ABC Index for Tamil Dubbed Movies


-::: Note :::-
Please Leave comment Below , If Post Download Links Dead








123






-::: Note :::-
Please Leave comment Below , If Post Download Links Dead


விஸ்வரூபம் படத்தை திரையிட விதிக்கப்பட்ட தமிழக அரசு தடை ரத்து




சென்னை : நடிகர் கமல்ஹாசனின் விஸ்வரூபம் படத்திற்கு தமிழக அரசு விதித்த தடையை சென்னை ஐகோர்ட் நேற்றிரவு ரத்து செய்து அதிரடி தீர்ப்பை வழங்கியது.  தமிழகம் முழுவதும் பர பரப்பாக எதிர்பார்க்கப் பட்ட விஸ்வரூபம் படத்தின் தீர்ப்பு இரவு 8 மணிக்கு ஐகோர்ட்டில் அறிவிக்கப்படும் என்று முதலில் நீதிபதி வெங்கட் ராமன் அறிவித்திருந்தார். ஆனால், இரவு 10 மணிக்கு தீர்ப்பு கூறப்பட்டது. தீர்ப்பில் வெங்கட்ராமன் கூறியதாவது:

விஸ்வரூபம் படம் 100 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்டுள்ளது. திடீரென்று 144 தடை உத்தரவை தமிழக அரசு பிறப்பித்ததால் கமல் ஹாசனுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டிருப்பது தெளிவாக தெரிகிறது. மாவட்ட கலெக்டர்களிடம் எந்தவித புகாரும் வரவில்லை. ஒட்டு மொத்தமாக 31 மாவட்டங் களை சேர்ந்த கலெக்டர் களும் ஒரே உத்தரவை பிறப்பித்துள்ளதாக தெரி கிறது. குறிப்பாக 2 மாவட்ட கலெக்டர்களின் உத்தரவை பார்க்கும் போது, எந்த முஸ்லிம்கள் புகார் தெரிவித்தனர் என்று புகாரில் குறிப்பிடவில்லை.

எனவே, 144 தடை உத்தரவை நிறுத்தி வைக் கிறேன். இதற்கு முகாந்திரம் உள்ளது. தமிழக அரசின் உத்தரவுக்கு தடை விதிக்கிறேன். விஸ்வரூபம் படத்திற்கான முஸ்லிம்கள் கோரிக்கையை சம்பந்தப் பட்ட அமைப்பிடம் முறை யிடலாம். இதற்கு இந்த உத்தரவு தடையாக இருக் காது. சட்டம் ஒழுங்கை பராமரிப்பது அரசின் கடமையாகும். தடை உத்தரவில் சரியான காரணம் கூறப்படவில்லை. எனவே, அரசு உத்தரவுக்கு தடை விதிக்கிறேன். இந்த தடை உத்தரவு பிறப்பிக்க அரசுக்கு அதிகாரம் இல் லையா? என்பது குறித்து பின்னர் முழுமையாக விசாரணை நடத்தி முடிவு எடுக்கலாம். இவ்வாறு தனது தீர்ப்பில் கூறினார்.  


நீதிபதி தீர்ப்பை கேட்ட தும் தமிழக அரசின் அட் வகேட் ஜெனரல் நவநீத கிருஷ்ணன், கூடுதல் அட் வகேட் ஜெனரல் அரவிந்த் பாண்டியன் ஆஜராகி இந்த வழக்கை உடனே நிறுத்தி வைக்க வேண்டும். நாளை  காலை அப்பீல் செய்ய உள்ளோம். உடனே தீர்ப்பை நிறுத்தி வைக்க வேண்டும். இல்லாவிட்டால் விடியற்காலை 5 மணிக்கே படத்தை திரையிட்டு விடுவார்கள் என்று கூறினர். இதை நீதிபதி ஏற்க மறுத்து கோர்ட்டை விட்டு இறங்கி சென்றார். விஸ்வரூபம் படம் தீர்ப்பு வழங்கப்பட்டதை யொட்டி  பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ஐகோர்ட்டு தீர்ப்பை கேட்டதும் கமல் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.  தமிழகம் முழுவதும் விஸ் வரூபம் படத்தை திரையிட கமல்ஹாசன் ரசிகர்கள் தீவி ரம் காட்டி வருகிறார்கள்.

விஸ்வரூபம் பட வழக்கில் பரபரப்பு வாதம்
சென்சாரில் முறைகேடு நடந்துள்ளது , தமிழக அரசு மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை , மத்திய அரசு

சென்னை : கமல்ஹாசனின்  ‘விஸ்வரூபம்’ படம்  டிசம்பர் 25,ம் தேதி ரிலீஸ் ஆக இருந்தது. படத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக காட்சிகள் இருப்பதாக கூறி  படத்தை தடை செய்ய கோரி முஸ்லிம் அமைப்புகள் அரசிடம் மனு கொடுத்தன. இதையடுத்து படத்தை ரிலீஸ் செய்ய தமிழக அரசு 15 நாள் தடை விதித்தது. அரசின்  உத¢தரவை எதிர்த்து படத்தின் தயாரிப்பாளரான ராஜ்கமல் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார் பில் கமல்ஹாசன் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி கே.வெங்கட்ராமன் முன்னிலையில் கடந்த வாரம் விசாரணைக்கு வந்தது.

 வழக்கை விசாரித்த நீதிபதி, ஜனவரி 26ம் தேதி படத்தை பார்த்தபின்னர் அடுத்தகட்ட விசாரணை ஜனவரி 28ல் நடத்தப்படும் என்று உத்தரவிட்டார். இதன் படி,  26ம் தேதி நீதிபதி வெங்கட்ராமன், அட்வகேட் ஜெனரல் நவநீதகிருஷ்ணன், இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் ஆஜரான வக்கீல் சங்கரசுப்பு உள்ளிட்ட 50 பேர் வடபழனியில் உள்ள பிரசாத் ஸ்டூடியோவில் விஸ்வரூம் திரைப்படத்தைப் பார்த்தனர்.

இதையடுத்து, வழக்கு நேற்று முன்தினம் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி ‘விஸ்வரூபம் படத்தை பார்த்தேன். விரும்பினால், இந்த வழக்கில் புதிய மனு தாக்கல் செய்யுங்கள். நாட்டின் ஒருமைப்பாடு, ஒற்றுமைதான் முக்கியம். எனவே அரசு அதிகாரிகளையும் சம்பந்தப்பட்டவர்களையும் கமல் சந்தித்து பேசி சுமுக தீர்வு காண முயற்சிக்க வேண்டும்’ என்று கமலுக்கு ஆலோசனை கூறி வழக்கு விசாரணையை செவ்வாய்கிழமைக்கு ஒத்திவைத்தார்.

இதையடுத்து, வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, கமல்ஹாசன் சார்பாக மூத்த வக்கீல் பி.எஸ். ராமன் ஆஜராகி வாதாடியதாவது:
‘விஸ்வரூபம்’ படத்துக்கு யு/ஏ சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ளது. சான்றிதழ் வழங்கிய மத்திய தணிக்கை குழுவில் முஸ்லிம் உறுப்பினர் இருந்துள்ளார். ஆப்கானிஸ்தான், அமெரிக்கா ஆகிய நாடுகளில் நடைபெற்ற நிகழ்ச்சிகள்தான் இந்த படத்தில் உள்ளது. முஸ்லிம்கள் மனதை புண்படுத்தும் வகையில் காட்சிகள் அமைக்கப்படவில்லை.
இந்த படத்தின் கதாநாயகனே ஒரு முஸ்லிம்தான். நல்ல மனிதராக அவர் நடித்துள்ளார். இப்படிப்பட்ட படத்துக்கு மத்திய தணிக்கை குழு அனுமதி வழங்கிய பிறகு அதற்கு தடை விதிக்க தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை. சுப்ரீம் கோர்ட் பலமுறை இதை உறுதி செய்துள்ளது. பேச்சுரிமை, எழுத்துரிமை, படைப்புரிமைக்கு இந்திய அரசியல் சட்ட பாதுகாப்பு உள்ளது.
‘டாவின்சி கோட்’ என்ற ஆங்கில திரைப்படத்துக்கு அப்போதைய தமிழக அரசு தடை விதித்தது. இந்த தடையை எதிர்த்து அப்போது வழக்கு தொடரப்பட்டது. தமிழக அரசு சார்பாக அட்வகேட் ஜெனர லாக இருந்து நான்தான் வாதாடினேன். அப்படி இருந்தும் வழக்கை விசாரித்த நீதிபதி தமிழக அரசு உத்தரவுக்கு தடை விதித் தார்.
அந்த உத்தரவை இந்த வழக்கிலும் பின்பற்றி விஸ்வரூபம் படத்துக்கு அனுமதி வழங்க வேண்டும்.

‘ஒரே ஒரு கிராமத்திலே’ என்ற திரைப்படத்துக்கு தணிக்கை குழு அளித்த சான்றிதழ் செல்லும் என உயர் நீதிமன்ற தனி நீதிபதி தீர்ப்பு வழங்கினார். இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை 3 நீதிபதிகள் விசாரித்து, தணிக்கை சான்றிதழ் கொடுத்தது தவறு என தீர்ப்பளித்தனர். உச்ச நீதிமன்றத்துக்கும் இந்த வழக்கு சென்றது. 3 நீதிபதிகள் தீர்ப்பு செல்லாது என உச்ச நீதிமன்றம் கூறியது. இதை நீதிமன்றம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

விஸ்வரூபம் படத்துக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்க தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை. உத்தரவு நகலை மாவட்ட கலெக்டர் மூலமாக 31 தியேட்டர்களுக்கு அவசர அவசரமாக அனுப்பியுள்ளனர். இது தவறானது. ஸீ 100 கோடி செலவில் விஸ்வரூபம் படம் தயாரிக்கப்பட்டுள்ளது.  இந்த தடை காரணமாக பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. சினிமா போட்டோகிராபி சட்டத்தின் கீழ் 144 தடை உத்தரவு பிறப்பிக்க முடியாது. இதேபோல புதுவை அரசும் விஸ்வரூபம் படத்துக்கு தடை விதித்திருப்பது செல்லாது. மும்பையில் இப்படம் திரையிடப்பட்டுள்ளது. இங்கேயும் படத்தை திரையிட அனுமதி வழங்க வேண்டும்.

இவ்வாறு பி.எஸ்.ராமன் வாதாடினார். முஸ்லிம் அமைப்பு சார்பாக வக்கீல் ஒருவர் குறுக்கிட்டு, ‘இன்றைய ஆங்கில பத்திரிகை ஒன்றில் இந்த வழக்கு தொடர்பாக தலையங்கம் எழுதப்பட்டுள்ளது’ என்றார்.   இதை கேட்ட நீதிபதி, ‘இந்த வழக்கை அமைதியான முறையில் நடத்த விரும்புகிறேன். தேவையற்றதை பேசி நேரத்தை வீணடிக்காதீர்கள். வழக்கின் தீர்ப்பை தமிழகமே எதிர்பார்த்து காத்திருக்கிறது. இந்த வழக்கு விசாரணைக்காக அதிக நேரம் ஒதுக்கியுள்ளேன். இரு தரப்பு வக்கீல்களும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்’ என்றார்.



 அட்வகேட் ஜெனரல் நவநீதகிருஷ்ணன் ஆஜராகி, ‘விஸ்வரூபம் படத்தை திரையிட்டால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என உளவுத்துறை மூலம் அரசுக்கு தகவல் கிடைத்தது. எனவேதான் தடை விதிக்கப்பட்டது. சினிமா போட்டோகிராபி சட்டப்படி தடை விதிக்க தமிழக அரசுக்கு முழு அதிகாரம் உள்ளது. தடையை நீக்கக்கூடாது. இந்த படத்தில் முஸ்லிம்கள் மனதை புண்படுத்தும் காட்சிகள் உள்ளதால்தான் தடை விதிக்கப்பட்டது.

இதற்கு மத்திய தணிக்கை குழு சான்றிதழ் வழங்கியதே தவறானது. அதில் முறைகேடு நடந்துள்ளது. இந்த படத்தை வெளியிட்டால் பொது அமை திக்கு குந்தகம் ஏற்படும். எனவே, மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும். ‘டேம் 999‘ என்ற படத்துக்கு தமிழக அரசு தடை விதித்தது சரியானது என்று உச்சநீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பு கூறியுள்ளது. இதை ஐகோர்ட் கவனத்தில் கொள்ள வேண்டும்’ என்றார்.

தமிழக அரசு சார்பாக கூடுதல் அட்வகேட் ஜெனரல் அரவிந்த் பாண்டியன் ஆஜராகி, ‘சட்டம் ஒழுங்கை பாதுகாக்க படத்தை தடை விதிக்க அரசுக்கு முழு அதிகாரம் உள்ளது. பொதுநலன் கருதி தமிழக அரசு 144 தடை உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை 31 மாவட்ட கலெக்டர்களும் தியேட்டர்களுக்கு அனுப்பி உள்ளார்கள். தியேட்டர் உரிமையாளர்கள் தான் வழக்கு தொடர முடியும். எனவே, இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும். தொடர்ந்து 1998ம் ஆண்டு முதல் தொடர் குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்து வருகிறது. இந்த படம் திரையிடப்பட்டால் அசம்பாவித சம்பவம் ஏற்படும். எனவே, இந்த தடையை நீக்க கூடாது‘ என்றார்.

முஸ்லிம் அமைப்பு சார்பாக வக்கீல் சங்கர சுப்பு ஆஜராகி, ‘முஸ்லிம்கள் மனதை புண்படுத்தும் வகையில் படம் உள்ளது. இதற்கு தடை விதித்ததை நீக்க கூடாது. விஸ்வரூபம் படத்தில் முஸ்லிம்களை தீவிரவாதிகள் போல் சித்தரித்துள்ளார்கள். இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்‘ என்றார். கமல்ஹாசன் தரப்பில் வக்கீல் பி.எஸ்.ராமன் ஆஜராகி, ‘துப்பாக்கி படத்துடைய உயர்நீதிமன்றம் தீர்ப்பில் பாதிக்கப்பட்டவர்கள் தணிக்கை குழுவிடம் முறையிடலாம் என்று தெளிவாக கூறியுள்ளது. எனவே, தமிழக அரசின் உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும். என்றார்.

மத்திய அரசின் தணிக்கை குழு சார்பாக கூடுதல் சொலிசிடர் ஜெனரல் பி.வில்சன் ஆஜராகி, ‘தணிக்கை குழு மீது கூறப்பட்டுள்ள குற்றசாட்டு முழுவதும் தவறானது. விதிமுறைகளை பின்பற்றி படத்தை பார்த்து தணிக்கை குழு விஸ்வரூபம் படத்துக்கு ‘யுஏ‘ சான்றிதழ் வழங்கியுள்ளது. எனவே, இதில் தலையிட மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை என்றார். இவ்வாறு விவாதம் நடந்தது.

சோழவந்தான் தென்கரை நவநீதகிருஷ்ணன் கோயிலில் திருக்கல்யாணம்

சோழவந்தான்: சோழவந்தான் அருகே தென்கரை நவநீதகிருஷ்ணன் கோயிலில் திருக்கல்யாணம் நடந்தது. இங்கு செப்.,9 ல் நடந்த உறியடி உற்சவம், இரவு நடந்த வழுக்கு மரம் ஏறும் நிகழ்ச்சியில் பக்தர்கள் பங்கேற்றனர்.





 நேற்று காலை கோயிலில் திருக்கல்யாணம் நடந்தது. கல்யாணத்தை முன்னிட்டு நாதஸ்வரம் முழங்க பக்தர்கள் சீர்வரிசை ஏந்தி ஊர்வலம் வந்தனர். அங்கு பாலாஜிபட்டர் பெண்வீட்டாரகவும், வெங்கடேஷன் மாப்பிள்ளை வீட்டாராகவும் இருந்து, வேம்புசாஸ்திரி வேதம் ஓத கிருஷ்ணன் சுவாமி,பாமா,ருக்மணிக்கு திருமணம் நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. பின் கிருஷ்ணன் சுவாமி தேவியருடன் கருட வாகனத்தில் எழுந்தருளினார்.

அருள்மிகு சித்திரரத வல்லபபெருமாள் திருக்கோயில்


அருள்மிகு சித்திரரத வல்லபபெருமாள் திருக்கோயில்
 
[Image1]
 
மூலவர்: சித்திரரத வல்லபபெருமாள்
  உற்சவர்: -
  அம்மன்/தாயார்: ஸ்ரீதேவி, பூமிதேவி
  தல விருட்சம்: -
  தீர்த்தம்: -
  ஆகமம்/பூஜை :
  பழமை: 1000-2000 வருடங்களுக்கு முன்
  புராண பெயர்:
  ஊர்: குருவித்துறை, சோழவந்தான்
  மாவட்டம்: மதுரை
  மாநிலம்: தமிழ்நாடு
 
பாடியவர்கள்:

 திருவிழா:
 
வைகுண்ட ஏகாதசி, குருபெயர்ச்சி
 
 தல சிறப்பு:
 
இங்கு குருபகவான், சக்கரத்தாழ்வார் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கின்றனர். இங்கு பெருமாள் தாயார்களுடன் சந்தன மரச்சிலையால் ஆன மூர்த்தியாக காட்சி தருவது விசேஷமான அம்சம். இத்தலத்தில் நவக்கிரகத்தில் வியாழன் கிரகம் யோக குருவாக அருள்பாலிக்கிறார்.
 
திறக்கும் நேரம்:
 
காலை 7.30 மணி முதல் 12 மணி வரை, மாலை 3 மணி முதல் இரவு 6 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு சித்திர ரத வல்லபபெருமாள் கோயில், குருவித்துறை - 625 207 வாடிப்பட்டி வட்டம், சோழவந்தான்வழி, மதுரை மாவட்டம்.
போன்:
+91 94439 61948, 97902 95795
 
 பொது தகவல்:
சித்திரை நட்சத்திரக்காரர்களின் பொது குணம்: தானுண்டு தன் வேலையுண்டு என்றிருக்கும் இவர்கள், ஊர் சுற்றுவதில் மிகவும் விருப்பம் கொண்டவர்கள். கல்வி கேள்வியில் சிறந்து விளங்குவர். தைரியம் நெஞ்சில் நிறைந்திருக்கும். எதிரியையும் நேசிக்கும் பரந்த உள்ளம் கொண்டவர்கள். பிறருடைய குணம் அறிந்து செயல்பட்டு தனக்கு வேண்டியதைச் சாதித்துக் கொள்வர். வியாழன் (குரு) தன் மகனுக்காக வைகை நதிக்கரையில் துறை அமைத்து நாராயணனை நோக்கி தவம் செய்ததால் இந்த இடம் குருவி(ன்)த்துறை ஆனது.குருவின் தவத்தால் மகிழ்ந்த நாராயணனும் சித்திர வேலைப்பாடுடன் அமைந்த தேரில் வியாழ பகவானுக்கு காட்சி தந்து, கசனை மீட்டு தந்தார். இதனாலேயே இங்குள்ள இறைவன் சித்திர ரத வல்லப பெருமாள் என அழைக்கப்படுகிறார்.
பிரார்த்தனை
 
சித்திரை நட்சத்திரக்காரர்கள் தங்களுக்கு ஏற்படும் தோஷங்கள் நீங்க இத்தல இறைவனை வழிபாடு செய்கின்றனர்.வியாழனே இங்கு வந்து தவம் செய்த தலம் என்பதால், குரு(வியாழன்) தோஷம் உள்ளவர்கள் இங்கு வந்து வழிபட்டு பரிகாரம் செய்தால் தோஷம் நிவர்த்தியாகும் என்பது ஐதீகம்.வியாழன் பார்க்க விரைந்திடும் திருமணம் என்றும், புண்ணிய குரு பார்க்க புத்திர பாக்கியம் கிட்டும் என்றும் இங்கு வந்து பலனடைந்தவர்கள் கூறுகின்றனர்.
 
நேர்த்திக்கடன்:
 
பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்து வஸ்திரம் சாற்றி வழிபடுகின்றனர்.
 தலபெருமை:
நமக்கு குருபெயர்ச்சி பாதிப்பு என்றால் குரு (வியாழன்)விடம் சென்று முறையிடுவோம். அந்த குருவுக்கே பாதிப்பு என்றால் யாரிடம் போய் முறையிடுவார். குருபகவானும் தன் மகன் கசனுக்காக உலக நாயகன் நாராயணனை நோக்கி தவம் செய்த இடம் தான் குருவித்துறை சித்திரரத வல்லப பெருமாள்கோயிலாகும்.உலகில் வியாழ பகவானே நாராயணனை நோக்கி தவம் செய்யும் இடம் இந்த திருத்தலம் என்றும் வியாழன் சுயம்புவாக தவக்கோலத்தில் வீற்றிருப்பதும் இங்குதான் என நம்பப்படுகிறது. 12 ஆழ்வார்களின் சிலைகள் ஒன்று சேர்ந்து அமைந்துள்ளது. சக்கரத்தாழ்வார் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
  தல வரலாறு:
முன்னொரு காலத்தில் நடந்த தேவாசுர போரில், ஏராளமான அசுரர்கள் மாண்டனர். அவர்களை, அசுர குரு சுக்கிராச்சாரியார் ம்ருதசஞ்சீவினி மந்திரம் மூலம் உயிர் பெறச்செய்தார். அந்த மந்திரத்தை கற்றுக்கொள்ள விரும்பிய தேவர்கள், தங்கள் குருவான பிரகஸ்பதியின் (குரு) மகன் கசனை அழைத்து, அசுர குருவிடம் சென்று மருதசஞ்சீவினி மந்திரத்தை உபதேசம் பெற்று வா, என்றார்கள். கசனும் தன் தந்தை வியாழபகவான் ஆசியுடன் அசுரலோகம் சென்றான். அவனை அசுரகுரு சுக்ராச்சாரியாரின் மகள் தேவயானி ஒரு தலையாகக் காதலித்தாள். அவள் மூலமாக சுக்ராச்சாரியாரிடம் இருந்து கசன் மந்திரம் கற்றுக் கொண்டான். இதையறிந்த அசுரர்கள் கசன் உயிரோடு இருந்தால் அசுரர்குலத்திற்கு ஆபத்து வந்துவிடும் என நினைத்து , அவனைக் கொன்று சாம்பலாக்கினர்.

அசுரகுரு அறியாமலேயே அவர் குடிக்கும் பானத்தில் கலக்கி கொடுத்து விட்டனர். கசனைக் காணாத தேவயானி, தன் தந்தையிடம், கசனின் இருப்பிடத்தை கண்டறியும் படி வேண்டினாள். அசுரகுரு தன் ஞான திருஷ்டியால் கசன் தன் வயிற்றில் இருப்பதை அறிந்து, ம்ருதசஞ்சீவினி மந்திரம் மூலம் கசனை உயிர் பெறச் செய்தார். அவரது வயிற்றைக் கிழித்துக் கொண்டு கசன் வெளிவந்ததால், சுக்ராச்சாரியார் இறந்து விட்டார். தன்னைக் காப்பாற்றிய அசுரகுரு இறந்து கிடப்பதைக் கண்டு தான் அவரிடம் கற்ற மந்திரம் மூலம் அவரை உயிர்பெறச் செய்தான். சுக்ராச்சாரியார் தன் மகள் தேவயாணியை மணம் முடித்து செல்ல வேண்டும் என்று கூற, அதற்கு கசன், உங்கள் வயிற்றிலிருந்து மீண்டு வந்துள் ளதால் தேவயானி எனக்கு சகோதரி முறை வேண்டும், என பக்குவமாகக் கூறி தேவலோகம் கிளம்பினான். கடும்கோபம் கொண்ட தேவயானி, கசனை ஏழு மலைகளால் தடுத்து நிறுத்தி அசுரலோகத்திலேயே தங்க வைத்தாள். கசனைக் காணாத பிரகஸ்பதி, மகனை மீட்டுத்தரும்படி இத்தலத்து பெருமாளை வேண்டி தவமிருந்தார். பெருமாள், சககரத்தாழ்வாரை அனுப்பி கசனை மீட்டார். பின்பு பிரகஸ்பதியின் வேண்டுதலுக்கு இணங்கி இங்கேயே எழுந்தருளினார்.

சிறப்பம்சம்: குரு பகவானாகிய பிரகஸ்பதிக்கு சித்திரை மாதம் சித்திரை நட்சத்திரத்தன்று ஒரு சித்திரத் தேரில் எழுந்தருளி காட்சி தந்தார். எனவே தான் இத்தலம் சித்திரை நட்சத்திரத்திற்குரிய கோயிலாக விளங்குகிறது.இங்குள்ள சித்திர ரத வல்லபபெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன் சந்தன மரச்சிலையால் ஆன மூர்த்தியாக காட்சி தருவது விசேஷமான அம்சம். கோயிலுக்கு எதிரே குருபகவான், சக்கரத்தாழ்வாருடன் சுயம்பு வடிவில் இருக்கிறார்.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்: இங்கு குருபகவான், சக்கரத்தாழ்வார் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கின்றனர். இங்கு பெருமாள் தாயார்களுடன் சந்தன மரச்சிலையால் ஆன மூர்த்தியாக காட்சி தருவது விசேஷமான அம்சம். இத்தலத்தில் நவக்கிரகத்தில் வியாழன் கிரகம் யோக குருவாக அருள்பாலிக்கிறார்.