எளிய இயற்கை மருத்துவ குறிப்புகள்

எளிய இயற்கை மருத்துவ குறிப்புகள்:-

 

 
 
பித்தவெடிப்பு மறைய

காலில் பித்தவெடிப்பா? கவலையை விடுங்கள். தேனையும், சுண்ணாம்பையும் ஒன்றாய்க் குழைத்து பித்தவெடிப்பில் தடவி வந்தால் பித்தவெடிப்பு இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிடும்.

தொண்டை வலிக்கு

பால் இல்லாத டீயுடன் கொஞ்சம் எலுமிச்சை சாறு விட்டு குடித்து பாருங்கள் தொண்டை வலி நீங்கும்.

இருமல் தொல்லைக்கு.

தூங்க போகும் முன் 1 கப் சூடான தண்ணீ­ரில் 1 ஸ்பூன் உப்பு போட்டு வாய் கொப்பளிக்கவும். இது இருமல் தொல்லையையும் நீக்கும்.

கண்ணாடி துண்டினால் காயம் ஏற்பட்டால்

கண்ணாடி துண்டினால் காயம் ஏற்பட்டால் வாழைபழத்தோலை அந்த காயத்தின் மீது வைத்து காட்டுங்கள். ரத்த போக்கு நின்று காயம் விரைவில் ஆறும். அதற்கு முன் காயத்தை நன்றாக வெதுவெதுப்பான நீரால் கழுவவேண்டும்.

இருமல் சளிக்கு

தூதுவளை இலை 15 கிராம் அளவில் சேகரித்து 500 மில்லி தண்­ணீரில் போட்டு 200 மில்லியாக சுண்டக் காய்ச்சி வடிகட்டி 30 முதல் 40 மில்லி வரை ஒரு நாளைக்கு மூன்று வேளை இந்த கஷாயத்தைச் சாப்பிட்டு வந்தால், இருமல், இரைப்பு, சளியுடன் கூடிய காய்ச்சல், சயரோகக் காய்ச்சல் குணமாகும்.

கட்டிகள் உடைய

மஞ்சள், சுண்ணாம்பு, விளக்கெண்ணெய் மூன்றையும் நன்றாக குலைத்து கட்டிகள் உள்ள இடத்தில் பற்று போட்டால் கட்டிகள் சீக்கிரம் பழுத்து உடைந்து விடும்.

பேன் தொல்லை நீங்க

வசம்பு, வேப்பிலை இரண்டையும் அரைத்து தலையில் தேய்த்து 30 நிமிடங்கள் கழித்து குளித்து வந்தால் தலையில் உள்ள பேன் நீங்கும்.

மேனி பளபளப்பு பெற.

ஆரஞ்சுப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மேனி பளபளப்பு பெறும்.

தும்மல் வராமல் இருக்க.

தூதுவளை பொடியில் மிளகு பொடி கலந்து தேனில் (அ) பாலில் சாப்பிட்டால் தும்மல் வராது.

கரும்புள்ளி மறைய.

எலுமிச்சை சாறு மற்றும் கிளிசரின் கலந்து கரும்புள்ளிகள் மீது தடவிவர, அவை நாளடைவில் மறைந்து விடும்.

தொண்டை கரகரப்பு நீங்க.

அதிமதுரத் துண்டு ஒன்றை வாயில் அடக்கிக் கொண்டிருந்தால் வாயில் உமிழ் நீர் சுரக்கும். இந்த உமிழ்நீரை உள்ளுக்கு விழுங்கிக் கொண்டிருந்தால் தொண்டைக் கரகரப்பு நீங்கும். குரல் கம்மல் நீங்கி விடும். தொண்டையில் உள்ள சளிக்கட்டு கரைந்து விடும்.

கருத்தரிக்க உதவும்.

அதிமதுரம், திராட்சை இவை இரண்டையும் சமமாகப் பொடி செய்து 50 – 100 கிராம் எடுத்து தண்ணீ­ரில் அரைத்து பாலில் கலக்கி பெண்களின் மாதவிடாய் தொடங்கிய நாள் முதல் ஐந்து தினங்கள் சாப்பிட்டு வந்தால், ஆரோக்கியமான பெண்களுக்குக் கருத்தரிக்கும். கருத்தரிக்கும் வரை 2-3 மாதங்கள் சாப்பிட்டால் நல்ல பலனை எதிர்பார்க்கலாம்.

இருமல் சளி குணமாக.

சித்தரைத்தையும் பனங்கற்கண்டு இரண்டையும் சம அளவு எடுது கஷாயம் வைத்து மூன்று வேளைக்கு தொடர்ந்து மூன்று நாட்கள் சாப்பிட்டு வந்தால் வரட்டு இருமல் சளி குணமாகும்.

இதயத்தை காக்கும் சீத்தா பழம்


இதயத்தை காக்கும் சீத்தா பழம்

சீத்தாபழம் நோய் எதிர்ப்பு சக்தியான வைட்டமின்சி யை கொண்டிருக்கிறது. இது உடலில் ஏற்படும் நோய்களை அழித்து உடலை ஆரோக்கியத்துடன் பாதுகாத்துக்கொள்ளும் ஆற்றலை கொண்டது. இதில் பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் கொண்டுள்ளதால் நமது இதயத்தை இதய நோயிலிருந்து பாதுகாக்கிறது. அதுமட்டுமல்லாமல் நமது உடலில் உள்ள இரத்த அழுத்தத்தை கட்டுபடுத்துகிறது. 

முடியை ஆரோக்கியமாக வைத்திருக்க நினைப்பவர்கள் சீத்தாபழம் சாப்பிட்டு வந்தால் முடியை பாதுகாக்கலாம் ஏனெனில் முடியை பாதுகாக்கும் வைட்டமின் ஏ வை கொண்டிருக்கிறது. இந்தியாவில் பல இடங்களில் இதை தலைமுடிக்கான எண்ணெய்யாக உபயோகிக்கின்றனர். சீத்தாபழம் கண் பார்வைக்கும் செரிமாண பிரச்சனைக்கும் சிறந்தது. சீத்தாபழ மரத்தின் பட்டை குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு ஏற்படும் வயிற்றுபோக்கை நிறுத்துவதற்கும் மரத்தின் இலைகள் நீரிழிவுக்கு சிகிச்சை அளிப்பதற்கும் பயன்படுகின்றது..

சீத்தாபழம் எவற்றையெல்லாம் குணப்படுத்தும் ஆற்றல் கொண்டுள்ளது என பார்க்கலாம். கர்ப்பகாலத்தில் உள்ளவர்கள் சீத்தாபழம் சாப்பிடலாம். மேலும் கண்பார்வைக்கு, செரிமான பிரச்சனைக்கு, ஆரோக்கியமான இதயத்திற்கு, கீல்வாதம், ரெய்மடிஸ்ம் சிகிச்சைக்கு, சோர்வுடன் போராடும், இரத்தசோகைக்கு, புற்றுநோய் மற்றும் கட்டிகளுக்கு உதவிபுரிகிறது.

பல வைட்டமின்கள் மற்றும் ஊட்டச்சத்துகளை கொண்டுள்ள சீத்தாபழம் பக்கவாதம், மாரடைப்பு, புற்றுநோய்க்கு மருத்துவத்தில் உதவுகிறது. உங்களுக்கு மாறிகொண்டே இருக்கும் இரத்தஅழுத்தம் இருந்தால் தினமும் இப்பழத்தை சாப்பிடுவதன் மூலம் இரத்தஅழுத்தத்தை கட்டுபாட்டில் வைத்துக்கொள்ளலாம். நோய்க்கு மருந்தாவதோடு மட்டுமல்லாமல் அழகுக்கும் உதவுகிறது. இதை தொடர்ந்து சாப்பிட்டால் முகம் மற்றம் தோல் பளபளப்பாக மாறும்.

இதில் மெக்னீசியத்தின் அளவை அதிகம் கொண்டிருப்பதால் உடலில் நீர் இருப்பு நிலையை பராமரிக்கிறது. இது மூட்டுகளில் இருந்து பல்வேறு அமிலங்களை அகற்றி மூட்டுகளில் ஏற்படும் வாதநோய், கீழ்வாதநோய், மூட்டுவலி, ஆகியவற்றை குறைக்கிறது. இரத்தசோகை உள்ளவர்கள் சீத்தாபழத்தை சாப்பிட்டால் விரைவான தீர்வு பெறலாம். எடைகுறைவாக உள்ளவர்கள் எடையை அதிகப்படுத்த இப்பழத்தை தினமும் சாப்பிடலாம். சீத்தாபழத்தின் தோல் பற்சிதைவு, ஈறுகளில் ஏற்படும் வலிகளுக்கு உதவியாக உள்ளது.

குளிர்ந்த தண்ணீர் குடிக்க வேண்டாமே


குளிர்ந்த தண்ணீர் குடிக்க வேண்டாமே!

இன்றைக்கு பெரும்பாலும் பிரிட்ஜில் வைத்த ஜில் தண்ணீரை அருந்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர். கிராமமோ, நகரமோ இன்றைக்கு குளிர்ந்த நீரை தான் பயன்படுத்துகின்றனர். கோடை காலம் தொடங்கிவிட்டது இனி காலை உணவில் தொடங்கி இரவு உணவு வரைக்கும் உபயோகிப்பது குளிர்ந்த நீரை தான். இவ்வாறு குளிர்ந்த நீர் அருந்துவது ஆபத்தானது என்கின்றனர் மருத்துவர்கள். இது இதயத்தை பாதிக்கிறது. புற்றுநோய்க்கும் வழி வகுக்கிறது என்கின்றனர் மருத்துவர்கள்.

உணவு உண்டவுடன் குளிர்ச்சியான தண்ணீரை குடித்தால், அது நாம் சாப்பிட்ட உணவில் உள்ள எண்ணெய்த் துகள்களை கெட்டியாக்கி விடுகிறது. இதனால், சாப்பிட்ட உணவு ஜீரணம் ஆவதில் சிக்கல் ஏற்படுகிறது. அதுமட்டுமின்றி, உடலில் இருக்கும் கொழுப்பின் அளவு அதிகரிக்கவும் அது காரணமாகி விடுகிறது. இந்த நிலை தொடர்ந்து நீடித்தால் இதயம், சிறுநீரகம் சம்பந்தப்பட்ட பல பிரச்சினைகள் வரலாம்’ என்றும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

மாரடைப்பு நோய் உள்ளிட்ட இதயநோய்க்கு ஆளானவர்கள் சாப்பிடும்போது குளிர்ந்த நீரை தொடவேக் கூடாது என்றும் அவர்கள் அறிவுறுத்துகிறார்கள். குளிர்ந்த தண்ணீர் குடிப்பதனால் வேறு பல தீமைகளும் ஏற்படுத் என்றும் அவர்கள் பட்டியலிட்டுள்ளனர். நெஞ்செரிச்சல், உயர் ரத்த அழுத்தம், சரும பாதிப்பு, பக்கவாதம், வயிற்றுவலி, மைக்ரேன் தலைவலி, மூளை உறைவு நோய், பற்கள் பாதிப்பு போன்றவையும் ஏற்படுகின்றன. எனவே குளிர்ந்த தண்ணீர் அருந்துவதை தவிர்த்துவிடுங்கள் அதற்கு பதிலாக வெதுவெதுப்பான நீர் அருந்துங்கள் என்று அறிவுறுத்தியுள்ளனர் மருத்துவர்கள்

இதயத்தை காக்கும் உணவு பட்டியல்


இதயத்தை காக்கும் உணவு பட்டியல் ..

கருப்பு பீன்ஸ்: போலேட், ஆண்டியாக்ஸிடண்ட்கள், மெக்னீசியம் நிரம்பிய பிளாக் பீன்ஸ், இரத்த அழுத்தம், இரத்தத்தில் கலந்துள்ள சர்க்கரை ,மற்றும் கொழுப்பை குறைக்கின்றது. பிளாக் பீன்ஸ் சாப்பிடுவதால் இதயம் பாதுகாக்கப்பட்டு பாதுகாப்பான ஒரு மண்டலத்தில் இதயத்தை வைத்திருக்கிறது. நீங்கள் தகர டப்பாக்களில் அடைத்து தயார் நிலையில் வைக்கப்பட்ட பீன்ஸை உபயோகபடுத்தும் முன் அதனில் அடங்கியுள்ள நீர்ம திரவத்தை அகற்றி சோடியத்தின் அளவை குறைவாக பயன்படுத்தலாம்.

சல்மான் மீன் மற்றும் சூரை: இவ்விரு மீன்களும் இதயத்தின் முக்கிய வேட்பாளராக பணிபுரியும் ஆக்ஸிஜனேற்ற எதிர்ப்பொருள்கள் மற்றும் ஒமேகா 3யை வளமான அளவில் கொண்டுள்ளது. அதனால் சல்மான் மற்றும் சூரை மீன்கள் உணவில் எடுத்துக்கொண்டால் இதயத்தை பாதுகாக்கலாம்.

அக்ரூட் பருப்புகள்: இதயத்தை பாதுகக்க விரும்புபவர்கள் சாப்பிட வேண்டியவற்றில் இதுவும் ஒன்று. தினமும் சிறிதளவு அக்ரூட் பருப்புகளை சாப்பிடுவதன் மூலம் உடலில் உள்ள கொழுப்பை குறைந்து தமனிகளில் ஏற்பட்டிருக்கும் வீக்கத்தையும் சரிசெய்ய உதவுகிறது. மதிய உணவுக்கு பின் சிப்ஸ் போன்றவற்றை சாப்பிடுவதற்கு பதிலாக அக்ரூட் பருப்புகளை சாப்பிடலாம்.

ஆரஞ்சு: இது கொழுப்புக்கு எதிராக போராடக்கூடிய பெக்டின் கொண்டுள்ளது. ஆரஞ்சு பழத்தில் பொட்டாசியம் நிறைந்து காணப்படுவதால் இரத்த அழுத்தத்தை கட்டுபடுத்துகிறது. இதில் உள்ள ஆக்ஸிஜனேற்ற ஹெஸ்பெரிடின் குறைந்த இரத்த அழுத்தம் உதவுகின்றது.

கேரட்: இனிப்பு கேரட் நீரிழிவை கட்டுபடுத்தும் ஆற்றல் கொண்டது என்றாலும் கேரட்டில் உள்ள இனிப்பு மாரடைப்பு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் இருக்கின்றது. இவை கெட்ட கொழுப்புக்களை அளிப்பதற்கும் உதவிபுரிகிறது.

சர்க்கரை வள்ளி கிழங்கு: சர்க்கரை வள்ளி கிழங்கில் வைட்டமின் கி நிறைந்து காணப்படுகிறது. வெள்ளை நிறமான ஃபைபர் மற்றும் லைகோபீன் ஆரோக்கியமான மாற்றங்களை உருவாக்குகிறது.

ஓட்ஸ்: ஓட்ஸ் அனைத்து வடிவத்திலும் காணப்படும் கொழுப்புகளை குறைத்து உங்கள் இதயத்தை பாதுகாக்கும்.

ஆளி விதை: நார், பைத்தோகெமிக்கல்ஸ் கிலிகி ஆகியவற்றின் கலவையே ஆளி விதை. இந்த மூன்று பொருட்களும் உடல்நலத்திற்கு தேவையான ஆற்றலை தருகிறது. இதை தினமும் தானிய வகைகளுடன் கலந்தோ அல்லது பச்சைகாய்கறி கலவைகளுடன் கலந்தோ ஒரு ஸ்பூன் சாப்பிட்டால் இதயம் பலப்படும்.

மிளகாய் தூள்: இது நம்புவதற்கு கடினமானது என்றாலும் இந்தியாவில் உள்ள சுவைமிக்க மசாலா இதயத்தை பாதுகாப்பதோடு உடலில் உள்ள இன்சூலின் மற்றும் நீரிழிவையும் கட்டுபடுத்துகிறது.

காபி: இதை நீரிழிவு2 வகை நோயாளிகள் தவிர்க்க வேண்டியது. உயர் இரத்த அழுத்தம் கொண்டவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

சிகரெட் பிடிப்பவர்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை-


சிகரெட் பிடிப்பவர்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை-

1. சிகரெட் பிடிக்கையில் கிட்டத்தட்ட முடியும் தருவாயில் உள்ள வெப்ப நிலை சுமார் 800 டிகிரி செல்சியஸ் அதாவது இந்த வெப்பத்தில் பித்தளையும் துத்தநாகமும் உருகும். இந்த வெப்பம் உங்களின் உதடுகளை எரித்து கருப்பாக்குகிறது.

2. இதே அளவுள்ள சூடு உங்கள் நாவின் மேல் பட்டு ருசி அறியும் நாளங்களை சுட்டுப் பொசுக்கி நீங்கள் உட்கொள்ளும் உணவின் ருசி அறியாமல் செய்கிறது. நீங்கள் உண்பது முட்டையா இல்லை தயிரா என்பது உங்களுக்குத் தெரியாமல் போகிறது.

இதென்ன? தின்பவனுக்கு கண் இல்லையா?

எனக்கு தெரியாதா? முட்டையா அல்லது தயிரா என கேள்வி கேட்கும் பிரகஸ்பதிகளுக்கு பரிட்சை வைக்கிறேன். உங்களால் கண்ணை மூடிக்கொண்டு நான் தரும் உணவில் உள்ள பொருள்களை மூக்கையும் பொத்திக் கொண்டு உங்களால் சொல்ல முடியும் என்றால் உங்களுடன் சேர்ந்து நானும் புகைபிடிக்க தயார்!

அவ்வாறு இல்லையென்றால் என்னுடன் சமாதான உடன்படிக்கை செய்து கொண்டு நீங்கள் உங்கள் புகை பிடிக்கும் பழக்கத்தை விட தயாரா?

சவால்!!!!!!!!!!!!

3. நீங்கள் ஒவ்வொரு முறையும் உள்ளே இழுக்கும் புகையில் சுமார். 2 மில்லியன் எரிந்த நிலையில் கரித்துகள்கள் நுரையீரலை கடுமையாக தாக்குகிறது.?

எப்படி?

புகை என்பது கரியின் மைக்ரான் அளவுள்ள மாவுபொடி ஒரு கப் கோதுமைமாவை உங்களால் சுவாசிக்க முடியாது! ஆனால் பத்து சிகரெட் குடித்து முடிக்கையில் ஒரு கப் கோதுமை மாவு அளவுள்ள கரித்துகள்கள் உங்கள் நுரையீரலின் உளளே சென்று குதியாட்டம் போடுகிறது!.

அதனால் என்ன போடட்டுமே? நமக்கென்ன கவலை என்பவர்களே?

ஆடிக்களைத்தபின் அது ஓய்வெடுக்க அமரும் இடுக்கு நான் முன் சொன்ன சிறிய துவாரம் கடவுளின் கருணைக் கொடையான காற்று ஆக்ஸிஜன். திரவ ஆக்ஸிஜனாக மாற்றும் அந்த துவாரம். !!!!!!!!!!!!!!

உங்களின் பிராணவாயு துவாரங்களை நீங்கள் உங்கள் உதவி கொண்டே அடைத்து முதல் கட்ட வியாதியை வரவழைத்துக் கொள்கிறீர்கள்…..

கரித்துகள்கள் மைக்ரான் அளவு! அந்த துளையும் மைக்ரான் அளவு ஆப்பு அடித்தது போல மேலே உட்கார்ந்து மேற்கொண்டு காற்றை உள்ளே விடாமல் அடைக்கிறது.

பல லட்சக்கணக்கான கோடிக்கணக்கான துவராங்களை வெறும் இருபது சிகரெட்டுகள் பிடிப்பதன் மூலம் அடைத்து விட முடியும் இங்கே தான் தொடங்குகிறது உங்கள் ஆரம்ப கட்ட நோய்!.

திடீரென்று உங்களுக்கு சுவாசத்தில் மாறுதல் என்னவோ அதிகமாக காற்று தேவை போல மாடியேறினால் மூச்சிரைக்கிறது. ஓடிச்சென்று பஸ் ஏற முடியவில்லை !

ஆக்ஸிஜன் குறைவினால் உங்கள் தாம்பத்திய உறவு சரியில்லை சட்டென்று உங்களுக்கு மார்பு சளி வந்து எளிதில் குணமாக முடிவதில்லை.

என்னது? தாம்பத்திய உறவில் பிரச்சனையா? பொய் சொல்கிறீர்கள் சார்….. எனக்கு காது குத்தியாகி விட்டது என்று சொல்லும் காம ராஜர்களே…. கேளுங்கள் …..

ஆம்! நண்பர்களே தாம்பத்திய உறவின் போது மிக அதிகமான ஆக்ஸிஜன் இரத்தத்தில் இருந்தால் மட்டுமே உங்களின் உயிர் உறுப்பு தன் பணியை செய்யும் இல்லையேல் போர்வையை இழுத்து போர்த்திக் கொண்டு உறங்கும். குட் நைட் சொல்ல வேண்டும் பரவாயில்லையா? நீங்கள் இழப்பது இருக்கட்டும்…. உங்களின் பார்ட்னரை பசியோடு விடுவதில் என்ன நியாயம்?