இதயத்தை காக்கும் உணவு பட்டியல் ..
கருப்பு பீன்ஸ்: போலேட், ஆண்டியாக்ஸிடண்ட்கள், மெக்னீசியம் நிரம்பிய பிளாக் பீன்ஸ், இரத்த அழுத்தம், இரத்தத்தில் கலந்துள்ள சர்க்கரை ,மற்றும் கொழுப்பை குறைக்கின்றது. பிளாக் பீன்ஸ் சாப்பிடுவதால் இதயம் பாதுகாக்கப்பட்டு பாதுகாப்பான ஒரு மண்டலத்தில் இதயத்தை வைத்திருக்கிறது. நீங்கள் தகர டப்பாக்களில் அடைத்து தயார் நிலையில் வைக்கப்பட்ட பீன்ஸை உபயோகபடுத்தும் முன் அதனில் அடங்கியுள்ள நீர்ம திரவத்தை அகற்றி சோடியத்தின் அளவை குறைவாக பயன்படுத்தலாம்.சல்மான் மீன் மற்றும் சூரை: இவ்விரு மீன்களும் இதயத்தின் முக்கிய வேட்பாளராக பணிபுரியும் ஆக்ஸிஜனேற்ற எதிர்ப்பொருள்கள் மற்றும் ஒமேகா 3யை வளமான அளவில் கொண்டுள்ளது. அதனால் சல்மான் மற்றும் சூரை மீன்கள் உணவில் எடுத்துக்கொண்டால் இதயத்தை பாதுகாக்கலாம்.
அக்ரூட் பருப்புகள்: இதயத்தை பாதுகக்க விரும்புபவர்கள் சாப்பிட வேண்டியவற்றில் இதுவும் ஒன்று. தினமும் சிறிதளவு அக்ரூட் பருப்புகளை சாப்பிடுவதன் மூலம் உடலில் உள்ள கொழுப்பை குறைந்து தமனிகளில் ஏற்பட்டிருக்கும் வீக்கத்தையும் சரிசெய்ய உதவுகிறது. மதிய உணவுக்கு பின் சிப்ஸ் போன்றவற்றை சாப்பிடுவதற்கு பதிலாக அக்ரூட் பருப்புகளை சாப்பிடலாம்.
ஆரஞ்சு: இது கொழுப்புக்கு எதிராக போராடக்கூடிய பெக்டின் கொண்டுள்ளது. ஆரஞ்சு பழத்தில் பொட்டாசியம் நிறைந்து காணப்படுவதால் இரத்த அழுத்தத்தை கட்டுபடுத்துகிறது. இதில் உள்ள ஆக்ஸிஜனேற்ற ஹெஸ்பெரிடின் குறைந்த இரத்த அழுத்தம் உதவுகின்றது.
கேரட்: இனிப்பு கேரட் நீரிழிவை கட்டுபடுத்தும் ஆற்றல் கொண்டது என்றாலும் கேரட்டில் உள்ள இனிப்பு மாரடைப்பு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் இருக்கின்றது. இவை கெட்ட கொழுப்புக்களை அளிப்பதற்கும் உதவிபுரிகிறது.
சர்க்கரை வள்ளி கிழங்கு: சர்க்கரை வள்ளி கிழங்கில் வைட்டமின் கி நிறைந்து காணப்படுகிறது. வெள்ளை நிறமான ஃபைபர் மற்றும் லைகோபீன் ஆரோக்கியமான மாற்றங்களை உருவாக்குகிறது.
ஓட்ஸ்: ஓட்ஸ் அனைத்து வடிவத்திலும் காணப்படும் கொழுப்புகளை குறைத்து உங்கள் இதயத்தை பாதுகாக்கும்.
ஆளி விதை: நார், பைத்தோகெமிக்கல்ஸ் கிலிகி ஆகியவற்றின் கலவையே ஆளி விதை. இந்த மூன்று பொருட்களும் உடல்நலத்திற்கு தேவையான ஆற்றலை தருகிறது. இதை தினமும் தானிய வகைகளுடன் கலந்தோ அல்லது பச்சைகாய்கறி கலவைகளுடன் கலந்தோ ஒரு ஸ்பூன் சாப்பிட்டால் இதயம் பலப்படும்.
மிளகாய் தூள்: இது நம்புவதற்கு கடினமானது என்றாலும் இந்தியாவில் உள்ள சுவைமிக்க மசாலா இதயத்தை பாதுகாப்பதோடு உடலில் உள்ள இன்சூலின் மற்றும் நீரிழிவையும் கட்டுபடுத்துகிறது.
காபி: இதை நீரிழிவு2 வகை நோயாளிகள் தவிர்க்க வேண்டியது. உயர் இரத்த அழுத்தம் கொண்டவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
சிகரெட் பிடிப்பவர்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை-
1. சிகரெட் பிடிக்கையில் கிட்டத்தட்ட முடியும் தருவாயில் உள்ள வெப்ப நிலை சுமார் 800 டிகிரி செல்சியஸ் அதாவது இந்த வெப்பத்தில் பித்தளையும் துத்தநாகமும் உருகும். இந்த வெப்பம் உங்களின் உதடுகளை எரித்து கருப்பாக்குகிறது.2. இதே அளவுள்ள சூடு உங்கள் நாவின் மேல் பட்டு ருசி அறியும் நாளங்களை சுட்டுப் பொசுக்கி நீங்கள் உட்கொள்ளும் உணவின் ருசி அறியாமல் செய்கிறது. நீங்கள் உண்பது முட்டையா இல்லை தயிரா என்பது உங்களுக்குத் தெரியாமல் போகிறது.
இதென்ன? தின்பவனுக்கு கண் இல்லையா?
எனக்கு தெரியாதா? முட்டையா அல்லது தயிரா என கேள்வி கேட்கும் பிரகஸ்பதிகளுக்கு பரிட்சை வைக்கிறேன். உங்களால் கண்ணை மூடிக்கொண்டு நான் தரும் உணவில் உள்ள பொருள்களை மூக்கையும் பொத்திக் கொண்டு உங்களால் சொல்ல முடியும் என்றால் உங்களுடன் சேர்ந்து நானும் புகைபிடிக்க தயார்!
அவ்வாறு இல்லையென்றால் என்னுடன் சமாதான உடன்படிக்கை செய்து கொண்டு நீங்கள் உங்கள் புகை பிடிக்கும் பழக்கத்தை விட தயாரா?
சவால்!!!!!!!!!!!!
3. நீங்கள் ஒவ்வொரு முறையும் உள்ளே இழுக்கும் புகையில் சுமார். 2 மில்லியன் எரிந்த நிலையில் கரித்துகள்கள் நுரையீரலை கடுமையாக தாக்குகிறது.?
எப்படி?
புகை என்பது கரியின் மைக்ரான் அளவுள்ள மாவுபொடி ஒரு கப் கோதுமைமாவை உங்களால் சுவாசிக்க முடியாது! ஆனால் பத்து சிகரெட் குடித்து முடிக்கையில் ஒரு கப் கோதுமை மாவு அளவுள்ள கரித்துகள்கள் உங்கள் நுரையீரலின் உளளே சென்று குதியாட்டம் போடுகிறது!.
அதனால் என்ன போடட்டுமே? நமக்கென்ன கவலை என்பவர்களே?
ஆடிக்களைத்தபின் அது ஓய்வெடுக்க அமரும் இடுக்கு நான் முன் சொன்ன சிறிய துவாரம் கடவுளின் கருணைக் கொடையான காற்று ஆக்ஸிஜன். திரவ ஆக்ஸிஜனாக மாற்றும் அந்த துவாரம். !!!!!!!!!!!!!!
உங்களின் பிராணவாயு துவாரங்களை நீங்கள் உங்கள் உதவி கொண்டே அடைத்து முதல் கட்ட வியாதியை வரவழைத்துக் கொள்கிறீர்கள்…..
கரித்துகள்கள் மைக்ரான் அளவு! அந்த துளையும் மைக்ரான் அளவு ஆப்பு அடித்தது போல மேலே உட்கார்ந்து மேற்கொண்டு காற்றை உள்ளே விடாமல் அடைக்கிறது.
பல லட்சக்கணக்கான கோடிக்கணக்கான துவராங்களை வெறும் இருபது சிகரெட்டுகள் பிடிப்பதன் மூலம் அடைத்து விட முடியும் இங்கே தான் தொடங்குகிறது உங்கள் ஆரம்ப கட்ட நோய்!.
திடீரென்று உங்களுக்கு சுவாசத்தில் மாறுதல் என்னவோ அதிகமாக காற்று தேவை போல மாடியேறினால் மூச்சிரைக்கிறது. ஓடிச்சென்று பஸ் ஏற முடியவில்லை !
ஆக்ஸிஜன் குறைவினால் உங்கள் தாம்பத்திய உறவு சரியில்லை சட்டென்று உங்களுக்கு மார்பு சளி வந்து எளிதில் குணமாக முடிவதில்லை.
என்னது? தாம்பத்திய உறவில் பிரச்சனையா? பொய் சொல்கிறீர்கள் சார்….. எனக்கு காது குத்தியாகி விட்டது என்று சொல்லும் காம ராஜர்களே…. கேளுங்கள் …..
ஆம்! நண்பர்களே தாம்பத்திய உறவின் போது மிக அதிகமான ஆக்ஸிஜன் இரத்தத்தில் இருந்தால் மட்டுமே உங்களின் உயிர் உறுப்பு தன் பணியை செய்யும் இல்லையேல் போர்வையை இழுத்து போர்த்திக் கொண்டு உறங்கும். குட் நைட் சொல்ல வேண்டும் பரவாயில்லையா? நீங்கள் இழப்பது இருக்கட்டும்…. உங்களின் பார்ட்னரை பசியோடு விடுவதில் என்ன நியாயம்?
பூரான் கடிச்சா உடனே பனை வெல்லம் கொடுங்க!
குழந்தைகள் விளையாடிக்கொண்டிருக்கும் போதோ அல்லது தூங்கிக்கொண்டிருக்கும் போதோ ஏதாவது பூச்சி கடித்து விடும். கடித்தது எந்த வகை பூச்சி என்பதை குழந்தைகளின் தோலில் ஏற்படும் தடிப்புகளை வைத்தே கண்டறிந்து கொள்ளலாம். பூரான் எனப்படும் நூறுகாலிகள் கடித்த இடத்தில் தோல் தடித்து சிகப்பு நிறத்தில் காணப்படும். குழந்தைகளுக்கு அரிப்பும் எரிச்சலும் இருக்கும் இதை வைத்தே அது பூரான் கடிதான் என்பதை உறுதி செய்ய முடியும். ஒரு சிலருக்கு இதயத்துடிப்பு அதிகரிக்கும். தலைவலிப்பது போல இருக்கும். வாந்தி ஏற்படும். பூரான் கடிதானே என்று அலட்சியம் கூடாது. உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லவேண்டும். அதற்கு முன்னதாக சில முதலுதவி சிகிச்சைகள் செய்யலாம். பூரான் கடித்த இடத்தில் உடனடியாக ஆன்டிசெப்டிக் சோப் போட்டு நன்றாக கழுவ வேண்டும் இதனால் அரிப்பும் கட்டுப்படும். கடிபட்ட இடத்தில் சூடாக இருக்கும். வலியும் அதிகமாக இருக்கும். அந்த இடத்தில் ஐஸ் ஒத்தடம் கொடுப்பதன் மூலம் குளிர்ச்சியாகி வலி கட்டுப்படும். பனை வெல்லம் பூரான் கடித்தது என்று தெரிந்ததும் குழந்தைகளுக்கு பனைவெல்லத்தை கரைத்து ஒரு சங்கு கொடுக்கலாம். சாப்பிட தெரிந்த குழந்தையாக இருந்தால் பனைவெல்லாம் தந்து சாப்பிட சொல்லலாம். அதேபோல் அரிக்கும் இடத்தில் ஹைடிரோ கார்டிசோன் கிரீம் தடவ அரிப்பு மறையும். தடிப்பு ஏற்பட்ட இடத்தில் முதல் சிகிச்சையாக சிறிது மண்ணெண்ணெயை விட்டு நன்றாகத் தேய்க்கத் தடிப்புகள் மறையும். அதிக மண்ணெண்ணெயை விட்டால் தோல் பொத்துவிடும் அதனால் கவனத்துடன் செயல் படவேண்டும்.. குப்பைமேனி இலை வெற்றிலைச் சாற்றை சுமார் 6 அவுன்ஸ் எடுத்து அதில் 35 கிராம் மிளகை ஒரு நாள் முழுவதும் ஊற வைக்கவேண்டும். ஊறிய மிளகை எடுத்து உலர்த்திப் பொடி செய்து கண்ணாடி பாத்திரத்தில் வைக்கவும். இந்த மருந்தை காலை, மாலை இரண்டு சிட்டிகை அளவு வென்னீரில் பருகவேண்டும். உப்பு, புளி இரண்டையும் சேர்க்கக் கூடாது. குப்பைமேனி இலையையும் உப்பையும் சரி அளவாக 150 கிராம் எடுத்து அரைக்கவும். அரைத்த விழுதுடன் 30 கிராம் மஞ்சள் சேர்த்து இடித்து உடல் முழுவதும் நன்றாகப் பூசவும். ஒருமணி நேரம் சென்ற பிறகு சுத்தமான நீரில் குளிக்கவேண்டும். மூன்று நாட்கள் காலையில் மட்டும் செய்து வர தடிப்பும் அரிப்பும் மறையும். புளி நீக்கிய உணவை சாப்பிடவேண்டும். பூரான் கடி விஷம் அறவே நீங்கும். ஊமத்தம் இலை பூரான் கடிக்குச் சிகிச்சை செய்யாமல் இருந்து தடிப்புகள் தோன்றி நீடித்து பலமாதமாகி விட்டால் ஊமத்ததைலம் தயாரித்து உடலில் தடவி குளிக்கவேண்டும். ஊமத்தம் செடியின் நூறு கிராம் எடுத்து நன்றாக இடித்து கால்லிட்டர் நல்லெண்ணெயில் ஊற போடவும். சூரிய வெயிலில் வைத்து தினந்தோறும் தடிப்புகளில் தடவி ஊறி குளிக்கவேண்டும். உடலெங்கும் தடிப்பு சொறி போன்ற சில்லரை தொந்தரவும் நீங்கும். தைலத்தைத் தினந்தோறும் சூரிய வெயிலில் வைத்து உபயோகிக்க வேண்டும்.
அப்பாவாகப் போகும் ஆண்களுக்கு..
‘‘முதல் 3 மாதங்களில் கணவன், தன் மனைவியுடன் அதிக நேரம் செலவிட வேண்டியது அவசியம். வாந்தி, மசக்கை, தலைசுற்றல், மனநிலை மாற்றம், உணவின் மீது வெறுப்பு என மனைவி சந்திக்கிற பல உபாதைகளுக்கும், கணவனின் அன்பும் அருகாமையும்தான் முதல் மருந்து. காலையில் மனைவி மெதுவாக எழுந்திருக்க நேரிடும். தனக்கு வேலைக்குச் செல்ல நேரமாகிறதே எனக் கடிந்து கொள்ளாமல், மனைவிக்கு முடிந்த உதவிகளைச் செய்யலாம். முதல் 3 மாதங்கள் குழந்தையின் வளர்ச்சியில் மிக முக்கியமானது என்பதால், மனைவிக்குத் தேவையான மருந்துகளையும் கவனமாகப் பார்த்துக் கொடுக்க வேண்டியது கணவனின் பொறுப்பு.
மனைவிக்கு நீரிழிவோ, ரத்த அழுத்தமோ இருந்தால், இன்னும் அதிக அக்கறையுடன் பார்த்துக் கொள்ள வேண்டும். மசக்கையைக் காரணம் காட்டி, அதிக இனிப்போ, உப்போ உள்ள பொருள்களைக் கேட்டாலும், கொடுக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். 4 முதல் 7வது மாதங்களில் மனைவியின் உணவில் மிகுந்த அக்கறை காட்ட வேண்டும்.
இரும்புச் சத்தும் கால்சியமும் அந்த நாள்களில் கர்ப்பிணிப் பெண்ணுக்கு அதிகம் தேவை என்பதைத் தெரிந்து கொண்டு, அவை அதிகமுள்ள உணவுகளை வாங்கிக் கொடுக்க வேண்டும். முதல் 3 மாதங்களில் தாம்பத்ய உறவைத் தவிர்க்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்துவார்கள். 4 முதல் 7ம் மாதம் வரை, கர்ப்பிணிக்கு எந்தச் சிக்கலும் இல்லாத பட்சத்தில், மிதமான உறவு வைத்துக் கொள்ளலாம்.
பிரச்னை இருந்தால், கட்டாயம் தவிர்க்க வேண்டும். கர்ப்ப காலத்தில் சிறுநீரகத் தொற்று ஏற்படும் வாய்ப்புகள் மிக அதிகம். அது கர்ப்பத்தைப் பாதிக்கும் என்பதால், இது போன்ற விஷயங்களில் மனைவிக்கு கணவன் ஒத்துழைக்க வேண்டும். கடைசி மூன்று மாதங்களில் கணவனின் பொறுப்பு இன்னும் அதிகம். பிரசவம் குறித்த பயத்தைப் போக்க தைரியம் சொல்வதோடு, தரமான மருத்துவமனையில் பிரசவம் நிகழ முன்னேற்பாடுகளை செய்து வைக்க வேண்டும்.
அவசர காலத் தேவையைக் கருத்தில் கொண்டு, பிரசவத்துக்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் முன்கூட்டியே தயாராகச் செய்து வைக்க வேண்டியதும் கணவனின் பொறுப்பே. இப்படியெல்லாம் செய்தால், பிரசவத்துக்குப் பிறகு பெரும்பாலான பெண்களுக்கு உண்டாகிற ‘போஸ்ட் பார்ட்டம் ப்ளூஸ்’ எனப்படுகிற மன அழுத்தப் பிரச்னை வராது. தவிர தம்பதிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். பிறக்கும் குழந்தையின் மனநலமும் ஆரோக்கியமாக இருக்கும்!’’
எக்ஸ்பைரி....
மற்றதைப் பற்றித் தெரியுமோ, இல்லையோ, மருந்துகளுக்கு ‘காலாவதி’ உண்டு என்பது பலரும் அறிந்ததே! மருந்து வாங்கும் போதும், ஒவ்வொரு முறை அதை உபயோகிக்கிற போதும், அதில் குறிப்பிடப்பட்டுள்ள காலாவதி தேதியைக் கவனிக்க வேண்டியது மிக மிகமுக்கியம்.
காலாவதி தேதி முடிந்த பிறகும் 3 மாதங்களுக்கு அந்த மருந்தை உபயோகிக்கலாம் என்கிற பரவலான மூட நம்பிக்கை மக்களிடம் இருக்கிறது!
காலாவதி தேதி என்றால் என்ன? அது எப்படிக் கணக்கிடப்படுகிறது? காலாவதியான மருந்துகளை எடுத்துக்கொள்வதால் என்னாகும்? இப்படி சகல கேள்விகளுக்குமான விளக்கங்கள் இங்கே உங்களுக்காக...
‘‘மருந்துகளோட காலாவதி தேதி என்பது மருந்தியல் விஞ்ஞான முறைப்படி நிர்ணயிக்கப்படுது. அதாவது ஒரு மருந்தோட வீரியத் தன்மையைப் பாதுகாக்க, அந்த மருந்துக்கு ஸ்திரத் தன்மையைக் கொடுக்கக் கூடிய, கிரியை உண்டாக்காத சில பொருள்களை அதில்
சேர்த்துத் தயாரிப்பாங்க. வெப்பத்தன்மையால பாதிக்கப்படற மருந்துகளை ‘தெர்மோலயபிள்’ (Thermolabile) னும், வெப்பத்தைத் தாங்கக் கூடிய மருந்துகளை ‘தெர்மோஸ்டேபிள்’ (Thermostable) னும் சொல்றோம். முதல் வகை மருந்துகளை வெளிச்சம் இல்லாத இருட்டான இடங்கள்லதான் வைக்கணும். அடுத்ததை வெளிச்சத்துலயும் வைக்கலாம். இதை அளவுகோல்களா வச்சுதான், ஒவ்வொரு மருந்தும் எத்தனை காலம் பாதுகாப்பாக இருக்கும்னு கணக்கிட்டு, அதுக்கான காலாவதி தேதியும் நிர்ணயிக்கப்படுது’’ என்கிறார் வேல்ஸ் பல்கலைக் கழகத்தின் மருந்தியல் பள்ளியின் இயக்குனரும், தலைவருமான பேராசிரியர் ரவிச்சந்திரன்.
‘‘காலாவதி தேதி முடிஞ்ச பிறகு, மருந்துகள், தன்னோட வீரியத்தன்மையைக் கொஞ்சம் கொஞ்சமா இழக்க ஆரம்பிக்கும். அதுக்குக் காரணம், அந்த மருந்துகள்ல உள்ள மூலக் கூறுகள்ல ஏற்படற மாற்றம்! அதுக்குப் பிறகு, அந்த மருந்துகள், நாம எதிர்பார்க்கிற பலன்களைக் கொடுக்கறதில்லை. உதாரணத்துக்கு காலாவதி ஆகாத ஒரு மாத்திரை, நூறு சதவிகிதம் பலன் தரும்னா, காலாவதியான மாத்திரை, முழுப்பலனைத் தராது. காலாவதியான மருந்துகளை எடுத்துக்கிறதால, நாம எதிர்பார்க்காத பக்க விளைவுகளும் வரலாம். இதுக்காகத்தான் ‘மருந்துகள் மற்றும் அழகு சாதனங்கள் சட்டம் - 1940/1945’ காலாவதியான மருந்துகளைப் பத்தின விதிகளை வரையறுத்துச் சொல்லியிருக்கு. காலாவதியான மருந்துகளை, காலாவதி தேதிக்குப் பிறகு எக்காரணம் கொண்டும் உபயோகிக்க வேண்டாம். காலாவதியான மருந்துகளை, விற்பனைக்காக வச்சிருக்கிற மற்ற மருந்துகளிடமிருந்து பிரிச்சு, ஒரு அட்டைப்பெட்டிக்குள்ள போட்டு, ‘காலாவதியானவை - விற்பனைக்கல்ல’ என்ற குறிப்போட வைக்கணும்னு அந்தச் சட்டம் சொல்லுது.
காலாவதியான மருந்துகளை உபயோகிக்கக்கூடாதுன்னு சொல்ற சட்டம், இதுவரை அந்த மருந்துகளை எப்படி அப்புறப்படுத்தறதுங்கிறதுக்கான எந்த வழிமுறைகளையும் வரையறுக்காததுதான் வருத்தமான விஷயம்...’’ என்கிறார் ரவிச்சந்திரன்.‘‘காலாவதியான மருந்து, மாத்திரைகளை சாப்பிடறது எவ்வளவு தவறான விஷயமோ, அதைவிட மோசமானது, அந்த மருந்துகளை வீட்ல வச்சிருக்கிறது. தேவையில்லாத மருந்துகளை உடனுக்குடன் அப்புறப்படுத்தறதுதான் பாதுகாப்பானது’’ என்கிற எச்சரிக்கையுடன் ஆரம்பிக்கிறார் மார்பு நோய் நிபுணர் வி.எஸ்.அனந்தன்.
‘‘மாத்திரை, பவுடர் வகைகள், திரவம் மற்றும் இன்ஜெக்ஷன் வகையறாக்கள்னு ஒவ்வொண்ணையும் ஒவ்வொரு விதமா அப்புறப்படுத்த வேண்டியது அவசியம். மாத்திரைகளை, வாங்கின கடைக்காரங்கக் கிட்டயே திருப்பிக் கொடுத்துடலாம். அப்படிக் கொடுக்கிறதுல சிக்கல் இருக்கிறதா நினைக்கிறவங்க, அதையெல்லாம் ஒரு பாலிதீன் கவருக்குள்ள போட்டுக் கட்டி, குப்பைத்தொட்டியில போட்டுடலாம். சிரப் மற்றும் திரவ வடிவ மருந்துகளை கழிவறையில கொட்டிடலாம். இன்ஜெக்ஷனா இருந்தா, அதை உடைச்சு, அப்புறப்படுத்தணும்’’ என்கிற டாக்டர், காலாவதி தேதி குறிப்பிடப்பட்ட மருந்துகளை உபயோகிப்பதிலும் அக்கறைஅவசியம் என்கிறார்.
‘‘உங்க குழந்தைக்கு இருமல்னு டாக்டரை பார்க்கறீங்க. சிரப் எழுதிக் கொடுக்கறார். ரெண்டு நாளோ, மூணு நாளோ கொடுத்ததுமே, குழந்தைக்கு நல்லாயிடுது. சிரப்பை எடுத்து அலமாரியில வச்சிடறீங்க. அந்த மருந்து எக்ஸ்பைரி ஆக இன்னும் ஒரு வருஷம் இருக்குன்னு வச்சுப்போம். மறுபடி 6 மாசம் கழிச்சு, உங்க குழந்தைக்கு இருமல் வரும்போது, அதான் எக்ஸ்பைரி ஆகலையேன்னு அதே மருந்தை எடுத்துக் கொடுப்பீங்க. அது ரொம்பத் தப்பு. சில மருந்துகளை திறந்துட்டா, அதோட எக்ஸ்பைரி தேதி மாறிடும். அதுலயும் சில பவுடர் வகை மருந்துகள், குறிப்பா குழந்தைகளுக்கான ஆன்டிபயாடிக் பவுடர்களை தண்ணீர்ல கலந்து கொடுக்கச் சொல்வாங்க. அப்படி தண்ணீர் கலந்துட்டாலே, அதை 1 வாரத்துக்குள்ள உபயோகிச்சிடணும். திரவ வடிவ மருந்துகள் வாங்கும்போது ஒரு கலர்ல இருந்து, பிறகு நிறம் மாறினா, எக்ஸ்பைரி ஆக நிறைய காலம் இருந்தாலுமே அதை உபயோகிக்கக் கூடாது. சில மாத்திரைகள் ஃபாயில் பேப்பர்ல சுத்தி வரும். ஒரு சில மாத்திரையை திறக்கும்போதே உடைஞ்சு, பவுடர் மாதிரி கொட்டும். அப்படி இருந்தா, அதை உபயோகிக்கக் கூடாது.
எந்த மருந்தா இருந்தாலும், அதை சூரியவெளிச்சம் படற மாதிரியான இடத்துல வைக்கவே கூடாது. ஏசி ரூம் சிறந்தது. அந்த வசதியில்லாதவங்க, நிழலான இடத்துல வைக்கலாம். ஃப்ரிட்ஜ்ல (ஃப்ரீசர்ல வைக்கக் கூடாது) 4 டிகிரியில வைக்கலாம். வெயில் படற இடத்துல வைக்கிற போது, மருந்துகள் இன்னும் சீக்கிரமே காலாவதியாகும்...’’ - மருந்துகளை அலட்சியமாகக் கையாள்பவர்களை ‘அலர்ட்’ செய்கிறது டாக்டரின்
அட்வைஸ். கைவசம் இருக்கட்டுமே என்கிற நினைப்பில், தலைவலி, காய்ச்சல், உடம்பு வலிகளுக்கான மாத்திரைகளை டஜன் கணக்கில் வாங்கி ஸ்டாக் வைப்பது பலரது வழக்கம். மாத்திரைப் பட்டியின் ஒரு ஓரத்தில் அது காலாவதியாகும் தேதி அச்சிடப் பட்டிருக்கும். அதைக் கவனிக்காமல், அந்த இடத்தைக் கிழித்து, மாத்திரையை எடுத்திருப்பார்கள். அடுத்த முறை உபயோகிக்கும் போது, காலாவதி தேதி கண்ணில் தெரியாது. ‘இப்பதானே வாங்கினோம்... அதுக்குள்ளயா எக்ஸ்பையரி ஆகியிருக்கும்’ என்கிற நினைப்பில் அதைத் தீரும் வரை உபயோகிப்பார்கள், பல நேரங்களில் அது காலாவதியானதே தெரியாமல்!