குரல் வளத்தை பெருக்கும் மாந்தளிர்


குரல் வளத்தை பெருக்கும் மாந்தளிர்.

மாம்பழத்தில் விட்டமின் ஏ நிறைந்திருக்கிறது. மாந்தளிரை நன்றாக காய வைத்து பொடித்து வைத்துக்கொண்டு தண்ணீரில் மூன்று சிட்டிகை கலந்து குடித்தால் தொண்டை சம்பந்தப்பட்ட எந்த நோயும் நெருங்காது. அதோடு குரல் வளமும் பெருகும்.

மா இலை சாற்றுடன் அதே அளவு தேன் பால் பசும் நெய் கலந்து சாப்பிட்டால் கட்டை குரலும் இனிமையாக மாறும். மா இலையை சுட்டு தேனில் வதக்கி சாப்பிட்டு வந்தால் தொண்டைக்கட்டு கரகரப்பு சளி நீங்கும். மா இலையை பொடியாக்கி பற்களில் தேய்த்து வர பல்லில் உள்ள காரை மறைந்து பற்கள் முத்து போல ஜொலிக்கும்.

மாம்பழ மலமிளக்கியாக செயல்படுவதுடன் முகத்தில் உள்ள பருக்களையும் போக்ககூடியது. சூடு உடல் கொண்டவர்கள் மாம்பழம் சாப்பிட்டதும் ஒரு டம்ளர் பாலை பருகினால் சூடு பிடிக்காது.

ஒரு டீஸ்பூன் மாங்கொட்டை பொடியுடன் ஒரு துளி நெய் கலந்து சாப்பிட்டால் வயிற்றில் பூச்சி தொல்லை இருக்காது. நகத்தின் மேல் இருக்கும் வெள்ளை புள்ளிகள் நக வெட்டு தோலில் உள்ள வெள்ளை திட்டுகளும் நீங்கிவிடும்.

மா மரத்தின் பட்டையில் வடியும் பாலை கால் வெடிப்பில் தடவினால் வெடிப்பு மறைந்து பாதம் பட்டு போல் மாறிவிடும்..

ஒரு சிட்டிகை மா மர பிசினை ஒரு டம்ளர் மாம்பழ ஜீஸீடன் கலந்து சாப்பிட்டால் தேமல் தழும்பு படை நீங்கி தோல் மிருதுவாகும்.

புட் பாய்சன்


புட் பாய்சன்.......

*நமக்கு ஒத்து வராத சில உணவு வகைகள் அல்லது பழைய உணவுகளால் நமது உடம்பில் விஷத்தன்மை சேருகிறது.அதனால் கண் எரிச்சல் தலைவலி மூச்சி பாதிப்பு எலும்புகளில் வலிகளும் மேலும் சில பிரச்சனைகளும் ஏற்படக்கூடும்.

அந்த சமயத்தில் செய்ய வேண்டியவை

*அழுகிய பழங்கள் அல்லது கெட்டுபோன இறைச்சி போன்றவைகளால் விஷத்தன்மை ஏற்படுகிறது.நமது உணவில் விஷத்தன்மை இருந்திருக்கலாம் என்று சந்தேகம் வந்தால் உடனே அலர்ட் ஆகுங்கள்.

அப்போது நீங்கள் செய்ய வேண்டியது

*சுடுநீரில் சுமார் பதினைந்து நிமிடங்கள் வரையாவது குளியுங்கள்.
தாகம் எடுத்தால் ஆரஞ்சு எலுமிச்சை போன்ற பானங்களை பருகுங்கள்.

*கொஞ்ச நேரம் படுத்து கொள்ளலாம் அல்லது இனிமா எடுத்து கொண்டாலும் சரி தான்மேலும் நன்றாக பசிக்கும் வரை எதுவும் சாப்பிடக்கூடாது.விஷத்தன்மை இருந்தால் உங்கள் வயிற்றில் சீரணம் ஆவது குறைந்து போயிருக்கலாம்.

*இந்த மாதிரி நேரத்தில் ஏதாவது சாப்பிட்டால் உடல்நிலை மேலும் மோசமடைய வாய்ப்புள்ளது

அலர்ஜியா!


அலர்ஜியா!

ஒவ்வொருவர் உடலுக்கும் ஒத்துக்கொள்ளாதது பொருட்கள் உண்டு. அதைச் பயன்படுத்தும் போதோ அல்லது உணவுக்காக சேர்த்துக் கொண்டாலும் அலர்ஜி ஏற்படும். இதைக் காணாக்கடி என்பர். இதனால் உடலில் அரீப்பும், தடிப்பும் ஏற்படும்.. இதைப்போக்க, சிறிது வேப்பிலையுடன் 7 அல்லது 8 மிளகை சேர்த்து வாயில் போட்டு நன்றாக கசகச என்று மென்று விழுங்க வேண்டும். இவ்வாறு நாள் ஒன்றுக்கு 3 வேளை சாப்பிட்டால், அரீப்பும் தடிப்பும் மறையும். 

எக்காரணத்தினால் தடிப்பு மற்றும் அலர்ஜி ஏற்பட்ழருந்தாலும், செய்ய வேண்டிய முதலுதவி. மருதாணி இலையின் சாற்றைப் பிழிந்து, தேங்காய் எண்ணெயில் கலக்கி நன்கு சுண்டவைத்து அதை உடலெங்கும் பூச கட்டுப்படும்..

அலர்ஜி என்றதும் மஞ்சளும், கருவேப்பிலையும் ஞாபகத்துக்கு வர வேண்டும். இரண்டையும் நன்றாக அரைத்து, ஒரு மாதம் சாப்பிட்டு வர, நோ அலர்ஜி, நோ நமைச்சல்.

தூசி அலர்ஜி & சுக்கு, மிளகு, திப்பிலி மூன்றையும் சம அளவு எடுத்து இதில் சுக்கு தவிர மற்ற இரண்டையும் ஒரே பக்குவத்தில் வறுத்து, மூன்றையும் பொடி செய்து சலித்துக் கொண்டு, குப்பை மேனி என்னும் மூலிகைச் சாறை இந்தப் பொடியில் விட்டு அரைத்து, வெண்ணெய் போல் ஆனதும், ஒரு சுண்டைக்காய் அளவு மாத்திரைகளாய் உருட்டி, நிழலில் உலர்த்திக் கொண்டு, காலை- மாலை இரு வேளையும் சாப்பிட்டு வந்தால், தூசி அலர்ஜி குணமாகும்.

உடல் ஸ்லிம் ஆக வேண்டுமா...அதிகாலையில் விழித்தெழுங்கள்


உடல் ஸ்லிம் ஆக வேண்டுமா...அதிகாலையில் விழித்தெழுங்கள்;;

உடல் ஸ்லிம் ஆக வேண்டுமா... அதிகாலையில் விழித்து பழகுங்கள். அப்படி அதிகாலையில் விழித்து விடுபவர்கள் ஸ்லிம் ஆவதுடன் மகிழ்ச்சியாகவும், நல்ல உடல்நலத்துடன் இருப்பார்கள் என்று லண்டன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். 
லண்டனில் உள்ள பிரபல பல்கலைக்கழகம் ரோஹாம்டன் பல்கலைக்கழகம்.

இதில் ஆராய்ச்சிப் பிரிவில் உள்ள பேராசிரியர்கள், அதிகாலையில் படுக்கையில் இருந்து எழுபவர்களை பற்றி ஒரு ஆய்வு மேற்கொண்டனர். அதில், காலை யில் வெகு நேரம் கழித்து எழுபவர் களை விட அதிகாலையில் எழுபவர்கள் சுறுசுறுப்பாக இயங்குவதையும் மனதில் உற்சாகத்துடன் காணப்படுவதையும் உணர்ந்தனர்.

ஆராய்ச்சியாளர்கள் ஆய்வில் 1068 பேரிடம் அவர்களின் தூக்கம், விழிப்பு பற்றி பல்வேறு கேள்விகளை எழுப்பி பதில் பெற்றனர். அவர்களில் ஒரு பிரிவினர் சராசரியாக அதிகாலை 6.58 மணிக்குள் விழித்து விடுபவர்கள். இன்னொரு பிரிவினர் 8.54 மணிக்கு பின் எழுபவர்கள். இவர்களின் உடல் நலம், செயல்பாடுகள், தோற்றம் ஆகியவற்றை ஒப்பிட்டு பார்த்தனர்.

அதில் அதிகாலையில் விழித்து விடுபவர்கள் பெரும்பாலும் ஸ்லிம் ஆக காட்சியளித்தனர். அவர்களிடம் காலையில் வேலை யை துவங்கும் போது காணப் படும் உற்சாகம் வெகு நேரம் நீடித்தது. அதே சமயம், லேட் ஆக எழுபவர்களிடம் உற்சாகம் குறைந்து காணப்பட்டது.

அதே போல், இரவில் அதிகமாக டி.வி. பார்ப்பவர்களே காலையில் தாமதமாக விழிக்கிறார்கள் என்பதும், அவர்களில் பலரும் காலை உணவை தவிர்த்து விடுகின்றனர் என்றும் ஆய்வில் கண்டறியப்பட்டது.

மாதுளம்


மாதுளம்.......................

மாதுளம் பூக்களை உலர்த்திப் பொடித்து வைத்துக் கொண்டு வேளைக்கு ஒரு சிட்டிகை வீதம் சாப்பிட்டால், இருமல் நிற்கும். மாதுளம் பூச்சாறு, அருகம்புல் சாறு சமமாகச் சேர்த்து வேளைக்கு 30 மில்லி வீதம் தினசரி மூன்று வேளையாக மூன்று தினங்களுக்குக் கொடுத்தால் பெண்களுக்கு ஏற்படும் உதிரப்போக்கு நிவர்த்தியாகும்.

மாதுளம் பூக்கள் 15 கிராம் எடுத்து 25 கிராம் சீனி சேர்த்து மசிய அரைத்து காலை, மாலை ஒரு தேக்கரண்டி வீதம் சாப்பிட்டு வந்தால், தொல்லைப் படுத்தும் பெண்களின் வெள்ளைப்பாடு நிவர்த்தியாகும்.

மாதுளம் பூச்சாற்றை 15 மில்லியளவு சேகரித்து சிறிது கற்கண்டு சேர்த்து தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், இரத்த மூலம் நீங்கும். மூலக் கடுப்பும், உடல் சூடும் தணியும். வாந்தி, மயக்கத்திற்குக் கொடுத்தால் நோய் தீரும். மாதுளம் பூக்களைத் தலையில் வைத்துக் கொண்டால் தலைவலி, வெப்பநோய் தீரும்.

மாதுளம்பழத் தோலின் பயன்கள்

மாதுளம் பழத்தின் தோலை அம்மியில் நன்கு மை போல் வைத்து அரைத்து அதில் எலுமிச்சம்பழம் அளவு எடுத்து அரை ஆழாக்கு எருமை தயிரில் கலந்து மூன்று நாள் காலையில் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் பிற மருந்துகள் கொடுத்தும் குணமாகாத சீதபேதி உடன் நிற்கும்.