ஆங்கிலம் கற்றுக்கொள்ள உதவும் மின் நூல்களைய் இலவசமாக வழங்கும் இணையதள முகவரிகள் சில கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
www.english-at-home.com
www.freelanguage.org
www.bartleby.com
www.effortlessenglishclub.com/7-rules-to-learn-execellent-english-speaking
http://www.e-book.com.au/freebooks.html
www.edufind.com/ENGLISH/grammar/INDEX.CFM
www.esldepot.com/section.php/5/0
www.mobipocket.com/en/eBooks/Category.asp?Language=EN&categoryId=89&Name=Language+%26+Linguistics
www.ebook300.com/The-Cambridge-Encyclopedia-of-the-English-Language6673.html
www.ebooksbay.org/Free_Learning_English_Ebooks_Download_Free_Language_ebooks/2008/01/06/
www.english-test.net/esl/english-grammar-test.html
மிக சிறந்த பத்து மென்பொருள்கள்
சென்ற ஆண்டில் இலவசமாகக் கிடைத்த, எளிய ஆனால் பயன் அதிகம் தந்த சில புரோகிராம்கள் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளன. இன்னும் இவை பற்றி அறியாதவர்கள், இவற்றை இறக்கி இன்ஸ்டால் செய்து பயன்படுத்தலாம்.
1.வி.எல்.சி (VLC): மீடியா பிளேயர்களுக்கான புரோகிராம். மீடியாவில் எந்த பார்மட்டில் ஒரு பைலைக் கொடுத்தாலும் அதனை இயக்கும். வீடியோ பைல்களை, ஐபாட் சாதனத்திற்கேற்ற வகையில் மாற்றித்தரும். சிடி, டிவிடிக்களைப் பிரித்து சிறிய பைல்களாக மாற்றித்தரும். கிடைக்கும் தளம் : http://www.videolan.org/vlc/
2. பாக்ஸ் இட் ரீடர் (FoxIt Reader): அடோப் ரீடர் தொகுப்பின் இடத்தில் வைத்துப் பயன்படுத்தக் கூடிய சிறிய பி.டி.எப். ரீடர் புரோகிராம். விண்டோஸ், விண்டோஸ் மொபைல், லினக்ஸ் மற்றும் பிற சிஸ்டங்களுக்கும் கிடைக்கிறது. கிடைக்கும் தளம்: http://www.foxitsoftware.com/pdf/reader/
3. பிட்ஜின் அண்ட் அடியம் (Pidgin and Adium): இந்த இரண்டும் இன்ஸ்டன்ட் மெசேஜ் கிளையண்ட் புரோகிராம்ஸ். பிட்ஜின் விண்டோஸ் சிஸ்டத்திலும், ஏடியம் மேக் சிஸ்டத்திலும் இயங்கும். சிறிய எளிதான புரோகிராம். கிடைக்கும் தளம்: http://adium.im
4. இர்பான் வியூ (IrfanView) : மிக விரைவாக போட்டோக்களைப் பார்ப்பதற்கும், எடிட் செய்வதற்கும் உரிய சிறிய புரோகிராம். இதில் அதிகமான எண்ணிக்கையில் கீ போர்ட் ஷார்ட் கட்களைப் பயன்படுத்தலாம். கிடைக்கும் தளம்: http://www.irfanview.com
5. பயர்பாக்ஸ்: சென்ற ஆண்டில் மிக அதிகமாக டவுண்லோட் செய்யப்பட்ட பிரவுசர் புரோகிராம். இது பற்றி ஒவ்வொரு இதழிலும் ஏற்கனவே எழுதப்பட்டுள்ளது. கிடைக்கும் தளம்: http://www.mozilla.com/enUS/firefox/personal.html
6. செவன் ஸிப் (7Zip): பைல்களைச் சுருக்க, விரிக்க உதவிடும் புரோகிராம். அதிகமான எண்ணிக்கையில் டவுண்லோட் செய்யப்பட்ட புரோகிராம். பல்வேறு ஸிப் பைல் பார்மட்களைக் கையாள்கிறது. கிடைக்கும் தளம்: http://www.7zip.org/
7. ஆப்பரா (Opera) : பலரால் அதிகம் கவனிக்கப்படாத, ஆனால் மிகச் சிறந்த பிரவுசர். கூடுதல் பாதுகாப்பு, அதிக எண்ணிக்கையில் ஷார்ட் கட் கீகள் ஆகியவை கொண்ட எளிய சிறிய புரோகிராம். http://www.opera. com/browser/
8. ஸ்கைப் (Skype): இன்டர்நெட் வழி பேசி தொடர்பு கொள்வதனை மக்களிடையே பிரபலமாக்கிய புரோகிராம். இன்றும் வீடியோ கான்பரன்சிங் மற்றும் இருநபர் பேச்சு வழி தொடர்புக்கு சிறந்த புரோகிராமாகக் கருதப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக நாடு கடந்து வாழும் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் பேசிட, வெப்காம் வழி பார்த்துப் பேசிட இது சிறப்பாக உதவுகிறது. விண்டோஸ், மேக், லினக்ஸ் மற்றும் பல மொபைல் சிஸ்ஸங்களுக்கு எனத் தனித்தனி பதிப்புகள் கிடைக்கின்றன. கிடைக்கும் தளம்: http://www.skype. com/
9. க்யூட் பி.டி.எப். ரைட்டர் (CutePDF Writer): டாகுமென்ட்களை பி.டி.எப். பைலாக மாற்ற அதிகமான எண்ணிக்கையில் டவுன்லோட் செய்யப்பட்டு பயன்படுத்தப்படும் புரோகிராம். கிடைக்கும் தளம்: http://www.cutepdf.com/
10. கீப் பாஸ் (KeePass): எத்தனை பாஸ்வேர்ட் களைத்தான் நினைவில் வைத்திருப்பது? கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்கள் அடிக்கடி எதிர்கொள்ளும் கேள்வி இது. அவர்களுக்காகவே இந்த ஓப்பன் சோர்ஸ் புரோகிராம் உதவுகிறது. இதற்கான மாஸ்டர் பாஸ்வேர்டை மட்டும் நினைவில் வைத்துக் கொண்டால் போதும். பிற பாஸ்வேர்ட்களை இந்த புரோகிராம் நினைவில் வைத்து உங்களுக்கு உதவும். கிடைக்கும் தளம்: http://keeppass.info/
அருள்மிகு ஏடகநாதர் திருக்கோயில்
|
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||
பாடியவர்கள்: | ||
திருஞானசம்பந்தர் தேவாரப்பதிகம் குண்டலந் திகழ்தரு காதுடைக் குழகனை வண்டலம் பும்மலர்க் கொன்றைவான் மதியணி செண்டலம் பும்விடைச் சேடனூர் ஏடகம் கண்டுகை தொழுதலுங் கவலைநோய் கழலுமே. -திருஞானசம்பந்தர். தேவாரப்பாடல் பெற்ற பாண்டியநாட்டுத்தலங்களில் இது 4வது தலம். |
||
திருவிழா: | ||
சித்திரையில் மாதப்பிறப்பும், வைகாசியில் விசாகமும், ஆனி உத்திரத்தில் நடராஜருக்கு திருமஞ்சனமும், ஆடிப்பூரத்தில் அம்பாளுக்கு பூப்புனித நீராட்டும், ஆவணி அவிட்டத்தில் (பவுர்ணமி) ஏடு எதிர் ஏறிய உற்ஸவமும், ஐப்பசியில் சூர சம்ஹாரமும், கார்த்திகையில் தீபத்திருவிழாவும், மார்கழியில் ஆருத்ரா தரிசனமும், தை மகத்தில் தெப்பத்திருவிழாவும், மாசியில் மகாசிவராத்திரியும், பங்குனியில் உத்திரமும் நடக்கின்றன. கார்த்திகை மாத சோமவாரங்களில் சங்காபிஷேகம் நடக்கிறது. | ||
தல சிறப்பு: | ||
இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். சிவராத்திரியன்று பைரவர் பூஜை : எல்லாசிவாலயங்களிலும் சிவலிங்கத்திற்கு தான், இரவு நேரத்தில் நான்கு ஜாம அபிஷேகம், பூஜை நடைபெறும். ஆனால், திருவேடகத்தில் சிவராத்திரியன்று நான்காம் ஜாம கால பூஜையில், பைரவருக்கு அபிஷேகம் நடக்கிறது. காசியிலும் சிவராத்திரியின் நான்காம் ஜாம கால பூஜை பைரவருக்கு நடத்தப்படும். அதே அடிப்படையில், இந்தக் கோயிலிலும் காலபைரவருக்கு பூஜை நடப்பது சிறப்பானது. இந்த பூஜையைக் காண்பவர்கள் அஸ்வமேதயாகம் செய்த பலனை அடைவர். | ||
திறக்கும் நேரம்: |
காலை 6.30 மணி முதல் 12 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். | ||
முகவரி: | ||
அருள்மிகு ஏடகநாதசுவாமி திருக்கோயில், திருவேடகம் - 624 234, மதுரை மாவட்டம். | ||
போன்: | ||
+91- 4543-259 311 | ||
பொது தகவல்: | ||
கிழக்கு நோக்கிய கோயில், வண்ண வளைவுள்ளது. அம்மையப்பருக்கு ஐந்து நிலை கோபுரங்கள் தனித்தனியே காட்சி தருகின்றன. பிராகாரத்தில் அறுபத்து மூவர் சன்னதிகள், பாலகணபதி, தட்சிணாமூர்த்தி, ஏடகநாதர், ஏலவார்குழலி, ஆறுமுக சுவாமி, கணபதி, சோமாஸ்கந்தர், ஞானசம்பந்தர் உற்சவத்திருமேனிகள் உள்ளன. பிரமன், திருமால், ஆதிசேஷன், கருடன், வியாசர், பராசரர் ஆகியோர் வழிபட்டுள்ளனர். திருமணஞ்சேரியைப் போல திருமணப் பிரார்த்தனைக்குரிய தலம் திருவேடகம். |
||
பிரார்த்தனை | ||
திருமணஞ்சேரியில் திருமணத்தடை உள்ள ஆண், பெண்கள் பரிகார பூஜை செய்வது போல, இங்கும் பரிகார பூஜை செய்யப் படுகிறது. ஏலவார்குழலிக்கு மாலை அணிவித்து, அதை வீட்டுக்கு கொண்டு செல்ல வேண்டும். 48 தினங்கள் தொடர்ந்து பூஜித்து வர, திருமணத்தடை நீங்கப்பெற்று விரைவில் திருமணம் நடக்கும் என்பது நம்பிக்கை. திருமணத்திற்குப் பின் தம்பதி சமேதராக இங்கு வந்து சுவாமி, அம்பாளை வழிபட வேண்டும். | ||
நேர்த்திக்கடன்: | ||
சுவாமி, அம்பாளுக்கு வஸ்திரம் அணிவித்தும், கோயில் திருப்பணிக்கு பொருளுதவி செய்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம். | ||
தலபெருமை: | ||
இரண்டு தீர்த்தங்கள் :
பிரம்மன் உண்டாக்கிய பிரம்மதீர்த்தம் இங்குள்ளது. தற்போது இது காய்ந்து
கிடக்கிறது. இந்த தீர்த்தத்தில் நீராடியவர்களுக்கு சித்தபிரமை நீங்கியதாம்.
இப்போதும் இதை தூரெடுத்து, படித்துறைகளை சீர்செய்தால், மிகப்பெரிய
தீர்த்தம் ஒன்று காப்பாற்றப்பட்ட பெருமை கிடைக்கும். பக்தர்கள்
இதற்குரியமுயற்சியை எடுக்க வேண்டும். இந்த பிரம்மதீர்த்தத்தில் தைமாதத்தில்
மகத்தன்று தெப்பத்திருவிழா நடந்தது. தற்போது தண்ணீர் இல்லை என்பதால்,
தெப்பத்திற்குள் சுவாமியை வலம் வரச்செய்ய மட்டும் செய்கிறார்கள். இதுதவிர
கோயில் முன்பு ஓடும் வைகைநதியும் மற்றொரு தீர்த்தமாக உள்ளது. இவ்வூரில்
வைகைநதி தெற்கிலிருந்து வடக்காக ஓடுகிறது. காசியிலுள்ள கங்கை இவ்வாறு தான்
ஓடும். ஆற்றின் வடகரையில் இத்தலம் அமைந்துள்ளது. இறந்தவர்களின் ஆன்மா
மோட்சகதி அடைய வேண்டி வகையில் அஸ்தி கரைக்கிறார்கள். மேலும், பிறவியை
முடித்த உயிர்கள் நற்கதி அடைவதற்காக மோட்சதீபம் ஏற்றும் வழக்கமும் இந்தக்
கோயிலில் உள்ளது. எல்லாமே ஒரு நாள் : இங்கு 12 மாதமும் திருவிழா உண்டு. புரட்டாசி நவராத்திரி தவிர எல்லா விழாக்களுமே ஒருநாள் மட்டுமே நடக்கும் என்பதுவிசேஷம். கொடிமரம் இருந்தும், பிரம்மோற்ஸவம் நடைபெறுவதில்லை. சித்திரை முதல்நாளில் மட்டும் கொடிமரத்திற்கு அபிஷேகம் செய்யப்பட்டு, பஞ்சாங்கம் வாசிக்கப்படுகிறது. திருமண பிரார்த்தனை : துவாரபாலகர்களுக்கு புடவை: சிவன் கோயில்களில், சுவாமி சன்னதியில் இரண்டு துவார பாலகர்கள் பாதுகாப்பாக நிற்பர். அம்மன் சன்னதியில் துவார பாலகியர் இருப்பர். ஆனால், இங்குள்ள ஏலவார்குழலியம்மன் சன்னதியில் இரண்டு துவாரபாலகர்கள் காவலுக்கு நிற்கின்றனர். இது வித்தியாசமான அமைப்பாக உள்ளது. அம்பாள் மீது கொண்ட அன்பின் காரணமாக, சில சமயங்களில் அர்ச்சகர்கள், இந்த துவாரபாலகர்களுக்கு புடவையை உடுத்தி, துவாரபாலகிகளாக பாவித்துக் கொள்கிறார்கள். விநாயகர்கள் : இங்குள்ள ஒரு தூணில் மூஞ்சூறு வாகனத்தில் அமர்ந்த நிலையிலுள்ள விநாயகரின் சிற்பம் வித்தியாசமாக இருக்கிறது. இவரை "செவிசாய்த்த விநாயகர்' என்கின்றனர். தன்னிடம் வரும் அன்பர்களின் வேண்டுதல்களையும், மனக்குறைகளையும் கேட்கும் விதத்தில் தன் காதினை நமக்கு காட்டி அமர்ந்திருப்பதால் இந்தப்பெயர் ஏற்பட்டது. சம்பந்தர் வைகை ஆற்றில் விட்ட ஏட்டினை திருவேடகத்தில் தடுத்து நிறுத்தி கரை சேர்க்க காரணமாக அமைந்தவர் விநாயகர். ஆற்றுநீரை எதிர்த்து வந்த ஏட்டின் நான்கு மூலைகளிலும் பாதுகாப்பாக நின்று, நான்கு மீன்களாக மாறி அதை கரைக்கு கொண்டு வந்து சேர்த்தார். பின்னர் ஏட்டை தன் துதிக்கையில் தாங்கி, படித்துறையில் அமர்ந்தார். இவரை "வாதில் வென்ற விநாயகர்' என்கின்றனர். கோயிலுக்கு வெளியே தனிக்கோயிலில் தற்போது அருள் செய்கிறார். திருமண நாள் சரியில்லையா? பத்ரிகா பரமேஸ்வரரை வணங்குங்க!: உங்களுக்கு திருமணம் என வைத்துக் கொள்ளுங்கள். ஏதோ சில காரணங்களால், நல்ல நாள் அல்லாத ஒரு தினத்தில் தாலி கட்டிவிட்டீர்கள். இத்தகைய தம்பதிகள் ஏடகநாதரை வணங்கி தோஷம் நீங்கப் பெறலாம். இவருக்கு "பத்ரிகா பரமேஸ்வரர்' என்ற பெயரும் உண்டு. சில சமயங்களில் அவசர அவசரமாக திருமணம் நடத்த வேண்டியிருக்கும், நாள் சரியாக அமையாது. இதுபோன்ற இக்கட்டான சமயங்களில் நம் மனம் கடுமையாக சஞ்சலப்படும். அவசரப்பட்டு, திருமணம் முடித்தால் என்னாகுமோ என்ற பயமும் இருக்கும். இப்படி சஞ்சலப்பட வேண்டிய அவசியமே இனி இல்லை. ஒரு திருமணப் பத்திரிகையை எடுத்துச் சென்று, பத்ரிகா பரமேஸ்வரரான ஏடகநாதர் முன்பு பாக்கு வெற்றிலை வைத்து பூஜை செய்யுங்கள். அவரைத் தங்கள் வீட்டுத் திருமணத்துக்கு வரவேண்டுமென மானசீகமாக வேண்டிக் கொள்ளுங்கள். பின்பு ஜாம் ஜாமெனத் திருமணத்தை நடத்துங்கள். எந்தப் பிரச்னையும் வராது. திருமணம் மட்டுமின்றி, பிற சுபநிகழ்ச்சிகளையும் இவ்வாறே பத்திரிகை வைத்து இஷ்டப்பட்ட நாளில் நடத்திக் கொள்ளலாம். வயிற்றுவலி தீர நீராகார நைவேத்யம் : சட்டைநாத சித்தர் சமாதியான இடம் பற்றி சர்ச்சை உண்டு. இவர் ஏழு இடங்களில் சமாதியானதாகச் சொல்கிறார்கள். இவர் திருவேடகத்திற்கு வந்த போது, செல்லும் வழியெல்லாம் லிங்கங்கள் பூமிக்குள் பதிந்திருப்பதைப் பார்த்து கால் வைக்கவே அஞ்சினார். அவரை சிறுவர்கள் குண்டுகட்டாகத் தூக்கிச் சென்று கோயிலுக்குள் விடுவார்களாம். அவர்களுக்கு ஆற்று மணலை பண்டமாக மாற்றி தந்தார் சட்டை நாதர். சட்டைநாதரும் அவருடன் தங்கியிருந்த சாதுக்களும், நீராகாரத்தில் திருநீறைப் போட்டு மக்களின் வயிற்று நோயினை போக்கினர். இப்போதும், நீராகாரம் கொண்டு வந்து சித்தர் அதிஷ்டானத்தின் மேலுள்ள லிங்கத்தின் முன்பு வைத்து, திருநீறிட்டு குடித்தால், வயிற்றுவலி தீருமென்று பக்தர்கள் நம்புகின்றனர். ஆடி அமாவாசையன்று சித்தருக்கு குருபூஜை நடக்கிறது. ஏடகநாதர் லிங்க வடிவில் சற்று சாய்ந்த நிலையில் தோற்றமளிக்கிறார். அம்பாளின் கூந்தலுக்கு இயற்கையாகவே நறுமணம் உண்டு என்பதால் ஏலவார்குழலி என அழைக்கப்படுகிறாள். இங்குள்ள சப்தமாதர்களில் வாராஹி அம்மனுக்கு பூமிக்கு அடியில் விளையும் கிழங்குவகைகள், எருமைத்தயிர்சாதம், எள்ளுருண்டை ஆகியவற்றை வெள்ளிக்கிழமை ராகுகாலத்தில் படைக்கின்றனர். இங்கு வடக்கு நோக்கி ஒரு துர்க்கையும், தெற்கு நோக்கி ஒரு துர்க்கையும் சன்னதி கொண்டுள்ளனர். இருதுர்க்கைகள் இருப்பதும் மாறுபட்ட ஒரு அமைப்பாகும். இங்கு சுவாமிக்கு தனியாகவும், அம்பாளுக்கு தனியாகவும் ராஜகோபுரங்களுடன் தனித்தனி வாசல்கள் உள்ளன. இத்தலத்திற்கு வந்த சுந்தரர், ஞானசம்பந்தர் பாடி வழிபட்ட தலமாதலால் மிதிக்க அஞ்சி வைகை நதியில் தான் வந்த ஓடத்தில் நின்றபடியே ஏடகநாதரை தரிசித்துவிட்டு திரும்பி விட்டதைக் குறிக்கும் சிற்பம் இங்கு இருக்கிறது. சூரிய சந்திரர் இங்கு இணைந்து அருள்தருகின்றனர். |
||
தல வரலாறு: | ||
பாண்டியநாட்டை கூன்பாண்டியன் என்னும்
மன்னன் ஆட்சிசெய்தபோது திருஞானசம்பந்தர் மதுரைக்கு வந்திருந்தார். அப்போது,
சமணர்கள் ஞானசம்பந்தர் தங்கியிருந்த மடத்திற்கு தீயிட்டனர். ஒரு
தேசத்தில் அராஜகம் நடக்கிறது என்றால், அதன் பலனை அரசனே அனுபவிக்க வேண்டும்
என்ற கொள்கையுடைய சம்பந்தர், "அந்தத் தீ அரசனையே சாரட்டும்'' என்று
சொல்லி பாடினார். உடனே, கூன்பாண்டியனை தீயின் வெப்பம் வெப்புநோயாகத்
தாக்கியது. அதைத் தாங்க முடியாமல் அவன் தவித்தான். அவன் சார்ந்திருந்த
சமணமதத் துறவிகளால் அதைச் சரி செய்ய முடியவில்லை. தன் வெப்பு நோயைத்
தீர்க்க அவன் நாட்டு மக்களிடம் கோரிக்கை விடுத்தான். கருணை மனம் கொண்ட
ஞானசம்பந்தர் "மந்திரமாவது நீறு' என்ற பதிகம் பாடி, மதுரை மீனாட்சியம்மன்
கோயில் மடப்பள்ளி சாம்பலை அவனுக்கு பூசியதும், நோய் நீங்கியது. இதையடுத்து
மன்னனின் மனம் சைவத்தை நோக்கிச் சென்றது. இதைத் தடுக்க நினைத்த சமணர்கள்,
சம்பந்தர் செய்தது சித்துவேலை என்றும், தாங்கள் அறிவிக்கும் போட்டியில்
சம்பந்தர் வெற்றி பெற்றால், மதுரையை விட்டே போய்விடுவதாகவும் அறிவித்தனர். அதாவது, "அத்திநாத்தி' என்று எழுதிய ஏட்டினை சமணர்களும்," வாழ்க அந்தணர்' என்று எழுதிய பதிக ஏட்டினை ஞானசம்பந்தரும் வைகையாற்றில் விட வேண்டும். எந்த ஏடு வெள்ளத்தில் இழுத்துச்செல்லப்படாமல் கரை ஒதுங்குகிறதோ அவரே வென்றவராவர் என முடிவு செய்யப்பட்டது. போட்டி துவங்கியது. சமணர் ஏடு ஆற்றோடு சென்றுவிட்டது. சம்பந்தர் "வன்னியும் மத்தமும்' என்ற பதிகத்தை பாடினார். அப்போது ஏடு கரை சேர்ந்தது. அவ்வாறு ஏடு கரை சேர்ந்த இடமே "திரு ஏடு அகம்' எனப்பட்டு, "திருவேடகம்' என மருவியது. இத்தலத்தில் அமைந்த கோயிலில் சுவாமி ஏடகநாதர், அம்பாள் ஏலவார் குழலியுடன் அருள் செய்கிறார். |
||
| ||||||||||||
274 சிவாலயங்கள்
- அருள்மிகு சிதம்பரம் தில்லை நடராஜர் திருக்கோயில், சிதம்பரம்,கடலூர்
- அருள்மிகு பாசுபதேஸ்வரர் திருக்கோயில், திருவேட்களம் (சிதம்பரம் நகர்),கடலூர்
- அருள்மிகு உச்சிநாதர் திருக்கோயில், சிவபுரி,கடலூர்
- அருள்மிகு பால்வண்ணநாதர் திருக்கோயில், திருக்கழிப்பாலை,கடலூர்
- அருள்மிகு சிவலோகத்தியாகர் திருக்கோயில், ஆச்சாள்புரம்,நாகப்பட்டினம்
- அருள்மிகு திருமேனியழகர் திருக்கோயில், மகேந்திரப் பள்ளி,நாகப்பட்டினம்
- அருள்மிகு முல்லைவன நாதர் திருக்கோயில், திருமுல்லைவாசல்,நாகப்பட்டினம்
- அருள்மிகு சுந்தரேஸ்வரர் திருக்கோயில், அன்னப்பன்பேட்டை,நாகப்பட்டினம்
- அருள்மிகு சாயாவனேஸ்வரர் திருக்கோயில், சாயாவனம்,நாகப்பட்டினம்
- அருள்மிகு பல்லவனேஸ்வரர் திருக்கோயில், பூம்புகார்,நாகப்பட்டினம்
- அருள்மிகு சுவேதாரண்யேஸ்வரர் திருக்கோயில், திருவெண்காடு,நாகப்பட்டினம்
- அருள்மிகு ஆரண்யேஸ்வரர் திருக்கோயில், திருக்காட்டுப்பள்ளி,நாகப்பட்டினம்
- அருள்மிகு வெள்ளடைநாதர் திருக்கோயில், திருக்குருகாவூர்,நாகப்பட்டினம்
- அருள்மிகு சட்டைநாதர் திருக்கோயில், சீர்காழி,நாகப்பட்டினம்
- அருள்மிகு சப்தபுரீஸ்வரர் திருக்கோயில், திருக்கோலக்கா,நாகப்பட்டினம்
- அருள்மிகு வைத்தியநாதர் திருக்கோயில், வைத்தீசுவரன்கோயில்,நாகப்பட்டினம்
- அருள்மிகு கண்ணாயிரமுடையார் திருக்கோயில், குறுமாணக்குடி,நாகப்பட்டினம்
- அருள்மிகு கடைமுடிநாதர் திருக்கோயில், கீழையூர்,நாகப்பட்டினம்
- அருள்மிகு மகாலட்சுமீஸ்வரர் திருக்கோயில், திருநின்றியூர்,நாகப்பட்டினம்
- அருள்மிகு சிவலோகநாதர் திருக்கோயில், திருப்புன்கூர்,நாகப்பட்டினம்
- அருள்மிகு சோமநாதர் திருக்கோயில், நீடூர்,நாகப்பட்டினம்
- அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில், பொன்னூர்,நாகப்பட்டினம்
- அருள்மிகு கல்யாண சுந்தரேஸ்வரர் திருக்கோயில், வேள்விக்குடி,நாகப்பட்டினம்
- அருள்மிகு ஐராவதேஸ்வரர் திருக்கோயில், மேலத்திருமணஞ்சேரி,நாகப்பட்டினம்
- அருள்மிகு உத்வாகநாதர் சுவாமி திருக்கோயில், திருமணஞ்சேரி,நாகப்பட்டினம்
- அருள்மிகு வீரட்டேஸ்வரர் திருக்கோயில், கொருக்கை,நாகப்பட்டினம்
- அருள்மிகு குற்றம் பொறுத்த நாதர் திருக்கோயில், தலைஞாயிறு,நாகப்பட்டினம்
- அருள்மிகு குந்தளேஸ்வரர் திருக்கோயில், திருக்குரக்கா,நாகப்பட்டினம்
- அருள்மிகு மாணிக்கவண்ணர் திருக்கோயில், திருவாளப்புத்தூர்,நாகப்பட்டினம்
- அருள்மிகு நீலகண்டேஸ்வரர் திருக்கோயில், இலுப்பைபட்டு,நாகப்பட்டினம்
- அருள்மிகு பிரணவ வியாக்ரபுரீஸ்வரர் திருக்கோயில், ஓமாம்புலியூர்,கடலூர்
- அருள்மிகு பதஞ்சலீஸ்வரர் திருக்கோயில், கானாட்டம்புலியூர்,கடலூர்
- அருள்மிகு சவுந்தர்யேஸ்வரர் திருக்கோயில், திருநாரையூர்,கடலூர்
- அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில், மேலக்கடம்பூர்,கடலூர்
- அருள்மிகு பசுபதீஸ்வரர் திருக்கோயில், பந்தநல்லூர்,தஞ்சாவூர்
- அருள்மிகு அக்னீஸ்வரர் திருக்கோயில், கஞ்சனூர்,தஞ்சாவூர்
- அருள்மிகு கோடீஸ்வரர் திருக்கோயில், திருக்கோடிக்காவல்,தஞ்சாவூர்
- அருள்மிகு பிராணநாதேஸ்வரர் திருக்கோயில், திருமங்கலக்குடி,தஞ்சாவூர்
- அருள்மிகு அருணஜடேசுவரர் திருக்கோயில், திருப்பனந்தாள்,தஞ்சாவூர்
- அருள்மிகு பாலுகந்தநாதர் திருக்கோயில், திருவாய்பாடி,தஞ்சாவூர்
- அருள்மிகு சத்தியகிரீஸ்வரர் திருக்கோயில், சேங்கனூர்,தஞ்சாவூர்
- அருள்மிகு கற்கடேஸ்வரர் திருக்கோயில், திருந்துதேவன்குடி,தஞ்சாவூர்
- அருள்மிகு யோகநந்தீஸ்வரர் திருக்கோயில், திருவிசநல்லூர்,தஞ்சாவூர்
- அருள்மிகு கோடீஸ்வரர், கைலாசநாதர் திருக்கோயில், கொட்டையூர்,தஞ்சாவூர்
- அருள்மிகு எழுத்தறிநாதர் திருக்கோயில், இன்னம்பூர்,தஞ்சாவூர்
- அருள்மிகு சாட்சிநாதேஸ்வரர் திருக்கோயில், திருப்புறம்பியம்,தஞ்சாவூர்
- அருள்மிகு விஜயநாதேஸ்வரர் திருக்கோயில், திருவிஜயமங்கை,தஞ்சாவூர்
- அருள்மிகு வில்வனேஸ்வரர் திருக்கோயில், திருவைகாவூர்,தஞ்சாவூர்
- அருள்மிகு தயாநிதீஸ்வரர் திருக்கோயில், வடகுரங்காடுதுறை,தஞ்சாவூர்
- அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில், திருப்பழனம்,தஞ்சாவூர்
- அருள்மிகு ஐயாறப்பன் திருக்கோயில், திருவையாறு,தஞ்சாவூர்
- அருள்மிகு நெய்யாடியப்பர் திருக்கோயில், தில்லைஸ்தானம்,தஞ்சாவூர்
- அருள்மிகு வியாக்ரபுரீஸ்வரர் திருக்கோயில், பெரும்புலியூர்,தஞ்சாவூர்
- அருள்மிகு வைத்தியநாதர் திருக்கோயில், திருமழபாடி,அரியலூர்
- அருள்மிகு ஆலந்துறையார்(வடமூலநாதர்) திருக்கோயில், கீழப்பழுவூர்,அரியலூர்
- அருள்மிகு செம்மேனிநாதர் திருக்கோயில், திருக்கானூர்,தஞ்சாவூர்
- அருள்மிகு சத்தியவாகீஸ்வரர் திருக்கோயில், அன்பில்,திருச்சி
- அருள்மிகு ஆம்ரவனேஸ்வரர் திருக்கோயில், மாந்துறை,திருச்சி
- அருள்மிகு ஆதிமூலேஸ்வரர் திருக்கோயில், திருப்பாற்றுறை,திருச்சி
- அருள்மிகு ஜம்புகேஸ்வரர் திருக்கோயில், திருவானைக்கா,திருச்சி
- அருள்மிகு ஞீலிவனேஸ்வரர் திருக்கோயில், திருப்பைஞ்ஞீலி,திருச்சி
- அருள்மிகு மாற்றுரைவரதீஸ்வரர் திருக்கோயில், திருவாசி,திருச்சி
- அருள்மிகு மரகதாசலேஸ்வரர் திருக்கோயில், ஈங்கோய்மலை,திருச்சி
- அருள்மிகு ரத்தினகிரீஸ்வரர் திருக்கோயில், அய்யர் மலை,கரூர்
- அருள்மிகு கடம்பவனேஸ்வரர் திருக்கோயில், குளித்தலை,கரூர்
- அருள்மிகு பராய்த்துறைநாதர் திருக்கோயில், திருப்பராய்த்துறை,திருச்சி
- அருள்மிகு உஜ்ஜீவநாதர் திருக்கோயில், உய்யக்கொண்டான் மலை,திருச்சி
- அருள்மிகு பஞ்சவர்ணேஸ்வரர் திருக்கோயில், உறையூர்,திருச்சி
- அருள்மிகு தாயுமானவர் திருக்கோயில், திருச்சி,திருச்சி
- அருள்மிகு எறும்பீஸ்வரர் திருக்கோயில், திருவெறும்பூர்,திருச்சி
- அருள்மிகு நெடுங்களநாதர் திருக்கோயில், திருநெடுங்குளம்,திருச்சி
- அருள்மிகு அக்னீஸ்வரர் திருக்கோயில், திருக்காட்டுப்பள்ளி,தஞ்சாவூர்
- அருள்மிகு ஆத்மநாதேஸ்வரர் திருக்கோயில், திருவாலம் பொழில்,தஞ்சாவூர்
- அருள்மிகு புஷ்பவனேஸ்வரர் திருக்கோயில், மேலைத்திருப்பூந்துருத்தி,தஞ்சாவூர்
- அருள்மிகு பிரம்மசிரகண்டீஸ்வர் திருக்கோயில், கண்டியூர்,,தஞ்சாவூர்
- அருள்மிகு சோற்றுத்துறை நாதர் திருக்கோயில், திருச்சோற்றுத்துறை,தஞ்சாவூர்
- அருள்மிகு வேதபுரீஸ்வரர் திருக்கோயில், திருவேதிகுடி,தஞ்சாவூர்
- அருள்மிகு வசிஷ்டேஸ்வரர் திருக்கோயில், தென்குடித்திட்டை,தஞ்சாவூர்
- அருள்மிகு பசுபதீஸ்வரர் திருக்கோயில், பசுபதிகோயில்,தஞ்சாவூர்
- அருள்மிகு சக்கரவாகேஸ்வரர் திருக்கோயில், சக்கரப்பள்ளி,தஞ்சாவூர்
- அருள்மிகு முல்லைவனநாதர் திருக்கோயில், திருக்கருகாவூர்,தஞ்சாவூர்
- அருள்மிகு பாலைவனேஸ்வரர் திருக்கோயில், பாபநாசம்,தஞ்சாவூர்
- அருள்மிகு பஞ்சவர்ணேஸ்வரர் திருக்கோயில், நல்லூர்,தஞ்சாவூர்
- அருள்மிகு பசுபதீஸ்வரர் திருக்கோயில், ஆவூர் (கோவந்தகுடி),தஞ்சாவூர்
- அருள்மிகு சிவக்கொழுந்தீசர் திருக்கோயில், திருச்சத்தி முற்றம்,தஞ்சாவூர்
- அருள்மிகு தேனுபுரீஸ்வரர் திருக்கோயில், திருப்பட்டீசுவரம்,தஞ்சாவூர்
- அருள்மிகு சோமேசர் திருக்கோயில், கீழ்பழையாறை வடதளி,தஞ்சாவூர்
- அருள்மிகு திருவலஞ்சுழிநாதர் திருக்கோயில், திருவலஞ்சுழி,தஞ்சாவூர்
- அருள்மிகு கும்பேஸ்வரர் திருக்கோயில், கும்பகோணம்,தஞ்சாவூர்
- அருள்மிகு நாகேஸ்வரர் திருக்கோயில், கும்பகோணம்,தஞ்சாவூர்
- அருள்மிகு சோமேஸ்வரர் திருக்கோயில், கும்பகோணம்,தஞ்சாவூர்
- அருள்மிகு நாகேஸ்வரர் திருக்கோயில், திருநாகேஸ்வரம்,தஞ்சாவூர்
- அருள்மிகு மகாலிங்கம் திருக்கோயில், திருவிடைமருதூர்,தஞ்சாவூர்
- அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில், ஆடுதுறை,தஞ்சாவூர்
- அருள்மிகு நீலகண்டேஸ்வரர் திருக்கோயில், திருநீலக்குடி,தஞ்சாவூர்
- அருள்மிகு வைகல்நாதர் திருக்கோயில், திருவைகல்,நாகப்பட்டினம்
- அருள்மிகு உமாமகேஸ்வரர் திருக்கோயில், கோனேரிராஜபுரம்,நாகப்பட்டினம்
- அருள்மிகு கோகிலேஸ்வரர் திருக்கோயில், திருக்கோழம்பியம்,தஞ்சாவூர்
- அருள்மிகு கோமுக்தீஸ்வரர் திருக்கோயில், திருவாவடுதுறை,நாகப்பட்டினம்
- அருள்மிகு உத்தவேதீஸ்வரர் திருக்கோயில், குத்தாலம்,நாகப்பட்டினம்
- அருள்மிகு வேதபுரீஸ்வரர் திருக்கோயில், தேரழுந்தூர்,நாகப்பட்டினம்
- அருள்மிகு மாயூரநாதர் திருக்கோயில், மயிலாடுதுறை,நாகப்பட்டினம்
- அருள்மிகு உச்சிரவனேஸ்வரர் திருக்கோயில், திருவிளநகர்,நாகப்பட்டினம்
- அருள்மிகு வீரட்டேஸ்வரர் திருக்கோயில், கீழப்பரசலூர்,நாகப்பட்டினம்
- அருள்மிகு சுவர்ணபுரீஸ்வரர் திருக்கோயில், செம்பொனார்கோவில்,நாகப்பட்டினம்
- அருள்மிகு நற்றுறணையப்பர் திருக்கோயில், புஞ்சை,நாகப்பட்டினம்
- அருள்மிகு வலம்புரநாதர் திருக்கோயில், மேலப்பெரும்பள்ளம்,நாகப்பட்டினம்
- அருள்மிகு சங்காரண்யேஸ்வரர் திருக்கோயில், தலைச்சங்காடு,நாகப்பட்டினம்
- அருள்மிகு தான்தோன்றீஸ்வரர் திருக்கோயில், ஆக்கூர்,நாகப்பட்டினம்
- அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில், திருக்கடையூர்,நாகப்பட்டினம்
- அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில், திருமயானம்,நாகப்பட்டினம்
- அருள்மிகு சுந்தரேஸ்வரர் திருக்கோயில், திருவேட்டக்குடி,புதுச்சேரி
- அருள்மிகு பார்வதீஸ்வரர் திருக்கோயில், திருத்தெளிச்சேரி,புதுச்சேரி
- அருள்மிகு யாழ்மூரிநாதர் திருக்கோயில், தருமபுரம்,புதுச்சேரி
- அருள்மிகு தர்ப்பாரண்யேஸ்வரர் திருக்கோயில், திருநள்ளாறு,புதுச்சேரி
- அருள்மிகு ஐராவதீஸ்வரர் திருக்கோயில், திருக்கொட்டாரம்,திருவாரூர்
- அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில், அம்பர், அம்பல்,திருவாரூர்
- அருள்மிகு மகாகாளநாதர் திருக்கோயில், திருமாகாளம்,திருவாரூர்
- அருள்மிகு திருமீயச்சூர் மேகநாதர் திருக்கோயில், திருமீயச்சூர்,திருவாரூர்
- அருள்மிகு சகலபுவனேஸ்வரர் திருக்கோயில், திருமீயச்சூர்,திருவாரூர்
- அருள்மிகு முக்தீஸ்வரர் திருக்கோயில், சிதலப்பதி,திருவாரூர்
- அருள்மிகு சேஷபுரீஸ்வரர் திருக்கோயில், திருப்பாம்புரம்,திருவாரூர்
- அருள்மிகு சூஷ்மபுரீஸ்வரர் திருக்கோயில், செருகுடி,திருவாரூர்
- அருள்மிகு வீழிநாதேஸ்வரர் திருக்கோயில், திருவீழிமிழலை,திருவாரூர்
- அருள்மிகு அக்னிபுரீஸ்வரர் திருக்கோயில், அன்னியூர்,திருவாரூர்
- அருள்மிகு சற்குணேஸ்வரர் திருக்கோயில், கருவேலி,திருவாரூர்
- அருள்மிகு சிவானந்தேஸ்வரர் திருக்கோயில், திருப்பந்துறை,தஞ்சாவூர்
- அருள்மிகு சித்தநாதேஸ்வரர் திருக்கோயில், திருநறையூர்,தஞ்சாவூர்
- அருள்மிகு படிக்காசுநாதர் திருக்கோயில், அழகாபுத்தூர்,தஞ்சாவூர்
- அருள்மிகு சிவகுருநாதர் திருக்கோயில், சிவபுரம்,தஞ்சாவூர்
- அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில், சாக்கோட்டை,தஞ்சாவூர்
- அருள்மிகு சற்குணலிங்கேஸ்வரர் திருக்கோயில், கருக்குடி,தஞ்சாவூர்
- அருள்மிகு வாஞ்சிநாதர் திருக்கோயில், ஸ்ரீ வாஞ்சியம்,திருவாரூர்
- அருள்மிகு மதுவனேஸ்வரர் திருக்கோயில், நன்னிலம்,திருவாரூர்
- அருள்மிகு பசுபதீஸ்வரர் திருக்கோயில், திருக்கொண்டீஸ்வரம்,திருவாரூர்
- அருள்மிகு சவுந்தரேஸ்வர் திருக்கோயில், திருப்பனையூர்,திருவாரூர்
- அருள்மிகு வீரட்டானேஸ்வரர் திருக்கோயில், திருவிற்குடி,திருவாரூர்
- அருள்மிகு அக்னிபுரீஸ்வரர் திருக்கோயில், திருப்புகலூர் ,நாகப்பட்டினம்
- அருள்மிகு வர்த்தமானீஸ்வரர் திருக்கோயில், திருப்புகலூர்,திருவாரூர்
- அருள்மிகு ராமநாதர் திருக்கோயில், திருக்கண்ணபுரம்,திருவாரூர்
- அருள்மிகு திருப்பயற்றுநாதர் திருக்கோயில், திருப்பயத்தங்குடி,நாகப்பட்டினம்
- அருள்மிகு உத்திராபசுபதீஸ்வரர் திருக்கோயில், திருச்செங்காட்டங்குடி,திருவாரூர்
- அருள்மிகு ரத்தினகிரீஸ்வரர் திருக்கோயில், திருமருகல்,நாகப்பட்டினம்
- அருள்மிகு அயவந்தீஸ்வரர் திருக்கோயில், சீயாத்தமங்கை,நாகப்பட்டினம்
- அருள்மிகு காயாரோகணேஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்,நாகப்பட்டினம்
- அருள்மிகு நவநீதேஸ்வரர் திருக்கோயில், சிக்கல்,நாகப்பட்டினம்
- அருள்மிகு கேடிலியப்பர் திருக்கோயில், கீழ்வேளூர்,திருவாரூர்
- அருள்மிகு தேவபுரீஸ்வரர் திருக்கோயில், தேவூர்,திருவாரூர்
- அருள்மிகு திருநேத்திரநாதர் திருக்கோயில், திருப்பள்ளி முக்கூடல்,திருவாரூர்
- அருள்மிகு தியாகராஜர் திருக்கோயில், திருவாரூர்,திருவாரூர்
- அருள்மிகு அசலேஸ்வரர் திருக்கோயில், ஆருர் அரநெறி,திருவாரூர்
- அருள்மிகு தூவாய் நாதர் திருக்கோயில், தூவாநாயனார் கோயில்,திருவாரூர்
- அருள்மிகு பதஞ்சலி மனோகரர் திருக்கோயில், விளமல்,திருவாரூர்
- அருள்மிகு கரவீரநாதர் (பிரம்மபுரீஸ்வரர்) திருக்கோயில், கரைவீரம்,திருவாரூர்
- அருள்மிகு அபிமுக்தீஸ்வரர் திருக்கோயில், மணக்கால்ஐயம்பேட்டை,திருவாரூர்
- அருள்மிகு நர்த்தனபுரீஸ்வரர் திருக்கோயில், திருத்தலையாலங்காடு,திருவாரூர்
- அருள்மிகு கோணேஸ்வரர் திருக்கோயில், குடவாசல்,திருவாரூர்
- அருள்மிகு சாரபரமேஸ்வரர் திருக்கோயில், திருச்சேறை,தஞ்சாவூர்
- அருள்மிகு ஞானபரமேஸ்வரர் திருக்கோயில், திருமெய்ஞானம்,தஞ்சாவூர்
- அருள்மிகு சொர்ணபுரீஸ்வரர் திருக்கோயில், ஆண்டான்கோவில்,திருவாரூர்
- அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில், ஆலங்குடி,தஞ்சாவூர்
- அருள்மிகு பாதாளேஸ்வரர் திருக்கோயில், அரித்துவாரமங்கலம்,திருவாரூர்
- அருள்மிகு சாட்சிநாதர் திருக்கோயில், அவளிவணல்லூர்,தஞ்சாவூர்
- அருள்மிகு பாஸ்கரேஸ்வரர் திருக்கோயில், பரிதியப்பர்கோவில்,தஞ்சாவூர்
- அருள்மிகு வெண்ணிகரும்பேஸ்வரர் திருக்கோயில், கோயில்வெண்ணி,திருவாரூர்
- அருள்மிகு சதுரங்க வல்லபநாதர் திருக்கோயில், பூவனூர்,திருவாரூர்
- அருள்மிகு நாகநாதர் திருக்கோயில், பாமணி,திருவாரூர்
- அருள்மிகு பாரிஜாதவனேஸ்வரர் திருக்கோயில், திருக்களர்,திருவாரூர்
- அருள்மிகு பொன்வைத்தநாதர் திருக்கோயில், சித்தாய்மூர்,திருவாரூர்
- அருள்மிகு மந்திரபுரீஸ்வரர் திருக்கோயில், கோவிலூர்,திருவாரூர்
- அருள்மிகு சற்குணநாதர் திருக்கோயில், இடும்பாவனம்,திருவாரூர்
- அருள்மிகு கற்பகநாதர் திருக்கோயில், கற்பகநாதர்குளம்,திருவாரூர்
- அருள்மிகு நீள்நெறிநாதர் திருக்கோயில், தண்டலச்சேரி,திருவாரூர்
- அருள்மிகு கொழுந்தீஸ்வரர் திருக்கோயில், கோட்டூர்,திருவாரூர்
- அருள்மிகு வண்டுறைநாதர் திருக்கோயில், திருவண்டுதுறை,திருவாரூர்
- அருள்மிகு வில்வாரண்யேஸ்வரர் திருக்கோயில், திருக்கொள்ளம்புதூர்,திருவாரூர்
- அருள்மிகு ஜகதீஸ்வரர் திருக்கோயில், ஓகைப்பேரையூர்,திருவாரூர்
- அருள்மிகு அக்னீஸ்வரர் திருக்கோயில், திருக்கொள்ளிக்காடு,திருவாரூர்
- அருள்மிகு வெள்ளிமலைநாதர் திருக்கோயில், திருத்தங்கூர்,திருவாரூர்
- அருள்மிகு நெல்லிவனநாதர் திருக்கோயில், திருநெல்லிக்கா,திருவாரூர்
- அருள்மிகு ரத்தினபுரீஸ்வரர் திருக்கோயில், திருநாட்டியத்தான்குடி,திருவாரூர்
- அருள்மிகு கண்ணாயிரநாதர் திருக்கோயில், திருக்காரவாசல்,திருவாரூர்
- அருள்மிகு நடுதறியப்பர் திருக்கோயில், கோயில் கண்ணாப்பூர்,திருவாரூர்
- அருள்மிகு மனத்துணைநாதர் திருக்கோயில், வலிவலம்,நாகப்பட்டினம்
- அருள்மிகு கைச்சின்னேஸ்வரர் திருக்கோயில், கச்சனம்,திருவாரூர்
- அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில், திருக்குவளை,நாகப்பட்டினம்
- அருள்மிகு வாய்மூர்நாதர் திருக்கோயில், திருவாய்மூர்,நாகப்பட்டினம்
- அருள்மிகு திருமறைக்காடர் திருக்கோயில், வேதாரண்யம்,நாகப்பட்டினம்
- அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில், அகஸ்தியன் பள்ளி,நாகப்பட்டினம்
- அருள்மிகு கோடிக்குழகர் திருக்கோயில், கோடியக்காடு,நாகப்பட்டினம்
- அருள்மிகு சுந்தரேஸ்வரர் (மீனாட்சி) திருக்கோயில், மதுரை,மதுரை
- அருள்மிகு திருவாப்புடையார் திருக்கோயில், செல்லூர், மதுரை,மதுரை
- அருள்மிகு சத்தியகிரீஸ்வரர் திருக்கோயில், திருப்பரங்குன்றம்,மதுரை
- அருள்மிகு ஏடகநாதர் திருக்கோயில், திருவேடகம்,சோழவந்தான்,மதுரை
- அருள்மிகு கொடுங்குன்றநாதர் திருக்கோயில், பிரான்மலை,சிவகங்கை
- அருள்மிகு திருத்தளிநாதர் திருக்கோயில், திருப்புத்தூர்,சிவகங்கை
- அருள்மிகு விருத்தபுரீஸ்வரர் திருக்கோயில், திருப்புனவாசல்,புதுக்கோட்டை
- அருள்மிகு ராமநாதர் திருக்கோயில், ராமேஸ்வரம்,ராமநாதபுரம்
- அருள்மிகு ஆதிரத்தினேஸ்வரர் திருக்கோயில், திருவாடானை,ராமநாதபுரம்
- அருள்மிகு சொர்ணகாளீஸ்வரர் திருக்கோயில், காளையார் கோவில்,சிவகங்கை
- அருள்மிகு புஷ்பவனேஸ்வரர் திருக்கோயில், திருப்புவனம்,சிவகங்கை
- அருள்மிகு திருமேனிநாதர் திருக்கோயில், திருச்சுழி,விருதுநகர்
- அருள்மிகு குற்றாலநாதர் திருக்கோயில், குற்றாலம்,திருநெல்வேலி
- அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோயில், திருநெல்வேலி,திருநெல்வேலி
- அருள்மிகு அவிநாசியப்பர் திருக்கோயில், அவிநாசி,கோயம்புத்தூர்
- அருள்மிகு திருமுருகநாதர் திருக்கோயில், திருமுருகன்பூண்டி,கோயம்புத்தூர்
- அருள்மிகு சங்கமேஸ்வரர் திருக்கோயில், பவானி,ஈரோடு
- அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில், திருச்செங்கோடு,நாமக்கல்
- அருள்மிகு கல்யாண விகிர்தீஸ்வரர் திருக்கோயில், வெஞ்சமாங்கூடலூர்,கரூர்
- அருள்மிகு மகுடேஸ்வரர் திருக்கோயில், கொடுமுடி,ஈரோடு
- அருள்மிகு கல்யாணபசுபதீஸ்வரர் திருக்கோயில், கரூர்,கரூர்
- அருள்மிகு தீர்த்தபுரீஸ்வரர் திருக்கோயில், திருவட்டத்துறை,கடலூர்
- அருள்மிகு பிரளயகாலேஸ்வரர் திருக்கோயில், பெண்ணாடம்,கடலூர்
- அருள்மிகு வல்லபேஸ்வரர் திருக்கோயில், திருக்கூடலையாற்றூர்.,கடலூர்
- அருள்மிகு சுவேதாரண்யேஸ்வரர் திருக்கோயில், இராஜேந்திர பட்டினம்,கடலூர்
- அருள்மிகு சிவக்கொழுந்தீஸ்வரர் திருக்கோயில், தீர்த்தனகிரி,கடலூர்
- அருள்மிகு மங்களபுரீஸ்வரர் திருக்கோயில், திருச்சோபுரம்,கடலூர்
- அருள்மிகு வீரட்டானேஸ்வரர் திருக்கோயில், திருவதிகை,கடலூர்
- அருள்மிகு பக்தஜனேஸ்வரர் திருக்கோயில், திருநாவலூர்,விழுப்புரம்
- அருள்மிகு விருத்தகிரீஸ்வரர் திருக்கோயில், விருத்தாச்சலம்,கடலூர்
- அருள்மிகு சொர்ணகடேஸ்வரர் திருக்கோயில், நெய்வணை,விழுப்புரம்
- அருள்மிகு வீரட்டேஸ்வரர் திருக்கோயில், திருக்கோவிலூர்,விழுப்புரம்
- அருள்மிகு அதுல்யநாதேஸ்வரர் திருக்கோயில், அறகண்டநல்லூர்,விழுப்புரம்
- அருள்மிகு மருந்தீசர் திருக்கோயில், டி. இடையாறு,விழுப்புரம்
- அருள்மிகு கிருபாபுரீஸ்வரர் திருக்கோயில், வெண்ணெய்நல்லூர்,விழுப்புரம்
- அருள்மிகு சிஷ்டகுருநாதேஸ்வரர் திருக்கோயில், திருத்தளூர்,கடலூர்
- அருள்மிகு பஞ்சனதீஸ்வரர் திருக்கோயில், திருவண்டார்கோயில்,புதுச்சேரி
- அருள்மிகு வாமனபுரீஸ்வரர் திருக்கோயில், திருமாணிக்குழி,கடலூர்
- அருள்மிகு பாடலீஸ்வரர் திருக்கோயில், திருப்பாதிரிபுலியூர்,கடலூர்
- அருள்மிகு சிவலோகநாதர் திருக்கோயில், கிராமம்,விழுப்புரம்
- அருள்மிகு பனங்காட்டீஸ்வரர் திருக்கோயில், பனையபுரம்,விழுப்புரம்
- அருள்மிகு அபிராமேஸ்வரர் திருக்கோயில், திருவாமத்தூர்,விழுப்புரம்
- அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில், திருவண்ணாமலை,திருவண்ணாமலை
- அருள்மிகு ஏகாம்பரநாதர் திருக்கோயில், காஞ்சிபுரம்,காஞ்சிபுரம்
- அருள்மிகு திருமேற்றளீஸ்வரர் திருக்கோயில், காஞ்சிபுரம்,காஞ்சிபுரம்
- அருள்மிகு ஓணகாந்தேஸ்வரர் திருக்கோயில், ஓணகாந்தன்தளி,காஞ்சிபுரம்
- அருள்மிகு கச்சிஅனேகதங்காவதேஸ்வரர் திருக்கோயில், காஞ்சிபுரம்,காஞ்சிபுரம்
- அருள்மிகு சத்யநாதர் திருக்கோயில், காஞ்சிபுரம்,காஞ்சிபுரம்
- அருள்மிகு வாலீஸ்வரர் திருக்கோயில், குரங்கணில்முட்டம்,திருவண்ணாமலை
- அருள்மிகு திருமாகறலீஸ்வரர் திருக்கோயில், திருமாகறல்,காஞ்சிபுரம்
- அருள்மிகு வேதபுரீஸ்வரர் திருக்கோயில், செய்யாறு,திருவண்ணாமலை
- அருள்மிகு தாளபுரீஸ்வரர் திருக்கோயில், திருப்பனங்காடு,திருவண்ணாமலை
- அருள்மிகு வில்வநாதேஸ்வரர் திருக்கோயில், திருவல்லம்,வேலூர்
- அருள்மிகு மணிகண்டீஸ்வரர் திருக்கோயில், திருமால்பூர்,வேலூர்
- அருள்மிகு ஜலநாதீஸ்வரர் திருக்கோயில், தக்கோலம்,வேலூர்
- அருள்மிகு தெய்வநாயகேஸ்வரர் திருக்கோயில், எலுமியன்கோட்டூர்,காஞ்சிபுரம்
- அருள்மிகு திரிபுராந்தகர் திருக்கோயில், கூவம்,திருவள்ளூர்
- அருள்மிகு வடாரண்யேஸ்வரர் திருக்கோயில், திருவாலங்காடு,திருவள்ளூர்
- அருள்மிகு வாசீஸ்வரர் திருக்கோயில், திருப்பாசூர்,திருவள்ளூர்
- அருள்மிகு ஊன்றீஸ்வரர் திருக்கோயில், பூண்டி,திருவள்ளூர்
- அருள்மிகு சிவாநந்தீஸ்வரர் திருக்கோயில், திருக்கண்டலம்,திருவள்ளூர்
- அருள்மிகு படம்பக்கநாதர் திருக்கோயில், திருவொற்றியூர்,திருவள்ளூர்
- அருள்மிகு திருவல்லீஸ்வரர் திருக்கோயில், பாடி, திருவலிதாயம்,சென்னை
- அருள்மிகு மாசிலாமணீஸ்வரர் திருக்கோயில், வடதிருமுல்லைவாயில்,சென்னை
- அருள்மிகு வேதபுரீஸ்வரர் திருக்கோயில், திருவேற்காடு,காஞ்சிபுரம்
- அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோயில், மயிலாப்பூர்,சென்னை
- அருள்மிகு மருந்தீஸ்வரர் திருக்கோயில், திருவான்மியூர்,சென்னை
- அருள்மிகு கச்சபேஸ்வரர், மருந்தீஸ்வரர், திருக்கோயில், திருக்கச்சூர்,காஞ்சிபுரம்
- அருள்மிகு ஞானபுரீஸ்வரர் திருக்கோயில், திருவடிசூலம்,காஞ்சிபுரம்
- அருள்மிகு காளத்தியப்பர் திருக்கோயில், காளஹஸ்தி,கர்நூல்
- அருள்மிகு வேதகிரீஸ்வரர் திருக்கோயில், திருக்கழுகுன்றம்,காஞ்சிபுரம்
- அருள்மிகு ஆட்சீஸ்வரர் திருக்கோயில், அச்சிறுபாக்கம்,காஞ்சிபுரம்
- அருள்மிகு சந்திரமவுலீஸ்வரர் திருக்கோயில், திருவக்கரை,விழுப்புரம்
- அருள்மிகு அரசலீஸ்வரர் திருக்கோயில், ஒழிந்தியாம்பட்டு,விழுப்புரம்
- அருள்மிகு மகாகாளேஸ்வரர் திருக்கோயில், இரும்பை,விழுப்புரம்
- அருள்மிகு மகாதேவர் திருக்கோயில், திருவஞ்சிக்குளம்,திருச்சூர்
- அருள்மிகு மகாபலேஸ்வரர் திருக்கோயில், திருக்கோகர்ணம்,உத்தர் கன்னடா
- அருள்மிகு மல்லிகார்ஜுனர் திருக்கோயில், ஸ்ரீசைலம்,கர்நூல்
- அருள்மிகு அகஸ்தீஸ்வரர் திருக்கோயில், கிளியனூர்,விழுப்புரம்
- அருள்மிகு புண்ணியகோடியப்பர் திருக்கோயில், திருவிடைவாசல்,திருவாரூ
Subscribe to:
Posts (Atom)