GOOD JOKE
கண்கள் அழுகவில்லை,
உதடுகள் பேசவில்லை,
கைகள் அசையவில்லை,
இதயம் மட்டும் துடித்தது...
.
....
.
.
.
"சரக்கு வாங்க போனவன இன்னும் ஆள காணாம்யா..."
----------------------------------------------------------------------------------------------
நீ காதலிக்கப்பட வேண்டும் என்றால்...
ஒருவர் உள்ளத்திலும்,நினைவிலும்,
எப்பொழுதும் நீங்காமல்..
வாழ வேண்டும்.
-----------------------------------------------------------------------------------
Boy:Aval manadhil ne mattum irundhal Avalukaga un uyirai kodu
But, Aval manadhil neyum oruvanai irundhal
Mapla enakum ava Numbera kodu...
--------------------------------------------------------------------------------
மாணவன்:சார்,நான் யூரின் பாஸ் பண்ணிட்டு வரேன்.
ஆசிரியர்:அதையாவது பாஸ் பண்ணித் தொலைடா.
---------------------------------------------------------------------------------------------------
தபால்காரர் : என்னய்யா இது..பின்கோடு போடவேண்டிய இடத்தில் "சரோஜா சாமான் நிக்கோலா" அப்படின்னு எழுதியிருக்கே?
வெங்கட்பிரபு : ஹி..ஹி..சென்னை - 600028 தான் அப்படி எழுதி இருக்கேன்.
--------------------------------------------------------------------------------------------------------------------------
ஆசிரியர் : உலகத்திலேயே மிகச் சிறந்த தன்னம்பிக்கையாளர் யார்?
மாணவன் : எங்க பக்கத்து வீட்டு 95 வயசு பாட்டிதான் சார்.
ஆசிரியர் : எப்படிச் சொல்ற?
மாணவன் : அது நேத்து ஒரு செல்போன் வாங்கி அதுல லைஃப் டைம் கார்டு
போட்டுத் தன் பேரன்கிட்டப் பேசுதுன்னா பாருங்களேன்!
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
ரயிலில் டி.டி.ஆர் கேட்டார்: என்னப்பா பழைய டிக்கெட்டை வச்சுக்கிட்டு பயணம் செய்யறே?
ஏன், இந்த ட்ரெயின் மட்டும் புதுசா என்ன?
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------
இன்றைய சுட சுட செய்தி
சிசு : மெரீனா பீச்ல மீன் சாப்பிட்டவங்க மூன்று பேரு மண்டைய போட்டுட்டாங்களாம்.
ரிசி : ஐயய்யோ !!!!! அப்புறம்
சிசு : அப்புறம் என்ன? அந்த மீன் மண்டைய காக்காக தூக்கிகிட்டு போயிடுச்சு
-------------------------------------------------------------------------------------------------------------------------------------
மனைவி: எதுக்கு அடிக்கடி கிச்சன் ரூமுக்கு போயிட்டு வர்றிங்க.
கணவன்:டாக்டர் தான் அடிக்கடி சுகர் இருக்கான்னு செக்கப் பண்ணச் சொன்னார்!!!
-------------------------------------------------------------------------------------------------------------------------------
ஆசிரியர்: நீங்கள் எல்லாரும் நன்றாக படித்து நாட்டுக்கு நல்ல பேர் வாங்கித் தரணும்.
மாணவன்: ஏன் டீச்சர் 'இந்தியா' என்கிற பேர் நல்லா இல்லையா...
ஆசிரியர்: ???????
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
நான் ரசித்த குறுஞ்செய்தி.....:-)
கணவர் : நா உன்னதான் கலியாணம் கட்டிக்குவேன்னு எங்க ஆசிரியர்
அப்பவே சொல்லிட்டாரு...
மனைவி : எப்படி சொல்ரீங்க.....
கணவர் : அதுவா... அவர்தான் சொன்னாரு நீ படிச்சி முடிச்சதும்
பன்னி தான் மேய்க்க போரேன்னு....
-------------------------------------------------------------------------------------------------------------------
என் ஜாதகப்படி எனக்கு அறிவு ரொம்ப ஜாஸ்தியாம்.
இப்பவாது தெரியுதா நான் ஏன் ஜாதகத்தை நம்புறதில்லைன்னு
-------------------------------------------------------------------------------------------------------------------
பெண் பார்த்து வந்த பின் அவன் ஏன் விழுந்து விழுந்து சிரிக்கிறான்.
துன்பம் வரும் வேளையில் சிரிங்க என்று யாரோ சொன்னாங்களாம்
-------------------------------------------------------------------------------------------------------------
பூட்டைத் திறக்கணும்னா என்ன செய்யனும்?
முதல்ல பூட்டை பூட்டணும்...!
--------------------------------------------------------------------------------------------------------
இந்த போலீஸ் ஸ்டேஷன்ல இருக்கிற எல்லா போலீஸும் கோபமா இருக்காங்களே ஏன் ! ?
சுவத்தில் யாரோ . ஒவ்வொரு திருடனோட வெற்றிக்குப் பின்னாடியும் ஒரு போலீஸ்காரர் உள்ளார்னு எழுதி வெச்சுட்டாங்களாம் !
-----------------------------------------------------------------------------------------------------------
வேலைகாரனுக்கு ஏன் உங்க Shirt கொடுத்தீங்க ?
கணவர் :ஏன் ,என ஆச்சு ?
மனைவி :நீங்கதான் வரீங்கன்னு நினைச்சு ..
கணவர் : நினைச்சு .?!
மனைவி :பூரி கட்டையால அடிச்சிட்டேன் ..
------------------------------------------------------------------------------------
ராமு: "ஏகப்பட்ட கடன வாங்கி
தொலைச்சுட்டேன், எல்லாருமா
வந்து நெருக்குறாங்க"...
சோமு: "வாங்குன கடன என்ன பண்ணின"....?
ராமு: "அதுதான் "தொலைச்சுட்டேன்" சொல்றேன்ல
அப்பறம் என்ன கேள்வி வேண்டி கிடக்கு"...?
------------------------------------------------------------------------------
மனசுக்குள் இருக்கும் வரை மகிழ்ச்சி கூட சுமைதான்...!
வெளிப்படுத்தும் போது வேதனை கூட சுகம்தான்.
ஆக நமது உணர்வுகளை உடனுக்குடன் பகிர்வோம்
அன்புக்குரிய நண்பர்களிடம் மட்டும்..!!!
---------------------------------------------------------------------------------------
தத்துவம்
அண்ணனோட அண்ணன் பெரியண்ணன்,
அக்காவோட அக்கா பெரியக்கா
ஆனா அப்பாவோட அப்பாவ பெரியப்பான்னு கூப்பிட முடியாது, தாத்தான்னுதான் கூப்பிடனும்!
---------------------------------------------------------------------------------------------------------
எதுக்குடா கால்குலேட்டருடன் அந்த பொண்ணு பின்னாடி சுத்துறே?
கணக்கு பண்ணிட்டு இருக்கேன்.
----------------------------------------------------------------------------------------------------------
காதலியை பார்க்க போகும் போதெல்லாம் அவர் ஏன் கற்பூரம், வாழைப்பழம், தேங்காய் வாங்கிட்டு போகிறார்?
அது தெய்வீக காதலாம்
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
கச்சேரிக்கு போனவர்கள் யாரும் திரும்பி வரவில்லை ஏன்?
இசையெனும் இன்ப வெள்ளத்தில் எல்லோரும் மூழ்கி விட்டார்கள்.
---------------------------------------------------------------------------------------------------------------------
எறும்பு யானையிடம் என்னை கைவிட்டு விடாதே என்று அழுததா, ஏன்?
எறும்பின் வயிற்றில் யானையின் வாரிசு வளருவதால்.
----------------------------------------------------------------------------------------------------