டவுண்லோட் செய்த பைல் எங்கே?
பயர்பாக்ஸ் பிரவுசர் பயன்படுத்தி சில பைல்களை டவுண்லோட் செய்கிறீர்கள். வழக்கமாக டெஸ்க் டாப்பில் டவுண்லோட் செய்திடுவோம். அல்லது எங்கே டவுண்லோட் செய்திட என்று ஒரு சிறிய விண்டோவில் கேட்கும்போது, கம்ப்யூட்டர் டைரக்டரியை பிரவுஸ் செய்து, போல்டரைத் தேர்ந்தெடுத்து ஓகே கொடுப்போம். சில வேளைகளில், சில தளங்களில் இந்த டயலாக் பாக்ஸ் எல்லாம் கிடைக்காதபடி செய்து வைத்திருப்பார்கள். நாமும் டவுண்லோட் செய்திடுவோம். டவுண்லோட் செய்தபின் எங்கு அந்த பைல் டவுண்லோட் செய்யப்பட்டுள்ளது என்று தெரியாது. பல இடங்களில் தேடி அலுத்துப் போய்விடுவோம். இது போன்ற நேரங்களில் கீழ்க்காணும்படி செயல்படவும். Tools அழுத்தி பின் கிடைக்கும் பிரிவுகளில் தேர்ந்தெடுக்கவும். அல்லது கண்ட்ரோல் + ஜே (Ctrl+J) அழுத்தினாலும் இந்த விண்டோ கிடைக்கும். இங்கு ரைட் கிளிக் செய்தால் நீங்கள் டவுண்லோட் செய்த பைல் காட்டப்படும். அதில் ரைட் கிளிக் செய்து கிடைக்கும் பிரிவுகளில் Open Downloading Folder என்பதில் கிளிக் செய்தால், பைல் இருக்கும் போல்டர் காட்டப்படும்.
குறிப்பிட்ட டெக்ஸ்ட்டை மறைக்க
வேர்டில் உருவாக்கப்பட்ட டாகுமெண்ட்டின் ஒரு குறிப்பிட்ட பகுதியை மட்டும் மறைத்துக் காட்ட விரும்பினால் அதற்கான வழிகளை வேர்ட் தருகிறது. மறைத்த பகுதியை மீண்டும் காட்டும் வகையில் அமைக்கலாம். இதற்கான வழி:– மறைக்கப்பட வேண்டிய டெக்ஸ்ட்டை முதலில் செலக்ட் செய்து கொள்ள வேண்டும். பின் மெனு பாரில் Fonts தேர்ந்தெடுத்து அதில் Effects பிரிவைக் கிளிக் செய்திடுக. புதிய விண்டோ ஒன்று கிடைக்கும். அதில் Hidden என்ற பகுதியில் இறுதியாகக் காட்டப்படும் Ctrl+A என்னும் பாக்ஸின் முன் டிக் அடையாளம் ஏற்படுத்தவும். பின் மீண்டும் இந்த டெக்ஸ்ட் காட்டப்பட வேண்டும் என்றால் இtணூடூ+அ கொடுத்து மீண்டும் அதே முறையில் பாண்ட் விண்டோவிற்குச் சென்று டிக் அடையாளத்தை எடுத்துவிடவும். இப்போது மறைக்கப்பட்ட டெக்ஸ்ட் மீண்டும் காட்டப்படும்.
டாஸ்க் பார் / டூல் பார்
பலருக்கு அடிக்கடி சந்தேகம் வரும் இரண்டு டெக்னிக்கல் சொற்றொடர்கள். டாஸ்க் பார் என்பது மானிட்டர் திரையில் கீழாக கிரே கலரில் அமைந்திருப்பது. இதன் கலரை மாற்றலாம். இடத்தையும் நாம் விரும்பினால் மாற்றலாம். இந்த பாரை மேற்புறமாக அல்லது இடது வலது பக்கங்களில் அமைத்துக் கொள்லலாம். இதன் இடது பக்கத்தில் தான் ஸ்டார்ட் பட்டன் உள்ளது. அதனை அடுத்து உள்ளதை சிஸ்டம் ட்ரே என அழைக்கிறோம். நாம் இயக்கும் புரோகிராம்களின் பைல்களுக்கான பட்டன்கள் எல்லாம் இதில் தான் அமர்ந்து கொள்கிறது. ஒரே புரோகிராமில் பல பைல்களைத் திறந்தால், அவை அனைத்தும், புரோகிராமின் குரூப் ஒன்று ஏற்படுத்தப்பட்டு அதில் அமையும். எந்த பைலைக் கொண்டு திரையின் மீது கொண்டு வர விரும்புகிறீர்களோ இதில் மவுஸின் கர்சரைக் கொண்டு சென்று கிளிக் செய்தால் போதும்.
இந்த டாஸ்க் பாரில் குயிக் லாஞ்ச் டூல் பாரினையும் அமைக்கலாம். புரோகிராம்களை இயக்க இது ஷார்ட் கட் வழியாகப் பயன்படுகிறது. இதில் புரோகிராம்களின் ஐகான்கள் அமர்ந்திருக்கும். இதனை ஒரு கிளிக் செய்தால், புரோகிராம்கள் உடனடியாகச் செயல்பாட்டிற்குக் கிடைக்கும். இந்த பாரின் இறுதியில் வலது பக்கம், சிஸ்டம் தொடங்குகையில் இயங்கி பின்னணியில் ஓடிக் கொண்டிருக்கும் புரோகிராம்களின் ஐகான்களைக் காணலாம். ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் மற்றும் தொடங்கும்போதே இயக்கப்படும் சில புரோகிராம்கள் இதில் இருக்கும். கடிகார நேரம் இதில் காட்டப்படும்.
டூல் பார் என்பது சின்ன ஸ்ட்ரிப். புரோகிராம் ஒன்றின் ஐகான்களைக் கொண்டிருக்கும். பொதுவாக இவை அனைத்து மெனுக்களுக்கும் காட்டப்படும். நம் விருப்பப்படி புரோகிராம்களின் டூல் பார்களை அமைத்துக் கொள்ளலாம். தேவைப்படும் அல்லது அடிக்கடி பயன்படுத்தும் வசதிகளுக்கான ஐகான்களை மட்டும் அமைத்துக் கொள்ளலாம். வியூ மற்றும் டூல்பார்ஸ் சென்று இவற்றை அமைத்துக் கொள்ளலாம்.
உடனடி சிடி இயக்கத்தை நிறுத்த
கம்ப்யூட்டரின் டிவிடி அல்லது சிடி டிரைவில் ஒரு சிடியைப் போட்டவுடன் அது உள்ளிருக்கும் பைலுக்கேற்ப இயங்கத் தொடங்குகிறது. அல்லது என்ன செய்திட? என்று மெனு கொடுத்துக் கேட்கிறது. கம்ப்யூட்டரின் ஆட்டோ ரன் பைல் சிடியை இயக்குகிறது. இது எதற்கு? சிடி போட்டால் சிவனே என்று இருக்க வேண்டியதுதானே? நமக்கு அதில் உள்ள பைல் வேண்டும் என்றால் நாம் இயக்க மாட்டாமோ? என்று எண்ணுகிறீர்களா? உங்களுக்கு அந்த சிடி இயங்குவது பிடிக்கவில்லையா? ட்ரேயைத் தள்ளியவுடன் அதனைப் படிக்க கம்ப்யூட்டர் முயற்சிக்கிறது அல்லவா? உடனே ஷிப்ட் கீயை அழுத்துங்கள். சிடி இயங்காது. நின்றுவிடும். ஆனால் விண்டோஸ் எக்ஸ்புளோரர் சென்று அதன் டைரக்டரியில் உள்ள பைல்களை நீங்கள் கையாளலாம்.
ஷிப்ட்+எப்5 என்ன நடக்கும்?
வேர்டில் நூற்றுக் கணக்கான ஷார்ட் கட் கீகள் உள்ளன. ஆனால் இவற்றில் மிக முக்கியம் என பலரும் கருதுவது Shift + F5 கீகள் இணைந்த ஷார்ட் கட் கீ தான். இதனை அழுத்துவதன் மூலம் அதற்கு முன் நாம் டாகுமெண்ட்டில் எங்கு எடிட் செய்தோமோ அந்த இடத்திற்கு கர்சர் தாவும். அடுத்ததாக பொதுவான ஒன்று. அது Ctrl + Z. இது அப்போது மேற்கொண்ட செயலை நீக்கும். இதனைத் திருப்பி திருப்பி அழுத்துவதன் மூலம் நாம் மேற்கொண்ட செயல்கள் அனைத்தும் பின் வரிசையில் நீக்கப்படும். ஏதேனும் நீக்கிய ஒன்றை மீண்டும் வேண்டும் என்றால் கண்ட்ரோல் + ஒய் அழுத்தினால் போதும்.
No comments:
Post a Comment