ஆத்திரம் அழிவை தரும் | தமிழ் அறிவு கதைகள்


ஆத்திரம் அழிவை தரும் | தமிழ் அறிவு கதைகள்


அது ஒரு கிராமம். அது காட்டை ஒட்டிய வனப்பகுதி. பிராணிகளிடம் பிரியமுள்ள ஒருவன் வாழ்ந்து வந்தான். ஒருநாள் காட்டிற்கு வேட்டைக்கு போனான். அழகிய புள்ளிமான் ஒன்றை பிடித்து வந்தான்.


மானின் அழகில் மயங்கிய அவன் மாமிசத்திற்காக கொல்லவில்லை. வீட்டில் வளர்த்து வந்தான். ஒருநாள் மான் மாயமாய் மறைந்து விட்டது. ஆனால் அது ஓடவில்லை. காணாமல் போய்விட்டது.

அவனுக்கோ ஆத்திரம். இந்த மானை யார் பிடித்து போயிருப்பார்கள். அவன் எங்கே இருந்தாலும் தேடி கண்டுபிடித்து பழி வாங்க வேண்டும் என்ற எண்ணம் கோவமாக உருவெடுத்தது.

உடனே கடவுளை துதித்தான். கடவுளே எனக்கு தரிசனம் தா...! என்று

கடவுளும் வந்தார்...!

பக்தா என்னை அழைத்ததின் காரணம் என்ன? கடவுள் கேட்டார்.

அறிவாளி பக்தன் என்ன கேட்கணும். நான் ஆசையாய் வளர்த்த மானை யாரோ அபகரித்து சென்று விட்டார்கள். அந்த மான் எனக்கு வேண்டும் என்று தானே கேட்டிருக்க வேண்டும்.

ஆனால் கேட்கவில்லை. கோவம் கண்ணை மறைத்தது.

தெய்வமே… நான் ஆசையாய் ஒரு மான் வளர்த்தேன். அந்த மானை காணவில்லை. அந்த மானை திருடியவன் யாராக இருப்பினும், அவன் முன்னே வரவேண்டும். அவனை என் கோவம் தீர அடிக்க வேண்டும்.

இதுதான் பக்தன் கேட்ட வரம்.

வேண்டுவோருக்கு வேண்டும் வரம் தரும் கடவுள் பக்தனின் கோரிக்கைக்கு தயங்கினார்.

பக்தா.. உன் மானை திருப்பி தருகிறேன். அது காணாமல் போனதற்கு காரணமானவர் யார் என்று கேட்காதே.

இல்லை.. என் மனம் எவ்வளவு கலங்கி இருக்கிறது என்பது எனக்குத்தான் தெரியும். அதனால் அவனை பழிவாங்காமல் விடமாட்டேன், என்று பிடிவாதமாக கேட்டான்.

சரி.. நீ கேட்கும் வரத்தை தருகிறேன். பின்னால் என் மீது வருத்தப் படக்கூடாது.

வருத்தம் வராது.

சரி.. தந்தேன் வரம். உன் மானை திருடி சென்றவர் யாரோ, அவர் உன் பின்னால் நிற்கிறார். தண்டித்து கொள். வரத்தை தந்த கடவுள் மறைந்து விட்டார்.

பக்தன் திரும்பி பார்த்தான்.அங்கே நின்றது சிங்கம்.

பழிவாங்கும் கோவம் மறைந்தது. பயம் பிடித்து கொண்டது. கை கால் எல்லாம் நடுங்க தொடங்கியது. கண் மண் தெரியாமல் ஓட தொடங்கினான். கடவுளே என்னை காப்பாத்து.

கடவுள் சிரித்தார் … ஆத்திரகரனுக்கு புத்தி மட்டுதானே. அவன் கதை முடிந்தது. இங்கே அவன் அறிவு வேலை செய்யவில்லை. ஆத்திரம் கடைசியில் அழிவை தந்தது.

சரி.. எனக்கு தெரிந்த வரையில் நீங்க கோவக்காரர் இல்லை… சரிதானே.

சோழனின் பெருமை | மேற்பார்வையாளரின் ஆணவம் ஒழிந்தது | தமிழ் அறிவு கதைகள்


சோழனின் பெருமை | மேற்பார்வையாளரின் ஆணவம் ஒழிந்தது | தமிழ் அறிவு கதைகள்

தஞ்சை பெரிய கோயில் கட்டும் பணி வேகமாக நடந்து கொண்டிருந்தது. சோழப் பேரரசர் ராஜராஜ சோழன் அந்தப் பணியில் மிகுந்த ஆர்வம் காட்டி வந்தார்.




ஒரு நாள், “கோயில் வேலை எப்படி நடைபெறுகிறது?” என்பதை அறிய விரும்பிய அவர், ஒரு வழிப்போக்கனைப் போல் மாறுவேடம் பூண்டு கோயில் பணி நடக்கும் இடத்துக்குச் சென்றார்.

அவரை அரசர் என்று எவரும் அறிந்து கொள்ளவில்லை.

அப்பொழுது ஒரு பெரிய பாறையைச் சுவரின் மேல் ஏற்றிக் கொண்டிருந்தார்கள். வேலையாட்கள் பலர்ம் ஒன்று சேர்ந்து கயிறு போட்டு இழுத்தும் அந்தப் பாறை சிறிதும் நகரவில்லை. எல்லோரும் சோர்வு அடைந்தார்கள்.

அங்கிருந்த மேற்பார்வையாளரோ, “என்னை எல்லோரும் ஏமாற்றுகிறீர்கள். இந்தப் பாறையை மேலே ஏற்ற முடியவில்லையா?” என்று கோபத்துடன் கத்திக் கொண்டிருந்தான்.

அவனருகில் போன அரசர், “ஐயா! நீங்களும் அவர்களுடன் சேர்ந்து அந்தப் பாறையைத் தூக்க முயற்சி செய்யக் கூடாதா?” என்று கேட்டார்.

“நான் இங்கு மேற்பார்வையாளன் என்பது உங்களுக்குத் தெரியவில்லையா?” என்று ஆணவத்துடன் கேட்டான் அவன்.


“அப்படியா?” என்ற ராஜராஜசோழன் அங்கிருந்த வேலைக்காரர்களுடன் சேர்ந்து அந்தப் பாறையைத் தூக்க முயற்சி செய்தார்.

ஒரு வழியாக பாறை மேலே போய்ச் சேர்ந்தது.

பெருஞ்செல்வந்தரைப் போலிருந்த அவர் வேலையாட்களுடன் சேர்ந்து வேலை செய்தது அந்த மேற்பார்வையாளனுக்கு ஆச்சர்யமாக இருந்தது.

மறுநாள் பேரரசரிடமிருந்து அந்த மேற்பார்வையாளருக்கு ஒரு ஓலை வந்தது.

அதில், “கோயில் திருப்பணிக்கு ஆட்கள் போதவில்லை என்றால் உடனே அரசருக்குச் சொல்லி அனுப்பவும். நேற்று வேலை செய்ததைப் போல் அவர் வந்து வேலை செய்வார்” என்று எழுதியிருந்தது.

இதைப் படித்த மேற்பார்வையாளருக்கு ஆணவம் ஒழிந்தது.

பின் அவனும் மற்ற வேலையாட்களுடன் சேர்ந்து வேலை செய்து அவர்களுக்கு ஊக்கமளித்தான்.

கணினியில் பிரச்சனையா ! CPU வை கழட்டதிங்க !


கணினியில் பிரச்சனையா ! CPU வை கழட்டதிங்க !


பொதுவாக கணினியில் ஹார்ட்வேர் பிரச்சனை வருவது வழக்கம்தான்.அவ்வாறு பிரச்சனை வரும்போது கணினி ஒருவகையா ஒலி எழுப்புவதை கேட்கலாம். முதன்மைநினைவகம்(RAM),வன்தட்டு,மதர்ப்போர்டு போன்றவற்றில் பிரச்சனை வரும்போது சிபியு -வில் அந்த வன்பொருளுக்கு ஏற்றது போல ஒலியை எழுப்பும்.அந்த ஒலியை பீப் சவுண்ட் என்று கூறுவோம்.கணினியில் இருந்து ஒலி வந்த உடன் அந்த ஒலிக்கு உரிய வன்பொருளை கண்டறிந்து பிர்ச்சனைக்கு தீர்வுக் காண்போம்.

ஆனால் பீப் ஒலி வந்ததும் கணினியில் ஹார்ட்வேர் பிரச்சனை என்று சில நபர்கள் அனுபவம் இல்லாமல் CPU வை திறந்து அந்த பிரச்சனை கண்டறிய முயற்ச்சிப்பார்கள் அதனால் WARRANTY போய்விடும் CPU வில் மற்ற வன்பொருள்களுக்கு கூட பிரச்சனை ஏற்ப்படலாம்.இதற்க்கெல்லாம்
 மென்பொருள்கள் மூலம் அந்த வன்பொருளில் என்ன பிரச்சனை, அது எந்த நிலமையில் உள்ளது போன்ற தகவலை அந்த மென்பொருளில் காணலாம்.ஹார்ட்வேரில் உள்ள ஒவ்வரு வன்பொருள்களுக்கும் தனி தனி மென்பொருள்கள் இருக்கிறது.இதனால் கணினியில் இருந்தபடியே மென்பொருள்கள் உதவியுடன் வன்பொருள்களின் செயல்பாட்டுத் தகவலை அறியலாம்.அந்த மென்பொருள்களை பற்றி காண்போம்.

MEMORY யை TEST செய்ய: 

மெமரியை டெஸ்ட் செய்ய MEMTEST என்ற மென்பொருளை நிறுவி பயன்படுத்திக்கொள்ளலாம்.இது கேச் மெமரி,முதன்மைநினைவகம் போன்றவற்றை கண்டறிய உதவுகிறது. அந்த மென்பொருளை பெற,

1. http://www.memtest86.com/

2. http://www.memtest.org/

3. நிறுவிய பின் ,








வன்தட்டு பரிசோதனை:


கீழே குறிப்பிட மென்பொருளை நிறுவி ஹார்ட் டிஸ்க் ட்ரைவ்வை பரிசோதிக்கலாம்.வன்தட்டில் உள்ள ஹெட்க்கு, ஹார்ட்-ட்ரைவ்க்கு தேவையானது.

http://www.hdtune.com/

http://crystalmark.info/software/CrystalDiskInfo/index-e.html

http://www.panterasoft.com/download/hddh.exe

PROCESSOR க்கு தேவையானது

CPU யின் தகவலை பற்றி தெரிந்துக்கொள்ள:

http://www.cpuid.com/softwares/cpu-z.html

PRIME 9:

http://www.mersenne.org/freesoft/

i7 CORE :

http://www.xtremesystems.org/forums/showthread.php?t=225450

கிராபிக்ஸ் கார்டின் நிலையை கண்டறிய :

http://www.techpowerup.com/gpuz/

அனைத்து COMPONENTS னை பரிசோதிக்க :

http://www.ubcd4win.com/

USB மற்றும் MEMORY CARD பரிசோதிக்க:

http://www.heise.de/software/download/h2testw/50539

இந்த மென்பொருள் மூலம் usb ,memory யை டெஸ்ட் செய்யலாம்.அந்தமென்பொருளை படத்தில் காணலாம்.

இந்த அனைத்து மென்பொருள்களை பயன்படுத்தி கணினியில் வன்பொருள் நிலமையை காணமுடியும்.பின் அதற்க்கு கூறிய தீர்வை காணலாம்.

நோன்பின் சட்டங்கள்! அமுத மொழிகள்


நோன்பின் சட்டங்கள்!
==========================


பசியை அடக்கிக் கொண்டு தொழுதல்!...
தமிழக முஸ்லிம்களிடம் உள்ள மற்றொரு
அறியாமையையும் சுட்டிக்
காட்டுவது அவசியமாகும்.
நோன்பு துறப்பதற்காகத் தண்ணீர்
குடித்தவுடன் மஃக்ரிப்
தொழுகைக்கு இகாமத்
சொல்லப்பட்டு விடுவதுண்டு.
இதனால் தண்ணீரைக் குடித்தவுடன் மஃக்ரிப்
தொழுகைக்குச் சென்று விடுவார்கள்.
ஆனால் உடலும், மனமும் உணவில் பால்
நாட்டம்
கொண்டிருக்கும்.
இவ்வாறு செய்வது பேணுதல் என்ற எண்ணம்
பலரிடம் உள்ளது. உண்மையில் இது பேணுதல்
அல்ல!
மாறாக மார்க்கத்தில் கண்டிக்கப்பட்ட
ஒரு செயலாகும்.
மல ஜலத்தை அடக்கிய நிலையிலும்,
உணவு முன்னே
இருக்கும் போதும் எந்தத் தொழுகையும்
இல்லை
என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்
கூறியுள்ளார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்: முஸ்லிம் 869
உங்களில் ஒருவர் உணவில் இருக்கும் போது
தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டால்
உணவுத்
தேவையை முடிக்கும் வரை தொழுகைக்குச்
செல்ல
வேண்டாம் என்று நபிகள் நாயகம் (ஸல்)
அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்:
இப்னு உமர்
(ரலி) நூல்: புகாரி 5465, 671
இந்த நபிமொழிகளிலிருந்து ஜமாஅத்
தொழுகையை
விட, பசியைப்
போக்குவது முதன்மையானது என்பதை
அறிந்து கொள்ளலாம். சாதாரண
நாட்களிலேயே இந்த
நிலை என்றால் நோன்பின் போது மஃக்ரிப்
நேரத்தில்
அதிகமான பசியும், உணவின் பால் அதிக
நாட்டமும்
இருக்கும்.
இந்த நேரத்தில் மனதை உணவில்
வைத்து விட்டு,
உடலை மட்டும் தொழுகையில் நிறுத்துவது
அல்லாஹ்வுக்கு விருப்பமானது அல்ல
என்பதால்
தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வாறு
நமக்கு வழி காட்டியுள்ளார்கள்.
இன்னொன்றையும் நாம் மறந்து விடக் கூடாது.
ஒவ்வொரு தொழுகைக்கும் ஒரு ஆரம்ப
நேரமும், ஒரு
முடிவு நேரமும் உள்ளது.
முடிவு நேரத்துக்குள்
தொழுகையை நிறைவேற்றி விட வேண்டும்.
பசியின் காரணமாக ஜமாஅத்தைத் தான்
விடலாமே
தவிர தொழுகையை விட்டு விடக் கூடாது.
மஃக்ரிப்
தொழுகையைப் பொறுத்த வரை சூரியன்
மறைந்தது
முதல் சுமார் 60 நிமிடம் வரை தொழுகை நேரம்
நீடிக்கும். அதற்குள் தொழுகையை நிறைவேற்றி
விட வேண்டும்.
ஏனெனில் தொழுகை முஃமின்கள் மீது நேரம்
குறிக்கப்பட்ட
கடமையாகவுள்ளது என்று (4:103
வசனத்தில்) அல்லாஹ் கூறுகிறான்.
நோன்பு துறக்க ஏற்ற உணவு நம்மிடம் எந்த
உணவு
உள்ளதோ அதன் மூலம் நோன்பு துறக்கலாம்
என்றாலும்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்
நோன்பு துறக்கும்
போது முதலில் பேரீச்சம்
பழங்களை உட்கொள்ளுமாறு
ஆர்வமூட்டி உள்ளார்கள். யாருக்கு பேரீச்சம்
பழம்
கிடைக்கிறதோ அவர் அதன் மூலம்
நோன்பு துறக்கட்டும்! கிடைக்காதவர்கள்
தண்ணீர் மூலம் நோன்பு துறக்கட்டும்;
ஏனெனில் அது தூய்மையானதாகும்
என்று நபிகள்
நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்:
அனஸ் பின் மாலிக் (ரலி) நூல்: திர்மிதீ 594.
பேரீச்சம் பழத்தையோ, தண்ணீரையோ முதலில்
உட்கொண்டு விட்டு அதன் பிறகு மற்ற
உணவுகளை
உட்கொள்வதால் நபிகள் நாயகத்தின்
சுன்னத்தைப்
பேணிய நன்மையை அடைந்து கொள்ளலாம்...

பட்டினத்தார் அமுத மொழிகள்

பட்டினத்தார் அமுத மொழிகள்



மலரில் உள்ள தேனை மட்டுமே தேனீ அருந்தும்.
சாதாரண ஈயோ பேதமில்லாமல் எதிலும் அமரும் சுபாவம் கொண்டது.
அதுபோல நல்ல குடும்பத்தில் பிறந்தவர்கள் நல்ல செயல்களை மட்டுமே செய்வார்கள்.

ஒரு பொருளை நாம் விரும்பத் தொடங்கும்போதே, அதை ஒருநாள்
வெறுக்கவும் வேண்டிவரும் என்ற உண்மையை நாம் உணர்வதில்லை.
ஆனால், விரும்பும்போதே வெறுக்கவும் தெரிந்து கொண்டவர்கள்
வீணான மனவருத்தங்களுக்கு ஆளாக நேர்வதில்லை.

ஆத்திரம் என்பது உள்ளத்தில் எழும்போது, அறிவு தன்னை திரையிட்டுக் கொள்ளும்.
ஆத்திரம் கொண்டவன் தன் ஆத்திரத்தை தீர்த்துக் கொள்வதை தடுப்பது என்பது
அவ்வளவு எளிதான செயல் அல்ல.

ஆத்திரம் கொண்டவன் செய்யக் கூடாத செயல்களை புத்தியின்றி செய்ய தலைப்படுவான்.
அதனால், வாழ்நாள் முழுவதும் தான் செய்த பழிச்செயலை எண்ணி வருந்துவான்.
அதனால், ஆத்திரத்தை விடுத்து சாந்த குணத்தை பின்பற்றுங்கள்.

தீயகுணம் கொண்டவர்கள் இறந்ததும் மீண்டும் இம்மண்ணில் உடனே பிறந்து விடுவார்கள்.
இறைவன் அம்மனிதர்களின் பாவ விமோசனத்திற்காக உடனே திருப்பி அனுப்பி விடுகிறான்.
வாழும் காலத்தில் நன்மையை செய்பவனே முக்தி அடைய தகுதியானவன்.