை படிந்தும், எலும்பு தேய்ந்து பற்குழிகள் ஏற்பட்டிருந்தாலும் தகுந்த சிகிட்சை அளித்து பற்களைக் காப்பாற்றி, துர் நாற்றத்தையும் தவிர்க்க உதவுவார்.3. புரதச்சத்துள்ள ஆகாரத்தை குறைத்தும், அதே நேரத்தில் ஆரோக்கியத்திற்கு தேவையான சத்துள்ள உணவைச் சாப்பிட்டு வந்தால், வாயில் நுண் கிருமிகள் வளர வாய்ப்பிருக்காது. இத்துடன் புரதச் சத்துள்ள உணவைச் சாப்பிட்ட போது முறையாக நாக்கின் பின் பகுதியை சுரண்டி வழித்தும், பற்களுக்கு இடையில் சிக்கியுள்ள புரத உணவுத் துகள்களை Floss உபயோகித்து நீக்கியும், வாய் கொப்பளிக்கும் கிருமி நாசினி மருந்து (Chlorhexidine, Povidone 2% Gargle) திரவத்தால் வாய் கொப்பளித்தும் வாய் துர் நாற்றத்தைப் போக்கலாம்4. வாயில் எப்பொழுதும் ஈரப்பதம் இருக்குமாறும் பார்த்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக இரவில் தூங்கும் போது உமிழ் நீர் சுரப்பது குறைந்து, தூங்கி எழும் போது காலையிலும், நீண்ட நேரம் பேசினாலும், பேசிய பின்னும் ஈரப்பதமின்றி வாய் உலர்ந்து விடும். வாயில் ஈரப்பதம் இல்லையென்றால் துர் நாற்றம் வீசும். இதை தவிர்க்க தினமும் நிறைய நீர் குடிக்க வேண்டும். இது உமிழ் நீர் சுரக்க உதவி, வாய் ஈரப்பதத்துடன் இருக்கும். அடிக்கடி நல்ல நீர் கொண்டு வாய் கொப்பளிப்பதால் ஈரப்பதத்துடன், வாயிலுள்ள கிருமிகளையும் அதன் கழிவுகளையும் அகற்றலாம். சர்க்கரையில்லாத மிட்டாய்கள் சுவைப்பதாலும் வாயிலுள்ள ஈரப்பதத்தை அதிகமாக்கி துர் நாற்றத்தை போக்கலாம்.5. கிருமி நாசினியாக வாய் கொப்பளிக்கும் மருந்தையும் (Mouth wash) பயன்படுத்த வேண்டும். வாய் கொப்பளிக்கும் மருந்து 1. நுண் கிருமிகளை அழிக்கும் தன்மையது, 2. வாய் நாற்றம் தரும் கந்தக கூட்டுப் பொருட்களை சமன் செய்வது என இரண்டு வகைப்படும். Listerine, Cetylpyridinium Chloride mouth wash ஆகிய இரண்டும் நுண் கிருமிகளை அழிக்கும் தன்மையுடையது. Zinc ions உள்ள Mouth wash வாயில் நுண் கிருமிகளால் உற்பத்தியாகும் கந்தகம் கலந்த கழிவுப் பொருட்களை சமன் படுத்தும் தன்மையுடையது. இரண்டு தன்மையும் உடைய Chlorine dioxide அல்லது Sodium chlorite கலந்த Mouth wash ம் உபயோகிக்கலாம்.சில பற்கள் அல்லது முழுவதும் (Full denture) பல் கட்டியிருந்தால், சாப்பிட்ட பின் ஒவ்வொரு முறையும் அவைகளையும் கழற்றி நன்றாக கழுவிய பின் வாயைக் கொப்பளிக்க வேண்டும். இரவில் தூங்கும் போது பல் செட்டை கழற்றி, பற்பசை கொண்டு பிரஷ்சால் செட்டின் உட்புறமும் வெளியிலும் தேய்த்து தனியாக ஒரு கப்பில் வைத்து விட வேண்டும். பல் செட்டில் இயற்கையாகவே நுண் துளைகள் இருக்கும். எனவே துளைகளுக்குள் சென்று சுத்தம் செய்யக் கூடிய கிருமி நாசினி யை உபயோகித்து இரண்டு வேளையும் பல் செட்டை சுத்தம் செய்ய வேண்டும். மேற் கூறிய எல்லா முறைகளையும் பின் பற்றினால்தான் வாய் துர் நாற்றத்தை முழுமையாக நீக்கலாம்.
பல்வேறு நோய்களுக்கு மருந்தாகும் முருங்கை ..
கீரை வகைகளில் இரும்புச் சத்து கணிசமாக உள்ளது. முருங்கை மரம் முழுவதும் மனிதனுக்கு பயனளிக்கிறது. முருங்கைப் பூ மருத்துவ குணம் கொண்டது. முருங்கைகீரையை வேகவைத்து அதன் சாற்றை குடித்து வந்தால் உடல் சூடு தணியும். வெப்பத்தின் காரணமாக உடலில் ஏற்படும் மந்தம், உட்சூடு, கண்நோய் இவற்றை நீக்கும் குணம் படைத்தது முருங்கைக் கீரை.இது ஒரு சத்துள்ள காய். உடலுக்கு நல்ல வலிமையைக் கொடுக்க வல்லது. இதை உண்டால் சிறுநீரும் தாதுவும் பெருகும். கோழையை அகற்றும். முருங்கைக்காய் பிஞ்சு ஒரு பத்திய உணவாகும். இதை நெய் சேர்த்தோ அல்லது புளி சேர்த்தோ சமைப்பது நலம். முருங்கைப் பட்டையை நீர்விட்டு அரைத்து வீக்கங்களுக்கும் வாயு தங்கிய இடங்களுக்கும் போடலாம்.முருங்கை இலையை உருவி காம்புகளை நறுக்கி விட்டு பின் மிளகு ரசம் வைத்து சாப்பாட்டுடன் சேர்த்து உண்டு வந்தால் கை, கால் உடம்பின் வலிகள் யாவும் நீங்கும். அதே வேளையில் சிறுநீரைப் பெருக்கும். முருங்கை இலைகளில் இரும்பு, தாமிரம், சுண்ணாம்புச் சத்து ஆகியவை இருக்கின்றன. இந்த இலைகளை நெய்யில் வதக்கி சாப்பிட்டால் ரத்த சோகை உள்ளவர்களின் உடம்பில் நல்ல ரத்தம் ஊறும்.பல் கெட்டிப் படும். தோல் வியாதிகள் நீங்கும். ஷமுருங்கைப் பட்டை, உலோகச் சத்துக்கள் நிறைந்தது. உணவில் கலந்த விஷத்துக்கும் நரம்புக் கோளாறுக்கும் இது நல்ல மருந்து. கடுமையான ரத்த சீதபேதி, வயிற்றுப் புண், தலைவலி, வாய்ப்புண் ஆகிய வியாதிகளுக்கெல்லாம் முருங்கைக் காய் கை கண்ட மருந்து. முருங்கைக் காயை வேக வைத்து கொஞ்சம் உப்பு சேர்த்துச் சாப்பிடலாம்.முருங்கைக் காய் சாம்பார் எல்லோருக்கும் பிடித்தமானதே. இந்த சாம்பார் சுவையானதாக மட்டும் இருந்து விடாமல் மலச்சிக்கல், வயிற்றுப் புண், கண் நோய் ஆகியவற்றுக்கு மருந்தாகவும் பயன்படுகிறது. வாரத்தில் ஒருமுறையோ இரண்டு முறையோ முருங்கை காயை உணவாக உபயோகித்தால், ரத்தமும் சிறுநீரும் சுத்தி அடைகின்றன. வாய்ப்புண் வராதபடி பாதுகாப்பு உண்டாகிறது.முருங்கைக்காய் சூப் காய்ச்சல், மூட்டு வலியையும் போக்க வல்லது. முருங்கை விதையைக் கூட்டு செய்து சாப்பிடலாம். இது மூளைக்கு நல்ல பலத்தை தரும். தாது விருத்தியை உண்டு பண்ணும். ஆனால் மலபந்தத்தைச் செய்வதில் முருங்கை விதைக்கு முதலிடம் தரலாம். முருங்கை மரத்திலிருந்து கிடைக்கும் பிசின் நல்ல டானிக்குகள் செய்ய பயன்படுகிறது.பச்சைப் பிசினை காதில் ஒரு சொட்டு விட்டால் போதும், காது வலி உடனே நின்று விடும். இந்த மரத்தின் வேர் மற்றும் பிசின் சம்பந்தப்பட்ட டானிக்குகளை அல்லது லேகியங்களை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் நரை சீக்கிரம் வராமல் தள்ளிப்போகும். மேலும் இந்தப் பூவுக்கு தாது விருத்தி செய்யும் குணம் உண்டு.முருங்கைப் பூ உஷ்ணத்தை உண்டு பண்ணக் கூடியதுதான் என்றாலும் அதனால் கெடுதல்கள் எதுவும் இல்லை. முருங்கைப் பிசினில் அரை லிட்டர் நீர் விட்டு புதுப் பாண்டத்தில் வைத்திருந்து காலையில் இரண்டு அவுன்ஸ் நீருடன் கற்கண்டு சேர்த்துச் சாப்பிட்டால் தாது கெட்டிப்படும். முருங்கை இலை சாறுடன் பால் கலந்து குழந்தைகளுக்கு தந்தால், இரத்த சுத்தியும், எலும்புகளையும் வலுப்படுத்தும்.இதில் கர்ப்பிணிகளுக்கு தேவையான கால்சியம், அயன், வைட்டமின் உள்ளது. கர்ப்பப்பையின் மந்தத் தன்மையை போக்கி, பிரசவத்தை துரிதப்படுத்தும். இதன் இலையை கொண்டு தயாரிக்கப்படும் பதார்த்தம், தாய்ப்பால் சுரப்பதை அதிகப்படுத்தும். ஆஸ்துமா, மார்சளி, சயம் போன்ற சுவாசக் கோளாறுகளுக்கு முருங்கை இலை சூப் நல்லது.முருங்கை இலைச்சாற்றுடன் எலுமிச்சை சாறு கலந்து தடவ முகப்பருக்கள் மறையும். முருங்கைகாய் இருதயத்தை வலுப்படுத்துவதுடன், இருதய நோய்களை போக்கி இரத்தவிருத்தி தாதுவிருத்தி செய்யும். முருங்கை இலை சாறுடன் தேனும், ஒரு கோப்பை இளநீரும் கலந்து பருக மஞ்சள்காமாலை, குடலில் ஏற்படும் திருகுவலி, வயிற்றுப்போக்கு கட்டுப்படும்.விதையில் இருந்து என்னை தயாரித்து வாயுப்பிடிப்பு, மூட்டுவலிகளில் பயன்படுத்தலாம். முருங்கைவேரில் இருந்து சாறெடுத்து பாலுடன் சேர்த்துப் பருகிவர காசநோய், கீழ்வாயு, முதுகுவலி குணப்படும்.