Comedy SMS

What is SMS?? LOL

SMS SMS SMS
Do u know what is SMS?
S-Singam anuppum
M-Monkey padikum
S-Small story.

Enna Moraipu..
Yarukkavathu forward Panni negalum singam agikkoga.gud eve

பொது அறிவு கேள்வி பதில்கள்-General Knowledge Questions and Answers:

சில பயனுள்ள பொது அறிவு கேள்வி பதில்கள்:
 1.  ஒரு தடவை கூட லோக்சபாவிற்கு செல்லாத இந்திய பிரதமர் யார்?
 திரு. சரண்சிங்.

 2.  உலக சுற்றுச்சூழல் தினம் எப்போது கடைபிடிக்கப்படுகிறது?
 ஜூன் 5.

 3.  மனித உடலில் வியர்க்காத பகுதி எது?
 உதடு.

 4.  ஒரு ஹெக்டார் என்பது எவ்வளவு ஏக்கர்?
 கிட்டத்தட்ட 2.5  ஏக்கர்.

 5.  வேர்க்கடலையின் அறிவியல் பெயர் என்ன?
 அராக்கிஸ் ஹைபோஜியா.

 6.  பஞ்ச தந்திர கதைகளை எழுதியவர் யார்?
 விஷ்ணு சர்மா.

 7.  வருடத்தின் ஒரே நாளில் 24 மணிநேரத்தில்  பகலும், இரவும் சரியாக
12  மணிநேரம் மட்டும் வருவது எந்த நாளில்?
மார்ச்சு 21.

 8.  மனித தலையில் உள்ள மொத்த எலும்புகள் எத்தனை?
 22 .

 9.  ஈக்களின் சுவை உணர் உறுப்பு எது?
நாக்கு.

10. தமிழில் வெளிவந்த முதல் வரலாற்று நூல் எது?
மோகனாங்கி.

11. பாலில் உள்ளதை விட அதிக கால்சியம் உள்ள காய்கறி எது?
வெங்காயம்.

12. கவிஞர் கண்ணதாசன் பாடல் எழுதிய கடைசி படம் எது?
மூன்றாம் பிறை.

13. தமிழில் முதல் நாவல் எழுதியவர் யார்?
தமிழில் முதல் நாவலை எழுதியவர் மாயூரம் வேதநாயகம் பிள்ளை. அவர் 1879ல் எழுதிய 'பிரதாப முதலியார் சரித்திரம்'தான் தமிழில் முதல் உரைநடை வடிவ நாவல்.

14. நமது இந்திய நேரம் எந்த இடத்தினை அடிப்படையாய் வைத்து கணிக்கப்படுகிறது?
அலகாபாத்.

  1. இலங்கையின் பரப்பளவு யாது?
    65610 சதுர கிலோமீற்றர்
  2. இந்திய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் யார்?
    சல்மன் குர்ஷித்
  3. இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் யார்?
    பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ்
  4. சவூதியில் மரணதண்டனை நிறைவேற்றப்பட்ட பெண் யார்?
    ரிஸானா நபீக்
  5. ஜனாதிபதியின் செயலாளர் யார்?
    லலித் வீரதுங்க
  6. தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் யார்?
    வீ.ஆனந்தசங்கரி
  7. இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் தலைவர் யார்?
    குமாரமல்லவ ஆராய்ச்சி
  8. கிழக்கு மாகாண சபையின் தவிசாளர் யார்?
    ஆரியவதி கலப்பதி
  9. அமெரிக்காவின் தலைமை நீதிபதி யார்?
    ஜோன் ரொபோட்ஸின்
  10. அமெரிக்காவின் உப ஜனாதிபதி யார்?
    ஜோபிடன்
  11. சிரிய நாட்டின் தலைநகரம் எது?
    டமஸ்கஸ்
     
  12. வெள்ளி, தங்கம் ஆகிய உலோகங்களில் பாரமானது எது?
          தங்கம்
  13.  வண்ணாத்திப்பூச்சியின் கால்கள் எத்தனை?
          ஆறு
  14.  மக்கள் தொகை அதிகம் கொண்ட நாடு எது?
          சீனா
    04. அமெரிக்காவின் மிகப்பெரிய மாநிலம் எது?
          அலாஸ்கா
    05. அதிகளவு பரப்பளவைக் கொண்ட நாடு எது?
          ரஸ்யா
    06. 2008 இல் ஒலிம்பிக் விளையாட்டை நடாத்திய நாடு எது?
          சீனா
    07. அமெரிக்காவில் பிரபலமான உள்ளக விளையாட்டு எது?
          கூடைப்பந்து
    08. பிரபல கோல்ப் விளையாட்டு வீரர் டைகர் பூட்ஸ் அவர்களது தாயாரின்
          நாடு  எது?  தாய்லாந்து
    09. Aurora Borealis பொதுவாக எவ்வாறு அழைக்கப்படுகின்றது?
          Northern Lights
    10. உலகில் அதிகளவில் காணப்படும் தொற்றலடையாத நோய் எது? 
          பற்சிதைவு

01. ஒரு போதும் மலராத பூ - அத்திப்பூ
02. வேர் இல்லாத தாவரம் - இலுப்பை
03. உலகில் வறுமையான நாடு - ருவாண்டா
04. விவாகரத்து செய்யமுடியாத நாடு - அயர்லாந்து
05. ஜப்பான் தீவுகளின் எண்ணிக்கை - 4
06. ஆட்சி மாற்றம் இல்லாத நாடு - மெச்சிக்கோ
07. அந்தமான் தீவுகளின் எண்ணிக்கை - 204
08. உலகில் மிக அதிகமாக மின்னலால் பாதிக்கப்படும் நாடு – பனாமா
09. உலகில் மின் தடை இல்லாத நாடு - குவைத்
10. மூன்று அடிப்படை நிறங்கள் - சிவப்பு , மஞ்சள் , நீலம்
11. 365 நாட்கள் கொண்ட ஆண்டு முறையை ஏற்படுத்தியவர் - வாழசவா
12.  உலோக நாணயங்கள் புழக்கத்தில் இல்லாத நாடு - பராகுவே
      (தென்அமெரிக்கா )
13. பூச்சியத்தை உலகிற்கு அறிமுகப்படுத்திய நாடு - இந்தியா
14. சத்தில்லாத உணவு - நீர்
15. கலப்படம் செய்யமுடியாத உணவுப்பொருள் - கோழிமுட்டை
16. பசுமைப்புரட்சி ஏற்பட்ட வருடம் - 1960 தாயகம் - மெச்சிக்கோ
17.  அமெரிக்க பசுமைப் புரட்சியின் பிறப்பிடம் - பொஸ்டன்
18.  உலகில் மிக பிரபலமான பொழுதுபோக்கு - தபால் தலை சேகரிப்பு
19. சுத்தமான தங்கத்தின் கரட் - 24கரட்
20. கடல் நீர் நீலமாக இருக்கும் அளவு - 10 அடி

வெற்றிக்கனி! | தெனாலிராமன் கதை


வெற்றிக்கனி! | தெனாலிராமன் கதை

கிருஷ்ண தேவராயர் ஒருமுறை எதிரியைத் தாக்கப் படையோடு புறப்பட்டுப் போனார். ஒரு ஆற்றங்கரையைக் கடக்க வேண்டிய நேரத்தில், அரசவை ஜோசியர், “மன்னா, இன்றைக்கு நாள் நன்றாக இல்லை. அடுத்த திங்கள்கிழமை போருக்குப் போனால் வெற்றி நிச்சயம்” என்று சொன்னார்.



கிருஷ்ணதேவராயர் குழம்பினார். அவ்வளவு நாட்கள் கொடுத்தால், எதிரி உஷாராகிவிடுவான். அவன் எதிர்பாராத நேரத்தில் உடனே தாக்கினால்தான் வெற்றி. ஆனால், ஜோசியர் சொன்ன பின் சந்தேகம் வந்துவிட்டது. தெனாலிராமனிடம் ஆலோசனை கேட்டார்.

தெனாலிராமன் ஜோசியரை அழைத்தான். “எல்லோருக்கும் ஆருடம் சொல்கிறீர்களே, நீங்கள் இன்னும் எத்தனை வருடம் உயிரோடு இருப்பீர்கள் என்று சொல்ல முடியுமா?” என்று கேட்டான்.

“இன்னும் இருபது வருடங்கள் வாழ்ந்திருப்பேன்” என்றார் ஜோசியர்.
தெனாலிராமன் சடக்கென்று வாளை உருவி அவர் கழுத்தில் பதித்து, “இந்த விநாடியே உங்கள் ஆரூடத்தை என்னால் பொய்யாக்க முடியுமா, முடியாதா?” என்று கேட்டான்.

ஜோசியரின் விழிகள் அச்சத்தில் பிதுங்கின. “முடியும்.. முடியும்” என்று அலறினார்.

“அவ்வளவுதான் மன்னா ஜோசியம்! உங்களுக்கு எதிரான எந்த ஜோசியத்தையும் உங்களால் பொய்யாக்க முடியும்” என்று புன்னகைத்தான் தெனாலிராமன்.

கிருஷ்ண தேவராயர் ஆற்றைக் கடந்தார். எதிரியை வெற்றி கொண்டார்.
நீங்கள் தீர்மானமாக இருந்தால், கோள்களால் உங்களை எதுவும் செய்ய முடியாது.

வீண் சந்தேகங்களை விலக்கி, உங்கள் மீது நம்பிக்கை வைத்துத் திறமைகளை வளர்த்துக் கொள்ளுங்கள். முழுமையான ஈடுபாட்டுடன் செயல்படுங்கள். தானாகக் கனிந்து வரும் வெற்றிக்கனி!

ஆத்திரம் அழிவை தரும் | தமிழ் அறிவு கதைகள்


ஆத்திரம் அழிவை தரும் | தமிழ் அறிவு கதைகள்


அது ஒரு கிராமம். அது காட்டை ஒட்டிய வனப்பகுதி. பிராணிகளிடம் பிரியமுள்ள ஒருவன் வாழ்ந்து வந்தான். ஒருநாள் காட்டிற்கு வேட்டைக்கு போனான். அழகிய புள்ளிமான் ஒன்றை பிடித்து வந்தான்.


மானின் அழகில் மயங்கிய அவன் மாமிசத்திற்காக கொல்லவில்லை. வீட்டில் வளர்த்து வந்தான். ஒருநாள் மான் மாயமாய் மறைந்து விட்டது. ஆனால் அது ஓடவில்லை. காணாமல் போய்விட்டது.

அவனுக்கோ ஆத்திரம். இந்த மானை யார் பிடித்து போயிருப்பார்கள். அவன் எங்கே இருந்தாலும் தேடி கண்டுபிடித்து பழி வாங்க வேண்டும் என்ற எண்ணம் கோவமாக உருவெடுத்தது.

உடனே கடவுளை துதித்தான். கடவுளே எனக்கு தரிசனம் தா...! என்று

கடவுளும் வந்தார்...!

பக்தா என்னை அழைத்ததின் காரணம் என்ன? கடவுள் கேட்டார்.

அறிவாளி பக்தன் என்ன கேட்கணும். நான் ஆசையாய் வளர்த்த மானை யாரோ அபகரித்து சென்று விட்டார்கள். அந்த மான் எனக்கு வேண்டும் என்று தானே கேட்டிருக்க வேண்டும்.

ஆனால் கேட்கவில்லை. கோவம் கண்ணை மறைத்தது.

தெய்வமே… நான் ஆசையாய் ஒரு மான் வளர்த்தேன். அந்த மானை காணவில்லை. அந்த மானை திருடியவன் யாராக இருப்பினும், அவன் முன்னே வரவேண்டும். அவனை என் கோவம் தீர அடிக்க வேண்டும்.

இதுதான் பக்தன் கேட்ட வரம்.

வேண்டுவோருக்கு வேண்டும் வரம் தரும் கடவுள் பக்தனின் கோரிக்கைக்கு தயங்கினார்.

பக்தா.. உன் மானை திருப்பி தருகிறேன். அது காணாமல் போனதற்கு காரணமானவர் யார் என்று கேட்காதே.

இல்லை.. என் மனம் எவ்வளவு கலங்கி இருக்கிறது என்பது எனக்குத்தான் தெரியும். அதனால் அவனை பழிவாங்காமல் விடமாட்டேன், என்று பிடிவாதமாக கேட்டான்.

சரி.. நீ கேட்கும் வரத்தை தருகிறேன். பின்னால் என் மீது வருத்தப் படக்கூடாது.

வருத்தம் வராது.

சரி.. தந்தேன் வரம். உன் மானை திருடி சென்றவர் யாரோ, அவர் உன் பின்னால் நிற்கிறார். தண்டித்து கொள். வரத்தை தந்த கடவுள் மறைந்து விட்டார்.

பக்தன் திரும்பி பார்த்தான்.அங்கே நின்றது சிங்கம்.

பழிவாங்கும் கோவம் மறைந்தது. பயம் பிடித்து கொண்டது. கை கால் எல்லாம் நடுங்க தொடங்கியது. கண் மண் தெரியாமல் ஓட தொடங்கினான். கடவுளே என்னை காப்பாத்து.

கடவுள் சிரித்தார் … ஆத்திரகரனுக்கு புத்தி மட்டுதானே. அவன் கதை முடிந்தது. இங்கே அவன் அறிவு வேலை செய்யவில்லை. ஆத்திரம் கடைசியில் அழிவை தந்தது.

சரி.. எனக்கு தெரிந்த வரையில் நீங்க கோவக்காரர் இல்லை… சரிதானே.

சோழனின் பெருமை | மேற்பார்வையாளரின் ஆணவம் ஒழிந்தது | தமிழ் அறிவு கதைகள்


சோழனின் பெருமை | மேற்பார்வையாளரின் ஆணவம் ஒழிந்தது | தமிழ் அறிவு கதைகள்

தஞ்சை பெரிய கோயில் கட்டும் பணி வேகமாக நடந்து கொண்டிருந்தது. சோழப் பேரரசர் ராஜராஜ சோழன் அந்தப் பணியில் மிகுந்த ஆர்வம் காட்டி வந்தார்.




ஒரு நாள், “கோயில் வேலை எப்படி நடைபெறுகிறது?” என்பதை அறிய விரும்பிய அவர், ஒரு வழிப்போக்கனைப் போல் மாறுவேடம் பூண்டு கோயில் பணி நடக்கும் இடத்துக்குச் சென்றார்.

அவரை அரசர் என்று எவரும் அறிந்து கொள்ளவில்லை.

அப்பொழுது ஒரு பெரிய பாறையைச் சுவரின் மேல் ஏற்றிக் கொண்டிருந்தார்கள். வேலையாட்கள் பலர்ம் ஒன்று சேர்ந்து கயிறு போட்டு இழுத்தும் அந்தப் பாறை சிறிதும் நகரவில்லை. எல்லோரும் சோர்வு அடைந்தார்கள்.

அங்கிருந்த மேற்பார்வையாளரோ, “என்னை எல்லோரும் ஏமாற்றுகிறீர்கள். இந்தப் பாறையை மேலே ஏற்ற முடியவில்லையா?” என்று கோபத்துடன் கத்திக் கொண்டிருந்தான்.

அவனருகில் போன அரசர், “ஐயா! நீங்களும் அவர்களுடன் சேர்ந்து அந்தப் பாறையைத் தூக்க முயற்சி செய்யக் கூடாதா?” என்று கேட்டார்.

“நான் இங்கு மேற்பார்வையாளன் என்பது உங்களுக்குத் தெரியவில்லையா?” என்று ஆணவத்துடன் கேட்டான் அவன்.


“அப்படியா?” என்ற ராஜராஜசோழன் அங்கிருந்த வேலைக்காரர்களுடன் சேர்ந்து அந்தப் பாறையைத் தூக்க முயற்சி செய்தார்.

ஒரு வழியாக பாறை மேலே போய்ச் சேர்ந்தது.

பெருஞ்செல்வந்தரைப் போலிருந்த அவர் வேலையாட்களுடன் சேர்ந்து வேலை செய்தது அந்த மேற்பார்வையாளனுக்கு ஆச்சர்யமாக இருந்தது.

மறுநாள் பேரரசரிடமிருந்து அந்த மேற்பார்வையாளருக்கு ஒரு ஓலை வந்தது.

அதில், “கோயில் திருப்பணிக்கு ஆட்கள் போதவில்லை என்றால் உடனே அரசருக்குச் சொல்லி அனுப்பவும். நேற்று வேலை செய்ததைப் போல் அவர் வந்து வேலை செய்வார்” என்று எழுதியிருந்தது.

இதைப் படித்த மேற்பார்வையாளருக்கு ஆணவம் ஒழிந்தது.

பின் அவனும் மற்ற வேலையாட்களுடன் சேர்ந்து வேலை செய்து அவர்களுக்கு ஊக்கமளித்தான்.