பெருங்காயத்தின் மருத்துவ குணங்கள்


பெருங்காயத்தின் மருத்துவ குணங்கள்:-

பெருங்காயத்தை நாம் பெரும்பாலும் சமையலில் நறுமணம் ஊட்டக்கூடிய பொருளாகவே பயன்படுத்துகிறோம், ஆனால் இதற்கென்று பிரத்யேகமான மருத்துவப் பயன்கள் உண்டு.

பெருங்காயம், உஷ்ணத்தைத் தரக்கூடியது ; உணவை செரிப்பிக்கிறது ; சுவையை அதிகப்படுத்துகிறது. இது கூர்மையானதும் ஊடுருவும் தன்மையுமுடையதாகும், இது வாதத்தையும், கபத்தையும் கண்டிக்கிறது ; பித்தத்தை உயர்த்துகிறது. இது வயிறு உப்பல், கிருமி ஆகியவைகளின் சிகிச்சைக்கும் குடற் புழுவகற்றியாகவும் பயன்படும். 

உபயோகங்கள் : இது ஒரு நல்ல வாய்வகற்றி ; உணவுப் பொருள்களைச் சீரணம் செய்வதில் உதவி செய்கிறது. இது அதிகமாக வாத நோய்களில் உபயோகிக்கப்படுகிறது. இது, வழக்கமான அதாவது எப்போதும் உள்ள இருமலுக்கு கோழையகற்றியாகப் பயன்படுத்தப்படுகிறது. மேலும், 
நீரேற்றத்தையும் - சவ்வுகளின் வீக்கத்தையும், காசத்தையும் நீக்குகிறது. சுவாச நோயில் இசிவகற்றியாகவும், வயிற்றில் ஏற்படும் பாதிப்புகட்கும், குடற் கிருமிகளை வெளிப்படுத்தவும் பயனுடையதாகிறது. 

இது, குடலின் உப்புதலை குறைக்கிறது. இதன் சிறப்புச் செய்கையினால் வலி உள்ள மாத விடாயின்போது தீட்டை அதிகமாக்குவதற்காகக் கொடுக்கப்படுகிறது. 

நரம்புத் தளர்ச்சியால் ஏற்படும் மூர்ச்சை நோயிலும், வலிப்பு நோயிலும், இது சம்பந்தமான நரம்புக் கோளாறுகளிலும் மிகவும் பயனுடையதாகிறது. 
பிரசவத்திற்குப் பிறகு நஞ்சக் கொடியை வெளியேற்ற கொடுக்கப்படுகிறது. இதை ( பெருங்காயத்தை ) எண்ணெயில் கரைய வைத்துக் காயங்கட்கு மேலே பூசுவதற்கும், காது நோய்களில் பழக்கமான நேர் மருந்தாகக் காது வலியைக் குறைக்க பயன்படுகிறது.

இதைப் பொரித்து உபயோகப்படுத்தலே நலம். பச்சையாக உபயோகித்தால் வாந்தியுண்டாகும். 

இதை நீர் விட்டு உரைத்து மார்பின் மீது பற்றிட குழந்தைகட்கு உண்டாகும் கக்குவான் குணப்படும். 

பிரசவத்தின் பின், அழுக்கை வெளிப்படுத்தக் காயத்தைப் பொரித்து, வெள்ளைப் பூண்டு, பனை வெல்லத்துடன் சேர்த்துக் காலையில் கொடுக்கலாம்.

கோழி முட்டை மஞ்சட் கருவுடன் காயத்தைக் கூட்டிக் கொடுக்க வறட்டிருமல், பக்க வலி நீங்கும். எண்ணெயிலிட்டுக் காய்ச்சி காதுக்கிட, காது வலி தீரும்.

பாட்டி வைத்திய குறிப்பு


பாட்டி வைத்திய குறிப்பு:-

அஜுரணம் சரியாக

சிறிது சுக்குடன் கருப்பட்டி,4 மிளகு சேர்த்து நன்கு பொடித்து 2 வேளை சாப்பிட்டால் அஜுரணம் குணமாகி பசி ஏற்படும்.

கறிவேப்பிலை,சுக்கு,சீரகம்,ஒமம் சேர்த்து துவையல் அரைத்து சாப்பிட்டால் அஜுரணம் சரியாகும்.

2 தேக்கரண்டி இஞ்சிச் சாறுடன்,சிறிது தேன் கலந்து பருகினால் ஜீரணசக்தி அதிகரிக்கும்.

2 தம்ளர் மோருடன் சிறிது பெருங்காயத்தூள்,உப்புச் சேர்த்து குடித்தால் சரியாகும்.

2 வெற்றிலை,4 மிளகு இவற்றை மென்று தின்றால் அஜுரணக்கோளாறு சரியாகும்.

சீரகத்தை நீரிலிட்டு கொதிக்க வைத்து,அந்த சீரக நீரைக் குடித்து வர நன்கு ஜுரணமாவதோடு,உடல் குளிர்ச்சியடையும்.

ஒமம்,கருப்பட்டி இட்டு கசாயம் செய்து பருகினால் அஜுரணம் சரியாகும்.

நீரிழிவு

அருகம்புல் சாறை மோருடன் குடித்தால் நீரிழிவு குறையும்.

இருமல்,சளி

* தினமும் காலையில் அருகம்புல்லை வேரோடு பரித்து மண்போக கழுவி,வேருடன் அரைத்து சாறு பிழியவும்.1/2 தேக்கரண்டி மிளகு,1/2 தேக்கரண்டிசீரகம்,1/4 டீஸ்பூன் அதிமதுரம்,1/4 டீஸ்பூன் சித்தரத்தை எல்லாவற்றையும் பொடித்து சலித்துக் கொள்ளவும்.1 டம்ளர் வெந்நீரில் மேற்கண்ட பொடியை 1 டீஸ்பூன் போட்டு 1/2 டம்ளர் அருகம்புல் சாறு கலந்து தினமும் பருகி வந்தால் இருமல்,சளி போயே போச்சு.

மூக்கடைப்பு

ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கி அரை லிட்டர் நீரில் போட்டு சுண்டக் காய்ச்சி, பால், சர்க்கரை சேர்த்துக் காலை, மாலை சாப்பிட்டு வர மூக்கடைப்பு விரைவில் நீங்கும்

தீப்புண்

வாழைத் தண்டை சுட்டு அதன் சாம்பலை தேங்காய் எண்ணையில் கலந்து தடவி வர தீப்புண், சீழ்வடிதல் மற்றும் காயங்கள் விரைவில் குணமாகும்.

பித்த வெடிப்பு

கண்டங்கத்திரி இலைசாறை ஆலிவ் எண்ணையில் காய்ச்சி பூசி வந்தால் பித்த வெடிப்பு குணமாகும்

மலச்சிக்கல்

செம்பருத்தி இலைகளை தூள் செய்து, தினமும் இருவேளை சாப்பிட்டு வர மலச்சிக்கல் தீரும்.

குடல்புண்

மஞ்சளை தணலில் இட்டு சாம்பல் ஆகும் வரை எரிக்க வேண்டும். மஞ்சள் கரி சாம்பலை தேன் கலந்து சாப்பிட குடல் புண் ஆறும்.

வாய் நாற்றம்

சட்டியில் படிகாரம் போட்டு காய்ச்சி ஆறவைத்து அதனை ஒரு நாளைக்கு மூன்று வேளை வாய் கொப்பளித்து வந்தால் வாய் நாற்றம் போகும்

நாவல் மரத்தின் மருத்துவ குணங்கள்


நாவல் மரத்தின் மருத்துவ குணங்கள்:-

வேர்

வெயில் காலத்தில் எழும் அடங்காதத் தாகத்தைத் தீர்ப்பதில் நாவல் மர வேருக்கு இருக்கும் பங்கு பலரும் அறியாதது. நெல்லிக்கட்டை, நன்னாரி வேர்போல நாவல் மர வேர் கட்டைத்துண்டு ஒன்றையும் அருந்தும் நீரில் ஊறப்போட்டால் அந்த நீரானது எப்பேர்ப்பட்ட அடங்காதத் தாகத்தையும் கட்டுப்படுத்திவிடும். சர்க்கரை வியாதியஸ்தர்களுக்கு மேற்படி அடங்காதத் தாகம் எப்போதும் உண்டு. அவர்கள் அனைத்து நாட்களிலும் இந்த நாவல் வேர்க்கட்டை ஊறிய நீரைக் குடிக்கலாம். நாவல் மரம் துவர்ப்பு வகையின் கீழ் வரும். இந்தத் துவர்ப்புச் சுவையானது காயங்களை ஆற்றக்கூடியது என்பதால், நாவல் மர வேரை இடித்துப் புண்கள் மீது கட்டுவார்கள்.

மரப்பட்டை

முற்றிய பட்டையைத் தூள் செய்து பவுடராகச் சேகரித்து வைத்துக்கொண்டால், புண்களைக் குணப்படுத்த நீண்ட கால மருந்தாக உதவும். பட்டையின் உள் சதைப் பகுதியை நீர்விட்டு அரைத்து மோர் அல்லது தயிருடன் சேர்த்துச் சாப்பிட்டால், உடல் சூட்டினால் வரும் கடுப்பு, கழிச்சல் தீரும். சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்க, முற்றியப் பட்டையைக் கஷாயம் வைத்துக் குடிக்கும் பழக்கம் நமது பாரம்பரியத்தில் உண்டு. சித்த மருத்துவத்தில், சர்க்கரை நோய்க்கு பிரதானக் கஷாயமாக இருக்கும் ஆவாரக் குடிநீர் தயாரிப்பிலும் நாவல் மரப் பட்டைக்கு முக்கிய இடம் உண்டு. பெரும்பாட்டுப் பிரச்னையில் அவதியுறும் பெண்களுக்கு இரும்புச் சத்து இழப்பு அதிகமாக இருக்கும். இதனை ஈடுகட்ட சித்த மருத்துவத்தில் பலன் அளிக்கும் செந்தூர பஸ்பம் தயாரிப்பிலும் நாவல் மரப்பட்டைக்கு முக்கிய இடம் உண்டு. 

இலை

வெயில் காலத்தில் படுத்தும் கழிச்சல் தீர, நாவல் மர இலைக் கொழுந்துகளைச் சேகரித்து அரைத்துத் தயிரில் சேர்த்துச் சாப்பிட வேண்டும். இது மட்டும் அல்ல.... இளம் கொழுந்துகளாய்ச் சம அளவுக்கு மாவிலைக் கொழுந்துகளுடன் சேர்த்து அரைத்துத் தயிருடன் சாப்பிட்டால், தீராத மூலக்கடுப்பும் நாளடைவில் கட்டுக்குள் வரும்.

பழம்

நாவல் மரம் தரும் கனிந்தப் பழங்களை விரும்பாதவர்கள் யாரும் இல்லை. என்ன, அதிகம் சாப்பிட்டால் தொண்டைக்கட்டு வரும். இதைத் தவிர்க்க உப்பில் தோய்த்துப் பழங்களை ருசிக்கலாம். சுவைக்கு சுவையுமாச்சு; உடலுக்கு மாமருந்துமாச்சு. இரைப்பையை வலுப்படுத்தவும் மொத்த உணவுப் பாதையை உறுதி செய்யவும் தேவைப்படும் அடிப்படைச் சத்துக்கள் நாவல் பழத்தில் உண்டு. இதன் துவர்ப்பும் குளிர்ச்சியும் இதயத்தை வலுப்படுத்தக்கூடியவை. கிராமப்புறங்களில், எட்டிக்கொட்டை உண்டதால் ஆன விஷ முறிவுக்கு நாவல் பழச் சாறு அல்லது மரப்பட்டைக் கஷாயத்தை மிகச் சிறந்த முதலுதவி மருந்தாகப் பயன்படுத்துகிறார்கள். சர்க்கரை வியாதியஸ்தர்கள் சாப்பிட உகந்தது நாவல் பழம். ஆனால், சளி - சைனஸ் பிரச்னை உள்ளவர்கள் மட்டும் இடைவெளிவிட்டு அளவோடு சாப்பிடலாம். பிறக்கும் குழந்தைக்குக் கபம் பாதிக்க வாய்ப்பு உள்ளதால், கர்ப்பம் தரித்தப் பெண்களும் இந்தப் பழத்தை அளவோடு சாப்பிட வேண்டும்.

கொட்டை

நாவல் மரம் முழுமையுமே சர்க்கரை நோய்க்கு எதிரான மருத்துவ மகத்துவத்தை உள்ளடக்கியது. நாவல் பழத்தின் கொட்டையில் இந்த மருத்துவ வீரியம் இன்னும் அதிகம். கொட்டையை நிழலில் காயவைத்து மாவாக அரைத்துவைத்துக்கொண்டு, காலை, மாலை இரு வேளைகளும் அரைத் தேக்கரண்டி மாவினை வெந்நீரில் சேர்த்து அருந்த சர்க்கரை நோய் கட்டுக்குள் வரும். ஆடு தின்னாப் பாலைச் செடியை சாறு செய்து, அதில் இந்த நாவல் கொட்டை மாவையும் சேர்த்து பட்டாணி அளவிலான மாத்திரைகளாக உருட்டி வைத்துகொண்டு, வேளைக்கு இரண்டாக உண்டுவர சர்க்கரை நோய்க்கு மிகச் சிறந்த பலன் கிடைக்கும்.

ம‌ஞ்சளு‌ம் அழகு கு‌றி‌ப்பு‌ம்


ம‌ஞ்சளு‌ம் அழகு கு‌றி‌ப்பு‌ம்:-

மஞ்சளை அதன் இலையோடு சேர்த்து பாசிப்பயிறு மாவோடு கலந்து தினமும் உடலில் பூசிக் குளித்தால் சுருக்கம் நீங்கும். 

மஞ்ச‌ள் இலை மற்றும் குப்பைமேனி இலை இர‌ண்டையு‌ம் அரைத்து குளித்த பிறகு உடலில் பூசிக் கழுவுவதை தினமும் செய்தால் பூனை முடிகள் உதிரும். 

கழுத்து, கணுக்கால்களில் கருமையைப் போக்க மஞ்சள் தூளை தயிரில் கலந்து தடவி வரவும். 

மஞ்சளுடன் வேப்பிலையை அரைத்துப் பூசி பிறகு குளிர் நீரில் கழுவினால் முகப்பருவில் ‌சீ‌ழ் பிடிக்காது. 

முகத்தோல் சொரசொரப்பாக இருந்தால் மஞ்சளோடு துளசியை அரைத்துப் பூசி வரவும். 

மஞ்சள் கிழங்கு ஒன்றுடன் ஒரு எலுமிச்சை இலையை சேர்த்தரைத்துப் பூசினால் முகம் பளிச்செ‌ன்று மாறு‌ம். 

மஞ்சளை அரைத்துப் பூசத் தேவையில்லை, மஞ்சள் கலந்த நீராவி கூட அழகை கூட்டும். 

குண்டு மஞ்சள் கிழங்கு, கெட்டி‌க் கிழங்கு முக அழகை கூட்டி அதிக நிறம் கொடுக்கும்.

பாதவெடிப்பிற்கு குண்டு மஞ்சள் கிழங்கை அரைத்துப் பூ‌சி வ‌ந்தா‌ல் போது‌ம்.

கண்கள் புத்துணர்வுக்கு


கண்கள் புத்துணர்வுக்கு...

தேயிலைகளை நன்கு கசக்கி பசை போலாக்கி சுத்தமான வெள்ளைத் துணியில் முடிந்து, ஃப்ரீஸரில் சிறிது நேரம் வைத்து பின்பு அதை எடுத்து கண்களின் மீதும் கண்களைச் சுற்றியும் ஒத்தடம் தர, கண்களின் அடியில் ஏற்படும் "பை" போன்ற வீக்கம் போன்றவைகள் நீங்கி கண்கள் புத்துணர்வு பெறும்.

ஆலம் இலையின் காம்பில் வரும் பால் சருமப்படை, தோல் போன்றவைகளுக்கு நல்ல மருந்து.
நம் பற்களுக்கு பளபளப்பும், நல்ல வெண்மையும் தரக்கூடியது, பிரியாணி இலை. இதைப் பற்களில் வைத்துத் தேய்க்க பற்கள் பளபளப்பாகும். வாய் நாற்றமும் தொலையும்.

"ஆஸ்டிரஜன்" குணத்தைக் கொண்ட புதினா இலைகளை நீரிலிட்டு கொதிக்க வைத்து, மிதமான சூடு வரும் வரை ஆற விட்டு, அதைப் பயன்படுத்தி முகம் கழுவுவது சருமத்திற்கு நல்லது.

வாழையிலையில் தொன்னை அமைத்து அதில் பொறுக்கக்கூடிய சூட்டில் எண்ணெய் வைத்து தலைக்கு மசாஜ் செய்வதும் சிறப்பம்சம்.