குடைமிளகாய் & மிளகாய் மருத்துவ குணங்கள்..!
சிறிய இலைகளையுடைய சிறுசெடி வகையைச் சேர்ந்தது மிளகாய்ச் செடி. காயும் பழமும் மிகவும் காரம் உள்ளவை.பச்சையான காய்கள், காய்கறி கடைகளிலும், உலர்ந்த பழம் மளிகைக் கடைகளிலும் கிடைக்கும். உணவில் காரத்துக்காகப் பயன்படுத்துவர். மூலநோய் இருப்பவர்கள் இதைத் தவிர்ப்பது மிகவும் நல்லது.வற்றலே மருத்துவக் குணம் உடையது. பசியைத் தூண்டவும் குடல்வாயுவை அகற்றவும் பயன்படுகிறது. தமிழகம் எங்கும் பயிரிடப்படுகிறது.வேறு பெயர்கள்: மொளகாய், முளகாய்.லத்தின் பெயர்: Capsium Firutesceans, Linn; Solonacea.மருத்துவக் குணங்கள்: மிளகாய் வற்றலை பழகிய மண்சட்டியில் 2 சொட்டு நெய்விட்டுக் கருக்கிய புளியங் கொட்டை அளவு கட்டிக் கற்பூரத்தைப் போட்டு அரை லிட்டர் நீரில் ஒரு கை நெற் பொரியும் சேர்த்துக் காய்ச்சி, இறக்கி வடிகட்டி 100 மில்லியளவு குடித்துவர, வாந்தி- பேதி நிற்கும்.மிளகாய் வற்றல் 200 கிராம், மிளகு 100 கிராம் ஆகியவற்றை ஒன்றிரண்டாக இடித்து 2 லிட்டர் நீரில் போட்டு அரை லிட்டராகச் சுண்டக் காய்ச்சி வடிகட்டி அத்துடன் பால், நல்லெண்ணெய் வகைக்கு அரை லிட்டர் சேர்த்து சிறு தீயில் பதமாகக் காய்ச்சி வடிகட்டி வாரம் ஒருமுறை தலைமுழுகிவர எந்த வகையான தலைவலியும் குணமாகும்.மிளகாயைக் கைப்பிடியளவு எடுத்து அரை லிட்டர் நீரில் போட்டு 200 மில்லியாக வற்றக் காய்ச்சி வடிகட்டி 3 வேளை குடிக்க மார்பு நோய், வயிற்று நோய், செரியாமை, கழிச்சல், காய்ச்சலினால் காணும் வாந்தி நீங்கும்.மிளகாயை அரைத்துத் துணியில் தடவி தோலின் மேல் போட்டு வைக்க, கொப்பளித்து வீக்கம் குறையும். தொண்டைக்கு வெளியில் பூச, தொண்டைக்குள் இருக்கும் கட்டிகள் உடையும்.மிளகாயை பூண்டு மிளகோடு சம அளவாக எடுத்து சேர்த்து அரைத்து எண்ணெயுடன் குழைத்து மேல் பூச்சாக முதுகு, பிடரி முதலிய இடங்களில் உண்டாகும் நாள்பட்ட வலி, வீக்கங்களுக்குப் பூச குணமாகும்.மிளகாய்ப் பொடியுடன் சர்க்கரை, பிசின் தூள் சேர்த்து உருண்டை செய்து வாயில் போட்டு மென்று சாப்பிட, தொண்டைக் கம்மல் குணமாகும்.மிளகாயைக் கைப்பிடியளவு எடுத்து அரை லிட்டர் நீரில் போட்டு 200 மில்லியாக வற்றக்காய்ச்சி வடிகட்டி சிறிது இஞ்சிச் சாறு கலந்து குடிக்க வயிற்று உப்புசம் வயிற்றுவலி நீங்கும்.மிளகாய், பெருங்காயம், கற்பூரம் சம அளவாக எடுத்து எலுமிச்சை பழச்சாறு விட்டு அரைத்து சுண்டைக்காயளவு மாத்திரை செய்து 3 வேளை கொடுக்க ஊழி நோய் குணமாகும்.மிளகாய் செடி சமூலத்தை 200 கிராம் எடுத்து ஒரு லிட்டர் நீரில் போட்டு 200 மில்லியாக வற்றக் காய்ச்சி வடிகட்டி சிறிது இலவங்கப் பட்டைப் பொடியும், சர்க்கரை கலந்து குடிக்கக் கொடுக்க குடிவெறியின் பற்று நீங்கும்.1. நன்கு பழுத்த, காய்ந்த கார மிளகாயில் ஆரஞ்சுப் பழத்தில் உள்ளதைவிட மூன்று மடங்கு அதிகமாக வைட்டமின் சி உள்ளது.2. மிளகாயின் தோல் நரம்புகளிலும், விதைகளிலும் காப்ஸஸின் என்ற ஆக்கக் கூறுப்பொருள் இருக்கிறது. முழு அளவில் செறிவூட்டப்பட்ட இந்தப் பொருளிலிருந்தே மிளகாய் மூலம் நமக்கு வெப்பம் கிடைக்கிறது.3. காப்ஸஸின், நரம்பு வலிகளையும், நோய்களையும், இடுப்பிலும், உடம்பிலும் பயத்தம் பருப்பு அளவில் வரும் வேர்க்குரு போன்றவைகலை குணப்படுத்தும் நவீனக் களிம்புகளில் கார மிளகாய் முக்கிய மூலப் பொருளாகும்.4. மிளகாய் உடலுக்கு வெப்பத்தைத் தருகிறது. இரத்த ஓட்டம் தங்கு தடையின்றி இருக்கும்படி பார்த்துக் கொள்கிறது.5. முகத்தில் பருக்கள் அதிகம் உள்ளவர்கள் மிளகாய் அதிகம் சேர்த்தால் முகம் சிவப்பாகிவிடும். மிளகாய் அளவுக்கு அதிகமானால் குடலுறுப்புகள் கெடவும் வாய்ப்புண்டு.6. ஆந்திரக்காராகள் போல் கார மிளகாய் அதிகம் சேர்ப்பவர்கள், தினமும் பாசிப்பருப்புடன் முள்ளங்கி, செளசெள, பூசணி, வெள்ளரிக்காய் இவற்றில் எதையாவது ஒன்றை பச்சடியாகச் செய்து சாப்பிட்டால் காரமிளகாய் உதவியுடன் காய்ச்சல் இன்றி நலமாக வாழலாம்.குடைமிளகாய்:குடைமிளகாய் உடலுக்கு மிகவும் நல்லது. ஆனால் அதை சமைக்கும் போது ஏற்ப்படும் வாசனை ஒரு சிலருக்கு பிடிப்பதில்லை. அதனால் வாங்குவதும் இல்லை.ஆனால் இதில் எவ்வளவு சத்துக்கள் இருக்கிரது பாருங்கள்.....1. தக்காளி, குடைமிளகாய், எலுமிச்சை ஆகியவற்றில் வைட்டமின் 'சி' (C) சத்து அதிகமுள்ளது. இவற்றை சமைக்கும்போது தண்ணீர் அதிகம் சேர்க்கக்கூடாது. அதிகச்சூட்டில் சமைக்கக் கூடாது. செப்புப் பாத்திரத்தில் சமைக்கக்கூடாது.2. உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள் குடமிளகாயை உணவில் சேர்த்து வர நல்ல பலனளிக்கும். குடமிளகாயில் கொழுப்புச்சத்து,கொலஸ்ட்ரால்,சோடியம் ஆகியன குறைவாகவே இருப்பதால் உடல் எடையைக் குறைக்க உதவும்.3. குடமிளகாயில் உள்ள விட்டமின் ஏ,சி,ஈ,பி6 போன்ற சத்துக்கள் ஆரோக்கியமான தேகத்தைக் கொடுக்கும்.4. கண்பார்வையைச் சிறப்பாக்கவும் இளமையிலேயே கண் தொடர்பான பிரச்சினைகளை அண்ட விடாமலும் குடமிளகாய் காக்கிறது என்பதைச் சமீபத்திய மருத்துவ ஆராய்ச்சி தெரிவிக்கிறது.5. குடமிளகாயைச் சமைக்கும் முன் நன்கு அலம்ப வேண்டும்.6. குடமிளகாயைத் துச்சமாக எண்ணாமல் அதன் பலன்களைக் கருத்தில் கொண்டு பயன்படுத்துவது ஆரோக்கியமான வாழ்விற்கு நல்லது.7. ஊசி மிளகாய், குடைமிளகாய், மிளகு ஆகியவை உடலில் சர்க்கரை சத்தை அழிப்பதில் பெரிதும் உதவுகின்றன. இதே உத்தியைப் பயன்படுத்தி உடலின் பருமனைக் குறைக்க முடியும்.8. காய்கறி சாலட் அதிகம் உண்பது நலம். குடைமிளகாய், கோஸ், வெங்காயத்தாள், வெள்ளரிக்காய் ஆகியவற்றை மெல்லியதாக வட்ட வடிவில் நறுக்கவும். சுவைக்கு உப்பு, மிளகு எலுமிச்சை பிழியவும். அருமையான சாலட் தயார்.9. குடைமிளகாயில் நிறைந்துள்ள "வைட்டமின் சி' சத்து, கூந்தலின் ஆரோக்கியத்தை பராமரித்து, கூந்தலின் நுனியில் பிளவு ஏற்படுவதை தடுக்கிறது.10. வைட்டமின் சி 137 மி.கி., வைட்டமின் ஏ 427 மைக்ரோ கிராம் மற்றும் கால்ஷியம், பாஸ்பரஸ், இரும்புச் சத்து ஆகிய தாதுப் பொருள்களும் உள்ளன. சாதாரண மிளகாயைவிட இதில் சதைப் பற்று அதிகம். மிதமாகப் பயன்படுத்தினால் அஜீரணத்தைப் போக்க உதவும்.
ஆட்டிசம் குறைபாடுள்ள குழந்தைகளை நல்லா கவனிங்களேன்!
ஆட்டிசம் என்பது, குழந்தையின் மூளையிலுள்ள நரம்பு மண்டலத்தில் ஏற்படும் வளர்ச்சிக் குறைபாடு. ஆட்டிசம் குறைபாடு பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக ஆண்டுதோறும் ஏப்ரல் 2ம் நாள் உலக ஆட்டிசம் விழிப்புணர்வு நாள் கடைபிடிக்கப்படுகிறது. இது ஒரு குறைபாடுதான் பெற்றோர்களின் சரியான கவனிப்பின் மூலம் அவர்களை திறமைசாலிகளாக மாற்றமுடியும் என்கின்றனர் நிபுணர்கள். தற்போது உலகம் முழுவதும் வெகு வேகமாக அதிகரித்து வரும் குறைபாடுகளில் ஆட்டிசம் மிக முக்கியமானது. அமெரிக்காவில் 150 பேரில் ஒருவருக்கு இந்த குறைபாடு உள்ளது என ஒரு ஆய்வு கூறுகிறது.. இந்தியாவில் 20 லட்சம் பேர் ஆட்டிசம் குறைபாடு உள்ளவர்களாக இருக்கின்றனர். உலகளவில் ஆட்டிசம் குறைபாடால் பாதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரிக்கிறது. சிறந்த பயிற்சியும் கவனமும் எந்தக் காரணத்தினால் இந்த ஆட்டிசக் குறைபாடு ஏற்படுகிறது என்பதே கண்டறியப்படாமல் இருக்கும் நிலையில் பாதிக்கப்பட்ட குழந்தைகள் பல குறைகளுடன் இருந்தாலும் ஏதோ ஒரு அதீத திறனுடன் இருப்பார்கள் என்பது மட்டும் தெரிகிறது. அந்தத் திறனை வெளிக் கொணர்வது சிறந்த பயிற்சியின் மூலமும் பெற்றோர்களின் கவனத்திலுமே உள்ளது என்றும் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். திறமைகளை கண்டறியலாம் பொதுவாக ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் கட்டுப்பாடின்றி காணப்படுவர். அனைவரிடமும் சகஜமாக பழகாமல் ஓரிடத்தில் அமராமல் சத்தமிட்டுக் கொண்டே இருப்பார்கள். இந்த செயல்பாடுகள் ஒவ்வொரு குழந்தைக்கும் மாறுபடும். அவர்களின் செயல்பாடுகளுக்கு ஏற்ற பயிற்சிகளை கொடுக்கும்போது அவர்களிடம் பெரும் மாற்றங்களை காண முடிகிறது என்கின்றனர் இவர்களுக்கு பயிற்சி அளிப்பவர்கள். அப்படி பயிற்சியளித்தால் அவர்களிடம் ஒளிந்திருக்கும் அதீத திறன்களைக் கண்டறிய முடிகிறது என்கின்றனர் பயிற்சியாளர்கள். பெற்றோர்களின் பங்கு ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுடன் அதிக நேரத்தை செலவிடுவதன் மூலமே அவர்களிடம் ஒளிந்திருக்கும் திறனைக் கண்டுகொள்ள முடியும் என்கின்றனர் இந்தக் குழந்தைகளின் பெற்றோர்கள். ஆட்டிசம் பாதிக்கப்பட்ட குழந்தைகள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு திறனுடன் காணப்படுகிறார்கள். பேசும் பயிற்சி, பழகும் பயிற்சி என பல்வேறு பயிற்சிகள் மூலம் இவர்களின் குறைகளை ஓரளவு களைய முடியும். என்ன அறிகுறிகள்? பிறந்த குழந்தைகளுக்கு ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு வளர்ச்சி இருக்கும் தாயின் முகம் பார்த்து சிரிப்பது, பேசுவது என குறிப்பிட்ட மாதங்களில் இந்த வளர்ச்சி தானாக இருக்கவேண்டும். இதையும் மீறி சில குழந்தைகள் பேசத் தெரியாமல் இருப்பார்கள். தவிர ஆறு மாதங்களாகியும் தாய் முகம் பார்த்து சிரிக்காமல் குழந்தை இருத்தல், தாயின் கண்களை நேருக்கு நேர் பார்க்காமல் இருத்தல், 12 மாதங்களான பின்பும் மழலைச் சப்தங்கள் செய்யாமலிருந்தல், ஒரே இடத்தில் அமர்ந்திருத்தல் 18 மாதங்களில் பேசினாலும் ஒரே சப்தத்தையோ, சொல்லையோ திரும்ப திரும்பச் சொல்லுதல் இதன் ஆரம்ப அறிகுறிகளாகும். விளையாடுவதில் சிக்கல் 18 - 24 மாதங்களில் மற்ற குழந்தைகளோடு சேர்ந்து விளையாடாமல், தனியாகவே இருத்தல், கைகளை உதறிக் கொண்டே இருத்தல், ஒரு பொருளையோ, நபரையோ சுட்டிக்காட்ட இயலாமை, கதை கேட்பதில் விருப்பமின்மை தூக்கமின்மை, தூங்கும் நேரம் குறைவு, கீழே விழுந்து காயம் ஏற்பட்டாலும் வலியை உணராதிருத்தல் போன்றவையும் அறிகுறிகளாகும். குழந்தை பிறந்த 24 மாதங்களில் பரிசோதனை செய்தால், குழந்தைக்கு ஆட்டிசம் உண்டா, இல்லையா என்பதை அறியலாம். ஆரம்பத்திலேயே கண்டறிந்துவிட்டால் அவர்களுக்கான பயிற்சியை எளிதில் தொடங்கிவிடலாம். 2 வயதுக்குள் அடையாளம் கண்டுகொண்டால் குணப்படுத்துவது எளிது என்றும் கூறுகின்றனர் நிபுணர்கள். ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட இளைஞர்களுக்கும் பயிற்சி அளித்து, சரி செய்ய முடியும். அவர்களது தனித்திறமைகளை கண்டறிந்து, சுயதொழில் கற்றுத்தரலாம். ஆட்டிசம் என்பது நோய் அல்ல. அது ஒரு வகை மனநிலை என்பதை புரிந்துகொள்ள வேண்டும்,'' என்கின்றனர் நிபுணர்கள். இந்தியாவில் 33 ஆண்டுகளில் 40 லட்சம் பேருக்கு, இக்குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் இக்குழந்தைகள் அதிகரித்து வருகின்றனர். இது மூளை வளர்ச்சி, மனவளர்ச்சி குறைபாடில்லை என்பதை பெற்றோர், சமுதாயம் புரிந்து கொள்ள வேண்டும்.
இருதய நோய் பற்றிய தகவல்கள் :-
இன்று உலகளாவிய ரீதியில் மரணங்களை ஏற்படுத்தும் முதன்மைக் காரணியாக இருதய நோய் திகழ்கிறது. ஆண்டுதோறும் இந்நோயால் 17.2 மில்லியன் மக்கள் மரணமடைகின்றனர்.ஒரு காலத்தில் பணக்காரர்களின் நோய் எனக் கருதப்பட்ட இந்நோய் இன்று வறியவர்களையும் பாதித்துள்ளது. முன்பு முதியோரையே தாக்கிய இந்நோய் இன்று சிறுவர்களையும், இளம் வயதினரையும் பாதித்துள்ளது.
உலகளாவிய ரீதியில் ஏற்படும் மர ணங்கள் 75 சதவீதம் இருதய நோயால் ஏற்படுகிறது. ஒவ்வொரு வினாடியும் ஒன்றுக்கு மேற்பட்டோர் இந்நோயால் மரணமடைகின்றனர்.
2020 ஆம் ஆண்டளவில் இந்நோய் ஒரு கொள்ளை நோயாகப் பரிமாணமடையும் அபாயம் உள்ளதென மருத்துவ ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளது. நவீனகால வாழ்க்கை முறை, உணவுமுறை, சூழல் மாசு அடைந்தமை, நீண்ட நேரம் கணினி மற்றும் தொலைக்காட்சிப் பெட்டியின் முன் இருத்தல், கையடக்கத் தொலைபேசி பாவனை, போதிய உடற்பயிற்சியின்மை ஓய்வின்மை, மன உளைச்சல் போன்றவையே இதற்குக் காரணமாகும்.
இருதயம் சீராகச் செயலாற்ற பிராண வாயு இரத்தம் மூலம் எடுத்துச் செல்லப்படுகிறது. இருதயத்திற்கு இரத்தத்தை எடுத்துச் செல்லும் முடிவுறு நாடிகளில் (Coronary Arteries) அடைப்பு ஏற்பட்டு இரத்தோட்டம் தடைப்படும்போது போதிய பிராணவாயு இருதயத்தின் தசைகளுக்குக் கிடைக்காதபோது தான் மார்பு வலி (Angina) ஏற்படுகிறது.
இது இருதய இரத்த குழாய்களில் அடைப்பு ஏற்பட்டுள்ளது என்ற எச்சரிக்கையாகும். இக்குழாய்கள் அடைபட்டு இருதயத்திற்கான இரத்தோட்டம் முழுமையாகத் தடைப்படும் போதுதான் மாரடைப்பு (Heart Attack) ஏற்படுகிறது.
பல்வேறு காரணிகளால் மேற்படி முடிவுறுநாடிகளில் கொழுப்பு படிந்து தடித்து விடுவதால் அவற்றின் விட்டம் குறைந்து விடுகிறது. இதனால் அதனூடாகச் செல்லும் இரத்தோட்டம் பாதிக்கப்படுகிறது. போதிய பிராணவாயு கிடைக்காததால் மார்புவலி ஏற்படுகிறது.
சிலவேலைகளில் இக்கொழுப்புப் படிவம் இரத்தக் குழாயிலிருந்து விடுபட்டு இரத்தத்துடன் கலந்து மிக மெல்லிய முடிவுறு நாடிகளுக்குள் புகுந்து அடைப்பை ஏற்படுத்திவிடுகிறது. இதனால் இருதயத்திற்குச் செல்லும் இரத்தோட்டம் பூரணமாகத் தடைப்படுவதால் மாரடைப்பு ஏற்படுகிறது.
மேற்படி இரத்தக் குழாய்களில் கொழுப்பு படிந்து தடிப்பு ஏற்படுதல் தடுக்க முடியாத மற்றும் தடுக்கக் கூடிய இருவகைக் காரணிகளால் நடைபெறுகிறது. முதுமை, ஆண்பால், பரம்பரை, கறுப்பு இனம் போன்றவை தடுக்க முடியாத காரணிகளாகும்.
சீரற்ற வாழ்க்கை முறை, தவறான உணவுப் பழக்க வழக்கம், போதிய ஒட்சிசனெதிரி கள்(Antioxidants) அடங்கிய உணவை உட்கொள்ளாமை, மன உளைச்சல், உடற் பயிற்சியின்மை, உயர் இரத்த அழுத்தம், இரத்தத்தில் உயர்ந்த அளவு கொழுப்பு (Cholesterol) மற்றும் ரைகிளிசெனரட் (Triclycexide)என்ற கொழுப்பு, குறைந்த அளவு நல்ல கொழுப்பு (HDL) , கூடிய அளவு கெட்ட கொழுப்பு (LDL) நீரிழிவு நோய், உடல் பருமன் எரிந்து விழுதல், தனிமை, பகமை, பேராசை, புகைத் தல், அதிக அளவு மதுப்பாவனை, நீண்டகால மருந்து பாவனை போன்றவை தடுக்கக்கூடிய காரணிகளாகும்.
இவற்றில் மிக முக்கியமானது உயர் இரத்த அழுத்தமாகும். தற்போது உலகளாவிய ரீதியில் ஒரு பில்லியனுக்கு மேற்பட்டோரை இந்த உயர் இரத்த அழுத்தம் நோய், பாதித்து ள்ளது. இந்நோய் தங்களிடம் இருப்பது பற்றி தெரியாமல் பெரும்பாலானோர் வாழ்கின்றனர். இதனால்தான் திடீரென எவ்வித அறிகுறிகளுமின்றி மாரடைப்பு ஏற்பட்டுப் பலர் மரண மடையும் பரிதாபகரமான நிலை ஏற்படுகிறது.
மேலும், சிலர் மேற்படி தடுக்கக்கூடிய காரணிகளைக் கிரமமான பரிசோதனைகளை மேற்கொண்டு கட்டுப்பாட்டில் வைத்து தங்களுக்கு இரு தய நோய் ஏற்பட வாய்ப்பு இல்லை என இருக்கும்போது அவர்களுக்கு எவ்வித அறிகுறிகளுமின்றி மாரடைப்பு ஏற்பட்டு மரணமடையும் சந்தர்ப்பம் உண்டு.
மருத்துவர்களால் மேற் கொள்ளப்படும் பிரேதப் பரிசோதனையில் தான் அவர்களின் இருதயத்தில் ஏற்பட்ட ஒருவகை தொற்று நோயால்தான் மரணமடைந்தனர் என்பது தெரியவரும். இதுபோன்று இரத்தத்தில் கோமிசைடின் (Homoecystine) என்ற பொருள் அதிகரிக்கும் போதும் மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பு உண்டு. தினமும் விட்டமின் சி அடங்கிய தோடம்பழச்சாறு அல்லது தேசிக்காய் சாறு பருகி விட்டமின் ஈ 200 iu எடுப்ப தன் மூலம் இது ஏற்படாது தடுக்க முடியும்.
இருதயத்திற்கு இரத்தத்தை விநியோகிக்கும் முடிவுறு நாடிகளில் (Coronary Arteries) ஏற்படும் அடைப்பு காரணமாகவே மாரடைப்பு ஏற்படுகிறது. இந்நாடிகளில் கல்சியம் உப்பு மற்றும் இரத்தக் கொழுப்பு படிப்படியாகப் படிந்து அதன் விட்ட த்தைக் குறைக்கும்.
சிறு நீரகத்தின் (Kidney) மேல் இருக்கும் அட்ரீனல் சுரப்பி (Adrenal Gland) சுரக்கும் அட்ரீனாலின் (Adrenaline) என்ற சுரப்பு இரத்தக் குழாய்களில் படிந்துள்ள படிவத்தை உடைத்து எடுத்து இரத்தத்துடன் கலக்கச் செய்யும். இவ்வாறு இடம்பெயர்ந்த படிவம், இருதயத்திலுள்ள மிகக் குறுகிய முடிவுறு நாடிக்குள் புகும்போது அதை அடைத்து இரத்தோட்டத்தைத் தடுத்து மாரடைப்பு ஏற்பட வழி வகுக்கும்.
மேற்படி சுரப்பு அதிகாலை மூன்று மணியளவில்தான் அதிகமாகக் சுரக்கப்படும். இதனால்தான் அதிகமான மாரடைப்பு அதிகாலையில் ஏற்படுகிறது.
இரத்தோட்டத்தில் இரத்த உறைகட்டிகள் (Blood Clots) தோன்றுவதற்கு உயர் கொலொஸ்ரோல் (Cholesterol) அளவு வழி வகுக்கிறது. இரத்தோட்டத்தில் கலந்து செல்லும் இவ் இரத்த உறை கட்டிகளும் மேல் கூறியவாறு முடிவுறு நாடிகளில் அடைப்பை ஏற்படுத்தி மாரடைப்பை ஏற்படுத்தும்.
மேற்படி முடிவுறு நாடிகளில் ஏற்படும் கொழுப்புக்கட்டி படிமானம் திடீரென ஏற்படுவதில்லை. இது ஒன்பது வயதிலிருந்தே படிப்படியாக ஏற்படுகிறது எனச் சமீபத்திய ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது. எனவே, இளம் வயதிலிருந்தே பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டால் இது ஏற்படாது தடுக்க முடியும்.
அன்ஜைனா எனப்படும் மார்பு வலி ஒரு கிரேக்க மொழிச் சொல்லா கும். ‘உதவி கேட்டு இருதயம் அழுகிறது’ என்பது இதன் பொருளாகும். ஒரு மெல்லிய வலி நெஞ்சின் மத்தி யில் ஏதாவது கடினமான வேலைகள் செய்யும்போது ஏற்படும்.
அளவிற்கு மீறி உணவு உண்டபோதும், இவ்வலி ஏற்படும் உணர்ச்சிவசப்படும்போதும் மன உளைச்சல் அதிகரிக்கும்போதும் பயம், கோபம், ஏமாற்றம் ஏற்படும் போதும் இவ்வலி ஏற்படும். மேற் படி உணர்ச்சி வசப்பட்ட நிலையில் முன் குறிப்பிட்ட அட்ரீனல் சுரப்பி Catecholamine என்ற சுரப்பை அதிகமாக சுரப்பதால் இருதயம் விரை வாகத் துடிப்பதால் மார்பு வலி ஏற்படும். இவ்வாறாக ஏற்படும் மார்பு வலியை அலட்சியம் செய்யாது தகுந்த சிகிச்சை மேற்கொண்டால் மாரடைப்பு ஏற்படாது தடுக்கலாம்.
ஆரோக்கியமான உணவுடன் உடற் பயிற்சி, மற்றும் யோகா போன்றவற்றை இளம் வயதிலிருந்தே மேற் கொண்டால் இருதய நோய் ஏற்படாது தடுக்க முடியும் என மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன.
இதனால் இளம் வயதில் மாரடைப்பு ஏற்படுவது தடுக்கப்படும். கடந்த நான்கு வருடங்களில் இளம் வயதினருக்கு ஏற்படும் இருதய நோய் 25 சதவீதம் அதிகரித்துள்ளது என அறியக்கிடக்கிறது.
மார்பின் மத்தியில் ஏற்பட்ட மெல்லிய வலி தீவிரமடைந்து இடது கைக்கு சில வேலைகளில் வலது கைக்கும், கீழத் தாடைக்கும் பரவுதல், குமட்டல் அல்லது வாந்தி, நெஞ்சில் முட்டு, மூச்சு நின்று விடுதல் அல்லது மெல்லிய மூச்சு, அதிக வியர்வை, பலவீனம், மயக்கம், தலைச்சுற்று, தொண்டைக்குள் அடைப்பு போன்றவை அன்ஜைனாவின் அறிகுறிகளாகும்.
சிலவேளைகளில் வாய்வுக் கோளாறுகளினாலும் மேற்படி அறிகுறிகள் தென்படும். வாய்வுக் கோளாறு என கை மருத்துவம் பார்க்காது உடனடியாக மருத்துவமனைக்குப் போய் பரிசோதனைகளை மேற்கொண்டு அன்ஜைனா ஏற்பட்டுள்ளதா என உறுதி செய்துகொள்ள வேண்டும்.
மேற்படி அறிகுறிகள் தென்பட்டதும் முதல் உதவியாக GTN என்ற நாக்குக் கீழ் வைக்கும் மாத்திரை, ஆஸ்பிரின் எடுத்தால் இரத்தக் குழாயில் ஏற்பட்ட அடைப்பு அகலும். இவை கிடைக்காதபோது கடும் சாயத்துடன் சுடச் சுடப் பாலில்லாத தேனீர் பருக அடைப்பு ஓரளவு அகலும் என சமீபத்தில் ஆய்வில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
மாரடைப்பு ஏற்பட்டதும் பதற்றமடையாது நோயாளியை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்ல வேண்டும். மாரடைப்பு ஏற்பட்ட அடுத்த ஒரு மணித்தியாலத்தை மருத்துவர்கள் தங்கமான நேரம் (Golden Hour) என்பர். இந்த ஒரு மணித்தியாலத்திற்குள் நோயாளிக்கு சிகிச்சை அளித்தால் உயிராபத்து ஏற்படுவதைத் தடுக்க முடியும்.
சில சமயம் தனிமையில் ஒருவர் வெளியூருக்குக் காரோட்டிக்கொண்டிருக்கும் போது திடீரென நெஞ்சுவலி ஏற்படலாம். பக்கத்து மருத்துவமனைக்குப் போக ஒரு மணித்தியாலத்திற்கு மேல் பிடிக்கலாம் என்ற நிலையில் அவர் சில முதலுதவிகளைத் தானே செய்யமுடியும்.
நன்கு உட்கார்ந்துகொண்டு நெற்றியைக் கையால் தாங்கிக்கொண்டு வாந்தி எடுப்பது போல் ஆழமாக சிறிது நேரம் ஒலி எழுப்பிவிட்டு நிற்பாட்டி விட்டுச் சிறிது நேரம் ஆழமாகச் சுவாசம் எடுக்கவேண்டும். இதனால் இருதயம் பிடித்துவிடப்படுவதால் (Massagin) அது மீண்டும் துடிக்கும் சாத்தியம் ஏற்படும்.
மேலும், ஆழ்ந்த சுவாசத்தின்போது அதிகபட்ச பிராணவாயு உட்செல்வதால் இருதயத்திற்கு போதிய பிராணவாயு கிடைத்து மீண்டும் இயங்கும் வாய்ப்பு உண்டு. இதனால் காலம் பிந்தி மருத்துவமனைக்கு அவரை எடுத்துச் சென்றாலும் அவர் உயிர்பிழைக்க முடியும்.
பண்டிகைக் காலங்களில் தான் அதிகமான மாரடைப்பு ஏற்படுவது அவதானிக்கப்பட்டுள்ளது. அக்காலங்களில் அளவுக்கு மீறிய மதுபாவனை, புகைத்தல், கொழுப்பு, உப்பு அதிக மடங்கிய உணவுகளை அளவிற்கு மீறி உட்கொள்ளல், போதிய ஓய்வின்றி இரவு முழுவம் நடனமாடுதல் போன்றவை மாரடைப்பை வரவழைக்கும் எனவே, இருதய நோயாளர்கள் இரவு விருந்துகளுக்குப் போகும்போது மறக்காது GNT மாத்திரையை எடுத்துச் செல்ல வேண்டும்.
உணவுக் கட்டுப்பாடு, கிரமமான உடற் பயிற்சி மற்றும் யோகா, மன உளைச்சலைத் தவிர்த்தல், புகைத்தலை விட்டுவிடல், மிதமான மதுப்பாவனை, அடிக்கடி மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளல் போன்றவை மூலம் அன்ஜைனா ஏற்படாது தடுக்கலாம்.
பாலூட்டும் பெண்களுக்கு இவ் ஆபத்து 19 சதவீதம் குறைவு என்றும், அடிக்கடி உடலுறவில் ஈடுபடும் தம்பதிகளுக்கு, மாரடைப்பு ஏற்படும் அபாயம் குறைவு எனவும் சமீபத்திய மருத்துவ ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளது.
முட்டை மஞ்சள் கரு, ஆட்டிறைச்சி, கொழுப்பு நிறைந்த பெரிய மீன்கள், நெய், பட்டர், கொழுப்பு அடங்கிய பால், வித்துகள், உலர் பழங்கள் போன்றவை இரத்தத்தில் கொலொஸ்ரோலின் அளவை அதிகரிக்கும். எனவே இவற்றைத் தவிர்க்கவேண்டும்.
தானிய உணவு வகைகள் இருதய நோய் மருந்து போல் செயல்பட்டு மாரடைப்பு ஏற்படாது தடுக்கும் வல்லமை கொண்டவை என ஒரு ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தினமும் நார்ச்சத்து (Fibres) அடங்கிய உணவு வகைகளை உண்ண மாரடைப்பு 29 சதவீதம் குறையும் எனக் கூறப்படுகிறது.
தானிய உணவுகளுடன் கிரமமான யோகாவில் ஈடுபட்டால் இருதய ஆரோக்கியம் மேம்படும். இவற்றிலுள்ள நார்ப் பொருட்களும், விட்டமின்களும் ஆரோக்கியத்தைப் பேணும்.
மத்தியத்தரை நாடுகளில் (Mediterranean) உள்ள மக்களுக்கு இருதய நோய் ஏற்படுதல் மிகக் குறைவு. அவர்களின் உணவில் மீன், ஒலிவ் எண்ணெய், வைன் அடங்கியிருப்பதே இதற்குக் காரணமாகும். இருதய நோய் ஏற்படாது தடுக்கும் பல்வேறு ஒட்சிடனெதிரிகள் (antioxidants) இவற்றில் அபரிமிதமாக அடங்கியுள்ளன.
புகைத்தலைத் தவிர்த்து அதிக அளவு மரக்கறிவகைகள், பழங்கள் ஒட்ஸ் பயறு வகைகள், முழுத் தானிய வகைகள், மீன் போன்ற உணவுகளை உட்கொண்டு நடத்தல், துவிச்சக்கர வண்டி பதிதல், யோகா போன்றவற்றில் ஈடுபட்டால் இருதய நோய் ஏற்படாது தடுக்கமுடியும்.
மேல் குறிப்பிட்டவாறு 2020 ஆம் ஆண்டு ஒரு கொள்ளை நோயாக இருதய நோய் பரிமாணமடைவதைத் தடுக்க இப்போதே வாழ்க்கை முறை, உணவு, உடற்பயிற்சியில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
இருதய நோயின் தாற்பரியத்தைக் கவனத்தில் கொண்டு இந்நோய் பற்றிய அறிவையும், விழிப்புணர்வையும் மக்களிடையே ஏற்படுத்தும் பொருட்டு உலக இருதய நோய் தினம் ஆண்டு தோறும் செப்டம்பர் மாதம் கடைசி ஞாயிறு தினத்தில் அனுஷ்டிக்கப்படுகிறது.
விடுதலை நாளான இத்தினத்தில் பெரும்பாலான மக்கள் இத்தின நிகழ்வுகளில் கலந்துகொண்டு பயனடைய முடியும். இவ்வருடம் இத்தினம் செப்டெம்பர் 27ஆம் திகதி அனுஷ்டிக்கப்பட்டது. ‘இதயத்திற்கு இணக்கமான வேலைத்தளம்’ என்பதே இவ்வருட தொனிப்பொருளாகும்.
தொழில் புரிவோர் தங்களின் நேரத்தின் அதிக அளவை வேலைத்தளத்தில் செலவிடுகின்றனர். குடும்பத்தோடு செலவிடும் நேரம் மிகக் குறைவு. வேலைத்தளத்திற்குப் பயணிக்கும்போது ஏற்படும் சனநெரிசல், காலதாமதம், மன உளைச்சலை அதிகரிக்கின்றன.
வேலை செய்யும் இடமும் ஆரோக்கியத்தைப் பாதிக்கும். சிகரட் புகை அடங்கிய சூழல், காற்றோட்டமில்லாத குளிரூட்டியின் (Air Conditioner) கீழ் வேலை செய்தல், காலக்கெடுவுக்குள் வேலையை முடிக்க வேண்டும் என்ற கடினமான உத்தரவு, கொழுப்பு, உப்பு அதிகம் அடங்கிய சிற்றுண்டிகளைக் கொண்ட சிற்றுண்டிச்சாலை போன்றவை மன உளைச்சலை ஏற்படுத்துவதால் இருதய நோய் ஏற்படுகிறது. இவற்றைக் கட்டுப்படுத்தவே தான் இத்தொனிப் பொருள் இந்த வருடம் கொடுக்கப்பட்டது.
நவீன மருத்துவமுறையில் இருதய நோயாளர்கள் பல்வேறு தேவையற்ற பரிசோதனைகளுக்கும், செய்த பரிசோதனைகளைத் திரும்பவும் செய்தல் போன்றவற்றிற்க்கும் உட்படுத்தப்படுவதால் பெரும் பணம் செலவழிக்க நேரிடுகிறது. இதனால் தனியார் மருத்துவமனைகள் பெரும்பணம் சம்பாதிக்கின்றன. இருதய வைத்திய நிபுணர்களும் இலட்சக் கணக்கில் சம்பாதிக்கின்றனர்.
ஆரோக்கியமான உணவை உட்கொண்டு கிரமமான யோகா பயிற்சியில் ஈடுபட்டால் பரம்பரை காரணிகள் உட்பட இருதய நோயை ஏற்படுத்தும் காரணிகள் அகன்று இருதயநோய் ஏற்படாது தடுக்க முடியும்
இரும்புச்சத்து அதிகம் நிறைந்துள்ள சைவ உணவுகள்!!!
உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமெனில் ஊட்டச்சத்துள்ள உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியம். அதிலும் வைட்டமின்கள், புரோட்டீன்கள், கனிமச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை அன்றாடம் சேர்க்க வேண்டும். பொதுவாக இத்தகைய சத்துக்கள் அசைவ உணவுகளில் அதிகம் கிடைக்கும். ஆனால் இந்த உலகில் சைவ உணவை மட்டும் சாப்பிடுவர்கள் இருக்கின்றனர். அத்தகையவர்களுக்கு அசைவ உணவிற்கு சரிசமமான இரும்புச்சத்து அதிகம் நிறைந்த உணவுகள் பல இருக்கின்றன. பொதுவாக இரும்புச்சத்து உடலுக்கு மிகவும் இன்றியமையாத சத்துக்களில் ஒன்றாகும். இந்த சத்து இருந்தால் தான், உடலில் இரத்த ஓட்டமானது சீராக இருக்கும். இல்லையெனில் உடலில் இரத்தத்தின் அளவானது குறைந்து, இரத்த சோகை, ஞாபக மறதி போன்றவை ஏற்படும். அதிலும் இரும்புச்சத்துள்ள உணவுகளை சாப்பிடும் போது, அத்துடன் வைட்டமின் சி நிறைந்த உணவுகளையும் சாப்பிட்டால், உடலில் இரும்புச்சத்தானது எளிதில் உறிஞ்சப்படும். சரி, இப்போது அத்தகைய இரும்புச்சத்து அதிகம் நிறைந்திருக்கும் உணவுகள் என்னவென்று பட்டியலிட்டுள்ளோம். அதைப் படித்து தெரிந்து கொண்டு, உணவில் சேர்த்து கொள்ளுங்கள்.பசலைக் கீரை பொதுவாகவே கீரைகளில் இரும்புச்சத்தானது அதிகம் இருக்கும். அதிலும் பசலைக் கீரையில் உடலுக்கு தேவையான இரும்புச்சத்து மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகம் நிறைந்துள்ளன.உருளைக்கிழங்கு அனைவருக்கும் பிடித்த உருளைக்கிழங்கு சுவையில் மட்டும் சிறந்ததல்ல. உடலுக்கு இரும்புச்சத்தை கொடுப்பதிலும் சிறந்ததாக உள்ளது.உலர் தக்காளி சாலட், பாஸ்தா மற்றும் ஆம்லெட்டில் பயன்படும் உலர் தக்காளியிலும் இரும்புச்சத்தானது அதிகம் இருக்கிறது. அதிலும் ஒரு கப் உலர் தக்காளியில் 20% இரும்புச்சத்து நிறைந்துள்ளது.கேல் மாட்டிறைச்சியில் எப்படி அதிக அளவில் இரும்புச்சத்து உள்ளதோ, அதேப் போல் கேல் (Kale) காய்கறியிலும், அதற்கு சமமான அளவில் இரும்புச்சத்து உள்ளது.பருப்பு வகைகள் சைவ உணவாளிகளுக்கு ஒரு வரப்பிரசாதம் என்றால் அது பருப்பு வகைகள் தான். எனவே பருப்பு வகைகளை தவறாமல் சாப்பிடும் பழக்கத்தைக் கொள்ள வேண்டும். இதனால் உடலில் இரும்புச்சத்தானது அதிகம் கிடைக்கும்.உலர் ஆப்ரிக்காட் உலர் ஆப்ரிக்காட்டில், உடலுக்கு ஆரோக்கியத்தைத் தரும் இரும்புச்சத்து அதிகம் நிறைந்துள்ளது.சுண்டல் அனைவருக்குமே சுண்டலை தாளித்து சாப்பிடுவது என்றால் மிகவும் பிடிக்கும். பருப்பு வகைகளிலேயே சுண்டலில் தான் அதிக அளவில் இரும்புச்சத்தானது அடங்கியுள்ளது.டோஃபு டயட்டில் இருப்பவர்களானால், கால்சியம், இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் அதிகம் இருக்கும் டோஃபுவை சேர்த்துக் கொள்வது சிறந்ததாக இருக்கும்.பூசணிக்காய் விதை இரத்த சோகையை தவிர்க்கவும், உடலில் இரும்புச்சத்தை சீராக வைக்கவும், பூசணிக்காய் விதைகளை ரோஸ்ட் செய்து சாப்பிட வேண்டும்.பேரிச்சம் பழம் தினசரி மூன்று பேரிச்சம் பழம் சாப்பிட்டு வந்தால், உடலில் இரத்த ஓட்டத்தை சீராக வைத்துக் கொள்ளலாம்.
இயற்கை பானம் அருந்துங்க, எடை குறையும்!!!
எடை குறைய உடலை வருத்தி நிறைய உடற்பயிற்சி செய்வோம். ஆனா அப்படி கஷ்டபடாம ஈஸியா குறைந்த கலோரி மற்றும் நிறைய புரதச்சத்து இருக்கிற காய்கறி மற்றும் பழங்களை சாப்பிட்டு வந்தாலே எடை குறைவதோடு உடல் ஆரோக்கியமா கவும் இருக்கும். ஏனென்றால் டயட்-ல இருக்கும் போது நிறைய காய்கறி மற்றும் பழங்களை சாப்பிட்டால் எடை குறைவதோடு, புற்றுநோய், சிறுநீரகக்கல், இதய நோய், நீரிழிவு போன்ற நோய்கள் வராமல் உடல் ஆரோக்கியமாகவும் இருக்கும். சரி என்னென்ன காய்கறி, பழங்கள் சாப்பிட்டா எடை குறையும்-னு பார்க்கலாமா!!!சுரைக்காய் ஜூஸ் : இதில் இரும்பு மற்றம் நீர்ச்சத்து அதிகம் உள்ளது. இதை தினமும் காலையில் ஒரு டம்ளர் குடித்தால் எடை குறைவதோடு, உடலுக்கு பளபளப்பைத் தரும்.தர்பூசணி ஜூஸ் : இதில் அதிக வைட்டமின்கள் உள்ளன. இது குடிப்பதால் உடல் எடை குறைவது மட்டுமல்லாமல், இதய நோய்க்கும் மிகச் சிறந்தது.ஆரஞ்சு ஜூஸ் : இதில் அதிக புரதச்சத்தும், குறைந்த கலோரியும் இருப்பதால் உடல் எடை குறைவதற்கு மிகச் சிறந்த பானம். இதிலுள்ள வைட்டமின் சி உடலுக்கு நிறமும் தருகிறது. மேலும் இதைக் குடிப்பதால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புக்கள் கரைந்து உடல் பிட் ஆகும்.கேரட் ஜூஸ் : இந்த ஜூஸ் குடிப்பதால் கண்களுக்கு நல்லது. மேலும் இதை தினமும் குடித்தால் உடலுக்கு நிறத்தை தருவதோடு, உடல் எடையும் குறையும்.திராட்சை : இது ஒரு சுவையான பழச்சாறு. இதில் ஆன்டிஆக்ஸிடன்ட் இருப்பதால் உடலில் உள்ள கொழுப்புக்கள் எளிதாக குறைந்து உடல் எடை குறைந்துவிடும். மேலும் இது சிறுநீரகக் கோளாறு, இதய நோய், ஆஸ்துமா, செரிமானக் கோளாறு போன்ற பிரச்சனைகளை போக்குகிறது.ஆகவே கஷ்டப்பட்டு எடை குறைக்காமல், ஈஸியாக இந்த இயற்கை பானங்களை அருந்தி எடையை குறையுங்கள்!!!