நாவல் மரத்தின் மருத்துவ குணங்கள்:-
வேர்வெயில் காலத்தில் எழும் அடங்காதத் தாகத்தைத் தீர்ப்பதில் நாவல் மர வேருக்கு இருக்கும் பங்கு பலரும் அறியாதது. நெல்லிக்கட்டை, நன்னாரி வேர்போல நாவல் மர வேர் கட்டைத்துண்டு ஒன்றையும் அருந்தும் நீரில் ஊறப்போட்டால் அந்த நீரானது எப்பேர்ப்பட்ட அடங்காதத் தாகத்தையும் கட்டுப்படுத்திவிடும். சர்க்கரை வியாதியஸ்தர்களுக்கு மேற்படி அடங்காதத் தாகம் எப்போதும் உண்டு. அவர்கள் அனைத்து நாட்களிலும் இந்த நாவல் வேர்க்கட்டை ஊறிய நீரைக் குடிக்கலாம். நாவல் மரம் துவர்ப்பு வகையின் கீழ் வரும். இந்தத் துவர்ப்புச் சுவையானது காயங்களை ஆற்றக்கூடியது என்பதால், நாவல் மர வேரை இடித்துப் புண்கள் மீது கட்டுவார்கள்.மரப்பட்டைமுற்றிய பட்டையைத் தூள் செய்து பவுடராகச் சேகரித்து வைத்துக்கொண்டால், புண்களைக் குணப்படுத்த நீண்ட கால மருந்தாக உதவும். பட்டையின் உள் சதைப் பகுதியை நீர்விட்டு அரைத்து மோர் அல்லது தயிருடன் சேர்த்துச் சாப்பிட்டால், உடல் சூட்டினால் வரும் கடுப்பு, கழிச்சல் தீரும். சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்க, முற்றியப் பட்டையைக் கஷாயம் வைத்துக் குடிக்கும் பழக்கம் நமது பாரம்பரியத்தில் உண்டு. சித்த மருத்துவத்தில், சர்க்கரை நோய்க்கு பிரதானக் கஷாயமாக இருக்கும் ஆவாரக் குடிநீர் தயாரிப்பிலும் நாவல் மரப் பட்டைக்கு முக்கிய இடம் உண்டு. பெரும்பாட்டுப் பிரச்னையில் அவதியுறும் பெண்களுக்கு இரும்புச் சத்து இழப்பு அதிகமாக இருக்கும். இதனை ஈடுகட்ட சித்த மருத்துவத்தில் பலன் அளிக்கும் செந்தூர பஸ்பம் தயாரிப்பிலும் நாவல் மரப்பட்டைக்கு முக்கிய இடம் உண்டு. இலைவெயில் காலத்தில் படுத்தும் கழிச்சல் தீர, நாவல் மர இலைக் கொழுந்துகளைச் சேகரித்து அரைத்துத் தயிரில் சேர்த்துச் சாப்பிட வேண்டும். இது மட்டும் அல்ல.... இளம் கொழுந்துகளாய்ச் சம அளவுக்கு மாவிலைக் கொழுந்துகளுடன் சேர்த்து அரைத்துத் தயிருடன் சாப்பிட்டால், தீராத மூலக்கடுப்பும் நாளடைவில் கட்டுக்குள் வரும்.பழம்நாவல் மரம் தரும் கனிந்தப் பழங்களை விரும்பாதவர்கள் யாரும் இல்லை. என்ன, அதிகம் சாப்பிட்டால் தொண்டைக்கட்டு வரும். இதைத் தவிர்க்க உப்பில் தோய்த்துப் பழங்களை ருசிக்கலாம். சுவைக்கு சுவையுமாச்சு; உடலுக்கு மாமருந்துமாச்சு. இரைப்பையை வலுப்படுத்தவும் மொத்த உணவுப் பாதையை உறுதி செய்யவும் தேவைப்படும் அடிப்படைச் சத்துக்கள் நாவல் பழத்தில் உண்டு. இதன் துவர்ப்பும் குளிர்ச்சியும் இதயத்தை வலுப்படுத்தக்கூடியவை. கிராமப்புறங்களில், எட்டிக்கொட்டை உண்டதால் ஆன விஷ முறிவுக்கு நாவல் பழச் சாறு அல்லது மரப்பட்டைக் கஷாயத்தை மிகச் சிறந்த முதலுதவி மருந்தாகப் பயன்படுத்துகிறார்கள். சர்க்கரை வியாதியஸ்தர்கள் சாப்பிட உகந்தது நாவல் பழம். ஆனால், சளி - சைனஸ் பிரச்னை உள்ளவர்கள் மட்டும் இடைவெளிவிட்டு அளவோடு சாப்பிடலாம். பிறக்கும் குழந்தைக்குக் கபம் பாதிக்க வாய்ப்பு உள்ளதால், கர்ப்பம் தரித்தப் பெண்களும் இந்தப் பழத்தை அளவோடு சாப்பிட வேண்டும்.கொட்டைநாவல் மரம் முழுமையுமே சர்க்கரை நோய்க்கு எதிரான மருத்துவ மகத்துவத்தை உள்ளடக்கியது. நாவல் பழத்தின் கொட்டையில் இந்த மருத்துவ வீரியம் இன்னும் அதிகம். கொட்டையை நிழலில் காயவைத்து மாவாக அரைத்துவைத்துக்கொண்டு, காலை, மாலை இரு வேளைகளும் அரைத் தேக்கரண்டி மாவினை வெந்நீரில் சேர்த்து அருந்த சர்க்கரை நோய் கட்டுக்குள் வரும். ஆடு தின்னாப் பாலைச் செடியை சாறு செய்து, அதில் இந்த நாவல் கொட்டை மாவையும் சேர்த்து பட்டாணி அளவிலான மாத்திரைகளாக உருட்டி வைத்துகொண்டு, வேளைக்கு இரண்டாக உண்டுவர சர்க்கரை நோய்க்கு மிகச் சிறந்த பலன் கிடைக்கும்.
மஞ்சளும் அழகு குறிப்பும்:-
மஞ்சளை அதன் இலையோடு சேர்த்து பாசிப்பயிறு மாவோடு கலந்து தினமும் உடலில் பூசிக் குளித்தால் சுருக்கம் நீங்கும். மஞ்சள் இலை மற்றும் குப்பைமேனி இலை இரண்டையும் அரைத்து குளித்த பிறகு உடலில் பூசிக் கழுவுவதை தினமும் செய்தால் பூனை முடிகள் உதிரும். கழுத்து, கணுக்கால்களில் கருமையைப் போக்க மஞ்சள் தூளை தயிரில் கலந்து தடவி வரவும். மஞ்சளுடன் வேப்பிலையை அரைத்துப் பூசி பிறகு குளிர் நீரில் கழுவினால் முகப்பருவில் சீழ் பிடிக்காது. முகத்தோல் சொரசொரப்பாக இருந்தால் மஞ்சளோடு துளசியை அரைத்துப் பூசி வரவும். மஞ்சள் கிழங்கு ஒன்றுடன் ஒரு எலுமிச்சை இலையை சேர்த்தரைத்துப் பூசினால் முகம் பளிச்சென்று மாறும். மஞ்சளை அரைத்துப் பூசத் தேவையில்லை, மஞ்சள் கலந்த நீராவி கூட அழகை கூட்டும். குண்டு மஞ்சள் கிழங்கு, கெட்டிக் கிழங்கு முக அழகை கூட்டி அதிக நிறம் கொடுக்கும்.பாதவெடிப்பிற்கு குண்டு மஞ்சள் கிழங்கை அரைத்துப் பூசி வந்தால் போதும்.
கண்கள் புத்துணர்வுக்கு...
தேயிலைகளை நன்கு கசக்கி பசை போலாக்கி சுத்தமான வெள்ளைத் துணியில் முடிந்து, ஃப்ரீஸரில் சிறிது நேரம் வைத்து பின்பு அதை எடுத்து கண்களின் மீதும் கண்களைச் சுற்றியும் ஒத்தடம் தர, கண்களின் அடியில் ஏற்படும் "பை" போன்ற வீக்கம் போன்றவைகள் நீங்கி கண்கள் புத்துணர்வு பெறும்.ஆலம் இலையின் காம்பில் வரும் பால் சருமப்படை, தோல் போன்றவைகளுக்கு நல்ல மருந்து.நம் பற்களுக்கு பளபளப்பும், நல்ல வெண்மையும் தரக்கூடியது, பிரியாணி இலை. இதைப் பற்களில் வைத்துத் தேய்க்க பற்கள் பளபளப்பாகும். வாய் நாற்றமும் தொலையும்."ஆஸ்டிரஜன்" குணத்தைக் கொண்ட புதினா இலைகளை நீரிலிட்டு கொதிக்க வைத்து, மிதமான சூடு வரும் வரை ஆற விட்டு, அதைப் பயன்படுத்தி முகம் கழுவுவது சருமத்திற்கு நல்லது.வாழையிலையில் தொன்னை அமைத்து அதில் பொறுக்கக்கூடிய சூட்டில் எண்ணெய் வைத்து தலைக்கு மசாஜ் செய்வதும் சிறப்பம்சம்.
ஆல்கஹால் குடித்தால் கருச்சிதைவு ஏற்படுமா?
ஆல்கஹாலை அளவாக குடித்தால், இதய நோய், இரத்த அழுத்தம் போன்றவை வராமல் இருக்கும் என்று பல ஆய்வுகள் கூறுகின்றன. ஆனால் அதே சமயம் அதனை கர்ப்பமாக இருக்கும் போதோ அல்லது கர்ப்பத்திற்கு முயற்சிக்கும் போதோ சாப்பிட்டால், கருச்சிதைவு ஏற்படும் வாய்ப்புக்கள் உள்ளது. எனவே தான், கர்ப்பிணிகள் மற்றும் கர்ப்பத்திற்கு முயற்சிப்போரிடம், ஆல்கஹால் பருக வேண்டாம் என்று கூறுகின்றனர். சிலர் ஆல்கஹால் எப்படி குழந்தையின் வளர்ச்சிக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்று கேட்கலாம். தற்போது ஆரோக்கியமற்ற பழக்கவழக்கங்களாலேயே கருச்சிதைவு ஏற்படுகிறது. அவற்றில் ஒன்றான ஆல்கஹால் குடித்தால் ஏற்படாத என்ன? ஆகவே குழந்தை நன்கு ஆரோக்கியமாக வளர வேண்டும் என்று நினைப்பவர்கள், கர்ப்பத்தின் போது ஆல்கஹால் பருகாமல் இருக்க வேண்டும். அதற்கான காரணத்தை உங்களுக்காக கூறியுள்ளோம். அதைப் படித்து தெரிந்து கொண்டு, பின் முடிவெடுங்கள்.* ஆய்வுகள் பலவற்றில் 4-5 டம்ளர் ஆல்கஹால் குடித்தால், முதல் மூன்று மாதங்களில் கருச்சிதைவு ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை அவ்வாறு முதல் மூன்று மாதங்களில் கருச்சிதைவை ஏற்படுத்தாவிட்டாலும், வயிற்றில் உள்ள கருவிற்கு எந்நேரத்திலும் ஆபத்தை ஏற்படுத்தும். * பொதுவாக கருச்சிதைவு ஏற்படுவதற்கு கருமுட்டையில் உள்ள சைட்டோபிளாசத்தில் ஏதாவது மாற்றம் ஏற்படுவதே ஆகும். ஏனெனில் சைட்டோபிளாசம் கருமுட்டையை பாதுகாக்கும் ஒரு படலம். அத்தகைய படலத்தில் ஆல்கஹால் படும்போது, அதில் உள்ள அமிலமானது படலஙத்தில் இடையூறு உண்டாக்கி, பின் அவை இறுதியில் கருச்சிதைவிற்கு வழிவகுக்கிறது. * ஆல்கஹால் குடித்தால், கருச்சிதைவு ஏற்படாவிட்டாலும், அவை குழந்தையின் வளர்ச்சி, மனநிலை பாதிப்பு, நடத்தையில் பிரச்சனை, முகம் சார்ந்த குறைபாடுகள், நரம்பு செயலிழப்பு போன்றவை ஏற்படும். அதுமட்டுமின்றி, சில நேரங்களில் கர்ப்பிணிகளுக்கே இதயம், நரம்பு மண்டலத்தில் பிரச்சனை, அதிகப்படியாக உடல் எடை அதிகரித்தல் போன்றவையும் ஏற்படும். * ஆல்கஹால் பருகினால், அவை இனப்பெருக்க மண்டலத்திற்கே பெரும் பாதிப்பை உண்டாக்கும். ஒருவேளை அளவுக்கு அதிகமாக குடித்தால், கருச்சிதைவு ஏற்பட்டு, பின் எப்போதுமே கர்ப்பம் தரிப்பதற்கு முடியாமல் போய்விடும். ஏனெனில் அதிகப்படியான ஆல்கஹால் கருமுட்டைகளுக்கு பெரும் பாதிப்பை உண்டாக்கி, பின் கருப்பை செயல்படாமல் செய்துவிடும். அவ்வாறு கருப்பை பிரச்சனை உள்ளதென்றால், முறையற்ற மாதவிடாய் சுழற்சி மற்றும் கர்ப்பம் தரிப்பது தாமதமாதல் அறிகுறியாகும். நிறைய கர்ப்பிணிகள் கர்ப்பத்தின் ஆரம்ப காலத்தில் குடித்தால் தான் கருச்சிதைவு ஏற்படும், இரண்டாம் மற்றும் மூன்றாம் பருவ நிலைகளில் பருகினால், கருச்சிதைவு ஏற்படாது என்று நினைக்கின்றனர். அது உண்மை தான். ஆனால் கருச்சிதைவிற்கு பதிலாக, குழந்தையின் வளர்ச்சி மற்றும் வேறு சிலவற்றில் குழந்தைக்கு பிரச்சனை அதிகம் ஏற்படும். எனவே இவற்றை மனதில் கொண்டு, கர்ப்பிணிகள் மற்றும் கர்ப்பம் தரிப்பதற்கு ஆசைப்படும் பெண்கள், ஆல்கஹால் அருந்தலாமா? வேண்டாமா? என்று முடிவெடுங்கள்.
பனி கால பிரச்னைக்கு தீர்வு. .
காது, மூக்கு, தொண்டையை குளிர் அதிகம் தாக்குகிறது. குளிர்கால பிரச்னைகளில் இருந்து காத்துக் கொள்வது பற்றி விளக்குகிறார் இ.என்.டி. டாக்டர் சாந்தி செல்வரங்கம். குளிர் காலத்தில் குழந்தைகள் மற்றும் வயதானவர்களை தொற்று நோய்கள் எளிதில் தாக்குகிறது. அவர்களிடம் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதுதான் காரணம். இரவு முதல் அதிகாலை வரை குளிரின் தாக்கம் அதிகம் இருப்பதால் இந்த நேரத்தில் மூச்சு திணறல், சளி என பிரச்னைகள் துவங்கும். எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் பட்சத்தில் இதுவே காய்ச்சலாக மாறும். அதைத் தடுக்க இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் குளிர் தாக்காத வண்ணம் காதுகளை மூடிக் கொள்ளலாம். குடிக்கும் தண்ணீர் சுத்தமானதாக இல்லாவிட்டால் தொண்டையில் நோய்த் தொற்று ஏற்பட்டு தொண்டை கட்டும். பேசுவதில் சிரமம் ஏற்படும். இருமல், வலியும் இருக்கும். ஆரம்பத்திலேயே முறையான சிகிச்சை அவசியம். கண்டுகொள்ளாமல் விட்டால் காய்ச்சலுடன் தொண்டை வலி, மூக்கு அடைப்பு, கண்ணில் நீர் வடிதல் போன்ற பிரச்னைகளும் ஒட்டிக் கொள்ளும்.பனிக்காலத்தில் ஏற்படும் சளி பிரச்னைகளை கண்டு கொள்ளாமல் விடுவதால் அது சைனசாக மாறுகிறது. மூக்கின் காற்றறைகளில் சளி சேருவதால் சைனஸ் பிரச்னை உண்டாகிறது. இதற்கு சுய மருத்துவம் செய்து கொள்வது தவறு. அது நோயை முற்றிலும் குணப்ப டுத்தாமல் தலை வலியை உண்டாக்கும். சைனஸ் மற்றும் மூக்குத் தண்டு வளைவு உள்ளவர் களுக்கு குளிர்கால பிரச்னைகளின் தாக்கம் அதிகமாக இருக்கும். கைகளை கழுவிய பின்னரே எதையும் தொட வேண்டும். இதன் மூலம் வீட்டில் உள்ள மற்றவர்களுக்கு நோய் பரவாமல் தடுக்கலாம்.பாதுகாப்பு முறை. . .சளி பிடித் திருந்தால் நோய்த் தொற்றைத் தடுக்க திறந்த வெளிகளில் விற்கும் உணவு மற்றும் பழ வகைகள், பழச்சாறுகள் சாப்பிடக் கூடாது. பனியால் ஏற்படும் தோல் வறட்சியை விரட்ட வெளியில் சென்று வந்த பின்னர் தண்ணீரில் முகம் கழுவவும். மாய்சரைசிங் சோப்பை மட்டுமே பயன்படுத்தவும். வெயில் மற்றும் பனியால் தோலுக்கு ஏற்படும் பிரச்னைகளை சமாளிக்க தரமான கிரீம்களை பயன்படுத்தலாம். பனிக்காலத்தில் முடி கொட்டும். இதைத் தடுக்க முடி வறட்சியாக இல்லாமல் பார்த்துக் கொள்ளவும். குளிர் காலத்தில் அடிக்கடி நாக்கு வறட்சி ஏற்படும். தாகம் தீர நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். பிரிட்ஜில் வைத்த உணவுப் பொருட்களை அப்படியே சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. அவற்றை சூடுபடுத்தி சாப்பிட வேண்டும். தலைவலி மற்றும் சளித் தொல்லையின் போது டீ, காபி தவிர்க்கவும்.காபின் உள்ள உணவுப் பொருட்களை சாப்பிடுவதால் சளித்தொல்லை அதிகரிக்கும். மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்துகள் எடுத்துக் கொள்வதன் மூலம் பக்க விளைவுகளைத் தவிர்க்கலாம்.ரெசிபி. . .புதினா ஜூஸ்: இஞ்சித் துருவல் 1 டேபிள் ஸ்பூன், புதினா இலை அரை கப் ஆகியவற்றை மிக்சியில் அரைத்து வடிகட்டிக் கொள்ளவும். இதில் 1 கப் எலுமிச்சை சாறு, 1 கப் சர்க்கரைத்தூள் சேர்க்கவும். தேவையான அளவு தண்ணீர் கலந்து 3 நாள் வரை பயன்படுத்தலாம். தினமும் 1 கப் புதினா ஜூஸ் குடிப்பதால் சளியை உருவாக்கும் கிருமிகள் அழிக்கப்படுகிறது.பிரிஞ்சால் ராய்தா. . .கத்தரிக்காய் 100 கிராம், புளிக்காத கெட்டி தயிர் கால் கப், பெரிய வெங்காயம் 1 பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாய் 1, தேவையான அளவு உப்பு சேர்க்கவும். கத்தரிக்காயை நெருப்பில் சுட்டு எடுக்கவும். மேல் தோலை உரித்து விட்டு பிசைந்து கொள்ளவும். தயிர், வெங்காயம், நறுக்கிய பச்சை மிளகாய், உப்பு சேர்த்து கெட்டியாகப் பிசைந்து கொள்ளலாம். சப்பாத்தி, சாதத்துடன் சேர்த்து சாப்பிடலாம். நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும்.கொத்தமல்லி துவையல். . .கொத்தமல்லி இரண்டு கப், தேங்காய் அரை கப், பொட்டுக்கடலை கால் கப், இஞ்சி, பூண்டு அரை டீஸ்பூன், பச்சை மிளகாய் 2, புளி சிறிதளவு எடுத்துக் கொள்ளவும். இவற்றுடன் தேவைக்கேற்ப உப்பு, தண்ணீர் சேர்த்து சேர்த்து அரைக்கவும்.டயட். . .குளிர் காலமாக இருந்தாலும் தண்ணீர் நிறைய குடிக்க வேண்டும். சுண்டல் வகைகள், முளை கட்டிய தானியங்களும் எடுத்துக் கொள்ளலாம். மிளகு சேர்த்த உணவுகள் எடுத்துக் கொள்ளலாம். ஒரு நாளில் இருவேளை உணவில் காய், கீரை மற்றும் பழ வகைகள் கண்டிப்பாக இருக்க வேண்டும். இரும்பு சத்துள்ள உணவுகளை கட்டாயம் உணவில் சேர்க்கவும்.முருங்கைக்கீரை, பேரீச்சை, திராட்சை உள்ளிட்டவைகளை சேர்த்துக் கொள்ளலாம். குளிர்ச்சியான பதார்த்தங்கள், குளிர்பானங்கள், ஐஸ்கிரீம் போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. புளிக்காத தயிர் மற்றும் மோர் சேர்க்கலாம். வைட்டமின் சி சத்துள்ள பழங்கள் எடுத்துக் கொள்வதன் மூலம் உடல் இரும்புச் சத்தை உட்கிரகித்துக் கொள்ள உதவும். சத்தான உணவு முறை மூலம் குளிர்கால நோய் தொற்று ஏற்படாமல் தவிர்க்கலாம் என்கிறார் உணவு ஆலோசகர் சங்கீதா.பாட்டி வைத்தியம். . .* எலுமிச்சை சாற்றில் உப்பு சேர்த்து குடித்தால் சளியால் ஏற்படும் வாந்தி நிற்கும்.* எலுமிச்சை பழச்சாற்றை காபியில் கலந்து குடிப்பதன் மூலம் தலைவலி தீரும். எலுமிச்சை இலைகளை தேநீரில் போட்டு கொதிக்க வைத்துக் குடித்தால் நோய் எதிர்ப்பு சக்தி உண்டாகும்.* கடல் அழிஞ்சில் பட்டை, திப்பிலி, தாளிசபத்திரி மூன்றையும் சம அளவில் எடுத்து பொடி செய்து இரண்டு கிராம் பொடியை தினமும் இரண்டு வேளை தேனில் குழைத்து சாப்பிடலாம். சளி, இருமல், தும்மல் மற்றும் அலர்ஜியில் இருந்து தீர்வு கிடைக்கும்.* கடுகை பொடி செய்து தொண்டையில் பற்றுப் போட்டால் தொண்டை வலி குணமாகும்.* அரைக் கீரை தண்டுடன் மிளகு, மஞ்சள் ஆகியவற்றை சேர்த்து கஷாயம் வைத்து தினமும் அதிகாலையில் குடித்தால் சளி, இருமல் மற்றும் நுரையீரல்தொடர்பான பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும்.* அறுவதா இலையுடன் ஒரு துண்டு இஞ்சி சேர்த்து அரைத்து சாப்பிட்டால் மார்பு சளி குணமாகும்.* ஆடாதொடா இலையை பொடி செய்து தேன் கலந்து சாப்பிட்டால் சளித் தொல்லை தீரும்.* ஆலமர விழுதை பொடி செய்து காலை, மாலையில் சாப்பிட்டால் இருமல்