தமிழர் அளவை முறைகள்

அளவைக்கருவிகளுள் ஒன்றான உழக்கு
பண்டைய தமிழர்களின் அளவை முறைகள் மிகவும் விசித்திரமானவை. அந்தக் காலக்கட்டங்களில் தமிழர்கள் மனக்கணக்குகள்தான் செய்தார்கள் என்று பல ஆய்வாளர்களும் , அறிஞர்களும் கூறுகின்றனர். பூச்சரங்கள் வாங்கும்போது நீட்டலளவான முழம் என்ற அளவினால் பயன்படுத்தும் முறையை இன்றும் வழக்கில் உள்ளதைப் பார்க்கலாம். பண்டைய கட்டடக்கலைகளிலும் முழம் என்ற அளவையே தமிழர்கள் பின்பற்றியிருக்கிறார்கள். இதற்குச் சான்றாகப் பல முழக்குச்சிகளை ( ஒன்று அல்லது இரண்டு முழம் நீளம் உள்ள) பயன்படுத்தியதாகத் ஆய்வாளர்கள் கண்டறிந்து உள்ளார்கள். ஆகவே தமிழர்களின் நீள அளவை முறைகள் தரப்படுத்தப் பட்டுள்ளதை நாம் தீர்க்கமாகச் சொல்லமுடியும். தமிழ் நாட்டிலும், கேரளத்திலும் பெரும் அளவான கல்வெட்டுக்கள் இன்னும் படிக்கப்படாமலும், அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படாமலும், இருப்பதால் தென்னிந்தியாவின் அறிவியலை முழுதாக இன்னும் அறியமுடிவதில்லை.[1]
பால், எண்ணெய்களை (நீர்மம்) அளப்பதற்குத் தமிழர்கள் உழக்கு என்ற அளவை உருவாக்கி இருக்கிறார்கள். அதற்குச் சான்றாக ஓர் உழக்கு, இரு உழக்கு அளவிலான செப்பு, பித்தளை, வெள்ளிப் பாத்திரங்கள் தமிழர்களின் அன்றாட வாழ்க்கையில் இன்றும் பயன்படுத்துவதைக் காணலாம். ஆகவே தமிழர்களின் அளவை முறைகள் தனித்துவம் வாய்ந்ததாக அமைகின்றன. பின்வரும் பட்டியல், வாய்பாடுகள் பண்டைய தமிழர்கள் உருவாக்கிய அளவை முறைகள் ஆகும்.
பழந்தமிழர் அளவைகள், பெரும்பாலும் இக்காலத்திலும் உள்ள தமிழர் அளவைகள் ஆகும். அவை
  1. எண்ணல்
  2. நிறுத்தல்
  3. முகத்தல்
  4. பெய்தல்
  5. நீட்டல்
  6. தெறித்தல்
  7. சார்த்தல்
ஒன்று, இரண்டு, மூன்று என்ற எண்ணாகவோ வீசம், அரைக்கால், கால் என்ற இலக்கமாகவோ, அல்லது பதாதி சேனாமுகம், குமுதமெனத் தொகையாகவோ எண்ணிக் கணக்கிடுவது எண்ணல் அளவை ஆகும்.இந்த எண்ணலளவை சிற்றிலக்கம், பேரிலக்கமென இருவகைப்படுகிறது.

பேரிலக்கம்

ஒன்று, இரண்டு, மூன்று முதலிய முழுவெண்கள் பேரிலக்கம் எனப்படும்.
Oldtamilcharactersold.jpg
1 - ஒன்று (ஒண்டு)
2 - இரண்டு
3 - மூன்று (மூண்டு)
4 - நான்கு
5 - ஐந்து
6 - ஆறு
7 - ஏழு
8 - எட்டு
9 - ஒன்பது
10 - பத்து
100 - நூறு
1000 - ஆயிரம்

எண் வாய்பாடு

10கோடி - 1அற்புதம்
10அற்புதம் - 1நிகற்புதம்
10நிகற்புதம் - 1கும்பம்
10கும்பம் - 1கணம்
10கணம் - 1கற்பம்
10கற்பம் - 1நிகற்பம்
10நிகற்பம் - 1பதுமம்
10பதுமம் - 1சங்கம்
10சங்கம் - 1சமுத்திரம்
10சமுத்திரம் - 1ஆம்பல்
10ஆம்பல் - 1மத்தியம்
10மத்தியம் - 1பரார்த்தம்
10பரார்த்தம் - 1பூரியம்
10பூரியம் - 1 முக்கோடி
10 முக்கோடி - 1 மகாயுகம்

சிற்றிலக்கம்

அரை கால், அரைக்கால் வீசம்(மாகாணி) முதலிய பின்னவெண்கள் சிற்றிலக்கம் எனப்படும். சிற்றிலக்கத்தில் கீழ்வாயிலக்கமென்றும், மேல்வாயிலக்கமென்றும் இருவகையுண்டு.
கீழ்வாய்ச் சிற்றிலக்கத்தோடு ஒப்பு நோக்கியே, அரை, கால்,அரைக்கால் முதலியன மேல்வாய்ச் சிற்றிலக்கமெனப்படும்.

மேல்வாயிலக்கம்

மேல்வாயிலக்கம் என்பதில் அடங்கும் அலகுகள்
  • மேலரை(அரை)
  • மேற்கால்(கால்)
  • மேலரைக்கால்(அரைக்கால்)
  • மேல்வீசம்(வீசம்)
  • 3/4 - முக்கால்
  • 1/2 - அரைக் கால்
  • 1/4 - கால்
  • 1/5 - நாலுமா
  • 3/16 - மூன்று வீசம்
  • 3/20 - மூன்றுமா
  • 1/8 - அரைக்கால்
  • 1/10 - இருமா
  • 1/16 - மாகாணி(வீசம்)
  • 1/20 - ஒரு மா
  • 3/64 - முக்கால் வீசம்
  • 3/80 - முக்காணி
  • 1/32 - அரைவீசம்
  • 1/40 - அரைமா
  • 1/64 - கால் வீசம்
  • 1/80 - காணி
  • 3/320 - அரைக்காணி முந்திரி
  • 1/160 - அரைக்காணி
  • 1/320 - முந்திரி
  • மேல்வாய்ச் சிற்றிலகத்தில் அடிமட்ட எண், மேல்முந்திரி /முந்திரி = 1/320 ஆகும்.

மேல்வாயிலக்கம் குறிப்புகள்

  • மா: பரப்பளவில் மா என்பது ஒரு வேலியில் 1/20 ஒரு நில அளவான காணி அதிற் காற்பங்காயிருந்திருக்கலாம். இவ் வீரளவைப் பெயர்களும் நீட்டலளவையினின்று எண்ணலள வைக்கு எடுத்தாளப் பெற்றதாகத் தெரிகின்றது. மாத்தல் என்பது ஒரு வழக்கற்ற வினை. மாத்தல் அளத்தல். மா+அனம் = மானம் = அளவு, படி (மேலைவடார்க்காட்டு வழக்கு). மா+திரம் = மாத்திரம்-மாத்திரை.
  • காணி காணிக்கப்பட்ட நிலஅளவு. காணித்தல்- மேற்பார்த்தல்.
  • வீசம்: பிசு-விசு-விசுக்கு-விசுக்காணி = சிறியது. விசு-வீசம்=சிற்றளவு. மாவும் காணியும் சேர்ந்தது மாகாணி.
  • முந்திரி:முந்திரி என்னும் சொல் ஒரு சிற்றெண்ணையும் ஒரு பழவகையையுங் குறிக்கும். முந்திரிப்பழத்தின் கொட்டை பழத்திற்கு வெளியே முன் துருத்திக்கொண்டிருப்பதால், அப் பழம் அப் பெயர் பெற்றது. முன்+துரி = முந்துரி-முந்திரி-முந்திரிகை. முந்து உருத்தது முந்திரி என்றுமாம். உருத்தல்-தோன்றுதல். முந்திரி என்னும் கீழ்வாயிலக்கப் பெயரும் முந்தித் தோன்றியதென்னும் பொருளதே.

கீழ்வாயிலக்கம்

  1. கீழரை = 1/640,
  2. கீழ்க்கால் = 1/1280
  3. கீழரைக்கால் = 1/2560
  4. கீழ்வீசம் = 1/5120
  • கீழ்வாய்ச் சிற்றிலக்கத்தில் அடிமட்ட எண், கீழ்முந்திரி = 1/102,400 ஆகும்.
கீழ்வாயிலக்கம் என்பதில் அடங்கும் அலகுகள்.
கீழ்வாய் இலக்கத்தின் எண்மதிப்புகீழ்வாய் இலக்கத்தின் பெயர்
1/640கீழரை
1/280கீழ்க்கால்
1/2560கீழரைக்கால்
1/5120கீழ் வீசம்
1/102400கீழ் முந்திரி
1/1075200இம்மி
1/23654400மும்மி
1/165580800அணு
1/1490227200குணம்
1/7451136000பந்தம்
1/44706816000பாகம்
1/312947712000விந்தம்
1/5320111104000நாகவிந்தம்
1/74481555456000சிந்தை
1/489631109120000கதிர்முனை
1/9585244364800000குரல்வளைப்படி
1/575114661888000000வெள்ளம்
1/57511466188800000000நுண்மணல்
1/2323824530227200000000தேர்த் துகள்
குறிப்பு
  • இம்மி என்பது மிகச் சிறிதான மத்தங்காய்ப் புல்லரிசி. அது எள் தினை என்பனபோல் சிற்றளவைப் பொருளாயிற்று. சிறுமையை உணர்த்தும் இல் என்னுஞ் சொல்லினின்று, இம்மி யென்னும் பெயர் தோன்றியிருக்கலாம்.[2]

எண் கூற்று வாய்ப்பாடு

1 இம்மி11 மும்மி
11 மும்மி7 அணு
1 அணு9 குணம்
1 குணம்5 பந்தம்
1 பந்தம்6 பாகம்
1 பாகம்7 விந்தம்
7 விந்தம்17 நாகவிந்தம்
1 நாகவிந்தம்60 வெள்ளம்
1 குரல்வளைப்படி60 வெள்ளம்
1 வெள்ளம்100 நுண்மணல்

நிறுத்தலளவை

எடுத்தல் என்பது எடுத்து நிறுத்தல். எடுத்தலளவையில் பொன்னும் மணியும் நிறுக்க ஒன்றும், பிற பொருள்களை நிறுக்க ஒன்றுமாக இருவகையுண்டு. பொன்நிறை யளவைக்குப் பொன்னிலக்கம் என்று பெயர். பொன் ஏராளமா யிருப்பின், அதுவும் பிற பொருள்போல் நிறுக்கப்படும். குன்றிமணி, வராகனெடை, பலம், வீசை, துலாமெனப் படிக்கல் கொண்டு தராசிலிட்டு நிறுப்பது நிறுத்தல் அளவை ஆகும். இந்த எடுத்தலளவை பொன்னளவை,பிற பொருளளவையென இருவகைப்படுகிறது. அரசு முத்திரை இட்ட அளவுக்கல்லானது, குடிஞைக்கல், பாடிக்கல், பண்டாரக்கல் என்னும் பெயர்களுள் ஒன்றாற் குறிக்கப்பட்டது. அதே அளவுக்கல்லானது, நகரங்களில் நகரக்கல் எனப்பட்டது.
நிறுத்தல் அளவுக்கான தராசு ஆறு வகைப்படும்.
  1. மணித்தராசு - இது இரத்தினம் முதலியவற்றை நிறுக்கும் மிகச் சிறிய தராசு
  2. பொன் தராசு - தங்கம் போன்றவைகளை நிறுக்கும் சிறு தராசு
  3. உலோகத் தராசு - செம்பு, பித்தளை முதலியவற்றை நிறுக்கும் பெருந் தராசு
  4. பண்டத் தராசு - பலசரக்குகளை நிறுக்கும் தராசு
  5. கட்டைத் தராசு - விறகு அல்லது மூட்டைகளை நிறுக்கும் தராசு. இது இரு புறமும் சதுர மரப்பலகைகளைத் தட்டுக்களாகக் கொண்டிருக்கும்.
  6. தூக்கு - காய்கறிகளை நிறுக்கும் தராசு. இது மரக்கம்பாலான துலாக் கோலின் ஒரு பக்கத்தில் மட்டும் தொங்கும் கூடைத் தட்டால் ஆனது.

அளவைகள்

  • உளுந்து (grain) - 65 மி. கி.
  • குன்றிமணி - 130 மி. கி.
  • மஞ்சாடி - 260 மி.கி.
  • மாசம் - 780 மி.கி.
  • பனவெடை - 488 மி.கி
  • வராகனெடை - 4.2 கி.
  • கழஞ்சு - 5.1 கி.
  • பலம் - 41 கி. (35 கி.)
  • கஃசு அல்லது கைசா - 10.2 கி.
  • தோலா - 12 கி.
  • ரூபாவெடை - 12 கி.
  • அவுன்ஸ் - 30 கி.
  • சேர் - 280 கி.
  • வீசை - 1.4 கி.கி.
  • தூக்கு - 1.7 கி.கி.
  • துலாம் - 3.5 கி.கி.

பண்டங்கள் நிறுத்தல் வாய்ப்பாடு

பொன் அதிகமாக இருப்பினும், இந்த அளவையே பின்பற்றப்பட்டது.
32 குன்றிமணி1 வராகன்1.067 கிராம்
10 வராகனெடை1 பலம்10.67 கிராம்
8 பலம்1 சேர்85.33 கிராம்
5 சேர்1 வீசை426.67 கிராம்
1000 பலம்1 கா10.67 கிலோகிராம்
6 வீசை1 துலாம்2.560 கிலோகிராம்
8 வீசை1 மணங்கு3.413 கிலோகிராம்
20 மணங்கு1 கண்டி (பாரம்)68.2667 கிலோகிராம்

பொன்னளவை

பொன்னையும்,மணியையும் நிறுக்கப் பயன்படுகிறது. இது 'பொன்னிலக்கம்' எனப்பட்டது.
  • பேரளவான பொன்னை நிறுக்க ஆணிக்கல்லும், மிகப்பேரளவான பொன்னை நிறுக்க, துலாம் கணக்கும் பயன்படுத்தப்பட்டது.

பொன்னிலக்க அலகுகள்

பொன்னிலக்கம் என்பதன் அலகுகள்
  • 4 நெல்லெடை = 1 குன்றிமணி
  • 2 குன்றிமணி = 1 மஞ்சாடி
  • 2 மஞ்சாடி = 1 பணவெடை வல்லம்
  • 5 பணவெடை = 1 கழஞ்சு
  • 10 வல்லம் = ஒரு கழஞ்சு= 16அவுன்சு
  • 8 பணவெடை = 1 வராகனெடை
  • 4 கழஞ்சு = 1 கஃசு
  • 4 கஃசு = 1 பலம்

பொன்நிறுத்தல் வாய்ப்பாடு

1 நெல் (எடை)8.33 மில்லிகிராம்
4 நெல்1 குன்றிமணி33.33 மில்லிகிராம்
2 குன்றிமணி1 மஞ்சாடி66.67 மில்லிகிராம்
2 மஞ்சாடி1 பணம்(பணவெடை)*133.33 மில்லிகிராம்
8 பணம்(பணவெடை)1 வராகன்1.067 கிராம்
5 வராகன்1 கழஞ்சு5.33 கிராம்
4 கழஞ்சு1 கஃசு10.4 கிராம்
4 கஃசு1 பலம்41.6 கிராம்
1.5 கழஞ்சு8 கிராம்

முகத்தலளவை

முகத்தளலவைக் கருவிகளுள் ஒன்றான படிஅல்லது நாழி
பால், மோர், நெய் போன்ற நீரியல் பொருளை உழக்கு படிகளால் மொண்டு எடுத்து அளப்பது முகத்தல் அளவை ஆகும். முகந்து அளக்கப்படும் பொருள்களுள், நெல் பெரும்பான்மையாகவும், சிறந்ததாகவுமிருத்தல் பற்றி, முகத்தலளவைநெல்லிலக்கம் எனப்படும்.

முகத்தலளவை அலகுகள்

  1. 2செவிடு = பிடி
  2. 5செவிடு = 1 ஆழாக்கு
  3. 2ஆழாக்கு = 1 உழக்கு
  4. 2உழக்கு = 1 உரி
  5. 2உரி = 1 நாழி
  6. 8நாழி = 1 குறுணி(மரக்கால்)
  7. 2குறுணி = 1பதக்கு
  8. 2பதக்கு = 1தூணி(காடி)
  9. 3தூணி = 1 கலம்
  10. 400குறுணி = 1 கரிசை (பறை)

தனி முகத்தலளவைகள்

  1. அரசு முத்திரையிட்ட அளவை நாழியும் மரக்காலும், அரச பண்டாரத்தில் அரசன் பெயரினைத் தாங்கியிருந்தன.
(எடுத்துக்காட்டு:சோழாந்தகன் நாழி, அருண்மொழித்தேவன் மரக்கால்)
  1. கோயிற் பண்டாரத்தில் தெய்வப்பெயரினைத் தாங்கியிருந்தன. (எடுத்துக்காட்டு:ஆடவல்லான் மரக்கால்,செப்புக்கால் திருச்சிற்றம்பலமுடையான் மரக்கால்)
  2. ஒவ்வொரு நாட்டிற்கும், சிறப்பான பெருமுகத்தலளவும் உண்டு.
  • 21மரக்கால் = கோட்டை என பாண்டி நாட்டில் அழைக்கப்பட்டது.
  • 40மரக்கால் = புட்டி என வடசோழநாட்டில் அழைக்கப்பட்டது.

பெய்தல் அளவை

நெல் முதலியவற்றை படி, மரக்கால்களில் சொரிந்து அளப்பது பெய்தல் அளவை ஆகும்.
  • 360 நெல் = 1 செவிடு
  • 5 செவிடு = 1 ஆழாக்கு
  • 2 ஆழாக்கு = 1 உழக்கு
  • 2 உழக்கு = 1 உரி
  • 2 உரி = 1 படி
  • 8 படி = 1 மரக்கால்
  • 2 குறுணி = 1 பதக்கு
  • 2 பதக்கு = 1 தூணி
  • 5 மரக்கால் = 1 பறை
  • 80 பறை = 1 கரிசை
  • 48=96 படி = 1 கலம்
  • 120 படி = 1 பொதி
1 படிக்கு
  • அவரை = 1,800
  • மிளகு = 12,800
  • நெல் = 14,400
  • பயறு = 14,800
  • அரிசி = 38,000
  • எள் = 1,15,000

கரண்டி அளவுகள்

1 தேக்கரண்டி - 4 மி.லி
1 குப்பி - 175 தேக்கரண்டி ( 700 மி.லி)
1 தீர்த்தக்கரண்டி - 1.33 மி.லி
1 நெய்க்கரண்டி - தேக்கரண்டி (4.0 மி.லி)
1 உச்சிக்கரண்டி - 4 தேக்கரண்டி (16 மி.லி)
1 மேசைக்கரண்டி - 4 தேக்கரண்டி (16 மி.லி)
1 பாலாடை - 30 மி.லி
1 எண்ணெய்க்கரண்டி - 8 பாலாடை (240 மி.லி)

முகத்தல் (நீர்ம) வாய்ப்பாடு

5 செவிடு = 1 ஆழாக்கு
2 ஆழாக்கு = 1 உழக்கு
2 உழக்கு = 1 உரி
2 உரி = 1 படி
8 படி = 1 குறுணி (மரக்கால்)
2 குறுணி = 1 பதக்கு
2 பதக்கு = 1 தூணி

நீட்டலளவை

விரல், சாண், முழம் என நீளத்தை கை அல்லது கால்களால் அளப்பது நீட்டல் அளவை ஆகும்.நீட்டலளவை வழியளவை, நிலவளவையென இருவகைப் படுகிறது.
  • 10 கோண் = 1 நுண்ணணு
  • 10 நுண்ணணு = 1 அணு
  • 8 அணு = 1 கதிர்த்துகள்
  • 8 கதிர்த்துகள் = 1 துசும்பு
  • 8 துசும்பு = 1 மயிர்நுனி
  • 8 மயிர்நுனி = 1 நுண்மணல்
  • 8 நுண்மணல் = 1 சிறு கடுகு
  • 8 சிறு கடுகு = 1 எள்
  • 8 எள் = 1 நெல்
  • 8 நெல் = 1 விரல்
  • 12 விரல் = 1 சாண்
  • 2 சாண் = 1 முழம்
  • 4 முழம் = 1 பாகம்
  • 6000 பாகம் = 1 காதம் (1200 கஜம்)
  • 4 காதம் = 1 யோசனை

வழியளவை

  1. 8 தோரை(நெல்) = 1 விரல்
  2. 12 விரல் = 1 சாண்
  3. 2 சாண் = 1 முழம்
  4. 4 முழம் = 1 பாகம் அல்லது தண்டம்
  5. 2000 தண்டம் = 1 குரோசம் 21/4மைல்
  6. 4 குரோசம் = 1 யோசனை
  7. 71/2 நாழிகைவழி = 1 காதம்(10மைல்)
  8. 4840 சதுர கெசம் = 1 ஏக்கர்
  9. 436 குழி = 1 ஏக்கர்
  10. 5 பர்லாங்கு = 1 கிலோமீட்டர்
  11. 8 பர்லாங்கு = 1 மைல்

நிலவளவை

இது குழிக்கணக்கு எனப்படும். அவை வருமாறு;-
  1. 16 சாண் = 1 கோல்
  2. 18 கோல் = 1 குழி
  3. 100 குழி = 1 மா
  4. 240 குழி = 1 பாடகம்
  5. 20 மா = 1 வேலி
  6. 1 மரக்கால் வேலைபாடு (நெல் நடவுக்கு தேவையான விதைகள்) - 8 சென்ட்
  7. 12.5 மரக்கால் வேலைபாடு - 100 சென்ட் - 1 ஏக்கர்
  8. 40 மரக்கால் = 1 புட்டி
  9. 1 குழி - 100 சதுர அடி
  10. 1 மா - 100 குழி (10000 சதுர அடி)
  11. 1 காணி - 4 மா (40000 சதுர அடி = 92 சென்ட் = 0.92 ஏக்கர்) - 400 குழி
  12. 1 வேலி - 7 காணி (6.43 ஏக்கர் = 2.6 ஹெக்டர்)
  13. 1 பர்லாங்கு - 220 கெசம் (660 அடி)
  14. 1 நிலம் (ground) - 2400 சதுர அடி - 5.5 சென்ட் - 223 சதுர மீட்டர்
குறிப்பு
  • செய் என்ற ஒரு நில அளவு, சங்க காலத்தில் இருந்தது.
  • நிலவரி முறை - நிலவரியை கணிக்க நிலவளவை நடத்தின அதிகாரி உலகளந்தான் எனப்பட்டான்.
  • அவன் கையாண்ட அளவுகோல், உலகளந்த கோல் எனப்பட்டது.
    • இம்முறை முதலாம் இராசராசன் காலத்தில் ஒரு முறையும்,முதற் குலோத்துங்கன் காலத்தில் ஒருமுறையும், மூன்றாங்குலோத்துங்கன் காலத்தில் ஒரு முறையும் அளக்கப்பட்டது.
  • இறையிறுக்குங்கோல், குடிதாங்கிக் கோல் எனப்படும் அளவைகள், நாட்டின் எல்லை மாறும் போதெல்லாம் அளக்க பயன்பட்டது.
    • நிலங்கள் மிக நுட்பமாக அளக்கப்பட்டன.
எடுத்துக்காட்டு
ஆக இறையிலி நீங்கு நிலம் முக்காலே
இரண்டு மாக்காணி அரைக்காணி
முந்திரிகைக்கீழ் அரையே இரண்டுமா
முக்காணிக் கீழ் முக்காலே நான்குமா
அரைக்காணி முந்திரைக் கீழ்
நான்கு மாவினால்
இறை கட்டின காணிக்கடன்"(சோ.,பக்.58)
- இதில் குறிக்கப்பட்ட நில அளவு 1/52,428,800,000 வேலி.

கால வாய்ப்பாடு / தெறிப்பு அளவை

நொடி, நாழிகை, நாளெனக் காலத்தைக் கணிப்பது தெறிப்பு அளவை ஆகும்.
அளவைஅளவை முறைகுறிப்புகள்
1 குழி(குற்றுழி)கார்த்திகை நாள்மீன் ஒரு முறை மின்னும் நேரம்
10 குழி1 கண்ணிமைகண்ணை இமைக்கும் நேர அளவு
2 கண்ணிமை1 கைந்நொடி[3]கையை நொடிக்கும் நேர அளவு
2 கைந்நொடி1 மாத்திரை[3]
2 மாத்திரை1 குரு[3]
2 குரு1 உயிர்[3]
6 உயிர்1 சணிகம்[3]தற்கால 2 நொடி அளவு
12 சணிகம்1 விநாடி[3]தற்கால 24 நொடி அளவு
60 தற்பரை1 விநாடி
60 விநாடி1 நாழிகை(நாடி)[3]தற்கால 24 நிமிட அளவு
2 சணிகம்1 அணு[சான்று தேவை]
6 கண்ணிமை1 நொடி(சிற்றுழி)ஒரு நீருள்ள பாத்திரத்தில் மூங்கில் குழலால் ஊதும் பொழுது ஏற்படும் குமிழியானது ஒரு சாண் அளவு உயரும் நேரம்[சான்று தேவை]
2 நொடி1 வினாடிஒரு மனிதனின் இதயம் ஒரு முறை துடிக்கும் நேரம்[சான்று தேவை]
5 வினாடி1 அணு[சான்று தேவை]
6 அணு1 துளி(நாழிகை வினாடி)[சான்று தேவை]
15 அணு1 நிமிடம்[சான்று தேவை]
60 அணு1 கணம்[சான்று தேவை]
6 கணம்1 நாழிகை[சான்று தேவை]
15 கணம்1 ஓரை[சான்று தேவை]
2½ நாழிகை1 ஓரை[4]60 நிமிடம்தற்கால ஒரு மணிநேரம்
3¾ நாழிகை1 முகூர்த்தம்[4]1½ ஓரை
7½ நாழிகை1 சாமம்[4]3 ஓரை, 2 முகூர்த்தம்
10 நாழிகை1 சிறும்பொழுது4 ஓரை
4 சாமம்1 பொழுது[4]30 நாழிகை
2 பொழுது1 நாள்(திகதி)[4]60 நாழிகை, 6 சிறும்பொழுதுகதிரவன் உதிக்கும் நேரம் நாளின் தொடக்கமாகக் கொள்ளப்பட்டதுதற்கால 24 மணிநேர அளவு(ஒரு நாள்)
7 நாள்1 கிழமை(வாரம்)[4]கதிரவன் உதிக்கும் நேரத்தின்(ஒரு நாளின் தொடக்கம்) ஓரை(இராசி) ஞாயிறு ஓரை வரும் நாள்(ஞாயிற்றுக்கிழமை) வாரத்தின் தொடக்கமாகக் கொள்ளப்பட்டதுதற்கால ஒரு வாரம்
15 நாள்1 அழுவம்(பக்கம்)[4]
30 நாள்1 திங்கள்(மாதம்)[4]கதிரவன், ஒரு சூரிய மாதத்தின் ஓரைக்குள்(இராசி) நுழையும் நேரம் அம்மாதத்தின் தொடக்கமாகக் கொள்ளப்பட்டதுதற்கால ஒரு மாதம்
48 நாள்1 மண்டலம்
2 திங்கள்1 பெரும்பொழுது60 நாள்
6 திங்கள்1 அயனம்[4]
2 அயனம்1 ஆண்டு(வருடம்)[4]6 பெரும்பொழுதுகதிரவன், சூரிய மாதங்களின்(இராசிச் சக்கரத்தின்) முதல் மாதத்தில்(மேழ ஓரையில்(இராசி)) நுழையும் நாள் ஆண்டின் தொடக்கமாகக் கொள்ளப்பட்டது. இந்நாள், சந்திர மாதத்தில் சித்திரை முதல் நாள் ஆகும்.தற்கால ஒரு ஆண்டு(365 நாள், 15 நாழிகை, 31 விநாடி, 15 தற்பரை)
64(82) ஆண்டு1 வட்டம்
4096(84) ஆண்டு1 ஊழி
-உகம்(யுகம்)
17,28,000(8x2,16,000) ஆண்டுகிரேதாயுகம்[5]
12,96,000(6x2,16,000) ஆண்டுதிரேதாயுகம்[5]
8,64,000(4x2,16,000) ஆண்டுதுவாபரயுகம்[5]
4,32,000(2x2,16,000) ஆண்டுகலியுகம்[5]
4 உகங்கள்(43,20,000 ஆண்டு)1 சதுர்யுகம்(மகாயுகம்)[6]
2000 சதுர்யுகம்1 நான்முகன் பேராயுள்[6]
100 நான்முகன் பேராயுள்1 ஆதிநான்முகன் யுகம்[6]

சிறுபொழுது

  1. காலை - முதல் சிறுபொழுது - 1 சாமம் முதல் 4 சாமம் வரை ( 6 முதல் 10 மணி வரை)
  2. நண்பகல் - இரண்டாம் சிறுபொழுது - 5 சாமம் முதல் 8 சாமம் வரை (10 முதல் 2 மணி வரை)
  3. எற்பாடு - மூன்றாம் சிறுபொழுது - 9 சாமம் முதல் 12 சாமம் வரை (2 முதல் 6 மணி வரை)
  4. மாலை - நான்காம் சிறுபொழுது - 13 சாமம் முதல் 16 சாமம் வரை (6 முதல் 10 மணி வரை)
  5. யாமம் - ஐந்தாம் சிறுபொழுது - 17 சாமம் முதல் 20 சாமம் வரை (10 முதல் 2 மணி வரை)
  6. வைகறை - ஆறாம் சிறுபொழுது - 21 சாமம் முதல் 24 சாமம் வரை (2 முதல் 6 மணி வரை)

பெரும்பொழுது

  1. கார் - ஆவணி, புரட்டாசி
  2. கூதிர் - ஐப்பசி, கார்த்திகை
  3. முன்பனி - மார்கழி, தை
  4. பின்பனி - மாசி, பங்குனி
  5. இளவேனில் - சித்திரை, வைகாசி
  6. முதுவேனில் - ஆனி, ஆடி

சார்த்தல்

சுரம், ஒலி, நிறம், உரு முதலியவற்றைக் கூறி “இப்படி”, “அதைப்போல” என்று ஒப்பிட்டு அளப்பது சார்த்தல் அளவை ஆகும்.

நாணயம்

1 பல் - 0.9 உளுந்து (கிரைன்)
8 பல் - 1 செங்காணி (செப்பு) - 7.2 உளுந்து (கிரைன்)
0.25 செங்காணி - 1 கால் காணி - 1.8 உளுந்து (கிரைன்)
64 பல் - 1 காணப்பொன் (காசுப்பணம் (பொன்)) - 57.6 உளுந்து (கிரைன்)
1 இரோமானிய தினாரியம் 2 காணப்பொன்னுக்கும், 1 செங்காணிக்கு கொடுத்து வர்த்தகம் செய்யப்பட்டது - 124 உளுந்து (கிரைன்)
12 பை - 1 அணா
16 அணா - 1 ரூபாய்

பிற்கால நாணய அளவை

1 அணா - 3 துட்டு
1/4 அணா - 3/4 துட்டு
4 அணா - 25 பைசா
8 அணா - 50 பைசா பணம் - வெள்ளிக்காசு துட்டு - செப்புக்காசு

Power of Attorney என்பது என்ன? அது எதற்கெல்லாம் உதவும்?

ஒருவர் தம்முடைய சொத்தை விற்பதற்கு சார்பதிவாளர் அலுவலகத்திற்குச் சென்று கிரயப் பத்திரத்தில் கையொப்பமிட வேண்டும். தன்னுடைய நிலத்தை வீட்டுமனைகளாக பிரித்து விற்பனை செய்ய அரசாங்கத்தின் பல துறைகளில் ஒப்புதல் பெறவேண்டும்.சில சமயம் அரசாங்க அலுவலகத்திற்கு நேரில் செல்ல வேண்டிய அவசியம் ஏற்படும். அரசாங்கத்தில் அங்கீகாரம் பெற்றபின் ஒவ்வொரு வீட்டு மனையை விற்கும் போதும் நில உரிமையாளர் சார்பதிவாளர் அலுவலகம் செல்லவேண்டும்.அதையெல்லாம் நிலத்தின் உரிமையாளர் செய்ய முடியாத நிலையில் மேற்கண்ட வேலைகளைச் செய்வதற்கு தனது சார்பாக ஒருவரை நியமனம் செய்யலாம். அவரை நியமனம் செய்வதற்கு சார்பதிவாளர் அலுவலகத்தில் (உப பதிவு அலுவலகம்) அதிகார பத்திரம் (அட்டர்னி பவர்) பதிவு செய்ய வேண்டும். அதில் தம்மால் நியமிக்கப்படுபவருக்கு எதற்கெல்லாம் அதிகாரம் (பவர்) கொடுக்கப்படுகிறது என விபரங்கள் இருக்கும்.

அட்டர்னி பவர் எதற்கெல்லாம் உதவும்:
1. சொத்துகளை தனது பெயரில் வேறொருவர் மூலமாக வாங்கலாம்.
2. வெளி நாட்டில் அல்லது வெளியூர்களில் தங்கி வேலை பார்க்கும் போது தன்னுடைய (விஜயம்) இல்லாமல் இந்த ஆவணங்கள் மூலம் சொத்துகளை வாங்கலாம் அதை கிரையம் செய்து கொள்ளலாம்.
3. சொத்து வாங்க அக்ரிமண்ட் தனது பெயரில் எற்படுத்திக் கொள்ளலாம்.
இந்த ஆவணக்களுக்கு காலவாதி ஆகாது.
4. எழுதி கொடுக்கும் நபர் உயிரோடு இருக்கும் வரை இந்த ஆவணங்கள் செல்லத்தக்கது.

அட்டர்னி பவர் இரண்டு வகைப்படும்:
1. பொது அதிகார பத்திரம் (அட்டர்னி ஜெனரல் பவர்)
2. தனி அதிகார பத்திரம் (வழக்கறிஞர் சிறப்பு பவர்)

1. பொது அதிகார பத்திரம் (அட்டர்னி ஜெனரல் பவர்)
வழக்கறிஞர் இதில் பவர் யாக நியமிக்கப்படுபவருக்கு சொத்தை விற்க, நிலமாக இருந்தால் மனைப்பிரிவுகளாக பிரிக்க மற்றும் அரசு அலுவலகங்களில் சொத்துதொடர்பான ஆவணங்களில் கையொப்பம் இட முதலிய அனைத்து அதிகாரங்களும் வழங்கப்படும்.

2. தனி அதிகார பத்திரம் (வழக்கறிஞர் சிறப்பு பவர்)
இதில் ஒரு குறிப்பிட்ட செயலை செய்வதற்கு மட்டும் அதிகாரம் வழங்கப்படும் (எ.கா) சொத்தை விற்க அல்லது மனைப் பிரிவுகளாக பிரிக்க மட்டும் என்பது போன்ற செயல்கள். மேற்கண்ட செயலைத் தவிர வேறு எதையும் அவரால் செய்யமுடியாது.

மேற்கண்ட இரண்டிலுமே நீங்கள் வாங்க நினைக்கும் சொத்து எந்த சார் பதிவாளர் அலுவலகத்தில் (உப பதிவு அலுவலகம்) பதிவு செய்யப்பட்டிருக்கிறதோ அங்குதான் செயலுரிமை பதிவு செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை. தமிழகத்தில் எந்த சார்பதிவாளர் அலுவலகத்திலும் பதிவு செய்யலாம். அதனால் வில்லங்க சான்றிதழில் (இசி-வில்லங்கம் சான்றிதழ் எனப்படும் வில்லங்கச்சான்றிதழ்) இந்த விவரம் (நுழைவு) இருக்காது. இப்படி EC- ல் நுழைவு வராத காரணத்தினால் சட்டமா -யிடம் சொத்து வாங்குபவரால் அது ரத்து செய்யப் பட்டிருக்கிறதா பவர்? என்ற விவரத்தை தெரிந்து கொள்ளமுடிவதில்லை. அதற்கு என்ன செய்ய வேண்டும்?

பதிவு செய்யப்பட்டிருக்கிறதோ அங்கு நகல் (ஆவண நகல்) விண்ணப்பம் செய்து பெறவேண்டும் வழக்கறிஞர் Attorney- ஆக இருந்தால் எந்த சார்பதிவாளர் அலுவலகத்தில் பவர் 1.நாம் சொத்து வாங்கும் போது நமக்கு அந்த சொத்தை விற்பனை செய்பவர் பவர். வழக்கறிஞர் அதில் இந்த பவர் ரத்து செய்யப்பட்டிருந்தால் அதனுடைய விவரம் குறிக்கப்பட்டிருக்கும். இருவரில் ஒருவர் தான் விண்ணப்பம் செய்ய முடியும் வழக்கறிஞர் நகல் பெறுவதற்கு சொத்தின் உரிமையாளர் அல்லது பவர்.

ரத்து செய்யப்பட்டிருக்கிறதா என உறுதி செய்து கொள்வது மிகவும் நல்லது வழக்கறிஞர் 2.சொத்தின் உரிமையாளரிடம் நேரிடையாக பேசி பவர். உரிமையாளரிடம் பேசாமல் எந்த ஒப்பந்தமும் Attorney- யிடம்செய்யக்கூடாது பவர்.
பதிவு செய்யும் புதிய முறை அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டது வழக்கறிஞர் 01.11.2009 -லிருந்து பவர். வழக்கறிஞர் அதன்படி பவர் தமிழகத்தில் எந்த சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டிருந்தாலும் அதன் விவரம் முழுவதும் எந்த சார் பதிவாளர் அலுவலகத்தில் (உப பதிவு அலுவலகம்) பதிவு செய்யப்பட்டிருக்கிறதோ அந்த சார்பதிவாளருக்கு அனுப்பப்பட வேண்டும். இது பல மோசடிகளை தவிர்க்க உதவும். ஏனென்றால் இதன் விவரம் EC- ல் வந்து விடும்.



Power of Attorney எழுத தேவையான ஆவணங்கள்:
பவர் எழுதி கொடுப்பவர்
பவர் ஏஜன்ட் ( எழுதி வாங்குபவர் )
1. புகைப்பட அடையாள அட்டை (Photo Identity proof)
1. புகைப்பட அடையாள அட்டை (Photo Identity proof)
2. இருப்பிட சான்று (Residence Proof)
2. இருப்பிட சான்று (Residence Proof)
3. பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் 2 மட்டும்
3. பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் 1 மட்டும்
4. ரூபாய் 20க்கான முத்திரைதாள் (பத்திரம்)
4. இரு அத்தாட்சி (Two witness)

பதிவு செய்யப்படாத அடமானம் மற்றும் கிரைய ஒப்பந்தம் போன்றவை EC-ல் வராத பட்சத்தில் நாம் எப்படி அதை 


ஒருவர் சொத்தை அடமானம் செய்யும் போது அது பதிவு செய்யப்படாவிட்டாலும் சொத்தின் அசல் பத்திரத்தை அடமானம் பெற்றவர் வாங்கி வைத்துக்கொள்வார். அதனால் ஒரு சொத்தை நாம் கிரைய ஒப்பந்தம் செய்யும் போது ஜெராக்ஸ் copy- யை வைத்து நாம் மற்ற விவரங்களை உறுதி செய்து கொண்டாலும் அசல் பத்திரத்தை பார்த்த பிறகு தான் கிரைய ஒப்பந்தமே செய்ய வேண்டும். அது மிக முக்கியம். ஆனால் ஏற்கனவே ஒருவரிடம் சொத்தின் உரிமையாளர் கிரைய ஒப்பந்தம் செய்து இருக்கிறாரா என்பதை தெரிந்து கொள்வது அரிது. ஏனெனில் பொதுவாக கிரைய ஒப்பந்தம் செய்பவரிடம் பத்திரத்தை சொத்தின் உரிமையாளர் கொடுக்கத் தேவையில்லை அசல்.

மேலும் சொத்து சம்பந்தமான பதிவு செய்யப்படாத அடமானம், மற்றும் பதிவுசெய்யப்படாத எந்த நடவடிக்கைகளும் செல்லு படியாகாது என சட்டம் இருந்தால் இது போன்ற மோசடிகள் நடக்காது. சொத்து சம்பந்தமான எல்லா நடவடிக்கைகளுமே பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட வேண்டும். ஏனென்றால் பதிவு செய்யப்படும் எல்லா விவரங்களுமே EC- ல் வந்து விடுவதால் சொத்து அடமானத்தில் உள்ளதா அல்லது வேறு ஒருவரிடத்தில் கிரைய ஒப்பந்தம் செய்யப்பட்டிருகிறதா என நாம்தெளிவாக அறிந்து கொள்ள முடியும்.

நில அளவீடுகள்

நீட்டலளவை


•             10 கோண் = 1 நுண்ணணு
•             10 நுண்ணணு = 1 அணு
•             8 அணு = 1 கதிர்த்துகள்
•             8 கதிர்த்துகள் = 1 துசும்பு
•             8 துசும்பு = 1 மயிர்நுனி
•             8 மயிர்நுனி = 1 நுண்மணல்
•             8 நுண்மணல் = 1 சிறு கடுகு
•             8 சிறு கடுகு = 1 எள்
•             8 எள் = 1 நெல்
•             8 நெல் = 1 விரல்
•             12 விரல் = 1 சாண்
•             2 சாண் = 1 முழம்
•             4 முழம் = 1 பாகம்
•             6000 பாகம் = 1 காதம் (1200 கஜம்)
•             4 காதம் = 1 யோசனை
•             வழியளவை
•             8 தோரை(நெல்) = 1 விரல்
•             12 விரல் = 1 சாண்
•             2 சாண் = 1 முழம்
•             4 முழம் = 1 பாகம் அல்லது தண்டம்
•             2000 தண்டம் = 1 குரோசம் 21/4மைல்
•             4 குரோசம் = 1 யோசனை
•             71/2 நாழிகைவழி = 1 காதம்(10மைல்)

நிலவளவை குழிக்கணக்கு வருமாறு

                16 சாண் = 1 கோல்
                18 கோல் = 1 குழி
                100 குழி = 1 மா
                240 குழி = 1 பாடகம்


கன்வெர்ஷன்

1 சதுர அங்குலம் = 6.4516 சதுர செண்டிமீட்டர்
1 சதுர அடி = 0.09290304 சதுர மீட்டர்
1 சதுர கெஜம் = 0.83612736 சதுர மீட்டர்
1 சதுர மைல் = 2.589988110336 சதுர கிலோமீட்டர்
பிற அலகுகள்1

 ஏர் = 100 சதுர மீட்டர்
1 ஹெக்டேர் = 100 ஏர் = 10,000 சதுர மீட்டர் = 0.01 சதுர கிலோமீட்டர்
தற்பொழுது ஏர் அதிகமாகப் பயன்பாட்டில் இல்லை என்றாலும் ஹெக்டேர் இன்றும் நிலங்களை அளக்கும்போது பயன்படுத்தப்படுகிறது.
நிலங்களை அளக்கும்போது பொதுவாகப் பயன்படுத்தப்படும் அலகு ஏக்கர் ஆகும்.
1 ஏக்கர் = 4,840 சதுர கெஜம் = 43,560 சதுர அடி = 4046.8564224 சதுர மீட்டர்

1 சதுர மைல் = 640 ஏக்கர் = 2.5899881103 சதுர கிலோ மீட்டர்



  • 1 சென்ட் – 40.47 சதுர மீட்ட‍ர்
  • 1 ஏக்க‍ர் – 43,560 சதுர அடி
  • 1 ஏக்க‍ர் – 40.47 ஏர்ஸ்
  • 1 ஹெக்டேர் – 10,000 சதுர அடி
  • 1 சென்ட் – 435.6 சதுர அடி
  • 1 ஏர்ஸ் – 100 சதுர மீட்ட‍ர்
  • 1 குழி – 144 சதுர அடி
  • 1 சென்ட் – 3 குழி
  • 3 மா – 1 ஏக்க‍ர்
  • 3 குழி – 435.6 சதுர அடி
  • 1 மா – 100 குழி



ஏக்கர்

1 ஏக்கர் – 100 சென்ட்
1 ஏக்கர் – 0.404694 ஹெக்டேர்
1 ஏக்கர் – 40.5 ஏர்ஸ்
1 ஏக்கர் – 43560 ச.அடி
1 ஏக்கர் – 4046 ச மீ

செண்ட்

1 செண்ட் – 001 ஏக்கர்
1 செண்ட் – 0040 ஹெக்டேர்
1 செண்ட் – 0.405 ஏர்ஸ்
1 செண்ட் – 435.54 ச.அடி
1 செண்ட் – 40.46 ச மீ

ஹெக்டேர்

1 ஹெக்டேர் – 2.47 ஏக்கர்
1 ஹெக்டேர் – 247 செண்ட்
1 ஹெக்டேர் – 100 ஏர்ஸ்
1 ஹெக்டேர் – 107637.8 ச.அடி
1 ஹெக்டேர் – 10,000 ச மீ

ஏர்ஸ்

1 ஏர் – 2.47 செண்ட்
1 ஏர் – 100 ச.மீ
ஏர் – 1076 ச.அடி

100 குழி     = ஒரு மா
20 மா        = ஒரு வேலி
3.5 மா       = ஒரு ஏக்கர்
6.17 ஏக்கர்  ஒரு வேலி

1 ஏக்கரின் நீளம்        1 பர்லாங், 40 கம்பங்கள்அல்லது 220 கெஜம்
1 ஏக்கரின் அகலம்     1 சங்கிலி, 4 கம்பங்கள்அல்லது 22 கெஜம்
            

Google தேடலை விரைவாக மேற்கொள்ள சில குறுக்கு வழிகள்

கம்ப்யூட்டரைப் பயன்படுத்தும் ஒவ்வொரு முறையும், நாம் கூகுள் தேடல் சாதனத்தைப் பயன்படுத்தாமல் இருப்பதில்லை. இணையத்தில் நமக்கு வேண்டிய தகவல்களைத் தேடிப் பெறுவதில், கூகுள் நமக்கு பெரும் உதவி செய்கிறது. இந்தத் தேடலை இன்னும் விரைவாக மேற்கொள்ள கூகுள் சில குறுக்கு வழிகளை நமக்குத் தந்துள்ளது. அவற்றில் சிலவற்றை இங்கு பார்க்கலாம்.
 

இணைய தளம் கட்டளை (The site: command): 


இந்த ஆப்பரேட்டர் மூலம், நாம் நமக்குத் தேவையான தகவல்களை, ஒரே ஒரு தளத்தில் மட்டும் தேடும்படி செய்திடலாம். எடுத்துக் காட்டாக, sholavandansethu இணைய தளத்தில் மட்டும் sholavandan  என்ற சொல்லைத் தேடுவதாக இருந்தால், sholavandan site www.sholavandansethu.blogspot.in/ எனக் கொடுக்க வேண்டும். இந்த கட்டளையானது, sholavandansethu இணைய தளத்தில் மட்டும், sholavandan என்ற சொல் உள்ள பக்கங்களைத் தேடித்தருமாறு கேட்கிறோம். இதனால், மற்ற இணையதளங்களில் இந்த சொல் பயன்பாடு உள்ளதா என்ற தேடல் மேற்கொள்ளப்பட மாட்டாது.


குறிப்பிட்ட வகை தளங்களில் மட்டும் தேடல் (inurl:command):


 இந்த ஆப்பரேட்டர் கட்டளை மூலம், நாம் தேடிப் பெற விரும்பும் தேடலை, குறிப்பிட்ட வகை தளங்களில் மட்டும் தேடும்படி அமைக்கிறோம். எடுத்துக் காட்டாக computer resources என்ற சொற்கள் சார்ந்த தகவல்களை, கல்விக்கென உள்ள தளங்களில் மட்டும் தேடிப் பெற வேண்டும் என விரும்பினால், computer resources inurl:edu என்று கொடுக்க வேண்டும்.
 

விளக்கம் வேண்டும் தேடல் (define: “word”):


 தேடல் கட்டத்திலேயே நாம் சிலவற்றிற்கான விளக்கம் மற்றும் விரிவான குறிப்புகளைத் தேடிப் பெறலாம். ஒரு சொல் துல்லியமாக என்ன பொருளைக் கொண்டுள்ளது என்று நீங்கள் தெரிந்து கொள்ள இந்தக் கட்டளையைப் பயன்படுத்தலாம். எடுத்துக் காட்டாக, super computer என்பதற்கான விளக்கம் தேவை எனில், define: super computer என்ற கட்டளையைக் கொடுக்கலாம்.
 

குறிப்பிட்ட சொல் உள்ள டெக்ஸ்ட் பக்கம் மட்டும் தேடிப் பெற (intext command):


 இந்த ஆப்பரேட்டர் கட்டளை மூலம், ஒரு குறிப்பிட்ட பொருள் குறித்துத் தேடுகையில், குறிப்பிட்ட சொல் பயன்படுத்தப் பட்டுள்ள இணையப் பக்கங்களை மட்டும் தேடிக் காட்டச் செய்கிறது. எடுத்துக் காட்டாக, soup recipes என்பது குறித்த தகவல்களைத் தேடிப் பெறுகையில், நமக்கு 'chicken' என்ற சொல் பயன்படுத்தப்படும் தளங்கள் மட்டும் தேடிப் பெற, soup recipes intext:chicken என்று கட்டளை கொடுக்க வேண்டும். கூகுள், chicken என்ற சொல் உள்ள, soup recipes குறித்த இணையப் பக்கங்களை மட்டும் காட்டும்.
 

'convert' கட்டளை: 


இது ஒரு ஆப்பரேட்டர் இல்லை; டூல் என்று சொல்லலாம். இது பன்னாட்டு பண மதிப்பைக் கையாள்கிறது. இந்திய ரூபாய் மதிப்பிற்கு அமெரிக்க டாலர் எவ்வளவு? என்ற வினாவிற்கு, அன்றைய பன்னாட்டளவிலான மதிப்பில் டாலர் மதிப்பைக் காட்டும். இதே போல எந்த நாட்டு கரன்சிக்கும் பெறலாம். எடுத்துக் காட்டாக, convert 100 INR to usd என்ற கட்டளைக்கு ரூ.100க்கு இணையான அமெரிக்க டாலர் எவ்வளவு என்று காட்டப்படும். 


மேலே காட்டப்பட்டுள்ள குறுக்கு வழிகள், நம் தேடலை விரைவாகவும் எளிதாகவும் மேற்கொள்ள வழி தருகின்றன. இதே போல பல குறுக்கு வழிகள் உள்ளன. இவற்றை அறிந்து நாம் தேவைப்படும்போது பயன்படுத்தலாம்.