முகத்திற்கு ஆவி பிடிப்பதால் ஏற்படும் நன்மைகள்..!
* முகத்தில் உள்ள அழுக்குகள் விரைவில் எளிதாக செல்வதற்கு,… இந்த முறை மிகவும் சிறந்தது. இதனால் எப்போது ஆவி பிடிக்கின்றோமோ, அப்போது ஆவி பிடித்து முடித்ததும், முகத்தை சுத்தமான துணியால் துடைக்கும் போது, முகத்தில் உள்ள இறந்த செல்கள் எளிதில் வந்துவிடும்.* கரும்புள்ளிகள் மற்றும் வெள்ளை புள்ளிகளும் விரைவில் நீங்கிவிடும். அதற்கு 5 முதல் 10 நிமிடம் ஆவி பிடித்து, பின் தேய்த்தால், மூக்கில் காணப்படும் வெள்ளையானவை சீக்கிரம் வந்துவிடும். மேலும் அவை எளிதில் வருவதோடு, கரும்புள்ளிகள் வேரோடு வந்துவிடும். பின்னர் அவை வராது போய்விடும்.* ஆவி பிடிப்பதால், முகப்பருக்கள் குறையும். எப்படியெனில் ஆவி பிடிக்கும் போது முகத்தில் உள்ள எண்ணெய் சுரப்பிகளில் இருந்து சுரக்கும் சருமத்திற்கு ஏற்ற இயற்கை எண்ணெயால், சருமம் எண்ணெய் பசையோடு இருப்பதால், துளைகளில் சேரும் அழுக்குகள் அல்லது டாக்ஸின்களால் ஏற்படும் பருக்கள், துணியால் துடைக்கும் போது போய்விடும்.* மற்றொரு நன்மைகள் என்னவென்றால், முதுமை தோற்றதை தடுக்கும். எவ்வாறென்றால், சருமத்தில் அழுக்குகள் நீங்காமல் தங்கிவிடுவதால் தான், முகம் மிகவும் பளிச்சென்று இல்லாமல் முதுமை தோற்றத்தோடு காணப்படுகிறது. அப்போது ஆவி பிடித்தால், அவை அந்த அழுக்குகளை நீக்கி, பளிச்சென்று, இளமைத் தோற்றதை தரும்.* பிம்பிள் இருக்கும் போது முகத்திற்கு 4-5 நிமிடம் ஆவி பிடிக்க வேண்டும். பின் 30 நிமிடம் ரிலாக்ஸ் ஆக இருந்து, பின்னர் ஐஸ் கட்டிகளால், முகத்தை தேய்த்தால், பிம்பிள் உடைந்துவிடும். இதனால் ஒரே நாளில் பிம்பிளை சூப்பராக குறைத்துவிடலாம்.* ஆவி பிடிக்கும் போது முகத்திற்கு சரியாக இரத்த ஓட்டம் இருக்கும். மேலும் துளைகள் நன்கு எந்த ஒரு தொந்தரவும் இல்லாமல் சுவாசிக்கும். அதனால் சருமம் நன்கு அழகாக, பொலிவோடு இருக்கும்.ஆகவே நேரம் இருக்கும் போது முகத்திற்கு ஆவி பிடித்து, சோர்ந்து போன சருமத்தை புத்துணர்ச்சியுடன், அழகாக மாற்றுங்கள்
பாதங்களை சரியா பராமரிக்க சில குறிப்புகள்:-
* குதிக்கால்களில் அழுக்கில்லாமல் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். இதனால் எந்த ஒரு கிருமிகளும் பாதங்களை தாக்காமல் இருக்கும். இதற்கு தினமும் பாதங்களை வெதுவெதுப்பான நீரில், சிறிது நேரம் ஊற வைத்து, பின் அழுக்கை நீக்கும் ஃபூட் கிளீனரால் தேய்த்து, சுத்தம் செய்ய வேண்டும். இதனால் பாதங்களில் உள்ள அழுக்குகள் நீங்கிவிடும். * பாதங்களில் உள்ள துளைகளில் இருக்கும் அழுக்குகளை தினமும் ஒரு முறையாவது ஸ்கரப் செய்ய வேண்டும். இதனால் பாதத் துளைகளில் உள்ள இறந்த செல்கள் நீங்குவதோடு, இரத்த ஓட்டம் அதிகரித்து, பாதம் மென்மையாகவும், சுத்தமாகவும் இருக்கும். மேலும் ஸ்கரப் செய்தால், குதிகால்களில் இருக்கும் புண்கள் சரியாகும். * பாதங்களில் எண்ணெய் சுரப்பிகள் இல்லாததால், விரைவில் வறட்சியடைந்துவிடும். இதனால் வெடிப்புகள் வரும். ஆகவே ஒரு நாளைக்கு இரண்டு முறை மாய்ஸ்சுரைசரை தடவ வேண்டும். அதுவும் குளித்த பின்னும், இரவில் தூங்கும் முன்பும் தடவி வர வேண்டும். அதிலும் பேபி ஆயில் அல்லது ஏதாவது பாடி ஆயிலை தடவ வேண்டும். இவற்றால் பாதங்கள் மென்மையாகவும், சுத்தமாகவும், வெடிப்புகளின்றியும் இருக்கும். * பாதங்களை சுத்தம் செய்யும் போது மறக்காமல் கால் விரல் நகங்களையும் சுத்தம் செய்ய வேண்டும். இது எந்த காலத்திற்கும் முக்கியமான ஒன்று. ஏனெனில் பொதுவாக கிருமிகள் கால்விரல் நகங்களில் அதிகம் தங்கும். ஆகவே மறக்காமல் பெடிக்யூர் செய்ய வேண்டும். அழகு நிலையம் செல்வதற்கு நேரமில்லையென்றால், வீட்டிலேயே வெதுவெதுப்பான நீரில் சிறிது உப்பு சேர்த்து, அந்த கலவையில் கால்களை ஊற வைத்து, ஸ்கரப் செய்ய வேண்டும். ஸ்கரப் செய்த பின்னர், சுத்தமான நீரில் கழுவி, பின் ஏதேனும் மாய்ஸ்சுரைசரை தடவ வேண்டும். இதனால் அங்குள்ள இறந்த செல்கள் வெளியேறி, வறட்சியின்றி அழகாக காணப்படும். * குளிர்காலத்தில் எப்போதும் பாதங்களை மென்மையாக வைத்துக் கொள்ள சிறந்த வழியென்றால், அது கால்களில் எப்போதும் சாக்ஸ் அணிவது தான். அதிலும் மாய்ஸ்சுரைசரை பாதங்களில் தடவி, பிறகு சாக்ஸை முழு நாளும் அணிய வேண்டும். இதனால் குளிர்ச்சியில்லாமல் இருப்பதோடு, வறட்சியால் வெடிப்புகள் ஏற்படாமலும் இருக்கும்
கீரைகளின் மருத்துவ குணங்கள்:-
பாலக்கீரை பாலக்கீரையால் சிறுநீர்கடுப்பு, நீரடைப்பு, ருசியின்மை, வாந்தி, ஆகிய நோய்கள் நீங்கும் உடல் சூட்டை தணிக்க வல்லது. தண்ணீர் தாகத்தையும் நாவரட்சியையும் போக்கவல்லது அதிக சீதபேதி ஆகியவற்றைக் குணமாக்கும்.அமிலம் மிகுதியால் ஏற்படும் நெஞ்சுக் கரிப்பை நீக்கும் வயிற்றுபுண்ணை ஆற்றவல்லது. அல்சருக்கு சிறந்த மருந்தாகும்.முடக்கத்தான் கீரைகாசம் சொறி சிரங்கு கரப்பான் போன்ற நோய்கள் குணமாகும். இடுப்பு பிடிப்பு, இடுப்பு குடைச்சல், கைகால் வலி, கை கால் குடைச்சல் முதலியனவற்றை குணமாக்கும் நரம்பு சம்பந்தமான நோய்களை நீக்கும் ஆற்றலை பெற்றது. இக்கீரை நரம்பு மற்றும் தசைநார்களுக்கு வலுவூட்ட வல்லது. மூலநோய்களுக்கு சிறந்த மருந்து. அரைக்கீரைபிரசவித்த பெண்களின் பிரசவித்த மெலிவை போக்கி உடலுக்கு சக்தியையும், பலத்தையும் கொடுக்கின்றன. இருமல், நுரையீரல் காய்ச்சல்களை போக்கும். நீர்க்கோர்வை, குளிர் காய்ச்சல், வாத காய்ச்சல், உடலில் தேங்கும் வாய்வு வாத நீர்களைப் போக்கும். பிடரி நரம்பு வலித்தல் நரம்பு வலி சன்னி தலைவலி ஆகியவற்றை குணப்படுத்தும்.கரிசலாங்கண்ணி கீரைகல்லீரல், மண்ணீரல் நுரையீரல், சிறுநீரகம், ஆகிய உறுப்புகளுக்கு நன்மை பயக்கிறது. இந்த உறுப்புகளில் தேங்கும் கழிவுகளை நீக்கி கெட்ட நீர்களை வெளியேற்றுகிறது. உடலில் கனத்தையும் பருமனையும் தொந்தியையும் கரைக்க விரும்புகிறவர்கள் இக்கீரையை நான்தோறும் பகல் உணவில் நான்கு வாரங்கள் தொடர்ந்து உண்டு வர பலன் கிடைக்கும். கருவேப்பிலைஇது உடலுக்கு பலம் உண்டாக்ககூடியது. பசியைத் தூண்டும் சக்தி வாய்ந்தது. பித்தத்தை தணித்து உடல் சூட்டை ஆற்றும் குணம் உடையது. வயிற்றோட்டம் பித்தவாந்தி உணவு செரியாமை வயிற்று உளைச்சல் போன்ற பிரச்சனைகளை குணமாக்கும்.பசலைக்கீரை இக்கீரை நோய் தடுப்பு சக்தி உடையது. ரத்தத்தை உண்டாக்கும் நல்ல பலத்தை உடலுக்கு தரும். ரத்த அழுத்தத்தை குணப்படுத்தும் ஆற்றலுடையது. குறைந்த மற்றும் மிகுந்த அழுத்தமாயினும் இரண்டையும் சமன்படுத்தும் ஆற்றல் பெற்றது.சிறுகீரை இக்கீரை உடலுக்கு வனப்பையும் அழகையும் தரும். வாதநோயை போக்கும் கல்லீரலுக்கு நன்மையைச் செய்யும். உடலில் தோன்றும் பித்த சம்பந்தமான நோய்களை இது கண்டுபிடிக்கும். விஷக்கடி முறிவாகப் பயன்படக்கூடியது. சுக்கான் கீரைவயிறு சம்பந்தபட்ட எல்லா நோய்களையும் கட்டுபடுத்தும். வாயுவுத் தொல்லைகளைப் போக்கும் சூட்டு இருமல் ஆஸ்துமா மூச்சுத் திணறல் ஆகியவற்றைக் கட்டுபடுத்தும் ஈரலுக்கு வலுவைத் தந்து பசியைத் தூண்டும் செரிமான ஆற்றலையும் பெருக்கச்செய்யும். நெஞ்செரிச்சல் கடும் பித்தம் முதலியவற்றை கண்டிக்கும். பித்தத்தினால் ஏற்படும் வாந்தியைக் குணப்படுத்தும் வயிற்றுச்சூட்டை தணித்து வயிற்றில் ஜிரணமாகாத பொருட்களை ஜீரணிக்கச் செய்கிறது.தூதுவாளைக் கீரை ஆஸ்தூமா நோயைக் குணப்படுத்தும் நிமோனியா, டைபாய்டு, சுபவாத சுரம் போன்ற நோய்களுக்கு இது மருந்தாகும். குளோரோமைசின் ஆன்டிபயாடிக்ஸ் போன்று மிக விரைவாகவும் வேகமாகவும் அபாயம் எதுவுமின்றி நோயாளியை பாதுகாக்கும். உடல்பலமும் முகவசீகரமும் அழகும் தரவல்லது.பொன்னாங்கன்னிஇக்கீரையை உண்பதால் வாய்ப்புண், வாய்நாற்றம், மற்றும் வாய் சம்பந்தமான நோய்கள் நீங்கும். மூலச்சூடு கைகால் எரிச்சல் வயிற்றெறிச்சல் ஈரல் நோய் முதலியன நீங்கும். நல்ல பசியை உண்டாக்கும். கருவிழி நோய்கள் குணமாகும்.மணத்தக்காளி கீரை உடலுக்கும் அழகுக்கும் வசீகரத் தன்மையும் கொடுக்கும். இக்கீரை இதயத்திற்கு பலமும் வலிமையும் ஊட்ட வல்லது. குடல் புண்ணுக்கு ஏற்றதொரு மருந்து இது. உடம்பின் களைப்பை நீக்கி நல்ல தூக்கத்தை கொடுக்கவல்லது. தலைவலிக்கு சிறந்த மருந்து.முருங்கைக் கீரைநீரிழிவு வியாதியை நீக்கும் ஆற்றலுடையது. நெஞ்சில் உள்ள கோழையை அகற்றும் தன்மை பெற்றது. சிறுநீரை பெருக்கித் தள்ளும் ஆற்றல் கொண்டது. ரத்த விருத்திக்கு ஏற்றது. தொண்டை தொடர்பான நோய்களை நீக்கும்
பற்கூச்சம் ஏன் ஏற்படுகிறது :-
பற்கூச்சம் ஏன்? பிறிட்சில் இருந்து எடுத்தது போன்ற குளிரான உணவுகளை (ஐஸ்கிறீம்) உண்ணும் போது அல்லது, குளிரவைத்த மென்பானங்களை அருந்தும்போது பற்கள் கூசும்.அதேபோல புளிப்பு அதிகம் உள்ள பழங்கள், புளிப்பான உணவுப் பண்டங்களை உண்ணும்போதும் கூசும். சிலருக்கு கடுமையான இனிப்பும் கூசவைக்கும்.பொதுவாக எமது பற்களின் மேற்புறம் எனாமல் எனப்படுவது கடினமான ஒரு பூச்சினால் பாதுகாக்கப்பெற்றுள்ளது, எமது உடலின் மிகக் கடுமையான பகுதி எனாமல்தான். இது உணர்வற்றது அதனால் வலி தெரிவதில்லை.ஆனால் எனாமலுக்கு உள்ளே மென்மையான நரம்புச் செறிவுள்ள டென்ரீன் இருக்கிறது. வெளியே உள்ள எனாமலுக்கு சேதம் ஏற்பட்டு உள்ளே உள்ள டென்ரீன் வெளிப்பட்டால் அது வலியை உணரும். எனவே எனாமலில் சிதைவினால் ஏற்படுவதே பற்கூச்சம்பற்களும் முரசும் சந்திக்கும் பகுதியில் எனாமலின் தடிப்பு மிகக் குறைவாகவே இருக்கும். அதனால் சிறிய சேதம் அதில் ஏற்பட்டாலும் பற்கூச்சம் ஏற்படும்.காரணங்கள்மிக முக்கிய காரணம் நீங்கள் உபயோகிக்கும் பிரஸ்சும் அதனை நீங்கள் உபயோகிக்கும் முறையும்தான்.பிரஸ்சைப் பொறுத்தவரையில் மென்மையான அல்லது நடுத்தரமுள்ள பிரஸ்சை (Soft or Medium)மட்டுமே உபயோகியுங்கள்.மருத்துவர் ஆலோசனை கூறினால் மட்டுமே தடிப்பமான (Hard) பிரஸ் தேவை.பல் துலக்கும் முறைபல் துலக்கும் முறையும் முக்கியமானதாகும்.அடுப்புக் கரி மண்டிய சமையல் பாத்திரத்தை அழுத்தித் தேய்த்துக் கழுவுவதுபோல பிரஸ்சால் கண்டபடி பற்களை உரச வேண்டாம். அப்படிச் செய்வதனால் பற்களை மட்டுமல்லாது முரசுகளையும் புண்படுத்திவிடும்.மேல்வாய்ப் பற்களை மேலிருந்து கீழ் நோக்கித் துலக்குங்கள். அதே போல கீழ்வாய்ப் பற்களை கீழிருந்து மேல் நோக்கித் துலக்குங்கள். இவ்வாறு துலக்கும்போது முரசு காயப்பட்டு தேயாது.பல் அரிப்பு Dental Erosion என்பது பற்கூச்சத்திற்கான மற்றொரு காரணமாகும்.இது பல்லின் மேற்பரப்பான எனாமலில் ஏற்படும் நுண் அரிப்புகளாகும். அமிலத் தன்மையான உணவுகளாலும் பானங்களாலும் அவ்வாறு ஏற்படும். எனாமல் கரைந்தால் உள்ளே இருக்கும் டென்ரீன் வெளித் தெரியவரும்.முரசு கரைதல் மற்றொரு காரணமாகும். முரசின் கன அளவு குறைந்து கொண்டு போகும். வயதாகும் போது இது தானாக நடக்கும் செயலாகும்.முரசு கரைந்து செல்லும்போது பற்களின் வேர் வெளித் தெரிய ஆரம்பிக்கும். பல் வேரை எனாமல் மூடியிருப்பதில்லை.அதனால்தான் முரசு கரைந்து அவை வெளியே வந்ததும் பற் கூச்சம் ஏற்படுகிறது.முரசு நோய்கள் மற்றொரு காரணமாகும் வாயை ஒழுங்காகச் சுத்தம் செய்யாது விட்டால் பற்களின் மேல் அழுக்கு மென்படலமாகப் படிய ஆரம்பிக்கும். இது பிளாக் (Dental Plaque) எனப்படும். இதைக் கவனியாது விட்டால் அது இறுகி கறையாகப் (Tartar) படியும். இவ்வாறான கறை படர்ந்தால் முரசு கரைதல் தீவிரமாகும். முரசு நோய்களுக்கு நீரிழிவு நோயும் முக்கிய காரணியாகும்.பல்லுக் கடித்தல் பழக்கம் காரணமாக பற்களின் எனாமல் படிப்படியாகக் கரைந்து பற் கூச்சத்தை ஏற்படுத்தும்.பற்சொத்தை பல் உடைதல் ஆகியவற்றால் ஆரம்பத்தில் பற் கூச்சம் ஏற்பட்டாலும், அதன் பின் பெரும்பாலும் பல்வலிதான் ஏற்படும். நித்திரையில் பல் கடித்தல் கடுமையாக இருந்தால் உங்கள் பற்களைப் பாதுகாக்க Tooth guard என்னும் உபகரணம் பாவிக்கலாம்.பற்களை வெண்மையாக்குவதற்கு உபயோகிக்கும் பற்பசைகள் பெரும்பாலும் பேக்கிங் பவுடர் மற்றும் பெரோட்சைட் போன்றவற்றைக் கொண்டிருக்கும். அவற்றை அதிகம் உபயோகித்தாலும் எனாமல் கரைந்து பற்கூச்சம் ஏற்படும்.சில தருணங்களில் நீங்கள் பல் மருத்துவரிடம் சென்று வந்தாலும் பற்கூச்சம் ஏற்படுவதுண்டு, பல் சுத்தப்படுத்துதல் மற்றும் பல பற்சிகிச்சைகளின் பின் ஏற்படக் கூடிய பற்கூச்சம் தற்காலிகமானது. ஒரு சில வாரங்கள் செல்ல தானே குணமாகிவிடும்.வாயைச் சுத்தமாக வைத்திருக்க உபயோகிக்கப்படும் சில மருந்துகளில் (Mouth Wash) அமிலத்தன்மை இருக்கிறது. ஏற்கனவே டென்ரின் சேதமுற்ற ஒருவர் தொடர்ந்து அத்தகைய வாய் கொப்பளிக்கும் மருந்துகளை நீண்ட காலம் உபயோகித்தால் சேதம் மோசமாகி பற்கூச்சத்தை கொண்டுவரும்.ஆனால் புளோரின் கலந்த வாய் கொப்பளிக்கும் மருந்துகள் பற்கூச்சத்தை குறைக்கும். எனவே பல் மருத்துவரின் ஆலோசனையுடனேயே அவற்றை உபயோகிப்பது உசிதமானது.பற்கூச்சம் ஏற்பட்டால் என்ன செய்யலாம்.வாய்ச் சுத்தத்தை ஒழுங்காகப் பேணுங்கள். காலை மாலை பல்துலக்குவதுடன், உணவுகள் நீராகாரங்களின் பின் வாயை அலசிக் கொப்பளிப்பது அவசியம். கடும் இனிப்பான மற்றும் புளிப்பு அமிலத் தன்மையுள்ள உணவு நீராகாரங்களின் பின் மிக முக்கியமாகும்.மென்மையான பற்தூரிகையை உபயோகியுங்கள்.முற்புறம் வளைந்த தூரிகைகள் பல்வரிசைகள் முழுவதையும் இலகுவாக அடைந்து சீர்மையாகத் துலக்க உதவும். தூரிகையால் கடுமையாக அழுத்தித் தேய்ப்பது கூடாது.மென்மையாகவும், கவனமாகவும் சரியான முறையிலும் பல் துலக்க வேண்டும். முக்கியமாக முரசும் பல்லும் இணையும் இடங்களில் மிக அவதானமாகத் துலக்கவும்.பற்கூச்சத்தைக் குறைப்பதற்கான விசேட பற்பசைகள் பரவலாகக் கிடைக்கின்றன. புளோரின் கலந்த பற்பசைகள் நல்லது. படுக்கப் போகும்போது அத்தகைய பசையில் சிறிது கூசும் பல்லின் மேல் தடவுவது உதவலாம். பற்களை வெண்மையாக்குவதற்கு உபயோகிக்கும் விசேட பற்பசைகள் பற்கூச்சத்திற்குக் கூடாது.அமிலத்தன்மை, இனிப்பு, புளிப்பு அதிகம் உள்ள உணவுகளைத் தவிருங்கள். கடும் சூடு, கடும் குளிருள்ளவையும் கூடாது.உடன் சிகிச்சை அவசியம்இதேபோல் பல்லில் ஏற்படும் பல் கூச்சம், ஈறு வீக்கம், பல் சொத்தை, வாய் நாற்றம் உள்ளிட்ட எந்தப் பிரச்னையாக இருந்தாலும் உடனடியாக பல் மருத்துவரை அணுகி சிகிச்சை செய்து கொள்வதன் மூலம் பல்லின் ஆரோக்யத்தையும், உடல் ஆரோக்கியத்தையும், அழகையும் பாதுகாக்க முடியும்
மருந்தாகும் உணவு வகைகள்…சில டிப்ஸ்…..
கீழ்க்காணும் உணவு பழக்க வழக்கங்களை கடைபிடிப்பதால் நமது உடல் ஆரோக்கியமாக இருக்கும். 1. நீங்கள், தினமும் ஐந்து விதமான பழங்களையும், சில காய்கறிகளையும் உணவாக எடுத்துக் கொள்பவரா..? ஆம் என்றால்… ஆரோக்கியமும் அழகும் எப்போதும் உங்க பக்கம்தான்! 2. தினமும் ஒரு டம்ளர் மாதுளை ஜூஸ் குடிப்பது… உடலில் ரத்த அழுத்தம், கொழுப்பு, நச்சுத்தன்மை என பல பிரச்னைகளுக்குத் தீர்வாக இருக்கும்.3. மனநலக் கோளாறு மற்றும் மூளை நரம்புகளில் பாதிப்பு உள்ளவர்களின் தினசரி உணவில் தர்பூசணி துண்டுகள் அவசியம். மன அழுத்தம், பயம் போன்ற பாதிப்புகளை தகர்க்கும் விட்டமின் பி-6 தர்பூசணியில் அதிகம். 4. ஆப்பிள் தோலில் பெக்டின் என்ற வேதிப்பொருள் கணிசமாக இருப்பதால், தோலோடு சாப்பிட வேண்டும். பெக்டின் நம் உடலின் நச்சுக்களை நீக்குவதில் எக்ஸ்பர்ட். 5. பூண்டு சாப்பிட்டீர்களென்றால்… உங்கள் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி வெகுவாக அதிகரிக்கும். வெள்ளை அணுக்கள் அதிகம் உற்பத்தியாவதோடு, கேன்சர் செல்கள் உருவாகாமலும் தடுக்கும். 6. சிவப்பணு உற்பத்திக்கு புடலங்காய், பீட்ரூட், முருங்கைக்கீரை, அவரை, பச்சைநிறக் காய்கள், உளுந்து, துவரை, கம்பு, சோளம்,கேழ்வரகு, பசலைக்கீரை போன்றவற்றை அடிக்கடி சேர்த்துக் கொள்ள வேண்டும். 7. பச்சைப் பயறு, மோர், உளுந்துவடை, பனங்கற்கண்டு, வெங்காயம், சுரைக்காய், நெல்லிக்காய், வெந்தயக்கீரை, மாதுளம் பழம், நாவற்பழம், கோவைக்காய், இளநீர் போன்றவை உடலின் அதிகப்படியான சூட்டைத் தணிக்கும். 8. சுண்டைக்காயை உணவில் சேர்த்தால்… நாக்குப்பூச்சித் தொல்லை, வயிற்றுப்பூச்சித் தொல்லை தூர ஓடிவிடும். 9 வெங்காயம், பூண்டு, சிறுகீரை, வேப்பிலை, மிளகு, மஞ்சள், சீரகம், கருப்பட்டி, வெல்லம், சுண்டைக்காய் வற்றல், செவ்விளநீர், அரைக்கீரை, எலுமிச்சை போன்றவை உடலில் உள்ள நச்சுத்தன்மை நீக்கும் உணவுகள். 10. பொன்னாங்கண்ணிக் கீரையைத் துவட்டல் செய்து சாப்பிட்டு வந்தால், மூல நோய் தணியும். இந்தக் கீரையின் தைலத்தை தலைக்குத் தேய்த்துக் குளித்து வந்தால்… கண் நோய்கள் நெருங்காது. 11. சமையலுக்குக் கைக்குத்தல் அரிசியைப் பயன்படுத்துவது மிக மிக நல்லது. கைக்குத்தல் அரிசியில் நார்ச் சத்துக்கள் நிறைந்துள்ளன. 12. சைக்கிள் கேப்பில் எல்லாம் ஸ்நாக்ஸ் சாப்பிடுவதை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும். அதற்குப் பதிலாக தானியங்கள், முளைகட்டிய பயறு போன்றவற்றைச் சாப்பிடலாம். 13. பப்பாளிப் பழங்கள் மிகவும் சத்து மிகுந்தவை. வாரம் ஒருமுறை பப்பாளிப் பழம் வாங்கிச் சாப்பிடுங்கள். கண்களுக்கும் நல்லது. 14. அதிக நாட்கள் உணவை ஃப்ரிட்ஜில் வைத்து சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். அப்படி வைக்கப்பட்ட உணவுகளில் சத்துக்கள் குறைந்து விடுவதோடு, உடல் ஆரோக்கியத்துக்கும் தீங்கினை ஏற்படுத்தும். 15. தினசரி சிறு துண்டு பைனாப்பிளை தேனில் ஊற வைத்து, அந்தத் தேனை இரண்டு வாரம் சாப்பிட்டால் கல்லீரல் ஆரோக்கியமாக இருக்கும். 16. பலமான விருந்து காரணமாக ஜீரணக் கோளாறா? புதினா, தேன், எலுமிச்சைச் சாறு… இவற்றில் ஒவ்வொரு ஸ்பூன் கலந்து சாப்பிட்டால் போதும். கல்லும் கரைந்துவிடும். 17. கேன்சர் செல்களைத் தகர்க்கும் சக்தி திராட்சையின் தோலில் இருக்கிறது. திராட்சை கொட்டைகளிலிருந்து பெறப்படும் மருந்துப் பொருட்கள், வைரஸ் எதிர்ப்புச் சக்தியை பெரிதும் தூண்டுகின்றன.