ஆற்றுத்தும்மட்டி(கொம்மட்டி) கொடியின் மருத்துவ குணங்கள் :-
ஆப்பிரிக்கா, இஸ்ரேல், பாலஸ்தீனம் ஆகிய நாடுகளில் அதிகம் காணப்படுகிறது. தமிழகமெங்கும் மணற்பாங்கான இடங்களில் வளர்கிறது. மிகவும் வெட்டப்பட்ட இலைகளையுடைய தரையோடு வேர்விட்டுப் படரும் கொடி. பச்சை, வெள்ளை நீள வரிகளையுடைய காய்களையுடையது. காய்கள் சிறிய பந்து போல் இருக்கும். ஆரஞ்சு மற்றும் எலுமிச்சை வண்ணத்திலும் இருக்கும். இதில் அமிலத் தன்மை அதிகம் ...இருக்கும். விதைகள் மூலம்இனப்பெருக்கம் செய்யப்படுகிறது. இதற்கு கொம்மட்டி, வரித்தும்மம் மற்றும் பேய்கும்மட்டி என்ற வேறுப் பெயர்களும் உண்டு.மருத்துவக் குணங்கள்:ஆற்றுத்தும்மட்டியின் சமூலம் நுண்புழு கொல்லும். நஞ்சு முறிக்கும்.காய் சிறு நீர், மலம் பெருக்கும்.புழுவெட்டினால் முடி கொட்டும் இடங்களில் காயை நறுக்கித் தேய்த்து வரப் புழு வெட்டு நீங்கும். முடி வளரும்.பெருந்தும்மட்டி, சிறு தும்மட்டி, பேய்சுரை, பேய்புடல், பேய் பீர்க்கு ஆகியவற்றை சமூலமாக உலர்த்திப் பொடித்து சமனளவு கலந்து அரைத் தேக்கரண்டி காலை மாலை வெந்நீரில் கொள்ள அனைத்து நஞ்சுகளும் முறியும்.தும்மட்டிக்காய் சாற்றில் கருஞ்சிரகத்தை அரைத்து விலாவில் பூசினால் குடல் பூச்சிகள் வெளியேறி விடும்.பேய்குமட்டிக்காய்சாறு, பால், தனித்தேங்காய்பால் வகைக்கு 1 லிட்டர், விளக்கெண்ணைய், வெங்காயச்சாறு வகைக்கு 3 லிட்டர் கலந்து அவற்றுடன் கடுகு, வெள்ளைப் பூண்டு, பஞ்சல வணம், கடுக்காய், கடுகுரோகனி, அதிமதுரம், திரிகடுகு, ஓமம், வாய்விளங்கம், சீரகம், சிற்றரத்தை, கோஸ்டம், சிறுநாகப்பூ, சின்னலவங்கப்பட்டை வகைக்கு 2 கிராம் அரைத்துப் போட்டுப் பதமுறக் காய்ச்சி வடித்துக் (ஆற்றுத் தும்மட்டி எண்ணெய்) காலையில் மட்டும் 2,3 தேக்கரண்டி( 4 முறை பேதியாகுமாறு) 4,5 நாள்கள் சாப்பிட்டு வர வாதநீர், கிருமிகள், ஈரல்களின் வீக்கம், நீர்கோவை, பெருவயிறு, இடுப்புவலி, வாயு முதலியவை தீரும்
தொப்பையை குறைக்க வழி;
* உடல் எடையை குறைக்க சரியான வழி காலை உணவை தவிர்ப்பது அல்ல. ஏனெனில் காலை உணவு தான் அன்றைய தினத்திற்கு ஏற்ற எனர்ஜியை தருகிறது. அவற்றை தவிர்த்தால், உடல் நலம் தான் பாதிக்கப்படும். பின் எப்போது பார்த்தாலும் சாப்பிட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என்று தோன்றும். ஆகவே மறக்காமல் காலை வேளையில் மறவாமல் ஏதேனும் ஆரோக்கியமானவற்றை சாப்பிட வேண்டும்.* பானை போன்ற வயிறை குறைக்க, மற்ற வழிகளை விட சிறந்தது உடற்பயிற்சி தான். அதிலும் நடைப்பயிற்சி தான் சிறந்தது. ஆகவே காலையில் எழுந்ததும் தினமும் குறைந்தது 30 நிமிடமாவது நடந்தால் நல்லது. இதனால் உடல் மற்றும் தொடையில் இருக்கும், தேவையற்ற கலோரிகள் கரைந்துவிடும்.
* எடையைக் குறைக்க தேன் ஒரு சிறந்த மருத்துவப் பொருள். ஆகவே காலையில் எழுந்ததும், ஒரு டம்ளர் நீரில் 2 டீஸ்பூன் எலுமிச்சை சாறு, 1 டீஸ்பூன் தேன் மற்றும் சிறிது மிளகு தூள் சேர்த்து, தினமும் குடிக்க வேண்டும்.
* காரமான உணவுப் பொருட்களான இஞ்சி, மிளகு, இலவங்கப்பட்டை போன்றவையும் மிகவும் சிறந்தது. அதிலும் தினமும் இஞ்சி டீயை 2-3 முறை குடிக்க வேண்டும். இது உடல் பருமனைக் குறைக்கும் சிறந்த பொருள்.
* இரண்டு டீஸ்பூன் எலுமிச்சை சாற்றை சாதாரண நீரில் குடித்து வந்தால், உடல் எடை குறையும். மேலும் சாப்பிட்டப் பிறகு ஒரு டம்ளர் சூடான நீரை குடித்து வந்தால், இயற்கையாகவே உடல் எடை குறைந்துவிடும்.
* உடல் எடையை குறைக்க டயட்டில் இருக்கும் போது பச்சை காய்கறிகள், தக்காளி மற்றும் கேரட் போன்ற கலோரி குறைவான, ஆனால் அதிக வைட்டமின் மற்றும் கனிமச்சத்துக்கள் உள்ள உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும். இதனை அதிகம் சாப்பிட்டு வந்தால், உடல் ஆரோக்கியமாக இருப்பதோடு, உடல் எடையும் விரைவில் குறையும், அதிக பசியும் எடுக்காமல் இருக்கும்.
* தொடர்ந்து 3-4 மாதங்கள், காலையில் எழுந்ததும் 10 கறிவேப்பிலையை சாப்பிட வேண்டும். இதனால் பெல்லி குறைந்து, அழகான இடுப்பைப் பெறலாம்.
* எப்போதும் உணவு உண்ணும் முன் ஒரு துண்டு இஞ்சியை, எலுமிச்சை சாறு மற்றும் உப்பில் தொட்டு சாப்கிட வேண்டும். இதனால் அதிகமான அளவு உணவை உண்ணாமல், கட்டுப்பாட்டுடன் உணவை உண்ணலாம்.
இவ்வாறெல்லாம் செய்து வந்தால், பானைப் போன்ற வயிற்றை குறைத்து, அழகான உடல் வடிவத்தைப் பெற்று ஆரோக்கியமாக வாழலாம்.
மல்லிகைப் பூவின் மருத்துவ குணங்கள்..!
மல்லிகைப் பூ என்றாலே தலையில் சூடிக் கொள்ளவும், வாசனை திரவியங்கள் தயாரிக்கவும் பயன்படும் என்று மட்டுமே நினைத்திருந்தால் இந்த கட்டுரையை படித்து முடித்த பிறகு உங்கள் கருத்தை நீங்களே மாற்றிக் கொள்வீர்கள்.மல்லிகைப் பூவை அந்த காலத்திலேயே பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்தாக பயன்படுத்தி வந்தனர். அதேப்போல, பல்வேறு மருத்துவ குணம் கொண்ட மல்லிகைப் பூ எண்ணெய் மருந்தாக பயன்படுத்தப்பட்டுள்ளது.அதில் ஒரு சில அடிப்படை விஷயங்களை உங்களுக்குக் கூறுகிறோம்...வெளியில் உணவை வாங்கி சாப்பிடுபவர்களுக்கு வயிற்றில் பூச்சித் தொல்லைகள் அதிகமாக இருக்கும். வயிற்றில் பூச்சி இருந்தால் உடல் மெலியும், சருமத்தில் வெள்ளைத் திட்டுக்கள் காணப்படும். அப்படியானவர்கள் 4 மல்லிகைப் பூவை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அந்த நீரை அருந்தி வர வேண்டும். இவ்வாறு அருந்தி வர வயிற்றில் உள்ள கொக்கிக் புழு, நாடாப் புழு போன்றவை அழியும்.இந்த அறிகுறிகள் இருப்பவர்கள் மட்டுமல்லாமல் பொதுவாக அடிக்கடி பூச்சி மருந்து சாப்பிடுபவர்கள் தவிர அனைவருமே இந்த மல்லிகைத் தண்ணீரை அருந்தலாம்.இதேப்போல, மல்லிகைப் பூக்களை நிழலில் வைத்து உலர்த்தி அவை காகிதம் போல ஆனதும், அவற்றை பொடியாக அரைத்து பொடி செய்து வைத்துக் கொள்ளவும். இதனை தண்ணீரில் கலந்து குடித்து வர சிறுநீரக கற்கள் தானாகவே கரைந்து போகும். எந்த உயர் சிகிச்சையும் தேவைப்படாது
பாத வெடிப்பு- பாட்டி வைத்தியம்:-
பலருக்கு முகத்தில் பருக்கள் தோன்றுவதை போல் பாதங்களில் வெடிப்பு ஏற்படுகிறது. ஆரம்பத்திலேயே பாதங்களை பராமரிப்பதில் ஆர்வம் காட்டினால் நிரந்தரமாக வெடிப்பு வருவதை தடுக்க முடியும்.பாதங்களை பராமரிக்க சில எளிய டிப்ஸ்மருதாணியை நன்கு அரைத்து வெடிப்பு உள்ள இடங்களில் தேய்த்து உலர விடவேண்டும் பின்பு தண்ணீரால் கழுவி வர நாளடைவில் பித்த வெடிப்பு குணமாகும். பாதம் தாங்கும் அளவிற்கு தண்ணீரை சூடுபடுத்தி, அதில் சிறிது உப்பும் எலும்பிச்சை சாறும் சேர்த்து அதில் பாதத்தை வைத்திருந்து பின்பு சொரசொரப்பான பொருட்களால் தேய்த்து வந்தால் கெட்ட செல்கள் உதிரும். வேப்பிலை, மஞ்சள் ஆகியவற்றுடன் சிறிது சுண்ணாம்பு சேர்த்து அரைத்து, விளக்கெண்ணெய் சேர்த்து வெடிப்பு ஏற்பட்ட பகுதிகளில் தேய்த்து வந்தால் பித்த வெடிப்பு குணமடையும். பப்பாளி பழத்தை நன்கு அரைத்து அதனை பாதங்களில் வெடிப்பு உள்ள பகுதிகளில் நன்கு தேய்த்து வர வெடிப்பு குணமாவதுடன் எரிச்சல் குறையும். தரமான காலணிகளை பயன்படுத்துவதன் மூலம் வெடிப்புகளை தவிர்க்கலாம்.விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய் சம அளவில் எடுத்துக்கொண்டு அதில் மஞ்சளை சேர்த்து பாதத்திற்கு தடவி வந்தால் வெடிப்பு ஏற்படாது.இரவு நேரங்களில் படுக்க செல்லும் முன்பு காலை சுத்தப்படுத்தி சிறிது தேங்காய் எண்ணெய் தடவி வந்தால் வெடிப்பு வருவதை தவிர்க்கலாம். தினமும் குளித்ததும் பாதத்தை துணியால் துடைத்து பின் விளக்கெண்ணெய் தேய்த்து வந்தாலும் வெடிப்பை தவிர்க்கலாம்
மனச்சோர்வை சமாளிக்க சில ஈஸியான வழிகள்!!!
எப்படிப்பட்ட வலிமையான மனிதரையும், மனச்சோர்வு எளிதில் வீழ்த்திவிடும். ஆனந்தமும் வேதனையும் கலந்தது தான் வாழ்க்கை. ஆனாலும் மனச்சோர்வுடன் இருக்கும் போது நம் வாழ்க்கையில் நிகழ்ந்த சோகமான காரியங்கள் மட்டுமே நினைவுக்கு வரும். நண்பர்கள், உறவினர்கள், உடன் பணியாளர்கள், அண்டைவீட்டார், கடவுள் நம்பிக்கை இருக்கிறவர்களுக்கு கடவுள் என நம்முடைய சோகங்களையும், மகிழ்ச்சிகளையும் பகிர்ந்து கொள்ளும் பலர், நம் உலகத்தில் இருக்கிறார்கள். மனச்சோர்விலேயே உழன்று கிடப்பதால் சாதிக்கப் போவது ஒன்றும் இல்லை. அதிலிருந்து வெளியே வந்தால், நம்மை போல மனச்சோர்வில் அகப்பட்டவர்களுக்கும் உதவலாம். இதனால் நம்மை போன்ற பிற மனிதர்களுடைய வாழ்க்கையும் இனிமையாக இருக்க வகை செய்யலாம். இத்தகைய மனச்சோர்வில் இருந்து வெளிவருவது எப்படி என்பது குறித்த சில முக்கியமான குறிப்புகளை இங்கே கொடுத்து இருக்கிறோம். நீங்களோ அல்லது உங்களுக்கு அறிமுகமானவர்களோ மனச்சோர்வில் இருந்தால், இவற்றை படிக்குமாறு கூறி, வாழ்வை இனிமையாக்குங்கள்.உடற்பயிற்சி செய்வது மன அழுத்தத்தை நீக்க சிறந்த வழி உடற்பயிற்சி. இது நல்ல உடல் அமைப்பை கொடுப்பது மட்டுமின்றி, நேரிடையான சிந்தனைகளையும் அதிகரிக்கின்றது. உணர்வுகளை சீர்படுத்துகின்ற செரோடொனின் மற்றும் டெஸ்டோஸ்டெரோன் ஆகியவற்றை சுரக்க உடற்பயிற்சி உதவுகின்றது. அதோடு மனச்சோர்வு அளிக்கும் சிந்தனைகளையும் ஒதுக்கிவிடுகின்றது.உதவி கேட்பது வாழ்க்கையின் கடினமான சூழ்நிலைகளை கையாள உதவி கேட்பதில் எந்த அவமானமும் இல்லை. வாழ்க்கையின் சுமைகளை தனியாக சுமக்க வேண்டும் என்று யாரும் எதிர்பாப்பது இல்லை. ஆகவே தாய், தந்தை, துணைவர், உடன் பணியாளர் அல்லது நண்பர் இடம் இருந்து உதவி கேட்பது உணர்வுச் சுமையை ஓரளவு குறைக்கும்.சமச்சீர் உணவு பழங்கள், காய்கரிகள், மாமிசம், தானியங்கள் மற்றும் கார்போ ஹைட்ரேடுகள் ஆகிய ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ளுதல், சிந்தனை சிதறாமல் இருக்க உதவுகின்றன. சமச்சீர் உணவு உடல்நலனையும், மனநலனையும் சீர்படுத்துகின்றது.சுய விழிப்புணர்வு வாழ்க்கையின் நிகழ்வுகளை சரியாக புரிந்து கொள்ள முடியாமல், தங்களை அளவுக்கு மீறி அழுத்துவதால் மக்கள் பொதுவாக மனச்சோர்வு அடைகிறோம். எனவே சரியாக தம்மை புரிந்து கொண்டு, அதை சந்தோஷமாக விரும்பி செய்தால், மனச்சோர்வானது நீங்கும்.எடை குறைத்தல் மனச்சோர்வுக்கு அதிகமான எடை பிரச்சனையாக இருந்தால், எடையை குறைக்க முயல்வது ஒரு நல்ல தீர்வைத் தரும். மேலும், உடல் வலிமை ஆரோக்கியத்தையும், சுய கருத்துக்கும் நேர்மறையான சிந்தனையை கூட்டுகின்றது.நண்பர்கள் நல்ல நண்பர்கள் தேவையான ஆறுதலையும், வாழ்க்கையின் சோர்வூட்டும் சூழ்நிலையில் இருந்து வெளியே வருவதற்கான ஆலோசனைகளையும் வழங்குவார்கள். மேலும், தேவையுள்ள நேரத்தில், சொல்வதை காதுகொடுத்து கேட்கும் நண்பர் இருந்தால், மனதில் இருக்கும் சந்தேகங்களும், எதிர்மறையான சிந்தனைகளும் முற்றிலும் களைந்துவிடும்,.டைரி எழுதுவது தினசரி உணர்வுகளை எழுத்து மூலமாக பதிவு செய்வது சுய பரிசோதனை செய்வதற்கும், ஆராய்வதற்கு ஒரு சிறந்த வழி ஆகும். இவ்வாறு வாழ்க்கையை குறித்து என்ன நினைக்கிறீர்கள் என்பதை அனுதினமும் பதிவு செய்தால், மனச்சோர்வில் இருந்து விடுபட ஒரு நல்ல தீர்வு கிடைக்கும்.எதிர்மறையான மக்களிடம் இருந்து விலகி இருப்பது தொடர்ச்சியாக பிறரை குறைத்து பேசுகிறவர்களோடு இருக்க யாருமே விரும்ப மாட்டார்கள். அப்படிப்பட்ட மக்களிடம் இருந்து விலகி இருப்பது மன அமைதியையும், சமாதானத்தையும் கொடுக்கும்.வேலையை விட்டு விடுதல் பிரச்சனைகளின் வேர் வேலையில் இருந்தால், அதை விட்டுவிடுவது மன அமைதியை கொடுக்கும். தனிப்பட்ட மகிழ்ச்சியையும் திருப்தியையும் விட்டுக் கொடுக்காமல், குறிக்கோளை நிர்ணயம் செய்ய வேண்டும். அதற்கு வேலை ஒரு தடையாக இருந்தால், அதை விட்டு விடுங்கள்.தனிமையாக இருப்பதை தவிர்ப்பது மனச்சோர்வோடு இருக்கும் போது, தனிமையில் இருந்தால், மனம் மேலும் சோர்வுடன் தான் இருக்குமே தவிர, அமைதியடையாது. அதற்காக எப்போதுமே கூட்டமாக இருக்க வேண்டும் என்பதில்லை. ஆனால் அவ்வாறு நண்பர்களுடன் சேர்ந்து இருந்தால், அவை முழுமையான தீர்வை கொடுக்காவிட்டாலும், மனச்சோர்வு தரும் சிந்தனைகளில் இருந்து கவனத்தை திசை திருப்பும்.சுற்றுலா செல்லுதல் எதிர்மறையான சிந்தனைகளை அகற்றுவதற்கு, காட்சி அமைப்பை மாற்றுவது எப்போதுமே உதவியாக இருக்கும். வாழ்க்கையில் நேர்மறையான சிந்தனைகளை கொண்டு வர ஒருநாள் பிரயாணம் மேற்கொள்வதற்கு ஈடாக எதுவுமே இல்லை. எனவே மனச்சோர்வின் போது எங்கேனும் வெளியே சென்றால், எளிதில் மனச்சோர்வானது நீங்கும்நேர்மறையான எண்ணங்கள் வாழ்க்கையில் நேர்மறையாக இருப்பதே மனச்சோர்வு கொடுக்கும் சிந்தனைகளை தவிர்ப்பதற்கான சிறந்த வழி. மனதிலே எதிர்மறை உணர்வுகள் இருக்கின்றன. சிந்தனைகளை நேர்மறையான திசையில் செலுத்துவதன் மூலமாக, மனச்சோர்வின் தாக்கங்களை அகற்றிவிடலாம்.மனநல வல்லுநரிடம் பேசுவது மனச்சோர்வில் இருந்து வெளிவருவதற்கு மிகவும் எளிதான மற்றும் ஆற்றல் வாய்ந்த வழி மனநல வல்லுநரிடம் பேசுவது தான். இதனால் மனச்சோர்வின் வேரை கண்டுபிடித்து அகற்ற முடியும்.செல்லப்பிராணியை வளர்ப்பது செல்லப்பிராணிகள் தங்கள் எஜமான்களிடம் அற்புதமான வழியில் தொடர்பு கொள்கின்றன. தனியாக வாழ்கிறவர்களை காட்டிலும், செல்லப்பிராணி வளர்ப்பவர்கள் மனச்சோர்வின் தாக்கங்களில் இருந்து பிழைத்துக் கொள்கிறார்கள் என்று பல ஆராய்ச்சிகள் நிரூபிக்கின்றன. ஆகவே செல்லப்பிராணியுடன் உணர்வுபூர்வமாக தொடர்புகொள்வது, எதிர்ம்றையான உணர்வில் இருந்து வெளிவர உதவும்.நிகழ்காலத்தில் வாழ வேண்டும் இறந்தகால தவறுகளிலும், எதிர்காலத்தின் நிலையின்மையிலும் உழல்வதில் அர்த்தமே இல்லை. அது உங்கள் கட்டுப்பாட்டில் இல்லை என்பதால், அச்சூழ்நிலையில் உங்கள் உணர்வுகளை செலுத்துவது பலன் அளிக்காது. 'எப்போது',‘எங்கே' மற்றும் ‘நாளை' என்பனவற்றுக்கு பதிலாக, 'இப்போது', ‘இங்கே',‘இன்று' என்பனவற்றில் கவனம் செலுத்துங்கள்.நன்றாக தூங்குவது நேர்மறையான சிந்தனைக்கு திரும்ப ஒருவருக்கு தேவைப்படுவது எல்லாம் ஒரு நல்ல உறக்கமே. இரவு தோறும் 7-8 மணிநேரம் உறங்குவது குறைவான மனச்சோர்வுக்கான அறிகுறிகளை காட்டுவதாக ஆராய்ச்சிகள் நிரூபிக்கின்றன.இசையை கேட்பது மனச்சோர்வில் இருக்கும் போது, உணர்வை எழுப்பும் இசையை கேட்பது சோர்வடைந்த மனதிற்கு ஊக்கம் அளிக்கும். உணர்வுகளை மாற்றவும், ஆன்மாவை உயர்த்தவும், உணர்ச்சியை அதிகரிக்கவும் உதவும் ஆற்றல் இசைக்கு இருக்கின்றது. எனினும், மிகவும் உணர்வுபூர்வமான பாடல்களை கேட்பதால், எதிர்மறையான விளைவு ஏற்படும் என்பதால், அவற்றை தடுக்க வேண்டும்.நெருக்கமான உடலுறவை தவிர்க்க வேண்டாம் மனச்சோர்வின் போது உடலுறவு சோர்வு அளிப்பதாக உணர்வது எளித. ஆனால் உண்மையில் உடலுறவு மனச்சோர்வில் வெளியே வருவதற்கு பெரிதும் உதவியாக இருக்கும் என்பது பலருக்கும் தெரியாது. ஹார்மோன் உட்புகுதல்கள் மனச்சோர்வை சீர்படுத்தி, மன அழுத்தத்தில் இருந்து நிவாரணம் அளிக்கின்றன.வைட்டமின் சேர்க்கைகள் ஊட்டச்சத்து குறைபாடுகளும் மனச்சோர்வு அளிக்கும் சிந்தனையை விளைவிக்கலாம். இதனால் வெளிப்படும் அறிகுறிகளை மருத்துவரிடம் ஆலோசித்து, சமன்பாட்டை சரிசெய்ய வைட்டமின் சேர்க்கைகளை எடுத்துக் கொள்ளுங்கள்.