Tuesday – செவ்வாய்க்கிழமை

செவ்வாய்க்கிழமை செய்யக்கூடாதது 

செவ்வாய்க்கிழமை முடி வெட்டவோ, ஷேவிங்கோ, நகம் வெட்டவோ செய்தல் வீட்டில் உள்ள பாட்டி அல்லது அம்மா,  இந்நாளில் செய்வது நல்லதல்ல என்றும் சொல்வார்கள். ஆனால் நாம்  அது வெறும் மூட நம்பிக்கை என்று என்று கூறி, அவர்களை மதிக்காமல் அந்த காரியங்களை செய்வோம். இருப்பினும், பழங்காலம் முதலாக பின்பற்றப்பட்டு வரும் இப்பழக்கத்திற்கு பின்னால் உள்ள காரணத்தை பார்ப்போம்.  
செவ்வாய்க்கிழமை துர்க்கை மற்றும் லட்சுமி தினம்
இந்தியாவின் பல பகுதிகளில் செவ்வாய்க்கிழமை புனித நாளாகக் கருதப்படுகிறது. ஏனெனில் செவ்வாய்க்கிழமையானது துர்க்கை அம்மன் மற்றும் லட்சுமிக்கு உரிய நாளாக கருதப்படுகிறது.
செலவு மற்றும் வீட்டை சுத்தம் செய்தல் கூடாது
செல்வத்தை வாரி வழங்கும் லட்சுமிக்கு உரிய நாள் செவ்வாய்க்கிழமை, இந்நாளில் லட்சுமி நம்மை தேடி வருவாள் என்பதால், இந்நாளில் நம்மிடம் உள்ள பணத்தை மற்றவருக்கு கொடுத்தால், லட்சுமி கடாட்சம் நம்மை விட்டு சென்றுவிடும் என்ற நம்பிக்கையை மக்கள் கொண்டுள்ளனர். இதனால் பலரும் இந்நாளில் பண வரவை எதிர்பார்ப்பதோடு, பணத்தை செலவிடமாட்டார்கள்.
இந்நாளில் வீட்டை தண்ணீர் ஊற்றி கழுவிடவோ அல்லது வீட்டில் உள்ள பொருட்களை தூக்கி எறியவோ மாட்டார்கள். இப்படி செய்வதால், வீட்டில் குடி கொண்டுள்ள லட்சுமி நம் வீட்டை விட்டு சென்று விடுவாள் என்ற நம்பிக்கை தான் முக்கிய காரணம்.
உடல் சுத்தம் கூடாது 
உடல் சுத்தம் என்றால் குளிக்கக்கூடாது என்று அர்த்தம் இல்லை, முடி வெட்டுதல்,   ஷேவிங் செய்தல்.  நகம் வெட்டுதல் போன்ற செயல்களைக் குறிக்கும்.  
ஜோதிடத்தின் படி
ஜோதிட சாஸ்திரம் இச்செயல்களை ஒருவர் மேற்கொண்டால், அவரது வாழ்நாளில் 8 மாதங்கள் குறைவதாக சொல்கிறது.  செவ்வாய்க்கிழமையில் செவ்வாய் பகவான் நம்மை ஆட்கொள்கிறாராம், மேலும் மனித உடலில், செவ்வாய் இரத்தத்தில் குடியிருக்கிறார். இரத்தத்தில் இருந்து தான் முடி வளர்கிறது. எனவே செவ்வாய் கிழமைகளில் முடியை வெட்டினால், இரத்தம் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு உள்ளாகக்கூடும்.
செவ்வாய் கிரகத்தின் எதிர்மறை விளைவுகள்
முடியின் நிறம் கருப்பு. நம் உடலின் முடியை சனி நிர்வகிக்கிறது. செவ்வாய் கிழமைகளில் செவ்வாய் நம்மை ஆளுகிறது, ஆனால் சனி பகவான் தான் செவ்வாயின் தாக்கத்தில் இருந்து நம்மை பாதுகாக்கிறது. அதனால் செவ்வாய்க்கிழமைகளில் முடியை வெட்டினால், சனி கிரகத்தின் சக்தி குறைந்து,  செவ்வாயின் எதிர்மறை விளைவுகளுக்கு உள்ளாகக்கூடும். எனவே தான் செவ்வாய் கிழமைகளில் மேற்கூறிய செயல்களை செய்ய வேண்டாம் என்று சொல்கிறார்கள்.
இதுப் பற்றி எந்த ஒரு ஆராய்ச்சியிலும் நிரூபிக்கப்படாவிட்டாலும், நம் முன்னோர்கள் அவர்களுக்கு கிடைத்த தகவலின் படி,  இதை நம்பி பின்பற்றி வந்தார்கள். நாமும் அறிவியல் பூர்வமாக சிந்தித்து இரத்தம் சம்பந்தப்பட்ட நோய் ஏற்படாமல் இருக்க பின்பற்றலாம் .
வாழ்க வளமுடன் 

Why so Many Gods in the Hindu Dharma – இந்து தர்மத்தில் மட்டும் ஏன் இத்தனை தெய்வங்கள்?

இந்து தர்மத்தில் மட்டும் ஏன் இத்தனை தெய்வங்கள்?

கடவுளை வணங்குவதற்கு நமக்கு விருப்பமான எந்த ரூபத்தையும் நாமே தேர்ந்தெடுத்துக் கொள்ள இந்து தர்மத்தில் மட்டுமே சுதந்திரம் கொடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறான சுதந்திரம் வேறெந்த மதத்திலும் கொடுக்கப்படவில்லை என்பதை நாம் கவனிக்க வேண்டும். இதற்கு, காரணம் என்ன? விளக்கமாக பார்க்கலாம்.
நமக்குள் இருக்கும் பல குணங்கள்
ஒரு மூளை ஒரு உடல் மட்டுமே கொண்ட நமக்கு எத்தனை குணங்கள். நாமே ஒருவருக்கு நல்லவராகவும் ஒருவருக்கு கெட்டவராகவும் தெரிகிறோம்.  நமக்குள்ளே எத்தனை உணர்வுகள் பாசம், கோபம், அமைதி, காதல் மற்றும் காமம் என்று பல ரூபங்களை எடுக்கிறோம்.  வீட்டில் உள்ளவர்களிடம் பாசத்துடன் பழகும் நாம் அலுவலகத்தில் மேலதிகாரியுடன் பழகும் போது பயத்துடன் பழகுகிறோம். இப்படி நாம் ஒருவரே வெவ்வேறான நபராக நம்மை வெளிப்படுத்திக்கொள்ளும் போது.  இந்த பிரபஞ்சத்தின் ஒட்டு மொத்த சக்தியான கடவுளுக்கு மட்டும் பல உருவங்கள் இருப்பதில் தப்பு இல்லை, மேலும் நாம் இந்த பல உருவ வழிபாட்டில் உள்ள மனோவியல் ரீதியான உண்மைகளைப் புரிந்து கொள்ள வேண்டும்.
கடவுளை தேர்வு செய்தல்
ஒவ்வொரு மனிதரும் அவரவர் குணங்களுக்கு ஏற்பவே நண்பர்களையே தேர்ந்தெடுப்பார்கள். அப்படியிருக்க தாங்கள் வணங்கும் கடவுளும் தங்களுக்கு பிடித்த மாதிரியான குணாதிசய‌ங்களுடன் இருக்க வேண்டும் என்று விரும்புவது இயல்பானதே. தம்மை வழிநடத்தும் கடவுள் எப்படி இருக்க வேண்டும் என்ற ஒவ்வொருவரின் கற்பனையே அவன் விரும்பும் கடவுளாகவும் மாறுகிறது. எப்படி என்றால்,
  • அமைதியான, அன்பான‌ அதே நேரம் வீரமுள்ள கடவுளை வழிபட வேண்டுவோர் இராமரையும், 
  • எந்த துன்பத்திலுருந்தும் தம்மைக் காக்கும் சூத்திரதாரி வேண்டுவோர் கிருஷ்ணரையும்,
  • பயந்த சுபாவம் கொண்டவர்கள் பயங்கர ஆயுதங்கள் கொண்ட‌ கடவுளை காக்கும் தெய்வங்களாகவும், 
  • அதிக கோபம் மற்றும் சமூக அக்கிரமங்களை கொடூரமாக அழிப்பதே சரி என்று மனோவியல் ரீதியாக எண்ணுபவர்கள் பத்திரகாளி போன்ற ரத்த மயமான தெய்வங்களையும், 
  • கடவுளை தாயாக பாவிக்க நினைப்பவர்கள் மீனாட்சி , காமட்சி , மாரியம்மன் என்ற பெண் தெய்வங்களையும்
  • சிலர் இயற்கையின் மீதும் வினோத படைப்புக்கள் மீதும் ஈர்க்கப்பட்டால் அவர்கள் மனித உருவும் விலங்கு உருவும் கொண்ட வித்தியாசமான தெய்வங்களான பிள்ளையார், அனுமார் போன்ற கடவுளை தேர்ந்தெடுப்பர்.
பக்திக்கு
நாம் பக்தி செலுத்தவும் தியானிக்கவும் ஒரு உருவம் தேவை. ஒரே உருவத்தின் மீது எல்லோருக்கும் ஈர்ப்பு ஏற்படுவது நடைமுறைக்கு ஒத்து வராது. எனவே ஒரு உருவத்தை மனக்கண் முன்னே நிறுத்தி தியானிப்பதற்கும், பக்தியை மனதில் இருத்தி ஒரு நிலைப்படுத்தி அமைதிபடுத்த நமக்கு பிடித்தமான ஒரு உருவம் தேவை. அதை தேர்ந்தெடுக்கும் உரிமை இந்து தர்மத்தில் உள்ளது. மேலும்,  இந்து தர்மத்தில் உள்ள ஒருவர் ஒரு உருவ வழிபாட்டின்  மீது நம்பிக்கை போனால் கூட அவன் இன்னொரு உருவ வழிபாட்டை தேர்ந்தெடுத்துக் கொள்வான். அவனது நம்பிக்கை உருவத்தின் மீது தான் இல்லாமல் போகுமே ஒழிய அவன் பின்பற்றும் தர்மத்தின் மீது நம்பிக்கை போகாது. இதுவே இந்து தர்மத்தின் சூட்சுமம்.  இந்து தர்மம் என்பது மனோவியலும் அறிவியலும் ஆகும்.
கடவுளை உறவுமுறை, முன்னேற்றம்  மற்றும் தொழில்ரீதியாக கும்பிடும் பழக்கம் இந்து  மதத்தில் மட்டும் தான்
  • தாயாக – அம்மன்
  • தந்தையாக – சிவன்
  • நண்பனாக – பிள்ளையார், கிருஷ்ணன் 
  • குருவாக – தட்சிணாமூர்த்தி  
  • படிப்புக்காக – சரஸ்வதி
  • செல்வமகளாக – லக்ஷ்மி 
  • செல்வமகனாக – குபேரன் 
  • மழையாக – வருணன்  
  • நெருப்பாக – அக்னி 
  • அறிவுக்கு, தமிழ் மொழிக்கு – முருகன்  
  • வழிகாட்டியாக – பார்த்தசாரதி 
  • உயிர் மூச்சாக – வாயு 
  • காதலாக – மன்மதன் 
  • மருத்துவனாக – தன்வந்திரி 
  • வீரத்திற்கு – மலைமகள் 
  • ஆய கலைக்கு – மயன் 
  • கோபத்திற்கு – சிவன்
  • ஊர்க்காவலுக்கு – ஐயனார் 
  • வீட்டு காவலுக்கு – பைரவர் 
  • பாலுக்கு – காமதேனு 
  • கற்புக்கு – சீதை 
  • நன் நடத்தைகளுக்கு – ராமன் 
  • பக்திக்கு – அனுமன் 
  • குறைகளை கொட்ட – வெங்கடசலபதி
  • வாஸ்துக்கு – வாஸ்து புருஷன் 
  • கூப்பிட்ட குரலுக்கு – சக்கரத்தாழ்வார், மாயக் கிருஷ்ணன்
  • போர்ப்படைகளுக்கு – வீரபாகு 
  • பரதத்திற்கு – நடராஜன் 
  • தாய்மைக்கு – அம்பிகை 
  • அன்னத்திற்கு – அன்னபூரணி
  • மரணத்திற்கு – யமன் 
  • பிறப்பிற்கு – பிரம்மன் 
  • சுகப் பிரசவத்திற்கு – கர்ப்பரட்சாம்பிகை
இது உதாரணம் தான் இன்னும் நிறைய உள்ளது.  எனக்கு தெரிந்ததை சேர்த்து இருக்கிறேன். 

பொட்டு வைப்பது ஏன் ?

பெண் குழந்தைகளை குழந்தை பருவத்திலிருந்து நெற்றியில் பொட்டு வைத்துக் கொள்ள வீட்டில் உள்ள பெரியோர்கள் வலியுறுத்துவர்கள், ஆண் குழந்தையாக இருப்பின் குறிப்பிட்ட வயது வரை நெற்றியில் பொட்டு வைப்பார்கள் பின்னர் விபூதி அல்லது குங்குமம், சந்தானம் வைக்கச் சொல்வார்கள்.  ஆனால் அதனால் என்ன வந்து விட போகிறது என பலர்  கேட்பார்கள்.  ஆனால் இதனை ஏன் செய்ய வேண்டும் என்பதற்கு விஞ்ஞான பூர்வமான சான்றையும் காரணங்களையும் அவர்கள் தெரிந்துக்கொள்ள வேண்டும். 
நெற்றியில் பொட்டு வைக்க ஏற்ற இடம் 
பொதுவாக நெற்றியில் பொட்டை இரண்டு புருவங்களுக்கு மத்தியில் வைக்க வேண்டும்.  சிலர் அதனை சற்று மேல் உயர்த்தி வைக்க விரும்புவார்கள். சிறிது இடம் மாறுவதால் அதற்கான பலன் மாற போவதில்லை. 
ஒருமுகப்படுத்தலின் மையம்
நம் நெற்றியில், இரண்டு புருவங்களுக்கு மத்தியில் தான் நம் உடலில் உள்ள முக்கிய நரம்புகள் சந்திக்கின்றன. இது போக இந்த புள்ளி ஆறாம் நிலையாக கருதப்படும் முக்கியமான சக்கரமாகும். ‘ஆக்னா சக்கரம்’ என அழைப்படும் இந்த சக்கரம் தான் விழிப்புணர்வு புள்ளியை குறிப்பிடும். மேலும் இது மூன்றாவது கண்ணின் நிலையை குறிக்கும்.
இந்த புள்ளி ஊக்கவிக்கப்படும் போது, ஒருவருக்கு பல வழிகளில் அது உதவிடும். மனதை அமைதியாக்குதல், பதற்றத்தை குறைத்தல் போன்றவைகள் அதில் சில. மேலும் ஒருவருக்கு இரண்டு கண்களால் பார்க்க முடியாத சில விஷயங்களை இந்த புள்ளியின் மூலமாக பார்க்க உதவும் என்றும் நம்பப்படுகிறது. இதனால் ஏற்படும் ஆன்மீக பயன்களை தவிர இதில் பல உடல்நல பயன்களும் அடங்கியுள்ளது.
தலைவலியை நீக்கும்
அக்குப்பிரஷர் நெறிமுறைகள் படி, உடலில் உள்ள இந்த புள்ளி மூலம் தலைவலிக்கு உடனடி தீர்வு கிடைக்குமாம். காரணம் இந்த புள்ளியின் மூலம் நரம்புகள் மற்றும் இரத்த குழாய்கள் ஊக்குவிக்கப்படும். தலைவலியை நீக்க இயற்கையான சிகிச்சையாகவும் உள்ளது.
சைனஸ் பிரச்சனையை நீக்கும்
பொட்டு வைக்கும் போது நெற்றிப்புள்ளியை அழுத்தும் போது, மூக்கு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிக்கு செல்லும் முக்கிளை நரம்பின் (முகத்திற்கு செல்லும் நரம்பியல்கள்) ஒரு குறிப்பிட்ட கிளை (முதுகெலும்பு நரம்பு, நெற்றிப் பொட்டுகள் சம்பந்தப்பட்ட மற்றும் அக்குள் நரம்பு) ஊக்குவிக்கப்படும்.
இந்த புள்ளியை ஊக்குவிக்கும் போது, இந்த நரம்புகள் ஊக்குவிக்கப்பட்டு, மூக்கின் துவாரகம், மூக்கின் சளி பாதை மற்றும் சைனஸ் போன்ற இடங்களில் இரத்த ஓட்டம் அதிகரிக்கும். இதனால் மூக்கடைப்பு நீங்கி, சைனஸ் பகுதியில் ஏற்பட்டுள்ள வீக்கம் வற்றி, நாசி அடைப்பு மற்றும் சைனஸ் போன்ற பிரச்சனைகள் நீங்கும். சைனஸை
முக வாதத்திற்கான நிவாரணி
இந்த புள்ளியில் மசாஜ் செய்தால் முகத்தில் வாதம் ஏற்பட்டுள்ளவர்களுக்கு பெரிய நிவாரணியாக விளங்கும். இந்த புள்ளியில் மசாஜ் செய்வதால் இரண்டு புருவங்களுக்கு மத்தியில் மூக்குக்கூம்பகத்தசை ஊக்குவிக்கப்படும்.
நெற்றிப் பொட்டுகள் சம்பந்தப்பட்ட கிளை நரம்புகளில் உள்ள க்ரானியல் மசில் ஃபைபர் (CNVII) இந்த தசைகளை ஊக்குவிக்கும். முகத்தின் வாதத்திற்கு CNVII முக்கிய பங்கு வகிக்கிறது. காரணம் முகத்தின் அனைத்து தசை அசைவுக்கும் இதுவே பொறுப்பாகும்.
இந்த புள்ளியில் மசாஜ் செய்யப்படுவது ஆயுர்வேதத்தில் உள்ள பஞ்சகர்மா கிளையில் பரவலாக பயன்படுத்தப்படுகிறது. இந்த சிகிச்சைக்கு ‘ஷிரோதாரா’ என்பதே பெயராகும்.
இந்த சிகிச்சையில் மருத்துவ எண்ணெய் தொடர்ச்சியாக நெற்றிப்பொட்டில் ஊற்றப்படும். இதனை 40-60 நிமிடங்கள் வரை ஊற்ற வேண்டும். முக நரம்புகளை இது மிகவும் ஆழமாக ஊக்குவிக்கும். இதனால் முக வாதத்திற்கும் தீர்வு கிடைக்கும்.
புருவங்களுக்கு நடுவே உள்ள லேசான கோடுகள் குறையும்
புருவங்களுக்கு நடுவே உள்ள லேசான கோடுகள் பல பேர்களுக்கு வருத்தத்தை அளிக்கும். இந்த கோடுகளை நீக்க வேண்டுமானால், உங்கள் புருவங்களுக்கு மத்தியில் உள்ள புள்ளியை தினமும் ஒரு முறை மசாஜ் செய்யுங்கள்.
இந்த இடத்தில் தான் மூக்குக்கூம்பகத்தசை உள்ளது. இந்த இடத்தை மசாஜ் செய்வதால் தசைகள் திடமாவதுடன் இரத்த ஓட்டத்தை அதிகரித்து, அந்த பகுதியில் உள்ள சரும பகுதிகளை நரம்புகள் ஊக்கவிக்கும். இதனால் அவ்வகை கோடுகள் மறையத் தொடங்கும்.
பொட்டு, விபூதி, சந்தானம் வைப்பதை ஒரு ஆன்மிக விசயமாக பார்க்காமல் மருத்துவ ரீதியாக உபயோகித்து பயனை அடைவோம்.  

Miracle of Hindu Temples – இந்து கோவில்களில் அற்புதங்கள்

இந்து கோவில்களில் அற்புதங்கள்
இந்து கோவில்களில் ஏராளமான அற்புதங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன அவற்றுள் சில அற்புதங்கள் இங்கே :
  • மதுரை தெப்பகுளம் மாரியம்மன் கோவிலில் அபிசேகம் செய்த தண்ணிரை அம்மை நோய் உள்ளவர்கள் அந்த அபிசேக தண்ணிரை வாங்கி சென்று அருந்தினால் அம்மை நோய் உடனே குறைகிறது இங்கு வந்து வேற மதங்களை சார்ந்தார்களும் அம்மை நோய் தீர, அந்த அபிசேக நீரை வாங்கி செல்வதை பார்க்கலாம்.
  • சிக்கல் சிங்காரவேலர் கோவிலில் சூரசம்ஹாரத்திற்காக முருகன் அம்பிகையிடம் வேல் வாங்கும் போது முருகனின் திருமேனி முழுவதும் வியர்வை பெருகுகிறது.
  • திருநாகேஸ்வரம் சிவன் கோவிலில் ராகுகாலத்தில் மட்டும் சிவபெருமானுக்கு செய்யப்படும் அபிஷேக பால் நீல நிறமாகிறது.
  • நாகர்கோவில் கேரளபுரம் சிவன் கோவிலில் விநாயகர் ஆறுமாத காலம் கருப்பாகவும், ஆறுமாதம் வெண்மை நிறமாகவும் காட்சி தருகிறார். 
  • வழிபாடு செய்யப்பட்ட சாணிப்பிள்ளையாரை கரையான்கள், வண்டுகள் அரிப்பதில்லை. 
  • திருபுறம்பியம் சுவேத விநாயகருக்கு அபிஷேகம் செய்யப்படும் தேன் முழுவதும் உறிஞ்சப்படுகிறது. 
  • ஆந்திராவில் மங்களகிரியில் பானகரம் தயாரித்து பானகநரசிம்மர் கோவிலில் நரசிம்மர்  வாயில் ஒரு அண்டா அல்லது ஒரு தம்ளர் ஊற்றினால் பாதியை உள்வாங்கிக்கொள்கிறார். மீதி பாதியை பிரசாதமாக வழங்குகின்றனர். 
  • கும்பாபிஷேகம் மற்றும் ஐயப்பனின் திருவாபரண பெட்டியை எடுத்துச் செல்லும் போது கருடன் தரிசனம் தருகிறது.
  • கும்பகோணம் அருகே திருநறையூர் நாச்சியார் கோவிலில் கருடசேவையின் போது கல் கருடன் முதலில் 4 பேர் தூக்க ஆரம்பித்து பின் எடை படிப்படியாக அதிகரித்து வீதிக்கு வருவதற்குள் 8, 16, 32, 64 பேர் சேர்ந்து தூக்கும் அதிசயம் இன்றும் நடைபெறுகிறது.
  • திருக்கழுக்குன்றத்தில் தெப்பக்குளத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை சங்கு  தோன்றுகிறது. சிவனுக்கு படைக்கப்பட்ட பிரசாதத்தை கழுகு உண்ணும் அதிசயம் நடைபெற்றது.
  • திண்டுக்கல் அருகே திருமலைக்கேணி முருகன் கோவிலில் அருகருகே உள்ள தெய்வானை சுனையின் நீர் எப்போதும் குளிர்ந்த நீராகவும், வள்ளிசுனையின் நீர் இரவு பகல் எந்நேரமும் வெந்நீராகவும் இருக்கிறது. 
  • தூத்துக்குடி முத்தையாபுரம் மற்றும் மாளிகைப்பாறை கருப்பசாமி கோவிலில் கொடை விழாவின் போது பூசாரி பாட்டில் பாட்டிலாக ஏராளமாக மதுவை அருந்தும் அற்புதம் நடக்கிறது. 
  • காசியில் கருடன் பறப்பதில்லை. மாடு முட்டுவதில்லை. பிணம் எரிந்தால் நாற்றம் எடுப்பதில்லை. பூக்கள் மணம் வீசுவதில்லை. 
  • சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகில் கல்லுமடை திருநாகேஸ்வரமுடையார் கோவிலில் மீனாட்சிஅம்மன் 2 மாதங்களுக்கு ஒருமுறை நிறம் மாறுகிறது. 
  • திருநல்லூர் கல்யாணசுந்தரேஸ்வரர் (பஞ்சவர்ணேஸ்வரர்) திருக்கோவிலில் சிவலிங்கம் 6 நாழிகைக்கு ஒரு வர்ணத்திற்கு மாறுகிறது. 
  • குஜராத் பவநகரில் 1½ கிமீ கடலுக்குள் இருக்கும் நிஷ்களங்க மகாதேவரை கடல்நீர் உள்வாங்கி பக்தர்கள் வழிபடும் அற்புதம் நடைபெறுகிறது. 
  • ஸ்ரீவில்லிபுத்தூரில் சிவராத்திரியன்று கொதிக்கும் எண்ணெயில் கையைவிட்டு வடை சுடுகிறார் ஒரு பாட்டி. 
  • திருப்பத்தூர் – தர்மசாலா சாலையில் நான்குவழி சாலையை அகலப்படுத்த நாகாத்தம்மன் குடிகொண்டிருக்கும் ஒரு பாம்புப் புற்றை அகற்ற முயன்றபோது 7 புல்டோசர்கள் பழுதாகி விட்டன. இறுதியில் அந்த பாம்புப்புற்றை இடிக்காமல் விட்டு விட்டு சாலை அமைத்தனர்.
  • வேலூர் செங்கம் ரிஷபேஸ்வரர் திருக்கோவிலில் ஆண்டுக்கு ஒருமுறை பங்குனியில் சூரிய ஒளிக்கதிர்கள் நந்தீஸ்வரர் மீது பட்டு தங்கநிறமாக ஜொலிக்கும் அதிசயம் நடைபெறுகிறது. 
  • திருநெல்வேலி கடையநல்லூர் அருகில் சுந்தரேஸ்வரபுரம் சுந்தரேஸ்வரர் கோவிலில் சூரியன் மறைந்துவிட்டபோதும் பிரகாரத்தில் உள்ள விளக்குகளை அணைத்துவிட்டால் வெளியே உள்ள ஒளி மூலவர் மீது விழுவதைக் காணலாம்.
  • அலகு குத்துதல், அக்னிசட்டி எடுத்தல், தீமிதித்தல் போன்ற நோ்த்திக் கடன்கள் செய்பவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை.
இதுபோல் நாம் அறியாத அற்புதங்கள் ஏராளம். இதுபோன்ற அற்புதமான கோவில்களை, தரிசிக்கும் பாக்கியத்தை புண்ணியம் செய்தவர்கள்
பெறுகிறார்கள்.
நண்பர்களே..! தயவுசெய்து  இதனை உணர்ந்து பகிருங்கள்.

மூக்குத்தி அணிவது ஏன்?

மூக்குத்தி அணிவது ஏன்?
மூக்கு குத்துவது, காது குத்துவது துளையிடுவது எல்லாம் உடலில் உள்ள கெட்ட வாயுவை வெளியேற்றுவதற்கு தான், ஏன் இதை நம் முன்னோர்கள் செய்தார்கள் என்பதை ஆராய்ந்தால் பல இரகசியங்கள் விளங்கும்.  கைரேகை, ஜோசியம் பார்ப்பவர்கள் ஆண்களுக்கு வலது கையும் பெண்களுக்கு இடது கையும் பார்த்து பலன் கூறுவது வழக்கம். ஆண்களுக்கு வலப்புறமும் பெண்களுக்கு இடப்புறமும் பலமான, வலுவான பகுதிகளாகும்.
ஞானிகளும் ரிஷிகளும் தியானம் செய்யும் போது வலது காலை மடக்கி இடது தொடை மீது போட்டு தியா னம் செய்வார்கள். இதற்கு காரணம் இடது காலை மடக்கி தியானம் செய்யும் போது வலது பக்கமாக சுவாசம் போகும். வலது என்றால் தமிழில் வெற்றி என்று பொருள்.வலது பக்கமாக சுவாசம் செல்லும் போது தியானம், பிராத்தனை எல்லாம் கண்டிப்பாக பலன் தரும். அதனால் இந்த நாடியை அடக்குவதாக இருந்தால் வலது பக்க சுவாசத்திற்கு மாற்றவேண்டும். அதே மாதிரி ஒரு அமைப்புத்தான் மூக்குத்தி.
மூளையின் இயக்கம் 
நம் மூளையில் நமது மூளையில் ஹிப்போதலாமஸ் என்ற பகுதி இருக்கிறது, இப்பகுதி உடலில் இருக்கு பல்வேறு செயல்பாடுகளை இயங்க வைக்கவும், கட்டுப்படுத்தவும் முக்கியப் பங்கு வகிக்கின்றது. குறிப்பாக ஹார்மோன் வெளிப்பாடு, வெப்பநிலை கட்டுப்பாடு, பசி, தாகம், தூக்கம், காமம் என உடலில் இருக்கும் பிட்யூட்டரி சுரப்பி மற்றும் எல்லா சுரப்பிகளுக்கு மூலமே இந்த ஹிப்போதலாமஸ் தான். 
இடது புறத்தில் மூக்குத்தி அணியும் போது பெண்களின் வலது புற சுவாசம் பலமாகிறது.  இதனால் வலது பக்க மூலையின் செயல்பாடுகள் அதிகமாகி இந்த ஹிப்போதலாமஸ் சீராக இயக்க உதவுகிறது. மேலும் நம்முடைய அன்றாட செயல்பாடுகள் பெரும்பாலானவை வலது புற மூளை  இயக்கத்தையே அதிகம் பயன்படுத்துகின்றன. இதனால் வலது பக்க மூளை  செயல்பாடுகளை அதிகரிக்க இந்த சுவாச மாற்றம் பெண்களுக்கு உதவுகிறது.
மூக்குத்தி அணிவதால் ஏற்படும் நன்மைகள் 
இன்றைய நம்முடைய மனித வாழ்க்கைக்கு அதிகமாக இடது பக்க மூளையை அடைத்து வலது பக்கமாக வேலை செய்ய வைக்கிறோம். அதனால் வலது கை, வலது கால் எல்லாமே பலமாக உள்ளது. பெண்கள் மூக்குத்தி அணியும்போது, முன் நெற்றிப் பகுதியில் இருந்து ஆலம் விழுதுகள் போல் சில நரம்புகள் நாசி துவாரத்தில் இறங்கி கீழே வரும். இப்படி விழுதுகள் மூக்குப் பகுதியில் ஜவ்வு போல மெல்லிய துவாரங்களாக இருக்கும். மூக்குப் பகுதியில் ஒரு துவாரத்தை ஏற்படுத்தி அந்த துவாரத்தில் மூக்குத்தி அணிவதால், நரம்பு மண்டலத்தில் உள்ள கெட்ட வாயு அகலும்.
சிறுமிகளுக்கு மூக்குத்தி அணிவிப்பது கிடையாது. பருவப் பெண்களுக்கே மூக்குத்தி அணிவிக்கப்படுகிறது. பருவ வயதை அடைந்த பெண்களுக்கு கபாலப் பகுதியில் அதாவது, தலைப்பகுதியில் சில கெட்ட வாயுக்கள் இருக்கும். இந்த வாயுக்களை வெளிக் கொண்ருவதற்கு ஏற்படுத்தபட்டதுதான் இந்த மூக்கு குத்துவது. மூக்கு குத்துவதால் பெண்களுக்கு ஏற்படக் கூடிய சளி, ஒற்றைத் தலைவலி, மூக்கு சம்பந்தமான தொந்தரவுகள், பார்வைக் கோளாறு சரி செய்யப்படுகின்றன்.
சிந்தனா சக்தியை ஒரு நிலைப்படுத்துகிறது. மனதை அமைதிப்படுத்துகிறது. தியானம், பிராத்தனையில் ஈடுபட உதவுகிறது. நரம்பு சம்பந்தமான நோய்கள், மனத்தடுமாற்றம் ஏற்படாமல் இருக்க மூக்குத்தி உதவுகிறது என்று ஞானிகளும் ரிஷிகளும் கூறியிருக்கின்றனர்.
தங்கம் அணிவதால் 
உடலிலுள்ள வெப்பத்தைக் கிரகித்து நீண்ட நேரம் தன்னுள்ளே வைத்திருக்கூடிய ஆற்றல் தங்கத்துக்கு இருக்கிறது. தங்க நகைகளைப் பெண்கள் அணிவதன் மூலம் உடலில் ஏற்படும் அதிக வெப்பம் தடைப்பட்டு போகும், பெண்களின் உடல் வெப்பம் சம நிலையடைகிறது.  பெரும்பாலும் மூக்குத்தியை தங்கத்தில் அணிவதையே பெண்கள் விரும்புவர்கள்.
இன்றைய நாகரிகம் 
இன்றைக்கு நாகரிகம் வளர்ந்து விட்ட தால் சில பெண்கள் வலதுப் பக்கம் மூக்குத்தி அணிகிறார்கள். ஆனால், சாஸ்திர ரீதியாக இடப் பக்கம்தான் பெண்கள் மூக்குத்தி அணியவேண்டும். இப்போது மூக்குத்தி குத்துவது நாகரிகம் ஆகிவருகிறது. ஆண்கள் கூட மூக்குத்தி, காது குத்துவது நாகரிகமாக செய்து வருகிறார்கள். ஆதிகாலத்தில் பெண்களும் ஆண்களும் மூக்குத்தி, காது குத்துவது வழக்கமாக இருந்தது.