எய்ட்ஸ் -தெரிந்ததும் தெரியாததும்..
எய்ட்ஸ் பற்றி ஓரளவுக்கு உங்களுக்கு தெரிந்திருக்கும்.பரவலாக அறியப்பட்ட்து அது பால்வினை நோய் என்பதும்,உடலுறவு மூலம் பரவும் என்பதும்தான்.தெரியாத்து நிறைய இருக்கிறது.”அக்குயர்ட் இம்யூனோ டிஃபிசியன்ஸி சிண்ட்ரோம்”(Acquired immune deficiency syndrome) என்பதன் சுருக்கம் தான் எய்ட்ஸ்.இது HIV என்னும் வைரஸால் ஏற்படும் ஒருநிலை.மனிதனுக்கு இயற்கையாகவே நோய் தடுப்பாற்றல் உண்டு. உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பொருட்கள்(Antigen) உள்ளே நுழையும்போது (உதாரணமாக பாக்டீரியா,வைரஸ்,விஷம்போன்றவை) எதிராக வேதிப்பொருட்களை(Antibody) உருவாக்கி அதை அழித்துவிடும்.இந்த வேலையை செய்வது நமது ரத்த்த்தில் உள்ள வெள்ளையணுக்கள்.
HIV கிருமி உடலில் நுழைந்தவுடன் நோய் எதிர்ப்பு வேலையை செய்யும் வெள்ளையணுக்களை அழிக்க ஆரம்பித்து விடுகின்றன.கிருமிகள் அதிகரிக்க அதிகரிக்க உடலில் சுத்தமாக ஒரு வகை வெள்ளையணுக்கள் குறைந்துபோய் வேலி இல்லாத வெள்ளாமை போல உடலில் பலவகை நோய்களும் ஏற்பட்டு விடும்.
முழுவதுமாக எதிர்ப்பு சக்தி இல்லாமல் எடை குறைந்து ,ஆரம்பத்தில் பத்திரிகையிலும்,டி.வி,யிலும் காட்டப்பட்ட்து போல எலும்பும் தோலுமாக காட்சியளிக்கும் நிலைதான் எய்ட்ஸ்.இது கடைசி நிலை.ஆனால் இந்த நிலை ஏற்பட ஒருவருக்கு கிருமித்தாக்கம் ஏற்பட்டு பல வருடங்கள் ஆகலாம்.அதுவரை அவர் பாதிக்கப்பட்டிருந்தாலும் மற்றவர்கள் மாதிரி இயல்பாகவே இருப்பார்.ரத்தம் பரிசோதனை செய்தால் மட்டும் தெரியும்.
இப்போது கட்டுப்படுத்துவதற்கான மருந்துகள் உள்ளதால் எலும்பும்,தோலுமாக இருக்கும் எய்ட்ஸ் நிலையில் இருக்கும் நோயாளிகளை காணமுடியாது.ஆப்பிரிக்காவில் தோன்றிய போதிலும் முதலில் அமெரிக்காவில்தான் கண்டறிந்து(ஓரினச்ச்சேர்க்கையாளர்களிடம்) நாமகரணம் சூட்டப்பட்ட்து.இந்தியாவில் 1986-ல் சென்னையில் ஆறு பாலியல் தொழிலாளர்களிடம் தொற்று இருப்பதை உறுதி செய்தார்கள்
இன்று பெரும் அச்சுறுத்தலாக விளங்கும் இக்கிருமி தோன்றியத்ற்கான பல அனுமான்ங்கள் இருக்கின்றன.ஆப்பிரிக்காவில் சிம்பன்ஸியிடமிருந்து மனிதனுக்கு பரவியது என்பதே அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட்து.ஆப்பிரிக்கர்களிடம் சிம்பன்ஸி கறி சாப்பிடும் வழக்கம் உண்டு.
நாம் கோழி,ஆடு வெட்டுவது போல அவர்களும் வெட்டும்போது ரத்தம் தெரிக்கும் இல்லையா? அப்போது உடலில் உள்ள காயங்கள் வழியாக பரவியிருக்கலாம் என்கிறார்கள்.இன்னொன்று உயிரியல் யுத்தம்(bio war) .தசாவதாரமும்,ஈ படமும் நினைவுக்கு வரலாம்.சுற்றுலா பயணிகள் மூலமாக உலக நாடுகளுக்கு பரவிவிட்ட்த
என்கிறார்கள். முழுமையான அறிவே இந்நோயை ஒழிக்க துணை செய்யும்.பாதுகாப்பு இல்லாத உடலுறவு மூலம் எச்.அய்.வி பரவுவது அதிகம்.சுத்தம் செய்யாத ஊசி போன்ற பொருட்கள்,பாதிக்கப்பட்டவரின் ரத்தம் பரிசோதிக்காமல் செலுத்துவது,தாயிடம் இருந்து குழந்தைக்கு ஆகிய நான்கு வகையில் மட்டுமே பரவும்.வேறு வகையில் இது பரவாது.
தேவையில்லாத பயத்தினால் இக்கிருமியால் பாதிக்கப்பட்டவர்களை தொடுவதற்கு பயந்த காலம் உண்டு.இன்னும் சிலருக்கு அந்த பயம் இருக்கிறது.தொட்டால் எல்லாம் ஒட்டிக்கொள்ளாது.அப்படி பார்த்தால் இந்தியாவில் முக்கால்வாசி பேருக்கு வந்து விட்டிருக்கும்.ஏனென்றால் பலர் பார்க்காவிட்டாலும் பஸ்ஸிலோ,ரயிலிலோ அவர்களுடன் பயணம் செய்திருக்கிறீர்கள்.
ஆளைப்பார்த்தால் ஒருவருக்கு எச்.அய்.வி. இருப்பதை கண்டுபிடிக்க முடியாது.கொசு மூலமும் பரவாது.மனித உடலை தவிர வேறெங்கும் உயிர்வாழ அதற்கு உணவு இல்லை.மனிதனின் ரத்தம் ,உடல் திரவங்களில்தான் உயிர்வாழும்.அதனால்தான் human immune deficiency virus என்று பெயர்.சரி எச்.அய்.வி. மற்றும் எய்ட்ஸ் என்ன வித்தியாசம்? எச்.அய்.வி. என்பது கிருமி,எய்ட்ஸ் என்பது அதனால் உருவாகும் பல நோய்களின் கூட்டு நிலை.
எச்.அய்.வி. யால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசாங்கம் மருத்துவ வசதி அளிக்கிறது.வாழ்நாள் முழுக்க அவர்களுக்கு வழங்கப்படவேண்டும்.பாதிக்கப்பட்ட பல பெண்களும் குழந்தைகளும் ஒரு பாவமும் செய்யாதவர்கள்.நமது கடமை அவர்கள் மீது அன்பு செலுத்துவதே!
கோடைக்கு சிறந்ததுங்க பீச் பழம்..
பீச் பழங்களின் பூர்வீகம் சீனா என்றாலும் குளிர் காலத்தில் பெரும்பாலான நாடுகளில் பயிரிடப்படுகிறது. பீச் பழத்தில் உள்ள ஆரோக்கிய நலன்களை ஆராய்ச்சியாளர்கள் பல ஆராய்ச்சிக்கு பின்பு தெரியபடுத்தி இருக்கின்றனர். இது கோடைக்கால பழங்களில் ஒன்று. பீச் பழங்களை ஸ்டோன் பழங்கள் என அழைக்கின்றனர். மேலும் பிளம்ஸ், செர்ரி பழங்கள், நெக்ட்ரைன் போன்றவையும் ஸ்டோன் ப்ரூட் பழங்களை சார்ந்தவையே.
பீச் பழத்தில் வைட்டமின் ஏ, சி அதிகமுள்ளதால் இந்த பழத்தை வைத்து ஃபேசியல் செய்தால் சரும சுருக்கங்கள் நீங்குவதோடு சரும துளைகளில் உள்ள அடைப்புகள் நீங்கி சுத்தமாகவும் முகம் பொலிவுடனும் இருக்கும்.பீச்பழத்துடன் முட்டையின் வெள்ளை கருவை சேர்த்து முகத்திற்கு போட்டால் முகத்தில் கலர் மாற்றங்கள் ஏற்படும் பொதுவாக பீச் பழங்கள் முடி உதிர்வதை கட்டுபடுத்தும்.
பீச் பழங்கள் தொற்று நோய்கள், இதயநோய்கள் ஆகியவற்றை குணபடுத்தி இரத்த ஒட்டத்தில் உள்ள கொழுப்பின் அளவை கட்டுபாட்டுக்குள் வைத்துக்கொள்கிறது. கீழ்வாதம், ரூமட்டிக் நோயால் அவதி படுகின்றவர்கள் பீச் பழத்தின் மூலம் தீர்வு காண முடியும். வலிப்போடு கூடிய இருமல் இருப்பவர்களுக்கு பீச்பழத்தில் தேநீர் தயாரித்து பயன்படுத்துகையில் அதிக செயல் திறன் மிக்கதாக உள்ளது.
பீச் பழங்கள் ஆற்றலை அதிகரிக்ககூடிய சிறந்த பழங்களில் ஒன்று. ஏனெனில் மூலதனமாக கார்போஹைட்ரேட் கொண்டிருக்கிறது. இதில் பொட்டாசியம், இரும்பு, ஃபுளோரைடு போன்ற சத்துகளை அதிகளவு கொண்டுள்ளது. உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை தரக்சுடியது. பீச் பழத்தில் வைட்டமின் பி6 கொண்டிருப்பதால் கர்ப்பிணிகள் சாப்பிடவேண்டிய பழங்களில் ஒன்றாக உள்ளது.
மனஅழுத்தம், மனநோயினால் பாதிக்கப்பட்டு இருப்பவர்களை மீட்க பீச் பழங்கள் உதவுகின்றது. பீச்பழங்களை உட்கொள்வதால் நரம்பு மண்டலம் மூலமாக நரம்பின் செல்களை பாதுகாக்கிறது மேலும் சீறு நீரகத்தில் உருவாகும் கல் மற்றும் கட்டிகளை பீச்பழம் சாப்பிடுவதால் தடுக்க முடியும் . இப்பழத்தில் நீர்சத்து அதிகம் காணப்படுவதால் உணவு கட்டுபாட்டில் இருப்பவர்கள் அவசியம் எடுத்துக்கொள்ள வேண்டும் இது கொழுப்பை குறைக்கும் திறன் கொண்டது.
கோடையில் வெளியில் சென்று களைப்புடன் வந்தால் பீச்பழத்தினை சாப்பிடலாம். ஏனெனில் இதில் நீர்சத்து அதிகம் கொண்ட பீட்டா கரோட்டின் இருப்பதால் உடல் வறட்சியை போக்குகிறது. இது மலமிளக்கியாக செயல்படுவதோடு மட்டுமல்லாமல் சிறுநீரகங்கள் மற்றும் சிறுநீரகப்பையில் உள்ள நச்சுக்களை நீக்கவும் உதவுகிறது.
கால்சியம் குறைவா இருக்கா ஜூஜுபி சாப்பிடுங்க.
ஜூஜுபி உடல் சூட்டைத் தணித்து குளிர்ச்சியைத் தரக்கூடியது. குளிர்ச்சியான உடல்வாகு உள்ளவர்கள் மதிய வேளையில் மட்டும் இதனை உண்ணலாம். இலந்தையில் மாவுப் பொருள் , புரதம், தாது உப்புகள், மற்றும் இரும்புசத்தும் உள்ளது. இலந்தைப்பழம் நினைவாற்றலை அதிகரிக்கும் என்பதால் மாணவர்கள் இதைச் சாப்பிடலாம்.
இலந்தைப் பழம் போல அதன் இலையிலும் அதிக மருத்துவப் பயன்பாடுகள் கிடைக்கின்றன. இந்த இலைகளை மை போல் அரைத்து வெட்டுக்காயம்
மீது கட்டினால் விரைவில் நலம் பெற முடியும். உடலின் மேற்பகுதியில் ஏற்படும் கோடைக்காலக் கட்டிகள் மீது கட்டி வர விரைவில் கட்டிகள்
பழுத்து உடையும்.
பித்த மயக்கத்தை போக்கும்
உடலில் பித்தம் அதிகரித்தால் தலைவலி, மயக்கம், தலைச்சுற்றல் என பல நோய்கள் உண்டாக வாய்ப்புண்டு. மேலும் பித்த நீர் அதிகரிப்பால்
இரத்தம் சீர்கேடு அடையும். இவற்றைப் போக்கி, பித்தத்தைச் சமநிலைப்படுத்தும் குணம் இலந்தைக்கு உண்டு. இலந்தைப் பழம் அடிக்கடி சாப்பிட்டு
வந்தால் பித்தம் சமநிலையில் இருக்கும். .
பற்களுக்கும் உறுதி தரும்
உடம்பிலுள்ள எலும்புகளுக்கும் பற்களுக்கும் உறுதி தரும் உடம்பில் பலம் பெருகும். பகல் உணவுக்குப் பிறகு இலந்தைப்பழத்தை உட்கொண்டால்
செரிமானம் உண்டாவதுடன் பித்தமும் கபமும் சாந்தமுறும். பழத்தை உலர்த்தி கொட்டையை நீக்கி உட்கொண்டால் கபத்தை வெளிக் கொண்டு வரும்.
உடலில் சுண்ணாம்புச் சத்து (கால்சியம்) குறைவதால் எலும்புகள் பலமிழந்து காணப்படும். இதனால் இலேசாக கீழே விழுந்தால்கூட எலும்புகள் உடைந்து போகும். கால்சியம் சத்து குறைவாக உள்ளவர்கள் இலந்தைப் பழம் கிடைக்கும் காலங்களில் வாங்கி சாப்பிட்டு வந்தால் எலும்புகள் வலுப்பெறும்.
பெண்களுக்கு மாதவிலக்குக் காலங்களில் ஏற்படும் உபாதைகளைக் குறைக்கவும், அதிக உதிரப்போக்கை தடுக்கவும் இலந்தைப் பழம் பயன்படுகிறது.
பற்களும் உறுதிபெறும். கால்சியச் சத்து இலந்தைப் பழத்தில் அதிகம் இருப்பதால் எலும்புகளில் ஏற்படும் தேய்மானத்தைக் கட்டுப்படுத்தி, மெனோபாஸ் காலங்களில் ஏற்படும் சத்து இழப்புகளை ஈடுசெய்யும்
செரிமானத்தை தூண்டும்
பசியில்லாமல் அவதிப்படுபவர்களும் சிறிது சாப்பிட்டாலும் செரிமானம் ஆகாமல் கஷ்டப்படுபவர்களும் இலந்தைப் பழத்தின் விதையை நீக்கிவிட்டு
பழச் சதையுடன் மிளகாய், உப்பு சேர்த்து உலர்த்தி எடுத்துக்கொண்டு காலையும், மாலையும் 2 கிராம் அளவு சாப்பிட்டு வந்தால் செரிமான சக்தியைத்
தூண்டி, நன்கு பசியை உண்டாக்கும்.
சிலருக்கு அடிக்கடி உடல்வலி ஏற்படும். சிறிது வேலை செய்தால் கூட அதிகளவு உடல்வலி தோன்றும். பெரும்பாலும் 40 வயதைத்
தாண்டியவர்களுக்கே இந்த நிலை ஏற்படும். இந்த உடல்வலியைப் போக்கி உடலைத் தெம்பாக்க இலந்தைப் பழம் நல்ல மருந்தாகும்.
பேருந்தில் பயணம் செய்யும்போது சிலருக்கு வாந்தி, தலைச்சுற்றல் உண்டாகும். அவர்கள் இலந்தைப் பழத்தை சாப்பிட்டு வந்தால் தலைச்சுற்றல்,
வாந்தி ஏற்படாது.
பெர்ஃப்யூம் பயன்படுத்துவதால் பாதிப்புகள் உண்டாகுமா?....
பெரியவர்களே கூட தொடர்ச்சியாக பெர்ஃப்யூம் பயன்படுத்துவது நல்லதல்ல. அதிலுள்ள ஆல்கஹால் சருமத்தைக் கருப்பாக்கி விடும். குழந்தைகளின் மென்மையான சருமம் அதிக பாதிப்புக்கு உள்ளாகும். சூரிய அலர்ஜியை உண்டாக்கும் தன்மை அதில் இருப்பதால், வெயிலில் வியர்வை சிந்த வளைய வரும் பிள்ளைகளுக்கு இன்னும் பல பாதிப்புகளை ஏற்படுத்தும். வியர்வைச் சுரப்பிகளையும் பாதிக்கும். ‘கான்டாக்ட் டெர்மடைட்டிஸ்’ என்ற சரும அலர்ஜியை உருவாக்கும் தன்மை பெர்ஃப்யூமுக்கு இருக்கிறது.
அக்குள் பகுதிகளில் தொடர்ந்து பயன்படுத்தினால், டீன் ஏஜிலேயே அந்தப் பகுதி கறுத்துப் போய் விடும். எப்போதாவது ஒருமுறை எனில் உடையின் மேல் ஸ்பிரே அடித்துப் பயன்படுத்தலாம்.
உங்களுக்கு கன்னங்களில் சிவப்பு நிறத்தில் முகப்பரு புள்ளி புள்ளியாக இருக்கிறதா?
சூடான மற்றும் மசாலாக்கள் கலந்த உணவுப் பொருட்களை அவாய்டு பண்ணி விடுங்கள். வெயிலில் அலையாதீர்கள். 'வாட்டர் பேஸ்டு மேக்கப்' போட்டுக் கொள்ளுங்கள். ஆயில் மேக்கப்பைத் தவிர்த்து விடுங்கள். சுடுநீரில் தலைக்குக் குளிக்காதீர்கள் உடலைக் கூலாக வைத்துக் கொள்ளுங்கள்.உங்களுக்கு தலைமுடி சுருள் சுருளாக குட்டையாக மெயின்டெய்ன் செய்ய முடியாமல் அடங்காப் பிடாரியாக இருக்கிறதா?
இப்படிப்பட்ட முடியைக் கொண்ட பெண்கள் தலைக்குக் குளித்தவுடனே முடியில் ஆலுவேரா ஜெல்லைத் தடவி 30 நிமிடங்கள் ஊற வைத்து அலசி விடுங்கள் போதும்.
சோப், ஃபேஷ் வாஷ் என்று எதையும் ஏற்றுக்கொள்ளாத சென்சிட்டிவ் ஸ்கின் உங்களுடையதா?
ஹைப்போ அலர்ஜெனிக் சோப் மற்றும் ஃபேஷ் வாஷை பயன்படுத்த ஆரம்பியுங்கள். தவிர வாட்டர் பேஸ்டு மாய்ஸ்ரைஸரை தொடர்ந்து யூஸ் செய்யுங்கள்.
உங்கள் சருமத்தில் முகச் சுருக்கம் விழுந்து விட்டதா?
டோன்ட் வொர்ரி.... முகத்திலும், கழுத்திலும் தேனை அப்ளை செய்து வட்டமாக மேல் நோக்கி மசாஜ் செய்யுங்கள். பிறகு அரை மணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தை வாஷ் செய்து விடுங்கள். தொடர்ந்து இப்படியே செய்து வர உங்களுடைய சரும ஈரப்பதத்தை, தேன் சீர் செய்து சரும சுருக்கத்துக்கு குட்பை சொல்லிவிடும்.
டிரை ஸ்கின் உள்ளவர்கள் ஃபேஷியல் செய்தால், அவர்கள் சருமம் இன்னும் வறண்டு போய்விடும். இந்தப் பிரச்சினை உங்களுக்கு இருக்கிறதா?
கெமிக்கல் ஃபேஷியலை அவாய்டு செய்து விட்டு, அதற்குப் பதில் பாலில் அரிசி மாவைக் குழைத்து முகத்தில் அப்ளை செய்து அரை மணி நேரம் கழித்து தேய்த்து கழுவி விடுங்கள். டெட் செல்லும் ரிமூவாகும். சருமமும் டிரை ஆகாது.
உங்களுடைய புருவமும், கண் இமையும் அடர்த்தியாக இல்லையா?
கவலையை விடுங்கள். விட்டமின் 'ஈ' ஆயில், ஆலிவ் ஆயில் அல்லது பாதாம் ஆயிலில் ஏதோவொன்றைத் தொடர்ந்து புருவத்திலும், கண் இமைகளிலும் தடவி வாருங்கள் போதும். ஆனால் உங்கள் புருவமும், கண் இமைகளும் மெல்லியதாக இருப்பது பரம்பரையாக வருவதென்றால், இந்த ஆயில் ட்ரீட்மெண்ட் அதிகம் சக்ஸஸ் ஆகாது.
செலவே இல்லாத ஈஸி ஸ்க்ரப்பர் வேண்டுமா உங்களுக்கு?
பாசிப் பருப்பு அல்லது கடலைப் பருப்பை 'நற நற'வென அரைத்து தயிருடன் மிக்ஸ் செய்து, முகத்தில் தடவி காய்ந்ததும் கழுவி விடுங்கள். சருமத்தில் உள்ள இறந்த செல்லெல்லாம் நீங்கி சருமம் சாஃப்ட்டாகி விடும்.
'ட்ரை ஸ்கின்' உள்ள எனக்கு எந்த சைட் எஃபெக்ட்டும் இல்லாத 'வெஜிடபிள் ஃபேஸ்பேக்' இருக்கிறதா என்று கேட்பவரா நீங்கள்?
பீட்ருட்டை வேக வைத்து மசித்து, இத்துடன் ஓட்ஸ் மீலைக் கலந்து முகத்தில் தடவி 20 நிமிடங்கள் கழித்து வாஷ் செய்து விடுங்கள். ட்ரை ஸ்கின்னும் ஈரப்பதத்துடன் ஜொலிக்கும்.