http://www.justdial.com/
Katalar tinam sariya / Thavara ?
காதல் என்ற ஒரு உணர்வு வரவில்லை என்றால் அந்த இளமைக்கு என்ன பயன் ?
ஆனாலும் காதல் என்று வந்துவிட்டாலே எதிர்ப்பும் கூடவே சேர்ந்து
வந்துக்கொண்டே தான் இருக்கிறது . சாதி , மதம் போன்ற முட்டாள்தனமான
எதிர்ப்புகளை நிராகரித்துவிடலாம் . ஆனால் காதலிப்பது அழிவின் ஆரம்பம் என்று
அறிவுரை கூறும் பெருசுகளை ?
அந்த பெருசுகள் அனைவரும் காதலிக்காமலா இருந்திருப்பார்கள் ? இவர்கள் கூற்றிலும் நியாயம் உண்டு .
இதுப்போன்று ஆங்காங்கே நடக்கும் சம்பவங்களை வைத்து காதல் ஆபத்தானது என்று தீர்மானித்துவிட முடியாது . இரு இதயங்களுக்குள்ளும் வரும் உன்னதமான ஒரு உணர்வே காதல் . இதற்க்கு அன்பை தவிர வேறெந்த எதிர்பார்ப்பும் இருக்காது. அப்படி இருந்தால் தான் அது "காதல்". அனைவரும் கண்டிப்பாக காதலிக்க வேண்டும் . ஆனால் காதல் என்றால் என்ன ? என்பதை புரிந்து வைத்துக்கொண்டு காதலிக்க வேண்டும்
"காமம்" என்பது உங்கள் துணை மீது நீங்கள் வைத்திருக்கும் அன்பின் வெளிப்பாடாக மட்டுமே இருக்க வேண்டும் . ஆனால் இன்று பலர் காதல் என்ற பெயரில் தங்கள் காம பசிக்கு தீனி போட்டுக்கொண்டிருக்கின்றனர் . பூங்காக்கள் ,கடற்கரைகள், போன்ற இடங்களில் இவர்கள் செய்யும் சேட்டைகளுக்கு அளவே இல்லை . உண்மையாக தன் காதலியை நேசிக்கும் எந்த ஒரு ஆணும் தன் காதலியின் இடுப்பை மற்றவர்கள் பார்க்க வேண்டும் என்று நினைக்க மாட்டான் ... ஆனால் இன்று .... தன் காதலியின் இடுப்பு அழகை பெருமைபடுத்தி மற்றவர்களிடம் பீத்திக்கொள்ளும் ஆண்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது . இவர்கள் செய்யும் விபசாரத்துக்கு "காதல்" என்ற புனிதமான வார்த்தையை பயன் படுத்திக்கொண்டிருக்கின்றனர் .
கண்டவுடனே காதல் ...".i love you" என்றவுடன் "me too" என்று சொன்னால் அது எப்படி காதல் ஆகிவிட முடியும் . வாழ்கையை பகிர்ந்துக்கொள்ள போகும் ஒரு நபரை பற்றி எவ்வளவு ஆராய வேண்டும்? இன்றைய மாடர்ன் உலகில் காதல் என்ற வார்த்தையை வைத்துக்கொண்டு சிலர் விபச்சாரம் செய்துக்கொண்டிருக்கின்றனர் .
இவர்களை சிலர் உசுப்பேற்றி விட்டு காசு பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் . உண்மையான அன்பை வெளிப்படுத்தும் காமம் நான்கு சுவற்றிற்குள் தனிமையில் மட்டுமே தலை தூக்கும் .
இப்பொழுதும் உண்மையான காதலர்கள் இருக்கிறார்கள் . அவர்களுக்கு காதலை வெளிப்படுத்த தனி நாள் எதுவும் தேவை இல்லை. அவர்களுக்குள் இருக்கும் வெள்ளந்தியான உறவுக்கு யாரோ எழுதி வைத்த வாழ்த்து அட்டைகள் தேவை இல்லை ..
ஹோட்டல்களிலும் கடற்கரைகளிலும் காம வெறியாட்டம் ஆடுவது உண்மையான காதல் கிடையாது .
முடிவாக ஒன்று ..........................................
சில காம கொடூரர்களை மட்டும் வைத்துக்கொண்டு காதலை குற்றம் சொல்லுவது சரியல்ல ,அவள் என் வாழ்க்கையில் வந்த உடனே அணைத்து கெட்டப்பழக்கங்களையும் விட்டு விட்டேன் என்று கூறும் ஆண்களும் இருக்கிறார்கள் . காதலர்கள் நினைத்தால் தவறான வழியில் செல்லும் தன் துணையை நிச்சயம் திருத்த முடியும் . காதல் யாரையும் கெடுக்கவில்லை நம்மில் சிலர் தான் காதலை கெடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.
இவன் ........
காதலை காதலிக்கும் உண்மையான காதலன்
அந்த பெருசுகள் அனைவரும் காதலிக்காமலா இருந்திருப்பார்கள் ? இவர்கள் கூற்றிலும் நியாயம் உண்டு .
ச
மீபத்தில் திருவண்ணாமலையில் உள்ள பொறியியல் கல்லூரி ஒன்றில் தன்
காதலியிடம் வெளிப்படுத்திய அன்பை (!) ஒரு மாணவன் செல் போனில் படம் எடுத்து
வெளியிட்டுள்ளான் . இந்த சம்பவத்தை ஆராய்ந்தால் பெருசுகளின் கோவத்தில்
உள்ள நியாயம் புரியும் . கல்லூரியிலேயே அழகான மாணவி . மாணவர்கள் அனைவரும்
பேசவே ஏங்கும் அவளிடம் பாச வார்த்தைகளை காட்டி ஏமாற்றி உள்ளான் அவன் . அவன்
வெளியிட்டுள்ள அந்த காட்சிகளை பார்க்கும் பொழுது அந்த பெண் வெறும்
காமத்திற்காக மட்டும் அவனிடம் பழகவில்லை என்பது புரிகிறது . அந்த பெண்ணிடம்
இருந்தது உண்மையான , தெய்வீகமான , கவித்துவமான காதல் தான் , ஆனால் அந்த
பையனிடம் >? இப்பொழுது பாதிக்கப்பட்டிருப்பது பெண்ணும் தானே ?
இதுப்போன்று ஆங்காங்கே நடக்கும் சம்பவங்களை வைத்து காதல் ஆபத்தானது என்று தீர்மானித்துவிட முடியாது . இரு இதயங்களுக்குள்ளும் வரும் உன்னதமான ஒரு உணர்வே காதல் . இதற்க்கு அன்பை தவிர வேறெந்த எதிர்பார்ப்பும் இருக்காது. அப்படி இருந்தால் தான் அது "காதல்". அனைவரும் கண்டிப்பாக காதலிக்க வேண்டும் . ஆனால் காதல் என்றால் என்ன ? என்பதை புரிந்து வைத்துக்கொண்டு காதலிக்க வேண்டும்
"காமம்" என்பது உங்கள் துணை மீது நீங்கள் வைத்திருக்கும் அன்பின் வெளிப்பாடாக மட்டுமே இருக்க வேண்டும் . ஆனால் இன்று பலர் காதல் என்ற பெயரில் தங்கள் காம பசிக்கு தீனி போட்டுக்கொண்டிருக்கின்றனர் . பூங்காக்கள் ,கடற்கரைகள், போன்ற இடங்களில் இவர்கள் செய்யும் சேட்டைகளுக்கு அளவே இல்லை . உண்மையாக தன் காதலியை நேசிக்கும் எந்த ஒரு ஆணும் தன் காதலியின் இடுப்பை மற்றவர்கள் பார்க்க வேண்டும் என்று நினைக்க மாட்டான் ... ஆனால் இன்று .... தன் காதலியின் இடுப்பு அழகை பெருமைபடுத்தி மற்றவர்களிடம் பீத்திக்கொள்ளும் ஆண்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது . இவர்கள் செய்யும் விபசாரத்துக்கு "காதல்" என்ற புனிதமான வார்த்தையை பயன் படுத்திக்கொண்டிருக்கின்றனர் .
கண்டவுடனே காதல் ...".i love you" என்றவுடன் "me too" என்று சொன்னால் அது எப்படி காதல் ஆகிவிட முடியும் . வாழ்கையை பகிர்ந்துக்கொள்ள போகும் ஒரு நபரை பற்றி எவ்வளவு ஆராய வேண்டும்? இன்றைய மாடர்ன் உலகில் காதல் என்ற வார்த்தையை வைத்துக்கொண்டு சிலர் விபச்சாரம் செய்துக்கொண்டிருக்கின்றனர் .
இவர்களை சிலர் உசுப்பேற்றி விட்டு காசு பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் . உண்மையான அன்பை வெளிப்படுத்தும் காமம் நான்கு சுவற்றிற்குள் தனிமையில் மட்டுமே தலை தூக்கும் .
இப்பொழுதும் உண்மையான காதலர்கள் இருக்கிறார்கள் . அவர்களுக்கு காதலை வெளிப்படுத்த தனி நாள் எதுவும் தேவை இல்லை. அவர்களுக்குள் இருக்கும் வெள்ளந்தியான உறவுக்கு யாரோ எழுதி வைத்த வாழ்த்து அட்டைகள் தேவை இல்லை ..
ஹோட்டல்களிலும் கடற்கரைகளிலும் காம வெறியாட்டம் ஆடுவது உண்மையான காதல் கிடையாது .
முடிவாக ஒன்று ..........................................
சில காம கொடூரர்களை மட்டும் வைத்துக்கொண்டு காதலை குற்றம் சொல்லுவது சரியல்ல ,அவள் என் வாழ்க்கையில் வந்த உடனே அணைத்து கெட்டப்பழக்கங்களையும் விட்டு விட்டேன் என்று கூறும் ஆண்களும் இருக்கிறார்கள் . காதலர்கள் நினைத்தால் தவறான வழியில் செல்லும் தன் துணையை நிச்சயம் திருத்த முடியும் . காதல் யாரையும் கெடுக்கவில்லை நம்மில் சிலர் தான் காதலை கெடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.
இவன் ........
காதலை காதலிக்கும் உண்மையான காதலன்
திருமலை நாயக்கர்
திருமலை நாயக்கர்
ஆட்சி மொழி | தெலுங்கு, தமிழ் |
தலைநகரம் | மதுரை 1529 – 1616, திருச்சிராப்பள்ளி1616–1634, மதுரை 1634 – 1695, திருச்சி 1695-1716, மதுரை 1716–1736. |
முன்ஆட்சி | பாண்டியர், தில்லி சுல்தான்கள், விஜயநகரப் பேரரசு |
பின்ஆட்சி | இசுலாமியர், ஆங்கிலேயர் ஆட்சி, ( மைசூர் அரசு திண்டுக்கல்,கோவை,சேலம்) |
பிரிவு | ராமநாதபுரம்
புதுக்கோட்டை சிவகங்கை |
(குறிப்பு: படங்கள், செய்திகள் விக்கிமீடியா தளங்களில் இருந்து சேகரித்து பகிரப்பட்டுள்ளது)
பொருளடக்கம் |
ஆரம்பகாலம்
திருமலை நாயக்கர் மதுரையில் பெம்மசானி கோத்திரத்தில், கம்ம நாயக்கர் குலத்தில், தைப்பூசத்திருநாளன்று பிறந்தார். இவர் முத்துக் கிருஷ்ணப்ப நாயக்கர் மகனாக கி.பி 1584 ஆம் ஆண்டில் பிறந்தார். இவரது இயற்பெயர் திருமலை சவுரி நாயுனு அய்யலுகாரு என்பதாகும். முதலாம் முத்துவீரப்பர் சந்ததியின்றி இறந்தமையால் இவரது தம்பி திருமலை நாயக்கர் மதுரை நாட்டின் ஆட்சி பொருப்பை ஏற்றார்.ஆட்சிப் பகுதிகள்
திருமலை நாயக்கர் திருச்சிராப்பள்ளியிலிருந்து தலைநகரை மீண்டும் மதுரைக்கு மாற்றினார்.[தொகு] ஆட்சியின் கீழ் இருந்த பகுதிகள்.
- திருநெல்வேலி நாடு, திருவிதாங்கூர் ஆட்சிபகுதியின் ஒரு பகுதி இத்துடன் தமிழ்நாட்டில் உள்ள
- மதுரை,
- திண்டுக்கல்,
- ராமநாதபுரம்,
- சிவகங்கை,
- புதுக்கோட்டை,
- மணப்பாறை,
- கோயம்புத்தூர்,
- சேலம் மற்றும்
- திருச்சிராப்பள்ளி போன்ற பகுதிகள் நாயக்க மன்னரால் ஆளப்பட்டன.
இங்கு குறிக்கப்பட்டுள்ள ஊர்கள், அந்த ஊர்களுடன் சேர்த்து அந்தந்த ஊர்களை தலைநகராக கொண்ட பகுதிகளையும் குறிக்கின்றன. இருப்பினும் இந்த பகுதிகள் திருமலை நாயக்கரின் ஆளுகையில் இருந்தாலும் இவற்றை நேரடியாக ஆட்சி செய்தவர்கள் அந்த பகுதிகளில் நியமிக்கப்பட்ட பாளிகார் என்றழைக்கப்படும் பாளையக்காரர்கள்தான்.
கட்டிடக்கலை
தமிழக மக்கள் மறவாது நினைக்குமாறு மதுரையை விழாநகரமாகவும்,கலைநகரமாகவும் மாற்றியமைத்தார். திருமலை நாயக்கர், கட்டிடக்கலை உள்ளிட்ட கலைகள் மீது ஆர்வம் கொண்டு அவற்றின் வளர்ச்சிக்குப் பெரும் பங்களித்தார். பழைய கோயில்களைத் திருத்தி அமைத்தார். திருமலை நாயக்கர் மகால் என அழைக்கப்படும் அரண்மனை திருமலை நாயக்கரால் கி.பி. 1636 ஆம் ஆண்டில் கட்டுவிக்கப்பட்டது.[தொகு] மணிமண்டபம்
திருமலை நாயக்கர் திருவில்லிபுத்தூர் ஆண்டாள் தீவிரமான பக்தன். தினந்தோரும் ஆண்டாள் கோவில் உச்சிகால பூசை முடித்த பின் மதிய உணவு உட்கொள்வது வழக்கம். மன்னர் மதுரையில் இருக்கும்போது ஆண்டாள் கோவில் பூசை மணிஓசையை அறிந்துகொள்ள வழிநெடுக பல மணிமண்டபங்களை அமைத்தார்.[1][தொகு] காட்சி கோப்பகம்
-
திருமலைநாயக்கர் மகால் முகப்பு
-
திருமலைநாயக்கர் மகால்தர்பார் மண்டபம்
-
-
-
-
-
-
-
குமரிக்கண்டம்
குமரிக்கண்டம் என்பது முற்காலத்தில் இருந்ததாகக் கருதப்படும், கோட்பாடுகளால் ஊகிக்கப்படும் அல்லது இலக்கியங்களில் கற்பனையாகவோ சாட்சியாகவோ கூறப்படும் கண்டம் அல்லது பெருநிலப்பரப்பாகும். குமரிக்கண்டம் எனும் கண்டம் போன்ற பெரும் நிலப்பகுதியானது இன்றுள்ள இந்தியாவின் எல்லையான குமரி முனைக்குத் தெற்கே முற்காலத்தில் பாண்டியர்களின் ஆட்சிக்கு கீழ் அமைந்திருந்தது எனக் கருதுவதற்கு இடம் தரும் வகையில் பண்டைத் தமிழ் இலக்கிய நூற்களில் சில தகவல்கள் உண்டு. தேவநேயப் பாவாணர் முதலானோர் இந்த குமரிக்கண்டத்தில்தான் மாந்தர்களும் தமிழர்களும் முதன்முதல் தோன்றினர் என எழுதியுள்ளனர்[1] ஆதி மனிதன் தோன்றியிருக்கக் கூடிய தென் குமரிக்கண்டம் கடல்கோளால் (சுனாமி போன்ற ஆழிப்பேரலைகளால்) அழிவிற்குட்பட்டது என்பது சில தமிழறிஞர்களின், அறிவியல் முறைப்படி நிறுவப்படாத, கருத்து. பண்டைத்தமிழ் இலக்கிய நூல்களில் கிடைக்கப்பெறும் தகவல்களில் சிலவற்றைக் கீழே காணலாம்:
2. மொழி அடர்த்தி
தமிழர்கள் குமரிக்கண்டத்தில் இருந்து வடக்கு நோக்கி குடிபெயர்ந்தனர் என்பதற்கு தமிழகத்தில் தமிழ் மொழியின் தாக்கம் அதிகமாகவும், வடக்கே செல்லச் செல்ல தமிழ் மொழியின் தாக்கம் அப்பகுதி மொழிகளில் குறைந்திருப்பதை கொண்டும் தமிழ் மக்கள் குமரிக்கண்டத்திலிருந்து வடக்கு நோக்கி குடிபெயர்ந்ததை அறியலாம்.இக்கருத்தை ஏற்கனவே தேவநேயப் பாவாணர் என்றவரும் கூறியிருக்கிறார்.[25]
3. ஞாலவியல் அட்டவணை
அதன்படி லெமூரிய நாகரிகத்தை அகழாய்வு மூலம் நிரூபிக்க குறைந்தது 15,000 அடி அகழாய்வு செய்ய வேண்டிவரும்.
4. காலவணை(ஸ்காட் எலியட்)
இந்த அட்டவணையின் படி இலெமூரியாவின் காலம் கி.மு.2,00,000-50,000 வரை செல்லும்.
- சிலப்பதிகாரத்தில் "பஃறுளியாறும்", "பன்மலை அடுக்கத்துக் குமரிக்கோடும்" "கொடுங்கடல் கொண்டது" பற்றிக் கூறுகின்றது.
- அடியில் தன்னள வரசர்க் குணர்த்தி
வடிவே லெறிந்த வான்பகை பொறாது
பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக்
குமரிக் கோடுங் கொடுங்கடல் கொள்ள
வடதிசைக் கங்கையும் இமயமும் கொண்டு
தென்றிசை யாண்ட தென்னவன் வாழி (சிலப். 11:17-22) - பாண்டியனை வாழ்த்தும் பொழுது
"செந்நீர்ப் பசும்பொன் வயிரியர்க் கீத்த
முந்நீர் விழவின் நெடியோன்
நன்னீர்ப் பஃறுளி மணலினும் பலவே" (புறம் 9) - "தொடியோள் பௌவம்" என்னும் சிலப்பதிகாரத் தொடர்க்கு அடியார்க்கு நல்லார் என்னும் உரையாசிரியர் கொடுக்கும் விரிவான விளக்கத்தில் "தென்பாலி முகத்திற்கு வடவெல்லையாகிய பஃறுளி என்னும் ஆற்றிற்கும் குமரியென்னும் ஆற்றிற்கும் இடையே எழுநூற்றுக் காவத வாறும், இவற்றின் நீர்மலிவானென மலிந்த ஏழ்தெங்க நாடும், ஏழ்மதுரை நாடும், ஏழ்குணகாரை நாடும், ஏழ்பின்பாலை நாடும், ஏழ்குன்றநாடும், ஏழ்குணகாரை நாடும், ஏழ்குறும்பனை நாடும் என்னும் இந்த நாற்பத்தொன்பது நாடும் குமரி கொல்லம் முதலிய பன்மலைநாடும், காடும் நதியும் பதியும் தடநீர்க்குமரி வடபெருங்கோட்டின் காறும் கடல் கொண்டொழிதலாற் குமரியாகிய பௌவ மென்றா ரென்றுணர்க." [2]
- இரண்டாம் சங்கம் இருந்த காலத்தில் கபாடபுரம் என்ற தலைநகரம் முழுகிய பின்னரும் குமரி ஆறு இருந்ததென்பதை தொல்காப்பிய சிறப்புப் பாயிர வரி, "வட வேங்கடந் தென்குமரி" குறிப்பதாகக் கருதுகின்றனர்.
- தெனாஅ துருகெழு குமரியின் தெற்கும்"
"குமரியம் பெருங்துறை யயிரை மாந்தி" (புறம் 6:67) - "மலிதிரை யூர்ந்துதன் மண்கடல் வௌவலின்
மெலிவின்றி மேற்சென்று மேவார்நா டிடம்பட" (கலித். 104)
என்னும் குறிப்பு, பழம் பாண்டிய நாட்டை கடல்கொண்டதை குறிக்கின்றது என்பர். - இறையனார் அகப்பொருள் உரையில் விரிவாக ஆண்ட அரசர்களின் வரிசை, தமிழ் அவையில் இருந்த புலவர்களின் வரிசை முதலியன குறிக்கப்பெற்றுள்ளன. இது போல செய்திகள் தமிழ் இலக்கியத்தில் வேறு எங்கும் இல்லை.
குமரிக்கண்டம் இருந்தது என்று கருதுவோரின் வாதங்கள்
உண்மையிலேயே குமரிக்கண்டம் என்ற கண்டம் இருந்தது என்று கருதுவோர் பின்வரும் வாதங்களை முன் வைக்கின்றனர்.கடலியல் ஆதாரம்
1960 ஆம் ஆண்டு இந்து மாக்கடலில் கடற்தள ஆராய்ச்சியாளர் செய்த ஆராய்ச்சியில் தமிழகத்தின் கன்னியாகுமரிக்குத் தெற்கே இரண்டு கண்டங்கள் இருந்திருப்பதைக் கண்டுபிடித்துள்ளதாகச் சொல்கிறார்கள்.[3] முதலாக கப்பலில் சென்று ஒலிச்சமிக்ஜை அனுப்பி உளவு செய்ததில் [Ultra-Sonic Probing] தென்பகுதிக் கடலடியில் நீண்ட மலைத்தொடர் ஒன்று இருப்பதைக் கண்டார்கள். 1960-1970 ஆண்டுகளில் தயாரிக்கப்பட்ட இந்து மாக்கடல் கடற்தள வரைபடங்களில், குமரிக் கண்டத்தின் பூர்வீக அமைப்பு நிலை காணப்படுகிறது. அரபிக் கடலுக்குத் தெற்கில், லட்சத் தீவுகள் நீட்சியில் மாலத் தீவின் வடக்குப் பகுதியுடன் பிணைந்து, தெற்கில் சாகோஸ் ஆர்கிபிலாகோ [Chagos, Archipelago] வரை சுமார் 2000 மைல் தூரம் வரைக் குமரிக் கண்டம் இருந்திருப்பதாகத் தெரிகிறது. பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்த [கி.மு.8000] பனி யுகத்தின் போது [During the Ice Age] இந்து மாக்கடலில் கடல்நீர் மட்டம் குன்றிக் குமரிக் கண்டம் முழுவதும் புறத்தே தெரியும்படி மேலாக உயர்ந்திருந்தது.[4]குருதி ஆதாரம்
அமேரிக்காவை வரலாற்றுக் காலத்திற்கு முன்னே தென்னிந்தியர் கண்டுபிடித்து விட்டனர் என்பது அண்மைக் காலத்திய ஆராய்ச்சியாளர் கொள்கை. இதை நிரூபிக்க சோவியத் அறிவியல் ஆய்வாளர் யூரி இரெசெதோவ் தான் பல்வேறு மானிட இனத்தவரிடையே குருதிச்சோதனையில் இறங்கியதாக குறிப்பிடுகிறார். அதன்படி செவ்விந்தியரும் தென்னிந்தியரும் 20,000 ஆண்டுகளுக்கு முன் ஒன்றாக வசித்ததாக குறிப்பிடுகிறார்.[5]அதனால் இரண்டுக்கும் நடுவில் ஒரு கண்டம் இருக்க வேண்டும்.அகிலத்திரட்டு அம்மானை
அகிலத்திரட்டு அம்மானை என்னும் அய்யாவழி மதத்தினரின் புத்தகத்தில் குமரி 152 மைல்கள் தெற்காக விரிந்திருந்தது என்றும் அதில் 16008 வீதிகள் இருந்ததென்றும் கூறப்பட்டிருக்கிறது.[6]இராமாயணத்தில் இடைச்சங்கம்:
- இடைச்சங்கத்தின் தலைநகரம் கபாடபுரமிருந்ததற்கான ஆதாரங்கள் ராமாயணத்தில் தென்படுகின்றன[7]. வால்மீகி தமிழ் சங்கத்தில் உறுப்பினராயிருந்தாரெனவும், ராமாயணத்தில் சங்கத்தலைநகரம் கபாடபுரமெனவும் இருக்கிறது.
- கால ஒற்றுமை - ராமாயணத்தின் காலம் கி.மு.4500-4000 என தெரிகிறது. இடைச்சங்கத்தின் காலம் கி.மு.5300-1600 என தெரிகிறது.
- திருவிளையாடல் புராணம்படி அனந்தகுண பாண்டியன் என்ற பாண்டிய அரசனின் ஆட்சியில் இராமன் இராவணன் மீது படையெடுப்பு நடத்தினான்.[8] சின்னமனூர் செப்பேடுகளிலும் தசமுகன் சார்பாக சந்து செய்து என்று பெயர் தெரியாத பாண்டிய மன்னனை குறிப்பிட்டுளதும் குறிப்பிடத்தக்கது.
நிலவியல்
தற்போதுள்ள இயற்பியல் பூகோள வரைபடங்களில் கி.மு.30000 குமரிக்கண்டமிருந்த இடத்தில் பெருமளவு கடலின் ஆழம் 200அடி வரை இருக்கிறது. சில இடங்களில் 2000அடி வரை இருக்கிறது [9]. இப்பகுதிகள் தற்போது குறைவான ஆழம் கொண்டுள்ளதால் இங்கு குமரிக்கண்டம் இருந்ததற்கான சாத்தியக்கூறுகள் அதிகம்.பெயரியல் மற்றும் மொழியியல் சான்றுகள்
- சுமேரிய மொழியில் 5000 ஆண்டுகளுக்கு முன்பு உபயோகப்படுத்தப்பட்ட வாக்கியமான கி ரி அ கி பட் டு ரி யா என்ற வாக்கியமே குமரிக்கண்டம் ஆகும். இதன் அக்கால தமிழ் உச்சரிப்பு க ரி ய ர வ ன ட ஆகும். இதன்படி சுமேரிய நாகரிகத்தில் 5000 ஆண்டுகளுக்கு முன்பே குமரிக்கண்டம் என்ற வார்த்தை இருந்ததை அறியலாம்.[10] உலகில் முதன்முதல் எழுதப்பட்ட மொழி சுமேரியம் என்றும், அது கி.மு. 3100-ல் எழுத்துமொழியாய் வழங்கியதற்குச் சான்றுள்ள தென்றும் பிரித்தானியக் கலைக்களஞ்சியத்திற் கூறப்பட்டுள்ளது. தமிழகத்தினின்று சென்ற ஒரு கூட்டத்தாரே சுமேரியரின் முன்னோர் என்ற கருத்தும்[11] அச்சுமேரியர் குமரியை பெயர் வைத்து அழைத்ததும் வியப்பில்லை.
- சடைச்சங்கத்தில் குமரியாறு மற்றும் பஃறுளியாறு உற்பத்தியான மேருமலை இருந்ததற்கான சாத்தியக்கூறுகள் சீன பழங்கதைகளில் (CHRONICLES) கூட தென்படுகின்றன.[12] பாண்டிய மன்னனொருவன் தங்க சுரங்கங்களை தோண்ட சீன அடிமைகளை பயன்படுத்தினான். அவர்களை பொன் தோண்டி எறும்புகள் என இலக்கியம் கூறுகிறது.[13] மேருவைச் சேர்ந்த காகமும் பொன்னாம் என்ற பழமொழியுமுண்டு.
- முருகனின் இலக்கியப்பெயர் குமரவேல் பாண்டியன் ஆகும். குமரனின் மனைவி குமரியாதலால் இஃது குமரிக்கண்டமென பெயர் பெற்றிருக்கலாம்.[14][15] மேலும் கந்தபுராணம் படி குடிலை, சிவை, உமை, தரணி, சுமனை, சிங்கை மற்றும் 'குமரி என்று ஏழு ஆறுகள் ஓடியதாகவும் உள்ளது.[16]
- இலெமூரியா = இலை (வம்சம்) + முரி (முரிந்த,அழிந்த)
சித்தரியல்
சித்தர்கள் சில பேர் இக்குமரியில் வாழ்ந்ததாக சைவவாதிகள் கருதும் வண்ணம் சில சான்றுகளும் உள்ளன. இங்கு வாழ்ந்ததாக கருதப்படும் சித்தர்கள்,- காகபுசுண்டர்[18] (மேருமலையில் இவர் சிரஞ்சீவியாக இருப்பதாக கருதப்படுகிறது[19])
- அகத்தியர்[20]
- போகர்
- மகாவதார பாபா[21]
மயன் பற்றிய குறிப்புகள்
குமரிக்கண்டத்தில் வசித்ததாக கருதப்படும் மயன்[22] பற்றியும் வைசம்பாயனம் மற்றும் ஐந்திறம் போன்ற நூல்களிலும் காணப்படுகின்றன. அதனால் குமரிநாடும் அதன் எல்லைகளும் சங்கம்-முச்சங்கம் பற்றிய செய்திகளும் உறுதிப் படுத்தப்படுகின்றன.- ஐந்திறம் கூறும் குமரிக்கண்டம்
- வைசம்பாயனம் கூறும் குமரிக்கண்டம்
நூல் பதிவுகள்
கடல் கொண்ட தென்னாடு
- கா. அப்பாத்துரையின் வாதங்கள்
2. மொழி அடர்த்தி
தமிழர்கள் குமரிக்கண்டத்தில் இருந்து வடக்கு நோக்கி குடிபெயர்ந்தனர் என்பதற்கு தமிழகத்தில் தமிழ் மொழியின் தாக்கம் அதிகமாகவும், வடக்கே செல்லச் செல்ல தமிழ் மொழியின் தாக்கம் அப்பகுதி மொழிகளில் குறைந்திருப்பதை கொண்டும் தமிழ் மக்கள் குமரிக்கண்டத்திலிருந்து வடக்கு நோக்கி குடிபெயர்ந்ததை அறியலாம்.இக்கருத்தை ஏற்கனவே தேவநேயப் பாவாணர் என்றவரும் கூறியிருக்கிறார்.[25]
3. ஞாலவியல் அட்டவணை
எண் | காலப்பகுதிப்பெயர் | மண்தொகுதிகள் | திண்மை | செடிவகை | உயிர்வகை | மனித நாகரிக வகை |
---|---|---|---|---|---|---|
1. | ஆர்க்கிலத்திக் (அ) ப்ரைமார்த்தியல் | லாரண்டியன், கேம்ப்ரியன், சைலூரியன் | 70,000 அடி | மாலசு | தலை ஓடற்றவை | இல்லை |
2. | பழங்கற்காலம் | டிவோனியன், நிலக்கரி, பெர்மியன் | 42,000 அடி | சூரல் காடுகள் | மீன்கள் | இல்லை |
3. | நடுகற்காலம் | திரியோசிக், சுராசிக், க்ரெட்டேசியசு | 15,000 அடி | தேவதார காடுகள் | ஊர்வன | இலெமூரியா |
4. | கடைக்கற்காலம் | இயோசீன், மியோசீன், பிளியோசீன். | 5,000 அடி | இலை உதிர் காடுகள் | பால்குடிகள் | அட்லாண்டியா |
5. | சிலைக்கற்காலம் | டிலூவியல், ப்ளீசுடோசீன், அலூவியல் | 500 அடி | பயிற்றப்பட்ட காடுகள் | பால்குடிகள் | ஆர்யம் |
4. காலவணை(ஸ்காட் எலியட்)
எண் | நாகரிகம் | கால வருடங்கள் |
---|---|---|
1. | இலெமூரியா | கி.மு.2,00,000-50,000 |
2. | அட்லாண்டியா | கி.மு.50,000-40,000 |
3. | ஆர்யம் | கி.மு.4,000 |
ஆதாரம்
மூலம்: ANCIENT INDIA[26][27]- “ANCIENT INDIA” புத்தகத்தில் தென்னிந்தியாவும் குமரிக்கண்டமும் இணைந்த பகுதிகளின் யூக வரைபடங்கள் கி.மு.30000, கி.மு.8000, கி.மு.4400, கி.மு.3100 மற்றும் கி.மு.2700 வரை கிடைக்கிறது.
- சங்க ஆதாரங்கள் மற்ற மொழியிலுள்ள (சீன மற்றும் வட மொழி) நூல்களிலும் அதனதன் காலத்திற்கு ஒத்து வருகின்றன.
- சடைச்சங்கத்தில் முருகன் புலவனென இலக்கியமும், முருகனின் காலம் முந்தைய கலியுகமென கந்தபுராணமும் குறுகிறது. ISIAC வெளியிட்ட வானியல் மூலம் வரலாறு காண்போம் என்ற புத்தகத்தில் யுகக்கணக்குகள் தெளிவாக வரையருக்கப்பட்டுள்ளன. அதன்படி யுகங்களின் காலம்
கிருதம் - (4864) வருடங்கள்.
திரேதம் - (3648) வருடங்கள்.
துவம் - (2432) வருடங்கள்.
கலி - (1216) வருடங்கள்.
மொத்தம் (12160) வருடங்கள்.
Subscribe to:
Posts (Atom)