பெர்ஃப்யூம் பயன்படுத்துவதால் பாதிப்புகள் உண்டாகுமா?....
பெரியவர்களே கூட தொடர்ச்சியாக பெர்ஃப்யூம் பயன்படுத்துவது நல்லதல்ல. அதிலுள்ள ஆல்கஹால் சருமத்தைக் கருப்பாக்கி விடும். குழந்தைகளின் மென்மையான சருமம் அதிக பாதிப்புக்கு உள்ளாகும். சூரிய அலர்ஜியை உண்டாக்கும் தன்மை அதில் இருப்பதால், வெயிலில் வியர்வை சிந்த வளைய வரும் பிள்ளைகளுக்கு இன்னும் பல பாதிப்புகளை ஏற்படுத்தும். வியர்வைச் சுரப்பிகளையும் பாதிக்கும். ‘கான்டாக்ட் டெர்மடைட்டிஸ்’ என்ற சரும அலர்ஜியை உருவாக்கும் தன்மை பெர்ஃப்யூமுக்கு இருக்கிறது.
அக்குள் பகுதிகளில் தொடர்ந்து பயன்படுத்தினால், டீன் ஏஜிலேயே அந்தப் பகுதி கறுத்துப் போய் விடும். எப்போதாவது ஒருமுறை எனில் உடையின் மேல் ஸ்பிரே அடித்துப் பயன்படுத்தலாம்.
உங்களுக்கு கன்னங்களில் சிவப்பு நிறத்தில் முகப்பரு புள்ளி புள்ளியாக இருக்கிறதா?
சூடான மற்றும் மசாலாக்கள் கலந்த உணவுப் பொருட்களை அவாய்டு பண்ணி விடுங்கள். வெயிலில் அலையாதீர்கள். 'வாட்டர் பேஸ்டு மேக்கப்' போட்டுக் கொள்ளுங்கள். ஆயில் மேக்கப்பைத் தவிர்த்து விடுங்கள். சுடுநீரில் தலைக்குக் குளிக்காதீர்கள் உடலைக் கூலாக வைத்துக் கொள்ளுங்கள்.உங்களுக்கு தலைமுடி சுருள் சுருளாக குட்டையாக மெயின்டெய்ன் செய்ய முடியாமல் அடங்காப் பிடாரியாக இருக்கிறதா?
இப்படிப்பட்ட முடியைக் கொண்ட பெண்கள் தலைக்குக் குளித்தவுடனே முடியில் ஆலுவேரா ஜெல்லைத் தடவி 30 நிமிடங்கள் ஊற வைத்து அலசி விடுங்கள் போதும்.
சோப், ஃபேஷ் வாஷ் என்று எதையும் ஏற்றுக்கொள்ளாத சென்சிட்டிவ் ஸ்கின் உங்களுடையதா?
ஹைப்போ அலர்ஜெனிக் சோப் மற்றும் ஃபேஷ் வாஷை பயன்படுத்த ஆரம்பியுங்கள். தவிர வாட்டர் பேஸ்டு மாய்ஸ்ரைஸரை தொடர்ந்து யூஸ் செய்யுங்கள்.
உங்கள் சருமத்தில் முகச் சுருக்கம் விழுந்து விட்டதா?
டோன்ட் வொர்ரி.... முகத்திலும், கழுத்திலும் தேனை அப்ளை செய்து வட்டமாக மேல் நோக்கி மசாஜ் செய்யுங்கள். பிறகு அரை மணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தை வாஷ் செய்து விடுங்கள். தொடர்ந்து இப்படியே செய்து வர உங்களுடைய சரும ஈரப்பதத்தை, தேன் சீர் செய்து சரும சுருக்கத்துக்கு குட்பை சொல்லிவிடும்.
டிரை ஸ்கின் உள்ளவர்கள் ஃபேஷியல் செய்தால், அவர்கள் சருமம் இன்னும் வறண்டு போய்விடும். இந்தப் பிரச்சினை உங்களுக்கு இருக்கிறதா?
கெமிக்கல் ஃபேஷியலை அவாய்டு செய்து விட்டு, அதற்குப் பதில் பாலில் அரிசி மாவைக் குழைத்து முகத்தில் அப்ளை செய்து அரை மணி நேரம் கழித்து தேய்த்து கழுவி விடுங்கள். டெட் செல்லும் ரிமூவாகும். சருமமும் டிரை ஆகாது.
உங்களுடைய புருவமும், கண் இமையும் அடர்த்தியாக இல்லையா?
கவலையை விடுங்கள். விட்டமின் 'ஈ' ஆயில், ஆலிவ் ஆயில் அல்லது பாதாம் ஆயிலில் ஏதோவொன்றைத் தொடர்ந்து புருவத்திலும், கண் இமைகளிலும் தடவி வாருங்கள் போதும். ஆனால் உங்கள் புருவமும், கண் இமைகளும் மெல்லியதாக இருப்பது பரம்பரையாக வருவதென்றால், இந்த ஆயில் ட்ரீட்மெண்ட் அதிகம் சக்ஸஸ் ஆகாது.
செலவே இல்லாத ஈஸி ஸ்க்ரப்பர் வேண்டுமா உங்களுக்கு?
பாசிப் பருப்பு அல்லது கடலைப் பருப்பை 'நற நற'வென அரைத்து தயிருடன் மிக்ஸ் செய்து, முகத்தில் தடவி காய்ந்ததும் கழுவி விடுங்கள். சருமத்தில் உள்ள இறந்த செல்லெல்லாம் நீங்கி சருமம் சாஃப்ட்டாகி விடும்.
'ட்ரை ஸ்கின்' உள்ள எனக்கு எந்த சைட் எஃபெக்ட்டும் இல்லாத 'வெஜிடபிள் ஃபேஸ்பேக்' இருக்கிறதா என்று கேட்பவரா நீங்கள்?
பீட்ருட்டை வேக வைத்து மசித்து, இத்துடன் ஓட்ஸ் மீலைக் கலந்து முகத்தில் தடவி 20 நிமிடங்கள் கழித்து வாஷ் செய்து விடுங்கள். ட்ரை ஸ்கின்னும் ஈரப்பதத்துடன் ஜொலிக்கும்.
குரல் வளத்தை பெருக்கும் மாந்தளிர்.
மாம்பழத்தில் விட்டமின் ஏ நிறைந்திருக்கிறது. மாந்தளிரை நன்றாக காய வைத்து பொடித்து வைத்துக்கொண்டு தண்ணீரில் மூன்று சிட்டிகை கலந்து குடித்தால் தொண்டை சம்பந்தப்பட்ட எந்த நோயும் நெருங்காது. அதோடு குரல் வளமும் பெருகும்.மா இலை சாற்றுடன் அதே அளவு தேன் பால் பசும் நெய் கலந்து சாப்பிட்டால் கட்டை குரலும் இனிமையாக மாறும். மா இலையை சுட்டு தேனில் வதக்கி சாப்பிட்டு வந்தால் தொண்டைக்கட்டு கரகரப்பு சளி நீங்கும். மா இலையை பொடியாக்கி பற்களில் தேய்த்து வர பல்லில் உள்ள காரை மறைந்து பற்கள் முத்து போல ஜொலிக்கும்.
மாம்பழ மலமிளக்கியாக செயல்படுவதுடன் முகத்தில் உள்ள பருக்களையும் போக்ககூடியது. சூடு உடல் கொண்டவர்கள் மாம்பழம் சாப்பிட்டதும் ஒரு டம்ளர் பாலை பருகினால் சூடு பிடிக்காது.
ஒரு டீஸ்பூன் மாங்கொட்டை பொடியுடன் ஒரு துளி நெய் கலந்து சாப்பிட்டால் வயிற்றில் பூச்சி தொல்லை இருக்காது. நகத்தின் மேல் இருக்கும் வெள்ளை புள்ளிகள் நக வெட்டு தோலில் உள்ள வெள்ளை திட்டுகளும் நீங்கிவிடும்.
மா மரத்தின் பட்டையில் வடியும் பாலை கால் வெடிப்பில் தடவினால் வெடிப்பு மறைந்து பாதம் பட்டு போல் மாறிவிடும்..
ஒரு சிட்டிகை மா மர பிசினை ஒரு டம்ளர் மாம்பழ ஜீஸீடன் கலந்து சாப்பிட்டால் தேமல் தழும்பு படை நீங்கி தோல் மிருதுவாகும்.
புட் பாய்சன்.......
*நமக்கு ஒத்து வராத சில உணவு வகைகள் அல்லது பழைய உணவுகளால் நமது உடம்பில் விஷத்தன்மை சேருகிறது.அதனால் கண் எரிச்சல் தலைவலி மூச்சி பாதிப்பு எலும்புகளில் வலிகளும் மேலும் சில பிரச்சனைகளும் ஏற்படக்கூடும்.அந்த சமயத்தில் செய்ய வேண்டியவை
*அழுகிய பழங்கள் அல்லது கெட்டுபோன இறைச்சி போன்றவைகளால் விஷத்தன்மை ஏற்படுகிறது.நமது உணவில் விஷத்தன்மை இருந்திருக்கலாம் என்று சந்தேகம் வந்தால் உடனே அலர்ட் ஆகுங்கள்.
அப்போது நீங்கள் செய்ய வேண்டியது
*சுடுநீரில் சுமார் பதினைந்து நிமிடங்கள் வரையாவது குளியுங்கள்.
தாகம் எடுத்தால் ஆரஞ்சு எலுமிச்சை போன்ற பானங்களை பருகுங்கள்.
*கொஞ்ச நேரம் படுத்து கொள்ளலாம் அல்லது இனிமா எடுத்து கொண்டாலும் சரி தான்மேலும் நன்றாக பசிக்கும் வரை எதுவும் சாப்பிடக்கூடாது.விஷத்தன்மை இருந்தால் உங்கள் வயிற்றில் சீரணம் ஆவது குறைந்து போயிருக்கலாம்.
*இந்த மாதிரி நேரத்தில் ஏதாவது சாப்பிட்டால் உடல்நிலை மேலும் மோசமடைய வாய்ப்புள்ளது
அலர்ஜியா!
ஒவ்வொருவர் உடலுக்கும் ஒத்துக்கொள்ளாதது பொருட்கள் உண்டு. அதைச் பயன்படுத்தும் போதோ அல்லது உணவுக்காக சேர்த்துக் கொண்டாலும் அலர்ஜி ஏற்படும். இதைக் காணாக்கடி என்பர். இதனால் உடலில் அரீப்பும், தடிப்பும் ஏற்படும்.. இதைப்போக்க, சிறிது வேப்பிலையுடன் 7 அல்லது 8 மிளகை சேர்த்து வாயில் போட்டு நன்றாக கசகச என்று மென்று விழுங்க வேண்டும். இவ்வாறு நாள் ஒன்றுக்கு 3 வேளை சாப்பிட்டால், அரீப்பும் தடிப்பும் மறையும். எக்காரணத்தினால் தடிப்பு மற்றும் அலர்ஜி ஏற்பட்ழருந்தாலும், செய்ய வேண்டிய முதலுதவி. மருதாணி இலையின் சாற்றைப் பிழிந்து, தேங்காய் எண்ணெயில் கலக்கி நன்கு சுண்டவைத்து அதை உடலெங்கும் பூச கட்டுப்படும்..
அலர்ஜி என்றதும் மஞ்சளும், கருவேப்பிலையும் ஞாபகத்துக்கு வர வேண்டும். இரண்டையும் நன்றாக அரைத்து, ஒரு மாதம் சாப்பிட்டு வர, நோ அலர்ஜி, நோ நமைச்சல்.
தூசி அலர்ஜி & சுக்கு, மிளகு, திப்பிலி மூன்றையும் சம அளவு எடுத்து இதில் சுக்கு தவிர மற்ற இரண்டையும் ஒரே பக்குவத்தில் வறுத்து, மூன்றையும் பொடி செய்து சலித்துக் கொண்டு, குப்பை மேனி என்னும் மூலிகைச் சாறை இந்தப் பொடியில் விட்டு அரைத்து, வெண்ணெய் போல் ஆனதும், ஒரு சுண்டைக்காய் அளவு மாத்திரைகளாய் உருட்டி, நிழலில் உலர்த்திக் கொண்டு, காலை- மாலை இரு வேளையும் சாப்பிட்டு வந்தால், தூசி அலர்ஜி குணமாகும்.