சோழவந்தான் தென்கரை நவநீதகிருஷ்ணன் கோயிலில் திருக்கல்யாணம்
சோழவந்தான்: சோழவந்தான் அருகே தென்கரை நவநீதகிருஷ்ணன் கோயிலில் திருக்கல்யாணம் நடந்தது. இங்கு செப்.,9 ல் நடந்த உறியடி உற்சவம், இரவு நடந்த வழுக்கு மரம் ஏறும் நிகழ்ச்சியில் பக்தர்கள் பங்கேற்றனர்.
நேற்று காலை கோயிலில் திருக்கல்யாணம் நடந்தது. கல்யாணத்தை முன்னிட்டு நாதஸ்வரம் முழங்க பக்தர்கள் சீர்வரிசை ஏந்தி ஊர்வலம் வந்தனர். அங்கு பாலாஜிபட்டர் பெண்வீட்டாரகவும், வெங்கடேஷன் மாப்பிள்ளை வீட்டாராகவும் இருந்து, வேம்புசாஸ்திரி வேதம் ஓத கிருஷ்ணன் சுவாமி,பாமா,ருக்மணிக்கு திருமணம் நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. பின் கிருஷ்ணன் சுவாமி தேவியருடன் கருட வாகனத்தில் எழுந்தருளினார்.

அருள்மிகு சித்திரரத வல்லபபெருமாள் திருக்கோயில்
தைப்பூசம் ஏன் கொண்டாடப்படுகிறது?
நவக்கிரகங்களில், சூரியன் சிவாம்சம் கொண்டவர். இவர் தை மாதத்தில் தன் வடதிசைப்பயணத்தை தொடங்குகிறார். இதனை உத்ராயண புண்ணிய காலம் என்பர். இவர் இந்த மாதத்தில் மகரராசியில் இருக்கிறார். சக்தியின் அம்சமாக திகழ்பவர் சந்திரன். தைப்பூச நாளில் சந்திரன் ஆட்சி பலத்தோடு கடகராசியில் சஞ்சரிக்கிறார். அன்று, மகரத்தில் இருக்கும் சூரியனும், கடகத்தில் இருக்கும் சந்திரனும் ஒருவருக்கொருவர் பலத்தோடு பார்த்துக்கொள்வர். இதற்கு என்ன அர்த்தம் தெரியுமா? அம்பிகை சிவகாமி கண்டு களிக்க,பரம்பொருளான சிவன், நடராஜராக ஆனந்த தாண்டவம் ஆடுகிறார். மார்கழி திருவாதிரையில் இறைவன் தனித்து ஆடுகிறார். தைப்பூசநாளில் சிவபார்வதி இணைந்து ஆடுவதாகவும் சொல்வர். நடனமாடினால் மகிழ்ச்சி பிறக்கும். அந்த மகிழ்ச்சியில் திளைக்கும் இறைவனிடம் நாம் வேண்டியதைப் பெறலாம் என்பதால் இந்நாளை வழிபாட்டுக்குரிய நாளாக நிர்ணயித்தனர். இல்லற வாழ்வில் பெறும் இன்பத்தின் அடையாளம் குழந்தை. அம்மையப்பரான சிவபார்வதி, மகிழ்ந்திருந்து ஈன்றெடுத்த ஞானக்குழந்தை முருகன். அவ்வகையில், பெற்றோருக்குரிய தைப்பூசம் பிள்ளைக்கும் சிறப்பான நாளாக அமைந்தது. தைப்பூசநாளில் சிவபார்வதி, முருகப்பெருமானை தரிசித்து வேண்டிய வரம் பெறுவோம்.
பள்ளி கழிப்பறையை சுத்தம் செய்யும் தலைமை ஆசிரியர்
மதுரை,: "எழுத்தறிவித்தவன் இறைவன்' என்பதற்கு, எடுத்துக்காட்டாய் திகழ்கிறார், மதுரை ஞானஒளிவுபுரத்தை சேர்ந்த, தலைமை ஆசிரியர் கில்பர்ட், 47. இவர், அய்யப்பன்நாயக்கன்பட்டி, கள்ளர் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்.
காலை, 9:30 மணிக்கு தான், பள்ளி துவங்கும் என்றாலும், காலை, 8:00 மணிக்கே வந்து விடுகிறார்.வகுப்பறையில் பள்ளிக் குழந்தைகள் விட்டுச் சென்ற, காகிதங்கள் உள்ளிட்ட பொருட்களை அப்புறப்படுத்தி, தூய்மைப்படுத்துவதை வழக்கமாக கொண்டுள்ளார். இப்பணிக்காக, துப்புரவு ஊழியர் வரட்டும் என, காத்திருப்பது கிடையாது.மாலை, 4:00 மணிக்கு, பள்ளி முடிந்ததும், குழந்தைகள் பயன்படுத்தும் கழிப்பறையை, தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்கிறார்.
இது பற்றி அவரிடம், சக ஆசிரியர்கள் வியப்புடன் கேட்கும்போது, "நாம் பெற்றப் பிள்ளைகளுக்கு சுத்தம் செய்கிறோம். இப்பள்ளியில் படிக்கும் குழந்தைகளும், நம் பிள்ளைகள் தான். குழந்தையும், தெய்வமும் ஒன்றல்லவா!' எனக் கூறி ஆசுவாசப்படுத்துவார். எண்ணற்ற ஏழை குழந்தைகளை, சொந்த செலவில் படிக்க வைக்கிறார்.
இதற்காக, மாதம் ஒரு தொகையை, குடும்ப பட்ஜெட்டில் இருந்து ஒதுக்குகிறார். "எழுத்தறிவித்தவன் இறைவன்' என்பதற்கு எடுத்துக்காட்டாய் திகழும், தலைமை, ஆசிரியர் கில்பர்ட்டின் பணி சிறக்க வாழ்த்துவோம்!

Subscribe to:
Posts (Atom)