பனி கால பிரச்னைக்கு தீர்வு


பனி கால பிரச்னைக்கு தீர்வு. .


                         காது, மூக்கு, தொண்டையை குளிர் அதிகம் தாக்குகிறது. குளிர்கால பிரச்னைகளில் இருந்து காத்துக் கொள்வது பற்றி விளக்குகிறார் இ.என்.டி. டாக்டர் சாந்தி செல்வரங்கம். குளிர் காலத்தில் குழந்தைகள் மற்றும் வயதானவர்களை தொற்று நோய்கள் எளிதில் தாக்குகிறது. அவர்களிடம் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதுதான் காரணம். இரவு முதல் அதிகாலை வரை குளிரின் தாக்கம் அதிகம் இருப்பதால் இந்த நேரத்தில் மூச்சு திணறல், சளி என பிரச்னைகள் துவங்கும். எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் பட்சத்தில் இதுவே காய்ச்சலாக மாறும். அதைத் தடுக்க இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் குளிர் தாக்காத வண்ணம் காதுகளை மூடிக் கொள்ளலாம். குடிக்கும் தண்ணீர் சுத்தமானதாக இல்லாவிட்டால் தொண்டையில் நோய்த் தொற்று ஏற்பட்டு தொண்டை கட்டும். பேசுவதில் சிரமம் ஏற்படும். இருமல், வலியும் இருக்கும். ஆரம்பத்திலேயே முறையான சிகிச்சை அவசியம். கண்டுகொள்ளாமல் விட்டால் காய்ச்சலுடன் தொண்டை வலி, மூக்கு அடைப்பு, கண்ணில் நீர் வடிதல் போன்ற பிரச்னைகளும் ஒட்டிக் கொள்ளும்.

பனிக்காலத்தில் ஏற்படும் சளி பிரச்னைகளை கண்டு கொள்ளாமல் விடுவதால் அது சைனசாக மாறுகிறது. மூக்கின் காற்றறைகளில் சளி சேருவதால் சைனஸ் பிரச்னை உண்டாகிறது. இதற்கு சுய மருத்துவம் செய்து கொள்வது தவறு. அது நோயை முற்றிலும் குணப்ப டுத்தாமல் தலை வலியை உண்டாக்கும். சைனஸ் மற்றும் மூக்குத் தண்டு வளைவு உள்ளவர் களுக்கு குளிர்கால பிரச்னைகளின் தாக்கம் அதிகமாக இருக்கும். கைகளை கழுவிய பின்னரே எதையும் தொட வேண்டும். இதன் மூலம் வீட்டில் உள்ள மற்றவர்களுக்கு நோய் பரவாமல் தடுக்கலாம்.

பாதுகாப்பு முறை. . .

சளி பிடித் திருந்தால் நோய்த் தொற்றைத் தடுக்க திறந்த வெளிகளில் விற்கும் உணவு மற்றும் பழ வகைகள், பழச்சாறுகள் சாப்பிடக் கூடாது. பனியால் ஏற்படும் தோல் வறட்சியை விரட்ட வெளியில் சென்று வந்த பின்னர் தண்ணீரில் முகம் கழுவவும். மாய்சரைசிங் சோப்பை மட்டுமே பயன்படுத்தவும். வெயில் மற்றும் பனியால் தோலுக்கு ஏற்படும் பிரச்னைகளை சமாளிக்க தரமான கிரீம்களை பயன்படுத்தலாம். பனிக்காலத்தில் முடி கொட்டும். இதைத் தடுக்க முடி வறட்சியாக இல்லாமல் பார்த்துக் கொள்ளவும். குளிர் காலத்தில் அடிக்கடி நாக்கு வறட்சி ஏற்படும். தாகம் தீர நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். பிரிட்ஜில் வைத்த உணவுப் பொருட்களை அப்படியே சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. அவற்றை சூடுபடுத்தி சாப்பிட வேண்டும். தலைவலி மற்றும் சளித் தொல்லையின் போது டீ, காபி தவிர்க்கவும்.

காபின் உள்ள உணவுப் பொருட்களை சாப்பிடுவதால் சளித்தொல்லை அதிகரிக்கும். மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்துகள் எடுத்துக் கொள்வதன் மூலம் பக்க விளைவுகளைத் தவிர்க்கலாம்.

ரெசிபி. . .

புதினா ஜூஸ்: இஞ்சித் துருவல் 1 டேபிள் ஸ்பூன், புதினா இலை அரை கப் ஆகியவற்றை மிக்சியில் அரைத்து வடிகட்டிக் கொள்ளவும். இதில் 1 கப் எலுமிச்சை சாறு, 1 கப் சர்க்கரைத்தூள் சேர்க்கவும். தேவையான அளவு தண்ணீர் கலந்து 3 நாள் வரை பயன்படுத்தலாம். தினமும் 1 கப் புதினா ஜூஸ் குடிப்பதால் சளியை உருவாக்கும் கிருமிகள் அழிக்கப்படுகிறது.

பிரிஞ்சால் ராய்தா. . .

கத்தரிக்காய் 100 கிராம், புளிக்காத கெட்டி தயிர் கால் கப், பெரிய வெங்காயம் 1 பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாய் 1, தேவையான அளவு உப்பு சேர்க்கவும். கத்தரிக்காயை நெருப்பில் சுட்டு எடுக்கவும். மேல் தோலை உரித்து விட்டு பிசைந்து கொள்ளவும். தயிர், வெங்காயம், நறுக்கிய பச்சை மிளகாய், உப்பு சேர்த்து கெட்டியாகப் பிசைந்து கொள்ளலாம். சப்பாத்தி, சாதத்துடன் சேர்த்து சாப்பிடலாம். நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும்.

கொத்தமல்லி துவையல். . .

கொத்தமல்லி இரண்டு கப், தேங்காய் அரை கப், பொட்டுக்கடலை கால் கப், இஞ்சி, பூண்டு அரை டீஸ்பூன், பச்சை மிளகாய் 2, புளி சிறிதளவு எடுத்துக் கொள்ளவும். இவற்றுடன் தேவைக்கேற்ப உப்பு, தண்ணீர் சேர்த்து சேர்த்து அரைக்கவும்.

டயட். . .

குளிர் காலமாக இருந்தாலும் தண்ணீர் நிறைய குடிக்க வேண்டும். சுண்டல் வகைகள், முளை கட்டிய தானியங்களும் எடுத்துக் கொள்ளலாம். மிளகு சேர்த்த உணவுகள் எடுத்துக் கொள்ளலாம். ஒரு நாளில் இருவேளை உணவில் காய், கீரை மற்றும் பழ வகைகள் கண்டிப்பாக இருக்க வேண்டும். இரும்பு சத்துள்ள உணவுகளை கட்டாயம் உணவில் சேர்க்கவும்.

முருங்கைக்கீரை, பேரீச்சை, திராட்சை உள்ளிட்டவைகளை சேர்த்துக் கொள்ளலாம். குளிர்ச்சியான பதார்த்தங்கள், குளிர்பானங்கள், ஐஸ்கிரீம் போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. புளிக்காத தயிர் மற்றும் மோர் சேர்க்கலாம். வைட்டமின் சி சத்துள்ள பழங்கள் எடுத்துக் கொள்வதன் மூலம் உடல் இரும்புச் சத்தை உட்கிரகித்துக் கொள்ள உதவும். சத்தான உணவு முறை மூலம் குளிர்கால நோய் தொற்று ஏற்படாமல் தவிர்க்கலாம் என்கிறார் உணவு ஆலோசகர் சங்கீதா.

பாட்டி வைத்தியம். . .

* எலுமிச்சை சாற்றில் உப்பு சேர்த்து குடித்தால் சளியால் ஏற்படும் வாந்தி நிற்கும்.

* எலுமிச்சை பழச்சாற்றை காபியில் கலந்து குடிப்பதன் மூலம் தலைவலி தீரும். எலுமிச்சை இலைகளை தேநீரில் போட்டு கொதிக்க வைத்துக் குடித்தால் நோய் எதிர்ப்பு சக்தி உண்டாகும்.

* கடல் அழிஞ்சில் பட்டை, திப்பிலி, தாளிசபத்திரி மூன்றையும் சம அளவில் எடுத்து பொடி செய்து இரண்டு கிராம் பொடியை தினமும் இரண்டு வேளை தேனில் குழைத்து சாப்பிடலாம். சளி, இருமல், தும்மல் மற்றும் அலர்ஜியில் இருந்து தீர்வு கிடைக்கும்.

* கடுகை பொடி செய்து தொண்டையில் பற்றுப் போட்டால் தொண்டை வலி குணமாகும்.

* அரைக் கீரை தண்டுடன் மிளகு, மஞ்சள் ஆகியவற்றை சேர்த்து கஷாயம் வைத்து தினமும் அதிகாலையில் குடித்தால் சளி, இருமல் மற்றும் நுரையீரல்
தொடர்பான பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும்.

* அறுவதா இலையுடன் ஒரு துண்டு இஞ்சி சேர்த்து அரைத்து சாப்பிட்டால் மார்பு சளி குணமாகும்.

* ஆடாதொடா இலையை பொடி செய்து தேன் கலந்து சாப்பிட்டால் சளித் தொல்லை தீரும்.

* ஆலமர விழுதை பொடி செய்து காலை, மாலையில் சாப்பிட்டால் இருமல்

முகத்திற்கு ஆவி பிடிப்பதால் ஏற்படும் நன்மைகள்


முகத்திற்கு ஆவி பிடிப்பதால் ஏற்படும் நன்மைகள்..!

* முகத்தில் உள்ள அழுக்குகள் விரைவில் எளிதாக செல்வதற்கு,… இந்த முறை மிகவும் சிறந்தது. இதனால் எப்போது ஆவி பிடிக்கின்றோமோ, அப்போது ஆவி பிடித்து முடித்ததும், முகத்தை சுத்தமான துணியால் துடைக்கும் போது, முகத்தில் உள்ள இறந்த செல்கள் எளிதில் வந்துவிடும்.

* கரும்புள்ளிகள் மற்றும் வெள்ளை புள்ளிகளும் விரைவில் நீங்கிவிடும். அதற்கு 5 முதல் 10 நிமிடம் ஆவி பிடித்து, பின் தேய்த்தால், மூக்கில் காணப்படும் வெள்ளையானவை சீக்கிரம் வந்துவிடும். மேலும் அவை எளிதில் வருவதோடு, கரும்புள்ளிகள் வேரோடு வந்துவிடும். பின்னர் அவை வராது போய்விடும்.

* ஆவி பிடிப்பதால், முகப்பருக்கள் குறையும். எப்படியெனில் ஆவி பிடிக்கும் போது முகத்தில் உள்ள எண்ணெய் சுரப்பிகளில் இருந்து சுரக்கும் சருமத்திற்கு ஏற்ற இயற்கை எண்ணெயால், சருமம் எண்ணெய் பசையோடு இருப்பதால், துளைகளில் சேரும் அழுக்குகள் அல்லது டாக்ஸின்களால் ஏற்படும் பருக்கள், துணியால் துடைக்கும் போது போய்விடும்.

* மற்றொரு நன்மைகள் என்னவென்றால், முதுமை தோற்றதை தடுக்கும். எவ்வாறென்றால், சருமத்தில் அழுக்குகள் நீங்காமல் தங்கிவிடுவதால் தான், முகம் மிகவும் பளிச்சென்று இல்லாமல் முதுமை தோற்றத்தோடு காணப்படுகிறது. அப்போது ஆவி பிடித்தால், அவை அந்த அழுக்குகளை நீக்கி, பளிச்சென்று, இளமைத் தோற்றதை தரும்.

* பிம்பிள் இருக்கும் போது முகத்திற்கு 4-5 நிமிடம் ஆவி பிடிக்க வேண்டும். பின் 30 நிமிடம் ரிலாக்ஸ் ஆக இருந்து, பின்னர் ஐஸ் கட்டிகளால், முகத்தை தேய்த்தால், பிம்பிள் உடைந்துவிடும். இதனால் ஒரே நாளில் பிம்பிளை சூப்பராக குறைத்துவிடலாம்.

* ஆவி பிடிக்கும் போது முகத்திற்கு சரியாக இரத்த ஓட்டம் இருக்கும். மேலும் துளைகள் நன்கு எந்த ஒரு தொந்தரவும் இல்லாமல் சுவாசிக்கும். அதனால் சருமம் நன்கு அழகாக, பொலிவோடு இருக்கும்.
ஆகவே நேரம் இருக்கும் போது முகத்திற்கு ஆவி பிடித்து, சோர்ந்து போன சருமத்தை புத்துணர்ச்சியுடன், அழகாக மாற்றுங்கள்

பாதங்களை சரியா பராமரிக்க சில குறிப்புகள்


பாதங்களை சரியா பராமரிக்க சில குறிப்புகள்:-

* குதிக்கால்களில் அழுக்கில்லாமல் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். இதனால் எந்த ஒரு கிருமிகளும் பாதங்களை தாக்காமல் இருக்கும். இதற்கு தினமும் பாதங்களை வெதுவெதுப்பான நீரில், சிறிது நேரம் ஊற வைத்து, பின் அழுக்கை நீக்கும் ஃபூட் கிளீனரால் தேய்த்து, சுத்தம் செய்ய வேண்டும். இதனால் பாதங்களில் உள்ள அழுக்குகள் நீங்கிவிடும். 

* பாதங்களில் உள்ள துளைகளில் இருக்கும் அழுக்குகளை தினமும் ஒரு முறையாவது ஸ்கரப் செய்ய வேண்டும். இதனால் பாதத் துளைகளில் உள்ள இறந்த செல்கள் நீங்குவதோடு, இரத்த ஓட்டம் அதிகரித்து, பாதம் மென்மையாகவும், சுத்தமாகவும் இருக்கும். மேலும் ஸ்கரப் செய்தால், குதிகால்களில் இருக்கும் புண்கள் சரியாகும். 

* பாதங்களில் எண்ணெய் சுரப்பிகள் இல்லாததால், விரைவில் வறட்சியடைந்துவிடும். இதனால் வெடிப்புகள் வரும். ஆகவே ஒரு நாளைக்கு இரண்டு முறை மாய்ஸ்சுரைசரை தடவ வேண்டும். அதுவும் குளித்த பின்னும், இரவில் தூங்கும் முன்பும் தடவி வர வேண்டும். அதிலும் பேபி ஆயில் அல்லது ஏதாவது பாடி ஆயிலை தடவ வேண்டும். இவற்றால் பாதங்கள் மென்மையாகவும், சுத்தமாகவும், வெடிப்புகளின்றியும் இருக்கும். 

* பாதங்களை சுத்தம் செய்யும் போது மறக்காமல் கால் விரல் நகங்களையும் சுத்தம் செய்ய வேண்டும். இது எந்த காலத்திற்கும் முக்கியமான ஒன்று. ஏனெனில் பொதுவாக கிருமிகள் கால்விரல் நகங்களில் அதிகம் தங்கும். ஆகவே மறக்காமல் பெடிக்யூர் செய்ய வேண்டும். 

அழகு நிலையம் செல்வதற்கு நேரமில்லையென்றால், வீட்டிலேயே வெதுவெதுப்பான நீரில் சிறிது உப்பு சேர்த்து, அந்த கலவையில் கால்களை ஊற வைத்து, ஸ்கரப் செய்ய வேண்டும். ஸ்கரப் செய்த பின்னர், சுத்தமான நீரில் கழுவி, பின் ஏதேனும் மாய்ஸ்சுரைசரை தடவ வேண்டும். இதனால் அங்குள்ள இறந்த செல்கள் வெளியேறி, வறட்சியின்றி அழகாக காணப்படும். 

* குளிர்காலத்தில் எப்போதும் பாதங்களை மென்மையாக வைத்துக் கொள்ள சிறந்த வழியென்றால், அது கால்களில் எப்போதும் சாக்ஸ் அணிவது தான். அதிலும் மாய்ஸ்சுரைசரை பாதங்களில் தடவி, பிறகு சாக்ஸை முழு நாளும் அணிய வேண்டும். இதனால் குளிர்ச்சியில்லாமல் இருப்பதோடு, வறட்சியால் வெடிப்புகள் ஏற்படாமலும் இருக்கும்

கீரைகளின் மருத்துவ குணங்கள்


கீரைகளின் மருத்துவ குணங்கள்:-

பாலக்கீரை 

பாலக்கீரையால் சிறுநீர்கடுப்பு, நீரடைப்பு, ருசியின்மை, வாந்தி, ஆகிய நோய்கள் நீங்கும் உடல் சூட்டை தணிக்க வல்லது. தண்ணீர் தாகத்தையும் நாவரட்சியையும் போக்கவல்லது அதிக சீதபேதி ஆகியவற்றைக் குணமாக்கும்.அமிலம் மிகுதியால் ஏற்படும் நெஞ்சுக் கரிப்பை நீக்கும் வயிற்றுபுண்ணை ஆற்றவல்லது. அல்சருக்கு சிறந்த மருந்தாகும்.

முடக்கத்தான் கீரை

காசம் சொறி சிரங்கு கரப்பான் போன்ற நோய்கள் குணமாகும். இடுப்பு பிடிப்பு, இடுப்பு குடைச்சல், கைகால் வலி, கை கால் குடைச்சல் முதலியனவற்றை குணமாக்கும் நரம்பு சம்பந்தமான நோய்களை நீக்கும் ஆற்றலை பெற்றது. இக்கீரை நரம்பு மற்றும் தசைநார்களுக்கு வலுவூட்ட வல்லது. மூலநோய்களுக்கு சிறந்த மருந்து. 

அரைக்கீரை

பிரசவித்த பெண்களின் பிரசவித்த மெலிவை போக்கி உடலுக்கு சக்தியையும், பலத்தையும் கொடுக்கின்றன. இருமல், நுரையீரல் காய்ச்சல்களை போக்கும். நீர்க்கோர்வை, குளிர் காய்ச்சல், வாத காய்ச்சல், உடலில் தேங்கும் வாய்வு வாத நீர்களைப் போக்கும். பிடரி நரம்பு வலித்தல் நரம்பு வலி சன்னி தலைவலி ஆகியவற்றை குணப்படுத்தும்.

கரிசலாங்கண்ணி கீரை

கல்லீரல், மண்ணீரல் நுரையீரல், சிறுநீரகம், ஆகிய உறுப்புகளுக்கு நன்மை பயக்கிறது. இந்த உறுப்புகளில் தேங்கும் கழிவுகளை நீக்கி கெட்ட நீர்களை வெளியேற்றுகிறது. உடலில் கனத்தையும் பருமனையும் தொந்தியையும் கரைக்க விரும்புகிறவர்கள் இக்கீரையை நான்தோறும் பகல் உணவில் நான்கு வாரங்கள் தொடர்ந்து உண்டு வர பலன் கிடைக்கும். 

கருவேப்பிலை

இது உடலுக்கு பலம் உண்டாக்ககூடியது. பசியைத் தூண்டும் சக்தி வாய்ந்தது. பித்தத்தை தணித்து உடல் சூட்டை ஆற்றும் குணம் உடையது. வயிற்றோட்டம் பித்தவாந்தி உணவு செரியாமை வயிற்று உளைச்சல் போன்ற பிரச்சனைகளை குணமாக்கும்.

பசலைக்கீரை 

இக்கீரை நோய் தடுப்பு சக்தி உடையது. ரத்தத்தை உண்டாக்கும் நல்ல பலத்தை உடலுக்கு தரும். ரத்த அழுத்தத்தை குணப்படுத்தும் ஆற்றலுடையது. குறைந்த மற்றும் மிகுந்த அழுத்தமாயினும் இரண்டையும் சமன்படுத்தும் ஆற்றல் பெற்றது.

சிறுகீரை இக்கீரை உடலுக்கு வனப்பையும் அழகையும் தரும். வாதநோயை போக்கும் கல்லீரலுக்கு நன்மையைச் செய்யும். உடலில் தோன்றும் பித்த சம்பந்தமான நோய்களை இது கண்டுபிடிக்கும். விஷக்கடி முறிவாகப் பயன்படக்கூடியது. 

சுக்கான் கீரை

வயிறு சம்பந்தபட்ட எல்லா நோய்களையும் கட்டுபடுத்தும். வாயுவுத் தொல்லைகளைப் போக்கும் சூட்டு இருமல் ஆஸ்துமா மூச்சுத் திணறல் ஆகியவற்றைக் கட்டுபடுத்தும் ஈரலுக்கு வலுவைத் தந்து பசியைத் தூண்டும் செரிமான ஆற்றலையும் பெருக்கச்செய்யும். நெஞ்செரிச்சல் கடும் பித்தம் முதலியவற்றை கண்டிக்கும். பித்தத்தினால் ஏற்படும் வாந்தியைக் குணப்படுத்தும் வயிற்றுச்சூட்டை தணித்து வயிற்றில் ஜிரணமாகாத பொருட்களை ஜீரணிக்கச் செய்கிறது.

தூதுவாளைக் கீரை 

ஆஸ்தூமா நோயைக் குணப்படுத்தும் நிமோனியா, டைபாய்டு, சுபவாத சுரம் போன்ற நோய்களுக்கு இது மருந்தாகும். குளோரோமைசின் ஆன்டிபயாடிக்ஸ் போன்று மிக விரைவாகவும் வேகமாகவும் அபாயம் எதுவுமின்றி நோயாளியை பாதுகாக்கும். உடல்பலமும் முகவசீகரமும் அழகும் தரவல்லது.

பொன்னாங்கன்னி

இக்கீரையை உண்பதால் வாய்ப்புண், வாய்நாற்றம், மற்றும் வாய் சம்பந்தமான நோய்கள் நீங்கும். மூலச்சூடு கைகால் எரிச்சல் வயிற்றெறிச்சல் ஈரல் நோய் முதலியன நீங்கும். நல்ல பசியை உண்டாக்கும். கருவிழி நோய்கள் குணமாகும்.

மணத்தக்காளி கீரை 

உடலுக்கும் அழகுக்கும் வசீகரத் தன்மையும் கொடுக்கும். இக்கீரை இதயத்திற்கு பலமும் வலிமையும் ஊட்ட வல்லது. குடல் புண்ணுக்கு ஏற்றதொரு மருந்து இது. உடம்பின் களைப்பை நீக்கி நல்ல தூக்கத்தை கொடுக்கவல்லது. தலைவலிக்கு சிறந்த மருந்து.

முருங்கைக் கீரை

நீரிழிவு வியாதியை நீக்கும் ஆற்றலுடையது. நெஞ்சில் உள்ள கோழையை அகற்றும் தன்மை பெற்றது. சிறுநீரை பெருக்கித் தள்ளும் ஆற்றல் கொண்டது. ரத்த விருத்திக்கு ஏற்றது. தொண்டை தொடர்பான நோய்களை நீக்கும்

பற்கூச்சம் ஏன் ஏற்படுகிறது


பற்கூச்சம் ஏன் ஏற்படுகிறது :-

பற்கூச்சம் ஏன்? 
பிறிட்சில் இருந்து எடுத்தது போன்ற குளிரான உணவுகளை (ஐஸ்கிறீம்) உண்ணும் போது அல்லது, குளிரவைத்த மென்பானங்களை அருந்தும்போது பற்கள் கூசும்.
அதேபோல புளிப்பு அதிகம் உள்ள பழங்கள், புளிப்பான உணவுப் பண்டங்களை உண்ணும்போதும் கூசும். சிலருக்கு கடுமையான இனிப்பும் கூசவைக்கும்.

பொதுவாக எமது பற்களின் மேற்புறம் எனாமல் எனப்படுவது கடினமான ஒரு பூச்சினால் பாதுகாக்கப்பெற்றுள்ளது, எமது உடலின் மிகக் கடுமையான பகுதி எனாமல்தான். இது உணர்வற்றது அதனால் வலி தெரிவதில்லை.

ஆனால் எனாமலுக்கு உள்ளே மென்மையான நரம்புச் செறிவுள்ள டென்ரீன் இருக்கிறது. வெளியே உள்ள எனாமலுக்கு சேதம் ஏற்பட்டு உள்ளே உள்ள டென்ரீன் வெளிப்பட்டால் அது வலியை உணரும். எனவே எனாமலில் சிதைவினால் ஏற்படுவதே பற்கூச்சம்

பற்களும் முரசும் சந்திக்கும் பகுதியில் எனாமலின் தடிப்பு மிகக் குறைவாகவே இருக்கும். அதனால் சிறிய சேதம் அதில் ஏற்பட்டாலும் பற்கூச்சம் ஏற்படும்.

காரணங்கள்
மிக முக்கிய காரணம் நீங்கள் உபயோகிக்கும் பிரஸ்சும் அதனை நீங்கள் உபயோகிக்கும் முறையும்தான்.

பிரஸ்சைப் பொறுத்தவரையில் மென்மையான அல்லது நடுத்தரமுள்ள பிரஸ்சை (Soft or Medium)மட்டுமே உபயோகியுங்கள்.

மருத்துவர் ஆலோசனை கூறினால் மட்டுமே தடிப்பமான (Hard) பிரஸ் தேவை.
பல் துலக்கும் முறை
பல் துலக்கும் முறையும் முக்கியமானதாகும்.
அடுப்புக் கரி மண்டிய சமையல் பாத்திரத்தை அழுத்தித் தேய்த்துக் கழுவுவதுபோல பிரஸ்சால் கண்டபடி பற்களை உரச வேண்டாம். அப்படிச் செய்வதனால் பற்களை மட்டுமல்லாது முரசுகளையும் புண்படுத்திவிடும்.

மேல்வாய்ப் பற்களை மேலிருந்து கீழ் நோக்கித் துலக்குங்கள். அதே போல கீழ்வாய்ப் பற்களை கீழிருந்து மேல் நோக்கித் துலக்குங்கள். இவ்வாறு துலக்கும்போது முரசு காயப்பட்டு தேயாது.

பல் அரிப்பு Dental Erosion என்பது பற்கூச்சத்திற்கான மற்றொரு காரணமாகும்.

இது பல்லின் மேற்பரப்பான எனாமலில் ஏற்படும் நுண் அரிப்புகளாகும். அமிலத் தன்மையான உணவுகளாலும் பானங்களாலும் அவ்வாறு ஏற்படும். எனாமல் கரைந்தால் உள்ளே இருக்கும் டென்ரீன் வெளித் தெரியவரும்.

முரசு கரைதல் மற்றொரு காரணமாகும். முரசின் கன அளவு குறைந்து கொண்டு போகும். வயதாகும் போது இது தானாக நடக்கும் செயலாகும்.
முரசு கரைந்து செல்லும்போது பற்களின் வேர் வெளித் தெரிய ஆரம்பிக்கும். பல் வேரை எனாமல் மூடியிருப்பதில்லை.
அதனால்தான் முரசு கரைந்து அவை வெளியே வந்ததும் பற் கூச்சம் ஏற்படுகிறது.

முரசு நோய்கள் மற்றொரு காரணமாகும் வாயை ஒழுங்காகச் சுத்தம் செய்யாது விட்டால் பற்களின் மேல் அழுக்கு மென்படலமாகப் படிய ஆரம்பிக்கும். இது பிளாக் (Dental Plaque) எனப்படும். இதைக் கவனியாது விட்டால் அது இறுகி கறையாகப் (Tartar) படியும். இவ்வாறான கறை படர்ந்தால் முரசு கரைதல் தீவிரமாகும். முரசு நோய்களுக்கு நீரிழிவு நோயும் முக்கிய காரணியாகும்.

பல்லுக் கடித்தல் பழக்கம் காரணமாக பற்களின் எனாமல் படிப்படியாகக் கரைந்து பற் கூச்சத்தை ஏற்படுத்தும்.
பற்சொத்தை பல் உடைதல் ஆகியவற்றால் ஆரம்பத்தில் பற் கூச்சம் ஏற்பட்டாலும், அதன் பின் பெரும்பாலும் பல்வலிதான் ஏற்படும். நித்திரையில் பல் கடித்தல் கடுமையாக இருந்தால் உங்கள் பற்களைப் பாதுகாக்க Tooth guard என்னும் உபகரணம் பாவிக்கலாம்.

பற்களை வெண்மையாக்குவதற்கு உபயோகிக்கும் பற்பசைகள் பெரும்பாலும் பேக்கிங் பவுடர் மற்றும் பெரோட்சைட் போன்றவற்றைக் கொண்டிருக்கும். அவற்றை அதிகம் உபயோகித்தாலும் எனாமல் கரைந்து பற்கூச்சம் ஏற்படும்.

சில தருணங்களில் நீங்கள் பல் மருத்துவரிடம் சென்று வந்தாலும் பற்கூச்சம் ஏற்படுவதுண்டு, பல் சுத்தப்படுத்துதல் மற்றும் பல பற்சிகிச்சைகளின் பின் ஏற்படக் கூடிய பற்கூச்சம் தற்காலிகமானது. ஒரு சில வாரங்கள் செல்ல தானே குணமாகிவிடும்.

வாயைச் சுத்தமாக வைத்திருக்க உபயோகிக்கப்படும் சில மருந்துகளில் (Mouth Wash) அமிலத்தன்மை இருக்கிறது. ஏற்கனவே டென்ரின் சேதமுற்ற ஒருவர் தொடர்ந்து அத்தகைய வாய் கொப்பளிக்கும் மருந்துகளை நீண்ட காலம் உபயோகித்தால் சேதம் மோசமாகி பற்கூச்சத்தை கொண்டுவரும்.

ஆனால் புளோரின் கலந்த வாய் கொப்பளிக்கும் மருந்துகள் பற்கூச்சத்தை குறைக்கும். எனவே பல் மருத்துவரின் ஆலோசனையுடனேயே அவற்றை உபயோகிப்பது உசிதமானது.

பற்கூச்சம் ஏற்பட்டால் என்ன செய்யலாம்.
வாய்ச் சுத்தத்தை ஒழுங்காகப் பேணுங்கள். காலை மாலை பல்துலக்குவதுடன், உணவுகள் நீராகாரங்களின் பின் வாயை அலசிக் கொப்பளிப்பது அவசியம். கடும் இனிப்பான மற்றும் புளிப்பு அமிலத் தன்மையுள்ள உணவு நீராகாரங்களின் பின் மிக முக்கியமாகும்.

மென்மையான பற்தூரிகையை உபயோகியுங்கள்.
முற்புறம் வளைந்த தூரிகைகள் பல்வரிசைகள் முழுவதையும் இலகுவாக அடைந்து சீர்மையாகத் துலக்க உதவும். தூரிகையால் கடுமையாக அழுத்தித் தேய்ப்பது கூடாது.

மென்மையாகவும், கவனமாகவும் சரியான முறையிலும் பல் துலக்க வேண்டும். முக்கியமாக முரசும் பல்லும் இணையும் இடங்களில் மிக அவதானமாகத் துலக்கவும்.

பற்கூச்சத்தைக் குறைப்பதற்கான விசேட பற்பசைகள் பரவலாகக் கிடைக்கின்றன. புளோரின் கலந்த பற்பசைகள் நல்லது. படுக்கப் போகும்போது அத்தகைய பசையில் சிறிது கூசும் பல்லின் மேல் தடவுவது உதவலாம். பற்களை வெண்மையாக்குவதற்கு உபயோகிக்கும் விசேட பற்பசைகள் பற்கூச்சத்திற்குக் கூடாது.

அமிலத்தன்மை, இனிப்பு, புளிப்பு அதிகம் உள்ள உணவுகளைத் தவிருங்கள். கடும் சூடு, கடும் குளிருள்ளவையும் கூடாது.

உடன் சிகிச்சை அவசியம்
இதேபோல் பல்லில் ஏற்படும் பல் கூச்சம், ஈறு வீக்கம், பல் சொத்தை, வாய் நாற்றம் உள்ளிட்ட எந்தப் பிரச்னையாக இருந்தாலும் உடனடியாக பல் மருத்துவரை அணுகி சிகிச்சை செய்து கொள்வதன் மூலம் பல்லின் ஆரோக்யத்தையும், உடல் ஆரோக்கியத்தையும், அழகையும் பாதுகாக்க முடியும்