உடல் ஸ்லிம் ஆக வேண்டுமா...அதிகாலையில் விழித்தெழுங்கள்;;
உடல் ஸ்லிம் ஆக வேண்டுமா... அதிகாலையில் விழித்து பழகுங்கள். அப்படி அதிகாலையில் விழித்து விடுபவர்கள் ஸ்லிம் ஆவதுடன் மகிழ்ச்சியாகவும், நல்ல உடல்நலத்துடன் இருப்பார்கள் என்று லண்டன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். லண்டனில் உள்ள பிரபல பல்கலைக்கழகம் ரோஹாம்டன் பல்கலைக்கழகம்.இதில் ஆராய்ச்சிப் பிரிவில் உள்ள பேராசிரியர்கள், அதிகாலையில் படுக்கையில் இருந்து எழுபவர்களை பற்றி ஒரு ஆய்வு மேற்கொண்டனர். அதில், காலை யில் வெகு நேரம் கழித்து எழுபவர் களை விட அதிகாலையில் எழுபவர்கள் சுறுசுறுப்பாக இயங்குவதையும் மனதில் உற்சாகத்துடன் காணப்படுவதையும் உணர்ந்தனர்.
ஆராய்ச்சியாளர்கள் ஆய்வில் 1068 பேரிடம் அவர்களின் தூக்கம், விழிப்பு பற்றி பல்வேறு கேள்விகளை எழுப்பி பதில் பெற்றனர். அவர்களில் ஒரு பிரிவினர் சராசரியாக அதிகாலை 6.58 மணிக்குள் விழித்து விடுபவர்கள். இன்னொரு பிரிவினர் 8.54 மணிக்கு பின் எழுபவர்கள். இவர்களின் உடல் நலம், செயல்பாடுகள், தோற்றம் ஆகியவற்றை ஒப்பிட்டு பார்த்தனர்.
அதில் அதிகாலையில் விழித்து விடுபவர்கள் பெரும்பாலும் ஸ்லிம் ஆக காட்சியளித்தனர். அவர்களிடம் காலையில் வேலை யை துவங்கும் போது காணப் படும் உற்சாகம் வெகு நேரம் நீடித்தது. அதே சமயம், லேட் ஆக எழுபவர்களிடம் உற்சாகம் குறைந்து காணப்பட்டது.
அதே போல், இரவில் அதிகமாக டி.வி. பார்ப்பவர்களே காலையில் தாமதமாக விழிக்கிறார்கள் என்பதும், அவர்களில் பலரும் காலை உணவை தவிர்த்து விடுகின்றனர் என்றும் ஆய்வில் கண்டறியப்பட்டது.
மாதுளம்.......................
மாதுளம் பூக்களை உலர்த்திப் பொடித்து வைத்துக் கொண்டு வேளைக்கு ஒரு சிட்டிகை வீதம் சாப்பிட்டால், இருமல் நிற்கும். மாதுளம் பூச்சாறு, அருகம்புல் சாறு சமமாகச் சேர்த்து வேளைக்கு 30 மில்லி வீதம் தினசரி மூன்று வேளையாக மூன்று தினங்களுக்குக் கொடுத்தால் பெண்களுக்கு ஏற்படும் உதிரப்போக்கு நிவர்த்தியாகும்.மாதுளம் பூக்கள் 15 கிராம் எடுத்து 25 கிராம் சீனி சேர்த்து மசிய அரைத்து காலை, மாலை ஒரு தேக்கரண்டி வீதம் சாப்பிட்டு வந்தால், தொல்லைப் படுத்தும் பெண்களின் வெள்ளைப்பாடு நிவர்த்தியாகும்.மாதுளம் பூச்சாற்றை 15 மில்லியளவு சேகரித்து சிறிது கற்கண்டு சேர்த்து தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், இரத்த மூலம் நீங்கும். மூலக் கடுப்பும், உடல் சூடும் தணியும். வாந்தி, மயக்கத்திற்குக் கொடுத்தால் நோய் தீரும். மாதுளம் பூக்களைத் தலையில் வைத்துக் கொண்டால் தலைவலி, வெப்பநோய் தீரும்.
மாதுளம்பழத் தோலின் பயன்கள்
மாதுளம் பழத்தின் தோலை அம்மியில் நன்கு மை போல் வைத்து அரைத்து அதில் எலுமிச்சம்பழம் அளவு எடுத்து அரை ஆழாக்கு எருமை தயிரில் கலந்து மூன்று நாள் காலையில் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் பிற மருந்துகள் கொடுத்தும் குணமாகாத சீதபேதி உடன் நிற்கும்.
தயிரும் மருத்துவ பயன்களும்...
தயிருக்கு மருத்துவ பயன்பாடுகளும் உண்டு, தயிர் பலவகை இரைப்பை மற்றும் குடல் சம்பந்தபட்ட நோய்க்கிருமியை அழிக்கிறது, வயிற்றுப்போக்கினை தடுக்கும் ஆற்றலும் கொண்டதாகும். தயிரானது புரதங்கள், கால்சியம், ரிபோப்லாவின், உயிர்ச்சத்து மற்றும் ஊட்டச்சத்துகள் நிறைந்தது ஆகும். பாலைவிட அதிகமான ஊட்டச்சத்துகள் தயிரிலிருந்து கிடைக்கிறது. மிதமான லாக்டோஸ்- சகிப்புத்தன்மை இல்லாத மக்கள் தயிரை பாதகமில்லாமல் உட்கொள்ளலாம். ஏனென்றால், பாலின் உட்பொருளான லேக்டோசு என்ற முன்பொருள் பண்பாட்டு வளர்ப்பு காரணமாக லாக்டிக் அமிலமாக மாறிவிடுவது தான் இதற்கு காரணம்.
லேக்டோசிலுள்ள பிராணவாயு (ஆக்சிஜன்) ஒடுக்கப் பெறுவதால், லாக்டோஸ்-சகிப்புத்தன்மை இல்லாத ஒருவரின் பாலின் உட்பொருளான சர்க்கரையால் ஏற்படும் பாதிப்பு நீங்கி விடுகிறது.
எல்.ஆசிடோபிலஸ் கொண்ட தயிரை உட்கொள்வதன் மூலம் கேண்டிடா ஆல்பிகன்ஸ் பூஞ்ஜை நோயைக் குணப்படுத்தமுடியும் என்று ஒரு ஆய்வறிக்கைத் தெரிவிக்கிறது.
தயிர் பயன்பாட்டினால் ஈறுகளின் நலன் மேம்படுகிறது. ஏனென்றால், அதில் அடங்கிய லாக்டிக் அமிலங்களின் ப்ரோபையோடிக் எப்பெக்ட் காரணமாகும்.
இன்டர்நேஷனல் ஜெர்னல் ஆஃப் ஒபெசிட்டி என்ற சஞ்சிகையில் வெளிவந்த ஒரு ஆய்வறிக்கையின் படி, குறைந்த கொழுப்புச்சத்துள்ள தயிர் எடை குறைப்பதற்கு ஏதுவாக இருக்கும் என்று தெரிகிறது.
பரிசோதனையில், உடல் பருமனாக இருந்தவர்களில் சிலர் ஒவ்வொரு நாளும் மூன்று வேளை குறைந்த கொழுப்பு சத்து கொண்ட தயிர் உட்கொண்டவர்களின் எடை 22% அளவுக்கு மேலும் குறைந்ததாகவும், முன்பு இருந்ததை விட அழகாக தோற்றமளிப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
தயிரின் பயன்கள்
1. ஒரு கை நிறைய தயிரை எடுத்து தலையில் நன்றாக தேய்த்தால் தூக்கம் நன்றாக வரும்.2. தயிரில் உள்ள புரோட்டீன், பாலில் உள்ள புரோட்டீனை விட சீக்கிரமாகவே ஜீரணமாகிவிடும்.3. தயிர் நம் உடலுக்கு ஒரு அரு மருந்து.4. குளிர்ச்சியைத் தரும். நல்ல ஜீரண சக்தியை தருவது தயிர்தான்.5. பால் சாப்பிட்டால் ஒரு மணி நேரம் கழித்து 32% பால்தான் ஜீரணமாகியிருக்கும்.ஆனால், தயிர் சாப்பிட்ட ஒரு மணி நேரத்தில் 91% உடனே ஜீரணிக்கப்பட்டிருக்கும்.6. பாலைத் தயிராக மாற்றும் பாக்டீரியா குடலில் உருவாகும் நோய் கிருமி பாக்டீரியாவின் வளர்ச்சியை தடுக்கிறது.7. தயிரில் இருக்கும் பாக்டீரியா ஜீரண சக்தியை அதிகரிக்கும் நன்மை செய்யும் பாக்டீரியாவை உருவாக்குகிறது.
8. பாலில் LACTO இருக்கிறது. தயிரில் இருப்பது LACTOBACIL. இது ஜீரண சக்தியைதூண்டி வயிற்றின் உபாதைகளை சரி செய்கிறது.9. வயிறு சரியில்லாத பொழுது வெறும் தயிர் சோறு மட்டுமாவது உணவாக உட்கொள்ளச் சொல்லி மருத்துவர்கள் சொல்வார்கள்.10. அதிகமாக வயிற்றுபோக்கு ஏற்படும் பொழுது வெந்தயம் + தயிர் 1 கப் சாப்பிட்டால் வயிற்று பொருமல் அடங்கும்.11. பிரியாணி போன்று உடலுக்கு சூடு தரும் உணவுவகைகளை சாப்பிடும்பொழுது வயிற்றுக்கு அதிகம் கேடு விளைவிக்காமல் இருக்கத்தான் தயிர் 'ரயித்தா' சாப்பிடுகிறோம்.12. மெனோபாஸ் பருவத்தை எட்டப்போகும் பெண்களுக்கு தயிர் மிகவும் உபயோகமாகிறது. உடலுக்குத் தேவையான அதிக கால்சியத்தை தயிர் வழங்குகிறது.13. வெண்ணெய் காய்ச்சி இறக்கும் பொழுது சிறிது தயிர் சேர்த்தால் நெய் வாசமாக இருக்கும்.14. புளித்த தயிரை தலையில் தேய்த்து சுத்தம் செய்தால் தலை முடி மிருதுவாக இருக்கும்.15. தயிர் புளிக்காமல் 2-3 நாள் இருக்க தேங்காய் சிறிய துண்டாக்கி சேர்த்தால் புளிக்காது.
16. வெண்டைகாய் வதக்கும் பொழுது ஒரு ஸ்பூன் தயிர் சேர்த்தால் நிறம் மறாமல், பிசுபிசுக்காமல் இருக்கும்.17. வாழைப்பூ, வாழைத்தண்டு இவற்றை தயிர் கலந்த நீரில் போட்டு வைத்தால் நிறம் மாறாது.18. மண்ணெண்ணெய் வாசம் போக தயிர் கொண்டு கை கழுவலாம். 19. மோராக கடைந்து உப்பு,கொத்தமல்லி, கறிவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து நீர் மோராக்கி குடிக்கலாம்.20. தயிருடன் + சர்க்கரை சேர்த்து கலக்கி லஸ்ஸியாக உண்ணலாம்.
வாய்புண் தொல்லைக்கு வீட்டிலேயே மருந்திருக்கு..
நெல்லி இலைகளை அவித்த நீரீனால் அடிக்கடி வாய் கொப்பளித்துவர வாய்ப்புண்கள் ஆறிவிடும். நெல்லிச் சாறையும், தேனையும் சமமாகக் கலந்து, மூச்சுத் திணறல், நீண்ட கால விக்கல் நோய் முதலியவற்றிற்குக் கொடுத்து வரலாம். சில மருத்துவர்ள் இதோடு திப்பிலி சூரணத்தையும் சேர்த்துக் கொடுப்பார்கள். வாய்ப்புண் போக, மணத்தக்காளி இலைகளை நிறைவாய் போட்டு மென்று, சற்று நேரம் வாயில் வைத்திருந்து விழுங்கவும். இவ்வாறு முற்றின தேங்காயையும் உபயோகிக்கலாம்.
வாயில் வயிற்றில் புண் இருந்தால் பாலில் சிறிது தேனைக் கலந்து சாப்பிட்டுவர சில நாட்களில் புண் குணமாகும். வாய்ப்புண் அதிகமாகி விட்டால் காரத்தை அடியோடு நிறுத்த வேண்டும். மாசிக் காயை உடைத்து அதன் தோலை மாத்திரம் வாயில் போட்டு அப்படியே அடக்கிக் கொள்ளுங்கள். ஊறிவரும் நீரை விழுங்குங்கள். வாய்ப்புண் சரியாகிவிடும்.
வாயில் புண் இருந்தால், அகத்திக்கீரையைச் சமைத்துப் சாப்பிடவும். வாய்ப்புண்ணும் நாக்குப் புண்ணும் குணமாகும். புண் அதிகமாக இருந்தால், புண் மீது பசு வெண்ணையைத் தடவுங்கள். குழந்தைகளுக்கு வாய்ப்புண் வந்தால், மாசிக்காயை பாலில் கரைத்து தேனில் குழைத்து நாக்கில் தடவ குணமாகும்.
தீராத வாய்ப்புண்ணிற்கு கடுக்காயை உடைத்து ஒரு துண்டை வாயில் அடக்கி வைத்திருக்கவும். சாறு தொண்டையில் போகப்போக உடனடியாக குணம் கிடைக்கும். பச்சரிசி, பயத்தம்பருபபு 1 ஸ்பூன் வெந்தயம், முழு பூண்டு 1 உரித்துப்போட்டு குக்காரில் வைத்து வெந்தவுடன், அத்துடன் கெட்டியான தேங்காய்ப்பால் கலந்து சாப்பிட்டால் வயிற்றுப்புண் ஆறி வாய்ப்புண்ணும் நீங்கும். மணத்தக்காளிக் கீரையையும், அகத்திக் கீரையையும் பொரியலாகச் செய்து, தேங்காய்ப் பருப்பு சேர்த்து சாப்பிட்டால், வாய்புண் இரண்டே நாட்களில் குணமாகும்.
சூட்டைத் தணிக்கப் பயன்படும் நன்னாரி..
கோடைக் காலத்தில் அதிகம் பயன்படும் மூலிகை நன்னாரி. சிறு கசப்பும், இனிப்பும் சேர்ந்த சுவையைக் கொண்ட நன்னாரி வேருக்கு மிகுந்த குளிர்ச்சித்தன்மை உண்டு. நீர்க்கடுப்பு குணமாக ஒரு கைப்பிடி அளவு பசுமையான நன்னாரி வேரினை நீரில் அலசி சுத்தம் செய்யவும். அதனைத் தேவைக்கு ஏற்ப குடிநீரில் இட்டு நன்கு கொதிக்க வைத்து கஷாயமாகக் காய்ச்சிக் கொள்ளவும். அரை டம்ளர் அளவு கஷாயத்தில் சர்க்கரை சேர்த்து காலையில் வெறும் வயிற்றில் குடித்துவந்தால், சிறுநீர் கழிக்கும்போது ஏற்படும் எரிச்சல் குணமாகும்.
மூலச்சூடு, வெட்டைச்சூடு குணமாக தண்ணீரில் சுத்தம் செய்த பசுமையான நன்னாரி வேரை சிறிது அளவு எடுத்து நன்றாக அரைத்துக்கொள்ளவும். பின்னர் இதனை ஒரு டம்ளர் காய்ச்சிய பசும்பாலுடன் கலக்கி, தினமும் இரண்டு வேளை குடிக்க வேண்டும். இதனால் மூலச்சூடு, வெட்டைச்சூடு உள்ளிட்ட பிரச்னைகள் குணமாகும். தொடர்ந்து இவ்வாறு குடித்து வந்தால், இளநரை, பித்த நரை மாறுவதோடு வறட்டு இருமலும் குணமாகும்.
பித்தநோய் குணமாக சுத்தம் செய்த பசுமையான நன்னாரி வேரை இரு கைப்பிடி அளவு இடித்து எடுத்துக்கொள்ளவும். இதனை கால் லிட்டர் குடிநீரில் இட்டு ஒரு நாள் முழுதும் ஊறவைத்து வடிகட்டி வைத்துக்கொள்ளவும். வடிகட்டிய நீரை தினமும் காலை மாலை என இரு வேளை குடித்து வர, அதிக பசி, தாகம், பித்த நோய், நீரிழிவு ஆகியவை கட்டுப்படுத்தப்படும். பத்தியம் அவசியம் என்பதால், மருத்துவரின் ஆலோசனைப்படி உட்கொள்ள வேண்டும்.
சிறுநீர்க்கட்டு சிக்கல் தீர நன்னாரி வேரை நீரில் அலசிச் சுத்தம்செய்து வெயிலில் நன்றாகக் காயவைத்த பின்னர் இடித்துத் தூளாக்கிக்கொள்ள வேண்டும். இந்த வேர்ச் சூரணத்தை இரண்டு டீஸ்பூன் அளவு எடுத்து, ஒரு டம்ளர் பசும்பாலுடன் சேர்த்துக் கலக்கி குடித்துவந்தால், சிறுநீர்க் கழிக்க முடியாமல் அவஸ்தைப்படும் சிறுநீர்க்கட்டு நன்கு குணமாகும்.
உடல் உஷ்ணம் தணிய சுத்தம் செய்த பசுமையான நன்னாரி வேர் அல்லது உலர்ந்த நன்னாரி வேரை மண் பானை நீரில் போட்டுவைத்து குடிநீராகப் பயன்படுத்திக் கொள்ளலாம். இதனால் உடல் உஷ்ணம் தணிந்து குளிர்ச்சி பெறும்.