Sholavandan Primary School

Primary School:

*C.S.I. PRIMARY SCHOOL
           
--------------------------------------------------------------------------------------------------------------------------  
*Panchayat Union Primary School,Solaikuruchi
           
--------------------------------------------------------------------------------------------------------------------------  
*Panchayat Union Primary School Pettai


           
--------------------------------------------------------------------------------------------------------------------------  
*GOVT. KALLAR PRY SCHOOL,
 SHOLAVANDAN ALANKOTTARAM

Sholavandan Nursery schools

Nursery schools:

  *ITC Nursery School

--------------------------------------------------------------------------------------------------------------------------  
    *Manimalar Nursery School
         
--------------------------------------------------------------------------------------------------------------------------  
  
  *Power Nursery School-Mullippallam



-----------------------------------------------------------------------------------------------



Sholavandan Train Time (ரயில் வரும்நேரம் )







Sholavandan Train Time (ரயில் வரும்நேரம் )
Add caption







                               



Sholavandan Train Time (ரயில் வரும்நேரம் ) 






                                                                                   Sholavandan( சோழவந்தான்)

 மதுரை  To திண்டுக்கல்======>08:10 ,      09:50    12:40,   06:45

திண்டுக்கல் To மதுரை ======>08:20 , 12:50    ,05:00






Sholavandan Bus Timings & Bus Time Tables







                              


29A-பெரியார் நிலையம் :

வழி:       தே   ,  சமயநல்லூர்  ,  பறவை

























29B-பெரியார் நிலையம் :
வழி: நகரி, சமயநல்லூர் , பறவை
08:55,
09:55,
11:55






வாடிப்பட்டி:





28  அண்ணா நிலையம் :AnnaNilaiyam









கருப்பட்டி:
இரும்பாடி

நாச்சிக்குளம்:








(4) திருமங்கலம் (Thirumangalam Bus Time)












09:25-












>>பஸ் வரும் நேரம் மாறுதலுக்கு உட்பட்டது<<

குக்கர் சாதம் சாப்பிட்டால் சர்க்கரை நோய் வரும்

குக்கர் சாதம் சாப்பிட்டால் சர்க்கரை நோய் வரும்.....

நவீன சமையல் உபகரணங்கள் வேலைப்பளுவை குறைக்க உதவினாலும், அவற்றால் ஏற்படும் உடல்நலக் கேடுகள் பற்றி அவ்வப்போது சர்ச்சைகள் எழுவதுண்டு. வாழ்க்கை முறை சார்ந்த பிரச்னைகளை அவை தரும் என புகழ்பெற்ற மருத்துவர்களே சொல்லியிருக்கிறார்கள். குறிப்பாக, ‘குக்கரில் சமைக்கப்படும் சாதத்தை சாப்பிட்டால் நீரிழிவு நோய் வரும்’ என்கிற தகவல் வயிற்றில் புளியைக் கரைக்கிறது.

‘‘லைஃப்ஸ்டைல் காரணமாக சமையலிலும் பெரும் மாற்றங்கள். ஆபீசுக்குப் போகிற அவசரத்தில் சீக்கிரம் எப்படி சமையலை முடிப்பது என கவலைப்படும் பெண்களுக்கு நவீன சமையல் உபகரணங்கள் பெரும் வரம் என்பதை மறுக்கமுடியாது. சமையலை எளிதாகவும் விரைவாகவும் செய்ய ஏராளமான பொருட்கள் வந்துவிட்டன. அதன் மூலம் செய்யப்படும் உணவுப்பொருட்களே பல நோய்களுக்குக் காரணமாகிறது’’ என்கிறார் லைஃப் ஸ்டைல் மேனேஜ்மென்ட்டைச் சேர்ந்த வயது நிர்வாக நிபுணர் டாக்டர் கௌசல்யா.

‘‘குக்கரில் சாப்பாடு செய்வது எளிதானதுதான். ஆனால், அதனால் உடல் பருமன், சர்க்கரை நோய் வரும் அபாயம் அதிகம் இருக்கிறது. வடித்து சமைக்கும் சாதத்தில் 30 முதல் 40 சதவிகிதம் மாவுச் சத்து (கார்போஹைட்ரேட்) குறைந்து விடும். ரத்த சர்க்கரை அளவை உடனடியாகவும் அது கூட்டாது. ஆனால், குக்கரில் சமைக்கும்போது அந்தச் சத்துகள் அப்படியே சாப்பாட்டில் முழுமையாக இருக்கும்.

குக்கரில் வேக வைக்கப்படுகிற அரிசியில் கஞ்சி (மாவுச்சத்து) நீக்கப்படுவதில்லை. அதனால் கலோரி, குளுக்கோஸ் அளவு அதிகம். திடீரென ரத்த சர்க்கரை அளவு கூடுவதற்கும் வாய்ப்பு உண்டு. சிலருக்கு புதிதாக சர்க்கரை நோயை உண்டு பண்ணும் அபாயமும் இருக்கிறது. நார்ச்சத்து நிறைந்த, கஞ்சி நீக்கப்பட்ட சாதமே சர்க்கரை நோயாளிகளின் ரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டுக்குள் வைக்கும்.

அரிசி வேக எவ்வளவு அதிக நேரம் எடுத்துக் கொள்கிறதோ, அந்த அளவுக்கு அது சாப்பிட நல்லது. குறைந்த நேரத்தில் வேகும் சாப்பாட்டால் பிரச்னைதான். அதிக நேரம் வெந்த சாப்பாட்டை ஒரு கப் சாப்பிட்டாலே வயிறு நிரம்பி விடும். வேகமாக தயாரான சாப்பாட்டை 2 மடங்கு எடுத்துக்கொண்டால்தான் வயிறு நிரம்பும். இப்படி வயிற்றுக்குள் உணவைத் திணிக்கத் திணிக்க பிரச்னைகளும் அதிகமாகும். எண்ணெய் வகைகளையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

அந்தக்காலத்தில் செக்கில் ஆட்டிய எண்ணெயில் வைட்டமின் மற்றும் நார்ச்சத்து நிரம்பியிருக்கும். அது ஜீரணத்துக்கும் ஆரோக்கியத்துக்கும் உகந்ததாக இருந்தது. இப்போது அல்ட்ரா ரீஃபைண்ட் ஆயில், டபுள் சூப்பர் ரீஃபைண்ட் ஆயில் என நிறைய வந்து விட்டது. அதிகமாக ரீஃபைண்ட் செய்வதால் வைட்டமின் சத்துகள் குறைந்து விடும். சூடாக்கிய எண்ணெயையும் திரும்பத் திரும்ப பயன்படுத்தக்கூடாது. அந்த எண்ணெயால் ரத்தத்தில் கொலஸ்ட்ரால் அதிகமாகும் ஆபத்து இருக்கிறது. இதனால் வயிற்றுப் புற்றுநோய் வரும் அபாயமும் உண்டு.

பருமனும் ஏற்படலாம். முடிந்தவரை இவற்றையெல்லாம் தவிர்த்தல் நல்லது’’ என்கிறார் டாக்டர் கௌசல்யா. ‘‘நாம் பயன்படுத்தும் அரிசியும் சர்க்கரை நோய்க்கு ஒரு காரணம். 30 வருடங்களுக்கு முன் இருந்த கைக்குத்தல் அரிசி இப்போது இல்லை. இப்போது பாலீஷ்ட் ரைஸ், பாஸ்மதி ரைஸ், டபுள் ரீஃபைண்ட் ரைஸ் என எத்தனையோ வகை அரிசிகள். அரிசியை அதிகம் பாலீஷ் செய்து வெண்மையாக்குவது நல்லதல்ல. அப்படிப்பட்ட அரிசியில் நார்ச்சத்து குறைந்து, கலோரி அதிகமாகி, பருமனை அதிகமாக்கி சர்க்கரை நோய்க்கு வழி வகுக்கும்.

நாம் பயன்படுத்தும் சமையல் பொருட்களில் பாதி ‘டீத் ப்ரௌன் க்ரோத்தன் ஃபுட்’. அதுல 60 சதவீதம் நியூட்ரிஷன் சத்துகள் இருக்காது. வெறும் டேஸ்ட் மட்டும்தான் இருக்கும். இந்தப் பொருட்களால் பருமன், இன்சுலின், ஹார்மோன், வயிற்றுப் பிரச்னைகள், முடி கொட்டுதல் என பல பிரச்னைகள் ஏற்படும். ஒரு நாளைக்கு 2 அல்லது 3 டேபிள்ஸ்பூன் எண்ணெய் பயன்படுத்துவதுதான் ஆரோக்கியத்துக்கு நல்லது.

இப்போது உள்ள எண்ணெய்களில் கெமிக்கல் மாற்றம் ஏற்பட்டு, அவை இதய நோய்களை ஏற்படுத்தி விடுகின்றன. முன்பெல்லாம் செக்கில் ஆட்டிய எண்ணெய் ஒரு ஸ்பூன் பயன்படுத்தினால் போதும். இப்போதுள்ள எண்ணெய் பத்து ஸ்பூன்களுக்கு மேல் பயன்படுத்த வேண்டியிருக்கிறது. இது கொலஸ்ட்ராலை அதிகப்படுத்தி தேவையில்லாத நோய்கள் வர காரணமாகி விடுகிறது. ஆக, ஈஸி என்று நினைப்பதே நமக்கு பாதகமாகி விடுகிறது. சமையலில் சில வகைகளை ஏற்றுக்கொள்ளலாம். ஆனால், அடிப்படையான சிலவற்றை அவசியம் கடைப்பிடித்தே ஆகவேண்டும்’’ என்கிறார் நாளமில்லாச் சுரப்பி நிபுணர் ஜெயஸ்ரீ கோபால்.

நீங்கள் குறட்டை விடுபவரா

நீங்கள் குறட்டை விடுபவரா?!

யாருக்குமே பிடிக்காத ஒலி என்றால் அது குறட்டை ஒலிதான்! குறட்டை விடும் நபருக்கே… அவர் தூங்காத போது, அடுத்தவர் விடும் குறட்டை ஒலியை கேட்க சகிக்காது. அந்த வகையில் அனைவரையும் வெறுக்க வைக்கும் குறட்டையை தவிர்க்க சில யோசனைகளை பின்பற்றினால் நல்ல பலன் கிடைக்கும்.

தூக்க மாத்திரை மற்றும் அலர்ஜிக்கான மருந்துகளைத் தவிர்க்க வேண்டும்.

மல்லாந்து படுப்பதும் குறட்டைக்குக் காரணம். பக்கவாட்டில் ஒருக்களித்து அல்லது கவிழ்ந்து படுத்து உறங்கினால் குறட்டை இருக்காது.

வழக்கமாக படுப்பதற்கு ஒரு மணி நேரம் முன்பாக அல்லது பின்பாக படுக்கப் போகலாம்.

தலைப்பக்கம் கூடுதல் தலையணைகளை வைத்து உயர்த்துவதும் குறட்டையை குறைக்கும்.

தொடர்ந்து குறட்டை விடுகிறவர் டாக்டரை அணுகுவது அவசியம். குறட்டை முச்சடைப்பிலும் கொண்டு போய்விடலாம். குறட்டையால் இதயத் துடிப்பு ஒழுங்கற்றுப் போகும். தலைவலி வரும். உயர் ரத்த அழுத்தமும் ஏற்படலாம்.

பல் செட்டுடன் தூங்குவோருக்கு குறட்டை வரும் என்பதால் அதை கழற்றிவிட்டு தூங்குவது நல்லது.

உடற்பயிற்சியை தொடர்ந்து செய்து வந்தாலும், உடல் பருமனைக் குறைத்தாலும் குறட்டை படிப்படியாக குறையும்